08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

குறுந்தேசிய இனவாதத்தை இனங்களுக்கிடையில் ஆழமாக்கி, இனங்களை பிளந்த தேர்தல்

பராளுமன்ற சாக்கடையில் புளுத்தெழுந்த பன்றிகள் அனைவரும், உலகமயமாதலை ஆதரித்து அதை நிறைவு செய்வதில் தம்மை ஒத்த கருத்துடையவர்களாக, முரண்பாடு இன்றி திகழ்கின்றனர். ஜனநாயகம், சுதந்திரம், வாக்குரிமை என அனைத்தும், மக்களின் தன்னிறைவான சுயபொருளாதாரம் என்ற தேசியத்தை அழித்து, உலகமயமாதலை நிறுவி பாதுகாப்பதை குறிக்கோளாக கொள்கின்றது.

 

 

ஜனநாயகம், சுதந்திரம் என்ற இரண்டுக்கும் காலத்துக்கு காலம் மனித பலியீட்டுடன் நடத்தும் கும்பாபிஷேக தேர்தல் திருவிழாகள் அண்மையில் நடந்தன. மனித இரத்தத்தை சாத்துப்படியாக சாத்தி பலன் பெறுவோர், பக்த கோடிகள் பலனடைய முடியும் என்று கூறி நடத்தும் தேர்தல் கூத்துகள், மக்களின் கோவணத்தையும் சாத்துப்படியாக்க கோருகின்றது. மூலதன ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாத்து விரிவாக்க, மக்களின் தன்னிறைவு பொருளாதாரத்தை எப்படி சூறையாடுவது எனக்கூடி விவாதிக்கும் பராளுமன்றமே, ஒரு சக்கடையாகவுள்ளது. விவாதிக்க கூடுபவர்கள் பன்றிகளாக இருப்பது, உலகுகெங்கும் விதிவிலக்கற்ற ஒன்றாகும். ஊழல், லஞ்சம், விலை பேசுதல், மக்களுக்கு பொய் வாக்குறுதிகள், பன்றிகளை விலைக்கு வாங்குதல், அடி உதை மிரட்டல், படுகொலை மூலமே, இந்த ஜனநாயகத்தை, சுதந்திரத்தை பாதுகாக்க சபதம் ஏற்பது பன்றிகளின்  பொதுப் பண்பாகும். இதன் ஒரு பகுதியாக அண்மையில் இந்த சக்கடை பன்றிகளின் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க நடத்திய தேர்தல் திருவிழாவில், 54 மேற்பட்ட உயிர்களை பலி கொடுத்து, 2550 மேற்பட்டவர்கள் அடி உதை மிரட்டல் சூடு... என்று எண்ணற்ற அபிஷேக வழிகளை கையாண்டனர். மக்களின் (சுதந்திரமான?) வழிபடும் உரிமை போல், வாக்கே தேவையான விருப்பமான ஆட்சியை ஜனநாயக பூர்வமாக தேர்வு செய்வதாக கூறி, நடக்கும் மோசடிகளை நம்பும் வரை, மக்கள் தமது கோவணத்தையும் பறி கொடுப்பது இந்த ஜனநாயகத்தின் சிறப்பான இயல்பும் பண்புமாகும்.

இந்த தேர்தலை பலரும் பலவிதமாக கூறி, அந்த சாக்கடைக்கு நறுமணத்தை தெளித்தனர். இடதுசாரியின் பெயரில் யூ.என்.பி முதலாளித்துவ கட்சியாக கூறி (2000 ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி 79 அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கியது. ஆனால் இடதுசாரிகளோ யூ.என்.பியே முதலாளித்துவ கட்சி என்று சொல்லி பிழைத்தனர்) அதை எதிர்த்து வாக்களிக்க கோரினர். புலிகள் இதை சமாதானத்துக்கும் யுத்தத்துக்குமான தேர்தல் என்று கூறி, சமாதானத்தை ஆதாரிக்க மறைமுகமாக கோரினர். Nஐ.வி.பி இந்த தேர்தலை உலக மயமாதலுக்கு எதிரானது என்றனர். இப்படி பலரும் பலவிதமாக கூறி, இந்த சாக்கடை நாற்றத்தில் புரண்டு ஏழும் கனவுடன், தேர்தல் வக்கிரத்தை பாதுகாக்கவும் ஆதாரிக்கவும் பின் நிற்கவில்லை. தேர்தல் திருவிழா என்றால் வன்முறை படுகொலை முதல் பொய்யான வாக்குறுதி ஈறாக இருக்கும் என்பது, இந்த ஜனநாயகத்தின் குறிப்பான சிறப்பான பண்பாகும் என்ற, ஒரு பராம்பரியத்தையும் சமூகமயமாக்கப்பட்டுள்ளது. இந்த சாக்கடை பராளுமன்றம், அதில் கூடி கூத்தடிக்கும் பன்றிகளின் நோக்கத்தையும் அதன் குறிக்கோளையும் அம்பலம் செய்து போராடாதவரை மக்கள் என்பதும், மக்களின் பெயரில் செய்யும் மோசடிகள் வரைமுறையற்றது. தேர்தல் திருவிழாவில் வன்முறை முதல் கள்ள புள்ளடி போடுவது வரை, எந்தக் கட்சியாவது அல்லது சுயேட்சை குழுக்களாவாது செய்யவில்லை என்றால், அதற்கான அடியாட்படைகளும் கள்ளப்பணமும் இல்லை என்பது தான் அதன் அகராதி. சாக்கடை பராளுமன்றமும் அதில் கூடிக் கூத்தாடும் பன்றிகளும் இணைந்து, மக்களின் வாழ்வியல் ஆதாரங்களை பாதுகாக்க முடியும் என்று கூறின், அதை விட மோசடியை இந்த ஜனநாயக பராளுமன்றம் தோன்றிய வரலாறு முதல் யாராலும் காட்டவும் முடியாது, நிறுவவும் முடியாது.

இந்த நிலையில் பல்வேறு பிரிவுகள் பலவிதமான காரணத்தைச் சொல்லி இந்த மோசடியில் ஈடுபட்ட போதும், இந்த கட்டுரையில் குறிப்பாக தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பின் மோசடி மற்றும் மறைமுகமாக இந்த கூட்டணியை ஆதரிக்க, புலிகள் தேர்தல் பற்றி குறிப்பிட்ட சமாதானத்துக்கும் யுத்தத்துக்கமான தேர்தல் என்ற விடையத்தை ஆய்வுக்கு உள்ளாக்குகின்றது. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு முன் வைத்து நடத்திய தேர்த் திருவிழாவைப் பார்ப்போம்;.

1. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும்.

2. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்.

3. யுத்தம் நிறுத்தப்படல் வேண்டும்.

4. வடக்கு - கிழக்கு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படவேண்டும்.

இந்த நான்கு அடிப்படை விடையத்தை அரசியலாக வைத்து, தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு பிறந்த கதையே தனிக் கதையாகிவிடுகின்றது. சந்திரிக்கா தலைமையிலான பொது ஜன ஐக்கிய முன்னணியின் பச்சை சிங்கள இனவாதத்துக்கும், புலிகளின் அரசியலற்ற குறுந்தேசிய இராணுவ கண்ணோட்டத்துக்கும் நடந்த விபச்சாரத்தில் தான், தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு புலிகளுக்கு கள்ளக் குழந்தையாக பிறந்த போதும், இந்து புராணங்கள் போல் இதுவும் புனிதமாகிவிடுகின்றது. இந்த புனிதம் சார்ந்து பிறந்த தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புக்கு பக்கபலமாகவும் வளர்ப்பு தந்தையாக ஏகாதிபத்தியம் இருக்க, தாய் சார்ந்து குறுந்தேசிய தமிழ் இனவாதமும் சீராட்டி வளர்த்த கதையும் தனிக்கதையாகின்றது. சந்திரிக்காவின் பச்சை சிங்கள இனவாதத்தின் தயவிலும், புலிகளின் அரசியல் வறுமையிலும்; உருவான தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு தாய் சார்ந்து வளர்வதால், எதிர்காலத்தில் தாயையும் இணைத்து அல்லது தான் சொந்தமாக விபச்சாரம் செய்யும் அளவுக்கு அபாயகரமாக ஒரு சக்தியாக எதிர்காலத்தில் இருப்பதை யாரும் தடுக்க முடியாது. இதை புலிகளின் விமர்சன அரசியலான குண்டுகளாலும், தடுத்து நிறுத்த முடியாது. புலிகளின் தியாக வரலாற்றை தனதாக்கிய தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு, அதையே விற்கத் தொடங்கி விட்டது.

1.தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும்.

2.தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்.

3.யுத்தம் நிறுத்தப்படல் வேண்டும்.

4. வடக்கு - கிழக்கு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படவேண்டும்.

இவற்றை அடிப்படையாக முன்வைத்து தமிழ் மக்களை அணிதிரட்டிய போதே, புலிக்கு சார்பாக வேஷம் போட்டபடி மக்களுக்கு எதிராக இருப்பது அதன் சிறப்பான அடிப்படையாக உள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரன் சுத்திவளைத்து முக்கி முனங்கி மாவீரர் செய்தியில் சொன்ன புதிய உலக ஆக்கிரமிப்பு நிலைமைகளுக்கு எதிரான கருத்தை, தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பானது நிராகரித்து, புலிகளின் பெயரில் வரவேற்கும் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர். அதாவது "மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்." என்ற அடிப்படையான உள்ளடக்கம், ஏகாதிபத்தியத்தை பாய் விரித்து விபச்சாரம் செய்ய அழைப்பதாகும்;. மூன்றாவது மத்தியஸ்தம் என்றால் என்ன?

புலிக்கும், அரசுக்கும் இடையில் மூன்றாவது தரப்பு எப்படி தலையிடும்? எதை அவர்கள் செய்வார்கள்? எப்படி செய்வார்கள்? இங்கு புலிகளும் அரசும் பேசும் போது, அவர்கள் அதை பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும், அபிப்பிராயத்தைச் சொல்லிக் கொண்டும் இருப்பதில்லை. மூன்றாவது மத்தியஸ்தம் என்பது உலகமயமாதலின் ஒரு அங்கமாக ஆக்கிரமிப்பாக உதித்து எழுந்தது, எழுகின்றது. அமைதியான உலக ஒழுங்கு, உலகமயமாதல் சுரண்டலுக்கான அடிப்படை நிபந்தனை. இந்த வகையில் உலகளவில் நடக்கும் வன்முறைகளை கட்டுப்படுத்துவது, அடக்கியொடுக்குவதும் உலகமயமாதலின் குறிப்பான தனியான செயலாகவும் பண்பாகவும் இன்று உள்ளது. இந்த நிலையில் போராடும் அமைப்புகளை முத்திரை குத்தி அடக்கியொடுக்கவும், மக்களை ஏமாற்றவும் சமாதான நாடகம் அவசியமாகின்றன. இந்த சமாதானம் போராடும் அமைப்புகளுக்கு ஆட்சி அமைப்பு சார்ந்து அற்ப எலும்புகளை வீசி வாலாட்ட வைப்பது அல்லது போராடும் ஒரு பகுதியை கௌவ வைத்து மற்றைய பகுதியை, சமாதானத்தின் எதிரியாக காட்டி அழித்தொழிப்பதும் சமாதானத்தின் மையமான குறிப்பான நோக்கமாக உள்ளது. இந்த இடத்தில் புலிகள் முற்றாக அல்லது பகுதியாக முரண்டு பிடித்து போராடின்;, தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பே ஏகாதிபத்திய உலகமயமாதல் வீசும் சமாதான எலும்புகளை கௌவி சூப்புபவர்களாக இருப்பதை எதிர்கால வரலாறு எம்மை ஏமாற்றாது.

சமாதானம் என்ற அடிப்படையில் பேச்சு வார்த்தையில் சம்மந்தப்படும் சிங்கள அரசு மற்றும் புலிகள் தரப்பை தாண்டி, மூன்றாவது தரப்பு தலையிடும் போது அது நேரடியாக உலகமயமாகிவிடுகின்றது. இதில் போராடும் அமைப்பு (புலிகள்) சார்ந்து மூன்றாம் தரப்பை கோரும் போது, தனக்கு தானே வேட்டு வைக்க அழைப்பதாகும். இங்கு நோர்வையா? அமெரிக்கவா? இந்தியாவா? அல்லது மற்றொன்றா? எனின், இவற்றுக்கு இடையில் எந்த வேறுபாடு இருப்பதில்லை. உலகளவில் உலகமயமாதல் தனக்கிடையில் வேறுபாட்டை ஒழிக்கின்றது. இதில் வேறுபாடுகள் அனைத்தையும் அரசுகள் கைவிட்டுவிட்டன. அரசுகள் உலக வங்கியினதும், ஏகாதிபத்தியத்தினதும் ஒரு அடியாள் கூலிப் படையாக மாறிவிட்டது. இந்த நிலையில் உலகளவில் போராடும் அமைப்புகளை ஒடுக்க, உலகளாவிய நாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் இன்றைய பொதுவான அம்சமாகியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது மத்தியஸ்தம் என்பது, இதில் யார் மூன்றாவது மத்தியஸ்த்தத்தை செய்ய முன்வந்தாலும் முடிவு ஒன்றுதான்;. அது உலகமயமாதல் ஒழுங்கில் அமைதியான சுரண்டலுக்கு ஏற்ற நிலமையை தகவமைப்பதே. இங்கு தன்னிறைவான சுய தேசியப்பொருளாதாரத்தை அழிப்பதே சமாதானத்தின் மையமான குறிக்கோளாக இருக்கும். இங்கு இனங்களுக்கிடையில் உலகமயமாதல் வீசும் எலும்புகளை பங்கிட்டு சூப்பக் கொடுப்பதே, இந்த மூன்றாவது மத்தியஸ்தத்தின் மையமான சமாதான வேடமாகும்;. இங்கு இந்த எலும்புகளை சமாதானமாக பங்கிடும் நாடுகளின் குறிப்பான சில பண்புகள், உலகமயமாதலின் நோக்கத்தை நிறைவு செய்யும் வேறுபட்ட அணுகு முறைகளின் ஒரு பகுதியாக மட்டும் உள்ளது. இந்த பண்பு பொதுவாக ‘நோர்வை’ எனின் முதலாளித்துவ ஜனநாயக அடிப்படையிலும், ‘இந்தியா’ எனின் நிலப்பிரபுத்துவ அடிப்படையிலும், ‘அமெரிக்கா’ எனின் ஏகாதிபத்திய அதிகார வடிவிலும் சில அணுகு முறையிலான பண்புகளில் வேறுபாடு வெளிப்படலாம். ஆனால் எடுக்கும் முடிவு என்பது, மூவரும் உலகமயமாதல் எல்லைக்குள் அதன் விரிவாக்க நோக்கத்துக்குள் ஒரே மாதிரியே எடுப்பர். இதில் சமாதானத்தை பேச்சு வார்த்தை மூலம் அல்லது ஆயுதம் மூலம் ஏற்படுத்தின், அப்போதும் அவர்களின் நோக்கமும் தீர்வின் எல்லையும் ஒன்றாகவே எப்போதும் இருக்கும். இந்த மூன்றாவது மத்தியஸ்தத்தை யார் எப்படிச் செய்யினும், அவர்கள் இரண்டு தரப்புக்கிடையில் கையெழுத்திடும் உலகமயமாதல் எல்லைக்குள்ளான நோக்கத்தை அமுல் செய்யும் அதிகாரத்தை இயல்பாக பெற்றுவிடுவர். இது உலகமயமாதலை விரிவாக்க காலத்துக்கேயுரிய பொதுவான உத்தியும் விளைவுமாகும். உலகமயமாதல் அங்கீகரிக்கும் சமாதானத்தை கண்காணிக்க, அழுல் படுத்த மூன்றாவது மத்தியஸ்தம் அதிகாரத்தை பெறுகின்றது. சர்வதேச உலமயமாதல் படைகளை "மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்." என்ற கோரிக்கை ஊடாகவே, இலங்கைக்குள் இயல்பாகவே கொண்டு வந்துவிடும். இது மாவீரர் செய்திக்கு முற்றாக முரணானது. அத்துடன் இந்த மத்தியஸ்தம் நடக்கும் போது, தமிழ் தரப்பில் இருந்தே இந்த சர்வதேச படையை கொண்டு வரும் கோரிக்கை வருவது இயல்பாக இருக்கும். காலாகாலமாக தமிழ் மக்கள் சிங்கள இனவாதிகளால் ஏமாற்றப்பட்ட வரலாற்று தொடர்சியை சுட்டிக் காட்டி, கையெழுத்திடும் ஒப்பந்தத்தை சிங்கள அரசு அமுல் செய்யாது என்ற காரணத்தை முன் வைத்தே, ஒப்பந்தத்தை அழுல் செய்யும் அதிகாரத்தை சர்வதேச ஏகாதிபத்திய படைகளிடம் வழங்குவது, போராடும் அமைப்பு சார்ந்து கோருவதன் ஊடாக நிகழும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும், யுத்தம் நிறுத்தப்படல் வேண்டும், வடக்கு - கிழக்கு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும். என்ற கோரிக்கை இயல்பாக புலிக்கு சார்பானதாக இருந்தாலும், இதை அரசு நடைமுறைப்படுத்துவது இலகுவானது. கடந்த காலங்களில் பொருளாதாரத் தடை நீக்கம், யுத்த நிறுத்தம், புலிகளுடன் மட்டுமான பேச்சு வார்த்தை எல்லாம், இந்தக் கோரிக்கையைத் தாண்டி நடக்கவில்லை. புதிதாக புலிகளின் தடையை நீக்க வேண்டும் என்பது இணைந்துள்ளது. இது முன்பும் வைக்கபட்ட போதும் நிபந்தனையாக இருக்கவில்லை. இன்று இதன் மூலம் சர்வதேச தடையை தகர்க்கலாம் என்பது, இதன் குறிப்பான நோக்கமாகின்றது. சர்வதேச தடைக்கும், இலங்கையின் தடைக்குமிடையில் உள்ள இடைவெளி புரிந்து கொள்ளாமல் முன் வைக்கின்றனர். பேச்சு வார்த்தைக்கு தடையாக இல்லாத வகையில், பேச்சு வார்த்தையின் போது தற்காலிகமாக புலிகளின் தடையை அரசு நீக்க தயாராகவே இருக்கும். ஆனால் சர்வதேசத் தடையை இது மாற்றியமைக்காது. சுர்வதேசத் தடைகளை ஒரு நிரந்தர உலகமயமாதல் சமாதானமின்றி, தற்காலிகமாகக் கூட மாற்றியமைக்காது. இந்த தடையை நீக்கக் கோருவது ஒன்றும் தமிழ் மக்கள் சார்ந்த அடிப்படையான தேசியம் சார்ந்த முக்கிய கோரிக்கையல்ல. தடை நீக்கத்துக்காக எமது தேசிய தன்னிறைவு பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியப் பொருளாதாரத்தை அழிப்பதற்கு, ஏகாதிபத்தியத்துக்கு சலுகை வழங்க வேண்டும்;. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சு வார்த்தை என்பது, எமது தேசியத்தை அடக்கியொடுக்க ஏகாதிபத்தியத்துக்கு கம்பளம் விரிப்பதாகும்;. இதை எந்த அரசியல் அடிப்படையுமற்ற வெற்றுக்கோச அனாதைகள், தமது அரசியலாக்கி தமிழ் மக்களை அதன் பின் அணிதிரட்ட முடிந்தது, எமது வரலாற்றில் மற்றொரு தற்கொலையாகும்.

இந்த தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு என்ன என்பதை, ஏகாதிபத்தியத்துடன் புனித கூட்டை வைத்து தேசியத்தை திரித்து பிழைக்கும், கிறிஸ்துவ வெரித்தாஸ் வானொலி ஜெகத் கஸ்பர் ராஜ் கூறுவதில் இருந்து தெளிவாக புரிந்து கொள்ள முடியும். வெரித்தாஸ், மற்றும் ஐ.பி.சி  வானொலியிலும், ஈழநாடு (9.11.2001) பத்திரிகையிலும் "இன்று தமிழ் மக்களினுடைய பிரச்சனைகள் தமிழ் மக்களின் அடிப்படையான அடையாளம், அவர்களது சுயமரியாதை, அவர்களது மொழி ஒரு சமூகமாக அவர்களுக்குள்ள அரசியல் இறைமை, அவர்களது வாழும் உரிமை, அவர்களது தாயகம் ஆகியவைதான் இன்றைய அரசியல் சிக்கலின் மூலாதாரங்கள்" என்கின்றார். இதையே புலிகள் உட்பட தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு ஈறாக, தமிழ் மக்கள் சார்பாக பேசுகின்ற அனைவரும் முன்வைக்கின்றனர். இதையே தமிழீழ மக்கள் கட்சியும், தமிழீழ புதிய ஜனநாயக கட்சியும் இதைத் தாண்டி எதையும் கோரவில்லை. இந்தக் கோரிக்கையை மூன்றாவது மத்தியஸ்தம் சார்ந்து ஏகாதிபத்தியத்தை ஏற்பதில் எந்த முரண்பாடும் இருக்கப்போவதில்லை. இந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ் குறுந்தேசிய இனவாதிகள் முதல் ஏகாதிபத்தியம் மற்றும் கிறிஸ்தவ புனிதங்கள் வரை, தமிழ் மக்களின் தேசிய போராட்டத்தை விளக்கி தேசிய அடிப்படையை சிதைத்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் தேசியம் என்பது என்ன? தமிழ் குறுந்தேசிய வாதிகள் தொடங்கி ஏகாதிபத்திய புனித கூட்டைக் கொண்ட ஏகாதிபத்தியம் தேசியம் பற்றி கூறுவதற்கு அப்பால், தமிழ் தேசியம் என்பது தன்னிறைவான தேசிய பொருளாதாரத்தை, தமிழ் மக்கள் தமது மூலதனத்தை ஆதாரமாக கொண்டு தமது உழைப்பை கொண்டு நிர்மாணிப்பதே. இதன் மேல் தனது மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிலத்தொடர் சார்ந்து, தம்மைத் தாம் ஆளும் அரசின் மேல் கலாச்சார பண்பாட்டை கட்டமைப்பதே தேசியமாகும். சிங்கள இனவாத அரசுகளும், ஏகாதிபத்தியமும் தமிழ் மக்களின் தன்னிறைவான பொருளாதார தேசிய வளத்தை அழித்தும், அந்த மக்களின் உழைப்பை சுரண்டி கொள்ளையிட்டே, தேசியத்தின் அடிப்படை உள்ளடக்கத்தை அழிக்கின்றன. ஒரு தேசத்தில் எதை சிங்கள இனவாதிகளும், எகாதிபத்தியமும் அழித்து சுரண்ட முனைகின்றது. உண்மையில் தேசிய வளங்களையும், அந்த வளங்கள் மேலான மக்களின் உழைப்பையும் தான். இதை புலிகள் உட்பட ஏகாதிபத்தியம் வரை மறுப்பதால், எமது தேசியம் விலை பேசப்படுகின்றது. மக்களின் அடிப்படை உரிமை மீது துரோகமிழைத்த தரகுகளாகவும், சுரண்டல் வாதிகளாகவும் உலவும் கடைந்தெடுத்த பராளுமன்ற பன்றிகள் முதல் ஏகாதிபத்திய புனித கூட்டில் உலகில் உயிர்த்திருக்கும் கிறிஸ்துவ சாத்தான்களும், தமிழ் மக்களின் அடிப்படை தேசிய உரிமையை கொச்சைப்படுத்தி ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமை நாயாக வாழ "இன்று தமிழ் மக்களினுடைய பிரச்சனைகள் தமிழ் மக்களின் அடிப்படையான அடையாளம், அவர்களது சுயமரியாதை, அவர்களது மொழி ஒரு சமூகமாக அவர்களுக்குள்ள அரசியல் இறைமை, அவர்களது வாழும் உரிமை, அவர்களது தாயகம் ஆகியவைதான் இன்றைய அரசியல் சிக்கலின் மூலாதாரங்கள்"  என்று மக்களின் உரிமைகளை திரித்துக் காட்டுகின்றனர். தமிழ் மக்கள் யார்? அல்லது யார் தமிழ் மக்கள்?

விவசாயத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்ட அதே நேரம், சிறுகைத் தொழில் உற்பத்தியையும் அடிப்படையாக ஆதாரமாகவும் கொண்ட ஒரு சமூகமாக இயங்குகின்றது. அத்துடன் மூளை உழைப்பு சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களைக் கொண்டே, எமது இனம் நீடிக்கின்றது. இதற்கு வெளியில் பல்வேறு சமூக முரண்பாடுகளை கொண்டிருந்த போதும், ஒரு இனமாக நீடிக்கின்றது. இந்த உழைக்கும் மக்கள் தமது தேசியம் சார்ந்து விவசாயத்தை பாதுகாக்கவும், சிறுகைத் தொழில்களை பாதுகாக்கவும், அதன் மேலான உழைப்பின் வளத்தை பேணவும், விவசாயம் சார்ந்த அன்னிய இறக்குமதிகளைத் தடை செய்யவும், சிறு கைத்தொழிலை அழிக்கும் இறக்குமதிகளை தடைசெய்யும் வகையில் தேசியம் கட்டமைக்கப்பட வேண்டும். தேசிய உற்பத்திகள், கைத் தொழில் முயற்சிகள், தேசிய தொழிற் சாலைகள் பெருகும் வகையில், தேசியம் மக்கள் உற்பத்தி அதனுடன் இணைந்த உழைப்பு சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்;. அத்துடன் தேசத்தில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவையை அடிப்படையாகக் கொண்டு, உற்பத்தி மறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்;. அமெரிக்காவில் உள்ள சீமைப் பன்றிகளுக்கு தேவையானது எதுவோ, அதை உற்பத்தி செய்வது என்ற கண்ணோட்டம் மறுதலிக்கப்பட வேண்டும். அது போல் அமெரிக்க ஏகாதிபத்திய சீமான்கள் சீமாட்டிகள் சொகுசாக வாழ்வதற்காக, எமது தேசியத்தை அழிக்கும் இறக்குமதிகள் தடை செய்யப்பட வேண்டும்;. மக்களுக்காக, அவர்களின் வாழ்வுக்காக, அவர்களின் உற்பத்திக்காக, அவர்களின் உழைப்புக்காக, போராடுவதே தேசியம். இது மக்களின் தன்னிறைவை பூர்த்தி செய்யும் அடிப்படை உற்பத்தி மற்றும் உழைப்பை பாதுகாத்து தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும். இது புலிகளின் புலித் தேசியத்துக்கு பதில், மக்கள் தேசியத்தை ஆயுதபாணியாக்கும்;. புலித் தேசியத்தின் பின் தொங்கிக் கொள்ளும் ஏகாதிபத்திய எட்டப்பர்கள் முதல் புனித கத்தோலிக்க பிழைப்புவாதிகள் வரையிலான, அனைத்து மக்கள் விரோதிகளையும் தெளிவாக தோலுரித்து, போராட்டத்தை துரோகத்தில் இருந்து பாதுகாக்கும். தமிழ் மக்களின் தேசியம் என்பது அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனையுடன், தெட்டத் தெளிவாகவே தொடர்புடையது. இதைப் புரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ள மறுப்பவர்கள், மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய அடிப்படை தேசியப் பிரச்சனை மீது போராட்டத்தை முன்னெடுக்காத வரை, அப்போராட்டம் புலியின் போராட்டமாக சீரழிந்து கொண்டிருப்பதை யாரும் தவிர்க்க முடியாது.

இந்த நிலையில் "தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும். யுத்தம் நிறுத்தப்படல் வேண்டும். வடக்கு-கிழக்கு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படவேண்டும். என்ற கோரிக்கை தமிழ் மக்களின் பிரச்சனையை எப்படித் தீர்க்கும்? புலிகளின் தனிபட்ட சில நலன்களுக்கு இவை தீர்வு தரலாம். ஆனால் தமிழ் மக்களின் நலனுக்கு இது எந்தத் தீர்வு தரப்போவதில்லை. தமிழ் மக்களை இந்த கோரிக்கையின் பின் அணிதிரட்டிய என்பது, உண்மையில் மக்களை கேலிக் கூத்தாக்குவதே நடந்தது. புலிகளுடன் மட்டும் பேசி இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு கூறுகின்றது. இது சாத்தியம் இல்லை. ஏனெனி;னல் புலிகள் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பல உண்டு. முஸ்லீம் மக்களுக்கான தீர்வு முதல் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை வரை புலிகள் இது வரை தீர்க்கவில்லை. மாறாக புலிகள் ஜனநாயக விரோத அரசியலை அதன் ஆணையில் வைத்துள்ளனர். இதைத் தாண்டி தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை தீர்க்க முனைவதன் மூலம், புலிகளுடன் மட்டும் பேசி பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்கின்றனர். அரசு இதை செய்ய மறுப்பதால் தான், தாம் இதை அரசியலில் முன்வைப்பதாக முழங்கும் அவர்கள், நடக்கப் போகும் பேச்சு வார்த்தையை புலிகள் குழப்பினால் அல்லது புலிகளின் அணுகு முறையில் முரண்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த கேள்வியை எந்த நபரும் எழுப்பவுமில்லை. அதேபோல் அவர்களும் எழுப்பி இதுவரை பதில் தரவுமில்லை. இது கண் மூடி பால் குடித்த பூனையின் கதை போல், தமிழ் மக்களை அறிவியல் இருட்டில் நிலைநிறுத்தி பிழைப்பதாகும். இதைத் தாண்டி தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது என்பதும், பராளுமன்ற சாக்கடைக்கு 15 பன்றிகளை அனுப்பியது ஒரு மோசடியாகும்;. இலங்கையில் நடக்கும் யுத்தத்துக்கு தீர்வு காண எடுக்கும் முன் முயற்சிக்கு புலிகளின் தடை நீக்கப்படுவதும், புலிகளுடன் (மட்டும்) பேசுவது, பொருளாதார தடை நீங்குவது, யுத்தத்தை நிறுத்துவது என்பது, அடிப்படையானது. இது அனைவருக்கும் தெரிந்த விடையமே. இதை வைத்து கோசமெழுப்பி, தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கத் தேவையில்லை. ஜரோப்பாவில் புலிகள் நடத்தும் ஊர்வலங்களில், எமது தலைவர் பிரபாகரன் என்று கோசம் எழுப்பவதன் மூலம் எதைச் சொல்ல முனைகின்றனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் என்பதை யாரும் மறுத்தார்களா?  இல்லையெனின் புலிகளுக்குள் போட்டி தலைமை உள்ளதா? இல்லையெனின்   அதை முன்வைப்பது கேலியாகிவிடுகின்றது. அதுபோல் பேச்சு வார்த்தைக்கு வைக்கும் நிபந்தனைகள் உள்ளன. பேச்சு வார்த்தை ஒன்று நடக்குமாயின், இந்த கோரிக்கைகள் நிறைவு செய்யப்படுவது இயற்கையானது. கடந்த போன பேச்சு வார்த்தைகள் கூட இந்த எல்லைக்குள் தான் நிகழ்ந்தன. இனியும் அப்படித்தான் நடக்கும்;. இதற்கு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு என்ற விபச்சாரப் பிறப்பு அவசியமற்ற ஒன்றாகும். இது புதிய காட்டிக் கொடுப்புக்குரிய தயாரிப்பை செய்ததாகும். முந்திய துரோகத்தை மிஞ்சும் ஒரு வரலாற்றை உருவாக்கி கொடுத்ததாகும்;. இந்த துரோகம் முந்திய வரலாற்றைப் போலன்றி கட்டுப்படுத்த முடியாத சர்வதேச ஆதரவுடன், அதன் ஆசியுடன் உருவாகியுள்ளது. இங்கு புலிகள் அற்ப நலன்களை அடைய இதற்கு மறைமுகமாக முண்டு கொடுத்தது, மக்களுக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் இழைத்த ஒரு வரலாற்று துரோகமாகும்.

பேச்சு வார்த்தை மேடையை உருவாக்குவதன் மூலம் புலிகள் சில பொருளாதார சலுகைகைளை உடன் பெறவும், ஈ.பி.டி.பி தமிழ் மக்கள் மத்தியில் பெற்று வந்த செல்வாக்கை முறியடிக்கவும், இந்த தேர்தலை புலிகள் ஆயுதமாக கருதி மறைமுகமாக ஆதரித்தனர். ஆனால் புலிகள் இம்முறை இதை சாதிக்க முடியாது. இம்முறை பேச்சு வார்த்தை ஏகாதிபத்திய தலையீட்டுடன், ஏகாதிபத்திய உலகமயமாதல் விரிவாக்க தேவையுடன் தொடர்புடையதாக பேச்சு வார்த்தை தொடங்கும். இந்த நிலையில் புலிகள் குறுகிய நலன்களுடன் தம்மை முன்னிறுத்தி முரண்டு பிடித்தால் ஈவிரக்கமற்ற வகையில் அம்பலப்படுத்தி அழிக்கப்படுவார்கள். இதை எதிர் கொள்ளும் வகையில், புலிகளின் அரசியல் கண்ணோட்டமே இவர்களுக்கு எதிராக உள்ளது. மக்களின் அடிப்படை கோரிக்கையுடன் பேச்சு வார்த்தை நடத்தவும், அதை நோக்கி சர்வதேச சமூகத்தை அணிதிரட்டவேண்டும்;. அதை விடுத்து பொருளாதார தடையை நீக்குவதன் மூலம், பொருட்களை கொண்டு வரவும், சர்வதேச ரீதியாக ஆயுதங்களை கொண்டு வரவும் பேச்சு வார்த்தையை தந்திர உபாயமாக புலிகள் அரசியலை நகர்த்தின், அது அவர்களுக்கே மண்ணை அள்ளிப்போடும். அத்துடன் தேசிய பொருளாதாரம் ஊடாக தன்னிறைவு பொருளாதாரம் என்ற கொள்கையை மறுதலிக்கின்றது. எப்போதும் சுய தன்னிறைவான தேசியப் பொருளாதாரமே தேசியத்தின் மையக்கூறு. இது போராட்டத்திலும் சரி பேச்சு வாhத்தையிலும் சரி இதுவே அனைத்திலும் மையமானதும் முதன்மைக் கூறுமாகும்; இதில் இருந்தே அணைத்தையும் திட்டமிடவும், கோரவும் வேண்டும்;.  ஈ.பி.டி.பி என்ற துரோக குழுவின் கைக்கூலி அரசியல் செல்வாக்கு என்பது, புலிகளின் அரசியல் வறுமையில் இருந்து உருவாகின்றது. ஈ.பி.டி.பி பொருளாதார உதவிககளை கொடுப்தன் மூலமும், புலிகளை விட மக்களின் உறவை கையாளும் அணுகு முறையிலும், தாழ்த்தப்பட்ட மக்களின் உறவாக்கத்திலும் இருந்தே அரசியல் செல்வாக்கை பெற முடிகின்றது. குறிப்பாக ஈ.பி.டி.பி யில் உள்ள முக்கிய ஒரு சில தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை முன்னிறுத்தி, கடந்த காலத்தில் போராடியவர்கள்;. இந்த மக்களின் கணிசமான செல்வாக்கை ஈ.பி.டி.பி பெற்றுள்ளது. வரலாற்று ரீதியாக புலிகள் தமிழ் மக்களின் தன்னிறைவு தேசிய பொருளாதாரத்தை ஊக்குவித்து தேசிய பொருளாதாரத்தை வளர்க்காமையே, அரசு மற்றும் ஏகாதிபத்தியத்திடம் கைக்கூலியாகி பெற்று வழங்கும் ஈ.பி.டி.பியின் பொருளாதார உதவிக்கு, மக்கள் சரணடைகின்றனர். அத்துடன் தமிழ் மக்களின் ஜனநாயகத்தை, அவர்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை அடக்கியொடுக்கியும்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான உயர் சாதிய அடக்குமுறையுடன் கூடிய நீரோட்டம் சார்ந்த கண்ணோட்டம், புலிகளின் அரசியல் வறுமையை மேலும் ஏழ்மையாக்குகின்றது.

இந்த ஏழ்மையை பயன்படுத்தி கிறிஸ்துவ குழுக்கள் முதல் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு வரை, புலிகளின் தியாகத்தைத் தாண்டி அரசியலில் செல்வாக்கு பெற முடிகின்றது. இது புலிகளை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி, அரசியல் அதிகாரத்தை நோக்கி நடைபோடுகின்றது. தேசிய சுய தன்னிறைவு பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு, தமிழ் மக்களின் சிந்தனை செயல் அனைத்திலும் மாற்றம் கொண்டு வர வேண்டிய தேசிய பொறுப்பை, புலிகள் என்றுமே அவர்களின் போராட்ட வரலாற்றில் செய்ததில்லை. இதுவே புலிகளை அரசியலில் அனாதையாக்குகின்றது. புலிகளின் அரசியல் ஏழ்மையை போக்க, பினாமிகள் அவசியமாகின்றனர். இந்த பினாமிகளே புலிகளின் அரசியல் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கட்டமைத்து, புலிகளை அந்த வலைக்குள் கட்டிவிடுகின்றனர். இந்த பினாமியாக தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு முதல் புனித ஏகாதிபத்திய கூட்டைக் கொண்ட கிறிஸ்தவம் வரை, நாற்றம் கண்ட வகையில் தேசியத்தை விளக்கி புலிகளின் கோட்பாட்டாளராகின்றனர். இந்த மக்கள் விரோத பினாமி அரசியலையே புலிகளுக்கு கோட்பாடாக்கி, தலைகீழாக்கி புலிகளையே ஏற்க வைக்கின்றனர்.

புலிகளை வானளவு தலையில் உயர்த்தி புகழ்ந்தபடி கையாளும் பினாமி அரசியல் விபச்சாரம், தமிழ் மக்களின் சுயபொருளாதாரத்தை அழிக்கவும், அதற்கு இசைவான வகையில் தேசியத்தை வரையறுக்கவும் திட்டமிட்டே இயங்குகின்றனர். திட்டமிட்டே "மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்." என்று கூறுவதன் மூலம், ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கத்தை பாய் விரித்து அழைக்கின்றனர். தேர்தலுக்கு முன் கூட்டமைப்பு உருவானவுடன், அமெரிக்கா அழைக்க ஒடோஓடோடிச் சென்று வாலாட்டி குரைத்து விசுவாசத்தை காட்டினர். தேர்தல் முடிந்தவுடன் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு ஏகாதிபத்திய விசுவாசத்துடன், இந்தியா, அமெரிக்காவுடன் கூடிக்குலாவிய படி சதிகளைத் தொடங்கிவிட்டனர்.  இதில் கூட தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு உள்ள முரண்பாடுகள் தெளிவுபடவே, இந்த கைக்;கூலித்தனத்தை வெளிக் கொண்டு வருகின்றது. புலிகளின் பெயரில் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு நடத்திய தேர்தல் கூத்தில், தமது கடந்த கால நடத்தைகளையிட்டு எந்த சுயவிமர்சனத்தையும் நடத்தியது இல்லை.

"சோறா சுதந்திரமா?" என்று 1977 இல் இதே போன்ற தேர்தல் திருவிழா ஒன்றில், தமிழ் மக்களின் வாக்குகளை ஆபாசமாக கவர்ந்தவர்கள், சோறையும் கொடுத்தில்லை. சுதந்திரத்தையும் கொடுத்தில்லை. ஆனால் பதவி சுகத்தில் சொக்கிப் போய், சொத்து சேகரித்தது முதல் தேசிய எல்லை கடந்து வெளிநாடுகளில் தம்மையும் தமது குடும்பத்தையும் சொகுசாக வாழ இந்த தேர்தல் உதவியது. "சோறா சுதந்திரமா?" என்ற கேள்வியால் உந்தப்பட்ட இளைஞர்கள் சுதந்திரத்துக்காக போராடிய போது, அவர்களை காட்டிக் கொடுக்கவும் பின்நிற்கவில்லை. இளைஞர்களின் போராட்டம் தேர்தல் மூலம் பெற்ற அதிகாரத்தை, பதவிகளை எல்லாம் ஆட்டம் கண வைத்தன. இந்த ஆயுதம் எந்திய சுதந்திர வேட்கையை தடுத்து நிறுத்த, அவசரம் அவசரமாக இந்தியா அரசின் துணையுடன், அமிர்தலிங்கம் தனது மகனின் தலைமையில் உருவாக்கிய ஆயுதம் ஏந்திய ரெனா (வுநுNயு) இயக்கம், எல்லா இயக்கம் போல் நடத்திய மக்கள் விரோத நடவடிக்கைகள் பல. இது போன்று நான்கு கட்சிகளும் மக்களுக்கு செய்யாத துரோகம், வராலாறால் மூடிமறைக்க முடியாது. ஏமாற்றி பிழைப்பது, மோசடியுடன் கூடிய கைக் கூலித்தனம் முதல் பச்சை துரோகம் வரையிலான நடத்தைகளே, அவர்களின் அரசியல். இந்த அரசியலில் எந்த மற்றத்தையும் அவர்கள் இம்மியும் கூட செய்யவில்லை. சர்வதேச நிலைமையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, தமது துரோகத்துக்கும் கைக் கூலித்தனத்துக்கும் இசைவாக தமது கோசங்களை மாற்றி களமிறங்கியுள்ளனர்.

கடந்த காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களி;ன் விடுதலை, சுதந்திரம் என்ற கூறி, வாக்குவேட்டையாடிய சுகபோகமாக வாழ்ந்த அந்த மோசடியை பற்றி ஒரு வார்த்தை கூட, தமிழர் விடுதலைக் கூட்டணி பேசவில்லை. இலங்கை இந்தியா அரசுடன் கூடிக் குலாவிய படி ஏகாதிபத்திய தரகுகளாக செயற்பட்டு தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகத்தை பற்றி, ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இளைஞர்களின் போராட்டத்தை சிதைக்க மாகன அபிவிருத்திச் சபையை தமிழ் மக்களின் தீர்வாக ஏற்று, தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து 1981 இல் இதற்கான தேர்தலில் குதித்த வரலாற்று துரோகத்தை பற்றி, ஒரு வார்த்தை கிடையாது. இந்தியா அரசுடன் கூடிக்குலாவி படி இயக்கங்களின் கைக் கூலிக்கு உடந்தையாக இருந்ததுடன், இந்தியா ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தெரிவித்து தனது கைக் கூலித்தனத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்படி அடுக்கடுக்காக பல வரலாற்று துரோகங்கள் கூட்டணியின் துரோக அரசியல் வரலாறக நீள்கின்றது.

ரெலோ இந்தியக் கைக்கூலியாக ஆயுதம் ஏந்தி வளர்ந்த, வளர்ப்பு பிள்ளையாகும்;. இந்தியா அரசால் ஏவி விடப்பட்ட அனைத்து பாசிசத்தையும் மானவெட்கமின்றி, தமிழ் மக்கள் மேல் ஏவியவர்கள்;. தாழ்த்தப்பட்ட மக்கள் முதல்  இந்தியா எதிர்ப்பாளர்களை வேட்டை ஆடுவது வரை, தனிச் சிறப்பாக ஒடுக்கியவர்கள். இந்தியா கைக் கூலித்தனத்தை மெய்பிக்க சீக்கிய போராட்டத்தை ஒடுக்கி, பல படு கொலைகளில் ஈடுபட்ட அந்த பன்றித் தனத்தை இவர்கள் என்றுமே சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இந்தியா இலங்கை கைக்கூலியாக செயற்பட்ட இவர்கள், தொடர்ந்தும் கைக்கூலியாக செயற்படும் வகையில் ஆயுதம் ஏந்த தயரான வகையில், புதிய இளைஞர்களை இணைத்து பல முகங்களை இராணுவ பாதுகாப்புடன் புலிகளின் எல்லைகளில் தொடர்ந்தும் வைத்துள்ளனர். வன்னிக்குச் செல்லும் பொருட்களுக்கு வரி விதித்தும், கப்பம் வாங்கியும் இயங்கும் மக்கள் விரோத சட்டவிரோத குழுவாக நீடிக்கின்றது.  இன்றும் இந்தியாவே இவர்களின் வளர்ப்பு தந்தையாக இருப்பது ஒன்று புதிய விடைமல்ல.

ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரேமச்சந்திரன் அணி 1987 இல் இந்தியா இராணுவத்தின் வருகையுடன், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்தவிட்ட கைக்கூலித்தன படுகொலைகள் மற்றும் கற்பழிப்புகளின்  மனித விரோத வரலாறு, புலிகளின் அரசியல் வறுமையினால் கருத்துச் சுதந்திர மறுப்பினாலும் எழுதப்படவில்லை. தமிழ் தேசமே கற்பழிக்கப்பட்ட அந்த வரலாற்று கதநாயகனான பிரேமச்சந்திரனும் அவரின் அணிக்கும் புது அவதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. வரதர் அணிதான் இந்த குற்றத்துக் காரணம் என்ற பூச்சூட்டுகின்றனர். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் வரலாற்றில், நாபா உண்மையில் இயக்க தலைவர் அல்ல. நாபா ஒரு பொம்மைதான்;. அவர் ஒரு கௌவுரவத் தலைவராக நெயற்பட்டவர். அனைத்தும் பிரமச்சந்திரனே திட்டமிட்டு செய்தான். இந்தியா கைக் கூலித்தன அரசியல் முதல் அனைத்து எடுபிடி நடத்தை அனைத்துக்கும் பிரமச்சந்திரனே நேரடி வழிகாட்டியாக செயற்பட்டவர். இங்கு வரதராஜபெருமாள் பிரமச்சந்திரனால் ஆட்டுவிக்கப்பட்ட ஒரு ரவுடிதான்;. வரதராஜபெருமாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் மத்தியகுழு உறுப்பினராக கூட இருந்தவன் அல்ல. இந்தியா கைக் கூலியாக ஈ.பி.ஆர்.எல்.எவ் களத்தில் இறங்கிய போது வரதராஜபெருமாள் அதைச் செய்ய தகுதியான ஒரு நபராக  இருந்த காரணத்தினால், பிரமச்சந்திரனால் முன்னிலைப்படுத்தி கொண்டு வரப்பட்டவன். இந்தியா ஆக்கிரப்பை கைவிட்டுச் செல்லும் அளவுக்கு, இலங்கை மற்றும் புலியின் நிர்ப்பந்தால் வெளியேறிய போது ஈ.பி.ஆர்.எல்.எவ்ம் அதிகாரம் இழந்தது. இந்த நிலையிலும் இந்தியா அதிகார வர்க்கம் புதிய ஆக்கிரமிப்புக்கு தயார் செய்யும் வகையில், வருடம் இரண்டு கோடி இந்தியா ரூபா செலவு செய்து வரதராஜபெருமாள் பாதுகாத்தனர். கால ஒட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இழந்த வாழ்வின் சொகுசுகளை தக்கவைக்கும் அதிகார போட்டி, உள் முரண்பாடாக வெடித்து. ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் அனைத்து துரோக தலைவர்களும் தனிப்பட்ட சொத்துகளை பல லட்சம் செலவில் இந்தியாவில் வாங்கி கொடுத்தனர். அந்த சொத்து பகிர்விலும் (இந்த சொத்து பகிர்வில் நாபாவின் மனைவியும், மனைவி குடும்பம் கூட போட்டியிட்டது) எற்பட்ட முரண்பாடுகளிலும் இணைந்தே, ஈ.பி.ஆர்.எல்.எவ் உடைந்தது. இன்றும் வரதர், பிரேமச்சந்திர அணியின் முரண்பாடு கடந்து, இந்திய கைக்கூலிக்கு வௌ;வேறு அளவில் விசுவசமாக இருக்கவும் செயற்படவும் தயாராக உள்ளனர். பிரமச்சந்திரன் அணி கூட இராணுவ பாதுகாப்பில், புலிகளின் எல்லையோரங்களில புதிய இளைஞர்களை இணைத்த படி இளைஞர்களைக் கொண்ட முகங்களை, ஆயுதம் எந்த தயார் நிலையில் வைத்தேயுள்ளனர்.

தமிழ் காங்கிரஸ் மிக மோசமான தமிழ் மக்கள் விரோதியாக அதன் வரலாறு தொடங்குகின்றது. 1950 இல் தமிழ் கங்கிரஸ் கட்சியில் இருந்து தமிழரசு கட்சி தந்தை செல்வாவின் தலைமையில் தனியாக தோன்ற, தமிழ் கங்கிரஸ்சின் துரோகமே அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இருந்தது. மலையக மக்களின் வாக்குரிமைகளை பறிக்க,  இனவாதத்தையும் சுரண்டல் வக்கிரத்தையும் அடிப்படையாக கொண்டு சிங்கள இனவாத சுரண்டல் ஆட்சிக்கு தூணாக துணை நின்ற மக்கள் விரோதிகளே இவர்கள். இன்று டக்ளஸ்சின் துரோக வழியில், அன்று தமிழ் காங்கிரஸ் யூ.என்.பியுடன் ஒட்டிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட துரோக கட்சிதான் தமிழ் கங்கிரஸ். சொந்த பெரும் சொத்துகளை பாதுகாக்கவே அரசியலை பயன்படுத்திய இக்கட்சி, தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டனர். அண்மைய துரோக வரலாற்றில் அரசியலில் அனாதையாகி கொழும்பில் கூடாரம் அடித்திருந்த இந்தக்கட்சி, இனவாத சிங்கள அரசின் வரைமுறையற்ற இனவாதத்தை கொழும்பில் கண்டிக்க தொடங்கியது முதல் புதுயுயிர்ப்;பு பெற்றது. பெரும் முதலாளியான குமார் பொன்னம்பலம் அரசியலில் வாரிசுரிமை பெற்றவர். அதன் வழியில் அவரின் மகனும் இன்று களமிறங்கியுள்ளார். புலிகளின் அரசியல் ஏழ்மையை பயன்படுத்திய அதில் இருந்தே பிழைக்கத் தொடங்கி விடுகின்றனர். இந்த பிழைப்புக்கு புலிகளின் அரசியலின் ஏழ்மையே வழிகாட்டியாகின்றது. அதே நேரம் இந்த ஏழ்மை ஏஜாமன் விசுவாசத்தை காட்டி குலைக்கின்றது. இந்த வழியில் தான் அனைத்து தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு, அரசியலில் ஜன உபதேசம் பெற்று உயிர்ப்பு பெற்றது. கொழும்பில் சொத்தும் சுகமுமாக அரசியல் பேசும் இக்கட்சி, தமிழ் ஈழத்தை ஒருக்காலும் ஆதாரிக்க போவதில்லை. எல்லாம் ஏகாதிபத்திய மூன்றாவது மத்தியஸ்த்த ஆக்கிரமிப்பில் எலும்புகளை சூப்பி குளிர் காய விரும்புபவர்களே.

தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்;தோர் கடந்தகாலத்தில் இழைத்த மனித விரோத நடத்தைகளை இவர்கள் தவறு என்று சொல்லவில்லை. உதாரணமாக 1984 இல் ரெலோ இந்தியா கைக்கூலிகளாக எமது மண்ணில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய காலத்தில், என்னை கண்ட இடத்தில் சுட்டுக் கொல்ல உத்திரவிட்டு தேடினர். எனது வீட்டை நடு சமாத்தில் சுற்றி வளைத்து, வீட்டை நோக்கி பொலிந்த வேட்டுகளின் கதை போல் பல உண்டு. இதன் போதே தேசிய போராட்ட வரலாற்றில் இயக்கத்துக்கு எதிரான, முதலாவது மக்கள் போராட்டத்தை  நாம் நடத்தினோம்;. அந்தப் போராட்டம் தெல்லிப்பளைச் சந்தியில் வீதி மறியலாக மாறியபோது, அதன் மேலும் பொலிந்த வேட்டுகள் எமது தேசத்தையே நடுங்கவைத்தது. இதே போல் கூட்டணியின் தேர்தல் மற்றும் மோசடிகளை நாம் "தேர்தல் திருவிழா" என்ற நாடகம் மூலம் 1981-1983 களில் அம்பலப்படுத்திய போது, கூட்டணியினர் ரவுடிகளை கொண்டு மிரட்டி குழப்ப முயன்ற வரலாறுகள் பல. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய கூலிபட்டாளமாக வந்திறங்கிய போது, கம்யூனிஸ்டுகள் இந்தியா அரசின் எதிரிகள் என்ற அடிப்படையில், எம்மைத் தேடி அலைந்த வேட்டை நாய்த்தனத்தை என்ன என்பது. இப்படி எத்தனையோ மக்கள் விரோத வரலாறுகள், தனித் தனியாகவும் சமூக ரீதியாகவும் உண்டு. ஆனால் அதை இனியோரு போதும் செய்ய மாட்டோம் என்று, கடந்த கால மீதான சுயவிமர்சனத்தில் இருந்து இவர்கள் சொல்லவில்லை. இந்தியா அரசின் ஆக்கிரமிப்பை, தலையீட்டை கண்டிக்கவில்லை. ஆனால் இந்தியாவுடன் வாலாட்டியபடி நக்கி வாழ்வது தொடருகின்றது. ஏகாதிபத்தியம் தேசியத்தை அழிக்கும் என்றும், அதை எதிர்த்து போராடுவோம் என்று சொல்லவில்லை. தன்னிறைவான சுய பொருளாதாரத்தை பாதுகாக்க, அதை எதிர்க்கும் மற்றும் அழிக்கும் அனைவரையும் எதிர்த்து போராடுவோம் என்று சொல்லவில்லை. அதே நேரம் அதை தாமே அழிப்போம் என்று, கோசம் போடுகின்றனர். பேச்சு வார்த்தையை புலிகள் குழப்பினால், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சொல்லவில்லை. அதாவது எப்படி நங்கள் ஏகாதிபத்தியத்துக்கும் (மூன்றாவது தரப்புக்கும்) அரசுக்கு முண்டு கொடுப்போம் என்பதை சொல்லவில்லை.

அது மட்டுமா, கடந்த காலத்தில் நீங்கள் வேட்டையாடிய மனிதர்களின் மரணங்களுக்கு பதிலளிக்கவில்லை. இந்தியாவின் எதிரிகள் என்றும், புலிகளின் ஆதாரவாளர்கள் என்றும், புலிகளின் இரத்த உறவுகளான தாய் தந்தை சகோதார சகோரிகள் என்று நீண்ட படு கொலைக்கு உள்ளான, அந்த மனிதர்களுக்காக ஒரு வார்த்தையும் பேசவில்லை. புலிகளும் அதை செய்தமையால், நாம் அதை பற்றிச் சொல்லத் தேவையில்லை என்ற தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு புலிகளுடன் இரகசிய உடன்பாடு கொண்டுள்ளதோ!  அத்துடன் முஸ்லிம் மக்கள் மேலான படுகொலை, தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் செய்த படுகொலைகள், பெண்கள் மேலான பாலியல் வன்முறை என்று வரலாற்று பட்டியல் நீள்கின்றது. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக பேசும் வி.ஆனந்தசங்கரி "கடந்த காலத்தில் எந்தெந்த அமைப்பு எப்படி எப்படி இயங்கியது என்பதைப் பற்றி இன்று விவாதிக்கத் தேவையில்லை. இரகசியமாக நாம் செயற்படவில்லை. பல்வேறு ஸ்தாபனங்கள், அமைப்புகள், பிறநாட்டு, உள்நாட்டு பிரமுகர்கள், பத்திரிகைகள் அனைத்தினதும் வேண்டுகோளுக்கு இணங்கவே நாம் ஒற்றுமையாகச் செயற்பட்டு வந்துள்ளோம்." என்;று கூறி கடந்த கால மக்கள் விரோதத்தை மூட்டை கட்டி வைத்தபடியே, புதிய துரோகத்தை தொடங்குகின்றனர். இந்த கூட்டு என்பது புலிகளின் அரசியல் வறுமையை பயன்படுத்தி, ஏகாதிபத்தியத்தால் திட்டமிட்டு; உருவாக்கப்பட்டதே. அதானல் அது முன்றாவது தரப்பு மத்தியஸ்தம் என்ற, தொப்பிள் கொடியுடன் பிறந்துள்ளது. இதை ஆழமாக நாம் புரிந்து கொள்ள, தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பிற்கும் தமிழ் காங்கிரஸ்சுக்கும் இடையிலான முரண்பாட்டில் இருந்தே தெளிவாக இனம் காணமுடியும். "புலிகளின் தேசிய தலைமைப் பாத்திரத்தை தவிர்த்து மாற்றுத் தலைமையை உருவாக்க சிங்களம் மட்டுமல்ல அமெரிக்காவும், இந்தியாவும் கூட முயல்கின்றது" என்ற கூறி இந்த தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு பின் வேடத்தை மட்டுமல்ல, அதன் வெளுப்பையும் அம்பலமாகியுள்ளது. இப்படியெல்லாம் நாடகமாடும் இவர்கள், தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பின் வெற்றி புலிகளின் வெற்றி என்ற பிரகடனம் செய்யவும் பின் நிற்கவில்லை. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பின் நோக்கம் "பிரபாகரனே தமிழினத்தின் தலைவர் என்பதை வெளிப்படுத்துவோம்;" என்று ரெலொ சிறிகாந்தா திருக்கோவில் கூட்டத்தில் பேசுகின்றார். அத்துடன் "ஓரே கொடி, ஓரே தலைமை, ஓரே கோட்பாடு" என்று கூறி, தமிழ் ஈழத்தின் ஜனநாயக மறுப்பை அரசியலில் ஆணையாக்கின்றார். ஆனால் அவர்கள் அதற்குள் இதுவரை இணையவில்லை. அதாவது புலிக்கொடி, புலித் தலமை, புலிகளின் மக்கள் விரோத இராணுவ கோட்பாட்டை தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு ஏற்றுவிடவில்லை. ஆனால் மக்ளுக்கு அதை கூறுகின்றனர். ஒரு பாசிட்டுகளின் பினாமிகளுக்கு மட்டும் பொருந்திய அரசியல் நடத்தைகள். யாழ்ப்பாணத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் தமிழ் கங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி "புலிகளே ஏக பிரதிநிதிகள் என்பதை, சிங்கள பேரினவாதிகளுக்கும் வெளி உலகத்திற்கும் எடுத்துக் காட்டவே நான்கு கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றோம்" என்றார். புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக இருக்க நடத்திய இரத்த பலியொடுப்புகளுக்கு, அரசியல் பூச்சு பூசுவது தான் தமது வேலை என்கின்றனர் பச்சோந்திகள். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் ரெலோ உபதலைவர் நி. இந்திரகுமார் "அளப்பரிய தியாகங்களைச் செய்த புலிகளை பயங்கரவாத இயக்கம் என்ற கூற அனுமதிக்க முடியாது" என்று பேசினர். புலிகள் மட்டுமா போராட்டத்தில் தியாகம் செய்தனர். பயங்கரவாதம் என்பது அரசின் பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான, மக்களின் பயங்கரவாத நடவடிக்கையில் இருந்தே தொடங்குகின்றது. இது ஒன்று இழிவானவையல்ல. மக்களின் ஆயுதப் போரட்டத்தை எதிர்க்கும் உங்களுக்கு அது பயங்கரவாதமாக இருக்கலாம். இங்கு பயங்கரவாதமாக முத்திரை குத்துவது, மக்கள் அல்லாத இயக்கம் மக்கள் மேல் பயங்கரவாதத்தை கையாளும் போதே நிகழ்கின்றது. இதை பாதுகாக்க கூட்டமைப்பு வக்காளத்து வாங்குகின்றது. இப்படி பல தளத்தில் மக்களுக்கு எதிராக புலிகள் சார்பாக பேசியதுடன், கிடைக்கும் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு வெற்றி புலிகளின் வெற்றி என்றனர். இதை புலிகள் மறைமுகமாக அங்கீகரித்து ஆதாரவுவளித்தனர். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளி வந்தபோது புள்ளிவிபரங்களை திரித்தும் புரட்டியும், தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக அனைத்து தமிழ் மீடியாவும் செயற்பட்டன. மறு தளத்தில் எதிர் தரப்பின் வெற்றிகளை கள்ளவோட்டு மற்றும் வன்முறையில் சாதிக்கப்பட்டதாக ஒரு தலைப்பட்சமாக கருத்துக் கூறினர். இந்த புள்ளிவிபர மோசடியில் உண்மையை திறனாய்வு செய்ய தயாரற்ற தன்மையை தெளிவாக தமது பினாமிய வழியில் கையாண்டனர்.

 

பிரதேசம் தமிழ் கட்சிகளின் மற்றைய பிரதான முஸ்லீம்கங்கிரஸ்  மற்றைய கட்சிகள்

கூட்டமைப்பு  தமிழ் கட்சிகள் பெற்றவை

வன்னி 41 950 16857 - 35 699

யாழ்ப்பாணம் 102 324 80910 3364 -

மட்டக்களப்பு 86 284 10373 26 725 55 716

திருகோணமலை 56 121 2089 - 102 928

அம்பறை 48 789 21874 75 257 134 295

கொழும்பு 12 120 - - -

கம்பாஹா - - - -

ஒட்டு மொத்தமாக 348 164 150 101 105 346 மேல்

-

தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக 348 164 வாக்குகளே பெற்றனர். இங்கு கள்ள வோட்டுகளை தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு பெற்ற போதும் வாக்களிக்க தடை இருந்த போதும், இது புலிக்கு ஆதாரவாக நான்கு கோரிக்கைக்கும் சார்பாக விழுந்தாக எடுக்க கோருகின்றனர். இது தவறனதாக இருந்தாலும், மற்றயை தமிழ் கட்சிகள், சிங்கள கட்சிகள் இதற்கு சமனாக வாக்கை பெற்றுள்ளது. அதே நேரம் முஸ்லீம் வாக்கு தனியாக உள்ளதுடன், வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாது பெரும்பகுதி  பகிஸ்கரித்துள்ளது. 2001 கணக்கெடுப்பின் படி கொழும்பில் மொத்த தமிழ் வாக்காளர்கள் 249 915 யும், இந்தியா தமிழ் வாக்காளர் 26 036யும், முஸ்லீம் வக்காளார்; 203 558 யாகும். கம்பஹா மாவட்டத்தில் ஒரு லட்சம் தமிழ் வக்காளர் உள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 40 ஆயிரம் தமிழ்  வாக்காளர் உள்ளனர். கொழும்பில் 12 120 வாக்குகளை கூட்டமைப்பு பெற்று படுதோல்வியடைந்துள்ளது. 2.5 லட்சம் தமிழ் வாக்காளர்கள் அவர்களின் குடும்பத்துடன் தமிழ் தரப்பு குறுந்தேசிய கொடுமையால் கொழும்பில் புலம் பெயர்ந்து வாழும் அவர்கள், இந்த கூட்டமைப்புக்கு எதிராகவே வக்களித்துள்ளனர். இதுபோன்று கம்பஹா, களுத்துறை மாவட்டத்திலும் கூட்டமைப்பு தேர்தலில் குதித்திருப்பின் இங்கும் இந்த சோகம் நிகழ்ந்திருக்கும். உண்மையில் கூட்டமைப்பு 3.5 லட்சம் வாக்குளை பெற்ற அதேநேரம், பெரும்பகுதி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டே உள்ளனர். இலங்கை சனத் தொகையில் தமிழ் மக்களின் விகிதசாரத்தக்கு ஏற்ப, தமிழ் வாக்களர் எண்ணிக்கையும் இருக்கின்றது. அளிக்கபட்ட செல்லுபடியான வாக்கில் 3.89 சதவீதத்தை பெற்ற அதே தளத்தில் கூட்டமைப்பின் குரோதத்தை அம்பலமாகின்றது. வாக்களிக்காத எண்ணிக்கையுடன் இதை ஒப்பிடின், இந்த வீகிதம் மேலும் ஆழமாக சரியும். வாக்களிப்பு வீகிதம் இலங்கை முழுக்க சமாந்தரமாக இருப்பதால், மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப கூட்டமைப்புக்கு எதிராக அளிக்கப்பட்ட தமிழ் வாக்கு வீகிதம் அதிகமானது.

தமிழ் பல்கலைக்கழகங்கள் தொடங்கி கிறிஸ்துவ ஆயர்கள் வரை ஆசி பெற்று தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புக்கு வாக்கு கோரினர். அதே நேரம் சங்கிலியன், எல்லாளன் படை தொடங்கி இராஜசிங்கன் படை வரை நடத்திய ஜனநாயக தேர்தல் நடைமுறை ஆயுத மிரட்டல்களின் ஆசியிலேயே, கிடைத்த வாக்கு மிகமிக குறைவானதாகும்;. அதாவது தமிழ் மக்கள் பெரும்பகுதி தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புக்கு வெளியில் வாக்களித்துடன், கணிசமான பெரும் பகுதி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. மொத்த வாக்களிப்பில் கூட்டணி பெற்ற வாக்குகள் 3.9 சதவீதமட்டுமேயாகும்;. இங்கு முஸ்லீம் மக்களை தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பும் எதிரியாக, புலிகளை போல் பார்த்த அணுகியதும் நிகழ்கின்றது. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு; கிழக்கில் நிகழ்த்திய உரைகள் மற்றும் செவ்விகள் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் இருந்தன. முஸ்லீம் மக்களை தமிழ் மக்களாக கருத தயாரற்றவர்கள், அவர்களை ஒரு சிறுபான்மை தேசிய இனமாக கூட அங்கீகரிக்கவும் தயாராக இல்லை. மாறாக தமக்கு அடிமையாக அடங்கி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் அணுகப்பட்டது. இந்த நிiயில் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லீம் மக்களின் பிரச்சனையை, புலிகளுடன் மட்டும் பேசி எப்படித் தீர்க்க முடியும்;. வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லீங்கள் பிரச்சனைக்கு தீர்வற்ற வன்முறையிலும், அவர்களின் நலனை பேசாத தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு எதைத்தான் அந்த மக்களுக்கு வழங்க முடியும்;. புலிகளுடன் மட்டும் பேசக் கோரும் ஜனநாயகம், முஸ்லீம் மக்களுக்கு எதிரானதாகும். உண்மையில் நடந்த தேர்தல் குறுந் தேசிய இனக் கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டே நடந்தன. சிங்கள் கட்சிகள் தொடங்கி தமிழ் முஸ்லீம், மலையக கட்சி ஈறாக, இனவாத வாக்குகளை அடிப்படையாக கொண்ட குறும் இனத் தேசிய தேர்தலாக இது மாறியிருந்தது. இலங்கையில் பலலினங்களின் ஐக்கியத்தை முன்வைத்த கட்சிகள், படு தோல்வியடைந்தன. இந்த தேர்தல் மேலும் ஆழமாக இனவாதத்தை பிரித்து பிளந்துக் காட்டியுள்ளது. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்ந்து இந்த இனவாதத்தை குறுந்தேசிவாதமாக மீண்டும் ஒரு முறை பிளந்துள்ளனர். இம் முறை முஸ்லீம் மக்களையும் கூட ஒதுக்கிய வகையில், தனது வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.

இங்கு கள்ள வாக்குகள் மூலமே மற்றைய கட்சிகள் வாக்கு பெற்றதாக கூறுவதும், தம்மை தாம் புனிதர்களாக காட்டுவதும் கூட ஒரு மோசடியே. கள்ள வாக்கு என்பது சில கட்சிகள் தலைமையில் இருந்தே அதை திட்டமிடவும், மறு தளத்தில் அதை கீழே இருந்து தன்னியல்பான ஆர்வம் சார்ந்தும் அனுமதிக்கப் படுகின்றது. அதிகாரத்தில் இருந்து தோற்பவன் மேல் இருந்து கள்ள வாக்கை போடுவதும், அதிகாரத்தை புதிதாக பெறுபவன் இயல்பான ஆதரவு தளத்தை கள்ள வாக்கு போட பயன்படுத்துகின்றான். தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு கூறுவது போல் ஈ.பி.டி.பி மட்டும் கள்ள வாக்கு போடவில்லை. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு கூட கீழ் இருந்து உருவாகிய தன்னியல்பான கள்ளவாக்கு போடும் இயல்பை, தனக்கு சதாகமாக பயன்படுத்தினர். அதாவது மற்றவன் கள்ள வாக்கு போடுவதாக கூறி, இது ஊக்கவிக்கப்பட்டது. உண்மையில் கிடைத்த வாக்கில் சரிக்கு சமன், எதிர் எதிராக கள்ள வாக்கை தமக்கு சாதகமாக பயன்படுத்தியே இந்த ஊழல் மிக்க சாக்கடை தேர்தலை, ஜனநாயகமாக்கினர்.

தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு வாக்குளை பெறவிடாது, வன்முறை மூலம் ஈ,.பி.;டி..பி தடுத்தது என்பது ஒரு தலை பட்சமானது. ஈ.பி.டி..பி யின் வன்முறை, அதிகார மோசடி, ஊழல், கள்ள வாக்குகளை எந்தளவுக்கு பயன்படுத்தி அதை ஜனநாயகமாக கருதியதோ, அந்தளவுக்கு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு அதன் தயவில் தான் செயற்பட்டது. சங்கிலியன், எல்லாளன் படை தொடங்கி இராஜசிங்கன் படையின் மிரட்டலை சாதகமாக்கியும், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தாம் மட்டும் பிரச்சாரம் செய்யும் உரிமை பெற்று தேர்தலை ஜனநாயகமாக்கினர். புலிகளின் ஒரு சில வேட்பாளர்களை படுகொலை செய்ததுடன் கடத்தியும் சென்ற நிலையில், பொது மிரட்டலை தனக்கு சதாகமாக கொண்டே இந்த ஜனநாயகத்தை தக்கவைத்தனர். ஊர்கவத்துறை எப்படி ஈ.பி.டி.பியின் சர்வாதிகாரத்தில் ஜனநாயகம் பூத்துக் குலுங்கியதோ, அதேபோல் புலிகளின் பிரதேசமும் அதன் எல்லையிலும் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பின் ஜனநாயகம் பூத்து குலுங்கியது. படுகொலை, வன்முறை, மிரட்டல், ஊழல் என்று ஜனநாயகத்தின் அனைத்து சிறப்பு இயல்புகளுடன் நடைபெற்ற இந்த தேர்தலில், இனங்களை தனித்தனியாக தமது குறுந்தேசிய இனவாத அடிப்படைகளை ஆழப் பிளந்தே, சுதந்திரமாக ஜனநயாக பராளுமன்ற சாக்கடையை நிறுவிக்கொண்டது. இந்தச் சாக்கடையில் இறங்கி புளுத்த பன்றிகள் பொய் வாக்குறுதிகள், மேசாடி, ஊழல், அதிகார பிரயோகம், வன்முறை முதல் படு கொலை ஜனநாயக அரசியலையே, தமது ஜனநாயகச் சின்னமாக கொண்டே இந்த தேர்தலில் தமது சொகுசுக்கான வாழ்வுக்கு அடிதளமிட்டனர். இந்த தேர்தல் மக்களின் அதிகாரத்தையோ, அவர்களின் குறைந்த பட்ச நலன்களைக் கூட தீர்க்கப் போவதில்லை. ஏகாதிபத்திய உலகமயமாதலை விசுவசமாக, மக்களுக்கு எதிராக அவர்களின் தன்னிறைவு தேசிய பொருளாதாரத்தை சிதைப்பதற்கு முரண்பாடு இன்றி அனைவரும் உறுதி எடுத்து, அதை ஜனநாயக வன்முறை மூலம் மக்கள் மேல் நிறுவ தயாராகவே உள்ளனர். இந்த மக்கள் விரோத தேர்தலையும், அந்த போலி ஜனநாயகத்தை எதிர்த்து, மக்கள் அதிகாரத்தை தமது சொந்த கரங்களில் எடுக்கும் ஒரு வழி மட்டும் தான், மக்களின் பிரச்சனைக்கு தீர்வை தரும்.


பி.இரயாகரன் - சமர்