05242022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

கொள்ளையடிக்க வழிகாட்டிய கடவுளே, வேதக் கடவுள்கள் - சாதியம் குறித்து பாகம் - 15

வேதமோ வேத-ஆரிய வரலாறாகும். இது அவர்கள் இந்தியாவில் நிலைபெறல் வரையிலான ஒரு காலத்தை உள்ளடக்கியதே.இது குறைந்தபட்சம் உழைத்து வாழும் மனித நாகரிகத்தை ஒரு சமூக வாழ்வாக கொண்ட, ஒரு சமூகத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல.

மாறாக அவர்கள் மற்றவர்களை கொள்ளையடித்து வாழ நடத்தி போர்கள், அதற்கு அமைய நடந்த சடங்குகளைப் பற்றி பேசுவதுதான் வேதம். ஆரியரின் இந்த வாழ்க்கை முறை, அடிப்படையில் நாகரிக சமூகத்துக்கு எதிராகதாகவே இருந்துள்ளது. அவர்கள் போற்றும் ரிக்வேதப்படி, அவர்கள் உழைப்பை அறியதவராக வாழ்ந்தனர். தம் வரலாறு தொடங்கிய இடத்தில் இருந்து நிலைபெற்ற வரையிலான வேத காலத்தில், அவர்களின் போராட்டம் உழைத்து வாழ்ந்த நாகரிகங்ளை அழித்துக் கொள்ளையிட்டு வாழ்தாலாகும். மாறாக அந்த நாகரித்தை தமதாக்கவில்லை. அங்கு இருந்து இரும்பு, சகரங்களை பயன்படுத்தியவர்கள், அதை தம் உழைப்பின் ஊடாக சுயமாக உருவாக்கவில்லை. இப்படி ஆரிய-வேத மக்கள் தமக்கான ஒரு உழைப்பையோ, நாகரிகத்தை உருவாக்கவில்லை. ஏன் உருவாக்க முடியவில்லை, இருந்ததை பின்பற்றவும் கூட முடியவில்லை.

அவர்களின் வாழ்வில் முறை என்பது, நிலையாக உழைத்து வாழ்ந்த, மக்களின் வாழ்விடங்களை உடைமைகளை சூறையாடி வாழ்வதும், எஞ்சியதை அழித்தலாகும்;. நெருப்பு சார்ந்த அவர்களின் சடங்குகள், இப்படித்தான் இதன் அடிப்படையில் தான் உருவானது.

இவர்கள் யுத்தம் மூலம் வென்ற இடத்தில் கூட, அவர்களால் நிலையாக வாழ முயலவில்லை. எனென்றால் உழைத்து வாழும் நாகரிகமும், உழைப்பும் அவர்களிடம் அறவே கிடையாது. இதனால் கைப்பற்றி இடத்தை கைவிட்டு, மற்றொரு சமூகம் மீதான தமது சூறையாடலுக்கு செல்லும் வரை கைபப்பற்றிய வளத்தை அழிக்கின்றனர். அதாவது அதை நெருப்பில் இட்டனர். அவர்களின் யுத்தத்துக்கு உதவிய நெருப்பு, அழிப்பிலும் உதவுகின்றது. இங்கு தீ யுத்த கடவுளாக, கடவுளுக்கு யுத்த மூலம் கிடைத்த பொருளை வழங்குதல், அதுவே அழித்தல் சடங்காக மாறுகின்றது. இங்கு அழித்தல் சடங்கு என்பது, மறுபடியும் கடவுளுக்கான படையலாக, மறுபடியான சூறையாடலை நடத்தும் சடங்கை அடிப்படையாக கொண்டதாக அமைகின்றது. இப்படி ஆரியரின் நெருப்பு சார்ந்த சடங்குகள், விலங்கு பலியிடல் அனைத்தும் இதற்கு உட்பட்டே உருவானது.

இப்படி இந்திரன், கோட்டையை அழிக்கும் ஒரு கடவுளாகவே ஆரியர் முன் நிற்கின்றான். அப்படித்தான் ஆரிய-வேத மக்கள் இந்திரனை நம்பினர். ரிக் வேதத்தில் கோட்டையைக் கட்டி, அதில் ஆரியர் தொடர்ந்து வாழ்ந்ததாக, எந்த குறிப்பும் கிடையாது. அழித்தல் பற்றியே பேசப்படுகின்றது.

ஆரிய-வேத மக்கள் கால்நடை வளர்ப்பு சமூகமாக திரித்து காட்டும் இந்திய வரலாறே, பொய்மையானது. இதுதான் ஆரிய-வேத மக்களின் வரலாறு என்றால், ஏன் இந்த கால்நடைச் சமூகம் நாகரிக கோட்டைகளை இடிக்க வேண்டும்;. மேய்சல் நிலத்து மக்கள், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாகரிக கோட்டையை ஏன் இடிக்க வேண்டும்? அதை நோக்கி என் நகர வேண்டும்?

ஆரிய-வேத மக்கள் மேய்சல் நிலத்தில், கால்நடைகளை கொண்டு உழைத்து வாழ்ந்த சமூகமல்ல. கால்நடை வளர்ப்பு சார்ந்த உழைப்பு வெற்றிபெறக் கோரிய ஒரு வழிபாட்டை, வேதம் முன்னிறுத்தவில்லை. சூறையாடியும், கொள்ளையடித்தும் வாழ்தல் தான், ஆரிய-வேத மக்களின் வழிப்பாட்டின் சாரமாகும். இதனால் கோட்டை, தமது கடவுள் கோட்பாட்டுக்கு எதிரானதாகவும் கூட மாற்றிவிடுகின்றது. கோட்டையை கொள்ளையடித்து வாழும் தமது வாழ்வுக்கு எதிரானதாகவே, ஆரிய-வேத மக்களின் ரீக்வேதம் கூறுகின்றது.

இப்படி அக்காலத்தில் உழைத்து வாழ்ந்த நாகரிக அமைப்புக்கு வெளியில், மற்றைய சமூகங்களை கொளையடித்து வாழும் நாடோடிகளாகவே ஆரியர்கள் வாழ்ந்தவர்கள். உழைப்பை அறியாதவர்களாக, அதை வெறுத்தவர்களாக இருந்தால், அவர்களின் சொந்த அழிவு வரை அவர்களால் எங்கும் நிலைபெற்று வாழ முடியவில்லை. நிலையான ஒரு வாழ்வைக் கொள்ளாததால், ஆரியச் சடங்கு சார்ந்த புரதான வேள்வி கிடங்குகளைக் கூட நாம் காணமுடியவில்லை.

விளைவு அவர்களின்பின், பல பண்பாட்டு கூறுகள் ஓட்டிக்கொண்டு வருகின்றது. குதிரை, இருப்பு, சக்கரம் முதல் இறந்த வரை புதைத்தல் எரித்தல் வரை அவர்களுடன் தொற்றிக்கொண்டது. இப்படி பல கலப்பு பண்பாட்டின், ஒரு கலவைகளாக வேத-ஆரிய வழிபாடு அறிமுகமாகின்றது. அவர்கள் நிலையற்று வாழ்ந்ததால், எந்த வரலாற்றுக் குறிப்பையும் இந்த சடங்கு முறைக்கு வெளியில் நாம் பெறமுடியவில்லை. வரும் வழியெங்கும் சிலவற்றை உள்வாங்கினர், சிலவற்றை இழந்தனர். தொடங்கி முடியும் வரலாற்றுக்கும் இடையில், பிணத்தை எரிப்பது முதல் புதைப்பது வரை அது திரிகின்றது. அவர்களின் பண்பாட்டுத் தளமே அதிர்ந்தும் சிதைந்தும் வந்தது. இது கொள்ளையடித்து வாழ்ந்தவர்களின் நாடோடிக் குணாம்சமாகும். இதனால் சமூக மூலமேயின்றி, வெறும் சடங்கு முறையுடன் எஞ்சி அழிந்தனர். கொள்ளையடித்த வாழும் அவர்களின் கோட்பாடுகள், நாகரிகத்துக்கு எதிராக இருந்தது. இதனால் அவர்கள் நிலைபெற்று ஒரு சமூகமாக நிலைக்கமுடியவில்லை. நாகரிகமாக உழைத்து வாழ, இன்றுவரை அந்த கோட்பாட்டை பின்பற்றும் அவர்களால் முடியவில்லை. உழைத்து வாழ்வது மிகவும் வெறுப்புகுரிய ஒன்றாகவே, அன்றும் இன்றும் அவர்களால் அணுகப்படுகின்றது. இவர்கள் சூறையாடியும் சுரண்டியும் வாழ்ந்தன் மூலம், மற்றவனின் அடிமைத்தனத்தில் தான் தம்மை நாகரிகமாக்கினர். சுரண்டி வாழ்வதுதான், நாகரிகமானதாக திரிந்து போனது.

இன்றைய இந்தக் கோட்பாட்டின் மூதாதைகள், ஒரு நாடோடிச் சமூகமாக கொள்ளையடித்து வாழ்தவர்களின் பரம்பரையில் இருந்து வந்தவர்களே. இதையே அவர்கள் பல தலைமுறையாக செய்ததால், நாகரிகத்தின் மூச்சை அவர்களின் வரலாற்றின் மூலத்தில் இனம் காணமுடியாது. அவர்கள் கொள்ளையிட்டு வாழ்வதற்காகவே இந்தியாவரை வந்தனர். வரும் வழியெல்லாம், அவர்கள் கொள்ளையிடுகின்றனர். கால்நடைகள் முதல் அனைத்தையும் திருடுகின்றனர். அதைக்கொண்டு வாழ்ந்தனர். எஞ்சியதை கடவுளின் உணவாக கற்பித்து அதையும் அழிக்கின்றனர். இந்த வாழ்வியல் தான், பின்னால் அடையாள தீச் சடங்காக மாறுகின்றது.

கடவுளுக்கு கொள்ளையில் பங்கு கொடுப்பதை மட்டு;ப்படுத்;தியதால்தான், அது சடங்காக மாறுகின்றது. முன்பு மொத்தமாக எரியூட்டுவதால் ஏற்படும் உணவின் பற்றக்குறை தவிர்க்க, அதை மட்டுப்படுத்தவே அது குறியீட்டுச் சடங்காக மாறுகின்றது.

இப்படி கொள்ளைக் கடவுக்கு வழங்கும்; அளவு குறைந்த போனது. இப்படி சடங்கு வடிவிலேயே நாகரிகமடைகின்றனர். ரீக் வேதம் இத் திருட்டையும் கொள்ளையையும், இந்திரனின் கொடையாகத் தான் கூறுகின்றது. இப்படி கொள்ளையிட்டு அதை புசித்து வாழ்ந்த சமூகம், காட்டுமிராண்டி சமூகமாக இருப்பது ஆச்சரியமன்று. கொள்ளையடித்து அதை காட்டுமிராண்டிகள் போல் கால்நடைகளை நெருப்பில் அழித்தவர்கள் தான், பின்னால் உணவு சார்ந்து நாகரிமடைந்தனர். அதை குறியீட்டுச் சடங்காக மாற்றினர்.

இதையே பல மற்றங்கள் ஊடாக, பல தலைமுறைகள் எந்த குறிக்கோளுமின்றி வாழ்ந்தளர். இப்படி இந்தியா வரை கொள்ளையடிக்க வந்தடைந்தனர். இப்படி ஆரியர் வாழ்வியல் முறை என்பது, இறுதியாக அரைக் காட்டுமிராண்டித்தனமானதுதான். மனித உழைப்பை அறியாதவர்களாக, அந்த உழைப்பை கொள்ளையிட்டு வாழ்ந்தவர்களாக இருந்தனர்.

இப்படி நீண்ட பல தலைமுறை கொண்ட ஒரு நாடோடி அரைக் காட்டுமிராண்டிகளை, குறைந்தபட்சம் நாகரிகப்படுத்தியது என்றால் அவர்களின் வாழ்வியல் நெருக்கடிகள்தான். இந்த கொளையடித்த நாடோடிகளின் வாழ்வை தொடர்ச்சியாக பூர்த்தியாக்கும் வகையில், கொள்ளை வளம் எப்போதும் போதுமானதாக நிரந்தரமானதாக இருக்கவில்லை. எப்போதும் ஏற்றயிறக்கம் கொண்டதாக இருந்ததது. முதலில் எரியூட்டியவர்கள், ஒரேயடியாக பலியிட்டவர்கள், இதில் இருந்து தப்பிப்பிழைக்க, குறியீட்டுச் சடங்கு முறைக்கு மாறுகின்றனர். இதனால் முன்பு எரிப்பதில் இருந்து தப்பிய கால்நடைகளை, தற்காலிகமாக பராமரிப்பது அறிமுகமாகின்றது. இது இயற்கையை ஓட்டி அதுதானாக பெருகவும் செய்கின்றது. இது, அவர்கள் கொள்ளையடிக்க உதவிய குதிரையின் பராமரிப்புக்கு இணையாகவே இட்டுச்சென்றது.

புதிதாக கொள்ளையடிக்கும் வரை, கொள்ளையடிக்க புதிய இடத்தைக் கண்டு பிடிக்கும் வரை, அந்த கொள்ளைக்கான யுத்தத்தை வெல்லும் வரை, உயிர் வாழ்வதற்கு ஏற்ப சடங்கின் மாற்றம் உதவுகின்றது. இதனால் பரமாரிப்பு அவசியமாக உணரப்பட்டது. இறைச்சியை பிரதான உணவாக கொண்ட ஆரிய–வேத மக்கள், கால்நடை இன்றிய நகர்வு தற்கொலைக்கு ஒப்பானது. உணவை நகரும் பாதையில் தொடர்ச்சியாக பெறுவது என்பது சாத்திமற்றதொன்று.

எனவே குறியீட்டுச் சடங்கு முறைக்கு மாறியவர்கள், எஞ்சிய கால்நடைகளை தொடர்ந்து பராமரிப்பதும், அதை இனவிருத்தி செய்வதும் அவசியமாக இருந்தது. இந்த பரமரிப்பே, குறியீட்டுச் தீச் சடங்காக மாறியது. தீக் கடவுள் யுத்தத்தை வெல்ல உதவியதால், அவருக்கு முன்பு வரைமுறையற்ற வகையில் வழங்கிய காட்டுமிராண்டித்தனமான பங்கை மட்டுப்படுத்தவே, குறியீட்டு வேள்விச் சடங்கு வந்தது. இதன் மூலம் தீயை பாதுகாப்பது போல், தமக்கு அவசியமான கால்நடையையும் பாதுகாத்தனர். இதை உழைப்பாக கொண்டு அவர்கள் வாழ முற்படவில்லை. அவர்களின் சடங்கு அதைக் கோரவில்லை. இன்று பார்ப்பனச் தீச் சடங்கில் தானிய உணவு இடுவது என்பது, முன்னைய சடங்கின் ஒரு திரிபாகும்.

ஆரிய-வேதம் கூறுவது போல், வரும் வழியெங்கும் சடங்கின் பெயரில் கால்நடைகளை தின்பதும், அதை தீக்கு குறியீட்டுச் சடங்காக பலியிடுவதும் நடந்தேறியது. இதன் மூலம் தற்காலிகமான கால்நடை வளர்ப்புமுறை உருவானது. இதை அண்மைக்கால வரலாறு தெரிந்த யுத்தங்களிலும் கூட இனம் காணமுடியும்.

அத்துடன் இது சிறியளவிலான தேவையை ஓட்டியது. இதனால் சிறிது காலம் தங்குவது உருவானது. இது ஒரு நிலையான பிரதேசத்தில் அல்ல, நகரும் வழிகளில் இதை அவர்கள் செய்தனர்.  கொள்ளையிட்டு அழித்த சமூகத்தின் பயிர் செய்கையின் அறுவடைகளை உண்டனர். இவைதான் அவர்களை காட்டுமிராண்டிகளற்றதாக காட்டுகின்ற, ஒரேயொரு உயர்ந்தபட்ச நாகரிகம்;. இது அவர்களின்  தற்காலிமான ஒரு செயல் என்பதை, அவர்களின் சடங்கு முறைதான் உறுதி செய்கின்றது. சடங்குகள் இதையொட்டி மாறவில்லை.

சிறிது காலம் தங்கல், கால்நடையை பரமரித்தல், தானிய உணவை உண்ணுதல், அவர்களின் பிரதான மையமான வாழ்வியலாகவில்லை. பூசாரிகள் அதிகார வர்க்கமாக வாழ்ந்ததால், கொள்ளையால் உயர்வான சுகபோகத்தை அவர்கள் பெற்றதால், கொள்ளையிட்டு வாழ்தலே, அவர்கள் சடங்கின் மூலம் முதன்மையான வழிகாட்டு நெறியாக இருந்தது. உழைத்தவர் அல்லது தற்காலிகமாக உழைத்தவர் அதை கைவிட்டு கொள்ளையிட முன்னேறினர் அல்லது அவர்கள் பின்தங்கி அங்கே நிரந்தரமாக ஆரிய அடையாளத்தை இழந்து வாழ்ந்தனர். உழைத்தவன் இவர்களை பின் தொடர முடியவில்லை. கொள்ளையடித்து வாழும் கூட்டம், கொள்ளைக் கடவுளும் கொள்ளையடித்தபடி இந்தியா வரை வந்தனர்.

இப்படி வரும் வழியில் கிடைத்த உழைப்புக் கருவிகளையும், ஆயுதங்களையும் திருடிக்கொண்டனர். இதை வைத்து முகர்ந்து தேடும் ஆய்வாளர்கள், அவர்களை நாகரிக சமூகமாக காட்ட பார்ப்பனிய விசுவசத்துடன் நாயாக அலைகின்றனர்.

இப்படி இந்த ஆரிய நாடோடிகளின் இடப்பெயர்வோ நிலையற்றது. நீண்டதும், பல தலைமுறை கொண்டதுமாகும். இப்படியான வாழ்வு கொண்ட ஆதி சமூகங்கள், பல இருந்துள்ளது. மனிதன் கால்படாத பல புதிய பகுதியூடான இடப்பெயர்ச்சிகள், பல இடத்தரிப்புகளை கொண்டதாக இருந்தது. வளமும் வாய்ப்பும் நிறைந்த பூமியில், கொள்ளையும் கொழுப்பும் நிறைந்த இடத்தில், அந்த வளம் வற்றும் வரை, அங்கேயே தங்கி வாழ்தல் மூலமே ஆரிய இடப்பெயர்ச்சி மெதுவாகவே நடந்தது. பெண்கள் குழந்தைகள் முதல் முதியவர் ஈறாக கொண்டு இந்த இடப்பெயர்ச்சியை, ஒரு குறித்த புள்ளியாகவோ ஒரு நேர் கோடாகவோ ஒரு வரைமுறைக்குள்ளோ  சுருக்க முடியாது. இது போன்ற வாழ்க்கை முறையுடன் கூடிய நாடோடி வாழ்க்கை முறை, செவ்விந்திய மக்கள் மத்தியில் அமெரிக்காவின் அழித்தொழிப்பு நிகழ்ந்த காலத்திலும் கூட காணப்பட்டுள்ளது. இங்கு அது இயற்கை மாற்றத்தை ஒட்டி இந்த இடப்பெயர்ச்சி, பருவகாலத்தின் போக்கில் நடந்தது.

ஆரிய இடபெயர்ச்சி கொள்ளையடிப்பதை வாழ்வாக, அதைக் குறிக்கோளாகக் கொண்டு நடந்தது. இப்படி மெதுவான ஆரிய இடப்பெயர்ச்சியின் மூலம், அவர்கள் கொள்ளையடித்து வைத்திருந்த குதிரைகளை இனவிருத்தி ஊடாக இயல்பாக இயற்கையில் பெருகியதுடன், அவை புதிய சுற்றுச் சூழலுக்கும் இசைவாக்கம் அடைந்தது.

உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில், குதிரையைக் கூட பலியிட்டு உண்டனர். அதாவது முதிர்ந்த, செயலற்ற, நகர்வுக்கு தடையாக பெருகிவிட்ட குதிரை கூட பலியிடப்;பட்டது. இப்படிபட்ட ஆரியரை, கால்நடை வளர்ப்பு சமூகமாக சித்தரிப்பது வெட்கக்கேடு.

கால்நடை வளம் இருந்து இருப்பின், இதை செய்யமுடியாது. வேத-ஆரிய பார்ப்பனிய சடங்கின் போது, பலியிடப்பட்;ட குதிரையுடன் அரசி புணரும் சடங்கு பின்னால் ஒரு சூக்குமம் உள்ளது என்பது தெளிவு. அது முறையற்ற தமது ஒரு செயலின் மீதான குற்ற உணர்வை நீக்குவதாக இருக்கலாம்;.

இதற்கு நல்ல உதாரணம் டார்வின் ஆய்வுகள்; தான். அவர் கண்டறிந்த ஒரு காட்டுமிராண்டி சமூகத்தில், வேட்டை கிடைக்காத போது தமது வேட்டைக்கு உதவும் நாய்களுக்கு உணவிட, வேட்டையாட முடியாத தமது முதியவர்களை கொன்று நாய்க்கு உணவிட்டதை அவர் பதிவாக்கியுள்ளார். இந்த வகையில்தான், இந்த நாடோடி ஆரிய நகர்வு நடந்தது. ஆரிய இடப்பெயர்ச்சி என்பது, குறிக்கோளுடன் ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்தை நோக்கி போதலை அடிப்படையாக கொண்டதல்ல. பல வரலாற்று ஆய்வாளார்கள் இதைக் காணத் தவறி, ஆரிய வரலாற்றை அங்குமிங்கும் முகர்ந்து, ஆரிய மூத்திரம் தென்படுகின்றதா என்று முகர்ந்;து தேடுகின்றனர்.

ஆரிய சமூகம் நிலையான ஒரு சமூகமாக ஒரு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அல்ல. அதனால் வரலாற்றில் நிலையான வரலாறுறற்றவர்கள், வாழ்வற்றவர்கள். ஆதிய சமூகத்தில் நிலையான வாழ்வமைத்து, உற்பத்தி உறவுடன் பின்னிப்பிணையாது அலைந்து திரியும் அரை காட்டுமிராண்டி சமூக குழுக்களில் ஒன்றுதான் ஆரியர். இதற்குள் நிலைபெற்ற, ஒரு நாகரிக பண்பாட்டை, அகழ்வாராய்ச்சியில் நாம் தேட முடியாது.

பிரதானமாக வேள்வி முறையையும், அக்கினிச் சடங்குகளையும் கொண்ட வேத-ஆரியரின், அக்கினி பலிபீடங்களை தேடியவர்களுக்கு, அதன் சுவடே காணமுடியவில்லை. அக்கினி வழிபாடு மற்றும் பலியிடல், கொள்ளையிட்ட சமூகத்தின் சொந்த மீள் எதிர்வினைதான்;. இவை ஒரு நிலையான சமூகமாக இல்லாத ஒரு நாடோடிகள் என்பதால், வேள்வி முதல் பலியிடல் வரை, அந்தந்த இடத்துக்கு ஏற்ப தற்காலிகமானதும் மற்றத்துக்கும் உட்பட்டதுதான். அவை அழிந்து போகக் கூடிய எல்லைக்குள், அவை வரலாற்றில் காணாமல் போய்விடுகின்றது. இதை கட்டமைக்க நாகரிகமோ, நிலையான வாழ்வையோ கொணடவர்கள் அல்ல ஆரியர்.

ஆரிய வேத சடங்கு முறைகள் சிலவற்றை கொண்ட, அதன் எச்சத்தை மீளமைப்பு செய்தது பார்ப்பனியம். இது இன்று இல்லையென்றால், ஆரிய வரலாற்றைப் பற்றிய எந்தக் குறிப்பும் எமக்குக் கிடையாது போய்இருக்கும். இது போன்ற எத்தனையோ சமூகத்தின் தனிக் குறிப்புகள் இல்லாமல் போனது போல் ஆகியிருக்கும்;. இது ஒன்றும் மனித வரலாற்றுக்கு புதிதல்ல.

14.ஆரியரின் இரத்த உறவு வழிவந்தவர்கள் அல்ல, அனைத்து பார்ப்பனர்களும் - சாதியம் குறித்து பாகம் - 14

13.பார்ப்பனப் பண்பாடு மிக இழிவானதாக உருவானது எப்படி? - சாதியம் குறித்து பாகம் - 13

12.பார்ப்பனரை மற்றயை பூசாரிகளில் இருந்து வேறுபடுத்தியது எது? - சாதியம் குறித்து பாகம் - 12

11.சமஸ்கிருதம் என்னும் தனி மொழியின் தேவை, ஏன், எதனால் எழுகின்றது? - சாதியம் குறித்து பாகம் - 11

10.தந்தைவழி தனிச்சொத்துடமைதான், ஆரிய-வேதச் சடங்குகளை சிதைவில் இருந்து மீட்டது : பாகம் - 10

9.ஏன் இந்திய சமூகத்தில் ஆரியர் சிதைந்தனர்? - சாதியம் குறித்து பாகம் - 09

8.ஆரிய பாடல்களோ கொள்ளையிட்டு வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது : சாதியம் குறித்து பாகம் - 08

7.சமஸ்கிருதம் பிழைப்பு மொழியானதால், அது சாதி மொழியாகியது :( சாதியம் குறித்து பாகம் - 07)உயிரற்ற ஆரிய சடங்கு

 

6.உயிரற்ற ஆரிய சடங்கு மந்திரமாக, அதுவே சமஸ்கிருத மொழியானது : சாதியம் குறித்து பாகம் - 06

5. ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்? : சாதியம் குறித்து பாகம் - 05

 

4. முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04

 

3. எங்கே? எப்படி? ஏன்? ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்! : பாகம் - 03

 

2. பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02

 

1. பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01


பி.இரயாகரன் - சமர்