பிணக்காடாக்கிய பேரழிவு
இனம் மீழ்ச்சிகொள்வதற்கான படிப்பினைகளை
மட்டுமே விட்டுச்சென்றதாயில்லை
மீள்பொறிக்கான சதியாளரிடம் கையளித்துள்ளது
ஏகாதிபத்தியங்களின் முட்டி மோதலிற்குள்
மூழ்கி முத்தெடுப்பதாய்
சாணக்கிய சவடால் மீளெளுந்துள்ளது!
பிரபாகர அவதாரம் புலத்து ஆய்வாளர்களால்
அமெரிக்க வரவுக்காய்
காக்கவைத்து அழிக்கப்பட்டது
முடிவெய்துவதாயில்லை!
தேசியத்தலைவராக
சம்பந்தர் அவதாரம் உலாவரதொடங்கியுள்ளது
சுற்றுப் பேச்சுக்களில்
தமிழர் எஞ்சியுள்ள மூச்சும் இரைகொள்ளப்படுகிறது.
மக்களின் எதிர்ப்புணர்வுகளை
வாக்குக்களாக மாற்றிக்கொண்டவர்கள்,
அமெரிக்கப் பறப்பு
ஆயிரம் அர்த்தம் கொண்டதாய் மார்தட்டியபடியே
வெளியிடமுடியா இராஜதந்திரமாக
மக்களிற்கு மௌனம் சாதிக்கப்படுகிறது.
யார் இவர்கள்
இந்திய அமெரிக்க உறவின் செல்லப்பிள்ளைகள்.
எலும்புத் துண்டுகளை பெற்றுத்தருவோம்
இணங்கிப் போகுமாறு சொல்லப்போகிறார்கள்.
ஆசியப்பிராந்திய போட்டியின்
தரகர்களாய் ராஜபக்சபோடு கூடப்போகிறார்கள்.
தமிழரோடு சேர்த்து
இலங்கைத்தேசம் விலை பேசப்படுகிறது
விழித்துக்கொள்வோம்….!
கங்கா
27/10/2011