Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குறிப்பு : மாத்தையா கூறினான், நாம் யார் ஆயுதம் வைத்திருந்தாலும் பிடிப்பம் என்றார்.

விளக்கம் : ஆயுதம் யார் வைத்திருந்தாலும் பிடித்துக் கொல்வோம் என்றான். இதன் மூலம் மக்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையை, அழித்தொழிப்போம் என்றான். போராடும் உரிமையை மறுத்து, தங்கள் பாசிச சர்வாதிகார வழியில் அழிப்போம் என்றான். தாம் மட்டும் ஆயுதம் வைத்திருக்கவும், ஆயுதமுனையில் மக்களை சுரண்டி வாழ்வதே தேசிய போராட்டம் என்றான். மக்கள் தமது சொந்த விடுதலைக்கு அணிதிரள்வதையும், ஆயுதம் ஏந்துவதையும் படுகொலைகள் மூலம் அடக்கி ஒடுக்குவோம் என்றான். தமது பாசிசத்துக்கு அடிபணிந்து கைகட்டி வாய் பொத்தி ஆண்டை அடிமை வாழ்வை வாழ்வதே, தமிழ் மக்களின் விடுதலை என்றான்.

 

ஆயுதம் வைத்திருக்கும் சட்டபூர்வமான உரிமையை யார் தீர்மானிப்பது? ஆயுதத்தை ஏன் யார் வைத்திருக்க வேண்டும்? இந்தக் கேள்வி அடிப்படையானது. ஒட்டுமொத்த சமூகத்தின் நலன்ககளை சிலர் தமது சுயநலத்திற்காக, ஆயுத முனையில் அவர்களை ஒடுக்கியாளும் போது, அதை எதிர்த்த போராட்டங்களை ஒடுக்கியாள்பவன் சட்டவிரோதமானது என்கின்றான். சட்டங்கள் சிலரின் நலன் சார்ந்து, பெரும்பான்மை மக்களை சூறையாட ஒழுங்கமைக்கப்பட்ட சட்டங்களாகவே நீடிக்கின்றன. இதை ஜனநாயகம் என்று பீற்றுகின்றனர். மக்கள் தமது சொந்த உழைப்பு முதல் அனைத்துக்கும் உரிமை கொண்டாடும் போராட்டத்தில், இதை மறுப்பவருக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் உரிமை அவர்களின் அடிப்படைப் பிறப்புரிமையாகும். மக்களுக்கு வெளியில் சிலர் ஆயுதம் வைத்திருக்கும் சட்டபூர்வ உரிமை என்பது, மக்களை அடக்கியாளும் ஒரு வன்முறைக் கருவியே.

 

பொதுவான அடிப்படையான இந்த உள்ளடக்கம், சிலரின் நலன் சார்ந்த எல்லா ஆட்சி அமைப்புக்கும் (இன்று உலகின் எல்லா நாட்டுக்கும்) பொருந்தும். சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்களை குறிப்பாக்கி அவர்களை ஒடுக்கியபோது, தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தும் உரிமை தற்காப்புக்கானதாகவும், அவர்களின் உரிமையை பெறுவதற்காக போராடும் ஒரு கருவியாகவும் இருந்தது. ஆனால் மக்கள் ஆயுதம் ஏந்துவதை,  போராட்டம் சார்ந்து உருவான பாசிசக் குழுக்கள் அனுமதிக்கவில்லை. ஆயுதம் ஏந்திய இளைஞர் குழுக்கள் மனித உழைப்பில் இருந்து அன்னியமாகி, மக்களின் அடிப்படையான அன்றாட வாழ்வியல் நலன்களில் இருந்து விலகி கூலிக் குழுக்களாகவே வளர்ச்சியுற்றன. இப்படி வளர்ச்சியுற்ற குழுக்கள் மக்களை ஒடுக்கி சூறையாடிய போது, சூறையாடியவன் மக்கள் நலனுக்காக போராடியவனை அடக்கி ஒடுக்கினான். இந்த மக்கள் விரோதப் போக்கு பாசிசமாக வளர்ச்சியுற்ற நிலையில், சிங்கள இனவெறி அரசுக்கு நிகராக அதுவும் மக்களை அடக்கியொடுக்கி சூறையாடத் தொடங்கியது. தமக்கு அடங்கிப் போகக் கோரி, படுகொலைகளையும் தமிழ் தேசியப் போராட்டமாக்கினர். மக்கள் மேல் வரைமுறையற்ற வகையில் சூறையாடும் வரிகள், சாதிய ஒடுக்குமுறைகள், பெண்கள் மீதான காட்டுமிராண்டித்தனங்கள், மற்றைய இன மக்கள் மீதான வக்கிரமான படுகொலைகள் என மக்கள் நலன் சார்ந்த அனைத்தும் மீது, பாசிச காட்டுமிராண்டித்தனமே தேசிய விடுதலைப் போராட்டமாகின. இதுவே தமிழீழத் தாயகமாகியது. மக்கள் நலனை முன்வைத்து ஆயுதம் ஏந்துவது மக்களின் அடிப்படையான தேவையாக இருந்தது. இதுவே மக்களின் வாழ்வியல் மீண்டும் மீண்டும் கோரி நின்றது. இதற்காக அன்று முதல் ஆயுதம் ஏந்தியதை புலிப் பாசிசம் கொச்சைப்படுத்தி, படுகொலைகளை பரிசளித்தது. புலிப் பாசிசத்துக்கும், மற்றும் அரசுடன் கூடிக் குலாவும் துரோகக் குழுக்களுக்கும் எதிராக மக்கள் எழுச்சி பெறுவதையும், அவர்கள் ஆயுதம் ஏந்துவதையும் இட்டு புலிப் பாசிட்டுகள் முதல் துரோகக் குழுக்கள் ஈறாக கிலி கொண்டிருந்தனர். ஆயுதம் வைத்திருப்பவனுக்கு மரண தண்டனையை, பாசிட்டுகள் முதல் துரோகிகள் வரை பிரகடனம் செய்து அதை நடைமுறைப்படுத்தினர்.

குறிப்பு : ஆயுதங்கள் எதற்காக வாங்குகிறீர்கள்? என்று கேட்டனர்.

குறிப்பு : நீ ஆயுதப் பயிற்சி எடுத்தனியா? ஏன் இந்தியா சென்றாய்? எனக் கேட்டனர்.

விளக்கம் : நான் அரசை எதிர்த்துப் போராட என்று பதில் கூறினேன். அப்போது அவர்கள் கூறினர், தாம் போராடும் போது, நீங்கள் ஏன் போராட வேண்டும் என்றனர். நான் கூறினேன், உங்கள் போராட்டம் பிழையானது என்றேன். நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை முன் வைத்து அரசுக்கு எதிராக போராடுகின்றோம் என்றேன். நீங்கள் பணக்காரரின் நலனை முன்வைக்கின்றீர்கள் என்றேன்.

புலிகளுக்கு வழங்கிய பதிலுக்கு வெளியில், ஆயுதம் வாங்கியது அரசை எதிர்த்து மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கு எதிரான சக்திகளையும் எதிர்த்தும் போராடத் தான். இது தற்காப்பின் அடிப்படையில் இருந்து, ஆயுதம் ஏந்துவதின் முக்கியத்துவம் அன்று முதன்மையாக இருந்தது.

ஆயுதப் பயிற்சி எடுத்தியா என்று கேட்ட போது அவர்களிடம் இல்லை என்றேன். நான் பயிற்சி எதுவும் எடுக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் துப்பாக்கியால் சுடுவதற்கான ஆற்றல் என்னிடம் இருந்தது. நான் வெவ்வேறு ஆயுதங்கள் மூலம் சுட்டு, சுடும் ஆற்றலைப் பெற்று இருந்தேன். இந்தியா ஏன் சென்றாய் என்று கேட்டனர். நான் அங்கு பகிரங்கமான தொடர்புகளை பேணச் சென்றதாக கூறினேன். உண்மையில் பகிரங்கமான வேலைகளை நான் செய்த போதும், விசு இல்லாத நிலைகளில் அமைப்பின் பொறுப்புகளை பொறுப்பு ஏற்கவே சென்று இருந்தேன்.

குறிப்பு : ஒரு கட்ட விசாரணையின் போது கிட்டுவிற்கு குண்டு எறிய மட்டும் ஏலுமா? என்று திடீரென குற்றம் சாட்டினான்.

விளக்கம் : இடைப்பட்ட விசாரணையின் போது மாத்தையா இப்படிக் கூறி, எம்மை மிரட்டினான். நான் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களின் முன்பே, கிட்டுக்கு குண்டு எறியப்பட்டது. ஆனால் அதை தீப்பொறி எறிந்தது மிக அண்மையில் தான் தெரியவந்தது. இந்தக் குண்டை வீசியதே புலிகள் தான் என்று நாம் நம்பினோம். மாத்தையா பிரபா ஒன்றுபட்ட சதியின் மூலம், கிட்டுவைக் கொல்ல முயன்றனர். பிரபாகரன் தமிழகத்திலும், மாத்தையா வன்னியிலும் செயல்பட்ட காலத்தில், கிட்டு யாழ் பிரதேசத்தில் புலிகளின் பிரதிநிதியாக இருந்தான். போராட்டம் யாழ் மேட்டுக்குடிகளின் போராட்டமாக இருந்ததாலும், புலிகளின் அதிகாரம் வழமை போல் யாழ்குடா நாடு சார்ந்து இருந்ததாலும், கிட்டு புலியின் உத்தியோகபூர்வமற்ற "மேதகு" தலைவனானான். பிரபா, மாத்தையா என இருவரின் கட்டுப்பாட்டை எப்போதும் கிட்டு நிராகரித்தான். பிரபா மற்றும் மாத்தையாவின் தலைமைக்கு உரிய அதிகாரம் கேள்விக்குள்ளாகியது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் யாழ்குடாவுக்கும் நாட்டுக்கும் வந்ததுடன், கிட்டுவின் கதையையே முடிக்க முயன்றனர். குண்டு வீசி கொல்ல முயன்று, இறுதியில் கிட்டுவுக்கு கால் இழந்த நிலையிலும், அதிகாரத்தை அவர்கள் பறிக்க முடியவில்லை. கிட்டுக்கு கீழ் இருந்த ஐவர் கமிட்டி பலமானதாக அதிகாரம் கொண்டதாக இருந்தது. ஊத்தை ரவி, மதன், ரகிம் என ஐவர், கிட்டுவின் அதிகாரத்தின் தூண்களாக இருந்தனர். பின்பு இவர்கள் மிரட்டப்பட்ட தமது பதவியை ஒரே நாளில் ராஜினாமா செய்தனர். அத்துடன் நாட்டை விட்டு வெளியேறினர். அதிகாரத்தை மாத்தையாவிடம் ஒப்படைத்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறிய நிகழ்வை எனது வதைமுகாம் புலிகள், ஆடலும் பாடலுமாக கொண்டாடினர். இது நடந்த போது நான் அவர்களின் வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தேன்.

கிட்டுக்கு குண்டு வீசப்பட்ட அன்று 54 க்கு மேற்பட்ட கைதிகளை, தமது வதைமுகாமில் வைத்தே புலிகள் சுட்டுக் கொன்றனர். இது வெலிக்கடையில் சிங்கள காடையர்களின் படுகொலைக்கு நிகராக நடந்தது. இங்கு புலிப் பாசிட்டுகளின் வக்கிரம் வெம்பி வெளிப்பட்டது. புலிகள் தமது சித்திரவதையின் போது, "கிட்டுவுக்கு குண்டு வீச ஏலுமா" என்று கூறி மிரட்டுவதன் மூலம், கொன்று விடுவோம் என்ற பயங்கரத்தை ஏற்படுத்தி அச்சத்தை உருவாக்கினர். இதன் மூலம் சரணடைய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அக்காலத்தில் கிட்டு, மாத்தையா, பிரபா என்ற மூன்று பேரும் தமது தனிப்பட்ட அதிகாரத்துக்காக, தமக்கிடையில் ஒருவருக்கு எதிராக ஒருவர் ஆயுதத்தின் துணையுடன் போட்டியிட்டனர். இதில் ஒருவருக்கு எதிராக மற்றவருடன் கூட்டுச் சேர்வது என்ற வடிவில், புலிகள் சொந்த அணிக்குள் படுகொலைகளைச் செய்தனர். முன்னணி இராணுவ யுத்த முனையில் வைத்து, பின்னுக்கு நின்று பலரைச் சுட்டுக் கொன்றனர்.  இப்படிப் பல. 1985 இல் மாத்தையா, பிரபா மோதல் தீவிரமானபோது, இருவரும் பரஸ்பரம் தமது அதிகாரத்தை நிலைநாட்ட, கொலை செய்ய ஒரு குழுவை ஒருவருக்கு எதிராக மற்றவர் என இருவரும் அனுப்பினர். இந்த மோதல் உச்சத்தை அடைந்தபோது, பினாமி சிவத்தம்பியே மத்தியஸ்தம் செய்து வைத்தார். அதாவது நீங்கள் மோதினால், மற்றைய இயக்க அதிகாரம் உங்களை அழித்துவிடும் என்று கூறி மோதலை பின்தள்ள வைத்தார். புலிகளின் பாசிச அதிகாரத்தையே சிவத்தம்பி விரும்பி நின்றார். இந்தியா இடைக்கால நிர்வாக சபையை தீர்வாக வைத்த போது, தான் தான் முதலமைச்சர் என்று கூறித் திரிந்ததுடன், இதற்காக புலிகளிடம் மண்டியிட்டவர் அவர். இவர்கள் தான் யாழ் மேட்டுக்குடி சமூகத்தின் அறிவுஜீவிகள்.

43.புதியபாதை குமணன், ராகவன் பற்றி இரண்டாவது வதையின் இறுதியில் மாத்தையா - (வதைமுகாமில் நான் : பாகம் - 43)

42.எதிர்த்துப் போராடி மடிவது அல்லது புலிக்கு எதிரான இரகசிய ஆயுதம் ஏந்திய குழுவை உருவாக்குவது (வதைமுகாமில் நான் : பாகம் - 42)

41.ஊளையிட்டு கூச்சல் போடுவதற்கு அப்பால், இயற்கையான இயக்கத்தை நிறுத்த முடியாது - (வதைமுகாமில் நான் : பாகம் - 41)

40.அறைச் சுவரில் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களும், கிரனையிற் சிதறல்களும் - (வதைமுகாமில் நான் : பாகம் - 40)

39.சிலதைக் கூற, பயங்கரத் திருப்பம் என்று கூறிய சலீம் ..(வதைமுகாமில் நான் : பாகம் - 39)

38.  வதைமுகாமின் உள்ளே…(வதைமுகாமில் நான் : பாகம் - 38)

37.வதைமுகாமில் இருந்து தப்பிய பின் முதல் இரண்டு நாட்களில் எழுதப்பட்ட சிறு குறிப்புகளில் இருந்து (வதைமுகாமில் நான் : பாகம் - 37)

36.துருப்பிடித்த வாள்,கத்தி, கோடாலி மூலம், என்னைக் கடத்தியது புலிகளல்ல, என்.எல்.எவ்.ரி. என்று நிறுவிய புலிகள் (வதைமுகாமில் நான் : பாகம் - 36)

35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)

34.நான் மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்து கொண்டு, தகவல்களை கோரித் தாக்கினர் (வதைமுகாமில் நான் : பாகம் - 34)


33.கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? (வதைமுகாமில் நான் : பாகம் - 33)


32.மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்தவுடன் மூன்றாவது முறை வதைகள் தொடங்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 32)


31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31)


30.03.05.1987 – 06.05.1987 வரை இரண்டாவது வதை முகாமில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 30)


29. புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)


28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)


27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)


26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)


25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)


24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)