01212022வெ
Last updateஞா, 16 ஜன 2022 1pm

"அயோக்கியனும் கூட … புரட்சிவாதியாகத்தான் தன்னை அறிவித்துக்கொள்வான்" யார் இந்த கைமண்?

புரட்சிகர நெருக்கடி தோன்றும் போது "ஒவ்வொரு அயோக்கியனும் கூட … புரட்சிவாதியாகத்தான் தன்னை அறிவித்துக்கொள்வான் என்பதை நாம் காண்போம்." என்ற லெனின் கூற்றுதான், இங்கு மிகச் சரியாக பொருந்துகின்றது. முள்ளிவாய்க்காலின் பின் தம்மை மார்க்சியவாதிகளாக கூறிக்கொண்டும், காட்டிக்கொண்டும் திடீர் "இடதுசாரிகளாக" சிலர் வெளிவருகின்றனர். வர்க்கப் போராட்ட அரசியல் இந்தச் சமூகத்தில் தோன்றுவதை தடுக்க, அற்பவாதிகள் எல்லாம் வானத்தில் இருந்து திடீர் திடீரெனக் குதிக்;கின்றனர். இந்த அற்பவாதிகளுக்கு மாறானது மார்க்சியவாதிகளின் அணுகுமுறை. நெருக்கடிகளின் போது ஒரு மாhக்சியவாதி என்ன செய்வான் என்பதை லெனின் மிகத்தெளிவாக "பாட்டாளி வர்க்கத்தையும் அனைத்து உழைக்கும் மக்கள் மற்றும் சுரண்டப்படும் மக்களையும் அதற்கு (புரட்சிக்கு) தயார்செய்யக் கூடிய தைரியத்தைப் பெற்றிருப்பார்" என்றார். இப்படி அரசியல் உண்மை இருக்க, இன்றைய திடீர் "மார்க்சிய" அயோக்கியர்கள், "இடதுசாரிய" அற்பவாதிகள் எல்லாம் எதிர்ப்புரட்சி நிலவிய காலத்தில், செய்யவேண்டிய புரட்சிகர கடமையைச் செய்யாது அதற்கு எதிரான அற்பத்தனத்தையே தங்கள் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்தவர்கள்தான்;. இன்று வேஷம் போடுகின்றனர்.

 

 

 

இந்த வகையில் "கைமண்" என்ற பெயரில் தன்னைத்தான் மூடிமறைத்துக் கொண்டு, அரசியல் பேசும் கௌரிகாந்தனின் கடந்தகாலம் தான் என்ன? அவர் எதை மூடிமறைக்கின்றார் என்பதை நாம் தெரிந்து கொண்டால், அவரின் இன்றைய அரசியல் நோக்கத்தை தெரிந்து கொள்ள முடியும்;. ஏன் தன்னைத்தான் இன்று மூடிமறைத்துக் கொள்கின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

கௌரிகாந்தன் 1978 ம் ஆண்டு முதல், ஏகாதிபத்திய தன்னார்வ நிதியின் துணையுடன் அதற்காக தொடர்ந்து இயங்கிவருபவர். இதை விரிவாக தெரிந்து கொள்ள பார்க்க "அறிவீர்" என்ற பிரசுரத்தை.

ஆரம்பத்தில் கீழைக்காற்று இயக்கத்திலும் பின் கிராமிய உழைப்பாளர் சங்கத்திலும் இயங்கியவர். 1984ம் ஆண்டு "இலங்கையின் தேசிய இனப்பிரச்னை" என்ற நூலை "லோகன்" என்ற புனை பெயரில் தமிழ்நாட்டில் வைத்து வெளியிட்டதன் மூலம் இயக்கங்களுக்குள் ஊடுருவினார். இந்த நூலை வெளியிடுவதற்கான பணத்தை ஏகாதிபத்திய தன்னார்வ நிதி நிறுவனங்கள் தான் கொடுத்தது. இந்த நூலை முன்னிறுத்திக்கொண்டு, புளாட்டுடன் தன்னை இணைந்துக் கொண்டார். இப்படி இடதுசாரிய சீரழிவுவாத கருத்தை புளட்டில் வளர்தெடுக்கவும், அங்கிருந்த புரட்சிகர கூறுக்கு எதிராக அதை முன்தள்ளியபடி, கொலைகார அராஜகவாத கும்பலுடன் கூடி இயங்கினார். இங்கு தொடர்ச்சியாக அங்கு நடந்த உட்படுகொலைகளுக்கு பக்கத்துணையாக நின்று எதிர்ப்புரட்சி அரசியல் செய்தவர், இறுதியாக ராஜன் கும்பலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதன்பின் "அராஜக எதிர்ப்பு முன்னணி" என்ற கோசத்தின் கீழ், புளட்டில் இருந்து பிரிந்து பாட்டாளி வர்க்கக் கட்சி ஒன்றை உருவாக்க முனைந்த, "புதுக்குரல்" அணியுடன் தொடர்பை ஏற்படுத்;தி அதனுடன் இணைந்து கொண்டார். அவரின் தொடர்ச்சியான இந்தச் செயற்பாட்டுக்கு ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்கள் பணம் கொடுப்பது, மிக குறுகிய காலத்தில் அம்பலமாகியது. இதை அடுத்து அவரை அந்த அமைப்பில இருந்து வெளியேற்றியதுடன், அவர்கள் அதை அம்பலப்படுத்தினர்.

இதன் பின் திடீரென கிளிநொச்சியில் இவர் உள்ளிட்ட 5 பேர் "சமூக விஞ்ஞான கல்வி வட்டம்" என்ற பெயரில் தோன்றினர். "சமூக விஞ்ஞானச் சுடர்" என்ற இதழை பெரும் ஆரவாரத்துடன் கொண்டுவந்தனர். இந்தச் "சமூக விஞ்ஞான கல்வி வட்டம்"த்தின் தேவைக்காக முதல்; தவணையாக 1 லட்சம் ரூபாவை ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனத்திடம் கோரினர். இப்படி ஏகாதிபத்திய நிதிப் பரிமாற்றம் பல அம்பலமாகியது. இதன்பின் புலிகளுடன் இருந்தவர், பின் இந்தியாவில் வெளிப்பட்டார். இதன் உள்ளே பல மர்மங்கள் தொடர, ஏகாதிபத்திய தேவைக்காக பணம் வாங்கிய "இடதுசாரியம், மார்க்சியம்" பேசியவர் தான் இந்த கௌரிகாந்தன் என்ற "கைமண்". இதனால்தான் இன்று இவருக்கு முகமூடி தேவைப்படுகின்றது. இன்று திடீர் இடதுசாரிய வரவு போல்தான், இவர் திடீரென வெளி வருகின்றார். இன்று சமூகத்தில் ஏற்படும் விழிப்புணர்வும், ஆர்வத்துடன் கூடிய புரட்சிகர இடதுசாரி அரசியல் மேல் எழுவதை கருவறுக்க, யாரிடம் எவ்வளவு பணம் வாங்கி செயல்படுகின்றார் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

இதன் அடிப்படையில் அண்மையில் "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்" என்ற தலைப்பில், "கைமண்" என்ற பெயரில் தன்னை ஒளித்துக்கொண்ட ஒருவராக திடீர் "இடதுசாரி" அரசியல் பேசியபடி வெளிவந்தார். இந்த நூல் பற்றி எமது கருத்தை கூறுமாறு, இதை தங்கள் அரசியல் நோக்கில் வெளியிட்டவர்கள் கோரியதை அடுத்து நாம் ""வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை" என்று கூற வர்க்கத்தின் பெயரில் ஒரு நூல்" என்ற விமர்சனத்தை எழுதி அதைக் கூட்டத்தில் விநியோகி;த்தோம். அத்துடன் அதை நாம் இணையத்தில் பிரசுரித்;ததுடன், கூட்டத்தில் தனியான ஒரு உரையையும் ஆற்றினோம். இதன் பின் "கைமண்" என்ற பெயரில் முகமுடி அணிந்து ஒளிந்திருந்த கௌரிகாந்தன், எனக்கு பதிலளிக்கும் வண்ணம் எதிர்வினை ஒன்றை "இலங்கை மக்கள் திரள் ஒன்று உருவாகும்!" என்ற பெயரில், தேசம்நெற்றில் வெளியிட்டு இருந்தார்.

எப்படி அவரின் நூல் ஒரு குப்பையோ, அப்படித்தான் இந்த எதிர்வினையும். ஒரு கருத்தை வெளிப்படையாக நேர்மையாக முன்வைக்காது, சுற்றிவளைத்து மோசடியாக இட்டுக்கட்டி காட்டுவதன் மூலம், மனித அறிவை ஏமாற்ற முனைகின்றார். இடதுசாரியத்தின் புரட்சிகர கூறு இன்று முரணற்ற வகையில் முன்னிறுத்தப்படுவதால், சுற்றிவளைத்து அதைத் தகர்க்க முனைகின்றார். கலவையாக, குப்பையாக அனைத்தையும் சாக்கடையில் கொட்டி, பொறுக்கி கொள்ளுமாறு விடுவதன் மூலம், கருத்துச்சிதைவை ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்புகின்றார்.

எனது விமர்சனத்தை "பொய் பொய்" என்று கூறுவதன் மூலம் அவர் செய்யும் மோசடிகளைப் பார்ப்போம்;

1. நான் விமர்சனத்துக்காக அவர் நூலில் எடுத்துக் கையாண்ட வார்த்தைகளை ஒட்டிய எனது விமர்சனத்தை மறுக்காமல், அதைத்தான் தானும் சொல்வதாகவும் அதை நான் மறுப்பதாகவும் கூறுகின்றார். ஆக இங்கு ஒரு வெளிப்படையான உண்மை புலப்படுகின்றது, எமது கருத்துகள் சரியானவை என்பதையும், அவர் விரும்பியோ விரும்பாமலோ தன் நோக்கத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்ததுக்கு உள்ளாகின்றார்.

2. நாங்கள் முன்வைத்த விமர்சனத்தைத் தான், அதாவது எமது அரசியலைத்தான் அவரின் நூல் கொண்டுள்ளதா எனின் இல்லை. ஆனால் அதைத்தான் கொண்டுள்ளதாக காட்ட, திசைதிருப்ப முனைகின்றார். குறித்த எனது விமர்சனத்துக்கு அந்தப் பக்கத்தைப் பார், அடுத்த வரியை பார் என்று கூறுவதன் மூலம், குறித்த வரிகள் மூலம் அவர் கூறிய அரசியல் உள்ளடக்கத்தை மூடிமறைத்து திசைதிருப்ப முனைகின்றார்.

3. அந்தப் பக்கத்தைப் பார், அடுத்த வரியை பார் என்று கூறுகின்ற பின்னணியில், அதை எடுத்தால், அது அவரின் கடந்தகாலம் போல் மோசடியானது. அவர் தன் நூலில் உள் அது இது என்று, புலித் தேசியம் வரை கூட்டி அள்ளிப்போட்டு குழப்பும் சாக்கடை தான். "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்" என்ற தலைப்பை போட்டு புலிக்கு குடைபிடிக்கும் எல்லைவரை, இங்கு எல்லாவிதமான அரசியல் விபச்சாரத்தையும் நாம் அங்கு காணமுடியும்.

4. என்னை பொய்யனாக காட்ட, வரிக்குவரி சாக்கடையில் இருந்து ஒன்றைப் பொறுக்கி எடுத்து இந்தா பார் என்கின்றார். நாங்கள் பொய் சொல்வதாக கூறுகின்ற நகைச்சுவையை, எமது எதிரிகள் கூட நம்பமாட்டார்கள். நாங்கள் வெளிப்படையாக, யாருக்கும் ஒளித்து அரசியல் செய்யவில்லை. எங்கள் கருத்தை ஒளித்து வைத்து அரசியல் செய்தது கிடையாது. எங்கள் கருத்துகள், நடைமுறைகள், செயற்பாடுகள் அனைத்தும் உலகறிய வெளிப்படையானது. இப்படி இருக்க எம்மை "பொய்யனாக" காட்ட படாதபாடு படுகின்றார்.

தன்னைப் போல் எம்மையும் எண்ணிக்கொண்டு தான் இதைக் கூறுகின்றார். ஏன் நீங்கள் ஒளித்து இருக்கின்றீர்கள்? யாருக்குப் பயந்து ஒளித்து இருக்;கின்றீர்கள்? நீங்கள் கடந்தகாலத்தில் செய்த அரசியல் தான் என்ன? போராட்டத்தின் பெயரில் மக்கள் விரோதிகளுடன் கூடி நடத்திய மனிதவிரோதக் கூத்துக்கள் தான் என்ன? அன்னிய நாடுகளுடன் பணம் வாங்கி நீங்கள் நடத்திய அரசியல் தான் என்ன? கீழைக்காற்று, கிராமிய உழைப்பாளர் சங்கம், புளட், புதுக்குரல், புலி… என்று நீங்கள் அங்கும் இங்கும் நடத்திய அரசியல் தான் என்ன? இவை பற்றிய உங்கள் இன்றைய நிலைப்பாடுகள் தான் என்ன? "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்" என்ற நூல் எந்த அரசியல் நோக்கில், யாருக்காக வெளியிடப்பட்டது? உங்கள் கடந்தகாலம் தான் என்ன?

இன்று மக்களை நேசிக்கும் அனைவரும், நீங்கள் எப்படிப்பட்ட மக்கள் விரோதி என்பதை நன்கு அறிவர். இதனால் தான் "கைமண்" பெயரில் உலகறிந்த ஒரு பொய்யனாக, புரட்டுப் பேர்வழியாக தன்னைத்தான் மூடிமறைத்துக் கொண்டு, கல்லெறிவதுதான் இங்கு வெளிப்படையான உண்மை;. "ஒவ்வொரு அயோக்கியனும் கூட … புரட்சிவாதியாகத்தான் தன்னை அறிவித்துக்கொள்வான் என்பதை நாம் காண்போம்." என்று லெனின் கூறியது போல், புரட்சிகார வேஷம் போடுகின்றனர். தன்னை மூடிமறைத்துக் கொண்டு, தன் சதித்தனமான ஏகாதிபத்திய எடுபிடிக் கருத்தை முன்தள்ள "கருத்துப்போராட்டம்" "கருத்துப் பரிமாற்றம்" என்ற புதிய மூகமுடியை வேறு இவர்கள் போட்டுக் கொள்கின்றனர். இவர் யார் என்பதையும், இவர்களின் கருத்துகள் எப்படிப்பட்டது என்பதையும், இவர்களின் நோக்கம் என்ன என்பதையும், இவரின் கடந்தகால நடத்தைகளே சிறப்பாக அம்பலமாக்குகின்றது. இதன் பின்னனியில் தான், இதன் பின்னான அனைத்தையும் நாம் இன்று இனம் காணவேண்டும்;.

 

பி.இரயாகரன்

05.11.2011


பி.இரயாகரன் - சமர்