இனி இந்த இடதுசாரி வேடதாரிகளைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்;. இடதுசாரி மார்க்சிய ஆய்வளராக, ஸ்டாலின் எதிர்ப்பு வாதிகளாக திகழ்ந்த அறிவுத்துறை கோட்பாட்டுளரகளான ரஸ்ஸல், ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் ஆகியோரின் சொந்த முகங்கள் 1996 யூலையில் அம்பலமானது. இவர்கள் பிரிட்டிஸ் உளவுத்துறையில் கைக்கூலியாக இருந்து கம்யூனிசத்தை திருத்தி எழுதவும், ஸ்டாலின் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு போராளியாக இருந்தது உலகையே வியக்கவைத்தது.

 

இவர்களைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம். உலகிலும், தமிழிலும் புகழ் பெற்ற மற்றும் நான்காம் அகில டிராட்ஸ்கிகளால் போற்றப்பட்ட ஸ்டாலின் எதிர்ப்பு இலக்கிய ஆவணமான "விலங்குப் பண்ணை"யை எழுதிய, சுதந்திர இடதுசாரி ஸ்டாலின் எதிர்ப்பு எழுத்தளரான ஜார்ஜ் ஆர்வெல், பிரிட்டிஸ் உளவுப்படையில் இயங்கிய கம்யூனிச எதிர்ப்பு இடதுசாரி போராளியாவர். பாசிசம் தனது உருக்கொண்டு உலகை அடக்கி ஆக்கிரமிப்பை செய்து கொண்டிருந்த 1943 இல் தான், விலங்கு பண்ணையை ஸ்டாலின் எதிர்ப்பாக, கம்யூனிசத்தை இழிவுபடுத்த வெளிக் கொண்டு வந்தவன்;. அடுத்து அமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் இடையில் பனிப்போர் தொடங்கி அதுவே தேன்நிலவாக கொப்பச்சேவ்வுடன் கூடியபோது, இவரின் மற்ற நூல் "1984" வெளியாகியது.  இந்த நூல் இரண்டடையும் பிரபலப்படுத்தி விற்கும் படி, பிரிட்டிஸ் அரசு தனது துதரகங்களுக்கு உத்தரவு இடமளவுக்கு, கம்யூனிச எதிர்ப்பை அடிப்படையாக கொண்டிருந்தது. இங்கு விலங்கு பண்ணையில் வரும் பன்றி மற்றும் நாய்யை கம்யூனிஸ்டுகள் என்று, முஸ்லிம் நாடுகளில் அடையளப்படுத்தி, அந்த நாட்டு மதப் பண்பாட்டுக்கு ஊடாக, பிரிட்டிஸ் துதரகம் அவதூறு செய்தது. பிரிட்டிஸ் உளவுதுறையில் முக்கிய பொறுப்பில் பணியற்றிய செலியா என்ற பெண் 1996 இல் கூறிய விபரத்தில் "1949 இல் ஆர்வெல்லை கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் உளவு வேலை தொடர்பாக சந்தித்தேன.; அவருக்கு இவ்வேலையில் பெரும் ஆர்வம் இருந்த போதிலும் உடல்நிலை சரியில்லாதால் இயலவில்லை என்று கூறிவிட்டு, பத்திரிகைத்துறையில் உள்ள கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்ற பட்டியலைக் கொடுத்தார். தான் ஆள் காட்டிய விசயம் வெளியே தெரிய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்." இந்த இடதுசாரி கனவான் தான் "1984" நாவலில் "பெரியண்னன் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்" என்று பிரபாலமான கம்யூனிச எதிர்ப்பு வாக்கியத்தை உருவாக்கிய மேதை, ஒரு உளவாளி என்பதை சொன்னால் ஸ்டாலின் எதிர்ப்பு கம்யூனிச எதிர்ப்பு உலகம் நம்பிவிடமாட்டாது. ஆனால் அது சந்தி சிரிப்பது என்னவோ வேடிக்கையல்ல. இதுதான் பலரின் சொந்த இரகசிய முகங்கள் ஆகும்.

அடுத்து ரஸ்ஸல் இடதுசாரியாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் அல்லாத இடதுசாரியாக இருக்க வேண்டும் என்பதில், பிரபு குலத்தில் பிறந்த அவரின் கனவாக இருந்தது. இவரின் பாட்டானர் பிரிட்டிஸ் பிரதமராக இருந்தவர். 1920 இல் லெனினை மொஸ்கோ சென்று சந்தித்த பின்பு "போல்ஷ்விக் கோட்பாடும் நடைமுறையும்" என்ற நூலில், தனது இடதுசாரி அற்பத்தனத்தில் இருந்து மார்க்சிய எதிர்ப்பை வெளியிட்டார். ஒரு கொள்கையில் ஈடுபடுபவர்கள் கொலையிலும் இடுபட தயங்க மாட்டார்கள் என்றும், அந்த வகையில் மதம், கம்யூனிசம், நாசிசம் ஆகிய அணைத்தும் ஒன்றே என்பது இவரின் கருத்து. பின்நவீனத்துவ கோட்பாட்டை உள்ளடக்கி, இது கட்டமைக்கின்றது. ஐயவாதமும் அறியொணாவாதமும் "சிந்தாந்தம்" என்று ஒன்று இல்லாது இருப்பதே ஜனநாயகமும் மற்றும் சகிப்புத் தன்மைக்கும் அடிப்படையானது என்கின்றார். இந்த இடதுசாரி, பாசிசம் தோற்கடிக்கப்பட்ட பின்பு கவலையுற்று "ரசியா மேலை நாடுகளிடம் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். இல்லையேல் அதனை அணுக்குண்டு வீசி அழித்தவிட வேண்டும்" என்றாரே. கொள்கைகாக வன்முறையில் ஈடுபடக் கூடாது என்றவர், எப்படி இதை கூறமுடிகின்றது? இதையும், இந்த இடதசாரித்தனத்தையும் என்ன என்று சொல்வது.

1960 இல் மீண்டும் ஜனநாயகத்தின் அவதாரமாகி அணு ஆயுத எதிர்ப்பு போராட்டம் செய்தன் தொடர்ச்சியில் கைது செய்யப்பட்டார். அதேபோல் அமெரிக்காவின் வியத்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இவை எல்லாம் கூட பிரிட்டிஸ் உளவுத்துறையின் வழிநடத்தப்பட்டார். இவர் உலகம் போற்றும் மாபெரும் அறிஞர், கனித விஞ்ஞானி, சமூகவியல் ஆய்வாhளர், எழுத்தாளர், ஜனநாயகவாதி, நாத்திகர், கல்வியாளர் என்ற எல்லைக்குள் நடந்தன. இவரின் நூல்கள் இன்ற கல்விப் பாட நூலில் இருக்கின்றது. பிரிட்டிஸ் உளவுத் துறை விட்ட அறிக்கையில், தமது சம்பளத்தை பெற்று வந்தற்கான காரணம், அறிவுத் துறை சார்ந்து கம்யூனிச எதிர்ப்பு பிரச்சரம் மற்றும் கம்யூனிச ஆதாரவளர்களை காட்டிக் கொடுப்பதற்காகவே பணத்தைப் பெற்றனர் என்று தெளிவுபடவே முன்வைத்தனர். கம்யூனிச எதிர்ப்பு இடதுசாரி பின்னால் இதுபோன்ற பல வேடங்கள் இருக்கும் வரை, அவர்கள் ஸ்டாலின் எதிர்ப்புடன கம்யூனிச எதிர்ப்பு ஜனநாயகவாதிகளாக உலவுவது தொடரும்.

அடுத்தவன் 30 களில் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததுடன், சோவியத்யூனியன் சென்று வந்த கீஸ்லர் ஆவன். ஸ்பெயின் பாசிச எதிர்ப்பு போரில் பங்கு பற்றியதுடன் சிறை சென்ற இவன், சர்வதேச நிர்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டவன். அந்த  யுத்தத்தில் பாசிச எதிர்ப்பு பத்திரிகையாளராக செயல்பட்டவர். இவரை பிரபலமாக்கிய நூல் "பகலில் இருள்" என்பது ஸ்டாலினை கொடுகோலனாக வருணித்த நூலாகும். புகாரின், ஜிகோவியேவ் போன்றவர்கள் மீது பகிரங்கமான விசாரனை, சர்வதேச பத்திரிகையாளர்கள் முன் நடைபெற்றது. அது தொடர்பாக "அவர்கள் ஏன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்?" என்ற கேள்வியை எழுப்பி, அதை மிரட்டி வாங்கினார்கள் என்பதை சொல்லமுடியாது. விசாரனை பகிரங்கமாக நடைபெற்றது. அத்துடன் அவர்கள் தமது செயலை கொள்கையாக விசாரனை மண்டபத்தில் பிரகடனம் செய்தவாகள் அல்லவா. அதை இவர் "அவர்கள் இத்தனை காலம் பொருள் முதல்வாதிகளாக இருந்தார்கள்; எனவே மார்க்சியம் தான் அவர்களுடைய எதிர்ப்புணர்வையே உறுஞ்சி விட்டது" என்றாரே இந்த இடதுசாரி. இது எல்லாம் குற்றத்தை தமது சொந்த பிரகடனங்கள் ஊடாக ஒப்புக் கொண்டதை சகிக்கமுடியாத, ஸ்டாலின் எதிர்ப்பில் பிதற்றியவையே. மேலும் "நாம் முரணற்றவர்கள் அல்ல் முரணற்றவர்களாக மாற வேண்டும் என்பதற்கான முயற்சி நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் தெரியுமா? அதோ கம்யூனிஸ்டுகளைப் பாருங்கள்!" என்றார். முரண்பாட்டை "உறிஞ்சும்" மார்க்சியத்தை "எதிர்ப்பை உறிஞ்சும்" மார்க்சியமாக விகாரப்படுத்தி காட்டுவதன் மூலம், ஸ்டாலின் எதிர்ப்பு ஒழுங்கமைக்கப்பட்டது. இவர் "தவறிழைத்தவன் தனதுடைய தவறை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்" என்ற எழுப்பும் வாதத்தின் பின்பு, ஸ்டாலின் மீதான கழ்ப்பு எஞ்சிக்கிடப்பது தெளிவாகின்றது. இந்த புத்தீஜிவியும் பிரிட்டிஸ் உளவுத்துறையின் உளவாளியாக, ஸ்ராலினுக்கும் மார்க்சியத்துக்கும் எதிராக அறிவை உற்பத்தி செய்பவனாக, சம்பளப் பட்டியலில் இருந்தது அம்பலமாகியுள்ளது.

அடுத்தவன் பிரிட்டிஸ்சில் இருந்த பிரபலமான இடதுசாரி கவிஞான ஸ்பென்டர் ஆவர். "என் கவுண்டர்" இதன் அர்த்தம் சந்திப்பு அல்லது மோதல் என்ற பொருளில், அறிவுத்தரம் கொண்ட பத்திரிகையின் ஆசிரிராக இருந்தவர். இப்  பத்திரிகைக்கு "பண்பாட்டு சுதந்திரத்திற்கான காங்கிரஸ்" நிதிவழங்கியது. இப்பத்திரிகை அமெரிக்காவின் சி.ஐ.ஏயால் நடத்தப்படுகின்றது என்று, 1960 இல் கனார்க்யூரி ஒப்பியன் என்ற ஜரிஷ் ராஜதந்திரி வெளியிட்ட போது, ஸ்பென்டர் அவருடன் இருந்த அறிவாளிகளும் மறுத்தனர். ஆனால் அமெரிக்கா உளவுத்துறை நாங்களே பணம் கொடுத்தோம் என்று ஒப்புக் கொண்டது. உடனே அவர் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி, பத்திரிகையில் இருந்து ராஜினமா செய்தார். ஆனால் இந்த அப்பாவி முற்போக்கு இடதுசாரிக் கவிஞர் பிரிட்டிஸ் உளவாளியாக வேறு இருந்தது இன்று அம்பலமாகியுள்ளது. ராஜினாமா சுதந்திரமான முற்போக்கு கவிஞர் பட்டத்தை பாதுகாக்க என்பதும், தொடர்ந்து சமூகத்தை ஏமாற்றி கம்யூனிச எதிர்ப்பை விரிவாக்கவும் பயன்பட்டது அவ்வளவே.

இவர்கள் நால்வரும் பிரபலமான இடதுசாரியாக அறியப்பட்டது மட்டுமின்றி, அப்படித்தான் அவர்கள் பிரகடனம் செய்தனர். ஸ்ராலினையும், கம்யூனிஸ்ட்டுகளையும் தூற்றி எழுதிய "விலங்குபண்ணை" வெளியிட்ட பின்பு "தான் சோசலிச எதிhப்பாளன் அல்ல" என்று கூறிக் கொள்ள பின்நிற்க்கவில்லை. ஆர்வேல் பிரிட்டிஸ் உளவாளியாக செயல்பட்டதை வெளிக் கொண்ட வந்த பிரிட்டிஸ் உளவு நிறுவன அதிகாரி செலியா "ஆர்வேல் சோசலிசத்துக்குத் துரோகம் செய்யவில்லை. அவர் கம்யூனிசத்தைத்தான் எதிர்த்தார். மக்கள் இதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது" என்றார். நாங்கள் கம்யூனிசத்தின் எதிரிகள் அல்ல ஸ்டாலின் எதிரிகள் என்போரும் இதைத்தான் குருவின் வழியில் மீள மீள ஒப்புவிக்கின்றனர் அவ்வளவே.

கம்யூனிச மற்றும் ஸ்டாலின் எதிர்ப்பளர்களான ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியவாதிகளைப் பற்றி சிறுகுறிப்பு ஒன்றைப் பார்ப்போம். முதலாம் உலக யுத்தத்தை இரண்டாம் அகிலத்தின் கட்சிகள் ஏற்று, சமூக தேசியவெறியர்களாகி வர்க்கப்போரட்டத்தை காட்டிக் கொடுத்த போது, லெனின் தலைமையிலான கம்ய+னிஸ்ட் கட்சி, தனது வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில் ஊன்றி நின்று, அதை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஏகாதிபத்தியங்கள் சோவியத் மீதான ஆக்கிரமிப்பை நடத்தியதிலும், தோற்று ஒடிப் போன நிலையில், மார்க்சியத்தை, அதன் உள் நெருங்கியும் புகுந்தும் அழிப்பது என்பது அவர்களின் அடுத்த குறிக்கோலாகியது. இதன் தொடர்ச்சியில் தான் ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியவாதிகள் உருவாகின்றனர். லெனின் உயிருடோ இருந்த காலத்தில், ஏகாதிபத்தியம் தோற்றோடிய நிலையில், 1922 இல் மத்தியில் இந்த ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியவாதிகள் முதல் கூட்டத்தை நடத்தினர். இந்த காலகட்டத்தில் சோவியத்துக்கு எதிராக, புத்தக அறிவுத்துறை சார்ந்து, நடைமுறையை மறுக்கின்ற, மார்க்சிய அடிப்படைகளை நிராகரித்த நபர்கள், ஒன்றுகூடி மார்க்சியத்தை மறுத்து உருவாக்கிய எழுத்துகளே இதன் கோட்பாடாகும். இந்த ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியவாதிகளின் நிறுவன ஆய்வுகள் ஏகாதிபத்திய பல்கலைக்கழக ஆதரவும், ஆசியும் பெற்று இணைந்தே இயங்கியது. இங்கு மார்க்ஸ்க்கு இப் பல்கலைக் கழகங்கள் என்ன பரிசைக் கொடுத்தது என்பது, மார்க்ஸ்சின் வரலாறாக உள்ளது. இந்த ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியவாதிகள் பெரும்பாலனோர் பணக்கார யூதர்களால் நிரப்பபட்டு (அதாவது பூனூல் போட்ட பணக்கார பார்ப்பனர்கள் போல்) இருந்தனர். அறக்கட்டளை ஒன்றின் மூலம், வருடம் 30000 அமெரிக்கா டொலரை பெற்று மார்க்சியத்தக்கு எதிராக சொகுசாக வாழ்ந்தபடி எழுதினர். ஜெர்மனியில் பாசிசம் வந்த நிலையில், யூதர்க்கு எதிரான பொதுப்படையான விரிவான தாக்குதாலால், பெரும்பாலனோர் அமெரிக்கா சென்றனர். பாசிசம் தோற்கடித்த பிற்பாடு உடனடியாகவே, 1944 இல் அமெரிக்கா ஜனாதிபதி ட்ருமன் நேரடி உதவியுடன் ஃப்ராங்க்ஃபர்ட் ஹோர்க்ஹைமர் ஜெர்மன் அனுப்பபட்டு, மீண்டும் ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் தனது ஆய்வின் பின் கம்யூனிச, ஸ்டாலின் எதிர்ப்பு பிரச்சாரத்தை கட்டமைத்தனர். அமெரிக்க ஜனதிபதி கம்யூனிச எதிர்ப்பு புத்திஜீவிகள் ஜெர்மனியில் பாதுகாப்பாக தங்கியிருந்து எதிர்ப்பிரச்சாரம் செய்ய, ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியவாதிகளுக்காக சிறப்பு பிரஜாயுரிமை சட்டம் ஒன்றை அமெரிக்கா ஏகாதிபத்தியம் உருவாக்கி, ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியவாதிகளுக்கு இரட்டை பிரஜாஉரிமை வழங்கினர். இந்த ஏகாதிபத்திய ஆதாரவு பெற்ற இவர்களை, இடதுசாரி மாhக்சியவாதிகள் என்று சொல்லி வாலாட்ட பலர் தயாராக உள்ளது.

அதேநேரம் ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியவாதிகளாக இருந்த பலர், அமெரிக்கா ஏகாதிபத்திய அரசில் இணைந்து கொண்டனர். கம்யூனிச எதிர்ப்பை சர்வதேச கொள்கையாக கொண்ட அமெரிக்கா இராஜாங்க அமைச்சில் இணைந்து கொண்டு, அதற்கு முண்டு கொடுக்கும் தூண்களாக இயங்கினர். கிரிச்ஹைமர் 1955 வரை இராஜங்க அமைச்சில் வேலை செய்தார். மார்க்யூஸெ இராஜாங்க அமைச்சில் 1950 வரை செயல்ப்பட்டார். இவர்கள் இருந்த காலகட்டம் தான் அமெரிகாவில் ஸ்டாலின் எதிர்ப்பும், கம்யூனிச எதிர்ப்பு உச்சாத்தில் இருந்ததுடன், அவர்களை கைது செய்து சிறையில் தள்ளிய காலகட்டமாகும். கார்ல் விட்ஃபோகல் அமெரிக்கா விசாரனையில் கம்யூனிஸ்ட்டுகளை காட்டி கொடுத்ததுடன், அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக சட்சியம் கூட அளித்தார். லோவெந்தால் "வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா" என்ற வனோளியில் இயக்குனர் பதவியைப் பெற்று கம்யூனித்துக்கு எதிராக பிரச்சாரத்தில் இறங்கினார்.

மீன்டும் ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியத்தை அமெரிக்க ஜனாதிபதியின் நேரடி உதவியுடன் ஜெர்மனியில் நிறுவிய ஹோர்க்ஹைமர் ஜெர்மன் ஏகாதிபத்திய தொலைக்காட்சி, வானொலியில் நாட்டின் பிரதமரான கோன்ராட் அடினாருடன் இனைந்து கம்யூனிசத்துக்கு எதிராக நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த ஃப்ராங்க்ஃபர்ட் நிறுவனத்துக்குகான மூலம், யூத எதிர்ப்பை ஆய்வு செய்வதாக வரையறுத்து இருந்த போதும், அவர்கள் பாசிசத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி, அதை ஒருக்காலும் ஆய்வு செய்யவில்லை. மாறாக மார்க்சியத்தை எதிர்த்தே, மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியத்தை வீரியமிழக்கும் உள்ளடகத்தை வெளிப்படுத்தினர். மோசடியான கோட்பாடுகளின் பின்பு சொகுசான வாழ்வை, எகாதிபத்திய தயவு பெற்று, அதில் இருந்து மார்க்சிய ஆய்வு, திருத்தம் என்று பலவண்ண வடிவங்களை முன் தள்ளினர். ஆனால் மார்க்சிய தலைவர்கள் எப்படி வாழ்ந்தார்கள். அவர்களின் எளிமையான வாழ்க்கையின் துரும்பைக் கூட இவர்கள் எட்ட முடியாது.

மார்க்சிய தலைவர்கள் தமது தத்துவத்தை நடைமுறை மக்கள் கோட்பாடாக, அதை மக்களுக்குள் பிரச்சாரம் செய்து அதற்காக போராடியபடியே நிறுவினார்கள். மார்க்ஸ் தனது தத்துவத்தை மார்க்சியத்தின் பெயரில் முன்வைத்த போது, நடைமுறை போராட்டத்தில் பங்கு பற்றியபடிதான் முன்வைத்தார். இவரின் எழுத்துகள் பிரசுரிப்பதற்கு தடை, வாழ்வதற்கு தடை, வறுமையில் வாழ நிhப்பந்தித்த ஜனநாயக சுதந்திர அரசுகள் ஒடுக்கமுறையை ஒரு சுழற்சியான நீடித்த வாழ்க்கையாக்கினர். பசி, பட்டினி என்று வறுமையில் ஒடஒட துரத்திய ஒருநிலையில்தான், மார்க்சியத்தை உலகுக்கு தந்தார். ஆனால் மார்க்சியத்தை எதிர்த்த நிற்பவர்கள் அரசுகளின் ஆதாரவுடன், அவ் அரசுகளின் முக்கியமான பதவிகளை நிரப்பியபடி, பண நன்கொடைகளுடன், பல்கலைக்கழக உதவியுடன் சொகுசான வாழ்வை வாந்தபடி, நடைமுறையில் இருந்த அன்னியப்பட்டு, நடைமுறை மீது காறி உமிழ்ந்த கோட்பாடுகள் தான் அனைத்தும். ஏங்கெல்ஸ் தனது சொத்தை கைவிட்டு மார்க்ஸ்சுடன் ஒன்று இனைந்து போராடிய போது, மார்க்ஸ்சின் வறுமையில் பங்கு கொண்டு நடைமுறை வாழ்வில் மார்க்சியத்தை வளர்த்து எடுத்தார். லெனின் சொந்த நாட்டில் சிறையிலும் பின்பு நாட்டில் இருந்தால் சிறை படுகொலை என்ற நிலையில், தலைமறைவும் வாழ்விலும் பல நாடுகள் கடந்து வாழும் அரசுகளின் தொடர்ச்சியான நெருக்கடியில் வாழ்ந்தார். ஸ்டாலின் எழைக் குடும்பத்தில் பிறந்து புரட்சியில் பங்கு பற்றிய வாழ்வில் பலமுறை தொடர்ச்சியாக சிறை சென்றதுடன், ஒவ்வொருமுறையும் தப்பிவந்து தலைமறைவாக மக்களுக்குள் போராடிய தலைவர். ஒவ்வொரு நெருக்கடியின் போது மார்க்சியத்தை விட்டு ஒடாது, உறுதியான மார்க்சியவாதியாக லெனினுடன் கைகோத்து நின்றார். இவர் சோவியத் ஆட்சியில் பாசிச யுத்தத்தில் சொந்த மகனை சதாரன பிரஜையாகவே யுத்ததுக்கு அனுப்பிய போது, நாசிகள் கைது செய்து பேரம் பேசிய போது, பேரத்தை மறுத்து சொந்த மகனையே இழந்தார். ஏன் ஸ்டாலின் இறக்கும் வரை போட்டிருந்த ஒரேயொரு குளிhக்கோட்டை, அவர் 20 வருடங்களாக பயன்படுத்தினர். நம்ப முடியாதவர்கள் இருப்பார்கள், நாம் என்ன செய்யமுடியும். எளிமையான வாழ்வு, மக்களுடன் மக்களாக வாழ்வதில் பற்று, அவரின் உன்னதமான பண்புகளாகும்;. மாவோ மிக கடினமான உள்நாட்ட சூழ்நிலையில் போராடிய ஒரு தலைவர். சொந்த மகன் சாதாரண பிரஜையாக கொரிய யுத்தத்தில் ஈடுபட அனுப்பிய போது இழந்தார். இன்று மவோவின் மற்றொரு மகன், சீனாவில் சாதாரண ஒரு உணவகத்தில் வேலைசெய்யும் ஒரு தொழிலாளிதான், தலைவர்களின் வாழ்க்கையே கம்யூனிசத்தின் பண்பை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. மக்களை நேசித்த இத் தலைவர்கள், மிக நெருக்கடியான வாழ்விலும், நெருக்கடியற்ற வாழ்விலும் ஒரே விதமாக வாழ்ந்தார்கள்;. போராடினர்கள். இதுவே மார்க்சிய தலைவர்களின் சிறந்த பண்பாகும். ஆனால் மார்க்சியத்தை திருத்த, ஆய்வு செய்ய, விளக்க, புகுத்து, விமர்சிக்க புறப்பட்டவர்களின் வாழ்வையே, நாம் மேலே தெளிவாக பார்க்கின்றோம்;. இவை கூட மிக குறைந்த பட்சம் தொகுக்கப்பட்டவை. இதுபோல்  இன்னும் பலரை தொகுக்க முடியும்;. அதை பின்பு நாம் காண்போம்.

ஸ்டாலினையும், கம்யூனிஸ்டுகளை எதிர்த்து பல வண்ணக் கோட்பாடுகளை இடதுசாரி பெயரில், மார்க்சியம் என்ற பெயரில், மார்க்ஸ்சுக்கு விளக்கம் கொடுத்து வந்த பல வண்ணங்களை, கோட்பாட்டு ரீதியாகவும், நாம் கேள்விகளை உள்ளடக்கி விடுவது சுயமான தேடுதலை இதன் மேல் ஏற்படுத்தும். இதை அடிப்படையாக கொண்டு அணைவரின் சிந்தனைக்கும் உள்ளக வேண்டிய, யாரும் கருத்தின்றி தப்பிச் செல்ல முடியாத சில முக்கியமான பிரச்சனைகளை எழுப்புவது அவசியமாகின்றது.