நடந்து முடிந்த தமிழக மற்றும் புதுவை சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள் போலி கம்யூனிசக் கட்சிகள்,   தமிழ்த் தேசிய இனவாதக் குழுக்கள் ஃ கட்சிகள், சாதிய - சமூக நீதிக் குழுக்கள் ஃ கட்சிகள், மற்றும் தலித் குழுக்கள் ஃ கட்சிகள் ஆகியவற்றின் ஓட்டாண்டித்தனத்தையும் பெதருத்தப்பாடின்மையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

 

இத்தேர்தல்களில் நேரடியாகப் பங்கேற்றவை மட்டுமல்ல் இவற்றில் பங்கேற்காத, ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு, தேர்தல்களைப் புறக்கணிக்கும்படி தள்ளப்பட்ட மேற்படி வகைக் குழுக்கள் ஃ கட்சிகள்கூடத் தமது சுயத்தையும் சுயமரியாதையையும் பறிகொடுத்து மக்கள் முன்பு அம்மணமாக நின்றதைக் கண்டோம்.

அரசியல் என்றாலே முதலாளிய ஓட்டுச்சீட்டு அரசியல் என்ற வரம்புக்குள் தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டுள்ள இந்தக் குழுக்கள் ஃ கட்சிகள் தங்கள் நீண்டகால அல்லது குறுகியகால அரசியல் நடைமுறையில் செக்குமாடுகளைப் போலகிவிட்டன. அதனதல், இவை சுயசிந்தனை, சுயபரிசீலனையற்றவைகளாகி, மாற்று அரசியல் பாதை பற்றிய எண்ணமே இல்லாத மலடுகளாகிப் போயுள்ளன.

 

 

எந்தவொரு இயக்கமும் பாரிய பின்னடைவுக்குள்ளானாலும் அல்லது தொடர்ந்து முன்னேற முடியாமல் நீண்டகாலத் தேக்கத்தில் சிக்கி மெல்ல மெல்லத் தேய்ந்து வந்தாலும், அது தனது நிலையை சுயபரிசீலனை செய்ய வேண்டும். தான் மேற்கொண்ட பாதையையும் கொள்கையையும் மீளாய்வு செய்து மறுபரிசீலனைக்குள்ளாக்க வேண்டும். இயக்கத்தின் இந்நிலைக்குக் காரணமானவர்களை விமர்சனக் கேள்விகளால் வாட்டி எடுக்கவேண்டும். தக்க அரசியல்  அமைப்பு மாற்றங்களால் இயக்கம் இழப்புகளை ஈடுகட்டிக் கொள்ள வேண்டும்.

போலி கம்யூனிஸ்டு  கட்சிகளைப் பொருத்தவரை பின்னடைவு, தேக்க நிலையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. 1950களின் முதன்மையான எதிர்க்கட்சி என்ற நிலையிலிருந்த ஐக்கியப்பட்டிருந்த போலி கம்யூனிஸ்டு கட்சிகள், பிளவுக்கு முன்பே அந்த நிலையை தி.மு.க.விடம் பறிகொடுத்து விட்டன. 1970களில் எம்.ஜி.ஆர். தனிக்கழகம் நிறுவிக் கொண்ட பிறகு, நான்காம் நிலை,  ஐந்தாம் நிலைக்குப் போலி கம்யூனிச கட்சிகள் தள்ளப்பட்டன. அதன்பிறகு ராமதாசின் பா.ம.க் மூப்பனாரின் த.மா.க் வைகோவின் ம.தி.மு.க, கடைசியாக விஜயகாந்தின் த.மு.தி.க என்று புதுப்புது தலைமைகளும் கட்சிகளும் அவதாரம் எடுத்தபோதெல்லாம் அடுத்தடுத்து போலி கம்யூனிஸ்டு கட்சிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. ராமமூர்த்தி, பாலதண்டாயுதம் போன்ற "தலைமறைவு வாழ்க்கைத் தியாகிகளைக் கொண்ட கட்சி" என்ற பழம்பெருமையுடன் கூட்டணி பேரம் நடத்துவதற்குக் கூட, பிற கட்சிகள் மதிக்கக் கூடிய தலைமையையும் இழந்துவிட்டன.

இப்போது போலி கம்யூனிசக் கட்சிகளின் தலைமையும் சரி, அணிகளும் சரி போர்க்குணமிக்க மக்கள் திரள் இயக்கங்கள் வழியே புடம்போட்டு, சிறப்புத் திறமை வாய்ந்தவர்களாகத் தம்மை நிலைநாட்டிக் கொண்டவர்கள் இல்லை. நட்சத்திரக் கால இரவுகள், விளையாட்டுப் போட்டிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்டு, பிழைப்புவாத அரசியலில் பயிற்சியளிக்கப்பட்டு, இன்னுமிரு தாராளமயக் கட்சிகளாக இக்கட்சிகள் மாறிவிட்டன. கம்யூனிஸ்டு கட்சி என்றால் கட்டுப்பாடுமிக்கது என்பது மாறி, அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக அடிவெட்டு வேலைகள், போட்டி வேட்பாளர்கள், அடிதடி குத்து வெட்டு, இலஞ்ச   ஊழல், துரோகம், கட்சிதாவுதல் ஆகியன அக்கட்சிகளுக்குள் மலிந்து விட்டன.

வர்க்கப் பார்வையற்ற ஓட்டுக்கட்சி அரசியலுக்குள் மூழ்கிப் போய், ஆளுங்கட்சிகள் வீசி எறியும் எலும்புத் துண்டுக்கு விசுவாசமாக வாலை ஆட்டிக் கொண்டு அடுத்தடுத்த தேர்தல்களுக்கு அணிமாறும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதக் கட்சிகளாகி விட்டன. இப்படியே அரை நூற்றாண்டு கால சந்தர்ப்பவாத ஓட்டுக்கட்சி அர சியலில் ஊறித் திளைக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சிகள், இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி அமைப்பது என்ற இலக்கை அடியோடு மறந்துவிட்டு, பார்ப்பன  பாசிசக் கட்சிகளுக்கு வால் பிடித்துச் செல்வதே, அவற்றின் மறுபரிசீலனையற்ற நடைமுறையாகிவிட்டது. தாம் ஆளும் மாநிலங்களைத் தொழில்மயமாக்குவதே இலட்சியமெனச் சொல்லிக் கொண்டு ஏகாதிபத்திய உலகமயமாக்கம், தனியார்மயம், தாராளமயக் கொள்கையை அப்பட்டமாகத் தாங்கிப் பிடிக்கும் கட்சிகளாகி விட்டன. சின்னம், கொடி, சிகப்பு நிறம் ஆகிய அடையாளங்களில் மட்டுமே பிற ஓட்டுக்கட்சிகளில் இருந்து வேறுபட்டவைகளாக உள்ளன.

 

தாழ்த்தப்பட்ட மக்களின் தனித்தனி உட்பிரிவுகளை மட்டுமே சமூக அடிப்படைகளாகக் கொண்டவைதாம் தலித்தியக் குழுக்கள் ஃ கட்சிகள். இவற்றின் தலித்திய அடையாளம் தவிர, பிற எல்லா சாதிய  சமூக நீதிக்குழுக்கள் ஃ கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசிய இனவாதக் குழுக்கள்ஃ கட்சிகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே அரசியலை அடிப்படையாகக் கொண்டவை. சிறு முதலாளிய பிழைப்புவாதமே இந்தக் குழுக்கள் ஃ கட்சிகளின் சமூக மற்றும் அரசியல் அடிப்படையாக உள்ளன. இவை முன்வைக்கும் சமூக நீதி  இடஒதுக்கீடு, மொழி, இனஉரிமை ஆகிய கோரிக்கைகள் மற்றும் முழக்கங்கள் ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஆளும் திராவிடக் கட்சிகளின் அரசியல் "ஆயுதங்களாக'க் கையிலெடுக்கப்பட்டுக் கேடாகப் பயன்படுத்தப்படுபவைதாம்.

ஆளும் திராவிடக் கட்சிகளிலேயே அந்தந்த சாதிப்பிரதிநிதிகள் தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் இடம் பிடித்துவிடும் நிலையில் இராமதாசு, சரத்குமார், கார்த்திக், கொங்கு ஈஸ்வரன், திருமா, கிருஷ்ணசாமி, சேதுராமன் போன்றவர்கள் தனித்தனிக் கட்சி வைத்து அரசியல் நடத்துவதன் அவசியம் ஏதுமில்லை. கருணாநிதி, ஜெயலலிதாவின் பிரதியைப் போன்று செயல்படும் வைகோவின் "மறு மலர்ச்சி'க்கு அவசியம் ஏதுமில்லை. இருந்தபோதும், சரிந்துவரும் செல்வாக்கு, தோல்வி பயம் காரணமாகவும் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்டுவதற்காகவும் ஆளும் திராவிடக் கட்சிகள் சில எலும்புத் துண்டுகளை வீசுகின்றன.

ஈழ விடுதலைப் போராட்டம், அதற்கு ஆதரவாகத் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சி இவற்றின் துணைவிளைவாக உருவானவை தாம் தமிழ்த் தேசிய இனவாதக் குழுக்கள் ஃ கட்சிகள். இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, இந்திய தேசியக் கற்பிதத்துக்கு எதிரான தமிழ்த் தேசிய இனவிடுதலை என்று அவ்வப்போது இந்தக் குழுக்கள் ஃ கட்சிகள் முழங்கி வந்தாலும், ஈழவிடுதலைப் புலிகளின் குறிப்பாக, பிரபாகரனின் துதிபாடிகளாகவே மாறிப் போனார்கள். "இந்தியாவிலிருந்து தமிழ் தேசிய இன விடுதலை' என்பது இவர்களின் இலட்சியமாகவும் முதன்மை நடைமுறையாகவும் ஒருபோதும் இருந்ததில்லை. எனவேதான், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் நாம் கண்ட இனவிடுதலைப் போராட்டங்களைப் போல போர்க்குணமிக்கதாக ஒருபோதும் எழுச்சியுறவில்லை.

இராமதாசு, வைகோ, திருமர் ஆகியோரின் தமிழ்த் தேசிய இனவாதம் ஆளும் திராவிடக் கட்சிகளின் பிரதியைப் போன்றதாகவும் ஓட்டுக்கட்சி அரசியலுக்குத் தகவமைக்கப்பட்டதாகவும் அமைந்துள்ளது. இப்போது தேர்தலில் பங்கேற்காத அல்லது புறக்கணிக்கும் தமிழ்த்தேசிய இனக் குழுக்கள் ஃகட்சிகளை நடத்தும் நெடுமாறன், மணியரசன் போன்றவர்கள்கூட தொடக்கத்தில் தேர்தல் அரசியலில் முயன்று, வாக்காளர்கள் ஆதரவின்றி வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்கள்தாம்.

இந்திய அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் தமது தெற்காசியத் துணை மேலாதிக்கம் மற்றும் விரிவாக்க நலன்களுக்குப் பொருத்தமாகத்தான் ஈழ இலங்கைப் பிரச்சினைகளை அணுகி வந்திருக்கின்றன. இந்த உண்மையை நாம் பலமுறை இடித்துரைத்தும் இந்திய ஆளும் வர்க்கங்களையும் அரசுகளையும் "தாஜா' செய்து ஈழ ஆதரவைப் பெறும் அணுகுமுறையை   புலிகளும் இந்தியத் தமிழ்த் தேசிய இனவாதக் குழுக்களும் ஃ கட்சிகளும் மேற்கொண்டு ந்தனர். முக்கியமாக, இந்தியத் மிழ்த் தேசிய இன வாதக் குழுக்களும் ஃகட்சிகளும் ஓட்டுக்கட்சி அசியலுக்குத் தகவாகவே தமது டைமுறையை வகுத்துக் கொண்டுள்ளன. இறுதி ஆய்வில், சட்டவாதமும் பிழைப்புவாதமுமே வர்களின் வழிகாட்டும் நெறிமுறையாக உள்ளன. அதாவது, சிறுமுதலாளிய இருப்புக்கு ஏற்பவே அரசியல், டைமுறை, இயக்கம் என்று வரம்பிட்டுக் கொண்டுள்ளன.

எனவேதான், தாம் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள மிழ்த் தேசிய இன விடுதலையைச் சாதிப்பதற்காகத் தேர்தல் அரசியலுக்கு வெளியே மாற்றுப் பாதையை வகுத்துக் கொண்டு செயல்படுவதை விடுத்து, ஏதாவது ஒரு அணிஃகட்சியை நிராகரிப்பது அல்லது எதிர்மறையில் ஏதாவது ஒரு கட்சி ஃ அணியை ஆதரிப்பது; அதுவும் முடியாதபோது, 49ஓவைப் போடச் சொல்லிச் சரணடைவது என்று இருட்டிலே அலைகின்றன. தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கும்படி அறைகூவும் குழு ஃ கட்சி கூட தேர்தல் ஆணையம் சரியான, ஜனநாயக வழி முறைகளைப் பின்பற்றுமாறு ஆலோசனைகள்  எதிர் பார்ப்புகளைக் கூறுகின்றன.

மொத்தத்தில் வைகோ மட்டுமல்ல, போலி கம்யூனிஸ்டு கட்சிகள், சாதிய  சமூகநீதிக் கட்சிகள், தலித்தியக் கட்சிகள் ஃ குழுக்கள் மற்றும் தமிழ்த் தேசிய இனவாதக் குழுக்கள் ஃ கட்சிகள் ஆகிய அனைத்தும் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை நடந்து முடிந்த தேர்தல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

ஆர்.கே.