ஏழை உழைப்பில் கொளுத்தவர்களே
உங்கள் மாளிகைகளிற்கு அருகாய்
தூசு கிடந்தாலும்
தொற்றுநோய் வந்திருமென்கிறாய்
நம்மையும்
நாளைய தலைமுறையையும்
கதிர்வீச்சுக் கொன்று போடப்போகிறது
கூலிப்பட்டாளத்தை அனுப்புகிறாய்
உரக்க ஒலிக்கும் குரல்கள் நசுக்கப்படுமா?
போபால் விசவாயு கசிந்து
துடித்து மடிந்ததும்
கோலா சிதைக்கும் வளமும் உயிர்களும்
பாரதமாதா கண்ணைத்திறக்கவேயில்லை
கொள்ளையிடும் நிறுவனங்களும்
கூட்டாட்சி செய்யும் கட்சிகளும்
ஒட்டுமொத்தமாய்
வாக்குப்பொறுக்கிகள் ஓரணியில்.....
உயிர்குடிக்கப் போகும்
இராட்சத உலை நிமிர்ந்து
குடிசைகளை அச்சுறுத்தி நிற்கிறது
தெரிகிறதா மாநிலமே
நச்சுக்கசிவு காற்றில் கலந்து
மூச்சுத்திணற முதல்
மூடு உலையை எனும் அலறல் கேட்கிறதா
வாழப்போராடும் மக்களை
சூழ்ந்து நிற்கிறது மாநிலக்கூலிப்படை
உழைக்கும் வர்க்கம் எதிர்த்து நிற்பது
கூடங்குளத்து
மக்களிற்கு மட்டுமாய் அல்லவே
இந்தியக்குடிமக்கள் அத்தனைபேரையும்
அந்நியக்கரங்கள் சாகடிக்கப்போகிறது
இனியும் உறங்கோம்
இனியும் உறங்கோம்
எழுக தேசமென
இடிந்தகரையில் முழக்கம் கேட்கிறதா!!
24/03/2012