மரணமில்லை தோழனே
மக்கள் எழுச்சி கொள்ளும் இடமெல்லாம்
தோழர் விசு
மக்களிற்காய் வாழ் என்று
மூட்டிவிட்ட நெருப்பிருக்கும்
ஓயாது மக்களிற்காய்
உழைத்த புரட்சியாளன் வீழவில்லை
இழப்பதற்கு தோழரிடம் உயிர்தான் இருந்தது
உயிர் மூச்சு தோழர்களாய்
மக்கள் இடர்நீங்க உழைக்கிறது
காட்டிவிட்ட வழிநெடுக
கழுகுகள் பறந்தபடி ஓரடிநகரவிடா கொடுகாலம்
போயகன்று- மகிந்தப்பேய்களிடம் விட்டிருக்கு
தோழா நீயிட்ட நெஞ்சுரம்
ஏழைக்காய் மீளெளும்
மக்களிற்காய் குரல் கொடுத்ததற்காகவே
மரணத்தை எதிர்நோக்கிய
எத்தனை தோழர்களை மீட்டெடுத்தாய்
எப்படித் தோழனே
கோழைகளால் உன்உயிரை எடுக்கமுடிந்தது
தலைமை வழிபாட்டால்
கூடவே அழிந்தது ஈழப்போராட்டம்
மக்கள் சக்தியை நேசித்த முன்னணியாளர்களை
தேடித்தேடி ஒன்று திரட்டி வளர்த்து விட்ட தோழனே
உழைக்கும் வர்க்கம் தோழர் விசுவை இழக்கவில்லை.
கங்கா
14/10/2011