ஆசிய மார்சிச லெனினிச மாவோயிஸ கட்சிகளின் ஆசிய விவசாய மாநாடு இன்று காலை 01 .04 .2012 புது டெல்லியில் ஆரம்பமாகியது. மாநாடு அங்குள்ள இந்திய சமூகவியல் ஆராட்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது. மாநாட்டை CPI (ML) கட்சின் பொது செயலாளர் K.N.ராமசந்திரன் தனது ஆரம்ப / அறிமுக உரையுடன் ஆரம்பித்து வைத்தார்.
இந்த மாநாடானது ஆசியாவில் இன்றுள்ள அரசியல் சூழ் நிலையில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எந்த வகையான சமூதாயம் என வரையருப்பதன் அடிப்படையிலேயே சமூக மாற்றத்துக்கான, அரசியல் திட்டங்களை ஒரு கட்சி வகுக்க முடியும். இந்த வகையில் சமூக மாற்றத்தை விளங்கி கொள்ளவதும், அதன் அடிப்படையில் திட்டத்தை வகுப்பதன் மூலமுமே பாட்டாளி வர்க்க கட்சிகள் இறுதி வெற்றியை பெற முடியும் .
பல ஆசிய மார்சிச லெனினிச மாவோயிஸ கட்சிகளின், உலகமயமாதல், தாராளமயமாதல், புதிய ஏகாதிபத்திய நாடுகளின் உருவாக்கம் போன்ற மாற்றங்கள் வந்த பின்னும், இப்போதும் தமது தேசங்களை அரை நிலபிரபுத்துவ அல்லது நிலபிரபுத்துவ அல்லது நவகாலனித்துவ -அரைநில பிரபுத்துவ சமூதாயமாகவே வரையறுக்கின்றன. இந்த வரையறைகள் பெரும்பாலும் பல பத்து வருடங்கள் பழமையானவை. சரியான முறையில் இல்லாத சமூக வரையறையும், திட்டமும் இல்லாதால் கட்சிகள் வலதுசாரிய சீரழிவுக்கும், உள்பிரிவினைக்கும் ஆளாகின்றன. இன்று உலகமயமாகியுள்ள நிலையில் மேற்படி சமூக வரையறைகளையும், திட்டங்களையும் கட்சிகள் அயல் நாடுகளின் சகோதர கட்சிகளுடன் விவாதிக்க வேண்டியது மிக முக்கியமானது. அந்த வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே இந்த ஆசிய விவசாய மாநாடு நடைபெறுகிறது. அத்துடன் ஆசிய மார்சிச லெனினிச மாவோயிஸ கட்சிகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை நீக்கி உறவை ஏற்படுத்துவதும் மாநாட்டின் நோக்கமாகும்.
மாநாட்டில் ஆசியாவை சேர்ந்த 32 நாடுகளை சேர்ந்த மார்சிச லெனினிச மாவோயிஸ கட்சிகள் பங்கெடுக்கின்றன.மாநாட்டில் இலங்கை பிரதிநித்துவ படுத்தும் வகையில் எமது அமைப்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணி (NDPF) தோழர்கள் பங்கெடுக்கின்றனர்.
எமது வரையின் படி இலங்கை "இன்று இலங்கை அரைகாலனிய அரைநிலப்பிரபுத்துவ நாடல்ல. நவகாலனியத்தை அடிப்படையாக கொண்ட, நவகாலனிய, அரை நிலப்பிரபுத்துவ பண்பாட்டை அடித்தளமாக கொண்ட ஒரு நாடு. இலங்கை விவசாயம் சுதந்திரமான சிறு விவசாயிகளை சார்ந்தும், நவகாலனிய தரகு முதலாளித்துவ பெரு மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு. பெருமளவு குட்டிபூர்சுவா வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்ட, அதேநேரம் தொழிலாளர் வர்க்கத்தை கொண்ட, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நவகாலனிய தரகுமுதலாளித்துவ நாடாகும்."
(இந்த வரையறையை எமக்கு முன் புதிய ஜனநாயக மார்சிச லெனினிச கட்சி, தனது ஆய்வின் மூலமும், விவாதத்தின் மூலமும் வந்தடைந்தது என்பது இங்கு கவனத்தில் கொள்ள படவேண்டியதொன்றாகும்.)
இலங்கையின் விவசாயம் பற்றிய தமது அறிமுக உரையில் இன்று மேற்படி வரையறை எமது தோழர்கள் முன்வைத்தனர்.
மாநாடு ஆசியாவில் மட்டுமல்ல ஒவ்வொரு கண்டங்கள் ரீதியாக நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை Coordination of Revolutionary Parties and Organizations (ICOR) செய்துள்ளது.
எமது அமைப்பின் விவசாய ஆய்வை இங்கு வாசிக்கலாம்: