இன்னுமொரு விசயமென எழுத வந்து இதுகளைப் பற்றி எத்தனையோ பல உண்மைகளை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய இருக்கிறது. எப்போதும் போலவே இதுகளின்ரை கொட்டமடிப்புகள் வேறுவேறு ரூபங்களிலை தற்போதும் வெளிக்கிடுது. இப்ப இந்த தேன்குழல்ச் சாமியோடை சேர்ந்து கூத்தடிக்கின்ற, புத்தகப் பூச்சிகளான டாக்டரும் – வழக்குரைஞர் – கணக்காளாரெண்டு ஒரு சிலதுகள், ஜிலேபிச்சாமி அன்ட் கொம்பனி மக்களை ஏமாற்றுகின்ற திருகுதாளங்களை இதில் மேலும் காணலாம்.
இந்த காமயோக ஜிலேபிச்சாமி, கேரள மக்களின் உழவர் நாளான ஓணம் பண்டிகையை லண்டனில் எதிர் வரும் வாரத்தில் நடாத்தப்போவதாகவும், அத்துடன் இவனது அடியாட்கள் காமயோக ஜிலேபிச்சாமியை லிமௌசின் (LEMO!) காரில் பவனியாக அழைத்து வந்து, இவனுக்குப் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நடாத்தத் துடிக்கின்றார்கள். அந்த அளவுக்கு இவனும் இவனது பன்னாடைக் கூட்டமும், அப்பாவிச் சனங்களை முழுமையாக மொட்டையடிக்கின்றனர்.
இவன் இப்பிடி செய்யிற புதுப் பெயரிலிலான பண்டிகைகளை திட்டமிட்டு நடாத்துவதன் மூலமாக, இவனது காம லீலைகள் பற்றியும், பணப் பறிப்புப் பற்றியும் அறியாத அப்பாவிகளை, காம யோக ஜிலேபிச்சாமியின் கள்ளர் கூட்டான மேற் சொன்ன புத்தகப் பூச்சிகள் முன்னின்று பிரச்சாரம் செய்து, இந்தக் காமயோக ஜிலேபிச்சாமிக்கு எமது மக்களைக் கூட்டிக் கொடுக்கின்றனர். இவன் ஓணம் செய்யிறனெண்டு எங்கட பெண்களில் பாலியல் கோணம் வைப்பவன் என்பதன் விபரங்களை நாம் முன்னைய பதிவுகளில், எத்தனையோ பல ஆதாரங்களுடன் தந்துள்ளோம். மற்றும் இவனைப் பற்றி முழுமையாக அறிவதற்காக நாம் ஏற்பாடு செய்திருக்கும் எமது நிருபர்கள் இவனுக்கு காவலராக, தொண்டு செய்பவராக, அடியாராக இவனுடனேயே எப்போதும் உள்ளனர். அதனால் இன்னும் பல உண்மைகள் இனிவரும் காலங்களில் தொடராக வெளிவரும்.
அடுத்ததாக இந்த காமயோக ஜிலேபிச்சாமி என்ன மாதிரியெல்லாம் திருகுதாளம் பண்ணுகின்றான் எனப் பாருங்கள். அதாவது முருகனுக்கு அபிசேகம் கேள்விப்பட்டிருப்பியள், இந்த ஜிலேபிச்சாமி முருகனை விட்டிட்டு வேலுக்கு அபிசேகம் எண்டும், அடுத்து மயிலுக்கு, அதையடுத்து மயிலுக்கு கீழேயிருக்கிற பாம்புக்கு, பிறகு ஜிலேபிச்சாமியின் லண்டன் வைப்பாட்டிகளில் ஒருவரான தேவாம்மாவுக்கு என இவனது அபிசேகம் தொடர்கின்றது. அதோடை இவனது கால்களைக் கழுவி, அந்த சாக்கடை நீரை தீர்த்தமெண்டு குடிப்பதற்கு முன்யடிக்கின்ற மடையர்கள் இருக்கும்போது, அதுவும் படித்த முட்டாள்கள் டாக்டர் – வழக்குரைஞர் – கணக்காளார்..!? போகிற போக்கைப் பார்த்தால், இந்த காமயோக ஜிலேபிச்சாமி தனது குண்டி கழுவிய நீரைக் கொடுத்தாலும், அதையும் ஏந்திக் குடிப்பதற்கு இப்படியானோர் தயாராக உள்ளனர். மக்களிடமிருந்து அறுக்கின்ற பணம் பொருளில் இவர்களுக்கும் சமபங்கு கிடைக்கின்றது என்பதே அதற்குக் காரணம்.
கடந்த வருடங்களில் காமயோக ஜிலேபிச்சாமிக்கு பிறந்த நாளை இவர்கள் கொண்டாடியதில், அடியார்கள் – பக்தர்கள் என இவர்களிடம் ஏமாந்த மக்களிடம், பணம் பொருளைக் கொள்ளையடிக்கும் திருமதி.பணபாலனும் இவளது சகாக்களும், இந்த முறையும் காமயோக ஜிலேபிச்சாமிக்கு பிறந்த நாளைக் கொண்டாட உள்ளனர். யாரும் யாருக்கும் எதையும் கொண்டாடலாம். அது அவர்கள் பிரச்சினை ஆனால் இதிலிருக்கும் மறுபக்கம் என்னவென்றால்..? ராமனுக்கு ஒரு தாரம் என்பார்கள். முருகனுக்கோ இருதாரம் என்பார்கள். ஆனால் தன்னை முருகனின் அவதாரம் எனச் சொல்கின்ற காமயோக ஜிலேபிச்சாமி ஆகிய முரளி கிருஷ்ணனுக்கோ பலதாரம். இவன் பயணித்த பல நாடுகளிலும் இவனுக்கு வைப்பாட்டிகள் ஏராளம். அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து இவனுக்குக் கொண்டாடாத பிறந்தநாளை, இவனது அடிவருடிகள் கொண்டாடுகினம்.
லண்டனில் உள்ள ஒருசில பெண்கள் இவனோடு இணைந்து பாலியல் இன்பம் பெறுவது போல்.., கடந்த சில தினங்களுக்கு முன் இவனுக்கு நடந்த பூசையில், தனக்கும் அது கிடைக்காதா என, ஒரு கிளட்டுப் பெண், இவனிடம் நேரடியாகவே காதல் தூதுவிட்டுப் பாடுகின்றாள்.
சின்னச் சின்ன ஆசை, எனக்கு சாமிமேல ஆசை, அவரை கட்டிப் பிடிக்க ஆசை, அணைத்தபடி எங்கும் பறந்துபோக ஆசை.., என பாலியற் போதையில் அவள் அந்தப் பாடலை மேடையில் பாடும்போது, காமயோக ஜிலேபிச்சாமியும் அதனை ஏற்பதாக கண்ணடித்தான். அன்று அங்கே வருகை தந்த பலர் தமது மானம் காற்றில் பறக்கின்றது என பேசிக் கொண்டார்கள்.
இப்பிடித்தான் ஒரு கொஞ்சக் காலத்துக்கு முன்பு, சத்தியசாஜி பாபாவின் படங்களிலிருந்தும் இதே நீறுதான் கொட்டியது. நாமும் அதனை நேரே சென்று பார்த்து, அதற்கு பாத்திரமான மன நோயாளிகளைக் கண்டறிந்தோம். தற்போது சத்தியசாஜி பாபா இறந்த பின்பு, அவன் அமுக்கி வைத்திருந்த அத்தனை சொத்துகள் முதல் பல்வகையான சுத்துமாத்துகள் காமலீலைகள் வரை.., நாறிப் புழுத்து எரிஞ்சு சாம்பலாகிப் போனான். சொத்துச் சண்டை மட்டும் தற்போது நடக்கின்றது.
அதேபோல இந்த காமயோக ஜிலேபி பாபாவின் தொங்குகின்ற படத்திலிருந்து திருநீறு கொட்டுவதாக படக் கலவை செய்து, கதை விடுகின்றவர்கள், முடிந்தால் காமயோக ஜிலேபி பாபாவின் மூத்திர வாசலால் லீற்றர்க் கணக்காக பால் பொழிந்தது, அவனது மல வாசலால் மூடைக் கணக்கில் அரிசி – மாவு கொட்டியது, அதனை நாம் தினமும் பசியால் வாடுகின்ற ஆசிய – ஆபிரிக்க மக்களுக்கு அனுப்புகின்றோம். அதற்காக காமயோக ஜிலேபி பாபா ஓர் மாபெரும் கப்பலை தனது சக்தியால் திருஷ்டித்துள்ளார்..!? என்ற ஆதாரத்தினைக் காண்பியுங்களேன்..!? நாமும் உந்தக் கள்ளர் குகை பற்றி எழுதாது விடலாம்.
எவரொருவர் தன்னைச் சாமியென்றும், கடவுளின் அவதாரம் தானே என்றும் சொல்கின்றாரோ, அப்போதே அவர் மாபெரும் சுத்துமாத்துக்காரர் என்பதனை நாம் புரியவேண்டும்.
பாதைகளிலும், கோயில் வீதிகளிலும் ஐந்துக்கும் பத்துக்கும் துண்டு விரிக்கும் சிறு வித்தைக்காரரின் பெருமட்டுச் சிந்தனை தான் இந்தக் கடவுளின் அவதாரம் என்ற புரளித்தனம்.
இந்த காமயோக ஜிலேபிச்சாமியால் முடிந்தால், கீழுள்ள வித்தைக்காரர்களைப் போல் ஆழமான நீர் மேலே எந்தத் துணையுமின்றி நடந்து காட்டச் சொல்லுங்கள். எந்தவித அணியங்களுமின்றி ஆகாயத்தில் பறந்து காட்டச் சொல்லுங்கள்.
நித்தியானந்தா ரஞ்சிதா மீது நடக்கின்ற வழக்குப் போன்று, காமயோக ஜிலேபிச்சாமியான இவன் மீது இந்தியாவில் சட்டப் பிரச்சினை – பிடியாணை – வழக்கு இல்லையென நிரூபிக்கச் சொல்லுங்கள்.
இந்தியாவுக்குப் போக முடியாமல், புடையன் பாம்பு போல லண்டனிலே எதற்காகக் கிடக்கின்றாய் என இவனைக் கேளுங்கள்.
இவன் எதற்காக அமெரிக்காவுக்குப் போகின்ற விசாவைப் பெறுவதற்கான sponsor ஆதரவாளரைத் தேடுகின்றானே, அது ஏனெனக் கேளுங்கள்.
- http://www.youtube.com/watch?v=sBQLq2VmZcA
- http://www.youtube.com/watch?v=VAEw-gtDkO4&feature=related
- மாணிக்கம்
26/09/2011
முன்னைய பதிவு
1.சரவணபாபா என்னும் ஜிலேபி சாமியார் லண்டனில். உங்கள் பணம் பத்திரம்..!!
2.உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமோ..? -ஜிலேபி சாமியார் லண்டனில் (பகுதி 2)