மரணத்தின் பின்னான மகிழ்ச்சி ஆரவாரங்கள்
துப்பாக்கி ரவைகளாகவே
வானை நோக்கி தீர்க்கப்படுகின்றன
எண்ணையை நோக்கியவர்கள்
குண்டுகட்கான பெறுமதியை வென்று விட்டார்கள்
உத்தியோக பூர்வமாக
லிபிய மக்களை கிளர்ச்சியாளர்கள் மீட்டு விட்டதாய்
வீழும் முதலாளித்துவம்
கிலாரி வடிவில் ‘வாவ்’ எனும் போதே
ஈராக் ஆப்கான் லிபிய இரத்தம் உதட்டில் சிவந்திருக்கிறது
தாக்குதலின் போது மகிந்தவைப் போலவே
மக்கள் பாதுகாக்கப்பட்டதாய்
ஜரோப்பிய அமெரிக்க அதிபர்கள் வாய்பிளக்கிறார்கள்
உள்ளுரவே மக்கள் புரட்சி தடுக்கப்படுவதில்
ஆக்கிரமிப்பாளர்கள்
தற்காலிக வெற்றியில் புளகாங்கிதம் கொள்ளட்டும்
சதாமைப் போலவே கடாபியின் முடிவும்
இங்கு சற்றுமாறுதலுடன்
லிபிய தலைமுறை பலியிடப்பட்டிருக்கிறது
ஆளுகை மட்டும்
ஏகாதிபத்தியங்களிடம் புதுவிதமாக கைமாறியிருக்கிறது
கடாபியின் முடிவின் செய்தி
மக்கள் புரட்சி அமைப்புகளிற்கு சவால் விட்டிருக்கிறது
எழுச்சிகளை மழுங்கடிப்பதற்கான
புது ஆராட்சிகளில் மானுடவிழுங்கிகள் கண்ணுறங்கவில்லை
அழுகி நாறுவது யார் கையில் இருக்கிறது
உலக தொழிலாளரே ஓரணி திரழ்வோம்!
கங்கா
21/10/2011