செத்தது யார் ? ஏழை பாழைகள்தான்

ஒரு சிறுவர்களின் கதையொன்று.

 

ஒரு அழகான பூனைக்குட்டியும் ஒரு பொம்மமேரியன் நாய்க் குட்டியும் பின்வளவில் விளையாடிக்கொண்டிருந்தன. அந்த வழியால வந்த கோழி க்குஞ்சு ஒன்றுக்கும் இவர்களோடு சேர்ந்து விளையாட விருப்பம். ஆனால் பூனைக்குட்டி சொன்னது "உன்னுடைய மூக்கு பெரிதாக இருக்குது

 எங்களுக்கு உன்னோடு சேர்ந்து விளையாட விருப்பமில்லை"

என்றது. கவலையுடன் சென்ற கோழி குஞ்சு தனியாக காத்திருந்தது. அந்த வழியாக வந்த பன்றி குட்டி ஒன்றுக்கும் இவர்களுடன் சேர்ந்து விளையாட விருப்பம். "நீ குண்டாக இருக்கிறாய் எங்களுக்கு உன்னோடு சேர்ந்து விளையாட விருப்பமில்லை" என்றது பூனைக் குட்டி. அடுத்ததாக விளையாட விரும்பி வந்தது ஆட்டுக்குட்டி. "நீ கறுப்பாக இருக்கிறாய் எங்களுக்கு உன்னோடு சேர்ந்து விளையாட விருப்பமில்லை" என்றது பூனைக்குட்டி. தொடர்சியாக மான் குட்டி, அணில் பிள்ளை, வாத்து எல்லோரும் பூனைக்குட்டியால் நிராகரிக்கப்பட்னர்.

 

நாய் குட்டியும் பூனைக் குட்டியும் சிறிது விளையாடிக் களைத்தபின்னர் தமக்குள் பேசிக்கொண்டனர்

 

"இரண்டு பேரும் மட்டும் விளையாடி ஒரே அலுப்பாக இருக்கு" என்று பேசி முடியுமுன்னர் பெரிய ஆரவாரச்சத்தம் பக்கத்து வளவில் கேட்டது. இரண்டு குட்டிகளும் எட்டிப்பார்த்தார்கள். பூனைக்குட்டியால் நிராகரிக்கப்பட்ட மற்றைய குட்டிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிக்கதொரு மகிழ்ச்சியான விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

 

தாங்கமுடியாமல் பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் மற்றைய குட்டிகளிடம் சென்று தங்களையும் சேர்த்து விளையாடும்படி கெஞ்சிக் கேட்டினம்.

 

தங்களுக்குள் முரண்பட்டாலும் இறுதியாக எல்லோரும் சேர்ந்து ஆனந்தமாக விளையாடினார்கள்.

 

இது கனடிய சிறுவர் தொலைக்காட்சியினால்"இனப்பாகுபாட்டுக்கு எதிராக" என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஒரு குட்டி விவரணப்படம்.

 

தோட்டக்காட்டான் வேண்டாம். . !
தொப்பி பிரட்டி சோனி வேண்டாம் . . !
மட்டக்களப்பான் துரோகி. வேண்டாம் . . !
தமிழ்நாட்டு சனம் முட்டாளுகள் இதுகளால என்ன வரப் போகுது. . !
கீழ் சாதிகளும் கம்யூனிசம் கதைக்கும் . . .!

மலையகமும், மட்டக்களப்பும், முஸ்லிம்களும், இன்ன இன்ன பிறகூறுகளும் இணைந்து நிற்கும்போது யாழ் மையவாதம் சிறுபான்மையாகிவிடும்.

 

இது சிங்கள இனவாதத்திற்கு சாதகமான வடிவம் என்பது வருத்தத்திற்குரியதுதான் என்றாலும், இந்த வரலாற்று தேவையை வற்புறுத்தியது யாழ் மையவாதம் தான். இதே சமாந்தரமான நிகழ்வுகள் பல தேசங்களிலும், உலகவரலாற்றிலும் கண்கூடாக அறிந்தவொன்று. காரணம் எந்த மையவாத அரசியலும் சமூக ஒற்றுமையை தேடாது. இறுதியில் பிளவுகளாக வேரறுந்து தேங்கும் என்பதே நியதி.

 

தாங்களே பிரதானம் என்று பேசிய யாழ் மையவாதம் இன்று பல்லு பல்லாக உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்கும் கிழட்டுப்புலியாகிக் கொண்டிருக்கிறது. இந்த விடயத்தை சற்று உன்னிப்பாக பார்க்க வேண்டும். அரசு, புலி, டக்ளஸ், ஜே.வி.பி என்ற கோதாவில் நிற்காமல் எல்லோருமே மக்கள் என்ற கோதாவில் நின்று பேசுவோம். இந்த விடயத்தை பழிவாங்கும் உணர்வுடன் பார்க்கக்கூடாது. மாறாக பரிதாபப் படவேணடிய விடயமாக அணுக வேண்டும். ஏன் . . ? குண்டு கட்டி பாஞ்சதும், வழியில்லாமல் சிங்கள இராணுவத்தில் சேர்ந்து செத்ததெல்லாம் யார். . ? திமிர் பிடித்த கண்டி மையவாதமா. . ? யாழ்மைய வாதமா. .?; ஏன் மட்டக்களப்பு மையவாதமா. . ? இல்லை. ஏழை பாழைகள்தான்.

தமிழ் தேசியத்துக்கான உரிமையான உன்னத ஆரிய வடிவத்தோடு எங்களை அமெரிக்கா உட்பட பெரிய சாம்ராச்சியங்கள் அங்கீகரித்து எங்கட வளங்களை அவையின்ர மூலதனத்தோட வளப்படுத்தினால் நாங்களும் சிங்கப்பூராகி சுகபோகங்களில் வாழமுடியாதா? என்ற கவலை ஏன் எங்கட மேட்டுக்குடிக்கு ஏன் வரப்படாது. . . ? அப்பிடி ஒன்று நிறைவேறுகிற தறுவாயில ஏன் எல்லாரும் குழப்புகிறான்கள்.. . ?

 

தங்களுக்கு தேவை எண்டால், அதாவது மேற்குறிப்பிட்ட (மையவாதத்திற்கு) "தேசியத்திற்கு" தேவையான வகையில வடிவம் கிடைக்கும். லெனின், மாக்ஸ், ஸ்ராலின், ரொக்ஸி. . . மாவோ

 

ஒரே ஒரு கேள்வி. . மனச்சாட்சிய தொட்டு சொல்லுவதானால் யாழ்ப்பாண ரோட்டில பீ அள்ளுற பறையன்ர பிரச்சனை முதன்மையானதா. . ? பல்கலைக்கழக தரப்படுத்தல் முதன்மையானதா. . ?

எல்லாம் எங்களில் திணிக்கப்பட்ட தேசியங்கள், விடுதலைகள்;, சாமான்யமற்றவைகள். கருத்தியல்கள்,

 

"என்னதான் நீங்கள் நியாயங்கள் சொன்னாலும், எவ்வளவு தத்துவங்களை எடுத்துச் சொன்னாலும் பொரும்பான்மை தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள். . ? புலிகளைத்தானே. ! இவ்வவளவு சனத்துக்கும் ஒண்டுமே விளங்காமலோ ஆதரிக்குதுகள். .? நீங்கள் ஒரு கொஞ்சப்பேர் மாத்திரம் ஏன் விதண்டாவாதம் கதைகிறீங்கள்.:"

 

கிட்லரின் ஆட்சிக்காலத்தில் ஜேர்மனியில் 75 வீதத்திற்கும் அதிகமான ஜேர்மனியர்கள் கிட்லரின் நாசிக்கட்சிக்குத்தான் ஆதரவளித்தார்கள் என்று சொல்வதிலும் பார்க்க வெறித்தனமாக ஆதரித்தார்கள். என்பதே உண்மை. அப்போதைய ஜேர்மன் மக்களின் பெரும்பான்மை வாக்குகளா? இன்றைய ஜேர்மன் மக்களின் உணர்வானது கிட்லரின் மேல் காறி உமிழ்தலா .. பெரும்பான்மையானது. ?

 

வரலாற்று இயங்கியல் வளர்ச்சி மாற்றம் அடையும் போது முந்தைய பெரும்பான்மையை இன்றைய பெரும்பான்மை காறி உமிழும் . . !

 

யாழ்ப்பாண மையவாதம் தான் பிரச்சனை என்பது உண்மைதான் தவிர்க்க முடியாது சரி. ஏன் கண்டி மையவாதம் சரியோ. ? மட்டக்களப்பு மையவாதம் தான் சரியோ. ? இல்லை முஸ்லிம் மையவாதம் சரியோ. .?

 

எல்லா மையவாதங்களும் சரி ! எதுவரைக்கும் . ! இன்னுமொரு ஆதிக்க மையவாதத்திற்கு எதிராக இருக்கும் வரையில்தான். ஒன்று இன்னுமொன்றுக்கு அடக்குமுறை செய்ய முற்படும் போது குப்பையில் போட வேண்டியதுதான். பல்லுக்கொட்டுண்டும் கிழட்டுப் புலி போல.

 

எனவே வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வோம் . . ஒன்று பரிணாமம் மற்றது புரட்சி (Revolution or Evolution) ஒன்று மெதுவாக வளர்ச்சி மாற்றத்தை அடையும் மற்றது சடுதியான வளர்ச்சி மாற்றத்தினை அடையும்.

 

எது என்றும் எப்படியென்றும் தீர்மானிப்பவர்கள் மக்கள் தான். இலங்iயில் இப்போதைக்கு புரட்சிகர மாற்றங்கள் தோன்றுவதற்கு சாத்தியங்கள் இல்லாவிட்டாலும் முன்னோக்கிய பரிணாம மாற்றங்கள் ஏற்படுதலே கேள்விக்குரியதாகிறது.

 

இப்போது பெரிய பாவம் இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்கள்தான்.

 

வீதி வந்த
சின்னக் கரிக்குருவியொன்று
கூடு கட்டி குஞ்கள் பொரிக்கக் காத்திருந்தது
நாளை வெடிக்கத் தயாராகும்
பீரங்கிக்குழாய் வாசலில். . !

எமக்கெல்லாம் விடியலும் விடுதலையும்
வந்துவிடும் என்று காத்திருக்கும்
இலங்கை தமிழ்பேசும் மக்களைப் போன்று. . !

கனடா சபேசன்