08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

நோர்வே கொலைகார பாசிட், புலிப் பாசிட்டுகளிடமும் கற்றுக்கொண்டு நடத்திய தாக்குதல்

புலிகள் தங்கள் அரசியல் வழிமுறையை வலதுசாரிய முன்னுதாரணங்களில் இருந்தது மக்கள்விரோதமாக கற்றுக் கொண்டது போல், நோர்வே வலதுசாரிய கொலைகாரன் புலிபபாசிட்டுகளிடம் இருந்து தான் கற்றதை 1500 பக்கம் கொண்ட தன் கொள்கைப் பிரகடனத்தில் கூறியுள்ளான். (அதன் மூலம் மற்றும் பகுதித் தமிழாக்கம் இக் கட்டுரையின் இறுதியில் உள்ளது.)

 

தன் மக்களை கொன்றதன் மூலம் தன் கொள்கைகளை வழிமுறைகளை பிரகடனம் செய்தது போல்தான், புலிகள் தம் அரசியல் வரலாறு முழுக்க இதைச் செய்தனர். இறுதியில் சொந்த மக்களைப் பலியிட்டுத் தான், புலிகள் அரசியல் நடத்தினர்.

நோர்வேயில் நடந்த படுகொலையின் பின்னணியில் கைதான பாசிட் 1500 பக்கங்கள் கொண்ட ஒரு கொள்கைப் பிரகடனத்தையே இதன் அடிப்படையில்தான் வெளியிட்டுள்ளான். அதில் அவன் உலகெங்கும் உள்ள வலதுசாரிய பாசிட்டுகளையும், அவர்கள் தங்கள் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அடைய கையாளும் மனிதவிரோத வன்முறை வடிவங்களையே எடுத்துக்காட்டி, அதை தனக்கான அரசியல் தெரிவாக சுட்டிக்காட்டியுள்ளான். அதேநேரம் அதை ஓரு அரசியல் நடைமுறை வழியாக காட்டி, முன்னுதாரணமான தாக்குதலை நடத்தியுள்ளான்.

இப்படி தன் சொந்த மக்கள் மேல் நடத்திய படுகொலை, புலி, ஹிஜ்புல்லா, இஸ்ரேல் பழமைவாதிகளின் கொலைகார வழிகளே தனக்கு முன்னுதாரணமாக இருந்திருப்பதை, அவன் தன் கொள்கைப் பிரகடனம் பக்கம் 1479 இல் குறிப்பிடுகின்றான்.

இப்படி வலதுசாரிய மக்கள்விரோத வழிமுறைகளையும், அதன் யுத்ததந்திர கூறுகளையும், தன்க்கான அரசியல் முன்னுதாரணமாகக் கொண்டே இந்தத் தனிமனித பயங்கரவாத தாக்குதலை அவன் நடத்தினான். தங்களையும், தங்கள் இலட்சியத்தையும் பிரபலப்படுத்த, கொல்லுதலும் வன்முறையும் தான் வலதுசாரிய தீவிரவாத அரசியலின் குறிப்பான ஒரு அரசியல் தேர்வாக உள்ளது.

எவ்வளவு மனிதர்களை கொல்லுகின்றார்களோ, எவ்வளவு மோசமான வன்முறை வடிவங்களை தேர்ந்தெடுக்கின்றனரோ, அந்தளவுக்கு தங்கள் கொள்கைகளை பிரகடனம் செய்யமுடியும் என்பதுதான் இன்றைய வன்முறையை நாடும் வலதுசாரிய தீவிரவாதத்தின் தெரிவாகும். ஊடகங்களை மையப்படுத்தி, இதன் பிரச்சாரத்தை சார்ந்து, தங்கள் ஈவிரக்கமற்ற மனிதவிரோத குற்றங்களை மனித குலத்தின் மேல், அதன் விடுதலையின் பெயரில் ஏவுகின்றனர்.

உண்மையில் ஊடகங்கள் வலதுசாரிய சமூக அமைப்பில் பிரச்சார ஊடகங்களாக இருப்பதால், வன்முறைக்குரிய அரசியல் கேள்விக்கு உள்ளாகுவதில்லை. வலதுசாரிய வன்முறை கோரும் அரசியல், ஊடகங்களின் அரசியல் அடிப்படையாக உள்ளது. இங்கு அரசியல் சார்ந்த வலதுசாரிய வன்முறை, ஊடகங்களின் ஒத்த அரசியல் போக்கில் விளம்பரப்படுத்தப்படுகின்றது. வன்முறை மூலம் தங்கள் வலதுசாரிய அரசியலையும் இதை ஒரு வழிமுறையாகவும், மக்கள் மத்தியில் இலவசமாக விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். தங்கள் அரசியலை ஒத்த ஊடகங்கள் உள்ள நிலையில் தான், தாக்குதலுக்குரிய இலக்கை தீர்மானிக்கின்றனர்.

நோர்வே வலதுசாரி பாசிட் தன்சொந்த மக்களை கொல்வதற்காக தெரிவு செய்கின்றான். புலிகள் தம்சொந்த மக்களை பலிகொடுத்து தம் வலதுசாரிய பாசிசத்தை தக்கவைக்க முனைந்த அதே உத்தியைத்தான், இங்கு நோர்வே வலதுசாரிய பாசிட்டும் தேர்ந்தெடுக்கின்றான்.

இதன் மூலம் தன் வன்முறைக்கு வெளியில் ஓரே அரசியலைக் கொண்டவர்களைக் கொன்று, அரசியல்ரீதியான தன் அரசியல் வழிமுறையை கேள்விக்குள்ளாக்க முடியாத அரசியல் சூனியத்தை, நோர்வே சமூக அமைப்பில் உருவாக்கி விடுகின்றான். இங்கு தங்கள் ஓரே இலட்சியத்தை அடையும் வழிமுறையில், வன்முறையைப் புகுத்தி அதை ஊடகங்கள் மூலம் தெரிவாக்குகின்றான். அவனின் உடனடி இலக்கு, பெரும்பான்மையை தன் வழிமுறை ஏற்க வைப்பதல்ல, சிறுபான்மைக்கு வழிகாட்டுவது தான். இதை அடையும் வழிமுறை ஜனநாயக மூலம் என்ற கனவை உருவாக்குவதல்ல, வன்முறை மூலம் தான் எதார்த்தத்தில் அதை இலட்சியமாக கொள்ளும் வன்முறையை தேர்ந்தெடுப்பது தான் வழி என்ற வகையில் அவனின் அந்த நூல் வெடிகுண்டுகளை எப்படி இலகுவாக தயாரிப்பது எனப் பல விளங்கங்களைக் கூட முன்வைக்கின்றது.

வெடிகுண்டு அரசியல் மிகத் தெளிவாக, மார்க்சியத்தை குறிவைக்கின்றது. மார்க்சியம் கோரும் வர்க்கப் போராட்டத்தையும், அதன் மனிதம் சார்ந்த கோட்பாடுகளையும் இல்லாதாக்கக் கோருகின்றது. மார்க்சியம் முன்வைக்கும் மனிதம் சார்ந்த கோட்பாடுகள் தான், இனம், நிறம், சாதி, மொழி … கடந்த மனித சமூகத்தை வழிகாட்டும் தத்துவமாக இருப்பதை அவன் காண்கின்றான். இதற்குள் இஸ்லாம் உட்பட அனைத்தும் தங்கள் நாடுகளில் சுதந்திரம் பெற்று திகழ்வதாக இனம்காட்டி, மார்க்சியத்தையும் அதன் வர்க்கப் போராட்டத்தையும் மறுதலிக்கின்றான்.

இந்த வகையில் இந்த சமூக அமைப்பிலான அரசுகள் கொண்டுள்ள மார்க்சிய வெறுப்பையும், இஸ்லாமிய வெறுப்பையும் தனது அரசியல் வழிமுறையாக மீள முன்வைக்கின்றான். இங்கு இதில் உள்ள வேறுபாடு, அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறையில் சொந்தநாட்டில் வன்முறையை புகுத்தியது தான். இதற்கு புலி முதல் உலகின் வலதுசாரிய பாசிட்டுகளின் வன்முறைகளை தன் வழிமுறையாகக் காட்டி, தன் நடத்தைக்கான தெரிவாக அதை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த வன்முறையை நடத்தினான். இதைத்தான் அவன் தன்கொள்கைப் பிரகடனத்தில் தெளிவாக்குகின்றான்.

"Characteristics of 4th Generation War"

Fourth Generation War is normally characterised by a “stateless” entity fighting a state or egime (the EUSSR). Fighting can be physically such as Hezbollah or the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to use two modern examples. In this realm the 4GW entity uses all three levels of Fourth Generation War. These are the physical (actual combat; it is considered the least important), mental (the will to fight, belief in victory, etc) and moral (the most important, this includes cultural norms, etc) levels. Fighting can also be without the physical level of war. This is via non-violent means. Examples of this could be Gandhi’s opposition to the British Empire or by Martin Luther King’s marches. Both desired their factions to deescalate the conflict while the state escalates against them, the objective being to target the opponent on the moral and mental levels rather than the physical level. The state is then seen as a bully and loses support.

Another characteristic of 4GW is that as with 3rd Generation War the 4GW combatant’s forces are decentralised. With 4GW there may even be no one combatant and that smaller groups organise into impromptu alliances to target a bigger threat (that being the state armed forces or another faction). As a result these alliances are weak and if the state’s military leadership is smart enough they can split their enemy and cause them to fight amongst themselves (f example get the cultural conservatives (pro Israel) to fight the racial conservatives (anti-Jewish)." (page 1479)

"நான்காம் தலைமுறை போரின் அம்சங்கள்

நான்காம் தலைமுறை போரின் அம்சம் எதுவெனில் அரசு அல்லது ஆட்சியதிகாரங்களுக்கு எதிராக அரசுடமையின்றியவர்கள் செய்யும் போராகும். நேரடியான ஆயதங்தாங்கிய போர் என்ற வகைக்குள் இதற்கு நவீன உதாரணமாக விளங்குவது தமிழீழவிடுதலைப் புலிகள், ஹிஜ்புல்லா போன்ற அமைப்புகளாகும்.

நான்காம் தலைமுறைப் போரின் வடிவமும் படிநிலைகளும் மூன்று வகைப்படும். நான்காம் தலைமுறைப் போர் அலகுகள் இந்த மூன்று படிநிலைப் போர்வழிகளைக் கையாளுகின்றன.

1. ஆயுதமேந்திய நேரடி மோதல் அல்லது போர் (அதிகுறைந்தளவிலான முக்கியம் கொண்டது)

2. மனவிருப்பு (போராடும் மன உந்துதல், வெற்றிகிட்டும் என்ற நம்பிக்கை போன்றன)

3. தார்மீக உணர்வு (அதிமுக்கியமானது, கலாச்சார நியமங்களை பாரம்பரியங்களை உள்ளடக்கியது)

போர்கள் நேரடியான ஆயுதமேந்திய வழியை உள்ளடக்கியிருக்க வேண்டுமென்பதில்லை. வன்முறையின்றிய வழிகளிலும் போர்கள் நடந்தேகும். இவ்வகையில் காந்தியின் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக சாத்வீக வழியிலான எதிர்ப்புப் போர் மற்றும் மாட்டின் லூதர் கிங்கின் அணிவகுப்புகளை உதாரணமாகக் கொள்ளலாம்.

இந்த இருவருடைய போர்முறைகளும் அரசு தனது பலப்பிரயோகத்தை விஸ்தரிக்கின்ற வேளையில் அதன் வியாபகத்தை குறைக்கும் வகையில் அரசுக்கான ஆதரவை சிதைக்கும் வகையில் மக்கள் மத்தியில் தார்மீக மற்றும் மனவுணர்வுகளை தூண்டுவதன் மூலம் நடாத்துவது ஆகும்.

நான்காவது தலைமுறைப் போரின் இன்னொரு அம்சம் என்னவெனில் மூன்றாவது தலைமுறைப் போரை ஒத்தவாறே நான்காவது தலைமுறைப் போரிலும் படையணிகள் பலமுனைப் பரம்பல் கொண்டவையாகும்.

மேலும் நான்காவது தலைமுறைப்போர் ஒரு எதிரணியை மட்டும் கொண்டிருப்பதில்லை. சிறு அளவிலாக பல குழுக்கள் தங்களுக்கிடையில் முன்னேற்பாடின்றிய குறித்த அவசர நிலமைகளுக்கான அணிச்சேர்க்கையை உருவாக்கி பாரிய பொது இலக்குகளின் மேல் தாக்குதலை எதிர்கொள்ளுவது என்ற அம்சத்தையும் கொண்டுள்ளது. (அரச இராணுவத்தை எதிர்த்தல் மற்றும் இன்னுமொரு எதிரணிப் பிரிவினை எதிர்த்தல் போன்றவற்றில் இது நிகழும்)

அரச இராணுவத்தினர் தகுந்த கூர்மையுடையவர்களாயின் இவ்வாறான குழுநிலை எதிராளிகளை அவர்களுக்கிடையில் பிளவுகளை ஆழப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கிடையிலேயே மோதல்களை உருவாக்குவதன் மூலம் சிதைக்கமுடியும். (இதற்கு உதாரணமாக கலாச்சார தாக்கம் கொண்ட பழமைவாதிகளை (இஸ்ரேல் ஆதரவு) இனவுணர்வு தாக்கம் கொண்ட பழமைவாதிகளுக்கு (இஸ்ரேல் எதிர்ப்பு) எதிராக திருப்புவது)" பக்கம் 1479

பி.இரயாகரன்

29.07.2011


பி.இரயாகரன் - சமர்