Language Selection

சமர் - 27 : 11 - 2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஸ்ராலினுக்கு எதிராக போராடியவர்களில் முக்கியமானவர் டிராட்ஸ்கியாவர். இவர் "ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது" என்று கூறி மேற்கின் புரட்சி வரும் வரை காத்திருக்க அறை கூவியதன் மூலம், புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தை தனது புரட்சிகர வர்க்க கடமையை எதிர்த்து நின்றவர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியை தொடர்ந்து நடத்தக் கூடாது என்பதும், லெனின் "இடைவிடாத" புரட்சியை எதிர்த்து "நிரந்தரமான" இயங்கியல் மறுப்புக்காக போராடியவர். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது, வர்க்கப் போராட்டத்தில் வடிவ மாற்றமே ஒழிய, வர்க்கப் போராட்டத்தின் முடிவல்ல. இதை டிராட்ஸ்கி ஏற்றுக் கொண்டதில்லை. அதாவது பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது, வர்க்கப் போராட்டத்தின் முடிவாக கருதியவர். அப்படி இடைவிடாது தொடர்வது பற்றி 1925 இல் 14வது காங்கிரஸ்சில் டிராட்ஸ்கி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்றதுடன், அப்படி கட்டப்படின் "தோல்வியடையும் - அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலியன் சர்வாதிகாரமாக முடியும்" என்ற கூறி எதிர்த்து நின்றார்.

 

அதற்கு மாறாக ஒரே நொடியில் மேற்கு நாடுகளின் புரட்சியின் வெற்றியின் ஆதாரவுடன் சாதிக்க கோரிய, இடது தீவிரவாதத்தை முன் தள்ளியவர். இதற்கு மேற்கின் புரட்சி பற்றியும், உதவி பற்றியும் யதார்த்ததுக்கு புறம்பாக கற்பனை செய்து, அதையே அவரின் எதிர்ப்புரட்சியாக நடைமுறைப்படுத்தியவர்.  அராஜாகவாதத்தின் கருவில் இருந்தே, இந்த இடது தீவிரவாதம் புளுத்துப் போய் இருப்பது, இதன் அரசியல் உள்ளடக்கமாகும்.  இவர் வேறுபட்ட நாடுகளின் வேறுபட்ட புரட்சி கால கட்டத்தையும், வேறுபட்ட புரட்சியின் வடிவத்தையும் மறுத்தார். சோவியத்தில் புரட்சியில் சக பயணியாக ஒட்டிக் கொண்ட அதே நேரம், கட்சியில் தொடர்பற்றவராக, கட்சிக்குள் முரண்பாடுகள் மீதான  குழுக்களை சார்ந்து இருந்தார். அங்கு முரண்பாடுகளை கையாள்வதன் ஊடாகவே தலைமையைக் கைப்பற்ற முனைந்தார். அதாவது கோட்பாட்டு ரீதியாக ஜனநாயக மத்தியத்துவத்தின் பெரும்பான்மையின் அடிப்படையில் அல்ல. புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் தொடரும் புரட்சி பற்றி தனது எதிர்ப்பை தெரிவிப்பதில்,  சகலவிதமான வடிவத்தையும் தொடர்சியாக கையாண்டார். பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியை தொடர்வதை எதிர்த்து, அதாவது கம்யூனிசத்தை நோக்கி போராடுவதை எதிர்த்து இவர் போராடிய வழிகளில்,  ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்டு சதியாக இயங்கிய போதே, அவர் கட்சி அரசியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் தொடர்ந்தும் அவர் இரகசியமான தொடர்புகள் மூலம் இயங்கிய போக்கு, அவரின் தொடர்சியான கடந்த கால அரசியல் போக்கின் விளைவாக இருந்தது. அதைப் பார்ப்போம்.

லெனின் "இடையறாத புரட்சி" என்ற கோட்பாட்டை முன் வைத்த போது டிராட்ஸ்கி  "நிரந்தரப் புரட்சி" என்று முன்வைத்தார். மார்க்ஸ்சிடம் கடன் வாங்கிய இந்த சொல்லுக்கான அர்த்ததை திரித்து, விவசாயிகளை எதிரியாக்கி புரட்சியின் தொடர்ச்சியை மறுத்தார். இடையாறத புரட்சி, புரட்சிக்கு பிந்திய வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை அங்கிகரிக்கின்றது. நிரந்தரப் புரட்சி, புரட்சிக்கு பிந்திய வர்க்கப் போராட்டத்தை மறுக்கின்றது. அதாவது போல்ஷ்விக்குகளுடன் இனைந்த பின்பும் கூட, அங்கு கடந்தகால கோட்பாடு மீது சுயவிமர்சனம் செய்யாது, கடந்தகால அரசியலை கைவிடாமை, இதன் அடிப்படையான அரசியலாக உள்ளது. புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் இடைவிடாத புரட்சியாகிய (மாவோ இடைவிடாத புரட்சியாக கலச்சார புரட்சியை முன்னிறுத்திய லெனிஸ்ட்டாக உள்ளார்.) தொடரும் வாக்கப் போராட்டத்தை, டிராட்ஸ்கி தனது நிரந்தர புரட்சிக் கோட்பாட்டில் (பழைய போல்ஷ்விக் அல்லாத வழியில்) நின்று மறுத்தார். இது சராம்சத்தில் அராஜாகவாத அரசியலையும், ஓரே எட்டில் புரட்சியை கடந்துவிடும் கற்பனையையும், புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தையும் மறுக்கின்றது. நிரந்தரப் புரட்சி வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை மறுப்பதால், அது மார்க்சியத்தில் இருந்த விலகிச் சென்று விடுகின்றது.

லெனின் டிராட்ஸ்கி பற்றி "டிராட்ஸ்கி  போல்சவியத்தைச் சிதைக்கிறார்; ஏனெனில் ரசிய முதலாளி வர்க்கப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் பற்றிய திட்டவட்டமான கண்ணோட்டங்கள் எதையும் உருவாக்குவதற்கான ஆற்றல் அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை." "சிறுகுழு மனப்பான்மையின் மிக மோசமான எச்சங்களின் பிரதிநிதி டிராட்ஸ்கி என்று நாம் அழைத்தது சரியே என்பதை உண்மை மெய்பிக்கின்றது.." " |சிறு குழு மனப்பான்மை - இன்மை| என்ற திரையின் பின், வெளிநாட்டில் உள்ள ஒரு குழுவின் நலன்களுக்கு டிராட்ஸ்கி பரிந்து செயலாற்றுகிறார். குறிப்பாக, இக் குழுவுக்குத் திட்டவட்டமான கோட்பாடுகளோ, ரசியாவில் உள்ள உழைக்கும் வர்க்க இயக்கத்தில் எந்த ஒரு அடிப்படையுமோ இல்லை. மின்னுவதெல்லாம் பொன் அல்ல. டிராட்ஸ்கியின் சொற்றொடர்களின் பளபளப்பும் ஆரவாரமும் நிறைய உள்ளது. ஆனால் அவை பொருளற்றவை." என்றார். இதுதான் அவரின் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில், வர்க்கப் போராட்டத்தை தொடர்வது தொடர்பாக அவரின் அரசியலின் உள்ளடக்கமாகும். புரட்சிக்கு பிந்திய ஒரு நாட்டின், அதவாது சோவியத் புரட்சியின் கடமை என்ன? அதை எப்படி தொடர்வது? என்பதற்கு பதில் இல்லாமல், சோவியத்தில் எதை பேசினாலும் அவை பளபளப்பான போதும், பொருளற்றவையேயாகும்;.

இதையே லெனின் தனது அனுபவத்தில், டிராட்ஸ்கி பற்றிய கூற்றில் "மார்க்சியத்தின் முக்கிய பிரச்சனை எதிலும் டிராட்ஸ்கி ஒரு போதும் ஒரு உறுதியான கருத்தைக் கொண்டிருந்ததில்லை. எந்தக் கருத்து வேறுபாட்டிலும் உள்ள விரிசல்களில் நுழைந்து கொள்ள எப்பொதும் அவர் கடும் முயற்சி செய்கிறார். ஒரு சாராரைக் கைவிட்டு இன்னொரு சாராருடன் சேர்ந்து கொள்கிறார்." என்ற லெனின் மதிப்பீடு, புரட்சிக்கு பிந்தி காலத்தில் டிராட்ஸ்கியின் நடத்தை எந்த விதத்திலும் மாறிவிடவில்லை என்பதையே, லெனின் முந்திய மதிப்பீடுகள் மீள மெய்பிக்கின்றன.

1917 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ம் திகதி லெனின் எழுதினார் "டிராட்ஸ்கி வந்து சேர்ந்தார்; வந்த சேர்ந்த உடனேயே இந்த அயோக்கியர் இடது விம்மர்வால்டினருக்கு எதிராக "நோவிமிர்" பத்திரிகையில் இருந்த வலதுசாரியுடன் கோஷ்டி சேர்ந்த கொண்டார்.!! இதுதான் டிராட்ஸ்கி!! பார்த்துக் கொள்ளுங்கள்!! அவர் தனது சுயரூபத்தை எப்போதும் வெளிப்படுத்துகிறார் - திரிபுகள், மோசடிகள், இடதுசாரியாக வேடம் போடுவது, வலது சாரிகளுக்கு உதவுவது, தன்னால் இயன்றவரை இதைச் செய்வது..." என்றார் லெனின். இதுதான் புரட்சிக்கு பிந்திய காலத்தில் அவரின் அரசியலாகும்;. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியை தொடர்வதை எதிர்த்து, டிராட்ஸ்கி செயலற்றிய வடிவம் எந்தவிதத்திலம் இதைவிட குறைந்தல்ல. யாராலும் மறுக்க முடியுமா?

டிராட்ஸ்கி எதாவது கருத்து வைத்தால், அது மார்க்சியத்தை விட்டு விலகி நிற்பதை லெனின் காண்கின்றார். 1920 இல் லெனின் "எனது விமர்சனத்துக்குரிய முதன்மையான விசயம் தோழர் டிராட்ஸ்கியின் சிறு பிரசுரமான |தொழிற்சங்கங்களின் பாத்திரமும் கடமைகளும்| என்பதாகும். மத்தியக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுரைகளுடன் இப் பிரசுரத்தை ஒப்பிடும் போது, அதை மிக எச்சரிக்கையாகப் படிக்கும் போது, அது கொண்டுள்ள ஏராளமான தவறுகளையும் வெளிப்படையான குழப்படிகளையும் கண்டு பெரிதும் வியப்படைகிறேன்...

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் சாரத்தைப் பாதிக்கக் கூடிய ஏராளமான தவறுகளை அவர் செய்துள்ளார் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்." என்றார். மார்க்சியத்தை விட்டு விலகி ஒடும் டிராட்ஸ்கியின் அரசியல் சாரம் என்ன? கட்சி உருக்கு போன்றதாக இருக்கக் கூடாது. கட்சியில் கட்டுப்பாடு இருக்கக் கூடாது. கட்சியில் சிறு குழுக்களின் சுதந்திரம் அல்லது சிறு குழுக்கள் இணைந்து புரட்சி செய்வதை அங்கிகரித்தல். (இதையே இன்று பின்நவீனத்துவம் முன்வைக்கின்றது.) இவை சார்ந்து தனித் தனி பத்திரிகை, தனித் தனி மையங்கள் இருக்க வேண்டும். அரசு வேறு கட்சி வேறாக இருக்கவேண்டும். அரசில் கட்சி பங்குபற்றக் கூடாது. என பலவற்றை மார்க்சியத்துக்கு எதிராக முன்வைத்தார். அரசு பற்றி மார்க்சியம் என்ற கட்டரையில் லெனின் "அரசியல் என்பது அரசு தொடர்பான விவகாரங்களில் ஈடுபடுவதாகும்; அரசு நடவடிக்கைகளின் வடிவமுறைகள், குறிக்கோள்கள், உள்ளடக்கம் ஆகியவற்றைத் தீர்மானிப்பதாகும்." என்றார்.

விவசாய வர்க்கத்துடன் கூட்டை மறுத்தல், இதன் இடது அரசியலாகும்;. தனிநாட்டில் சோசலிசத்தை கட்ட மாறுப்பதும், அதாவது வர்க்கப் போராட்டத்தை தொடர மறுப்பதும், மேற்கு புரட்சி வரை அதை ஒத்திப் போடக் கோருவதன் மூலம், புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தை தொடர மறுத்து, மறைமுகமாக பூர்சுவா வர்க்கத்திடம் சரணடைவதாகும். இதை மூடிமறைக்க உலகப் புரட்சி பற்றி பள பளப்பாக பொருளாற்று பேசுவது அவசியமாகின்றது. ஆனால் உட்சாரம் எதுவும் அற்றது. உலகப் புரட்சி எதுவும் நடக்காத நிலையில் சோவியத் புரட்சிகர கடமை என்ன என்ற கேள்விக்கு, அரசியல் அற்ற பளபளப்பான ஆரவாரத்தால் காலத்தை ஒட்டுவதே ரொக்சியமாகும்.