08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

நாசிசத்தின் வளர்ச்சிக்கும் மூலதனத்துக்கும் உள்ள ஜனநாயக பிணைப்பு உலகளாவியது

அண்மையில் பிரான்சில் நடந்த ஐனாதிபதிக்கான தேர்தலில், நாசிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவானார்கள். அதை அடுத்து பிரான்ஸ் மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த அதிர்வைத் தொடர்ந்து இதற்கெதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள், ஆளும் வர்க்கங்களையே கிலியூட்டின. பிரான்சின் அரசியல் கட்சிகள் அனைத்தும் தடுமாறின. உள் சிதைவுகள் முதல் கட்சிகளின் தலைவிதிகளே கேள்விக்குள்ளாகியது. லட்சக்கணக்கான மக்கள் புதிதாக அரசியல் உணர்வு பெற்றனர், அரசியல் ரீதியான புதிய தேடுதல் தீவிரமாகியுள்ளது. எப்படி நாசிகள் ஆட்சிக்கு வரமுடிகின்றது என்பது தீவிர தேடுதலுக்குள்ளாகியுள்ளது. ஏகாதிபத்திய அதிகாரவர்க்கங்கள் நாசிசம் பற்றி மூடிமறைத்து வெளியிடும் திரிபுகளுக்கு வெளியில், வரலாற்றின் உண்மைத் தன்மை தேடுவது அதிகரித்துள்ளது.

துரோகத்தை அரசியலாக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அத்திம காலத்தில் சேடமிளுக்கின்றது. வலதுக்கும்  இடதுக்கும் இடையில் வேறுபாடற்ற உலகமயமாதல் கொள்கை, அரசியல் ரீதியாக ஒரே குடையின் கீழ், பெயருக்கு வெளியில் சங்கமாகின்றனர். தீவிரமான இடது தன்மையும் வலது தன்மையும் நேர் எதிர்த் திசைகளில், என்றுமில்லாத வகையில் வளர்ச்சி பெறுகின்றது. ஒரு புரட்சிகர சமூக கண்ணோட்டமும், தீவிர பாசிச வலது சமூக கண்ணோட்டமும் ஐரோப்பா எங்கும் சீராக வளர்ச்சி பெறுகின்றது. நாசிச பாசிசத்துக்கு எதிரான அரசியல் கண்ணோட்டம், நடுநிலை என்பதை தகர்த்து ஒரு உற்சாகமான அரசியல் எழுச்சியாக மாறியது, மாறிவருகின்றது. பிரான்சின் சிறு நகரங்கள் கூட நாசிசத்துக்கு எதிரான தன்னெழுச்சியான அலை அலையான போராட்டங்களாக எழுச்சி பெற்றன. மக்கள் திரள் நடவடிக்கை ஒரு சமூக நடைமுறையாகியுள்ளது. மக்களின் சமூக நடைமுறை சார்ந்த உணர்வுபூர்வமான உணர்ச்சி, வராலாற்றில் மீண்டும் ஒருமுறை தன்னெழுச்சியாக எழுந்ததன் மூலம், உலகுக்கு மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள் என்பதை பாறைசாற்றியுள்ளனர்.

மறுதளத்தில் தீவிர வலது நாசிக் கட்சி தனது கொள்கையை தெளிவாக முன்வைத்து அரசியல் மயமாக்குகின்றது. தேசிய சோசலிசம் என்ற கிட்லரின் அதே கொள்கையை பூச்சுகளுடன் மீளவும் முன்வைக்கின்றனர். வேலையற்றவர்களை கவர்ந்தும், தேசிய சிறு உற்பத்தியளர்களின் தேசிய சுரண்டல் கனவுகளை பிரதிபலித்தும், தேசங்கடந்த பன்நாட்டு நிறுவனங்களின் உலகை சூறையாடிச் சுரண்டும் உலகமயமாதலும் தெளிவான பாதையை காட்டுகின்றனர். பிரான்சின் தேசிய வெள்ளையின பாசிச விரிவாக்க நலன்களை முதன்மைப்படுத்தி உலகளாவிய ஆதிக்க சக்தியாக திகழ நம்பிக்கை ஊட்டுகின்றனர்.

பிரன்சில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதன் மூலம் அல்லது நாசிய பாசிச படுகொலைகள் மூலம், வேலையில்லாத வெள்ளையினத்தவருக்கு வேலை வழங்க நடைமுறைத் தீர்வை முன்வைக்கின்றனர். வேலை இல்லாத வெள்ளையினத்தவர்கள் சமன் வெளிநாட்டவர்கள் என்ற பாசிச சமன்பாட்டை, வெள்ளையின சுவர்களில் ஒட்டி இனவெறி நாசிசத்தை சமூக மயமாக்கின்றனர். இவர்களே அண்மையில் கம்யூனிசம் சமன் 8 கோடி மக்களின் உயிர் என்ற அவதூற்றையும், அதே சுவர்களில் ஒட்டியவர்களே. நாசிசம் மூலதனத்தின் உற்பத்தி என்பதையும், பாசிசம் உழைக்கும் மக்களை அடக்கியாளும் ஒரு ஆட்சி வடிவம் என்பதையும் வராலாற்றில் மீண்டும் ஒருமுறை கூறிச் சென்றனர்.

ஆனால் உண்மை நிலை என்ன? ஜெர்மனியில் வேலை செய்பவர்களில் வெளிநாட்டடைச் சேர்ந்தவர்கள் 25 லட்சமாகவும். உழைக்கும் மக்கள் தொகையில் 9.1 சதவீதமாகவும் உள்ளனர். இது பிரான்சில் 15 லட்சமாகவும் உழைக்கும் மக்களில் 6.1 சதவீதமாகவும் உள்ளனர். ஸ்பனியோலில் 1.91 லட்சமாகவும் உழைக்கும் மக்களில் 1.2 சதவீதமாகவும் உள்ளனர். வேலையற்ற வெளிநாட்டவர்கள் ஜெர்மனியில 15.9 சதவீதமாகவும், பிரான்சில் 22 சதவீதமாகவும் இருக்க, மற்றவர்கள் ஐரோப்பா அளவில் 8.5 சதவீதமாக உள்ளனர். இன, நிற வர்க்க ஒழுக்குமுறை வெளிநாட்டவரின் உழைப்பின் ஆற்றலைக் கூட பிளந்தே வைத்துள்ளது.

ஆனால் நாசிகள் வெளி நாட்டவரை ஒழித்துக்கட்டுவதன் மூலம், அவர்களுக்கு கிடைக்கும் வேலையையும், வீட்டு வசதியையும், சமூக உதவிகளையும் பறித்து, அதை வெள்ளையினத்தவருக்கு வழங்க நடைமுறை ரீதியாகவே உத்தரவாதம் வழங்குகின்றனர். நாசிகள் கைப்பற்றிய பிரதேசங்களில் நகர ஆட்சிகளில், இது போன்று வெள்ளையினத்தவருக்கான சிறப்பு சலுகைகளை வழங்குகின்றனர். உதாரணமாக வெள்ளையினக் குழந்தை பிறந்தால், 5000 பிராங் பணம் அன்பளிப்பு என்ற நடைமுறை நாசிச சமூகமயமாக்கலை அமுல் செய்யப்பட்டது. இப்படி பல.

வெளிநாட்டைச் சேர்ந்த பெற்றோருக்கு பிரான்சில் பிறந்த சிறுபான்மை இளையர்களால் நடத்தப்படும், சிறுவழிப்பறி கொள்ளைகளும் வன்முறைகளையும் வெளிநாட்டவர்கள் மேலான நாசிசத்தை சமூகமயமாக்கும் பொது நடவடிக்கை மூலம், தடுக்க உத்தரவாதம் வழங்குகின்றனர். உலகமயமாதலையும், ஐரோப்பிய ஒன்றிணைவையும் எதிர்க்கும் நாசி கட்சி, தேசிய சிறு உற்பத்தியளாருக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர். இதன் மூலம் பாரம்பரிய கிறிஸ்துவ பண்பாட்டு மத சக்திகளை அணிதிரட்ட முடிகின்றது. உலகமயமாகும் பண்பாட்டுக்கு பதில், நிலப்பிரபுத்துவ கிறிஸ்துவ பண்பாட்டை கோரும் மத அடிப்படைவாத பிரிவுகளின் ஆதரவைப் பெறமுடிகின்றது. மதத்தை பாதுகாப்பது என்ற பராம்பரிய பாசிச தேசிய அடிப்படைவாதத்தை முன்வைப்பதன் மூலம், மதத்தின் பின்னுள்ள கணிசமான மக்களின் ஆதரவை திரட்டமுடிகின்றது. ஐரோப்பிய மையவாதம் சார்ந்த உலகமயமாதலின் கீழ், அமெரிக்காவுக்கு நிகரான உலக ஆதிக்க சக்தியாக இல்லை என்பதால் ஐரோப்பிய ஒன்றிணைவையும் உலகமயமாதலையும் எதிர்க்கின்றனர். இதன் மூலம் உலகமயமாதலை எதிர்க்கும் சக்திகளின் ஆதரவை பெறுகின்றனர். உலகமயமாதலில் பிரான்சின் அல்லது ஐரோப்பாவின் நலன்களை உறுதிசெய்யும், உலகயுத்தத்தை நடத்தும் தாக்கும் நிலைக்கு தமது நாசிச அடிப்படைக் கோட்பாட்டை சமூகமயமாக்கின்றனர். தாம் ஆட்சிக்கு வந்தால் பிரன்சினதும், ஐரோப்பாவினதும் உலக ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவோம் என்று கூறுகின்றனர். ஐரோப்பா எங்கும் சீராக வளர்ச்சி பெறும் நாசி கட்சிகளின் ஒன்றிணைந்த ஐரோப்பிய ஆதிக்கத்தை, உலகில் நிறுவும் நடைமுறை தீர்வை வழங்குகின்றனர். நாசிக்கட்சி தெளிவாக பல்துறை சார்ந்து வைக்கும் தீர்வு, கவர்ச்சிகரமானதாக பாசிச நாசிச வழிகளில் நடைமுறை சார்ந்தாக இனம் காணப்படுவது அதிகரிக்கின்றது. இதற்கு நிகாராக பிரான்சில் தெளிவான நடைமுறை தீர்வு சார்ந்த, தெளிவான பதில்களைக் கொண்ட கட்சிகள் இல்லை. ஐரோப்பா எங்கும் நாசிகள் சீராக கோட்பாட்ட ரீதியாக வளர்ச்சி பெறுகின்றனர். ஐரோப்பா எங்கும் கிறிஸ்துவ மற்றும் வலதுசாரி கூட்டு அரசுகளில் நாசிக் கட்சிகள் பங்கேற்கின்றன. இதன் மூலம் வலதுசாரிக் கட்சிகளின் அரசியல் சக்திகளை, தம் பக்கத்துக்கு படிப்படியாக உள்வாங்குகின்றனர். பெரும்பான்மை பலம் இன்றி, மக்களின் ஆதாரவு இன்றி வலதுசாரிகளின் துணையுடன் முழு ஆட்சியையும் கைப்பற்றும் அளவுக்கு, நடைமுறைவாதிகளாகவும் கொள்கைவாதிகளாகவும் உள்ளனர். இதைத் தான் அன்று நாசிச பாசிட்டான கிட்லர் முதல் இன்று உலக முழுக்க பரந்த பாசிச ஆட்சிகளில் காணமுடிக்கின்றது. நாசிச பாசிச ஆட்சி என்பது மீண்டும் ஐரோப்பாவில் ஏற்படும் அளவுக்கு நிலைமை முதிர்ந்து வருகின்றது.

தனிமனித வாதமும், வெள்ளை நிறைவெறியும், கிறிஸ்துவ மத அடிப்படைவாதமும் நாசிக்கட்சியின் தீவிர உறுப்பினரை உருவாக்கின்றது. இது உலகைச் சூறையாடும் மூலதனத்தின் நெருக்கடியுடன், அதை மீட்டு எடுக்கும் பாசிச நடைமுறை தீர்வுடன் ஆட்சிக்கு வரத்துடிக்கின்றது. சிறு உற்பத்தியாளர்கள் முதல் தேசம் கடந்த பன்நாட்டு மூலதனத்தையும் கவருகின்றது. வேலையற்றவர்களையும், தொழிலாளர்களையும் விட்டுவிடமால் உள்வாங்கும் திறணைப் பெறுகின்றது. நாசிக் கட்சி ஐரோப்பா எங்கும் ஒரேவிதமாக ஒரே கொள்கை அடிப்படையில் வளர்ச்சி பெறுகின்றது. கிட்லர் ஐரோப்பவை ஆக்கிரமித்த வழிக்கு மாறாக ஜனநாயகத்தின் துணையுடன்; ஐரோப்பாவில் ஒன்றிணைந்த நாசி ஆட்சியை கைப்பற்றவும், உலகை ஆக்கிரமிக்கும் கிட்டலரின் படிநிலை வடிவத்தில் வேகமாக வளர்ச்சி பெறுகின்றது. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை முறியடித்து, அதை தனது ஆதிக்க கோட்டையாக்க மார்பு தட்டுகின்றது. உலக மக்களின் புதிய எதிரியாக, மூன்றாவது உலகை யுத்தத்துக்கு தாக்கும் நிலைக்குள் கொண்டு செல்லும் அளவுக்கு நாசிக் கட்சியின் வளர்ச்சி காணப்படுகின்றது.

நாசிகளின் வளர்ச்சி தற்செயலானவையல்ல. சுரண்டும் ஜனநாயக அமைப்பில் நிலவும் ஜனநாயக வடிவத்தின் மூலம் தான் நாசிகள் ஆட்சிக்கு வருவார்கள். உழைக்கும் மக்களை தொடர்ந்தும் நிலவும் போலி ஜனநாயக வடிவில் ஆளமுடியாத ஒரு நிலையிலேயே, நாசிகளின் பாசிச ஆட்சி மூலதனத்தின் ஒரு நெம்பாகின்றது. கிட்டலரும் அவனுடைய நாசிக் கட்சியும் கூட ஜனநாயக வடிவத்தின் ஊடாகவே ஆட்சிக்கு வந்தவர்கள். நிலவும் ஜனநாயகம் என்பது மக்களை பிளந்து அதில் தான் உயிர்வாழ்கின்றது. அதாவது பராளுமன்ற ஜனநாயகமான சுரண்டும் ஆட்சி அமைப்பும் என்பது, மக்களை ஜனநாயக விரோதமாக பிளந்து காட்டுவதன் மூலம் மக்களை மக்கள் சூறையாடுவதை நியாப்படுத்துவதாகும்;. இதற்கு வெளியில் ஜனநாயகம் என்பதற்கு எந்த அர்த்தமும் கிடையாது. அனைவருக்கும் ஜனநாயகம் இருப்பின், ஜனநாயகம் என்பது அர்த்தம் இழந்துவிடும்;. ஜனநாயகம் ஒரு பகுதிக்கு மறுக்கப்படும் எல்லா நிலையிலும் தான், ஜனநாயகம் செழித்து வளருகின்றது. நாசிகள் கூட இந்த மனித விரோத ஜனநயாக பிளவுகளில் தான் உருவாகின்றனர். இதற்கு நிலவும் ஜனநாயக அமைப்பு அச்சாணியாக அத்திவாரமாகவும் உள்ளது. மக்களை வர்க்கம், இனம், நிறம், மதம் பண்பாடு, கலாச்சாரம் என்று எதோ ஒன்றில் அல்லது பலதில் மனிதப்பிளவை உருவாக்கி, அதை ஜனநாயக பூர்வமானதாக்கிய ஜனநாயக அமைப்பில் தான், நாசிசம் தனது பாசிசத்தை மக்களை மேல் நிறுவுகின்றனர். அதாவது இருக்கின்ற ஜனநாயக பிளவுகளை தீவிரமாக்குவதன் மூலம், மூலதனத்தையும் அதன் பண்பாட்டு கூறுகளையும் பாசிச வழிகளில் அனைத்து மக்கள் மேலும் திணிக்க முயல்கின்றனர். சமூக நெருக்கடிகளை ஆழமாக்கும் நாசிசம், ஜனநாயக பிளவுக்குள் வடிகாலகின்றனர். நாசிச பாசிச கட்சிகள் எதை கண்ணியாக பிடித்து அதில் முன்னேறுகின்றனர் எனப் பார்ப்போம்.

1.வெளிநாட்டவரின் எண்ணிக்கைக்கு சமனாக வேலையற்றவர்கள் உள்ளனர் என்பதை புள்ளிவிபர ரீதியாக காட்டி நிறுவமுயல்கின்றனர். வேலைவாய்ப்பு அனைத்தும் பிரஞ்சுக்காரருக்கே அதாவது வெள்ளையினத்தவருக்கே என்பதை உறுதி செய்து வேலைவாய்ப்பை நாசி மயமாக்கின்றனர்.

2.வெளிநாட்டவர்களை சுரண்டும் மூலதனம் வழங்கும் குறைந்த கூலியை காட்டி, இதனால் பிரஞ்சு மக்களின் கூலியைக் குறைக்கின்றது என்பதை நிறுவுவது. இதனால்; பிரஞ்சுக்காரரின் வேலை இழப்புக்கு வெளிநாட்டவரின் குறைந்த கூலியே காரணம் எனக்காட்டி, வெளிநாட்டவருக்கு எதிரான இனத்துவசத்தை சமூகமயமாக்கின்றனர். அத்துடன் வெளிநாட்டவர்கள் எதையும் செய்யத் தயாரான அடிமைத் தன்மையே, வெள்ளையினத்தவரின் இழிநிலைக்கு காரணம் என நிறுவ முயல்கின்றனர். ஆனால் குறைந்த கூலியை வழங்கும் மூலதனத்தையும், இழிந்தநிலைக்கு உள்ளாக்கி அடிமை வேலை வாங்கும் மூலதனத்தை பாதுகாக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இழிநிலைக்கு கொண்டுவரும் உறுதிமொழியை பெற்று மூலதனம் பாசிசமாகின்றது.

3.வீதி வழிபறி கொள்ளைகள் மற்றும் வன்முறைகள் வெளிநாட்டவரால் தான் நடத்தப்படுகின்றது என நிறுவி, சமூகத்தையே வெளிநாட்டவருக்கு எதிரான கண்காணிப்பை  நாசிசமயமாக்கின்றனர்.

4.சட்டத்துக்கு புறம்பாக வெளிநாட்டவர் களவாக (கறுப்பாக) வேலை செய்வதாக நிறுவ முயல்கின்றனர். இதன் மூலம் வெள்ளையினத்தவரின் வேலை பறிக்கப்படுவதாகவும், வெள்ளையினம் இழிவுறுவதாக காட்டி உழைக்கும் வெளிநாட்டவரை இழிவாக்கி  உழைக்கும் மக்களை நாசிமயமாக்கின்றனர்.

5.வெளிநாட்டவர்களே போதைவஸ்த்துகளை கடத்துபவர்களாகவும், விற்பவர்களாகவும் உள்ளனர் என நிறுவமுயன்று, வெளிநாட்டவர்களை சமூக விரோத குற்றவாளிகளாக இனம் காணும் நாசிசமயமாக்கல் நிகழ்கின்றது.

6.வெளிநாட்டவர்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் பிரஞ்சு பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் எதிரானது என்று கூறி, கலாச்சாரத்தை நாசிசமயமாக்கின்றனர்.

7.வெளிநாட்டவர்கள் அதிக பிள்ளையை பெற்று அதிக சமூக உதவிகளையும், சலுகைகளை பெறுவதாக நிறுவமுயல்கின்றனர். வெளிநாட்டவருக்கான சமூக உதவிகளை நிறுத்தி, அதை பிரஞ்சுக்காரருக்கு வழங்க உத்தரவாதம் அளிக்கின்றனர். அந்த வகையில் மருத்துவம், குழந்தை வளர்ப்புக்கான சமூக உதவி, வீட்டு வாடகைக்கான உதவி என்று அனைத்தும் வெளி நாட்டவருக்கு மறுக்கப்படும் என்று பிரகடனம் செய்கின்றனர். இந்த உதவி கூட எமது கூலியில் இருந்து எடுக்கப்படுகின்றது, என்பதை சொல்ல முடியாத கட்சிகள் உள்ள சமூகத்தில் தான் நாசிகளின் வளர்ச்சி நிகழ்கின்றது.

8.சர்வதேச பயங்கரவாதத்தில் வெளிநாட்டவர்கள் ஈடுபடுவதாக காட்டி, சர்வதேச ரீதியாகவே நாசிசத்தை ஆயுதபாணியாகின்றனர்.

9.வெளிநாட்டவர்கள் உழைக்கும் பணத்தையும், சமூக உதவிகளையும் வெளிநாட்டுக்கு கடத்துவதால், தேசிய செல்வம் வெளியேறுவதாக நிறுவி நாசித்தை தேசியமயமாக்கின்றனர்.

10.தேசிய உற்பத்திகளுக்கு பாதுகாப்புடன் கூடிய உலகமயமாகும் சந்தையை விரிவாக்கும் பொருளாதாரம் என்ற கொள்கை மூலம், மூலதனத்தை நாசிமயமாக்கின்றனர்.

12.சட்டவிதிகளை கடுமையாக்கி சமூக ஒழுங்கை இறுக்கமாக்கி தனிப்பட்டவர்களின் நலனை பாதுகாக்கும் உத்தரவாதத்தம் சட்ட ஒழுங்கை நாசிமயமாக்கின்றனர். இதன் மூலம் தனிப்பட்டவன் சுதந்திரமாக வாழவும், அதிக பாதுகாப்புடன் கூடிய நாசிய வாழ்வை முன்வைக்கின்றனர்.

இப்படி பற்பல கோசங்களையும் விளக்கவுரைகளையும் உள்ளடக்கிய, நாசிசத்தை அரசியல் மயமாக்கும் வழியில் சமூக மயமாக்கின்றனர். இதன் மூலம் கொள்கை அடிப்படையில் ஐரோப்பா எங்கும் சீராக வளர்ச்சி பெற்று வருகின்றனர். மாற்று அரசியல் தீர்வற்ற சமூக அமைப்பில,; இக் கோசங்கள் கவர்ச்சிகரமாகின்றது. இதன் பால் கவரப்படுவது அதிகரிக்கின்றது. ஐரோப்பிய ஐனநாயகத் தேர்தல்களின் மையக் கோசத்தை நாசிகள் தெரிவு செய்வதுடன், அதையே ஐரோப்பியவின் சமூகப் பிரச்சiனையாக மாற்றிவிடுகின்றனர். அனைத்துக் கட்சிகளும் நாசிகளின் கோசத்தின் பின்பாகவே, தமது அரசியல் விளக்கவுரைகளை வால்பிடித்தே வாந்தியெடுக்கின்றனர். வலது இடது வேறுபாடின்றி நாசிகளின் பின்பாக வால் பிடிப்பதுடன், அந்த சகதிக்குள் ஐரோப்பிய சமூகத்தை மந்தைகளாக்கின்றனர்.

சமூகங்களைப் பிளக்கும் நாசிகளின் (இவை ஜனநாயகத்தில் உயிர்வாழ்கின்றது) கோசங்களினால் அதிகரிக்கும் செல்வாக்கை தடுக்க, அதன் பின்னால வால் பிடிக்கும் வலது இடதுகள் நாசிகளின் வேலைத் திட்டத்தையே சிரமேற்று அமுல் செய்கின்றனர். வெளிநாட்டவருக்கு எதிரான கோசம் ஜனநாயகமாகி, ஐரோப்பா எங்கும் ஒரே அலை வீச்சாக உள்ளது. நாசிகள் சங்கை ஊத, மற்றைய கட்சிகள் தாளம் போட்ட படி வெளிநாட்டவர் மீதான வெறுப்பை உமிழ்கின்றனர். வெளிநாட்டவருக்கு எதிரான கடுமையான மனித விரோத சட்டங்களை ஜனநாயகமாக்கின்றனர். அதிகரித்த பொலிஸ் கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு, எல்லைக்கு வேலியிடல், அரசியல் புகலிடச் சட்டத்தை மாற்றுதல் அல்லது இறுக்குதல், வெளிநாட்டவருக்கு வேறுபட்ட சட்டவிதிகள் என்று, ஏராளமான மனித விரோத விசேட சட்டங்களை ஐரோப்பா எங்கும் நிறைவேற்றப்பட்டு ஜனநாயகப்படுத்துகின்றனர். வெளிநாட்டவருக்கு எதிரான சட்டங்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் கடுமையாகி வருகின்றது. நாசிகளின் வேலைத் திட்டத்தை ஜனநாயகப்படுத்தி அமுல் செய்வதன் மூலம், ஜனநாயக ப+ர்வமாகவே நாசிகளை முறியடிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை ஐரோப்பிய கட்சிகள் எடுக்கின்றன. வெளிநாட்டவருக்கு எதிரான கடும் சட்டங்கள் முன்பைவிட மேலும் அதிகமாக, நாள் தோறும் இயற்றப்படுகின்றன. பண்பாட்டு கலாச்சாரக் கூறுகள் வெளிநாட்டவருக்கு எதிராக சமூக மயமாக்கின்றனர். இன்று ஐரோப்பிய ஜனநாயக பராளுமன்றங்கள் செய்வதெல்லாம், வெளிநாட்டவருக்கு எதிராக நாசிக்கட்சியின் பாசிச சர்வாதிகார சட்டவிதிக்கு பதில், அதையே ஜனநாயக சட்டவிதியாக கொண்டு வந்து ஒடுக்குவதன் மூலம் இரண்டு பிரதான விடையத்தை கையாளுகின்றனர்.

1.நாசிக்கட்சியின் செல்வாக்கை கட்டுப்படுத்தி அதனுடன் கோட்பாட்டு ரீதியாக நடைமுறை ரீதியாக சங்கமிக்கின்றனர்.

2.வெள்ளை இனநிற ஏகாதிபத்திய ஆதிக்க வெறியை ஜனநாயகப்படுத்தி வெளிநாட்டவர்களை ஒடுக்குவதில் ஒரு சமூக மயமாக்கலை செய்கின்றனர்.

சமூக விரோத நடவடிக்கைகள் என்றால் அது வெளிநாட்டவர்களின் நடத்தைகளில் ஒன்றாகவும், அவர்களின் பண்பாட்டின் கூறாகவும் காட்டுவதில் கட்சிகளுக்கு இடையில் எந்த வேறுபாடில்லை. அதைச் சொல்லும் விதத்தில் மட்டுமே தம்மை வேறுபடுத்துகின்றனர். பிரான்சின் தேர்த்தில் களத்தில் வெளிநாட்டவர்கள் பற்றிய பிரச்சசைனையும், வெளிநாட்டவர்களின்; வன்முறை பற்றிய பிரச்சனையுமே மையமான விவாதப் பொருளாகியது. இதை வலது இடது கட்சிகள் முதல் செய்தி அமைப்புகள் முன்னிலைப்படுத்தி, வெளி நாட்டவருக்கு எதிரான நாசிச விளக்கவுரைக்கு அரண் சேர்த்தனர். தனிமனிதனின் பாதுகாப்பு மையவிவாதமாகியது. இந்த விடையத்தை சமூகப் பிரச்சனையாக பிரஞ்சு சமூகத்தில் கொண்டு வந்ததே நாசிகள் தான். இதை நாசிக்கு சார்பான விவாதப் பொருளாக்கியது கட்சிகளும், செய்தி அமைப்புக்களுமே. பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையில் சமூக பொருளாதாரக்; கூறுகளையும், அதன் வளர்ச்சியையும் இருக்கின்ற சமூக அமைப்பின் மேலான விவாதமாக மாற்றவில்லை. மாறாக இதை எப்படி கட்டுப்படுத்துவது என்ற விடையத்தில் சட்டம், பொலிஸ் ஆட்சி முறை, தண்டனை முறை, நாடு கடத்துவது என்ற எல்லைக்குள்ளான விவாதமாக மாறியதுடன், அதற்குள் நடைமுறை தீர்வுகளை கட்சிகளும் செய்தி அமைப்புக்களும் முன்வைத்தன. ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த வலதுசாரிக் கட்சி, நாசிசத்தின் கோட்பாடுகளை அடிப்படைகள் பலவற்றை நடைமுறைப்படுத்தி, வெளிநாட்டவருக்கு எதிரான மனிதவிரோதச் சட்டங்களை அமுல் செய்யத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டவருகளுக்கு எதிரான கடும் சட்டங்களையும், நடைமுறைகளையும் அமுலாக்கியுள்ளது. நாசிகளின் வெள்ளையின வாக்கை கவரும் வகையில் இதைச் செய்தன் மூலம், பராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றிகளை பெறமுடிந்தது. வெளிநாட்டு சமூகங்களுக்கு எதிரான இன, நிற, வர்க்க ஒடுக்கமுறைகள் என்றுமில்லாத அளவுக்கு அதிகரிக்கும் என்பதை, ஐரோப்பிய ஜனநாயகம் தன்னை நிர்வாணமாக காட்டத் தொடங்கியுள்ளது.

ஒழுக்கு முறையும்     அடக்கு முறையும் வெளிநாட்டுச் சமுகத்துக்கு எதிராக பாரியளவில் விரிவாகின்றது. அதேநேரம் பரந்த சமுதாயத்தில் குற்றங்கள் என்றுமில்லாத அளவில் அதிகரிக்கின்றது. ஐரோப்பாவில் வாழ்கின்ற 1000 பேருக்கு கிரிமினல் குற்றம் இழைப்போர்.

சுவீடன்      135

பிரிட்டன்     97

டென்மார்க்     93

பின்னலாந்     84

பெல்ஐpயம்     84

டென்மார்க்     78

ஜெர்மனி     77

லக்கசம்பேர்க்     63

பிரான்ஸ்     61

ஒஸ்ரியா     61

இத்தாலி     41

கிறிஸ்      36

அயர்லாந்து     17

போத்துகல்     7

மூலதனம் விரிவாக்கும் குற்றத்தின் தன்மையை கண்காணிக்கவும் அடக்கவும் பொலிசாரை சார்ந்து நிற்கும் சமூக அமைப்பு கண்ணோட்டம் விரிவாகின்றது. சமூக குற்றங்களை கைது சிறை என்ற வடிவில்; கையாளும் ஜனநாயக அமைப்பு, அதன் அச்சாணியாக பொலிஸ் அடக்குமுறை இயந்திரத்தை சார்ந்து தன்னை நிலைநிறுத்துகின்றது. இந்த வகையில் ஒருலட்சம் மக்களைக் கண்கணிக்கும் பொலிசார் எண்ணிக்கை

இத்தாலி      476

பிரான்ஸ்     396

ஜெர்மனி     329

பிhட்டன்     303

சுவீடன்      286

டென்மார்க்     198

கண்காணிப்பும் கைதும் சிறையும் ஜனநாயகமாவது என்றுமில்லாத அளவில் அதிகரிக்கின்றது. அதேநேரம்; இளம் சமுதாயம் இழைக்கும்; குற்றங்கள் என்று இல்லாத அளவில் விரிவாகின்றது. மூலதனம் தனது நுகர்வுப் பண்பாட்டை சமூக மயமாக்க, அதன் பக்க விளைவாக குற்றங்கள் பெருகுகின்றன. இதில் இளம் சமுதாயம் பாரிய அளவில் ஈடுபடுகின்றது. ஜெர்மனியில் மற்றவர்களை காயப்படுத்தும் 14 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 14.1 சதவீதத்தால் சென்ற வருடம் அதிகரித்துள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட 5.9 சதவீதமானவாகள் அதாவது 152 774 பேர் மற்றவர்களை காயப்படுத்தும் வன்முறைகளில் ஈடுபட்டனர்.

பிரன்சில் சிறிய தண்டைக்குள்ளாகும் இளையர்களின் எண்ணிக்கையை

1995  34290

1996  41380

1997  43910

1998  44990

1999  45410

2000  44360 (உறுதியானது அல்ல)

இளம் தலைமுறை குற்றங்களை இழைப்பதில் எந்த விதத்திலும் தயக்கமும் காட்டுவதில்லை. சமுதாயம் மீது தனிமனித வக்கிரமாக வன்முறையை பிரயோகிப்பதில், ஈடு இனையற்ற வகையில் கதநாயகனுக்குரிய திமிரில் கையாளுகின்றனர். 2000ம் ஆண்டில் பிரான்சில் எந்த குற்றத்துக்காக சிறை சென்றுள்ளனர் எனப் பார்ப்போம்.

வீதி சட்டத்தை மீறியது          132 000

களவு, திருட்டை மறைத்தல்,..     147 500

மற்றவர் மீதான வன்முறை         76400 (இதில் 41900 காயப்படுத்தியது, வலிய சண்டை செய்தவை)

நீதிமோசடி                  19700

மற்றவை                    68000

இந்த குற்றத்தை இழைத்து தண்டனை பெற்றவர்கள் வயதைப் பார்ப்பொம்.

1995 2000

-16 வயதுக்கு குறைவு 3574 17340

16-18  5830 19926

18-20 21041 39818

20-25 74833 91597

25-30 61756 65167

30-40 89539 100578

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் வன்முறைக்கு, ஐரோப்பிய சமூக பொருரளாதார பண்பாட்டு கூறுகளே அடிப்படையாகவும் ஆதாரமாகவும் உள்ளது. உண்மையில் குற்றங்களை ஆராய்கின்ற போது சிறிய குற்றங்களில் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகமாகவும், பெரிய குற்றங்களில் பிராஞ்சுக்காரரின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. போதைவஸ்த்தை பெரியளவில் கடத்தும் பிரஞ்சுக்காரர், அதை சில்லறையாக விற்கும் போது கணிசமான வெளிநாட்டவர்கள் சம்பந்தப்படுகின்றனர். போதைவஸ்து சம்பந்தப்பட்ட குற்றத்தை பொதுமைப்படுத்தி ஆராய்கின்ற போதே குற்றத்தின் தன்மை மறைக்கப்பட்டு, நிறத்தின் இனத்தின் தன்மை முதன்மைபடுகின்றது. ஐரோப்பாவில் பாலியல் வன்முறைகள் பெரும்பாலனவை சொந்த வீட்டில் இருந்தே தொடங்குகின்றது. ஐரோப்பியரின் பாலியல் வக்கிரத்தின் ஒரு சமூக குற்றமாகவே இது வெளிப்படுகின்றது. இது பெருமளவில் வெள்ளை இனத்தவராலேயே நடத்தப்படுகின்றது. இந்த வெம்பிய வக்கிரத்தை வெளிநாட்டவர் செய்யும் போது நாகரீகமற்ற வகையில் வெளிப்படுவதால், அது முதன்மை படுத்தப்படுகின்றது. இந்த குற்றத்தின் நாகரீகமும் காட்டுமிராண்டித்தனமுமே அளவு கோலாகி வெளிநாட்டவர்களை குற்றவாளியாக்கின்றனர். சொந்த குழந்தைகளை (மகளையும் மகனையும்) கூட பாலியல் வன்முறைக்குள்ளாக்கும் ஒரு சமூக அடித்தளத்தின் வக்கிரம், நாகரிகமான பண்பாட்டால் மூடிமறைக்கப்படுகின்றது. இப்படி குற்றங்கள் ஒவ்வொன்றுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை முதன்மைப்படுத்தி வெளிநாட்டவரை நாசிகள் தனிமைப்படுத்துகின்றனர். இதன் பின்னால் மற்றைய கட்சிகள் காவடி எடுத்து ஆடுகின்றனர்.

இந்த வேறுபாட்டின் சமூக அடித்தளத்தை ஆராய்வதன் மூலமே இதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளமுடியும்;. இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் சமூக பொருளாதார பண்பாட்டுக் கூறால் பிளவுபட்டே வாழ்கின்றனர். இது இரண்டு வகையில் நிகழ்கின்றது.

1.வெளிநாட்டவர்கள் வேறு ஒரு சமூக பொருளாதார பண்பாட்டுக் கலாச்சார கூறுகளின் அடிப்படை வழிவந்தவர்களாக இருப்பதால், மேற்கு சமூகத்துடன் இயல்பில் முரண்படுகின்றனர்.

2.ஏகாதிபத்திய நிற இன வர்க்க ஜனநாயக அமைப்பு, வெளி நாட்டவர்களை ஒதுக்கி வைக்கும் இனவெறித் தீண்டாமையை திட்டமிட்டே ஆளும் வர்க்கங்கள் கையாளுகின்றனர்.

இதில் இன நிற வர்க்க ஒதுக்கல் கொள்கையே, வெளிநாட்டவர்களின் மரபுவழி பண்பாட்டை கலாச்சாரத்தை தக்கவைக்கின்றது. இதில் இருந்தே இன நிற சமூகப் பிளவுக்கு வழிசமைக்கின்றது. இந்த வெளிநாட்டுச் சமூகங்கள் குற்றவாளி சமூகமாக இருப்பதில்லை. கடும் உழைப்பும், கடும் தியாகமும் கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளான, ஒரு சமூக வாழ்வை வாழ்கின்றனர். இந்த சமூகத்தின் உழைப்பின் ஆதாரத்தையும், கூலியையும், வாழ்விடங்களையும், சமூகப்புறக்கணிப்பையும் இன நிற ஒதுக்கல் கொள்கைகள் மூலம் கட்டுப்படுத்தப்படும் போதே, குற்றங்கள் இழைக்கப்படுகின்றன. இதைவிட எல்லா சமூகத்துக்கே உரிய சமூக விரோத புல்லுரிவிகள் இங்கும் இருப்பதும் பொதுவானது. ஆனால் இந்த வெளி நாட்டவர்களின் குழந்தைகளின் வன்முறைகள் தான், வெளிநாட்டுச் சமூகத்தை ஒட்டு மொத்தமாக குற்றவாளியாக்க நாசிகளால் முடிகின்றது. வெளிநாட்டு பெற்றோருக்கு பிரான்சில் பிறந்த குழந்தைகளும், இளமையில் பெற்றோருடன் இங்கு வரும் குழளந்தைகளினதும் வன்முறைகள் ஒப்பீட்டு அளவில் அதிகமாக உள்ளது. இதற்கு இங்கு உள்ள இன நிற ஒதுக்கல் கொள்கையே அடிப்படையான மையக் காரணமாகும்;. ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு பிரஞ்சு பொலிசார் அரபு இளைஞர்களுக்கு எதிராக இன நிற ஒதுக்கல் கொள்கையின் அடிப்படையில் மனித உரிமை மீறல்களை செய்வதை, வருடாந்தம் தன் அறிக்கை ஊடாகவே குற்றம் சாட்டும் அளவுக்கு ஒரு ஏகாதிபத்திய இன நிற ஒதுக்கல் கொள்கையை அமுல் செய்கின்றனர். இந்த நிலமைக்கான சமூக பொருளதார இனநிற ஒதுக்கல் கூறுகளைப் பார்ப்போம்.

வெளிநாட்டவர்களை திட்டமிட்டே ஐரோப்பிய கட்டுமானப் பணியின் தேவையை ப+ர்த்தி செய்ய உழைப்புச் சந்தைக்கு உள்வாங்கிய போது, உருவாக்கிய வீட்டமைப்புகள் இனநிற பேதத்தை அடிப்படையாக கொண்ட அதேநேரம், சேரிப்புறத்துக்கு நிகரானதாகவே இருந்தது. அத்துடன் அந்த சேரிக்கும் பிரஞ்சு மக்களுக்கிடையில் ஒரு தீண்டாமையை, பண்பாட்டு கலாச்சார பொருளாதார கூறுகள் ஊடாக பிளந்து வேலியிட்டனர். இன்று அரசு வீடுகளாகவும் அடுக்கு மாடிக் கட்டிடங்களாக அவை மாறிய போதும், குடியிருப்பு என்பது இன நிற பேத அடிப்படையில், அதாவது வெளிநாட்டவர் பிரஞ்சுக்காரர் (இது பல ஐரோப்பிய நகரங்களுக்கும் பொருந்தும்) என்ற பிளவை அடிப்படையாக கொண்ட திட்டமிட்டே குடியேற்றப்படுகின்றனர். இந்த திட்டமிட்ட குடியேற்ற பிளவே, வெளிநாட்டவர்களை பிளந்து காட்டி விடும் நாசிகளின்  வளர்ச்சிக்கான அடிப்படையாகும். உண்மையில் இங்கு என்ன நடக்கின்றது.

வெளிநாட்டவர்களின் குழந்தைகள் பிரஞ்சு சமூகத்துடன் ஒன்றிணைவதையும் கலந்துவிடுவதையும் இது செயற்கையையாகவே தடுக்கின்றது. மாறக பிரஞ்சு மக்களின் சமூக பொருளாதார பண்பாட்டுக்கு எதிராக, அராஜகத்தை அடிப்படையாகவும் அதையே பண்பாட்டாக கொண்ட உதிரி லும்பன் சமூகமாக உருவாகின்றனர். இது பல்துறை சார்ந்து செழித்து வளர்ச்சி பெறுகின்றது.

1.மக்களுடன் இணைந்து கலந்து வாழும் மனித சமூகப் பண்பை, ஆளும் வர்க்கங்கள் ஜனநாயக பூர்வமாக தடை செய்கின்றனர். இதனால் தனித்து ஒதுக்கப்படும் அந்த சமூகம் இதை எதிர்த்து போராடும் வகையில் ஒரு அரசியல் எழுச்சி சமூகப் போக்கில் இல்லை. இதனால் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த அராஜக வழியில் சமூகத்துக்கு எதிராகவே கையாளுகின்றனர்.

2.தனித்து ஒதுங்கி வாழ விடப்பெற்ற வெளிநாட்டுப் பெற்றோர்களின் குடியிருப்புக்களில், சொந்த நாட்டின் பண்பாட்டுக் கூறுகளே ஆட்சி செய்கின்றன. இது மத அடிப்படைவாதமும், நிலப்பிரபுத்துவ பண்பாட்டு கூறுகளுடன் இணைந்த பண்பாட்டை உருவாக்கின்றது. குழந்தைகள் வாழ்கின்ற நாட்டின் பொருளாதார கூறுக்கு இணங்க இதனுடன் நேரடியாகவே முரண்படுகின்றனர். நிலப்பிரபுத்துவ மத அடிப்படைவாதத்தல் கட்டுப்படுத்தும் பெற்றோரின் அடக்குமுறையும், அதேநேரம் ஏகாதிபத்திய பொருளாதார பண்பாட்டு இன நிற ஒதுக்கல் கொள்கையாலும் குழந்தைகள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இரண்டிலும் இருந்து இரண்டுக்கும் எதிரான அராஜகவாத பண்பாட்டை அடிப்படையாக கொண்ட, தன்னியல்பான லும்பன் குழுக்களையும் தனிமனிதர்களையும் உருவாக்கின்றது. இது சொந்த பெற்றோரைச் சார்ந்து நிற்கும் அதேநேரம், வாழும் சமூகத்தை எதிரியாகவே காண்பதுடன் அதன் மேல் வன்முறையை கையாளுவது ஒரு போக்காகின்றது.

3.வன்முறை பெருமளவில் ஏகாதிபத்திய பொருளாதாரக் கூறுகள் சார்ந்தே நேரடியாக பிரதிபலிக்கின்றது. இது சிறு வழிபறிக் கொள்ளையாக, வன்முறையாக பரிணமிக்கின்றது. ஏகாதிபத்திய நாடுகளில் சரி, உலகமயமாகும் உலகிலும் சரி நுகர்வின் அடித்தளமே பண்படாக்கியுள்ளது. நுகர்வை அடைவதே வெற்றிகரமான வாழ்வாகிய நிலையில், இதை அடைவதில் வௌ;வேறு வழிமுறைகளை சமூக பொருளாதார கூறுகளில் இருந்தே கண்டறிகின்றனர். இனநிற வர்க்க ஒதுக்கல் கொள்கையால் லும்பன்களாக வாழத் தொடங்கும்; குழந்தைகள், நுகர்வை அடைவதற்கான ஒரு வழியாக வழிபறியையும் அதில் தோல்வி பெறுபவன் சமூகம் மீதான வன்முறையையும் கையாளுகின்றான். சொந்தக் குடும்பத்தில் அடிப்படை தேவைக்கே போராட்டம் என்ற நிலையில், ஆடம்பரமான கவர்ச்சிகரமான விளம்பர நுகர்ச்சி உலகமயமாகின்ற போது இன நிற ஒதுக்கள் குடியிருப்பிலும் புகுந்துவிடுகின்றது. சுரண்டும் மூலதனத்துக்கும்; அனைத்து எல்லைகளையும் கடப்பதில் முரண்பாடு இருப்பதில்லை. இனநிற ஒதுக்கல் குடியிருப்பு சேரிகளில் வாழும் இளைஞர், இளைஞிகள் சமூகத்தில் இந்த ஆடம்பர நுகர்வை அடையும் தகுதி இருப்பதில்லை. பெற்றோருக்கு அதை வாங்கும் சக்தியிருப்பதில்லை. அத்துடன் பெற்றோர்கள் கடும் உழைப்பை கொண்ட ஒரு பாட்டாளியாக இருப்பதாலும், இந்த ஆடம்பர நுகர்வுக்கு எதிரான உணர்வுகளின் எதிர்ப்பு இயல்பாகின்றது. இந்த நிலையில் பெற்றோர்களின் குழந்தைகள் எந்த சமூகத்தையும் சாராத அராஜக வழிகளில் நுகர்வை அடைய முயல்கின்றனர். வழிபறி கொள்ளை, சிறு களவுகள் என்ற தளத்தில் இது பரிணமிக்கின்றது. இதை அடையும் வழிகளில் சிறு குழுவாக மாறுகின்றனர். இந்த சிறு களவுகளில் கூட கைத் தொலைபேசியை பறித்தல், சிறிய தொகை பணத்தைப் பறித்தல், ~மார்க்| உடுப்புகளை சாப்பத்துகளை பறித்தல்…  போன்ற வன்முறைகளே 99 சதவீதமாக அடையாளம் காணமுடிகின்றது. பண அட்டை (கிரடிற் காட்), செக், விசா (அடையாள அட்டை) போன்றன, அவர்கள் கையில் கிடைப்பின் அதை அவர்கள் வீசியெறிந்துவிடுவார்கள். ஆனால் திட்டமிட்டு இயங்கும் கிரிமினல் குற்றவாளிகள், இதை தெளிவானகவே பயன்படுத்துகின்றனர். இந்த கிரிமினல் நடவடிக்கையை தமிழர்களிடையே தெளிவாகவே வேறுபடுத்தி காணமுடியும். பண அட்டை போன்றன வீதியில் கண்டு எடுத்தாலும் அல்லது வேறு வழியில் கிடைத்தாலும், அதை ஒரு கிரிமினல் நடவடிக்கைக்காக சிலர் துல்லியமாக பயன்படுத்துகின்றனர். இதில் இருந்தே நாம் குற்றத்தின் தன்மையை, அதன் சமூக அடிப்படையையும் வேறுபடுத்தி பார்க்கமுடியும்;. உண்மையில் பிரஞ்சு வீதிகளில் நடக்கும் கைத்தொலைபேசி பறிப்பு, பணப்பறிப்பு போன்றவை தன்னெழுச்சி வகைப்பட்ட, ஒரு அராஜகத் தன்மை கொண்டவை. இவை ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை அல்ல. சமூகத்தின் அவலங்களில் இருந்து எழும் சீழ்களின் விளைவுகளால் நடப்பவையே.

 

4.வன்முறையை கலாச்சாரமாக்கும் ஏகாதிபத்திய பண்பாட்டு பொருளாதாரக் கூறுகள் இதன் மற்றொரு கூறாகும்;. நுகர்வு வெறியை இணைத்து முன்வைக்கும் வன்முறை  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாக்கள் இதன் மற்றொரு அடிப்படையாக உள்ளது. சிறுவருக்கானது என்ற பெயரில் வெளிவரும் காட்டூன்கள் முதல் அனைத்து நிகழ்ச்சிகளும் வக்கிரத்தையும் வன்முறையையும் அடித்தளமாக கொண்டு சமூக மயமாக்கின்றனர். இதன் சமூக விளைவு என்றுமில்லாத அளவுக்கு சமூக வன்முறைக்கு வித்திடுகின்றது. தனிமனித நுகர்வு வெறி, தனிமனித பாதுகாப்பு, தனி மனித சுயநலம் என்று அனைத்தையும் தனிமனித மயமாக்கும் போது, சமூக வெறுப்பு உயர்வானதாக மாற்றப்படுகின்றது. தனிமனித நலன் சமூக நலனுக்கு எதிரிடையாக முதன்மைப்படுத்தப்படுகின்றது. இந்த பண்பாட்டு பொருளாதாரக் கலாச்சாரக் கூறு சமூகப் பிளவுகளால் தனிமனிதன் சார்ந்து வெளிப்படும் போது, வக்கிரமாக வன்முறையாக பிரதிபலிக்கின்றது. வன்முறை கவர்ச்சிகரமான பண்பாக, நாகரீகமாக சமூக அந்தஸ்துக்குரியதாக மாறுகின்றது. மார்க் உடுப்புகள் முதல் மார்க் பொருட்களை பயன்படுத்தும் தகுதியே, கௌரவமானதாக சமூகத் தகுதியாகவுடைய அந்தஸ்தை கோருவது சமூகப் பண்பாகின்றது. இதை அடையும் நுகர்ச்சி விளம்பரம் சார்ந்த பண்பாடு சமூக மயமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் வைரமாளிகை என்ற விளம்பரத்தை தாங்கிய மேலாடையை அணிந்த படி நீண்ட காலமாக உலாவிய ஒரு உயர மனிதன், அங்கு கேலிக்குரிய ஒருவனாக மதிப்பிட்ட நிகழ்வுகளை இதை அறிந்தவருக்கு தெரிந்து இருக்கும். இதற்கு நிகராகவே மார்க்கின் பெரிய சிறிய எழுத்துக்களுடன் உடுப்புகளை போட்டு திரிவது இன்றைய நாகரிகமாக, சமூக அந்தஸ்ததாக உலகமயமாதல் உலகளவில் ஏற்படுத்தியுள்ளது. தனிமனிதன் தன்னை மார்க்கின் ஒரு வடிவமைப்பாக காட்டிக் கொள்வதன் மூலம், பணத்திமிரும், பாலியல் வக்கிரமும் கொப்பளிக்க சமூக விரோதத்தைக் கொண்ட தனிமனித வக்கிரத்தை பீற்றும் ஒரு சமூக பிராணியாக உருவாகின்றான்;. இப்படி உருவாகும் சமூகத்தில் காதநாயகனுக்குரிய இந்த நுகர்வு வெறியே, அடிக்கடி பொருளை மாற்றக் கோருகின்றது. மூலதனம் சந்தையை தக்கவைக்க பொருளின் கவர்ச்சியை மாற்றி சந்தைப் படுத்த, அதன் நக்கி குலைக்கும் ஒரு அடிமை நாய்களாக சமூகம் உருவாகின்றது. பொருட்களின் மேலான இந்த நுகர்வு, பெண்ணையும் கூட மாற்றி மாற்றி நுகரும் அடிப்படைக்கான கண்ணோட்டத்தை ஆணாதிக்கம் சார்ந்து முன்வைக்கின்றது. இது எதிரிடையில் பெண்ணும் ஆணை மாற்றி மாற்றி நுகரும் அடிப்படைக்கு வித்திடுகின்றது. பாலியல் நுகர்வின் எல்லையில் அனைத்து மரபையும் தகர்க்கின்றது. இந்த சமூகத்தளத்தில் நுகர்வை அடையும் வழியில் உள்ள தடைகளை கடந்து செல்ல, வன்முறை ஒரு கருவியாகின்றது. மேற்கத்திய சமூகத்தில் பாலியல் வன்முறைகள், வழிபறிக் கொள்ளைகள், சமூக வன்முறைகளில் இதன் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்;. இது வெளிநாட்டு சமூகத்தில் புகுகின்ற போது, இதன் வெளிப்பாடு அராஜக வழிகளின் வித்தியசமான வடிவத்தில் வெளிப்படுகின்றது. இந்த நுகர்வு வெறியில் நிகழும் வன்முறையின் விளைவின் தன்மை, மேற்கு சமூகத்தில் இருந்த வேறுபட்ட வகையில் பிரதிபலிக்கும் போது, இது சமூகத்தில் முன்பு தனிமைப்படுத்தி கட்டப்படுகின்றது. இதை நாசிகள் முன்னிலைப்படுத்தி வெளிநாட்டவருக்கு எதிரான பிராச்சாரத்துக்கு அடிப்படையாகின்றனர்.

 

திட்டமிட்ட இன நிற வர்க்க அடிப்படையிலான குடியிருப்புகள், பிரஞ்சு சமூக பண்பாட்டு கலாச்சார வாழ்விடங்களில் இருந்து வேறுபட்ட ஒரு வாழ்வுமுறைக்குள் நகர்ந்துவிடுகின்றது. இதனால் இந்த வாழ்விடங்களுக்கும் மற்றைய வாழ்விடங்களுக்கு இடையிலான முரண்பாடு ஆழமாகின்றது. வெளிநாட்டவரை அதிகமாக கொண்ட குடியிருப்புக்கும் பொலிசாருக்கும் இடையில் ஒரு மோதல் நிலைமை வளர்ச்சி பெறுகின்றது. சமூக ரீதியான பிரச்சனையை இனநிற ஒதுக்கல் கொள்கை மூலம் மேலும் ஆழமாக்கி அரசுகள் கையாளும் போது, அரசு அமைப்பின் அத்திவரமான பொலிசாரின் அதிகாரம் இனம் நிறம் சார்ந்து வெளிப்படுகின்றது. வெளிநாட்டவர்களை குற்றவாளியாக அடையாளம் காண்பதும், நீதி விசாரணைகளை பிரஞ்சு சமூகத்துக்கு புறம்பான வடிவத்தில் தாமே நடத்துகின்றனர். அதாவது கைதுக்கு பதில் சுட்டுக் கொல்வதும், தாக்குவதும், பண்பாடற்ற வகையில் நடத்துவது போன்றன இன நிற சட்ட நெறியாகின்றது. வெளிநாட்டு பெற்றோரின் குழந்தைகளை அணுகும் போது எதிரியாகவும், அதன் அடிப்படையில் விடையங்களைக் கையாள்வதும் பொலிசின் இனநிற பண்பியலாக வெளிப்படுகின்றது. இதனால் வெளிநாட்டு குடியிருப்புகளில் வாழும் இளையர்கள் தாம் வாழும் பகுதியையும், சுற்றுப் புறத்தையும் ஒரு அராஜக நிலைக்குள் மாற்றிவிடுகின்றனர். வன்முறை, வழிபறி இங்கு ஆட்சி செய்கின்றது. இந்த பிரதேசங்கள் ஒரு கொரில்லா பிரதேசமாக மாறிவிடுகின்றது. இப்பிரதேசங்கள் பொலிஸ் மற்றும் வெளிநாட்டு பெற்றோரின் குழந்தைகளின் கைகளிலும் மாறி மாறி அதிகாரம் செலுத்தும் ஒரு சூனியமான நிலை நிலவுகின்றது. இரவில் பொலிசார் இப்பிரதேசத்துக்குள் உட்புக முடியாதநிலை பல பாகங்களில் அடிக்கடி ஏற்படுகின்றது. மோதல் ஒன்று நிகழும் போது, நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிக்கப்படுவது முதல் அரசு சொத்துகளை நொருக்கிவிடுகின்றனர். இதன் பழிவாங்கும்; படலம் சில நாட்கள் தொடர்ச்சியாக பல பிரதேசங்களில் கொரிலாப் பணியில் நடக்கின்றது. இவை அனைத்தையும் நாசிகள் எடுத்துக் காட்டி, வெளிநாட்டவருக்கு எதிரான வெறுப்பை சமூக மயமாக்கின்றனர். இன நிற வர்க்க விரோத கொள்கையே அடிப்படையான காரணமாக இருக்க, இதை நாசிகள் வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக்கின்றனர். நாசிசம் முன்வைக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை எடுத்துக் கொள்ளும் வலதுகள் முதல் இடதுகள் வரை, வெளி நாட்டவருக்கு எதிரான கடும் சட்டங்களையும் தண்டனைகளையும் படிப்படியாக ஏற்படுத்துகின்றனர்.

உண்மையில் காணப்படும் இன நிற வர்க்க ஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராட எந்த கட்சியும் இல்லை. மறாக பொலிஸ்சுக்கு அதிகாரங்களை கொடுப்பதன் மூலம், கடும் சட்ட ஒடுக்குமுறைகளை ஏற்படுத்துவதன்; மூலம், வன்முறையின் தன்மையை நுட்பமாக்கி அதிகரிக்க வைக்கின்றனர். பிரான்சில் ஆட்சியில் இருந்த சோசலிச கட்சி, கம்யூனிச கட்சி, பச்சைக் கட்சி கையாண்ட வழிமுறைகளில் ஒன்றைப் பார்ப்போம்;. வன்முறை ரீதியாக அடையாளம் காணப்படும் சில பத்து குடியிருப்பை முற்றாக குடியெழுப்பியதே. வீட்டை மறு சீரமைப்பு செய்வது என்ற பெயரில் 100 வீடுகள் முதல் 1000 வீடுகளில் வசித்தோரை முற்றாக குடியேழுப்பி, வன்முறைக் குழுக்களை சிதறடிக்கும் வகையில் இன நிற குடியிருப்புக்குள் மீள மாற்றியதே. இதை ஏற்படுத்தியதன் மூலம் குழுவின் தன்மையை சிதைத்தனர். இதன் மூலம் வன்முறையைக் கட்டுப்படுத்தும் இன நிறவாத அணுகுமுறையை கையாண்டனர். இதனால் வன்முறையை பழையவர்களிடம் இருந்து தற்காலிகமாக தடுத்த போதும், புதிய வன்முறைகள் மீண்டும் தோற்றம் பெற்றன. வன்முறைக்கு அடிப்படையான சமுகக் காரணம் யதார்த்தமாக உள்ள போது, வன்முறைக் குழுக்கள் இளைமையுடன் செழித்து வளர்கின்றது.  குடியெழுப்பிய குடியிருப்புகளுக்குள் புதிய இன நிற வர்க்க அடிப்படையில், வௌ;வேறு இடத்தில் எழுப்பிய வெளி நாட்டவர்களையும், புதிய வெளிநாட்டவர்களை கொண்டே உருவாக்கினர். இப்படிதான் இடதுசாரிகள் என்று சொன்னவர்கள் செய்தார்கள். ஆனால் இந்த அராஜக வாழ்வியல் சார்ந்து வன்முறைகளை, அரசால் நிறுத்த முடியவில்லை. மாறாக அதிகரித்துள்ளது.

புதிய ஆட்சிக்கு வந்துள்ள வலதுசாரிகளோ பொலிஸ் அதிகாரத்தை அதிகரிப்பதன் மூலம் வன்முறையை கட்டுப்படுத்த பிரகடனம் செய்கின்றனர். பொலிசாருக்கு அதிக சலுகைகள், அதிக பொலிசாரை சேர்ப்பது, சட்டங்களை வெளிநாட்டவருக்கு எதிராக கடுமையாக்குவது, வெளிநாட்டவர் வரவை கட்டுப்படுத்துவது என்ற வழியில் நாசிசத்தை சட்டப+ர்வமான ஜனநாயக வடிவமாக்கின்றனர். இதே வலதுசாரிக் கட்சிகள் பல பிரதேசங்களில் பிரதேச ஆட்சிகளில் நாசிக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் இருப்பதுடன், இன்றைய மந்திரி சபையில் இருப்போரில் சிலர் நாசிக் கட்சியின் ஆதரவை பெற்றதுடன், அதைத் தொடர்ந்து பெறுவதற்கு வக்காளத்து வாங்கியவர்கள்;. ஐரோப்பாவிலேயே அதிக பொலிசாரைக் கொண்ட ஜனநாயக ஆட்சி பிரதேசமாக இன்று பிரானஸ் இருக்கின்றது. பிரான்சில் பொலிஸ் உடுப்பில் உள்ள ஒருவர் 256 மக்களை கண்காணிக்கும் விகிதசாரம் காணப்படுகின்றது. இது ஜெர்மனியில் 296யாகவும், பிரிட்டனில் 380 யாகவும் உள்ளது. இதைவிட முக்கிய இடங்களில் மக்களை கண்காணிக்கும் இராணுவம், தனியார் பாதுகாப்பு வளையம், போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு, கிராமசபை பாதுகாப்பு பிரிவு, பெரும் சுப்பர் மாக்கற்றைக் கண்காணிக்கும் தனியார் கண்காணிப்பு பிரிவு, கண்காணிப்பு கமாரக்கள் (10 லட்சத்துக்கு மேல் உள்ளது) என்று பல பாதுகப்பு வடிவங்கள் உண்டு. தொடர்ந்து இவற்றையும், பொலிசார் எண்ணிக்கையை மேலும் அதிகாரிப்பதன் மூலம், தனிமனித சட்ட பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என்றே வலதுசாரிகள் களமிறங்கியுள்ளனர். அதாவது இன நிற வர்க்க ஒடுக்கமுறையை தீPவிரப்படுத்தவே,  ஜனநாயக அரசுகள் பிரகடனம் செய்துள்ளனர்.

நாசிகள் ஜனாதிபதி வேட்பளாரக தெரிவான தேர்தல் வெற்றியை அடுத்து, மக்கள் இந்த வழி முறைகளுக்கு எதிராக போராட தன்னெழுச்சியாக அலை அலையாக வீதியில் இறங்கினர். முதல் சுற்று தேர்தல் முடிவு நாசிகளுக்கு சார்பாக வெளிவந்து கொண்டிருந்த நடு இரவிலேயே தன்னியல்பாக பிரஞ்சு நகரங்களில் ஊர்வலம் தொடங்கியது. பத்துக்கு மேற்பட்ட பிரஞ்சு நகரங்களில் அன்று இரவு நடந்த ஊர்வலங்கள், நாசி எதிர்ப்புக் கோசத்துடன் நடந்தது. இந்த நாசி எதிர்ப்பு போராட்டத்தைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் நடுங்கின. ஆட்சியில் இருந்த இடதுசாரிக் கட்சிகள் போராட்டத்தை கைவிடும்படி வேண்டின. போராட்டம் தொடர்சியாக வளர்ச்சி பெற்றபோது, சோசலிச கட்சியுடன் ஆட்சியில் இருந்த பச்சைக்கட்சி, கொம்ய+னிசக் கட்சி ஆதாரவளிப்பது போல் நடித்து, போராட்டத்தின் உள்ளடகத்தை மளுங்கடிக்க முனைந்தன. வலதுசாரிகளோ இறுதிவரை மக்களின் போராட்டங்களை எதிர்த்து நின்றதுடன், நாசிசத்துக்கு எதிராக ஒரு துருமைத் தன்னும் முன்வைத்தப் போராடவில்லை. மக்களின் தீர்ப்புக்கு எதிராகவும் ஜனநாயகத்துக்கு முரணாகவும் இப்போட்டங்கள் நடப்பதாக, நாசிக் கட்சி கூக்குரல் இட்டபோது வலதுசாரிகள் தாளம் போட்டனர். நாசிகள் சுரண்டும் ஜனநாயகத்தின் காவலராக தம்மைக் காட்டிக் கொண்டனர். இந்த தேர்தலின் வலதுசாரிகள் இடதுசாரிகளின் ஆதாரவுடன், 80 சதவீத்ததுக்கு அதிகமான வாக்கைப் பெற்று நாசிகளை தோற்றகடித்தனர். ஆனால் இந்த இடத்தில் இடதுசாரிகளுக்கும் நாசிகளுக்கும் இடையில் தேர்தல் என்ற நிலை ஏற்பட்டு இருப்பின், வலதுசாரி ஆதரவில் பெரும் பகுதி நாசிக் கட்சிக்கே கிடைத்திருக்கும். வலதுசாரி கட்சிகளை இரண்டாக பிளந்திருக்கும். நாசிக் கட்சி பெரும் பலத்தை பெற்றிருக்கும். அதாவது 1930 இல் கிட்டலரின் நாசிக் கட்சி எதை சாதித்ததோ, அந்த நிலை ஏற்பட்டிருக்கும். ஜனதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடந்த தேர்தல் முடிவுகள், இன்று இருப்பதற்கு பதில் நாசிக் கட்சி பாரிய பலத்தைப் பெற்றிருக்கும்;. வலதுசாரிகள் நாசிசத்துடன் உள்ள அக்கம் பக்கமாக அரசியல் நிலப்படுகளும் உறவுகளுமே, இதை தெளிவாக துல்லியமாக காட்டுகின்றது.

நாசிகளுக்கு எதிராக நடுஇரவில் தொடங்கிய போரட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த நாள் உயர்தர பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் காலையில் புதிய ஊர்வலங்களை பிரஞ்சு தேசம் எங்கும் நடத்தத் தொடங்கினர். அன்று தொடங்கிய  நாசி எதிர்ப்பு ஊர்வலங்கள் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்த திட்டமிட்ட தொடர்சியான 14 நாட்களும் அலை அலையாக ஒவ்வொரு நாளும் நடை பெற்றது. புதிதாக பலர் இந்த ஊர்வலங்களில் இணைந்ததுடன் புதிய போராட்டங்களையும் நடத்தினர். சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை பல்வேறு நாசி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தனர். தொழில் சங்கங்களும், மக்கள்திரள் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தினர். தன்னிச்சையாக தன்னியல்பாக எழுந்த போராட்டம், பிரஞ்சு சமூக அறிவியலை கேள்விக்குள்ளாக்கி புதிய தேடுதலுக்கான அத்திவாரத்தையிட்டது. இந்த ஊர்வலங்கள் நடந்த போது, சில நூறு பாடாசாலைகள் நாசி எதிர்ப்;பு மையங்களாகியது. வாக்குரிமையற்ற இந்த இளம் மாணவ மாணவிகள், வெளிநாட்டு மக்களுக்கு எதிராக முன்வைக்கும் நாசிய பிரச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கியதன் மூலம், சொந்த பெற்றோருடனும் முரண்படுவது ஒரு அரசியலாகியது. எங்கும் வாதப் பிரதி வாதமாகியது.

நாசி எதிர்ப்பு ஊர்வலங்களின் எழுச்சியாக மே முதலாம் திகதி மாறியது. பிரான்ஸ் முழுக்க 20 லட்சம் மக்கள் தன்னியல்பாக ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்தியதுடன், பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். அண்ணளவாக மே முதாலம் திகதி 500 பிரதேசங்களில் நாசி எதிர்ப்பு ஊர்வலங்களை மக்கள் நடத்தினர். இப் போராட்டங்கள் எந்த மையக் கோசத்தையும் பொதுமைப்படுத்தவில்லை. தன்னியல்பான நாசி எதிர்ப்பே மையக் கோசமாகியதுடன், அவை தன்னியல்பான மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் பல வடிவில் மக்கள் அதை வெளிப்படுத்தினர். (பார்க்க பெட்டிச் செய்தியை)

வெளிநாட்டவர்களின் ஐரோப்பியா வரவும், அவர்களின் ஐரோப்பிய வாழ்வு ஜனநாயக உரிமையாகும். ஐரோப்பிய ஜனநாயக விரோத ஜனநாயகச் சட்டங்கள் இதை குற்றமாகவே கருதுகின்றது. ஐரோப்பா எங்கும் நாசிக் கட்சிகள் பெறும் அதே வாக்குக்கு சமமாக வாழும்  வெளிநாட்டவர்களுக்கு, இன்றுவரை வாக்குரிமை வழங்கபடவில்லை. இவர்களில் பலர் 30, 40 வருடம் வாழ்ந்தாலும் வாக்களிக்க முடியாது. ஆனால் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல்களாகவே எப்போதும் இருந்து வருகின்றது. ஒரு வெளிநாட்டவன் ஐரோப்பா வருவதும், வாழ்வதும் ஒரு ஜனநாயக உரிமை என்பதை மறுப்பததன் மூலம், இந்த ஜனநாயக அமைப்பு இன நிற வர்க்க பிளவை அடிப்படையாக கொண்ட ஜனநாயகமாக கருதுவதை அங்கீகரிப்பதாகும். உலகம் உலகமயமாக்கும் ஏகாதிபத்திய நனவுகளின் தொடர்ச்சியில், உலகமே ஒரு நாடாகியுள்ளது. இங்கு நகரங்களும் கிராமங்களுமாக நாடுகள் இருப்தால், பிளவுகள் அதிகாரித்து நகரத்தை நோக்கி கிராம மக்கள் நகர்வதும் அதன் பொது விதியாகும். இதை உருவாக்குபவர்கள் நகரத்தில் வாழும் சுரண்டும் வர்க்கங்களே. அவர்கள் உருவாக்கிய தேசங்கடந்த மூலதனத்தின் பக்கவிளைவுகளை கட்டுப்படுத்த, அவற்றை சட்டவிரோதமாக்கின்றனர்.

முன்பு ஒரு நாட்டில் முதலாளித்துவ புரட்சி நடந்த போது எது நடந்ததோ, அதுவே உலகமயமாகும் போது நிகழ்கின்றது. கிராமப்புறங்கள் சூறையாடப்பட்டன. கிராமப் புறத்தை ஒரு சில புல்லுரிவிகள் அபகரித்து மக்களை விராட்டியடித்தனர். மக்கள் நகரங்களை நோக்கி நகர்வது முதலாளித்துவத்தின் ஒரு அரசியல் விதியாகியது. இதுவே உலகமயமாதலின் விதியும் கூட. உலகை சூறையாடத் துடிக்கும் மூலதனம், உலகை உலகமயமாக்கி வருகின்றது. ஏகாதிபத்திய நாடுகளின் இந்த நடைமுறை, மக்களின் பஞ்சம் பிழைக்கும் வாழ்வையே அழிக்கின்றது. மக்கள் வாழ்விழந்து சொந்த பிரதேசத்தை விட்டு வெளியேற்றுவதை, ஒரு பொதுவான நடைமுறையாக மூலதனம் கையாளுகின்றது. இப்படி வெளியேறுபவர்கள் மூலதனம் குவிந்து கிடக்கும் பிரதேசங்களை நோக்கி நகர்வது தவிர்க்கமுடியாத ஒரு இயங்கியல் போக்காகும்;;;. இந்த இயங்கியலை ஜனநாயக விரோதமாக மேற்கு இனநிற வாதிகள் காட்டுவதுடன், இதை ஒடுக்குவதையே ஜனநாயகமாக காட்டுகின்றனர். இந்த இனநிற ஜனநாயகம் மூலதனத்தின் தொட்டில் தாலாட்டு பெற்றே வளர்ச்சி பெற்றது, பெறுகின்றது.

நாசிகளின் வளர்ச்சி

மேற்கு ஐரோப்பா முதல் கிழக்கு ஐரோப்பா வரை எங்கும் எல்லா நாட்டிலும் தேசிய கோசங்களுடன் நாசிகள் வளர்ச்சி பெற்று வருகின்றனர். சில நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நாசிக் குழுக்கள், நாசிக் கட்சிகள் செய்ற்படுகின்றன. இவற்றில் ஒரு பகுதி தேர்தல் மூலம் ஆட்சியைப் கைப்பற்றும் போக்கில்; தீவிரமாக செயற்படுகின்றன. புதிய நாசிப் பண்பாட்டு கலாச்சார அடிப்படைகளுடன், இராணுவ ரீதியான ஒழுங்குடன் இருக்கின்ற பொருளாதார அமைப்பின் மேல் தம்மை விரிவுபடுத்துகின்றன. மற்றைய பகுதி சட்டவிரோதமாகவும் சட்ட ப+ர்வமாகவும் இயங்கும் குழுக்கள், தீவிரமான வன்முறைகளில் இறங்குகின்றன. வெளி நாட்டவர்களை தாக்குவது, வெளிநாட்டு அடையாளங்களை தகர்ப்பது முதல் பாட்டாளிவர்க்க போராட்ட வராலாற்று அடையளங்கள் மற்றும் வெற்றிகள் மேல் வன்முறையை கட்டமைக்கின்றனர். நாசி எதிர்ப்பு ஊர்வலங்களையும், மூலதனத்துக்கு எதிரான போராட்டங்களையும் தடுப்பது, எதிர்த் தாக்குதலை நடத்துவது என்ற தீவிர செயல்முறையை ஈடுபடுகின்றனர். இதை பொலிசுடன் இணைந்தும், அக்கம் பக்கமாகவும் நின்றும் நடத்துகின்றனர்.

நாசி கட்சிகள் மற்றும் குழுக்களின் வளர்ச்சியில் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பகிரங்கமாக இனைந்து செய்றபடவிட்டலும், ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கின்றன. அத்துடன் இந்த நாசிக் கட்சிகள் ஐரோப்பிய கட்சிக்கு இடையிலான ஒருங்கினைப்பையும், உலகளவிய நாசிக் கட்சிகளுடன் நெருக்கமான உறவையும் பேணுகின்றன. ஐரோப்பாவில் நடக்கும் நாசி ஊர்வலங்கள் மற்றம் போராட்டங்களில், மற்றயை நாட்டு நாசிகள் இணைந்து கொள்வது அதிகரித்து வருகின்றது. ஐரோப்பாவில் நடைபெறும் பிராந்திய உதைபந்தாட்ட குழுக்களின் பின்பும், நாசிகளின் ஆதரவு தளம் விரிவாகியுள்ளது. உதைப்பந்தாட்ட போட்டிகளில் நாசியக் கோசங்களுடன் தான் ஊற்சாகமூட்டப்படுகின்றது. வீடு குடியிருப்பு, சினிமா, வேலைவழங்கல் என்று பல்துறை சார்ந்து இன நிறவாதம் பேணுவது அதிகரித்து வருகின்றது. இது ஒரு சட்டபூர்வமான மனிதவிரோத நடத்தையாகி வருவது, நாசிகளின் செல்வாக்கை திட்மிட்டே ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவத்தில் வளர்த்தெடுக்கின்றது.

தீவிர இன நிறவாதம் மூலம் மற்றயை மக்களை கிண்டல் செய்வது தொடங்கி வன்முறையை ஏவுவதன் மூலம், அரசு அதிகாரத்தை ஒரு வன்முறை வடிவத்தில் கைப்பற்றும் எல்லை வரை ஒரு தயார் நிலையில் இக் கட்சிகள் தம்மை தயார் செய்கின்றன. பெரிய பண மூலதனங்களுடன் இயங்கும் இக் கட்சிகள் சரி, அதன் தலைவர்களின் ஆடம்பரமான சொகுசு வாழ்விலும் சரி, உயர்ந்த இனநிற அதிகாரத் திமிர்த்தனம் படர்ந்து போய் காணப்படுகின்றது. இன்றைய ஜரோப்பிய ஜனநாயக பாராளுமன்றங்கள் உலகமயமாதலில் ஏகாதிபத்திய போட்டியாளனுடன் போட்டியிட்டு உலகைச் சந்தையை கைப்பற்றும் தகுதி தான், நாசிகளின் ஆட்சி அதிகாரத்தை இந்த அமைப்புக்குள் தடுக்கும் ஒரேயோரு எல்லையாக உள்ளது. உலகமயமாதல் போட்டியில் ஐரோப்பிய மூலதனத்தின் அதிகாரம் உலகில் கொடிகட்டி பறக்கத் தவறுகின்ற ஒவ்வொரு கணமும், இயல்பில் நாசிக் கட்சிகளின் அதிகாரம் தவிர்க்க முடியாத மூலதனத்தின் தீர்வாகின்றது. இன்று நாசிக் கட்சிகள் சமூகதத்தில் ஏற்படும் ஒவ்வொரு நெருக்கடிகளையும், வெளி நாட்டவர்களின் வரவினால் ஏற்பட்டதாக காட்ட முயலும் போது, உண்மையில் மூலதனத்தின் குணம்சம்சம் முடிமறைக்கப்படுகின்றது. சமூக பிரச்சனைகளும் அதன் விளைவுகளும் இன்றைய மூலதனத்தின் கொடையாகும் என்பதை, நாசிக் கட்சிகள் திட்மிட்டே பூசி மொழுகி பாதுகாக்கின்றன. வெறுமனே வெளி நாட்டவர் பிரச்சனையாக சமூகப் பிரச்சனைகளை காட்டுவதன் மூலம், வெளி நாட்டவர் மீதான வெறுப்பை உலக ஆக்கிரமிப்புக்கான தாயரிப்பாக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியில் பிரான்சின் நாசிக் கட்சியின் வளர்ச்சியை நாம் ஆராய்வோம். பிரான்சின் முன்னணி நாசிக்கட்சியான லுப்பெனின் தேசிய முன்னணியின் இன நிற சமூகப் பிளவினூடக எப்படி வளர்ச்சி பெறுகின்றனர் எனப் பார்ப்போம்;.

அவர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் இவை மொத்த வாக்களார்களில் எத்தனை சதவீதம் என்பதைப் பார்ப்போம்.

1973       பராளுமன்ற தேர்தல்      122 000        0.55 சதவீதம்

1977       ஜனாதிபதி தேர்தல்       190 921        0.74 சதவீதம்

1978       பராளுமன்ற தேர்தல்        82 743        0.30 சதவீதம்

1981       பராளுமன்ற தேர்தல்        90 422        0.35 சதவீதம்

1984       ஐரோப்பிய தேர்தல்       2 184 248        10.95 சதவீதம்

1986       பராளுமன்ற தேர்தல்      2 705 497        9.72 சதவீதம்

1986       உள்ளுர் தேர்தல்        2 658 500        9.56 சதவீதம்

1988       ஜனாதிபதி தேர்தல்       4 375 894        14.39 சதவீதம்

1988       பராளுமன்ற தேர்தல்      2 359 528        9.65 சதவீதம்

1989       ஐரோப்பிய தேர்தல்      2 129 668        11.73 சதவீதம்

1992       உள்ளுர் தேர்தல்        3 396 141        13.90 சதவீதம்

1993       பராளுமன்ற தேர்தல்      3 158 843        12.52 சதவீதம்

1994       ஐரோப்பிய தேர்தல்      2 049 634        10.51 சதவீதம

1995       ஜனாதிபதி தேர்தல்       4 571 138        15.00 சதவீதம்

1999       ஐரோப்பிய தேர்தல்      1 005 225        5.69 சதவீதம்

2002       ஜனாதிபதி தேர்தல்       4 770 270        17.19 சதவீதம்

 

லுப்பெனுக்கு வெளியில் லுப்பெனில் இருந்து பிரிந்த மிக்கிரெ (ஆéபசநவ), வில்லியரும் (ஏடைடநைசள) சமகாலத்தில் நாசிய சிந்தனைகளை சமந்தரமாக பிரச்சாரம் செய்கின்றனர். இதைவிட பலர் கடந்த காலத்தில் இருந்தனர். இதனடிப்படையில் பிரான்சின் இயங்கும் மற்றைய நாசிக் கட்சிகளின் வளர்ச்சியைப் பார்ப்போம்.

 

1956       பராளுமன்ற தேர்தல்      2 483 813        12.00 சதவீதம்

1965       ஜனதிபதி தேர்தல்        1 260 208        5.19

1995       ஜனதிபதி தேர்தல்        1 443 186        4.74

1999       ஐரோப்பிய தேர்தல்        578 774        3.28

1999       ஐரோப்பிய தேர்தல்      2 304 285        13.05

2002       ஜனதிபதி தேர்தல்          661 348        2.38

பிரான்சில் நாசிகளின் வளர்ச்சி என்பது ஒட்டு மொத்தமாகவே அதிகரித்துச் செல்லுகின்றது. இந்நிலைமை ஐரோப்பிய நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கூட இதுவே பொது நிலையாகும். ஒட்டு மொத்த நாசிக் கட்சி முதலாம் சுற்றில் பெற்றதைவிட இரண்டாம் சுற்றில் அண்ணளவாக 15000 வாக்குகள் அதிகம் பெறமுடிந்தது. நாசிக் கட்சிக்கு வாக்களித்தவர்கள் யார் என்று ஆராய்ந்த போது, தொழிலாளர்கள் 33 சதவீதமாகும். அதாவது உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை பாட்டாளி வர்க்க கட்சி தனது ஆணையில் வைக்க மறுக்கின்ற போதே, நாசிக் கட்சி உழைக்கும் மக்களின் நலனின் பெயரில் ஆட்சிக்கு வருகின்றனர். கிட்லரின் தேசிய சோசலிசம் என்ற கோசத்தை வைத்த போதும் சமூக ஜனநாயகக் கட்சியின் துரோகத்தின் துணையுடன் இதுவே நிகழ்ந்தது. கம்யூனிசக் கட்சி தனது துரோகத்தை, தொழிலாளர் வர்க்கத்தின் முதுகில் மேல் ஏறி ஒடுக்க துணைபோகின்ற வரலாற்றிலேயே நாசிகள் கொட்டமடிக்கின்றனர். துரோக கம்யூனிசக் கட்சி படிப்படியாக மக்கள் புறக்கணிக்க அது மறைந்து வருவதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நாசிக்கட்சி தனது தேர்தல் வெற்றி பற்றிய பிரகடனத்தில், கம்யூனிஸ்ட் கட்சியை அழித்து அதில் தனது வெற்றியை நிலை நாட்டியதை பெருமைப்பட அறிவித்தனர். உண்மையில் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை கம்யூனிஸ்ட் கட்சியின் துரோக வரலாற்றின் மூலம் காட்டிக் கொடுத்ததன் மூலம், நாசிகளின் வரவை துரிதமாக்கினர். இதுவே ஐரோப்பா எங்கும் உள்ள பொதுநிலையாகும்.

அடுத்து சிறு உற்பத்தியாளர்கள் 20 சதவீதமும், உத்தியோகத்தர்கள் 20 சதவீதமும் அதிகமாக நாசிக்கு வாக்களித்தனர். ஆகக் குறைவாக வாக்களித்தோர் உயாந்த அதிகாரத்தில் இருந்தவர்களும், அறிவித்துறையினருமேயாகும். அதாவது 7 முதல் 8 சதவீதம் பேரே நாசிகளுக்கு வாக்களித்தனர். ஒட்டு மொத்த ஆண்கள் 22 சதவீதம் பேர் நாசிக்கு வாக்களித்த அதே நேரம் பெண்கள் 15 சதவீதம் பேரே வாக்களித்தனர். 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 22 சதவீதம் பேர் நாசிக் கட்சிக்கு வாக்களித்தனர். வீட்டுச் சொhந்தக்காரர் அல்லது தனியார் வீடுகளை வாடகைக்கு எடுத்தோர் நாசிக்கட்சிக்கு 17 முதல் 18 சதவீதம் பேரே வாக்களித்தனர். அதே நேரம் அரசு வீடுகளில் வசிப்போரில் 27 சதவீதம் பேர் நாசிக்கட்சிக்கு வாக்களித்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் 23 சதவீதம் பேர் நாசிக்கட்சிக்கு வாக்களிக்க, வன்முறையால் பாதிக்கபடாதவர்கள் 14 சதவீதம் பேர் வாக்களித்தனர். உண்மையில் நாசிக் கட்சிக்கான வாக்களிப்பில் இந்த சமூக பொருளாதார பாதிப்பின் உடனடி வினைவுகள் சார்ந்து, அதிகம் பாதிகப்பட்டவர்களே வாக்களிக்கின்றனர். சமூக பொருளாதார பாதிப்பை உணர்ந்து அவதிப்படுவோர், நாசிசத்தின் பின் அணிதிரளுகின்றனர். சொந்த வேலை, சுரண்டலின் கொடூரம், வேலை இழப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளோர், வேலை இழந்தோர், சிறு உற்பத்தி இழக்கும் நிலையில் உள்ளோர், வேலையை தேடும் வயதுடையோர், அரசு வீடுகளில் வாழ்வோர், சமூக பொருளாதாரத்தில்  ஏற்படும் வன்முறையால் பாதிக்கப்படுவோர் என அனைத்தும் இந்த சமூக அமைப்பின் வெடிப்புகள் சார்ந்தே, நாசிசம் வளர்ச்சி பெறுகின்றது. உண்மையில் ஒரு பாட்டாளி வர்க்க கட்சி சமூதாய பிரச்சனைகளுக்காக போராடவும், அதை மாற்றி அமைக்க போராடவும் தயாரற்ற நிலையில், நாசிக்கட்சி பாசிச வழிகளில் இதை பற்றி பிரகடனங்களை செய்கின்றனர்.

மக்கள் கட்சிகள் மேல் நம்பிக்கை இழக்கின்றனர். இரண்டவது சுற்றில் 17 லட்சம் வாக்குகள் யாருக்கும் போடாது காகித உறையை மட்டும் தேர்தலில் போட்டனர். இது இம்முறை மட்டும் அல்ல, கடந்த பல தேர்தலில் இவை ஒரு போக்காக தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. அத்துடன் மக்கள் வாக்களிக்க செல்வது என்றுமில்லாத குறைந்து வருகின்றது. மக்களின் நலன்களில் இருந்து கட்சிகள் விலகிச் செல்ல, நம்பிக்கை இழப்பு ஒருபோக்காக வளர்ச்சி பெறுகின்றது. இன்றைய கட்சிகள் மக்களின் வாழ்வை வேட்டையாடும் வகையில், மூலதனத்துடன் தம்மை இணைத்து ஆட்டம் போடும் போது, நாசிக்கட்சிகள் அந்த வெற்றிடத்தில் வெளிநாட்டவருக்கு எதிரான கோசத்துடனே தன்னை நவீனப்படுத்தியபடி முன்னிலைக்கு வருகின்றது.

ஐரோப்பாவில் நாசிகளின் வளர்ச்சி என்றுமில்லாத வகையில் வளர்ச்சி பெறுகின்றது. ஒஸ்ரியாவில் விடுதலைக் கட்சி 1999 இல் 26.91 சதவீத வாக்குகளைப் பெற்றது. இத்தாலியில் வடக்கு பாதை கட்சி 1996 இல் 10.1 சதவீத வாக்குகளை பெற்றது. இது 2001 இல் 3.9 சதவீத வாக்குளைப் பெற்றது. சுவிஸ்சில் ஒன்றுபட்ட மத்திய ஜனநாயக கட்சி 1999 இல் 22.5 சதவீத வாக்குகளைப் பெற்றது. பெல்ஜியத்தில் வலம்ஸ் பிளாக் 1999 இல் 15.5 சதவீத வாக்குகளை பெற்றது. 2000ம் ஆண்டில் 33 சதவீத வாக்குகளைப் பெற்றது. நெதர்லாந்து 2001ம் ஆண்டு உள்ளுர் தேர்தலில் நாசிக் கட்சி 34 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதன் தலைவரே இந்த வருட தேர்தலுக்கு முன்பாக பச்சைக் கட்சி உறுபினரால் கொலை செய்யப்பட்டார். நோர்வையில் முன்னேற்ற கட்சி 1997 இல் 15.3 சதவீத வாக்குகளைப் பெற்றது. 1993 இல் 6.3 சதவீத வாக்குகளையும், 1995 இல் 12 சதவீத  வாக்குகளையும் பெற்றது. டென்மாhக்கில் டென்மார்க் மக்கள் கட்சி 2001ம் ஆண்டு 12 சதவீத வாக்ககுளைப் பெற்றது.. ஜெர்மனியில் பல கட்சிகள் தடை செய்யப்பட்ட நிலையிலும் மூன்று நாசிக் கட்சிகள் சட்டப+ர்வமாக செய்ற்படுகின்றன. கம்பேர்க் உள்ளுர் தேர்தலில் முன்னேற்ற கட்சி 2001ம் ஆண்டு 19.4 சதவீத வாக்குகளைப் பெற்றது.

இவை ஐரோப்பிய ஜனநாயக அமைப்பில் முதலாளித்துவ ஆய்வாளர்களால் இனம் காணப்பட்டு, நாசிசமாக வரையறுத்தை அடிப்படையாக கொண்டது. உண்மையில் இதைவிட பல கட்சிகள் நாசிசத்துடன் கூட்டும், அருகாமையிலும் தமது கொள்கைகளை வைத்திருப்பவர்களை இது உள்ளடக்கவில்லை. சோசலிசக் கட்சிகள் உட்பட அனைவரும் இனநிற பேதத்தை அடிப்படையாக கொண்ட, வெள்ளையின ஐரோப்பிய மூலதனத்தை கட்டிப் பாதுகாப்பவர்களே. நாசிசத்தின் படிநிலை வளர்ச்சியில் பல படிக்கட்டுகளாக பல கட்சிகளும், சிந்தனை தளங்களும், செயல்முறைகளும் ஐரோப்பா எங்கும் செறிந்து காணப்படுகின்றது. மரபான கட்சிகளுக்கு வெளியில் இதற்கு எதிரான தன்னெழுச்சியான போராட்டங்களும், புரட்சிகரமான கட்சிகளின் தலைமையிலும் வர்க்கப் போராட்டங்களும் அலை அலையாக மக்களைச் சார்ந்து எழுச்சிபெற்ற வருகின்றது. அது நாசித்தை மட்டுமல்ல உலகமயமாதலையும் எதிர்த்தும், மூலதனத்தின் ஜனநாயக அமைப்பையே தகர்க்கும் கோசத்துடன் உலகம் எங்கும் எதிரொலிக்கும் வகையில் வளர்ச்சி பெற்று வருகின்றது.

வெளிநாட்டவர்கள் ஐரோப்பாவில்

ஐக்கிய நாட்டு அறிக்கை ஒன்று 2050 ஆண்டுக்குள் ஐரோப்பாவை நோக்கி 130 கோடி மக்கள் குடியேறுவர் என்று கூறுகின்றது. அதாவது இவை ஆயுள் மரணங்களை உள்ளடக்கிய வகையில் வந்தோரை உள்ளடக்கியது. இன்று ஒவ்வொரு வருடமும் 12 லட்சம் மக்கள் ஐரோப்பாவிற்குள் வருகின்றனர். அத்துடன் ஐரோப்பாவில் வெளிநாட்டவர்கள் வருடாந்தம் 37 லட்சம் பேர் இறக்க 40 லட்சம் பேர் புதிதாக பிறக்கின்றனர். வெளிநாட்டவர் அதிகரிப்பு பிறப்பு ரீதியாக வருடந்தம் 3 லட்சமாக உள்ளது. வருடாந்தம் 5 லட்சம் பேர் சட்டவிரோதமாக  ஐரோப்பாவுக்குள் வருவது அதிகரித்துள்ளது. 1985 க்கும் 1990 க்கும் இடையில் ஜரோப்பாவுக்குள் வந்த வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்து, வருகை 15 லட்சமாக மாறியுள்ளது. இது 1994 க்கும் 1997 க்கு இடையில் 10 லட்சமாக அதிகரித்தது வருகை 25 லட்சமாகியது. ஐரோப்பாவில் வெளிநாட்டவர் மொத்த சனத் தொகையில் 2.2 சதவீதமாக இருக்க, அமெரிக்காவில் 3 சதவீதமாகவும், கனடாவில் 6 சதவீதமாகவும் உள்ளது.

2000ம் ஆண்டில் உலககளவில் 12 கோடி மக்கள் நாடு கடந்து, புதிய நாடுகளுக்கு சென்றதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிவித்துள்ளது. அதாவது உலகளவில் 500 மக்களுக்கு ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினர். இது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. 1990 இல் 11 கோடி மக்களே நாட்டை விட்டு வெளியேறினர். இது 1965 இல் 6.5 கோடியாக மட்டுமே இருந்தது.

ஐரோப்பாவில் உள்ள மொத்த வெளிநாட்டவாகள் எண்ணிக்கை 1.8 கோடியாகும். உலகளவில் நாட்டை விட்டு வெளியேறுபவர்களில் ஆறுக்கு ஒருவரை விட சற்றுக் குறைவனவர்கள் ஐரோப்பா செல்லுகின்றனர். அமெரிக்காவுக்கு ஆறுக்கு ஒருவர் செல்லுகின்றனர். ஆசியாவில் இருந்து வெளியேறும் 4 கோடி பேரில், மூன்றில் ஒருவர் இந்தியா பகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

ஐரோப்பாவில் வாழும் 37.4 கோடி மக்களில் வெளிநாட்டவர் எண்ணிக்கை 3.3 சதவீதமாகும். 1990இல் வாழ்ந்த வெளிநாட்டவர்களில் வாழும் நாட்டின் பிரஜாவுரிமை பெற்றவர்கள் நெதர்லான்டில்; 6 சதவீதமாகவும், இத்தாலி மற்றும் லுக்சம்பேர்க்கில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவும், ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் 3 சதவீதமாகவும், பிரான்சில் 2.5 சதவீதமாகும். ஐரோப்பாவில் பிறக்கின்ற குழந்தைகளில் 10 சதவீதமானவர்களின் தாய் தந்தை வெளிநாட்டவர்களாக இருக்கின்றனர். இது பிரான்சில் 10.2 சதவீதமாகவும், இங்கிலாந்தில் 13.2 சதவீதமாகவும், ஜெர்மனியில் 13.2 சதவீதமாகவும் உள்ளது. ஐரோப்பாவில் உள்ள வெளிநாட்டவர்களில் 65 சதவீதமானவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்தில் வாழ்கின்றனர். இதனுடன் பெல்ஜியம், இத்தாலி, நெதர்லந்தையும் இணைத்தால் 80 சதவீதமாக மாறுகின்றது.

1998 இல் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை ஐரோப்பாவில்

நாடுகள்     லட்சத்தில்     தொத்த சனத் தொகையில்

ஜெர்மனி     55 லட்சம்         6.7 சதவீதம்

பிரான்ஸ்     23 லட்சம்         4 சதவீதம்

இங்கிலாந்து   13 லட்சம்        2.3 சதவீதம்

பெல்ஐpயம்    4 லட்சம்         3.3 சதவீதம்

இத்தாலி     7.5 லட்சம்        1.3 சதவீதம்

கொலண்ட்    5 லட்சம்         3.1 சதவீதம்

ஸ்பானியோல்  3.5 லட்சம்        0.9 சதவீதம்

சுவீடன்       5 லட்சம்         4 சதவீதம்

ஜெர்மனியில் அதிக வெளிநாட்டவராக துருக்கியைச் சோந்த 21 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். பிரான்சில் 7 லட்சம் அல்ஐPரியவைச் சேர்ந்தவர்களும், 6 லட்சம் மொரோக்கோவைச் சோந்தவர்களும் வாழ்கின்றனர். இங்கிலாந்தில் இந்தியாவைச் சேர்ந்த 1.4 லட்சம் பேர் வாழ்கின்றனர். இத்தாலியில் ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள் அதிகமாகவும், மொரோக்கோவைச் சேர்ந்தவர்கள் 1.3 லட்சம் பேரும், அல்பேனியாவைச் சேர்ந்த 1.4 லட்சம் பேரும் வாழ்கின்றனர். பிரிட்டனுக்குள் வாழும் வெளிநாட்டவர்களில் தகுதி வாய்ந்த உயர்ந்த உழைப்பில் 45 சதவீதமானவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த வகையில் வருடாந்தம் அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, வட அமெரிக்காவுக்கு 50000 பேர் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படுகின்றனர். இப்படி வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் மேட்டுக்குடி கலாச்சாரத்துடன் நெருங்கியவர்களாகவும் 17 முதல் 27 வயதுடையவராகவும் இருக்கின்றனர். உலகில் இருந்து வெளியேறுபவர்களில் 2 கோடி பேர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்களாகும். உண்மையில் மூன்றாம் உலக மக்களின் உழைப்பில் உருவாகும் இந்த மேட்டுக் குடிகள், அந்த மக்களின் வாழ்வுக்கு ஆதாரமான உழைப்புக்கே வேட்டு வைக்கும் வகையில் தம்மை நிலைநிறுத்துகின்றனர். அமெரிக்கா வருடாந்தம் 5 லட்சம் பேருக்கு விசா வழங்குகின்றது. இவை பெருமளவில் அமெரிக்கா பொரளாதார நலனக் சார்ந்தாகவே கையாளப்படுகின்றது. 1998 இல் இதை ஆராய்ந்தால் பல்கலைக்கழக பேராசியர்கள்;, விஞ்ஞானிகள், தனியார் உற்பத்தியில் உயர் அதிகாரியாக 40000 பேர் அமெரிக்கா சென்றனர். உயர்ந்த கல்வித் தரமுள்ளவர்கள் 40000 பேரும், வேலையில் உயர் தகுதியுடையவர்கள் 30000 பேருக்கு அமெரிக்கா விசா வழங்கியது. தனிப்பட்ட ரீதியில் விசேட உற்பத்தி செய்யும் தனிநபர்கள் 10000 பேருக்கும், 5 லட்சம் டொலர் முதலீடு செய்யக் கூடிவர்களும், 10 லட்சம் டொலர் முதலீட்டு 10 பேருக்கு வேலை வழங்க கூடியவர்களான 10000 பேருக்கும் (இதன் மூலம் 1000 கோடி டொலரை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்குள் கடத்திச் சென்றனர்) விசா வழங்குகின்றனர். கொள்ளையடிப்பில் அறிவின் வளம், உழைப்பின் திறன், மூலதனம் என்ற அடிப்படையில் அமெரிக்கா வருடாந்தம் 5 லட்சம் பேரை உள்வாங்குகின்றது. இதன் மூலம் உலகளாவிய சமூகச் சிதைவை விரைவாக்கின்றனர்.

கட்டுமானப் பணிக்காக 1974 க்கு முன் வெளிநாட்டவர்களை வேலைக்கு கொண்டு வருவது ஐரோப்பாவில் அதிகரித்தது. பிரான்சில் 1960-74 இடைப்பட்ட காலத்தில் வெளிநாட்டில் இருந்து வேலைக்கு கொண்டுவருவது அதிகரித்தது. இதனால் குடும்ப இணைப்புகள் பின்னால் படிப்படியாக அதிகரித்து பின் குறைந்தது. 1970 இல் 80000 ஆயிரம் பேர் குடும்ப இணைப்பு சார்ந்து சட்டபூர்வமாக பிரான்ஸ் வந்தனர். இது 1987 இல் 36000 பேரும், 1997 இல் 15000 பேரும், 1998 இல் 26000 பேருமாக குறைந்து வருகின்றது. இதே நேரம் ஜெர்மனிக்கு 1996 இல் 14000 பேர் மட்டுமே வந்தனர்.

அரசியல் புகலிடம் ஐரோப்பாவில் கோருவது 1998 இல் 3 லட்சம் பேரும், 1999 இல் 4 லட்சமாகவும் இருந்தது. இது nஐர்மனியில் 1997-1999 இல் வருடாந்தம் 95 ஆயிரமாக இருந்தது, 2000ம் ஆண்டில் 78 ஆயிரமாக குறைந்தது. ஐரோப்பாவில்; வெளி நாட்டவருக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக, இங்கிலாந்தில் புகலிடம் கோருவது அதிகரித்தது. அதாவது ஐரோப்பியாவுக்கு உள்ளான முரண்பாடுகள் சார்ந்து இது வளர்ச்சி பெற்றது. இது இங்கிலாந்தில் 1998 இல் 50 ஆயிரமாக இருந்தது. 1999 இல் 70 ஆயிரமாகவும், 2000ம் ஆண்டில் 98 ஆயிரமாகவும் அதிகாரித்தது. பிரான்சில் 1996 இல் 20ஆயிரம் பேரும், 1998 1999 இல் வருடாந்தம் 30 ஆயிரம பேரும், 2000ம் ஆண்டில்; 39 ஆயிரம் பேரும் புகலிடம் கோரினர். 2000ம் ஆண்டில் அரசியல் புகலிடம் கோரி ஐரோப்பிய வந்தவர்களில் யூக்கோசிலவியாவைச் சேர்ந்தோர் 52300 பேரும், ஈராக்கைச் சேர்ந்தோர் 34700 பேரும், ஆப்கானைச் சேர்ந்தோர் 28800 பேரும், ஈரானைச் சோந்தோர் 27100 பேருமாவர். அதாவது ஏகாதிபத்தியங்கள் நடத்தும் உலகளவிய யுத்த வெறியாட்டங்கள், நாட்டை விட்டு வெளியேற்றுவதை துரிதப்படுத்துகின்றது.

ஐரோப்பிய மொத்த சனத் தொகை (மேற்கையும் கிழக்கையும் உள்ளடக்கிய வகையில்) 1998 இல் 72.9 கோடியாகும். இது 2050 இல் 62.8 சதவீதமாக வீழ்ச்சியடையும். இதன் மூலம் உழைப்பின் வளங்களை இறக்குமதி செய்வது தவிhக்கமுடியாது. அதாவது 50 வருடத்தின் பின்பு, 1998 யை விட 10 கோடி மக்கள் ஐரோப்பாவில் குறைவாகவே வாழ்வர். இதில் இங்கு வாழும் வெளி நாட்டவர்களை உள்ளடக்கியதே. மூலதனத்தின் விரிவாக்கம் சுரண்டலை தீவிரமாக்கும் போது, ஐரோப்பிய வயோதிபர்களையும் குழந்தைகளையும் பராமரிக்க, வெளிநாட்டவர்களின் உழைப்பு வளம் ஐரோப்பாவில் நிபந்தனையாக உள்ளது.

உலகில் 225 உற்பத்தியாளர்கள் உலகில் 47 சதவீதமான எழை மக்களின் வருமானத்துக்கு சமமாக உலகைக் கொள்ளை அடிக்கின்றனர். இது 1960 இல் 20 சதவீதமான பணக்காரர்களின் வருமானம் சராசரியான 20 சதவீதமான ஏழைகளின் வருமானத்தை விட 30 மடங்கு அதிகமாக உலகில் இருந்தது. வருமானம் பணக்கார நாடுகளையும், அதில் ஒரு சிலரிடமும் குவிகின்ற போது சமுதாயப் பிளவுகள் அதிகரிக்கின்றது. பிழைப்பத் தேடி பணக்கார நாடுகளை நோக்கி வெளியேறுவதை நிபந்தனையாகின்றது. இந்த பணக்காரர்கள் உலகை கொள்ளையிட்டு சூறையாடும் வடிவம் வீங்கிச் செல்ல, பணக்கார நாடுகள் வழங்கிய உதவிகள் குறைந்தும் வருகின்றது. ஐக்கியநாட்டு சபை 1960 இல் 0.7 சதவீத வருமானத்தை வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை அமுல் செய்ய கோரியது. ஆனால் மூன்றாம் உலக நாடுகள் கொள்ளயைடித்து கொழுக்கும் வளர்ந்த நாடுகள் 1997 இல் 0.22 சதவீதத்தை கொப்பதையே நிபந்தனைக்குள்ளாக்கினர். அமெரிக்காவோ 0.08 சதவீதத்தையே கொடுப்பதை கூட அதாவது 100 ரூபாவில் 0.08 சதத்தை வழங்கும் போது, அடிமைத்தனத்தை வக்கிரப்படுத்துகின்றனர். மக்கள் பஞ்சம் பிழைக்கும் அடிப்படைத் தேவைகள் கூட மறுக்கப்படுவது ஜனநாயமாகின்றது. ஆபிரிக்காவின் கடன் அந்த மக்களின் 70 சதவீதமான தேசிய உற்பத்திககு சமனாக மாறியுள்ளது. இதற்கு வட்டி கட்ட மக்களின் இரத்தத்தையே தானம் செய்ய நிர்ப்பந்திக்கின்றன மூலதனம். பிழைப்புத் தேடி 1980 க்கும் 1990க்கும் இடையிடையில் ஆபிரிக்காவில் இருந்த 60 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். உலகில் தமது வாழ்விடத்தை விட்டு வெளியேறிய 3 கோடி பேரில், ஆபிரிக்காவில் மட்டும் 1.6 கோடியாக உள்ளது.

உலகாளவிய சமுதாய சிதைவுகள், பஞ்சம் பிழைக்கும் பிழைப்பைத் தேடி உலக அளவில் புலம் பெயர்வை நிபந்தனையாக்கின்றது. இந்த வகையில் 2001ம் ஆண்டு ஐரோப்பாவில் வந்து சட்டவிரோதமாக விசாக் கோரியோர்.

ஜெர்மனி     88290

பிரிட்டன்     88300

பிரான்ஸ்     47290

ஒஸ்ரியா     30140

நெதர்லான்ட்     32580

சுவீடன்      23520

பெல்ஐpயம்     24550

டென்மாக்     12400

அயர்லாந்து     10320

ஸ்பானியோல்     9400

இத்தாலி     9620

கிறிஸ்      5500

பின்லாந்து     1650

லுக்கசம்பேர்க்     690

போத்துக்கல்     190

ஐரோப்பா மொத்தமாக  384 530

 

ஏழை நாட்டு மக்கள் பணக்கார நாட்டிடம் விசா கோருவதும், அதை பணக்காரன் மறுப்பதும் ஒரு ஜனநாயக விதியாக மாறிவருகின்றது. பணக்கார நாடுகள் உலகச் சூறையாட,  நகரங்களை நோக்கி மக்களை புலம் பெயரக் கோருகின்றது. உலகம் ஒரு நாடாக, பணக்கார பிரதேசங்கள் நகரங்கள் ஆகிவிடுகின்றது. இந்த நகரங்களை நோக்கி மக்கள் அலை அலையாக புலம் பெயர்கின்றனர். உலகளாவிய புலம் பெயர்வுகள், உலகளாவிய மூலதனத்தினால் ஏற்படும் யுத்த நெருக்கடிக்குள் மேலும் துல்லியமாக அதிகரிக்க வைக்கின்றது. இந்த புலம்பெயர்வுகள் இந்த ஜனநாயக அமைப்பில் சட்டவிரோதமாக,  மூலதனத்தின் வாலைப் பிடித்து தொங்கும் நாசிகள் படிப்படியாக தலை மேல் எறிவிடுகின்றனர்.

வேண்டாத விருந்தாளியாக இந்த மக்கள் கூட்டத்தை சித்தரித்து விசா மறுக்கப்படும் போது, சட்ட விரோதமான நடத்தைகள் அதிகரிக்கின்றது. சொந்த உடல் உழைப்பு கூட சட்டவிரோதமாகி, மிகக் குறைந்த கூலியைப் பெறும் நிலைக்கு தாழ்ந்துவிடும் போது சூறையாடல் வரைமுறையின்றி அதிகரிக்கின்றது. ஐரோப்பாவின் தேசிய வருவாயில் 4 முதல் 20 சதவீதம் சட்விரோதமான உழைப்பு மூலம் இன்று பெறப்படுகின்றது. இருந்த போதும் இது தனியாக வெளிநாட்டவரை உள்ளடக்கி மட்டும் கிடைப்பது அல்ல.

வெளிநாட்டவருக்கு எதிரான நாசிகளின் மனிதவிரோத நடத்தைகள் அனைத்தும், இன்றைய ஜனநாயகத்தின் அச்சான மூலதனத்தின் விரிவாக்கத்தால் ஏற்படுகின்றது. மூலதனம் விரிவாக விரிவாக, மக்களின் அவலம் பன்மடங்காக அதிகரிக்கின்றது. இதில் நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் அவலம் தனியானதாகின்றது. இதையே நாசிகள் மேலும் துல்லியமாக அகலமாக்கி வேட்டையாட களமிறங்குகின்றனர். இதையே ஐரோப்பிய ஜனநாயகம் கம்பளம் விரித்து வரவேற்கின்றது.

குறிப்பு: நாட்டை விட்டு வெளியேறும் உழைப்பு சக்தி பற்றி விரிவாக, எனது நூலக விரைவில் வெளிவரவுள்ள ~உலகமயமாதலும் சர்வதேசியமும்;| என்ற நூலில் விரிவாக ஆராய்துள்ளேன்.

தன்னெழுச்சியான மக்கள் எழுச்சியும், போர் குணம்சத்தின் வெட்டுமுகமும்

பிரான்சின் தலைநகரான பாரிசில் நடந்த ஊர்வலத்தில் 10 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். வழமையாக இந்த மே தின ஊர்வலத்தில் 20 ஆயிரம் மக்களே கலந்த கொள்பவர்கள்;. அதிலும் பல்வேறு நாடுகளின் பிரச்சனைகளை உள்ளடக்கிய வண்ணம், தனியான குழுவாக நடக்கும் ஊர்வலங்களில், இனத் தேசிய இன வாதங்களையும் ஊர்வலம் உள்ளடங்கியிருக்கும். உதாரணமாக ஜே.வி முதல் புலி வரை தனித் தனியான கோசங்களுடனேயே கடந்த காலத்தில் நடந்துவந்தன. இம்முறை நாசிசத்துக்கு எதிரான எழுச்சி நடந்து கொண்டிருந்த போதும், பலர் தமது குறுகிய நோக்குடனேயே கலந்து கொள்ளவந்தனர். ஆனால் இம்முறை மக்கள் வெள்ளம் அனைத்துவித பாசிசத்தையும் சிதறடித்தனர். நாசிச எதிர்ப்பு கோசத்தின் கீழ் அனைத்தையும் சிதறடித்தனர்.

நாங்கள் வழமை போல் மேதின ஊர்வலத்துக்கு சென்றபோது, இம்முறை செல்ல முடியுமா என்ற கேள்வி 10 கி.மீற்றருக்கு வெளியில் போக்குவரத்து நெருக்கடியில் கேள்விக்குள்ளாகியது. மக்கள் வெள்ளம் பாரிஸ் மையத்தை நோக்கி அலை அலையாக செல்லக் காத்துக்கிடந்தது. பாரிசைச் சுற்றி பாரிசைச் சென்றயடையும் பாதைகள் எங்கும் மக்கள் வெள்ளத்தால் அடைபட்டுக் கிடந்தது. பாரிஸ் மையத்தை நோக்கிச் செல்ல முடியாத மக்களில் கணிசமானோர், மீண்டும் வீட்டை நோக்கி திரும்பினர். ஊர்வலம் செல்லும் இடத்தை நெருங்கிய போது எம்மால் நகர முடியவில்லை. மக்கள் வெள்ளத்தில் நாம் சிக்கிய போது 2,3 மீற்றரை கடந்து ஒதுங்கவே 30 நிமிடங்கள் கூட தேவைப்பட்டது. சிறு அசாம்பவிதம் கூட, மிதிப்பாட்டு மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு நிலமை அலைமோதியது. சிறு குழந்தைகள் முதல் வயது போனவர்கள் வரை இந்த மக்கள் வெள்ளத்தில் காணப்பட்டனர். உற்சாகத்துடன் நாசி எதிர்ப்பு கோசமெழுப்பிக் கொண்டிருந்தனர். கைகளில் விரும்பியவாறு நாசிசத்தை அம்பலம் செய்யும் ஏதோ ஒரு கோசத்தை, தூக்கி காட்டிய படி நின்றனர். சிறு குழந்தைகளின் மேலாடையை நீக்கிவிட்டு, சில பெற்றோர் நெஞ்சிலும் முதுகிலும் நாசி எதிர்ப்பு கோசங்களை எழுதியிருந்தனர். தந்தை அல்லது தாய் சொந்த குழந்தைகளை தோளில் துக்கிவைத்த படி நாசிசத்தை அம்பலம் செய்யும் கோசத்தை உலகுக்கு தெரியும் படி உயர்த்தி காட்டியபடி நடந்தனர். காதலன் காதலிக்கிடையிலும் கூட இது போன்ற வடிவில் செய்தனர். நாசித்தை வேட்டை நாய்க்கும் அல்லது கோரமான அழுக்கான பன்றிக்கும் ஒப்பிட்டு பல ஓவியங்கள் மக்கள் கலையாக்கி, அதை தமது நாசி எதிர்ப்பு பாதகையாக கொண்டு வந்தனர். கறுப்பின மக்களுடன் கை கோர்த்தும், பரஸ்பரம் முத்தமிட்டபடியும் நடந்தனர். பற்பல இசைகளை அவர் அவர் விருப்பத்துக்கு இணங்க நாசிகளை எதிர்த்தும், மக்களின் ஒன்றுபட்ட வாழ்வை உயர்த்தியும் இசைத்தனர். மக்கள் அதன் தள கதியில் ஒன்றிணைந்து, அதனுடன் இணைந்து ஆடினர். குறிப்பிடத்தக்க ஒரு இசையை உலகளாவிய பல்வேறு நாடுகளின் இசை கருவிகளுடனும், தாள வாத்தியங்களுடன் இசைத்த போது, அந்த இடமும், இசையும், மக்களின் குதூகலிப்பும் இணைந்து ஒன்றாக அதிர்ந்தது. மக்கள் கூட்டம் அந்த இசையுடன் இசைந்து பெரும் வட்டவடிவாக மேலும் கீழுமாக அசைந்தனர். இப்படி பற்பல வடிவத்தில் நாசிசத்தை எதிர்த்து மக்கள் கூட்டம் திரும்பிய இடம் எங்கும் அலை மோதியது. ஊர்வலம் குறித்த பாதையால் செல்ல முடியாத வகையில், மக்கள் வெள்ளம் காணப்பட்டது. மக்கள் பல்வேறு பாதைகளை தெரிவு செய்து, பல வழிப்பாதையூடாக ஊர்வலங்களை குறித்த இடத்தை நோக்கி நடத்தினர். எது ஊர்வலம் நடக்கும் பாதை என்பது தகர்ந்து, சகல வீதிகளும் மக்கள் வெள்ளத்தால் குவிந்து கிடந்தது. பலர் நெருக்குதலில் சிக்கி மயங்கி வீழ்ந்த வண்ணம் இருந்தனர். நெருக்கடிகளை தவிர்க்க முன்னேறுங்கள் என்ற கோசம் கூட, சில நேரத்தில் மையமான கோசமாகியது. என்னுடன் இருந்த நண்பர்களை நான் தவறவிட்டு இருந்தேன். நான் மைய இடத்தை விட்டு 3 மணி நேரமாக நகர முடியாத நிலையில் நின்றிருந்தேன். அந்த இடத்தில் இருந்தே இறுதியாக திரும்பினேன். நான் வீடு திரும்பிய போது 3,4 கி.மீற்றர் அப்பால், அதாவது ஊர்வலத்தின் எதிர் திசையலும்; மக்கள் கூட்டம் நின்று இருந்தையும், திரும்பிக் கொண்டிருந்தையும் காணமுடிந்தது. மக்கள் தன்னியல்பாக, சொந்த போர்க்குணம்சத்தை பல வழிகளில் வெளிப்படுத்தினர். இது வரப்போகும் வர்க்கப் போராட்டத்துக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்ததுடன், மக்களின் விழிப்புணர்வையும் அரசியல் ரீதியான வர்க்க நடைமுறைக்கும் வழிகாட்டியுள்ளது.

 


பி.இரயாகரன் - சமர்