Language Selection

சமர் - 31 : 08 - 2002
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொருளாதாரம் சாராத ஒடுக்குமுறைகள் சமுகத்தில் உள்ளதாக  காட்டும் அசை, திரிபுவாதத்தை மாhக்சின் பெயரில் கொடியாக்குகின்றது

 

 

"மரபுரீதியான மார்க்சியர்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சாதியம், ஆணாதிக்கம், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், சமப்பாலுறவு, உளவியல், இனத்தேசியம் போன்றபொருளாதாரம் அல்லாத ஒடுக்குமுறைகளை ஃ பிரச்சினைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்கின்ற விமர்சனம் நமக்கிடையில் இருக்கின்றது". என்று கூறி, அசை தனது திரிபுவாத மார்க்சிய அரசியலைப் பற்றி, சொந்த வாக்கு மூலத்தை வழங்குகின்றது. பொருளாதாரம் அல்லாத ஒடுக்குமுறைகளாக சமுகத்தை விளக்கி அதை மாhக்சின் பெயரில் ஆய்வு செய்ய அசை வருகிறதாம். வர்க்க தலைமை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் புரட்சிக்கு முந்திய பிந்திய சமுதாயத்தில் வன்முறை சார்ந்த வர்க்கப் புரட்சியை மறுக்கும் அசை, மார்க்சியத்தை இதன் அடிப்படையில் திருத்தக் கோருகின்றது.  பொருளாதாரம் அல்லாத ஒடுக்குமுறைகளாக சமுகத்தை விளக்கி மார்க்சியத்தை கல்லறைக்கு அனுப்ப முயலும் முதலாளித்துவ அறிவித்துறையினர், "மார்க்சிடம் திரும்பவது" என்ற பெயரில் மார்க்சியவாதிகளது நவீன திருத்தல் வாதமகும்;. மார்க்சியத்தை முன்வைத்த மார்க்சுக்கு  திருத்தத்தை முன்வைத்த திருத்தும் எழுத்துக்களையே, சொந்த அரசியல் வறுமை மீது கையேலாதனத்தில் நின்றே அசை காவடியாக்கின்றது.

நிறப்பிரிகை, சரிநிகர், நிகரி, உயிர்நிழல், எக்ஸசில், அம்மா, மௌனம், சுபமங்களா, காலச்சுவடு.... போன்ற பல பத்து பத்திரிகைகள் மார்க்சியத்துக்கு எதிராக எதை எல்லாம் பிரசுரித்தார்களோ அதை எல்லாம், தனியாக வெளியிட்டு மார்க்சியத்தை கழுவேற்ற சபதம் எடுத்ததன் ஒரு முயற்சியாகவே “அசை” வெளிவந்துள்ளது. அத்துடன் பல பத்து சிறு சஞ்சிகையில் மார்க்சியத்துக்கு எதிராக யார் யார் எல்லாம் வண்ணம் வண்ணமாக எழுதியும் மொழிபெயர்த்தும் அவதூறுகளை தொகுத்தனரோ, அவர்களே “அசை” யின் ஆன்மாவாக இருப்பதும், அவர்களே மார்க்சிய அவதூறின் உயிராக இருப்பதும் இதன் சிறப்பு அம்சமாகும்;. யாராவது இந்த மார்க்சிய எதிர்ப்பு அவதூற்று மன்னவர்கள் இந்த “அசை” யில் கலந்து கொள்ளவில்லை எனின், அவர்களுக்கும் தொகுப்பாசிரியருக்கும் உள்ள இன்றைய தனிப்பட்ட உறவின் விரிச்சலின் இடைவெளிகளினால்; மட்டுமே என்பதும் கூட, இதன் மற்றொரு சிறப்புதான்.

இலங்கை, இந்தியா தொடங்கி பல இதழ்களில் முழுபக்க விளம்பரத்துடன், அறிமுக குறிப்புகளுடனும்; பாரிசில் இருந்தே “அசை” வெளிவந்துள்ளது. நிகரி-05 இதழில் கார்க்கி என்ற பெயரில் எழுதிய பினாமி "காலம் கருதி வெளிவரும்" ஒரேயொரு மார்க்சிய இதழ் என்று சுய விளம்பர அறிமுகத்தை செய்துவிடுகின்றனர். புதியபூமி "மார்க்சியர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக உள்ளது" என்று முகமன் வழங்கி, செஞ்சோற்றுக் கடனை சார்ந்து விளம்பரம் வழங்கியவர்கள், கோட்பாட்டு ரீதியான விடையங்கள் மேல் நழுவல் ரீதியான சமரசத்தை பூசி மொழுகி கையாண்டுள்ளனர். இப்படி வெளிவந்த சில பத்து அறிமுகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை திட்டமிட்டே விளம்பரம் செய்தனர். நிகரி தனது பத்திரிகையை வெளியிடுவதற்கு முன்பாக வெளியிட்ட முழுபக்க விளம்பரத்தில் கூறிய உண்மைத் தன்மைக்கும், நேர்மைக்கும் எதிராகவே ஆசிரியர் குழு இதை பிரசுரித்துவிடுகின்றது. இலங்கை இந்தியா தொடங்கி புலம் பெயர் மண் வரையிலான சமூக இயக்கத்தில் நடைமுறை சார்ந்து மார்க்சியத்தை ஒரு சமூக இயக்கமாக முன்வைக்கும் புதிய ஜனநாயகம், நவசாகப்தம், சமர் தொடங்கி பல பத்திரிகைள் வெளிவருகின்றது. அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்து, செய்யும் சுய விளம்பரகாரர்கள், மார்க்சியத்தை அதன் தொண்டைக் குழியில் அறுத்துவிட நினைக்கும் வக்கிரம் கொண்டவர்களின் கனவுகளே நிஜமான விளம்பரமாகிவிடுகின்றன.

"மறுபடியும் மார்க்சிடம்" என்று அசையை தொகுத்த தொகுப்புரைக்கு அசோக் யோகன் பெயரிடுகின்றர். "மறுபடியும் மாhக்சிடம்" அசைகின்ற மார்க்சியம் என்ன என்பதையும் முன்னுரையில் தெளிவாக்கிவிடுகின்றார். மார்க்சை அவரின் வர்க்க அடிப்படையில் இருந்து அசைத்துவிடுவதே மார்க்சியம் என்பதை, அவரின் தொகுப்புரை தெளிவாக்கிவிடுகின்றது. வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் தொடரும் வர்க்கப் போராட்டத்தை, யார் யாரெல்லாம் இதில் ஒன்றை அல்லது முழுமையை எதிர்க்கின்றனரோ, அவர்களையும் அவர்களின் முதலாளித்துவ வண்ண வண்ணத் தத்துவங்களையும் முன்வைத்து, மார்க்சை அசைத்துவிட பெரும் விளம்பரச் செல்வாக்குடன் பிரகடனம் செய்கின்றனர். வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் தொடரும் வர்க்கப் போராட்டத்தை அடிப்படை மார்க்சியமாக ஏற்றுக் கொண்டு நடைமுறையில் ஒரு சமூக இயக்கமாக போராடுபவர்களை அவதூறுபடுத்தி நடைமுறைப் போராட்டத்தை அழித்தொழிக்கவே, “அசை” கங்கனம் கட்டுகின்றது. உலகெங்கும் யார் யாரெல்லாம் மார்க்சியத்தக்கு எதிராக இயங்குகின்றனரோ, அவர்களின் எழுத்துகளை தொகுத்து மாக்சியமாக கட்டுவதே, அசையின் மார்க்சிய விரோத நடவடிக்கையுடன் கூடிய கனவாகும்.

இந்த கனவை நனவாக்கும் வகையில் கூறுவதைப் பார்ப்போம். "ஐரோப்பிய, சீன மார்க்சியமன்றி, ஆபிரிக்க, இலத்தீனமெரிக்கா, மத்திய கிழக்கு மார்க்சியம் என்பதையும் அறிமுகப்படுத்தவும் பேசவுமான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்" என்று கூறும் தொகுப்புரை, எப்படி "மறுபடியம் மார்க்சிடம்" இட்டுச் செல்லும். மார்க்சியம் பலவகை என்று எடுத்துக் காட்டும் தொகுப்புரை, உண்மையில் மார்க்சின் வர்க்கப் போராட்டத்துக்கான மார்க்சியத்தை அதன் வேரில் இருந்து வெட்டிவிடும் ஒரு முயற்சியாகும். ஆபிரிக்காவாக இருந்தாலும், ஐரோப்பாவாக இருந்தாலும்;, ஆசியாவாக இருந்தாலும் உலகெங்கும் மார்க்சியம் எப்போதும் ஒன்றுதான். இதனால் தான் மார்க்சியம் எப்போதும் ஒரு சர்வதேசிய தத்துவமாக உள்ளது. மார்க்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் கூறிப்பிட்டது போல் "பாட்டாளிகளுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை, அவர்களது அடிமைச் சங்கிலியைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் உள்ளது. அனைத்து நாட்டுத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள்!" என்று பொது அடிப்படையில் உலகத் தொழிலளாரை மார்க்சியம் அறை கூவ, "மறுபடியும் மார்க்சிடம்" போவதாக கூறிக்கொள்பவர்கள் கோமளித்தனமாக பல மார்க்சியத்தை அறிமுகம் செய்யப் போகின்றனராம். உலகத் தொழிலாளருக்கு ஒரு நாடு இல்லை என்று மார்க்ஸ் கூறியதை மறுத்து, நாட்டுக்கு ஏற்ற மார்க்சியத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக “அசை” பிதற்றுகின்றது. மார்க்சின் பெயரால் உருவான மார்க்சியத்தை பலவாக பல வண்ணமாகவும் அறிமுகம் செய்வது, இன்றைய இடது மார்க்சியத்தின் நவீன திரிபுகளாகும்;. மார்க்சை பாடப் புத்தக வடிவில் கொழுயேற்றுவதும், வர்க்கப் போராட்டத்தை வன்முறையற்ற வகையில் நடத்த முடியும் என்பதே மையமான அசையின் செய்தியாகும்;. இங்கு அசையின் மைய நோக்கம் வர்க்கப் போராட்டத்தில் புரட்சிக்கு முந்திய பிந்திய புரட்சிகர வன்முறையை மறுப்தாகும்;. அத்துடன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொச்சைப்படுத்தி கழுவேற்றுவதாகும். இதை சாதிக்க மார்க்சை திரித்து விடும் அண்மைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே, “அசை”  சுய விளம்பரத்துடன் வருகின்றது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் புரட்சிகர வர்க்க வன்முறையை கழுவேற்றும்  தொடர்ச்சியில் "புரட்சிகர இயக்கங்களில் ஜனநாயக மறுப்பு மற்றும் பின்புரட்சி சமூகங்களின் அனுபவங்களை..." பேசி அதை கொச்சைப்படுத்த “அசை” வருகின்றதாம். பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்றது எனின், அது புரட்சிகர வன்முறையை அடிப்படையாக கொண்டது. மற்றவனை அடிமைப்படுத்தி சுரண்டும் வர்க்கத்துக்கு (சுரண்டும் வர்க்கத்துக்கு அதாவது இது ஆணாதிக்கம், சாதிய ஆதிக்கம், இனவாதம், நிறவாதம், சுரண்டல், இயற்கை அழிப்பு என்ற பரந்த விரிந்த தளத்தில்) ஜனநாயக மறுப்பை அடிப்படையாக கொள்கின்றது. இந்த இழிந்து போன மனித விரோத சக்திகளுக்கு சுதந்திரம், ஜனநாயகம் என்ற பேச்சுக்கே மார்க்சியத்தில் இடமில்லை. ஆனால் அசை முதலாளித்துவ சுதந்திரம், ஜனநாயகம் என்ற கடைக் கோடியில் நின்று மார்க்சியத்தை திருத்தக் கோருகின்றது. இது புரட்சிக்கு முந்திய பிந்திய சமூகத்தில் ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்ற போது, இதுவே மையமான கோசமும் வடிவமும் ஆகும். உலகில் மார்க்சியமல்லாத வார்க்கப் போராட்ட வரலாறு எல்லாம், மற்றொரு வர்க்கத்துக்கு ஜனநாயகத்தை மறுத்தே வந்துள்ளது. அதாவது உழைக்கும் வர்க்கத்துக்கு ஜனநாயகம், சுதந்திரம் என்பதை என்றும் வழங்கியதில்லை.  இதற்கு வெளியில் வர்க்கப் போராட்டத்தை யாரும் விளக்க முடியாது. இதையே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் "கடந்த காலச் சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்கப் பகைமைகளின் - வௌ;வேறு சகாப்தங்களில், வௌ;வேறு வடிவங்களை எடுத்த வர்க்கப் பகைமைகளின் - வளர்ச்சியில் அடங்கியுள்ளது. ஆனால், அப்பகைமைகள் எந்த வடிவத்தை மேற்கொண்டிருந்தாலும், கடந்த காலச் சகாப்தங்கள் அனைத்துக்கும் பொதுவான ஒரு உண்மை இருக்கிறது. சமுதாயத்தின் ஒரு பகுதியை மற்றொரு பகுதி சுரண்டுவது என்பது உண்மை" இதை நாம் "மறுபடியம் மார்க்சிடம்" போய் ஜனநாயகப் படுத்த முடியுமா? ஒரு புரட்சிகர இயக்கம் தனது அமைப்பில் ஜனநாயக மத்தியத்துவத்தை தனது ஆணையில் வைக்கின்றது. இங்கு ஜனநாயக மத்தியத்துவத்தை கட்சி கொண்டிருக்கும் போது, போராட்டத்திலும் வலது இடது போக்குகள் கூர்மையாகின்ற போது அமைப்பு உடைகின்றது அல்லது திரிபுவாதம் அரங்கேறுகின்றது. கட்சி ஒரு முதலாளித்துவ கட்சியாக சீரழிகின்றது. இந்த வரலாற்றை நாம் சென்ற இரு நூற்றாண்டிலும் பலமுறை கண்டேயுள்ளோம். இல்லாத எல்லா நிலையிலும் ஜனநாயக மத்தியத்துவத்தை ஆணையில் கொண்டு முரண்பாடுகள் தீர்க்கப்படுகின்றன.

ஒரு புரட்சி என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மற்றைய வர்க்கங்கள் மேல் தொடர்வதையும், தொடர்ந்தும் வர்க்கப் போராட்டத்தை நடத்துவதையும் குறிக்கின்றது. இங்கு அனைவருக்கும் ஜனநாயகம் என்பது மார்க்சியம் அல்ல. அதாவது வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு, அனைவருக்கும் ஜனநாயகம், சுதந்திரம் என்பது அடிப்படை மார்க்சியத்தை மறுப்பதாகும். பின் "மறுபடியம் மார்க்சிடம்" என்று கூறுவது மாபெரும் மோசடியாகும். வன்முறையற்ற புரட்சியின் பின்னால் அனைவருக்கும் ஜனநாயகம் என்பதும், "மறுபடியும் மாhக்சியம்" என்ற கூறி, மார்க்சியத்தை அசைத்துவிட முயல்வது என்பது 21ம் நூற்றாண்டின் வர்க்க சகாப்தத்தில் கேலிக்குரிய ஒன்றாகிவிடுன்றது.

இந்த கேலியின் தொடர்ச்சியில் "மரபுரீதியான மார்க்சியர்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சாதியம், ஆணாதிக்கம், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், சமப்பாலுறவு, உளவியல், இனத்தேசியம் போன்ற பொருளாதாரம் அல்லாத ஒடுக்குமுறைகளை ஃ பிரச்சினைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்கின்ற விமர்சனம் நமக்கிடையில் இருக்கின்றது" என்கின்றர். அந்த "பொருளாதாரம் அல்லாத ஒடுக்குமுறைகள்" என்ற கண்டு பிடிப்பின் மீதான விமர்சனத்தை ஒரே ஒரு வெற்றுச் சொல்லுக்கு அப்பால் எங்கேயாவது வைத்துள்ளனரா? மார்க்சியம் அதை வைக்கவில்லை என்றால், அதை நீங்கள் முன்வைத்து விட்டல்லவா "மறுபடியம் மார்க்சிடம்" போக அழைக்க வேண்டும்;. மார்க்சியம் வைக்கவில்லை என்ற சொல்லி மார்க்சை திருத்த நினைப்பது நோக்கம் எதிர்புரட்சிகரமானது. மார்க்சியம் "பொருளாதாரம் அல்லாத ஒடுக்குமுறைகளாக" இதை மதிப்பீட்டு, நீங்கள் தலைகீழாக நின்றாலும் ஒருக்காலும் விவதிக்க மாட்டாது. மார்க்சியம் பொருளாதார ஒடுக்குமுறையாகவே மதிப்பீட்டு, இவற்றை அதன் மேலான கட்டுமானமாகவே ஆராய்ந்துள்ளது, ஆராய்ந்து வருகின்றது, தொடர்ந்து ஆராய்கின்றது.

“அசை” யின் மார்க்சிய விரோத நிலைக்கு நிகராக உயிர்நிழல் 20 இல் “பறை”  என்ற சிறு சஞ்சிகைக்கான அறிமுக குறிப்பில் எழுதும் முதுகெலும்பற்ற புனைபெயர் பேர்வழி "கார்ல் மார்க்ஸே மார்க்சியம் எனவும், பார்ப்பானே பிரமணியம் எனவும் புரிந்து கொள்ளும் எங்கள் புகலிடச் சூழலில் ~பறை| கருத்தியல் ரீதியாகவும், நடைமுறைரீதியாகவும்..." உள்ளது என்கிறனர். மார்க்சியத்தை வெட்டிப் புதைக்கவும், சாதியத்தை பாதுகாக்கவும் புதுவிளக்கம் கொடுக்கின்றனர். கார்ல் மார்க்ஸ் அல்லாத மார்க்சியம் இருப்தாகவும், பார்ப்பான் இல்லாத பார்ப்பானியம் இருப்பதாக உயிர்நிழல்“அசை” யின் தம்பியாக நின்று குரைக்கின்றது. அதாவது இதை இப்படி பலவாகச் சொல்லலாம். முதலாளியை மூலதனமாகவும்;, ஏகாதிபத்தியத்தை உலகமயமாதலாகவும், மூலதனத்தை சுரண்டலாகவும், சிலரிடம் குவியும் செல்வத்தை ஏழ்மையாகவும், ஆணை ஆணாதிக்கமாக புரிந்து கொள்வதாக கூறி, அதை மறுக்கும்; உயிர்நிழலின் அரசியல் வழியில் அசை வக்கரிக்கின்றது. உண்மையில் மார்க்சின் பெயரில் உருவான மார்க்சியத்தை வெட்டிப் புதைக்கவும், பார்ப்பானை பாதுகாப்பதன் மூலம் சாதியை உயர்த்தவும் தலைகீழாக நிற்கின்றனர். கார்ல் மார்க்ஸ் என்ற நபரை குறித்து மார்க்சியத்தையோ, பார்ப்பான் என்ற ஒரு சாதியைக் குறித்து பார்ப்பணியத்தை மார்க்சியம் விளக்குவதில்லை. சமூக பொருளாதார உறவுகளில் இருந்து, அடிக்கட்டுமான பொருளாதார அமைப்பில் இருந்தே அனைத்தையும் மார்க்சியம் ஆராய்கின்றது. இங்கு கார்ல் மாhக்ஸ் மார்க்சியத்தை நிறுவிய சமூக பொருளாதார அடிப்படைய அரசியல் விஞ்ஞான உண்மையை நிராகரிக்கின்ற இதன் போக்கில், கார்ல் மார்க்சை கழுவேற்ற நினைக்கும் முயற்சியையே உயிர்நிழல் செய்கின்றது. இது போன்று பார்ப்பனியத்தை உருவாக்கிய பார்ப்பான் என்ற சமூகத் தட்டை விட்டு, பார்ப்பனியத்தை அதிலும் சாதியத்தை மார்க்சியம் விளக்குவதில்லை. பார்ப்பான் என்ற ஆதிக்க சாதி சமூகத் தட்டை விட்டு பார்ப்பனியத்தை, அதாவது சாதியத்தை விளக்க முடியும் என்ற, உயிர்நிழலின் கண்ணோட்டம் சார்ந்து பார்ப்பனியத்தை உறுதியாக தொடர்வதை கோருகின்றனர்.

“அசை” யில் "சாதியம், ஆணாதிக்கம், சுற்றுச்சூழல், சமபாலுறவு, உளவியல், இனத்தேசியம்" என அனைத்தும் பொருளாதாரத்துடன் தொடர்பற்ற பிரச்சனைகள் என அசோக் யோகன் தனது தொகுப்புரையில் "மறுபடியம் மார்க்சிடம்" “அசை” கின்ற வழியில் வழிகாட்டுகின்றார். இவை பொருளாதாரத்துடன் தொடர்பற்றவை அல்ல என்று ஆணித்தரமாக உறுதியிட்டு கூறும் நீங்கள், பொருளாதாரம் அல்லாத அந்த மயப்பொருளை விளக்குவீர்களா? யாருக்கு ஐயா கதை சொல்லுகின்றீர்கள்.

முதலில் நீங்கள் தெளிவாக்க வேண்டும் "மறுபடியம் மார்க்சிடம்" அசைக்கின்ற போது, பொருளை அடிப்படையாக கொண்ட ஆய்வா? அல்லது கருத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வா? என்பதை. இங்கு “அசை” கருத்தை அடிப்டையாக கொண்ட கருத்து முதல்வாதத்தையே தனது ஆய்வு முறையாக முன்வைக்கின்றது. பின் இதன் அடிப்படையில் மார்க்சியம் ஆய்வு செய்யவில்லை என்ற குலைக்கின்றனர். இதில் நின்று மார்க்சின், மார்க்சிய கண்டுபிடிப்பையே தலைகீழாக்க கோருகின்றனர். "மறுபடியம் மார்க்சிடம்" எப்படி அழைத்துச் சென்று திருத்த விரும்புகின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக நிர்வாணமாக்கின்றனர். இரண்டாவதாக இந்த சுரண்டல் அமைப்பு என்ற வர்க்க பொருளதார சமூகக் கட்டமைப்பைத் தாண்டி, சமூகத்தின் எந்தவொரு பிரச்சனையை தீர்க்கவும் முடியாது, விளக்கவும் முடியாது. இதை “அசை”  பொருளாதாரத்துடன் தொடர்பற்ற பிரச்சனைகள் என்று கூறி மறுக்கின்றனர். சமூகத்தின் ஒவ்வொரு பிரச்சனையும் இந்த பொருளாதாரச் சமூக அமைப்பின் எல்லைக்குள் தான் இயங்குகின்றது. இதை வேறு ஒன்றாக இருப்பதாக எப்போதும் முதலாளித்துவ அறிவித்துறையினர் மீண்டும் மீண்டும் கூக்குரல் இட்டபடி வானத்தையே வில்லாக்க முனைகின்றனர். ஆனால் அது எப்போதும் சொந்த முரண்பாட்டாலேயே சிதிலமடைகின்றது. அவர்களின் கட்டியமைத்துள்ள அவர்களின் சமூக அமைப்பே வன்முறையின் கோரமான மோதலாக மாறிவிடுகின்றது. ஐயா, "மறுபடியம் மார்க்சிடம்" போகும் முன் உங்கள் இந்த பொருளாதாரம் அல்லாத அந்த ஆய்வுகளை முதலில் வையுங்கள். நீங்களும் சரி இந்த உலகத்தின் உச்சியில் யாரிருந்தாலும் மார்க்சியத்தின் முன் ஒருக்காலும் முடியாது.

ஆணாதிக்க ஒடுக்குமுறையையிட்டு மார்க்சியம் கவனம் எடுக்கவில்லை என்பது வரலாற்று புரட்டாகும். "ஆணாதிக்கமும் பெண்ணியமும்" என்ற எனது நூலின் மூன்றாவது பாகம் (மிகவிரைவில் வெளிவரவுள்ளது) இந்த புரட்டை ஆதாரத்துடன் தகர்க்கின்றது. ஆணாதிகத்தை எதிர்த்து மார்க்சியம் போராடிய கடந்த 150 வருட வரலாற்றுக்கு நிகராக, யாரும் எதையும் இதுவரை செய்ததில்லை, இனியும் செய்யப்போவதில்லை. மார்க்சியம் மட்டும் தான் ஆணாதிக்கத்தை இந்த மண்ணில் இருந்து புடுங்கியெறியும். கடந்த காலத்தில் பெண்ணின் ஜனநாயகப் கோரிக்கையை பாட்டாளி வர்க்கம் உயர்த்தியும் ஆதாரித்தும் போராடிய அதே நேரம், ஜனநாயக் கோரிக்கை அல்லாத அனைத்தையும் எதிர்த்தே வந்துள்ளது. இது தான் பாட்டாளி வாக்கத்தின் எதிர் கால நிகழ்ச்சி நிரலும் கூட.

சாதியத்தை எடுத்தால் அது இந்தியாவுக்கும், இந்தியாவைச் சுற்றியுள்ள ஒரு சில நாடுகளின் குறிப்பான பிரச்சனையாக, வடிவமாக உள்ளது. இந்த விடயத்தில் கடந்தகால மார்க்சிய போராட்ட வரலாற்றில் ஆய்வுகள் பல வெளிவந்தன. அவை கூட பொதுவான தளத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையிலேயே இன்று வரை உள்ளது. இதன் அடிப்படையில் வீரம் செறிந்த போராட்டங்களை பாட்டாளி வர்க்கம் தொடாச்சியாக நடத்தியும் இருக்கின்றது, நடத்துகின்றது, தொடர்ந்தும் நடத்தும். சாதியம் பற்றிய ஆய்வுகளை அடிப்படையாக கொண்டே 1960 களில் இலங்கையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம், வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாட்டாளி வர்க்கமல்லாத அம்பேக்கர் போன்றவர்கள் இந்து மதத்ததை ஆரய்ந்த போது, வெறுமானே பண்பாடு கலாச்சார வடிவத்துக்குள்ளேயே சாதியை வரையறுத்து ஆராய்துள்ளனர். பொருளாதார கண்ணோட்டத்துடன் உள்ள சாதிய உறவை திட்மிட்டே ஆராயமறுத்தனர். பொருளாதார துறைக்குள் சாதிய ஆய்வை மறுத்த அவர், இந்தியா நாடளுமன்றத்தில் பொருளாதாரத் துறை சார்ந்து சாதிய ஒழுக்குமுறைக்கு இசைவாக பன்றியைப் போல் அந்த சகதியில் பிரண்டு எழுந்தே பாதுகாத்தார். சாதியம் உண்மையில் உயர் வர்க்கங்களின் பொருளாதார வர்க்க நலனை சார்ந்தே உருவாக்கப்பட்டது. இதைத் தெளிவாக மிக விரைவில் நான் எழுதிவரும் நூல் ஒன்று, தெட்டத் தெளிவாக நிறுவும். சாதியத்தை மார்க்சியம் ஆய்வு செய்யவில்லை என்று சொல்ல எந்த விதத்திலும், “அசை” க்கு அருகதை கிடையாது. ஏனெனில் சாதியத்தை பொருளாதார அமைப்புக்கு வெளியில் சுயமாக இருப்பதாக பிதற்றும் போதே, அதன் வக்கிரம் வெளிப்படுகின்றது.

தேசியத்தை மார்க்சியம் ஆய்வு செய்யவில்லை என்பது, உலகறிந்த மூடர்களின் பிதற்றலாக மட்டுமே இருக்கும்;. தேசியத்தை மார்க்சியம் ஆய்வு செய்யாதளவுக்கு, இதுவரை யாரும் செய்தலில்லை. லெனின், ஸ்டாலின் தேசியம் பற்றி ஆய்வுகள் அது சார்ந்த பங்களிப்புகள், தேசியம் உள்ளவரை யாரும் பூசி மொழுக முடியாது. அடுத்து தேசியத்தை பொருளாதாரத்துக்கு வெளியில் ஆய்வு செய்யவேண்டும் என்பது, அசோக் யோகனின் அசைக்க முடியாத கோரிக்கை. இதை புலிகள் சிறப்பாக செய்துள்ளனர். இதைவிட யாரும் புதிதாக முன்வைக்க அவதரிக்க தேவைவயில்லை. சிலவேளை நீங்கள் பொருளாதாரத்துக்கு வெளியில் உருவாக்கிய புளெட் அமைப்பு புலிகளுக்கு பதில் அதிகாரத்துக்கு வந்திருந்தால், சிலவேளை எல்லாம் சரியாகியிருந்திருக்கும்;. இப்பவும் கூட பிரச்சனையில்லை. தேசியத்தை பொருளாதாரத்துக்கு வெளியில் விளக்கி போராடும் புலியுடன் இணைந்து அதைப் பலப்படுத்தலாம்;. மாhக்ஸ் அங்கே வந்து இணைவது என்பது, அதாவது நீங்கள் பொருளாதாரம் அற்ற தேசியத்தை நோக்கி "மறுபடியும் மார்க்சிய"த்திடம் அழைத்துச் செல்ல நினைப்பது, இந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவு களஞ்சியமாகிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதற்கும் முயலுங்கள்!

"சுற்றுச்சூழல், சமபாலுறவு, உளவியல்" போன்ற "பொருளாதாரமல்லாத" விடையத்தை மார்க்சியம் கவனிக்கவில்லையாம்;. சுற்றுச்சூழல் பிரச்சனை என்பது பொருளாதாரத்;துடன் தொடர்புடையது இல்லையாம்;. நம்புங்கள். ஆனால் கார்ல் மார்க்ஸ் இது பற்றி "தொழிற்சாலை முதலாளிகள் சுத்தமும் சுகாதாரமும் பேணும் வழிமுறைகளை, கடைபிடிப்பதன் மூலம், தங்களுடைய லாபத்தில் பாதிப்பு ஏற்படும் எனில், ஒருபோதும் அதைச் செய்வதில்லை." என்று  தொலைச் சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள நிலையை தெட்டத் தெளிவாகவே கூறிவிடுகின்றார். மூலதனத்தில் இது பற்றி நிறையவே எழுதுகின்றார். உழைக்கு மக்கள் சுவசிக்க முடியாத அளவுக்கு, எப்படி தொழிச்சாலைகள் உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிறுவுகின்றார். இன்று போல் அன்று உற்பத்திகள் பெரியளவில் சூழலை நாசமாக்கவில்லை. அதன் எல்லைக்குள் கூட மார்க்ஸ் எங்கெல்ஸ் பல கட்டுரைகளில் இவை பற்றி அம்பலம் செய்துள்ளனர். உலகமயமாதல் உற்பத்தி அனைத்தும் சுற்றுச்சூழலை மீறுபவானவாகியுள்ளது. இப்படி இருக்கின்ற போது, அது பொருளாதாரம் சார்ந்தவையல்ல என்பது “அசை” யின் நவீன கண்டுபிடிப்பு. இயற்கையை அழிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க, அதை மார்க்சியம் கவணத்தில எடுக்க தவறி விட்டதாக கூறியபடி, சமபாலுறவை மார்க்சியம் அங்கீகரித்து கவனமெடுக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். பாலியல் கூட சுற்றுச்சூழல் சார்ந்த இயற்கை என்ற எல்லைக்குட்பட்டதே. இயற்கைக்கு புறம்பான பாலியல் கூட இயற்கையை அழிக்கின்றது. “அசை” யின் முரண்பாடு அடிப்படை விடயத்திலேயே நீட்டுகின்றது.. சுற்றுச்சூழல் பிரச்சனை கூட இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பே பாரியளவில் பிரச்சனைக்குரியதாகியது. இரண்டாம் உலக யுத்த்ததின் போது யுத்த ஆயுதமாக உபயோகிக்கப்பட்டவையும், அது சார்ந்த அறிவியலின் வெளிப்பாடுகள் தான், பிந்திய சமூதாயத்தில் மூலதனத்தை திரட்டுவனவாகி சுற்றுச்சூழலை அழித்து விடும் ஒரு வடிவமாகியுள்ளது. (இங்கு சுற்றுச்சூழல் என்ற சொற்பதத்தையும் அதன் உள்ளடகத்தையும் மார்க்சியம் நிராகரிக்கின்றது. இது தனிச் சொத்துரிமை கண்ணோட்டம் சார்ந்தது இயற்கையை மனிதனுக்கு அடிமையாக்கி விளக்குவதாகும். இதை விரிவாக வெளிவரவுள்ள "உலகமயமாதலும் சர்வதேசியமும்" என்ற எனது நூலில் ஆராய்துள்ளேன்) இதை நடைமுறையில் போராடும் எல்லா சிறு போராட்டங்களிலும், பாட்டாளி வர்க்கம் நடைமுறை சார்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை கோரி போராடுவதை குருட்டு கண்ணாடி போட்டவர்களால் ஒருக்காலும் காணமுடியாது. இது போன்று இன்ற உலகமயமாதல் விளைவால் சந்திக்கும் உளவியல் பிரச்சனையை, பொருளாதாரத்துக்கு வெளியில் ஆய்வு செய்யவும், போராடவும் மார்க்சியத்தை அழைத்து, விபச்சாரம் செய்ய கோரியபடி இதையே "மறுபடியும் மார்க்சிடம்" அழைத்துச் செல்வதாக கூறுபவர்கள் உலகமயமாதலுக்கு வாலாட்டி குலைப்பவர்களே. இது “அசை” க்கும் பொருந்துமல்லவா!

உலகமயமாதலுக்கு வாலாட்டி குலைக்க அழைக்கும் “அசை” , அதையே அழகாக ".. ஏகாதிபத்திய சதி, பிற்போக்குவாதம், தன்னார்வக் குழுக்களின் சதி, புரட்டல்வாதம், திரிபுவாதம் என்பதை நமது தோல்விக்கான காரணங்களாக உச்சாடணம் செய்து கொண்டிருக்க முடியாது" என்று கூறுகின்றது. இப்படி கூறுபவர்கள், எதைத்தான் இந்தத் தோல்விக்கு காரணம் என்று ஒரு வரியில் தன்னும் சொல்ல வக்கற்றவராகிவிடுகின்றனர். அதாவது திரிபுவாதம் தொடங்கி ஏகாதிபத்திய ஊடுருவல் வரை ஒரு கம்யூனிசக் கட்சியில் அல்லது புரட்சிக்கு பிந்திய நாட்டில் இருக்கவே முடியாது என்று, அசைத்து அடித்துச் சொல்லும் இவர்களே அதன் பிரதிநிதியாக இருந்தபடி, அதைப் பாதுகாக்க சபதம் ஏற்கின்றனர். வரலாற்றில் இந்த நிகழ்வுகள் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் மட்டுமல்ல, பல்வேறு வர்க்கங்களின் வர்க்கப் போராட்டத்திலும் கூட நடப்பவைதான்;. இது நிகழவே முடியாது என்பது, உள்ளடக்கத்தில் இந்த போக்கை அரசியல் ரீதியாக பாதுகாக்கும் முயற்சியாகும்;. பாட்டாளி வர்க்க கட்சி அல்லது புரட்சிகர நாடு தனது வர்க்க கடமையை கைவிட்டு துரோகம் செய்வதை எப்படி அடையாளம் காண்பது. இதை சொல்லாத “அசை”, அதை மூடிமறைத்து பாதுகாக்க சபதம் ஏற்கின்றது.

இந்த மார்க்சிய விரோத அரசியலை அரங்கேற்றிய தொடர்ச்சியில் "ஸ்டாலினிசம் குறித்த நிறையப் பேசியாகிவிட்டது. டிராட்ஸ்கியத்தின் நிரந்தரப் புரட்சி குறித்தும், மாவோயிசத்தின் பங்களிப்புகளாகச் சொல்லப்படுகின்ற கலாச்சாரப் புரட்சி மற்றும் மாபெரும் பாய்ச்சல் போன்றவை குறித்தும் நாம் பேசியாக வேண்டும்;" என்பது கூட ஒரு வேடிக்கையான வாதமே. உண்மையில் இங்கு பேசியாக வேண்டும் என்பது, ஸ்டாலின் மீதான அவதூறு போன்று மாவோவின் காலச்சார புரட்சி குறித்து அவதூறுகளை பேசியாக வேண்டும் என்பதே. ஸ்டாலின் பற்றி பேசியதாக கூறுபவை எல்லாம், ஸ்டாலின் பற்றிய அவதூறகளே. ஸ்ராலின் பற்றி பாட்டாளி வர்க்கம் வைத்த எந்த விவாதத்துக்கும் இன்று வரை, "மறுபடியும் மார்க்சிடம்" செல்லும் யாரும் பதிலளிக்க வக்கற்றவரகவே உயிர் வாழ்கின்றனர். ஆதாரமற்ற வெற்றிடத்தில் இருந்து ஏகாதிபத்திய கழிசடைகள் செய்தியாக்க, அதில் இருந்து கவனமாக அவதூறுகளை பொறுக்கியெடுத்து தொகுப்பதையே, "மறுபடியும் மார்க்சிடம்" என்ற சொல்லி அசைகின்றனர். ஸ்டாலின் புரட்சிகர மார்க்சிய வரலாற்றை ஏற்று அதை முன்னெடுத்த மாவோவுக்கு எதிராக அவதூறை முன்வைப்பது“அசை”  போன்ற கும்பலுக்கு அவசியமாகின்றது. கலாச்சார புரட்சியூடாக நடத்திய வர்க்கப் போராட்டத்தில் இருந்து, அவதூறை கண்டுபிடிக்க கோருகின்றனர். இதற்கு மார்க்சியத்தில் இருந்து விலகிய டிராட்ஸ்கியின்; நிரந்தர புரட்சி தத்துவத்தை முன்வைக்க வேண்டும் என்கின்றனர். நிரந்தர புரட்சி என்பது என்ன என்பதையே விளக்க முடியாதவர்கள், அதை தூக்கி காட்டுவதுதான் இன்றைய அவலமான அரசியலாகும்.

இந்த அவலத்தில் தொங்கியபடி "அமைப்பியல்வாதம், பின்நவீனத்தவம் போன்றவற்றின் வர்க்கத் தன்மையும், வலதுசாரி இடதுசாரி நிலைப்பாடுகளையும் நாம் அவதானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்." எனறு கூறி "மறுபடியும் மார்க்சிடம்" அசைவதாக கூறுவதும் நிகழ்கின்றது. பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம் என்பன மார்க்சியத்துக்கு எதிரான திட்டவட்டமான ஒரு கோட்பாடாகும்;. இதில் இடது வலது என பிரித்து மார்க்சியத்துக்கு ஒட்டுப் போட்டு விடக் கோருவது இன்றைய நவீன திரிபுவதமாகும்;. எல்லா சமூகக் கோட்பாட்டிலும் வலது இடது தன்மை இருப்பது இயற்கை. அதில் இடது தன்மையை முரணற்ற மாhக்சியம் உள்வாங்க வேண்டும் என்பதும், மார்க்சியத்துடன் இனைத்து விளக்க முயல்வதும், மார்க்சியத்தை அதன் அடிப்படையில் இருந்து வெட்டித் திரித்துவிட முயல்வதாகும். கடந்தகால நிகழ்கால திரிபுவாதிகளால் இந்த முயற்சியை உலக முழுக்க மீளமீள செய்ய முயன்று பலமுறை தோற்றனர். இந்தப் போக்குகள் அம்பலப்பட்டு வருவதும், வர்க்கப் போராட்டம் இதற்கு எதிராக கூர்மையாகி வருவது இன்றைய உலக நிலையாகும். இந்த வர்க்கப்போராட்ட வரலாற்றில் சினிமா பாணியில்; மாhக்சியத்தை வெட்டித் திருத்தி முன்வைக்கும் எல்லா மோசடிகளும் அம்பலப்பட்டு வருகின்றன. இந்த வகையில் விளம்பர பாணியில் வந்த “அசை” யும் அதன் வர்க்க அடிப்படையும் நிர்வாணமாகி விடுகின்றது.