Language Selection

குறிப்பு : 01.05.1987 இரவு மீண்டும் கண் கட்டப்பட்டது. மாத்தையா வந்தார். உண்மையை நீர் கூறவில்லை எனவே முகாம் மாற்றப்படும் என கூறினார்.

விளக்கம் : எதையும் நான் கூறாத நிலையில், தொடர்ச்சியாக அடிக்கடி சித்திரவதை செய்யக்கூடிய பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு எடுத்தனர். அத்துடன் தமது சித்திரவதையின் கோர அலறல்கள் மக்களுக்கு கேட்காத அமைதியான பிரதேசத்துக்கு கொண்டு சென்றனர். இந்த வதைமுகாமில் தான், முதன்முதலாக மாத்தையா சித்திரவதைகளில் நேரடியாக ஈடுபட்டான்.

குறிப்பு : 3ம், 4ம் நாளே உன்னுடைய காதலி இன்னார் என வந்து சொல்லப்பட்டது.

 

விளக்கம் : 3ம், 4ம் நாளே எனது காதலி இன்னார் என்று வந்து சொல்லப்பட்டது. பொதுவாக யாருக்கும் தெரியாத வெறும் ஊகமாக இருந்த இந்தக் காதல் விடையம், எனது கடத்தலின் பின் அனைவரும் தெரிந்த பொது விடையமாக மாறியது. இதையே புலிகளும் தெரிந்து கொண்டிருப்பர். எனது கடத்தல் பற்றி எனது சுற்று வட்டாரமே என்ன கதைக்கின்றது என்ற உளவில், பாசிட்டுகளுக்கு இது என்னைப் பற்றிய ஒரு பதிய தகவலாகும். என்னிடம் வந்து இதைக் கேட்ட போது, தமக்கு என்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்ற மாதிரி காட்டிக் கொண்டனர். தமக்கு தெரியாத ஒன்று இல்லை என்பது போல் நடந்து கொண்டனர். இதன் மூலம் என்னைப் பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காதலியைப் பார்க்க தாம் உயிருடன் விடுதலை செய்யமுடியும், ஆனால் மக்களை காட்டித் தா என்றனர். பின்னால் காதலிக்கு கடிதம் எழுதக் கோரினர். பாசிச வக்கிரம் இப்படி பல விதத்தில், பல வடிவில் அரங்கேறியது.

குறிப்பு : இந்த நாட்களில் உணவோ நீரோ தரப்படவில்லை. 01.05.1987 அன்றிரவே நீர் தரப்பட்டது. நிர்வாணமாகவே தொடர்ந்து இருந்தேன்.

விளக்கம் : 28ம் திகதி மாலை கடத்தப்பட்ட நிலையில் 29, 30, 1 திகதி இரவு வரை நீரோ, உணவோ எதுவும் தரப்படவில்லை. கண் கட்டப்பட்ட நிலையில் பொதுவாக நான் வைக்கப்பட்டு இருந்த போதும், தேவையைப் பொறுத்து கண்ணை அவிழ்த்துவிட்டனர். நிர்வாணமான நிலையில், எனது கை இரண்டும் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தது. இது யன்னல் கம்பியுடன் பிணைக்கப்பட்டு இருந்தது. கமக்கட்டு ஊடாக கயிறிடப்பட்டு தொங்கவிடப்பட்டும் இருந்தேன். ஒரு நாள் கூட மலம் கழிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ அனுமதிக்கப்படவில்லை. அதே நிலையில் சிறுநீர் வெளியேறிக் கொண்டிருந்தது. மலத்தை இயன்றவரை கட்டுப்படுத்தி இருந்தேன். என் மீது தொடர்ச்சியாக குளிர்நீரை ஊற்றி, நான் நித்திரை கொள்வதை அவர்கள் அனுமதிக்கவில்லை. தொடர்ச்சியாக பல்வேறு பொருட்களால் தாக்கப்பட்டதுடன், இரத்தக் காயங்கள் மீள மீள தோண்டப்பட்டன. இதன் மூலம் காயங்கள் எப்போதும் வலியை ஏற்படுத்தும் வண்ணம் புதுப்பிக்கப்பட்டது. ஏற்படும் காயங்கள் மீது குறிவைத்துத் தாக்குதல், பயங்கரமான வலியை எப்போதும் ஏற்படுத்தும். இந்த நிலை தொடர்ச்சியாக உருவாகியது. தொடர்ச்சியான சித்திரவதைகள் மூலம், இயற்கையான மனித இயக்கத்தை சிதைத்தனர். இதன் மூலம் தம்மிடம் சரணடைய வைக்கும் உத்தி கையாளப்பட்டது. எனக்கு தெரிந்த உண்மையைக் கூறு என்றதன் மூலம், மக்களையும் அவர்களின் விடுதலையையும் காட்டிக் கொடுக்கக் கோரினர். கட்டிடத்தை அதிரவைக்கும் சித்திரவதை அலறல்கள், கட்டிடத்தை அதிர வைக்கும் இராணுவ செல்வீச்சுகள் என அனைத்தும் பீதியை விதைத்தது. இதுவே முதலாவது வதை முகாமில் தனியாக வைக்கப்பட்ட நிலையில், நான் சந்தித்த குறிப்பான வதையின் அனுபவமாகும்.

குறிப்பு : இவ் அறையின் சுவர்களில் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களும், கிரனையிற் சிதறல்களும் செறிந்து காணப்பட்டது.

விளக்கம் : இந்த அறை மனித அவலத்தை இப்படி அலங்கோலமாகவே பறைசாற்றி நின்றது. பல உயிர்களை பலியெடுத்து இருந்தது. புலிகள் தேசியத்தின் பெயரில் செய்த மனித வதைகளின் சாட்சியமாக இருந்தது. உறுதியான கொங்கிரிட் அடித்தளத்தில் இருந்த இந்த கட்டிடம், மேல் மாடியைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். மேல் மாடி உறுதியான கொங்கிரிட் தளத்திலானது. இந்தச் சிறை துப்பாக்கிக் குண்டு தாக்குதலாலும், கிரனைற் குண்டு வீச்சாலும் தன்னை அலங்கரித்து நின்றது. சன்னத்தின் சிதறல்கள் சுவரில் பதிந்து கிடந்தது. இரத்தக் கறைகள் சுவருக்கு வண்ணமாகி, அலங்கோலமாக வடிந்து காய்ந்து கறுப்பும் சிவப்புமாக படிந்து காணப்பட்டது. அறையோ தூசு பிடித்து இரத்தக்கறையுடன் இணைந்த துர்நாற்றத்துடன் கூடிய குமட்டலை உருவாக்கியது. கோரமான வக்கிரமான மக்கள் விரோத புலிச் செயல்பாட்டை மூடிமறைத்து அலங்கரித்த தேசிய வீரர்கள் போன்று, அவர்களின் முகாம்களின் உட்புறம் பாசிச நாற்றம் கொண்டதாகவே காணப்பட்டது.

குறிப்பு : 02.05.1987 அன்று மதியம் திரும்பவும் கண் கட்டப்பட்டு வானில் பின்புறம் தூக்கிப் போட்டவர்கள், வசந்தனை முன்புறம் தூக்கிப் போட்டனர். அப்போது வசந்தன் நிமிர மண்டையில் வையடா என விசு கத்தினான்.

விளக்கம் : இரண்டாவது வதைமுகாம் நோக்கி பயணம். மக்களின் பணத்தில் மக்களின் விடுதலையின் பெயரில், "மேதகு" தலைவரின் வழிகாட்டலில் வீதிவழியாக வான் உருண்டு ஒடியது. மக்கள் வாய் பொத்தி, கண் பிதுக்கி பார்த்து நிற்க, கண் மண் தெரியாத வேகத்தில் வான் பறந்தோடியது. மக்கள் எங்கேயோ இராணுவம் வெளியேறி விட்டதோ என்ற பீதியில் உறைந்து நிற்க, மக்களை ஏமாற்றிய குதூகலத்தில் வக்கிரம் பிடித்த தங்கள் வீரத்தை மெச்சியபடி அனைத்து விதமான மனிதப் பண்பையும் கடந்து சென்றனர். மனிதர்களை கடத்திச் செல்வதை மக்கள் கண்டால், தமது போராட்டத்தின் போலித்தனம் அம்பலமாகி, அரசியல் அனாதைகளாகி விடுவோம் என்ற அச்சம் பீடித்த நிலையில், கோழைக்குரிய நடவடிக்கைகளை வீரமாகச் செய்தனர். பாசிசமே மனித நடத்தை சார்ந்த பேசும் மொழியாக, புலித் தலைமை மக்களின் மேலான சிம்மாசனமாகியது. மண்டையில் போடும் துப்பாக்கி குண்டுகள் மனிதனின் சிந்தனைத் திறனை, செயல் கூறுகளை துளைத்துச் சென்றதன் மூலம், தமிழ் மக்கள், நடைப்பிணமானார்கள்.

குறிப்பு : முகாம் மாற்றம், எனது மனநிலை சார்ந்து சுடுவதற்காக கொண்டு செல்கிறார்கள் என்ற உணர்வே மேலோங்கி இருந்தது. நான் தாவடி வதைமுகாம் கொண்டு செல்லப்பட்டு அறையில் விடப்பட்டேன். பக்கத்து அறையில் வசந்தன்.

விளக்கம் : இந்த கோழைத்தனமான இடமாற்றம் 02.05.1987 இல் இரகசியமான, சட்டவிரோத, ஜனநாயகவிரோத கடத்தலாகவே மீண்டும் அரங்கேறியது. இதன் போது நான் என்னை சுட்டுக் கொல்லவே, கொண்டு செல்கின்றனர் என்ற உணர்வு எனக்கு மேலிட்டது. எம் மண்ணில் ஆயிரக்கணக்கானோர் இப்படி காணாமல் போன நிலையில் தான் கொல்லப்பட்டனர். காணாமல் போனோர் பட்டியல் என்று அறியப்பட்டவை, இராணுவத்துக்கு எதிராக தயாரித்தவை மட்டுமே எப்போதும் முன்வைக்கப்பட்டது. அதில் மட்டுமே, அதற்குள் மட்டும் அன்னையர் முன்னணி என்ற பெயரில் புலிகளின் ஆசி பெற்று பினாமியாக செயல்பட்டனர். அதற்கு பத்திரிகை முதல் அரசியல் பினாமி புத்திஜீவிகள் வரை வக்கரித்து வளைந்து நின்று கோசம் போட்டார்கள். ஆனால் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போய் கொல்லபட்டவர்களின் அன்னையர்கள், புலிகளின் பாசிச மண்ணில் வாய் பொத்திய அடிமைப் பதுமையாக்கிய நிலையில், அவர்களை காட்சிக்கு வைத்திருந்தனர். இந்த பதுமைகளின் முதுகின் மேல் ஏறி நின்றே, அறிவுத்துறையும், பத்திரிகைச் சுதந்திரமும் கொக்கரித்தது. இந்த பினாமிய வக்கிரத்தின் தயவில் தான், புலிகளின் "மேதகு" தேசிய தலைவர் வருடத்துக்கு ஒருமுறை மக்களுக்கு வீரமாக, ஒரு கோழையாக ஒளிந்து வாழ்ந்தபடி அறிக்கையை வாசிக்க முடிந்தது.

தாவடியில் உள்ள புதிய வதைமுகாம் பற்றி, நான் அங்கிருந்து தப்பியதன் மூலமே இது தாவடி என்பதை தெளிவாக அறிந்து கொண்டேன். பக்க

 

39.சிலதைக் கூற, பயங்கரத் திருப்பம் என்று கூறிய சலீம் ..(வதைமுகாமில் நான் : பாகம் - 39)

38.  வதைமுகாமின் உள்ளே…(வதைமுகாமில் நான் : பாகம் - 38)

37.வதைமுகாமில் இருந்து தப்பிய பின் முதல் இரண்டு நாட்களில் எழுதப்பட்ட சிறு குறிப்புகளில் இருந்து (வதைமுகாமில் நான் : பாகம் - 37)

36.துருப்பிடித்த வாள்,கத்தி, கோடாலி மூலம், என்னைக் கடத்தியது புலிகளல்ல, என்.எல்.எவ்.ரி. என்று நிறுவிய புலிகள் (வதைமுகாமில் நான் : பாகம் - 36)

35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)


34.நான் மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்து கொண்டு, தகவல்களை கோரித் தாக்கினர் (வதைமுகாமில் நான் : பாகம் - 34)


33.கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? (வதைமுகாமில் நான் : பாகம் - 33)


32.மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்தவுடன் மூன்றாவது முறை வதைகள் தொடங்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 32)


31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31)


30.03.05.1987 – 06.05.1987 வரை இரண்டாவது வதை முகாமில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 30)


29. புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)


28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)


27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)


26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)


25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)


24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)