கம்யூனிஸ்டுகள் 10 கோடி மக்களை தனது வர்க்கப் போராட்ட பாதையில் கொன்று விட்டதாக, சோவியத் புரட்சி முதல் புரட்சிகான ஆயுதத் தயாரிப்பு நடந்த பிரதேசம் ஈறாக, இன்று ஏகாதிபத்தியம் கூட்டிக் கழித்து கணக்கு காட்டுகின்றது. ஸ்டாலின் மீதும், கம்யூனிஸ்டுகள் மீதும் வைக்கின்ற அவாதூறுக்கு தனித்தனியான ஒவ்வொரு வர்க்கப் நோக்கமும், பின்னனியும் இருந்தபோதும், அவை ஒரே இடத்தில் இருந்து தொடங்கி ஒரே இடத்தில் சங்கமிக்கின்றது. இந்த வௌ;வேறு விதமான அவதூறுக்கான மூலமாக, ஏகாதிபத்திய புள்ளிவிபரத்தை அடைப்படையாக கொள்கின்றனர். இன்று இடதுசாரி முகமுடியின் கீழும், மார்க்சியத்தை திரித்தும், திருத்தியும், சேர்த்தும், பரிசோதித்தும் வளர்ப்பதாக வேடம் போடும் இடதுசாரி போலி மார்க்சியவாதிகள், அடிப்படையில் ஸ்டாலின் எதிர்ப்பு ஊடாக அரங்கில் நுழைகின்றனர். ஸ்ராலினை பகுதியாக மறுப்பதாக, முழுமையாக மாறுப்பதாக பலவண்ணமாக ஸ்டாலின் எதிர்பாளர்கள் முன்வைக்கும், ஸ்டாலின் படுகொலைப் புள்ளி விபரங்கள் (உதாரணமாக பிரான்சில் இருந்து வெளிவரும் அம்மாவில் 15 லட்சம் போல்ஷ்சுவிக் ஸ்டாலின் 1937 இல் படு கொலை செய்தார் என்று, இடதுசாரி பெயரில் கதை அளக்கின்றனர்) ஏகாதிபத்திய புள்ளிவிபரத்தை மிஞ்சி விடுவதன் மூலம், அவதூற்றை அரசியலாக்கின்றனர்.
நாம் ஏகாதிபத்தியம் முன் வைக்கும் பத்து கோடி படுகொலையில், சோவியத்தில் அரசியல் சார்ந்த கைது மற்றும் படு கொலைகள் என்று முன்வைக்கும் புள்ளி விபரங்களை, முதலில் பார்ப்போம்.
ஆண்டு அரசியல் குற்றவாளியாக காணப்பட்டோர் அதில் மரண தண்டனைக்கு உள்ளனோர்
1921 35 829 9 701
1922 6003 1 962
1923 4794 414
1924 12 425 2 550
1925 15 995 2 433
1926 17 804 990
1927 26 036 2 363
1928 33 757 869
1929 56 220 2 109
1930 208 069 20 201
1931 180 696 10 651
1932 141 919 2 728
1933 239 664 2 154
1934 78 999 2 056
1935 267 076 1 229
1936 274 670 1 118
1937 790 665 353 074
1938 554 258 328 618
1939 63 889 2 552
1940 71 806 1 649
1941 75 411 8 011
1942 124 406 23 278
1943 78 441 3 579
1944 75 109 3 029
1945 123 248 4 252
1946 123 294 2 896
1947 78 810 1 105
1948 73 269 -
1949 75 125 8
1950 60 641 475
1951 54 775 1609
1952 28 800 1612
1953 8 403 198
மொத்தம் 4060 306 799 473
இதுதான் சோவியத்தில் அரசியல் காரணத்துகாக கைது செய்யப்பட்டதும், கொல்லப்பட்டதாக ஏகாதிபத்தியம், தனது 10 கோடி கம்யூனிச படு கொலை அவதூற்றில் தொகுக்கும் புள்ளிவிபரம். இது 1921 முதல் 1953 வரையிலான காலத்தை உள்ளடக்கிய 33 வருடத் தொகுப்பாக முன்வைக்கின்றனர். அண்ணளவாக 8 லட்சம் பேர் இந்த 33 வருடத்தில் அரசியல் கரணத்துக்காக கொல்லப்பட்டதாக ஏகாதிபத்தியம் குற்றம் சாட்டுகின்றது. இதில் 1921 முதல் 1953 வரையிலான காலத்தில் எதிர்ப் புரட்சி நபர்கள் முதல் குலாக்கள் மற்றும் பாசிட்டுகள் வரை உள்ளடக்கிய அரசியல் கைது மற்றும் கொல்ப்பட்டவர்கள் சார்ந்து, இப்புள்ளி விபரத்தை ஏகாதிபத்தியம் எம்முன் வைக்கின்றது. இடதுசாரிகளின் ஆய்வுக் குஞ்சுகளின்; ஸ்டாலின் எதிர்ப்பு பற்றி கற்பனைகளை பார்ப்போம்;.
இடதுசாரி மாக்சிய தோல்களுக்கு பின்னால் ஆய்வு செய்யும் ஸ்டாலின் எதிர்ப்பு கம்யூனிச விரோதிகளின் புள்ளி விபரங்கள், எப்படி இதைத் தாண்டி பல மடங்காக எமக்கு புள்ளிவிபரங்களை முன்வைக்கவும், ஏமாற்றி காலத்தை ஒட்ட முடிகின்றது. இதை வைத்தே கம்யூனிச எதிர்ப் பிரச்சாரத்தை கட்டமைக்க முடிகின்றது. ஏகாதிபத்திய புள்ளிவிபரங்கள் எவ்வளவு மோசடி கொண்ட, எதிர்புரட்சிகரத் தன்மை கொண்டவையாக உள்ள போது, உண்மை எவ்வளவு நேர்மாறனதாக இருக்கும் என்பதற்கு, எமக்கு சுய அறிவே போதுமானது. இடதுசாரி வேடத்தின் பின் கட்டமைக்கும் ஸ்டாலின் அவதூறு எவ்வளவு இழிவனவை என்பதையும், இப் புள்ளிவிபரங்கள் துல்லியமாக எமக்கு தெளிவுபட விளக்குகின்றது. லெனின் உயிருடன் இருந்த போதே, டிரோட்ஸ்கி பாதுகாப்பு மந்திரியாக இருந்த போதே, அரசியல் ரீதியாக எதிர்ப்புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் ஏகாதிபத்திய புள்ளிவிபரம் காட்டுகின்றது. அதாவது 1921-1923 இல் லெனின் உயிருடன் இருந்த போது, டிராட்ஸ்கி அரசில் இருந்த காலத்தில், ஏகாதிபத்தியம் அரலியல் கைது மற்றும் கொலையை முறையே 46 626 - 12 107 என்று தொகுக்கின்றது. ஏகாதிபத்தியம் விளக்கி அவதூறு செய்யும் அவதூற்று எல்லையைத் தாண்டி, எதிர்ப்புரட்சியில் ஈடுபட்டு அரசியல் எதிரிகள் கைது செய்யப்பட்டதும், சுட்டுக் கொல்லப்பட்டதும் இயல்பானவைதான். இந்த அரசியல் வன்முறையை டிராட்ஸ்கி "புரட்சிகரத் தொழிலாளர் மத்தியில் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டடையும் ஏற்படுத்தும் வழிமுறைகளில் மட்டுமே அனுமதிக்கத் தக்கதும் கட்டாயமானதுமாகும். இந்த ஐக்கியமும் ஒருமைப்பாடுமே அடக்கமுறைக்கு எதிரான விட்டுக்கொடுக்க முடியாத குரோதத்தினால் அவர்களை நிரப்பும். இதுவே அவர்களது வரலாற்றுப்பணி பற்றி பிரக்ஞையில் அவர்களை அமிழ்த்தி எடுக்கும். அவர்களது திடசித்தத்தையும் தியாக உணர்வையும் அவர்களிடம் ஏற்படுத்தும்." என்று அவர் அரசில் இருந்த காலத்து அரசியல் வன்முறைக்கு, அரசில் இல்லாத காலத்தில் விளக்கம் கொடுத்தார். அரசியல் ரீதியான வர்க்க வன்முறை, வர்க்க சமுதாயத்தில் நிபந்தனையானது தவிர்க்க முடியாது. இதுவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் தொடரும் வர்க்கப் போராட்டத்தை மறுத்து வன்முறை முதல் அனைத்து வழியிலும் போராடும் போதும், அதற்கு எதிராக நிகழ்கின்றது. ஆனால் இந்த வன்முறையில் ஏகாதிபத்தியம் காட்டும் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் நடந்தவையல்ல. மூலதனம் தனது இழந்து போன சொர்க்கத்தை மீட்க போராடும் போது, வன்முறை இயல்பானது. "அரசும் புரட்சியும்" என்ற நூலில் லெனின் "ஒரு கம்யூனிச சமுதாயத்திற்கு முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து மாற்றமடைவது, கம்யூனிசத்தை நோக்கி அது வளர்வது ஒரு அரசியல் ரீதியிலான மாறுதலடையும் காலகட்டமின்றிச் சாத்தியமில்லை. இந்த காலகட்டத்தில் அரசு புரட்சிகர பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக மட்டுமே இருக்கமுடியும்" என்பதை விளக்குகின்றார். இந்த சர்வாதிகாரம் சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக, தனது அனைத்து வகையான போராட்ட வடிவத்தையும் கையாளும்.
இனி நாம் ஏகாதிபத்தியம் வைக்கும் மற்றைய புள்ளி விபரங்கள் சிலவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.
1.சோவியத் யூனியனில் வறுமையில் இறந்தோர்
1921-1922 -50 லட்சம்
1932-1933 -60 லட்சம்
1946-1947 -5 லட்சம்
2.முதலாம் உலக யுத்தம் முதல் சோவியத் புரட்சி மற்றும் உள்நாட்டு யுத்தப் படுகொலை எண்ணிக்கை
1914-1922 -150 லட்சம்
3.கூட்டுபண்ணை உருவாக்த்தில் குலாக்கள் கொல்லப்பட்டதாக ஏகாதிபத்திய கணக்கு
1930 முதல் 1950 வரை 15-25 லட்சம் கொல்லப்பட்டதாக கணக்கு காட்டுகின்றது.
4.உழைப்பு முகாமுக்கு அனுப்பியதாக
1930 - 1953 60 லட்சம்
இதில் 1930 இல் குலாக்கல் 18 லட்சம் என்று ஏகாதிபத்தியம் கணக்கு காட்டுகின்றது.
இந்த உழைப்பு முகமுக்கு இட்டுச் சென்றோரில் 1930 இறப்பு வீதம் 13.3 சத வீதமாகவும், 1933 இல் 6.8 சதவீதமாகவும் இருந்தாக காட்டி 6 முதல் 7 லட்சம் பேர் இறந்தாக ஏகாதிபத்திய புள்ளிவிபரம் கணக்கு கூறுகின்றது.
1940 இல் 32 லட்சம் பேரை யுத்த முனையில் இருந்து அகற்றியது முன் வைக்கின்றது.
1944 இல் யுத்த முனையில் இருந்து அகற்றிய 575 768 பேரில் 146 892 (25.5 சதவீதம்) இறந்தாக கணக்கு கூறுகின்றது.
1944 இல் கிரிமினல் குற்றத்துக்காக 2,28,392 பேரை கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்பிதாகவும் அதில் 44,887 (20 சதவீதம்) இறந்தாக கணக்கு காட்டுகின்றது
5.1940 இல் போலந்து அரசியலில் இருந்த முக்கிய அதிகார வர்க்கம் மற்றும் பொலிஸ் இராணுவத்தை சேர்ந்த 25700 பேரை கைது செய்து 4500 பேரை படுகொலை செய்ததாம்.
6.உணவு பஞ்சத்தில் இறந்தோர் என்ற கணக்கில் ஏகாதிபத்தியம் வைக்கும் புள்ளி விபரம்
சோவியத்தில் 100 -120 லட்சம்
சீனா 300 -400 லட்சம்
கம்பூச்சியா 8 லட்சம்
7. சீனாவில் அரசியல் கொலை 50-70 லட்சம் என்றும், இதில் கலாச்சார புரட்சி 20-30 லட்சம் என்கின்றனர்.
என்று பல கணக்குகளை ஏகாதிபத்தியம் உலகம் முழுக்க தொகுத்து, 10 கோடியாக முன்வைக்கின்றது.
ஏகாதிபத்தியத்தின் இப் புள்ளிவிபரங்கள், இடதுசாரி ஆய்வுக் குஞ்சுகளில் அவதூறு அரசியல் நோக்கத்தை தகர்க்கின்றது. ஏகாதிபத்தியம் வைக்கும் புள்ளிவிபரங்களை விட, இந்த இடதுசாரிகள் புள்ளி விபரங்கள் பலமடங்காக இருப்பது ஏப்படி? உலகையை ஆய்வு செய்யும் மார்க்சியப்படி, அம்மாவில் 15 லட்சம் போல்ஷவிக் படு கொலை என்கின்றனர். இலங்கையில் இடதுசாரியும் எஸ்.வி. ராஜதுரையின் நன்பருமான றெஜிசிறிவர்தானவின் ஆய்வுப் படி, இரண்டு கோடி பேரை ஸ்டாலின் கொன்றார் என்கின்றர். இது போல் எஸ்வி.ராஜதுரை, அ. மார்க்ஸ், யமுனா ராஜேந்திரன் என்று நீண்ட பட்டியலில் இடம் பிடிப்போர், தமது அவதூறுகள் மூலமே, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக களத்தில் நீடிக்க முடிகின்றது. ஸ்டாலின் பல பத்து லட்சகணக்கில் படு கொலை செய்தார் என்ற அவதூற்றின் ஆதி மூலத்தில் இருந்தே, நாம் அதன் பொய்மையின் பின்னுள்ள அவதூற்றை இனம் காணமுடியும். இதில் இருந்தே ஸ்டாலினின் சரியான வர்க்கப் போராட்டத் திசையை நாம் அடையாள காணமுடியும்.
1934 இல் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ரடால்ஃப் ஹெர்ஸ்ட் என்பவன், நாசிகள் nஐர்மனிய ஆட்சிக்கு வந்த பின்பு, பாசித்தின் தலைமையை அலங்கரித்த கிட்லரை சந்தித்தை தொடர்ந்தே, முதல் படுகொலை அவதூற்றை பாசிசத்திடம் இருந்து பெற்று, சர்வதேசியமயமாகியது. இந்த அவதூறே அனைத்து இடதுசாரிகளின் ஆய்வுகளின் மூலமாக உள்ளது. யார் இந்த வில்லியம் ரடால்ஃப் ஹெர்ஸ்ட். அமெரிக்காவின் மிகப் பெரிய பத்திரிகை முதலாளியாவன். அமெரிக்கா செனட்சபை உறுப்பினரும், சுரங்க முதலாளியும், பத்திரிகை முதலாளியமான கோடிஸ்லரான ஜார்ஜ் ஹெர்ஸ்டின் மகன் ஆவன். இவன் 1885 இல் "சான் பிரான்சிஸ்கோ டெய்லி எக்சாமினர்" என்ற பத்திரிகையை பொறுப்பு எடுத்தான். இவன் தந்தை இறந்தவுடன் சகல சொத்தையும் விற்று பத்திரிகை துறையில் முதலிட்டான். பல பத்திரிகைகளை மூலதனத்தின் ஆதிக்கத்தின் ஊடாக "சுதந்திரமாக" வாங்கி, பத்திரிகைத் துறையைக் கட்டுப்படுத்தும் கொழுத்த முதலையானன். பாலியல் வக்கிரம், கிரிமனல் கதைகள், குசுகுசுச் செய்தி என்று பல வக்கிரத்தை, தனது பத்திரிகையின் உன்னதமான "கருத்துச் சுதந்திரமாக்கி ஜனநாயக"மாக்கினான். 1935 உலகில் மிகப் பெரிய கோடீஸ்வரனான். அவனுக்கு அன்றே 20 கோடி அமெரிக்கா டொலர் சொத்திருந்தது. பல நாளேடுகள், 24 வாரச் செய்தி ஏடுகள், 12 வனோலி நிலையங்கள், இரண்டு உலகச் செய்தி சேவைகள், சினிமா கம்பெனிகள் என்று பலவற்றின் சொந்தக்காரனாக இருந்தான். இவனின் செய்தி ஏடுகள் நாள் ஒன்றுக்கு 1.3 கோடி (13 மில்லியன்) பிரதிகள் விற்றன. 4 கோடி (40 மில்லியன்) வாசகர்கள் படித்தனர். அமெரிக்காவில் மூன்றில் ஒருபகுதி மக்கள் இவனின் செய்தி ஊடாகவே "சுதந்திரமான" உலகையும், வாழ்வையும் புரிந்து கொண்டனர். இராண்டாம் உலக யுத்தத்தில் சோவியத்துடன் அமெரிக்க நேச ஒப்பந்த கூட்டமைப்பில் இணைவதை, எதிர்த்து நின்ற ஒரு கம்யூனிச எதிரியாவன்.
இவன் தான் முதல் ஸ்டாலின் அவதுற்றை தொடக்கி தனது பத்திரிகை மற்றும் "கருத்துச் சுதந்திரம்" ஊடாக சர்வதேசியமக்கி வைத்துடன், இன்றைய ஸ்டாலின் அவதூற்றை பொலியும் அறிவுத் துறையினருக்கு கள்ளத் தந்தையாவன். 18.2.1935 ஆண்டு இவனின் "சிகாகோ அமெரிக்கன்" என்கிற செய்தியேடு உக்ரைனில் 60 லட்சம் மக்கள் பட்டினியால் செத்தனர் என்ற செய்தியை முதலில் உலகிற்கு வெளியிட்டான். இதற்கு முன்பே சோவியத் பற்றி பலவிதமான அவதூறுகளை, கேலிச் சித்திரங்களை இப்பத்திரிகை வெளியிட்டது. ஸ்டாலின் கத்தியுடன் இருக்கும் கேலிச் சித்திரத்தைக் கூட, இவன் வெளியிடத் தவறவில்லை. நாசி அரசின் உளவுப்படையான கெஸ்டபோவை ஆதாரமாக கொண்டே, இப்பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது. இவை கட்டமைக்க என்ன காரணம். 1925 இல் கிட்டலர் எழுதிய "மெயின் கேம்ப்" என்ற நூலில் உக்கிரைன் பற்றிய அபிராயத்தில் இருந்து, அதைக் கைப்பற்றும் பாசிச கனவுகளில் அடிப்படையில் தான், இந்த அவதூறு திட்டமிடப்பட்டது. முதலில் நாசிகள் செய்த அவதூறு எடுபடாமையை போக்க, கிடைத்த கம்யூனிச எதிர்ப்பு "சுதந்திர நயாகனாக" வில்லியம் ரடால்ஃப் ஹெர்ஸ்ட நாசிகளுக்கு கிடைத்தான். இந்த அவதூற்றை "ஹெர்ஸ்டின்" பத்திரிகையிலும் தொடங்கினான். இதை நாசி ஆதாரவாளரன "ரான ஹெர்ஸ்ட்" பிரசுரிக்கா தொடங்கினான்.
1930 இல் சோவியத்தில் 14 கோடி விவாசயிகளிடையே நடத்தப்பட்ட கூட்டுமையாக்கல் என்ற வர்க்கப் போராட்டத்தில் கம்யூன்கள் நிறுவப்பட்டது. இதனால் விவசாய உற்;பத்தில் எற்பட்ட தளம்பல், உணவுப்பற்ற குறையையும், இதனால் தொற்ற நோய்களும் அதிகாரித்தது. இந்த தோற்று நோய்கள் உலகம் முழுக்க இருந்ததுடன், பல கோடி மக்களை அழித்தன. இது சோவித்துக்கும் மட்டும் விதிவிலக்கல்ல. பென்சிலின் ஊசி கண்டுபிடிப்பே இதை கட்டுப்படுத்தும் மாற்று ஊடாகமாக இருந்தது. அதுவரை தொற்று நோய் இயற்கை அழிப்பாக இருந்தது. உற்பத்தில் ஏற்படும் மாற்றம் தளம்பலை உருவாக்கும் போது, தொற்று நோய் தனது விரியத்தை இயல்பில் வெளிப்படுத்தும். பட்டினியும், பஞ்சத்தையும் திட்டமிட்டே உருவாக்கியதாக ஹொஸ்டின் பத்திரிகை எழுதியதுடன், அதல் பல பத்து லட்சம் மக்கள் இறந்தனர் என்ற அவதூற்றை பொலிந்தனர். இதுதான் முதல் "பல பத்து லட்சம் மக்களை ஸ்டாலின் கொன்றான்" என்ற கற்பனை புனை கதையாகும்.
இந்த கம்யூனிச எதிர்ப்பு நாயகன் வில்லியம் ரடால்ஃப் ஹெர்ஸ்ட 1951 இல் இறந்தான். இவன் இறந்த போது, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சார படையாக 15000 "சுதந்திர அறிவுத்துறை"யினரைக் கொண்ட 100 மிகப் பெரிய பல்துறை செய்தி அமைப்புகளை விட்டுச் சென்றான். இதை சி.ஐ.ஏ முதல் பிரிட்டிஸ் உளவு அமைப்பான எம் 15 வரை ஆதாரமாக கொண்டு, கம்யூனிச எதிhப்பிரத்தை கட்டமைத்தனர். 1933 இல் "கிரமிளின் மாளிகையில் கருப்பு நடவடிக்கை" என்ற தலைப்பின் ஸ்டாலின் படுகொலை என்ற அவதுற்றை உள்ளடக்கி இந்த நூல், அமெரிக்காவில் கம்யூனிசத்தை எதிர்த்து வாழ்ந்த உக்கிரைன் எதிர்ப் புரட்சிவாதிகள் நிதியளித்து, இந்நூல் வெளியாகியது. இவர்கள் நாஜிகளுக்கு உதவியதுடன், இவர்களை "ஜனநாயகவாதியாக" அமெரிக்கா காட்டி, உலகுக்கு முன் வேடம் வேறு கொடுத்தனர். மீண்டும் இந்த அவதூறு 1980 இல் ரீகன் மீண்டும் உயிர் கொடுத்தார். அதன் தொடர்ச்சியில் ஹார்வார்டு பேராசிரியர் "ரஷ்யாவில் மனித வாழ்வு" என்ற நூலை மதிப்புக்குரிய பல்கலைக்கழகம் ஊடாக வெளியிட்டார். அதில் 1930 களின் அவதூறு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. இதில் இந்த நூல் 1986 இல் வெளியாகிய போது, பட்டினிச் சாவு தீடிரென 150 லட்சமாக மாறிவிட்டது. இந்த அவதூறுகளுக்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் அனைத்தும், 1922 இல் பிரசுரிக்கப்பட்ட, 1918 முதல் 1921 வரையிலான வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தத்தில் நடந்த கோராத்தைதான், இந்த கம்யூனிச எதிர்ப்பு பிரச்சார அவதூறுக்கு ஆவணமாகியது.
இந்த அவதுற்றை கட்டமைத்து பஞ்சபூமியான உக்கிரைனில் இருந்து செய்தி அனுப்புவதாக கூறிய தாமஸ் வாக்கர் உக்கிரைனில் கால்வைத்தது கூட கிடையாது. மாஸ்கோவில் ஐந்தே நாட்கள் தாங்கியிருந்தவர். இதே நேரம் ஹெர்ஸ்ட் நிருபராக மாஸ்கோவில் தங்கியிருந்த லூயிஸ் பிஷர் 1933 இல் சோவியத் மிகச் சிறந்த அறுவடை செய்தது என்று செய்தயனுப்பிய போது, அது பிரசுரிக்க மறுக்கப்பட்டது. "தாமஸ் வாக்கர்" என்பவர் அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பிய கிரிமினல் கைதி. இவனின் சொந்தப் பெயர் ராபர்ட் கிரீனனாகும். இவன் அமெரிக்கா திரும்பிய போது கைது செய்யப்பட்ட நிலையில், தான் ஒருபோதும் உக்கிரைன் சென்றதில்லை என்ற வாக்கு மூலம் அளித்தான். ஆனால் இன்றைய நவீன எழுத்தளார்கள் தமது ஜனநாயக மூகமுடிகளின் பின், இவனின் செய்தியை மூலமாகக் கொண்டே இந்த அவதுற்றை பொழிய ஒருக்காலும் தயங்கியதில்லை.
அடுத்த அவதுற்றின் மூலம் ராபர்ட் கான்குவஸ்ட அடிப்படையாக கொண்டது. "மாபெரும் பயங்கரம்" (1969), "சோகத்தின் அறுவடை" (1986) ஆகிய இரு நூல்கள் மூலம் பிரபலமான கம்யூனிச எதிர்ப்பு போராளியானன். இவர் 1936-1938 விசாரணையின் போதும், நிலப்பிரபுகளான குலாக்குகள் அடிப்படையாக கொண்டு உருவாக்கிய உழைப்பு முகங்களிலும், உக்ரைன் பஞ்சாத்தாலும் பல பத்து லட்சம் மக்கள் இறந்தாக பிரச்சாரம் செய்தார். இவர் இதற்கு ஆதாரமாக அமெரிக்காவில் வாழும் உக்கிரைனிய வலதுசாரிகளை (இவர் நாசிகளுடன் இரண்டாம் உலக யுத்தத்தில் ஒத்துலைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) ஆதாரமாக கொண்டார். இந்த வலதுசாரிகள் 1942 இல் உக்கிரனில் வாழ்ந்த யூதர்களை அளிப்பதில் முக்கிய பங்கேற்றவர்கள். இவர்களில் ஒருவரான மைக்கேலா எலபிட் 1942 இல் பொலிஸ் தலைவானக இருந்து, யூத படு கொலைக்கு தலைமையேற்றவன்;. இவன் இரண்டாம் உலக போர்க் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டவன். இவன் தான் இந்த புதிய அவதுற்றை 1949 இல் சி.ஐ.ஏ தயவில் தொடங்கி வைத்தவன். இந்த நயகர்களை அடிப்படையாக கொண்டே ராபர்ட் கான்குவஸ்ட தனது அவதுற்றுக்கு அடிப்படையாக கொள்ள, இன்றைய ஜனநாயக, மற்றும் ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரிகளின் தந்தையும் மூதாததையாவன். இவன் 1969 இல் எழுதிய நூலில் 1932 க்கும் 1933க்கும் இடையில் 50 முதல் 60 லட்சம் மக்கள் பட்டினியில் இறந்தார் என்றும், இதில் பாதி உக்கிரனில் ஏற்பட்டது என்றார். இந்த பஞ்சம் 1937 வரை நீடித்தது என்றார். பின் இதை 140 லட்சம் பட்டினிச் சாவாக விரிவாக்கினர். இந்த தந்தையிடமே ரீகன், 1988 கம்யூனிச எதிர்ப்பு தேர்தல் பிரச்சாரத்தை எழுதி தர ஒப்படைத்தார். இந்த கள்ளத் தந்தை தான் ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரிகளின் ஆய்வுக்கு, சுதந்திரமான ஜனநாயக ஆண்மாவாக உள்ளவன்..
இந்த கம்யூனிச எதிர்ப்பு கள்ளத் தந்தை, 1978 இல் பிரித்தானிய இரகசிய உளவுத் துறையின் பொய்ப் பிரச்சார ஆய்வுத் துறையின், அதாவது ஐ.ஆர்.டியின் ஒரு கைக்கூலி என்பதை, 27.1.1978 பிராஞ்சு கார்டியன் பத்திரிகை அம்பலப்படுத்தியது. 1947 இல் ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரி கள்ளக் குழந்தைகளை உருவாக்க உருவாகப்பட்ட இந்த நிறுவனம், பிரித்தானிய உளவுப்படையின் பிரிவாக இயங்கியது. இதன் பெயர் கம்யூனிசத் தகவல் குழு. இந்த தகவல் குழுவை அடிப்படையாக கொண்டே ஸ்டாலின் அவதூறு பொழியப்படுகின்றது. இந்த அமைப்பு கலைக்கபப்பட்ட போது, பிரிட்டனில் மட்டும் 100 மேற்பட்ட செய்திப் பத்திரிகைகள் நாள்தோறும் செய்தி பெற்று வந்த, "கருத்துச் சுதந்திர ஜனநாயகம்" அம்பலமானது. இந்த அமைப்பை நிறுவியது முதல் 1956 வரை ராபர்ட் கான்குவஸ்ட இணைந்து கம்யூனிச எதிர்ப்பு கட்டுக் கதைகளை உருவாக்கினான். "மாபெரும் பயங்காரம்" என்ற நூல், 1937 இல் நடந்த அதிகாரப் போட்டி என்பதை ஆய்வுப் பொருளாக கொண்டது. சி.ஐ.ஏ மூலதனத்தை அடிப்படையாக கொண்டு பதிப்பிக்கும் பிரேஜர், இந்த நூலில் மூன்றில் இரண்டு பகுதியை வங்கி, சகல அறிவுத் துறையினருக்குப் இடதுசாரி கள்ள குழந்தைகளை உருவாக்க பரிசு அளித்தது.
அடுத்த மூலம் ருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின் அவரின் நூலான "தி குலாக் ஆர்சிபிலாகோ" மூலம் 1960 களின் இறுதியில் ஸ்டாலின் எதிர்ப்பு கட்டமைக்கப்பட்டது. இவர் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்தமையால் 1946 முதல் எட்டு வருடம் சிறையில் இருந்தவர். ஸ்டாலின் மரணத்துடன் முதலாளித்துவ மீட்சியில் தப்பி "ஜனநாயகவாதி"யனவர். இவர் இராண்டம் உலக யுத்தத்தில் சோவியத் நாசிகளுடன் சமரசம் செய்து சரணடைந்து இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். அத்துடன் நாசி ஆதாரவு அனுதபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், துரோகி என்று கண்டிக்கப்பட்டு தண்டிக்ப்பட்டவர்.
ஸ்டாலினை தூற்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அமெரிக்காவுடன் தேன்நிலவை தொடக்கிய சமாதான சக வாழ்வு நாயகன் குருசேவின் துணையுடன், 1962 இல் தனது நூல்களை பதிப்பிக்க தொடங்கினான். ஒரு கைதியின் வாழ்க்கை என்ற "ஐவான் டெனிசோவிச"; என்ற "வாழ்வின் ஒரு நாள்" என்பது அவர் பதிப்பித்த முதல் நூலாகும். இதையே குருசேவ் ஸ்டாலின் எதிர் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினான். சோல்ஜெனித்சின் நூலான "தி குலக் ஆர்சிபிலோகோ" என்ற அவரது நூலுக்கு 1970 இல் ஏகாதிபத்திய ஆதாரவுடன் நேபால் பரிசு பெற்றது. இவர் ஏகாதிபத்திய நாடுகளின் பிரபலமான "ஜனநாயகவாதி"யாகி, சோவியத் எதிர்ப்பிரச்சாரத்தின் கள்ளத் தந்தையானன். 1974 இல் சோவியத் குடியுரிமையை துறந்து சுவிட்சர்லாந்திலும், பிறகு அமெரிக்காவிலும் குடியேறினார். அவர் ஒரு நாஜி அனுதாபி, ஆதரவாளன் என்பது மறைக்கப்பட்டு, உழைப்பு முகாம் பற்றிய செய்திகள் முதல், பல பத்து லட்சம் படுகொலை செய்திகள் வரை உயிருட்டப்பட்டது. இவன் பல கூட்டங்களின் முக்கிய பேச்சாளன் ஆனான். இவன் வியட்நாம் மீதான அமெரிக்கா ஆக்கிரப்பில், அமெரிக்கா தோற்று ஒடிய பின்பு, மீன்டும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற கோரிய கம்யூனிச எதிர்ப்பு "ஜனநாயக"வாதியானன். இந்த ஸ்டாலின் எதிர்ப்பு ஜனநாயகவாதி 40 ஆண்டுகால போர்ச்சுக்கலில் இருந்த பாசிச ஆட்சியை, இடதுசாரி இராணுவ அதிகாரிகள் கவிட்ட போது, உடனடியாக அமெரிக்கா தலையீட வேண்டும் என்று கோரினான். அவனின் உரையில் போர்ச்சுக்கலில் இருந்து ஆபிரிக்கா காலனிகள் விடுதலையடைவதை, அச்சத்துடன் பிதற்றிய ஜனநாயகவாதியாவன். சோவியத்தில் பல பத்து லட்சம் கொல்லப்பட்டது முதல் கட்டாய உழைப்பு முகம் பற்றிய கற்பனைகளை கட்டிவிட்டதுடன், வியத்நாமில் பல பத்தாயிரம் அமெரிக்கர் பிடிக்கபட்டு அடிமையாக்கப்பட்டு கட்டாய உழைப்பு முகங்களில் வதைபடுவதாக தொடுத்த எதிர்புரட்சிகர பிரச்சாரத்தில் தான், கம்யூனிச எதிர்ப்பு "ராம்போ" போன்ற சினிமாக்கள் உற்பத்தியானது.
ராப்ர்ட் கான்குவஸட் என்பவன் 1961 செய்த கணக்குப் படி 1930 ஆரம்பத்தில் சோவியத்தில் 60 லட்சம் பட்டினி சாவாக இருந்தது. இதே நபர் 1986 இல் அதை 140 லட்சமாக உயர்த்திக் கொண்டார். இவரின் கணக்கு படி 1937 களையெடுப்பு தொடங்க முன்பு குலாக்களான நிலப்பிரபுகளின் கொல்லப்பட்ட எண்ணிக்கை 50 லட்சமாக இருந்தது. களையெடுப்பு தொடங்கிய பிறகு அதாவது 1937-1938 இல் இவ் எண்ணிக்கை 70 லட்சமாக்கினர். (இங்கு பாரிஸ் கம்யூனிச எதிர்ப்பு சஞ்சிகையான அம்மாவில், கார்லீப்னெக்ட் பெயரில் எழுதிய புணைபெயர் ஸ்டாலின் எதிர்ப்பாளர், கொல்லப்பட்டது 15 லட்சம் என்கிறார். இவர் பழைய அந்த கட்டுக் கதையாளனையே மிஞ்சிவிடுகின்றார்.) பின்பு 1939 இல் உழைப்பு முகாமில் 120 லட்சம் என்று கணக்கை கூட்டிக் கொண்டார். இந்த 120 லட்சம் பேரும் அரசியல் கைதி என்கின்றார். இந்த அரசியல் கைதிகளை உள்ளடக்கிய கிரிமினல் கைதிகள் மொத்தமாக, 250 முதல் 300 லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்கின்றார். ராப்ர்ட் கான்குவஸட் கணக்கு படி 1937-1939 காலகட்டத்தில் 10 லட்சம் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர் என்கின்றர். ஆனால் அம்மாவில் எழுதும் கம்யூனிச எதிர்ப்பு நாயகன் 15 லட்சம் கொல்லப்பட்டதாக, கதையை உருவாக்கி, கள்ளத் தந்தையான குருவையே மிஞ்சிவிடும் சீடர்களாகிவிடுகின்றனர். இக்கால கட்டத்தில் ராப்ர்ட் கான்குவஸட் கணக்கு படி மேலும் 20 லட்சம் பேர் பட்டினியில் இறந்து விட்டனர் என்கின்றார். 1937-1939 களையெடுப்புக்கு பின் கைதியாக 90 லட்சம் சிறையில் இருந்தனர் என்கின்றார். இதை பின் சரிக்கட்ட 1939 -1953 க்கும் இடையில் 120 லட்சம் கைதிகளை கொன்று விட்டனர் என்று புள்ளிவிபரத்தை விரிவாக்கினர். மொத்தமாக அவர் 1930 முதல் ஸ்டாலின் காலம் வரை 260 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்றார். 1950 இல் 120 லட்சம் பேர் சிறையில் இருந்தனர் என்கின்றார்.
இதைப் போலவே அலெக்சாண்டர் சோல்ஜெனித்சினும் புள்ளிவிபரத்தை வெளியிட்டார். 1932-33 பஞ்சத்தால் 60 லட்சம் பேர் இறந்தனர் என்றும், 1936 -1939 க்கு இடையில் வருடம் பத்து லட்சம் பேர் இறந்தனர் என்ற கணக்கு காட்டினர். இடதுசாரி கம்யூனிச ஆய்வை செய்வதாக அம்மாவில் பீற்றும் அந்த நபரின் புள்ளி விபரமும், இதனுடன் விதிவிலக்கின்றி ஒத்துப் போகின்றது. அலெக்சாண்டர் சோல்ஜெனித்தின் கணக்குபடி கூட்டுபண்ணை உருவாக்கம் தொடங்கியது முதல் ஸ்டாலின் இறந்த கால கட்டம் வரை மெதத்தமாக 660 லட்சம் பேரை கம்யூனிஸ்ட்டுகள் கொன்று விட்டனர் என்கின்றார். இது தவிர இரண்டாம் உலகப் போரில் 440 லட்சம் பேர் கொல்லப்பட்டதுக்கும் ஸ்டாலினே பொறுப்பு என்கின்றார். மொத்தத்தில் 11 கோடி மக்கள் சோவியத்தில் கொல்லப்பட்டதாக கூறுகின்றார். அதாவது சனத்தொகையுடன் இது எப்படி பொருந்தும் என்பது கம்யூனிச எதிர்ப்பு அறிவுத்துறையினருக்கு அவசியமற்றவை. அதே நேரம் 250 லட்சம் பேர் சிறையில் இருந்தாக வேறு கணக்கு காட்டினர். இந்த அவதுற்றுக்கு எந்தவிதமான ஆதாரமோ, மூலமோ கிடையாது. இதை மூலமாக்கி ஆதாரமாக்கும் கனவுடன், ஸ்டாலின் அவதுற்றைச் தொடர்ந்து செய்ய கோர்ப்ச்சேவ் இரகசிய கட்சி ஆவணங்களை திறப்பதன் மூலம், கட்டமைத்து வந்த கம்யூனிசத்துக்கு எதிரான அவதுற்றை நிறுவவிரும்பினர். கோர்ப்ச்சேவ் - ரீகனின் வேஷைத்தனத்தில் உருவான, புதிய சுதந்திர செய்தி ஊடகம் கட்டமைக்கப்பட்ட படுகொலை அவதூறுகளை விரிவாக்கியது. இந்த புதிய சுதந்திர செய்தி ஊடகத்தின் கோரிக்கையை ஏற்று, ஸ்டாலின் எதிர்ப்பு கம்யூனிச எதிர்ப்புக்காக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் ஆவணப்பகுதி, ஆய்வுகாக சுதந்திரமாக திறக்கப்பட்டது. இந்த ஆவணம் திறக்கப்பட்டதன் மூலம், கட்டுக் கதையாக உருவாக்கிய கொல்லப்பட்டோ, சிறையில் அடைக்கப்டடோர் பற்றிய தரவுகளை உறுதி செய்யும், என்று எல்லா "ஜனநாயக" மற்றும் கம்யூனிச எதிர்ப்பு போலி மார்க்சிய வாதிகளும், ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரிகளும் சாதித்தனர். இந்த ஆவணக் காப்பாகத் தரவுகள் பிரசுரமாக தொடங்கியவுடன், இந்த புள்ளிவிபர கட்டுக் கதையாளர்கள், அதைப் பற்றி வாய் திறப்பதை மறந்து போனர்கள். ஜெம்ஸ்கோவ், டௌஜின், ழெவன் ஜீக் ஆகிய ருசிய வரலாற்று ஆசிரியர்கள் மத்திய கமிட்டியின் ஆவணக் காப்பகத்தை ஆதாரமாக கொண்டு, 1990 இல் அறிவியல் ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியிடத் தொடங்கினர். இந்த ஆய்வு அறிக்கை வெளிவரத் தொடங்கியவுடன், கம்யூனிச எதிர்ப்பு, ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரி நாயகர்கள் தமது சொந்த முகம் அம்பலமாகத் தொடங்க, வேண்டுமென்றே அதைக் கண்டு கொள்ள மறுத்தனர். உண்மையில் எகாதிபத்திய ஜனநாயகவாதிகள் முதல் மாhக்சிய வேடம் போடும் இடதுசாரி பாதகை கீழ் பிழைப்பு நடத்தவோருக்கு, ஸ்டாலின் எதிர்ப்பு கம்ய+னிச எதிர்ப்புகான மூலம், ஆதாரமற்ற புள்ளிவிபரங்களை முன்வைத்து சர்வதேச மூலதனத்தின் ஆதரவுடன் அறிவு துறையினராக இயங்கிய இந்த மூவருமேயாகும். இவர்கள் தான் இந்த புள்ளிவிபர அவதுறுகளின் தந்தைகள் ஆவர். இதில் இருந்தே பலரும் புள்ளிவிபரங்களை தொகுக்கின்றனர். இந்த கம்யூனிச, ஸ்டாலின் எதிர்ப்பு அவதுறை விரிவாக்க இடதுசாரி பாதகை ஒரு புதிய வடிவமாக உள்ளது. சிவப்புக் கொடியை ஆட்டியபடி எப்படி எதிர்ப்புரட்சி கம்யூனிசத்துக்கு எதிராக இயங்குவது போல், இடதுசாரி மாக்சிய பாதைகையின் கீழ் பழைய ஏகாதிபத்திய புள்ளிவிபரங்களை சரிபார்த்து அவதூறை அடிப்படையாக கொண்டு தொகுக்கின்றனர்.
ஏகாதிபத்திய எச்சில்களில் இருந்து, இடதுசாரி வேடம் போட்டு குலைக்கும் ஸ்டாலின் எதிர்ப்பு மார்க்சிய விரோதிகளை இனம் கண்டு கொள்ள, நாம் சோவியத் மக்கள் தொகை ஆய்வில் இருந்து சுயமாகப் பார்ப்போம்;. கீழ் உள்ள வரைவு 1929 முதல் 1946 வரையிலான சனத்தொகையைக் காட்டுகின்றது.
இது எமக்கு சுயமாக எதை விளக்குகின்றது. சனத் தொகை சீரான அதிகரிப்பைக் காட்டுகின்றது. 1932, 1933 இல் சனத் தொகை அதிகரிப்பு வீழ்ச்சியை, ஒப்பிட்டில் கொடுத்த போதும், பின்னால் அது சீராக அதிகாரித்துள்ளது. இடதுசாரி ஆய்வுப் புலிகள் கூறுவது போல் 1937 முதல் 1938 வரையிலான காலப்பகுதியில் மொத்த சனத் தொகையில் வீழ்ச்சியைக் காட்டவில்லை. மாறாக முந்திய தொகையுடன் சீரான அதிகாரிப்பையே காட்டுகின்றது. ஒவ்வொரு ஆண்டுக்கு இடையிலான அதிகாரிப்பை நாம் கீழ் பார்ப்போம்.
ஆண்டு சோவியத் சனத்தொகை சோவியத் சனத்தொகை அதிகாரிப்பு அமெரிக்க சனத் தொகை அதிகாரிப்பு
கோடியில் லட்சத்தில் லட்சத்தில்
1929 17.20 1929-1930 22 14
1930 17.42 1930-1931 17 10
1931 17.59 1931-1932 9 8
1932 17.68 1932-1933 6 7
1933 17.74 1933-1934 10 8
1934 17.84 1934-1935 12 9
1935 17.96 1935-1936 19 8
1936 18.15 1936-1937 31 8
1937 18.46 1937-1938 39 10
1938 18.85 1938-1939 38 11
1939 19.23 1939-1940 36 11
1940 19.59 1940-1941 - 13
1945 ---------- 1945-1946 - 15
1946 17.39 1946-1947 1 27
1947 17.4 1947-1948 11 26
1948 17.51 1948-1949 24 25
1949 17.75 1949-1950 25 25
1950 18 1950-1951 32 26
1951 18.32 1951-1952 32 27
1952 18.64 1952-1953 31 26
1953 18.95 1953-1954 32 29
1954 19.27 1954-1955 32 29
1955 19.61 1955-1956 34 30
இவை வருடத்துக்கு வருடம் சோவியத் சனத்தொகை அதிகாரிப்பை காட்டுகின்றது. இவ் அதிகாரிப்பு 1930-1932 இல் குறைந்து மீண்டும் அதிகாரிக்கிறது. மஸ்கோ சதிவழக்கு நடந்த காலத்தில், இச் சனத் தொகை எந்த விதத்திலும் இடதுசாரி அவதூறுகள்படி குறைந்துவிடவில்லை. வழக்கமான சனத் தொகை அதிகாரிப்பையே கொண்டு இவை காணப்படுகின்றது. இவை 1946-1956 க்கும் இடைப்பட்ட காலத்தில் அதை வீகிதத்தில் கூட சமம்மாக இருக்கின்றது. அண்ணளவான சனத் தொகையை யுத்த இழப்புக்கு பின்பாக நீண்ட காலம் கொண்டருந்த நிலையில், சனத் தொகை அதிகாரிப்பு ஒரே வீகிதத்தில் அண்ணளவாக காணப்படுகின்றது. இங்கு இவ் அதிகரிப்பில் உள்ள சீரற்ற அதிகாரிப்பு மற்றும் இழப்புகள் கூட வேறுபட்ட ஆண்டுகளில் விதிவிலக்கின்றி காணப்படுவதுடன்;, அமெரிக்கா உள்ளீட்ட பல நாடுகளுக்கும் பொதுவானது. இவை ஏற்பட நோய்கள், சமூக கொந்தழிப்புகள், சமூக உழைப்புகள், சமூக வெற்றிகள், யுத்தங்கள், இயற்கை அழிவுகள், பெருளாதார நெருக்கடிகள், பொருளாதார வெற்றிகள் என பலவிதமான காரணத்தின் அடிப்படையில் நிகழ்கின்றது.
இடதுசாரி பாதகையின் கீழ் காவடியெடுக்கும் ஏகாதிபத்திய எச்சிலை நக்கும் புத்தீயிவிகள,; களையெடுப்பில் லட்சக்கணக்கில் கொன்றதாக அவதூறுபுரிகின்ற போது, இது அப்பட்டமாக பொய்மையாவதை சனத்தொகை புள்ளிவிபரம் கூட தகர்க்கின்றது. மாஸ்கோ சதி வழக்கு கட்சியின் உயர் பீடங்களிலும், அதைச் சுற்றியிருந்த உயர்மட்டங்களிலும், பூர்சுவா புத்தியீவிகளிடையுமே நடத்தப்பட்டதுடன், அந்த எல்லைக்குள் தான் இவை நிகழ்த்தப்பட்டன. சதியில் உயர்மட்ட அதிகாரப் பிரிவுகள் தான் ஈடுபட்டதுடன், இதில் பரந்துபட்ட மக்களுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. அறிவுத் துறை சார்ந்த பூர்சுவா வர்க்கம் தான், தனது வர்க்க இருப்புகான போராட்டத்தை நடத்தியது. அதற்கு எதிரான களையெடுப்பில் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவர்களே களையெடுக்கப்பட்டனரே ஒழிய, ஏகாதிபத்திய எச்சில்களில் பிதற்றும் எண்ணிக்கையில் அல்ல. அம்மாவில் எழுதும் இடதுசாரி; புத்தியீவி 15 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்கின்ற போது (ஏகாதிபத்தியம் 6.7 லட்சம் என்று அரைவாசியாக மதிப்பீடுகின்றது), சனத் தொகையில் எவ்வளவு வீழ்ச்சியைக் காட்டியிருக்கும். இவர்கள் எந்த ஆவணத்தை, அந்த சமூகத்தில் ஆய்வாக கொண்டு இதை முன்வைப்பதில்லை. ஏகாதிபத்திய எச்சில் பருக்கையில் இருந்து வைப்பதற்க்கு அப்பால் எதையும் இவர்கள் சுயமாக கொண்டிருப்பதில்லை. பொதுவான நீண்ட கால இடைவெளியில் அதாவது 20 வருட இப்புள்ளிவிபரத்தை தொகுப்பதன் மூலம் வளர்ச்சி விதியையும், அதில் சரிவற்ற தன்மையையும் காட்டவும், இதன் ஊடாகவும் அவதூற்றை நிர்வாணப்படுத்த முடிகின்றது. தேவைப்பட்டால் பிறப்பு விகிதத்தைக் கொண்டும், வேறு நாடுகளுடன் ஒப்பிட்டுக் காட்டும் தரவுகளையும், வரலாற்றின் உண்மை நிலைமையின் மீது சாத்தியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்;.
இதை மேலும் அம்பலம் செய்ய, நாம் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை மூலம் இதை மேலும் ஆராய முடியும். அதை ஆராய்வோம்.
ஆண்டு 1918 1921 1923 1927 1934 1939 1952
உறுப்பினர் எண்ணிக்கை லட்சத்தில் 4 7.3 4 8.9 18.7 16 60
கட்சியை துய்மைப்படுத்திய 1934-1939 இடைப்பட்ட காலத்தில், கட்சியில் இருந்து அண்ணளவாக 2.7 லட்சம் பேர், அதாவது 14.43 சதவீதம் பேர் கட்சியில் இருந்து அகற்றப்படுகின்றனர். இது 1921-1923 இல் கட்சியை துய்மைப்படுத்தும் போது அண்ணளவாக 3.3 லட்சம் பேர், அதாவது 45.2 சதவீதம் பேர் கட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். 1921-1923 இல் நடந்த கட்சி துய்மைப்படுத்தும் போக்கைவிட, 1934-1939 க்கு இடையில் குறைந்தளவு பேரே கட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். இவர்களில் பலர் கட்சி வாழ்வில் இருந்து அகற்றியதுடன், ஒரு பகுதியினர் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். 1923 க்கு பிந்திய கட்சி வாழ்வில் ஒட்டிக் கொண்ட சகபயணிகள் முதல் கட்சி விரோதிகள் வரை, நீண்ட பல புரட்சிகர மற்றத்துடன் கட்சியை துய்மைப்படுத்துவது இயல்பானது. இங்கு தவறுகள் இழைக்கப்பட்ட போதும், கட்சி தனது வர்க்கப் பார்வையில் உறுதியாக மேலும் முன்னோக்கிச் செல்ல கட்சி தன்னை புணரமைப்பது அவசியமானது நிபந்தனையானது.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்ற அவதூறு ஆதாரமற்றது, ஏகாதிபத்திய எச்சிலைக் கொண்டது. கணிசமான பகுதி கொல்லப்பட்டது உண்மை. இதில் ஒரு பகுதி சட்டத்தின் முன் பகிரங்கமாக விசாரிக்கப்பட்டே கொல்லப்ட்டனர். பலர் கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கிவாழ கோரப்பட்டனர். சிலர் திட்டமிட்ட சதியில் நேரடியாக பங்கு பற்றியவர்கள் கூட, விடுதலை செய்யப்பட்டு இன்றுவரை உயிருடன் உள்ளதுடன், இன்றும் அவர்கள் தமது எதிர்ப்புரட்சி தனத்தை பெருமைபட ஒப்புவிக்கின்றனர். இந்த சதிகளை ஆதாரித்து பெருமைபட பீற்றி முன்வைக்கும் நான்காம் அகில டிராட்ஸ்கிய வெளியிடுகளில், இதை பெருமைபட தொகுக்கின்றனர். ஆயுதம் எந்திய சதி கவிழ்ப்பு முதல் சகல முயற்சியிலும் ஈடுபட்டதை பெருமையுடன் இன்று முன்வைக்கும் போது, அன்றைய மஸ்கோ சதி வழக்கு மீள ஒருமுறை உறுதிசெய்யப்படுகின்றது. "நான்காம் அகில வாக்கு மூலத்தில் இருந்து.." என்ற எனது நூலில் இவைபற்றிய நிறைய தரவுகளை ஆதாரப்படுத்தியுள்ளேன் பார்க்க.
அடுத்து 1930-1932க்கும் இடையிலான சனத் தொகை அதிகாரிப்பில் வீழ்ச்சி பற்றி ஆராய்வது அவசியமாகின்றது. இந்த சனத் தொகை அதிகாரிப்பில் வீழ்ச்சியை ஒப்பிட அமெரிக்க சனத் தொகை வளர்ச்சியையும் ஒப்பிட்டுள்ளேன்;. அமெரிக்காவும் அதே காலப் பகுதியில் விதிவிலக்கின்றி, அதிகாரிப்பில் சனத் தொகை வீழ்ச்சியைக் கொண்டு காணப்படுகின்றது. இந்த அதிகாரிப்பில் வீழ்ச்சிக்கு வேறுபட்ட காரணங்கள் இருந்த போதும், பொதுவான காரணங்களும் உண்டு. சோவியத் சனத் தொகை அதிகாரிப்பில் வீழ்ச்சியை ஆராய்வது அவசியமாகின்றது.
1930களில் சோவியத்தில் நடந்த தீடீர் பாய்ச்சல் சார்ந்த புரட்சி இதற்கு காரணமாகும். சனத்தொகையில் ஐந்தில் நாலு பங்கைக் கொண்ட விவசாயிகள் இடையே நடத்தப்பட்ட கூட்டுப்பண்ணையாக்கல் என்ற கம்யூன்கள், அச் சமூகத்தை உலுக்கியது. இது கிராமப்புற பல அடிமைத்தனத்தை ஒழித்தது. இது பெண்ணை விடுவிக்கும் ஒரு புதிய வடிவமாக வளர்ச்சி பெற்றது. குடும்பங்களில் வழக்கமான பெண்ணின் பிள்ளைப் பெறும், பெண்ணின் அடிமைப் பாத்திரம், முதன் முதலாக கூட்டுப் பண்ணையாக்கல் மூலம் கேள்விக்குள்ளாக்கியது. பெண் கூட்டுப் பண்ணையில் சுதந்திரமான உழைப்பாளியாகியதன் மூலம், பெண் மீதான ஆணின் பாலியல் ஆதிக்கம், மற்றும் பிள்ளைப் பெறும் கடமை, ஆணுக்கும் பெண்ணுக்கும் புதிய முரண்பாடகியது. இதை பாலியல் ரீதியாக புதிய வடிவத்தை கோரியது. இதனால் பழைய குடும்பம் தகர்ந்து, புதிய குடும்பம் உருவாகின்ற இடைவெளி, குழந்தை பிறப்பை மட்டுப்படுத்தியது.
புதிதாக உருவாக்கிய கம்யூன் விரிந்த தளத்தில் உழைப்பை சமூகமயமாக்கியது. புதிய உற்பத்தி சார்ந்து உழைப்பு பரவலானது. இதானல் உழைப்பு ஊக்குவிக்கப்பட்டு, நீண்ட இடை வெளி கடந்து மக்கள் புலம் பெயர்வை புரட்சி தனது உள்ளடக்கமாக்கியது. உழைப்பு அதிகாரிப்பும், நகர்வும் கூட குழந்தை பிறப்பை கட்டுப்படுத்திய முக்கிய காரணமாகும். பொருளாதாரம் ஒரு மாற்றத்தினுடாக தேக்கத்துக்கு உள்ளாகி, மீண்டும் வேகமாக பாய்கின்ற போது, சமூகம் ஒருமுறை குலுங்கி பின் பாய்கின்றது. இது இயல்பில் பழைய குடும்ப இறுகத்தை தளர்த்தி, பின் புதிய இறுக்கமாக்கின்றது. இது குழந்தை பிறப்பை குறைத்து பின் அதிகாரிக்க வைக்கின்றது. இதனால் சனத் தொகை வீழ்ச்சி ஏற்பட்டு பின் தீடிரென அதிகாரிக்கின்றது. பின் குறைந்து சீராகின்றது.
கூட்டுப்பண்ணையாக்கல் அடிப்படையில் பெண்களை விடுவித்தது. ஸ்டாலின் கூட்டுப் பண்ணையை உருவாக்கிய பிரதிநிதிகளின் முன்னணியாளர்கள் முன் பேசிய போது "தோழாகளே, கூட்டுப் பண்ணைகளில் பெண்கள் பிரச்சனை பெரிய பிரச்சினையாகும். உங்களில் பலர் பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதையும் பரிகசிப்பதையும் நான்னறிவேன். இது தவறு, பெரும் தவறு. ஜனத்தொகுதியில் பாதி மாதர்கள் என்பது மட்டுமல்ல, கவனத்துக்குரிய விஷயம். முதன்மையான பேருண்மை என்னவென்றால், கூட்டுப்பண்ணை இயக்கத்தில், குறிப்பிடத் தக்க திறமைசாலிகளாக பல பெண்கள் தலைமை நிலைக்கு வந்துள்ளனர். இந்த மகாநாட்டைப் பாருங்கள்! பிரதிநிதிகளைப் பாருங்கள்! பிற்பட்டவராயிருந்த பெண்கள் முன்னணிக்கு விரைந்து வந்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள். கூட்டுப் பண்ணைகளில் மாதர்கள் மகத்தான சக்தியாகவிருக்கிறார்கள்." என்றார் ஸ்டாலின். இது எதைக் காட்டுகின்றது. பெண்களை கிராமப்புற ஆணாதிக்க அடிமையில் இருந்து, கூட்டுப் பண்ணை மீட்டதைக் காட்டுகின்றது. இது பெண் விடுதலையின் வடிவமாக, புதிய சுதந்திர மனிதனாக பெண்ணை உருவாக்கிய போது, பராம்பரிய ஆணாதிக்க குடும்ப உறவுகள் சிதைவை கோருவது இயல்பு மட்டுமின்றி நிபந்தனையுமாகும்;. இது பாலியல் உறவிலும், குழந்தை பிறப்பிலும் மாபெரும் சரிவை கொடுத்தன் மூலம், சனத்தொகை அதிகாரிப்பில் வீழ்ச்சியைக் கொடுத்தை மேல் உள்ள புள்ளிவிபரம் காட்டுகின்றது. இதை விட்டுவிட்டு கட்டமைக்கும் பொய்களும், போலித்தனமான புள்ளி விபரங்களும் கம்யூனிச மற்றும் ஸ்டாலின் எதிர்ப்பின் அபத்தங்களேயாகும்.
இங்கு பாட்டாளி வர்க்கம் தனது வாக்க சர்வாதிகாரத்தில், தொடர்ந்து நடத்திய வர்க்கப் போராட்டத்தில், எதிரி வர்க்கம் மேலும் தனிமைப்படுகின்றது. அதைப் பார்ப்போம்.
வீதத்தில் 1913 1928 1939 1959
தொழிலாளர், ஊழியர்கள் 17 17.6 50.2 68.3
கூட்டப் பண்ணை மற்றும் கூட்டு உழைப்பாழிகள் - 2.9 47.2 31.4
தனிப்பட்ட விவாசாயி, சிறு உற்பத்தியாளன் 66.7 74.9 2.6 0.3
குலாக்கள், மற்றும் பூர்சுவா வர்க்கம் 16.3 4.6 - -
1930 களில் கூட்டுப் பண்ணையாக்கம் என்ற கம்யூன் புரட்சி தொடரும் வர்க்கப் போராட்ட அடிப்படையில், 4.6 வீதத்துக்கு எதிராக நடத்தப்பட்டது. அதவது மக்கள் தொகையில் இவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய, அண்ணளவாக 80 லட்சம் பேருக்கு எதிராக நடத்தப்பட்டது. இதனால் கூட சனத் தொகை பெருக்கம் கணிசமாக தடைப்பட்டது. இந்த புதிய நிலப்பிரபுத்துவ வாக்கம் மற்றும் 1923இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால பொருளாதாரத்ததால் உருவான சொத்துடைய வர்க்கம், அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு, மக்களின் எதிரியாக இனங்காட்டியதன் மூலம், ஒரு அதிர்வை எதிர் கொண்டதன் மூலம், சமூக உயிர் தொகுதியிலும் பாரிய அதிர்வைச் சந்தித்தன் மூலம், இனப் பெருக்கம் அதிர்வுற்று சனத் தொகை பெருக்கத்தில் தற்காலிக சரிவு ஏற்பட்டதையே, 1930-1932 ஆண்டு புள்ளிவிபரம் நிறுவுகின்றது. மற்றும் கூட்டப் பண்ணையாக்கலில் விட்ட சில தவறுகள் கூட, மேலும் சனத் தொகை பெருக்கத்தில் மந்தத்தைக் கொடுத்தது. இவை எப்படி தாழ்வையும், வளர்ச்சியையும் கொடுக்கின்றது என்பதற்க்கு, அண்மைய உதாரணம் ஒன்றைக் காணமுடியும்.
பிரான்சில் 1999 ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல், சில கிராhமத்தில் சில நாட்கள் மின்சாரத்தை இல்லாதாக்கியது. இதன் விளைவாக இருட்டான காலம் சார்ந்து, அந்தப் பகுதியில் குழந்தை பிறப்பு 26 சதவீதத்தால் தீடிரென அதிகாரித்துள்ளது. இதுவே இப்படி இருக்கும் போது, ஒரு புரட்சி மொத்த மக்களையும் ஒரு சில ஆண்டுகள் உலுப்பும் போது, அதில் ஒரு பகுதி முற்றாக எதிரிநிலைக்கு தள்ளப்படும் போது, மறுபகுதி முன்னிலைக்கு வரும் போது, இவ் அதிர்வு இரு தளத்தாலும், சமூகத்தில் அனைத்து தளத்தையும் பாதிக்கின்றது. இது சனத் தொகை அதிகாரிப்பில் சரிவைக் கொடுத்து, புரட்சி பயனைக் கொடுக்கின்ற போது சனத் தொகை அதிகாரிப்பில் உயர்ச்சியைக் கொடுக்கின்றது. பின்பு சரிவைக் கொடுத்து சீராகின்றது. இதற்கு நிகாராக சீனக் கலாச்சார புரட்சியில் பாடசாலை செல்வது குறைந்து, பின் அதிகாரித்த வீதத்தில் மாறியது. கலாச்சார புரட்சி கிராமப் புற பெண்ணடிமைத்தனம் மீது கொடுத்த அடி, பெண் குழந்தைகள் கல்வி கற்பதை நோக்கி வருவது திடீரென அதிகாரித்தது. புரட்சியின் அதிர்வுதான், சோவியத்தின் 1930-1932 சனத் தொகை அதிகாரிப்பில் ஏற்பட்ட சரிவாகும். இதை காணத் தவறி எகாதிபத்திய பிரச்சாரத்தில் இருந்த பொறுக்கி வைக்கும், இடது வேடதாரிகளைப் பற்றி கொஞ்சம் சுருக்கமாக பார்ப்போம்.