09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

சரவணபாபா என்னும் ஜிலேபி சாமியார் லண்டனில். உங்கள் பணம் பத்திரம்..!!

சரவணபாபா மடம் முரளிகிருஸ்ண சுவாமிகள் எனப்படும் ஜிலேபி (தேன்குழல்) சாமியார் மீது கேரளாவில் பொது மக்களாலும் மக்கள் பொது அமைப்புக்களாலும் பண மோசடி பாலியல் வன்முறை என்பன குறித்து பல புகார்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சாமியார் தற்போது UK Head Office, Saravanababa Matham 269A, Preston Road, Preston Waye, Harrow, Middlesex. HA3 0PS என்னும் முகவரியில் தங்கி இருந்து கொண்டு தனது வழக்கமான மோசடிச் செயல்கள் மூலம் மத நம்பிக்கை கொண்ட அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றான்.


 

கதை சொல்ல மட்டுமே தெரிந்த சாமிகள், மக்களை ஏமாற்றுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.தனை உளவியல் ரீதியாகப் பார்க்கும்போது மனித மனம் என்பது இரண்டு பாகங்களை உடையது. ஒன்று சக்தி வாய்ந்தது. மற்றொன்று பலவீனமானது. இதில் பல வகையான துன்பங்களும் அனுபவங்களும் வலிய மனதை உருவாக்குகின்றது. எனினும் மனத்தின் பலவீனமான பாகம், வெளியேயுள்ள சலசலப்புகளுக்கு மயங்கி விடுகின்றது. இந்த பலவீனமான மனதைப்  பயன்படுத்தி தான் சாமியார்களும் குருஜிக்களும் செழிக்கின்றனர்.

இந்தச் சாமிகளின் முகத்திரை, இவர்களின் முன்னாள் பக்தர்களினால் பின்வருமாறு கிழிகின்றது.“உண்மை வெளியானது! தொடர்ந்து ஏமாற்ற இந்தக் கயவர்களை அனுமதியோம்!” (இணைப்பு 1. (கீழே)) என்ற துண்டுப் பிரசுரத்தில் தான் ஜிலேபி சாமியாரின் முன்னாள் பக்தர் ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார்.


மதம் என்பது அடக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், ஆன்மா அற்ற உலகின் ஆன்மா, மதம் மக்களின் அபின் என்று சமுக விஞ்ஞானிகள் மார்க்சும் எங்கெல்சும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதியவைகள் தான் இருபத்தோராம் நூற்றாண்டிலும் சாமியார்களை நம்பி ஏமாறும் பக்தர்களின் அனுபவ மொழிகளாக வெளிவருகின்றது.

கேரளாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ், வர்த்தமானம், தேஜஸ் எனப்படும் பிரபல பத்திரிகைகளில் இந்த ஜிலேபி சாமியாரின் மோசடிகளையும் பாலியல் சேட்டைகளையும் பற்றிய பல செய்திகள் வந்துள்ளன. (சண்டையின்னா… சட்டை கிழியத்தான் செய்யும், சாமியார் என்றால் பாலியல் சேட்டை விடத்தான் செய்வார்).  லேகா என்ற பெண்மணி பாலக்காடு டி.எஸ்.பியிடம் கொடுத்த புகாரில், தனது கணவனை ஏமாற்றி ஒரு கோடி பெறுமதியான நிலத்தினை சரவணபவ மடத்தின் பெயரில் நன்கொடையாக பெற்றதாகவும் ஆனால் தற்போது அந்த நிலம் தனிப்பட்டவர்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். பார்க்க இணைப்பு 2. (கீழே)

சரவணபவ பக்தஜன சமரக்சண சமதியின் தலைவர் மோகனன் என்பவர், ஜிலேபி சுவாமியை கைது செய்யுமாறு  வெளியிட்ட அறிக்கையினை, சனிக்கிழமை மார்ச் 12.2011 அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரசுரித்திருக்கின்றது. (பார்க்க இணைப்பு 3). இல்லாத அறக்கட்டளைகளின் பெயரில் பெரும் பணத்தினை மோசடி செய்ததாக இந்தச் சாமியான சரவணபாபா மீது, மோகனன் குற்றம் சாட்டியுள்ளார்.

இவரால் ஏமாற்றப்பட்ட லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஒருவர் 11.05.2011 அன்று பிரன்ற்(BRENT TOWN COUNCIL) நகரசபையிற்கு  மின்னஞ்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (பார்க்க இணைப்பு 4). இதில் சாமியாரின் பாஸ்ட்போர்ட், விசா போன்ற விபரங்களை அவர் நகர சபையினருக்கு அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் இந்தச் சாமியார் பிரித்தானியாவில் வேலை ஏதும் செய்ய முடியாது. பொது நிதியம் எதிலிருந்தும் உதவி பெறக் கூடாது (No work or Recourse to Public Funds)என்ற நிபந்தனையின் கீழ்தான் அவரிற்கு  விசா வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் விசா விதிகளிற்கு மாறாக, மக்களையும் இங்கிலாந்துச் சட்டத்தினையும் ஏமாற்றி கோடி கோடியாய் பணத்தை சுருட்டுவதற்கு இந்த கடவுளின் அவதாரம் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. வாலிப வயோதிப அன்பர்களே! ஆண்மை இழந்தவர்களே! கம்பு போல் நிற்க ஓடி வாருங்கள் என தமிழ் நாட்டிலே சிட்டுக் குருவி லேகிய வைத்தியர்கள் லாட்ஜ் விபரம், நேர காலம் போட்டு விளம்பரம் செய்வதைப் போல, இந்தச் சாமியாரும் ஒரு ஆன்மிக லேகிய விளம்பரம் செய்திருக்கிறார். (பார்க்க இணைப்பு 5)

கந்தனிற்கு சிந்தனை எந்த நேரமும் கவட்டிற்குள்ளே தான் என்பது போல தனது பண ஆசையை விளம்பரத்தில் எந்த விதமான கூச்சமும் இன்றி மண், பெண், பொன் என்ற  ஆசைகளை துறந்த இந்தத் துறவி வெளிப்படுத்தியுள்ளார். அதில் Post Office BACKYARD converted too perform HUSTLE to collect Money. பணத்தினை துரித கதியில் பெற்றுக் கொள்வதற்காகத் தான் தபால் அலுவலக பின்பக்கத்தை மாற்றி வைத்திருக்கின்றோம். ஆன்மீகம் பேசவல்ல என்று சாமியாரே தெளிவாக சொல்லி விட்டார்.

“லண்டனில் உள்ள பல ஆலயங்கள் இந்தக் கொள்ளையரின் உண்மையினை அறிந்தும், இந்தச் சாமியார்களுக்கு பொன்னாடை போர்த்தி, மக்களை ஏமாற்றி அவர்களை மடையர்களாக்கும் இந்தச் சாமியாருக்குத் துணை போகின்றனர்”  என்று எங்களிற்கு இந்த சாமியாரின் மோசடிகளைப் பற்றி சொன்னவர் கவலைப்படுகின்றார்.

சாமியார்கள் கோவில்கள் என்பன மக்களை ஏமாற்றுவதற்காகவே இருக்கும் அமைப்புக்கள். அதாவது கூட்டுக் கொள்ளையர்களில் எப்படி ஒருவரை மற்றர் காட்டிக் கொடுப்பார்..? சாமியார்களில் போலிச் சாமியார் நல்ல சாமியார் என்று கிடையவே கிடையாது. எல்லாச் சாமியார்களும் போலிகள் தான். கள்ளர்கள் தான்.


பொதுவாக சாமியாரை தேடிப் போபவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு
கைவிரலால் எண்ணி விடலாம். அதாவது..,


•    வேலை மற்றும் விசா இல்லை.
•    திருமணம் நடக்கவில்லை.
•    குழந்தை இல்லை.
•    கணவன் மனைவிக்குள் ஏற்படும் குடும்பப் பிரச்சினை.
•    உடல் நலக் குறைவு.

தன்னிடம் வருபவர்களின் வயது – தோற்றம் – உடல்மொழி என்பவற்றை வைத்து, இவற்றில் ஒன்றினை சாமியார்கள் எடுத்து விடுவார்கள். காய்களும் கனிகளும் நிறைந்த மாமரத்திற்கு கல்லெறியும் போது, எப்படியும் ஒரு மாங்காயாவது விழத்தானே செய்யும். இப்படி பல நூறு பேருக்கு சொல்லும் போது சிலருடைய பிரச்சினைகளை சாமிகள் சரியாகவே சொல்லி விடுவார்கள். அந்தப் பிரச்சனைக்காக உரியவர்களின் முயற்சியாலோ அல்லது இயல்பாகவோ அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் போது அதற்கான புகழும் பணமும் சாமியாரிற்கு வந்து   கிடைக்கின்றது.


முப்பது ஆண்டுகளிற்கு முன்பு மிகக் குறைந்தளவு இலங்கைத் தமிழர்களே வெளிநாடு சென்றார்கள். அந்த நாட்களில் கைரேகை பார்க்கும் எந்தச் சோதிடமும்..! உனக்கு வெளிநாடு போவதற்கான ரேகை இருக்கிறது எனச் சொல்லவில்லை. பின்பு அரசியல் காரணங்களிற்க்காகவும், தொழில் தேடியும் எமது தமிழர்கள் பெருமளவில் வெளிநாடு போகத் தொடங்கியதும், திடீரென எல்லோருடைய கையிலும் வெளிநாட்டு ரேகை முளைத்து விட்டதாம்..!? யாரைப் பார்த்தாலும் வெளிநாடு போகும் பலன் இருக்கிறது என்று சாமிகளும் சாத்திரிகளும் சொல்லத் தொடங்கி விட்டார்கள். அதாவது பரிணாம வளர்ச்சியில் வெளிநாட்டு ரேகை வளரும் என்று கண்டு பிடித்த விஞ்ஞானிகள் நம் சாத்திரிகளும் சாமியளும் தான்.  நல்ல காலமாக புதிதாக முளைக்கிற விசயங்களை கையோடு மட்டும் நிறுத்தி விட்டார்கள்.


இந்த சாமியாரைப் பற்றி எழுதுவதற்காக சாமியாரிடம் அருளாசி வாங்கப்போன ஒரு இளைஞரை சந்தித்தேன். அவர் இங்கிலாந்தில் தற்காலிக அனுமதி பத்திரத்தில் வாழ்பவர். எந்நேரமும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் படலாம் என்ற நிலையில் உள்ளவர். நிம்மதி இல்லாததால் இந்தச் சாமியாரிடம் போனார். அங்கு நடந்த உரையாடலை கீழே எழுதி இருக்கின்றேன். முதலாவதாக சாமியாரின் குரலும் இரண்டாவதாக இளைஞனின் குரலும்  மூன்றாவதாக எனது குரலும் பின்னூட்டமாக வருகின்றது.


சுவாமி: வாங்க தம்பி முகத்தில் மகிழ்ச்சி இல்லை. விசா இல்லை என்ற கவலை உங்களிற்கு சரி தானே.


பக்தன்: ஆம் சுவாமி

நான்: ஆமா வாழ்க்கையிலே இன்ப வெள்ளம் கரை புரண்டு ஓடுது. அதை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கவா உம்மிடம் வந்தேன். வெளிநாட்டிலிருக்கும் ஒரு சிறுவயது இளைஞன் சாமியாரிடம் வந்தால் பெரும் பாலும் விசாப் பிரச்சினையாகத் தானிருக்கும் என்பதை உமக்கு சொல்லியா தெரிய வேண்டும்.


சுவாமி: வேலை கூட நிரந்தரமில்லை அப்படி இப்படித் தானே.


பக்தன்: ஆமாம் சுவாமி.


நான்: ஏண்டா விசா உள்ளவனுக்கே வேலை இல்லை. இதிலே விசா இல்லாதவனிற்கு எப்படி வேலை கிடைக்கும். இது பெரிய ராணுவ ரகசியம். இவர் ஞானக் கண்ணாலே கண்டு பிடிச்சுட்டார்.

சுவாமி: கவலைப்படாதே  எல்லாம் நல்ல படியாக நடக்கும். இந்தா ருத்திராட்ச மாலை. கழுத்திலே போட்டுக்கொள். அடுத்த மாதம் மறுபடியும் வா. அதற்குள் எல்லாம் சரியாகி விடும்.

சாமியார்  தனது பிரச்சினைகளை அப்படியே கணித்துச் சொன்னதால் மெய்மறந்து போன இளைஞன் சட்டைப் பையிலிருந்ததை எல்லாம் சாமியாரிற்கு பக்கத்திலிருந்த காணிக்கைத் தடடில் போட்டாராம்.

ஒரு மாதம் போன பின்னும் ஒன்றும் நடக்கவில்லை. மறுபடியும் சாமியாரிடம் போனான்.

பக்தன்: சுவாமி ஒன்றுமே நடக்கவில்லை.

சுவாமி: நம்பிக்கையை இழக்காதே நம்பிக்கை தான் வாழ்க்கை. கடவுளை மனப்பூர்வமாக கும்பிட்டால்  எல்லாம் நடக்கும்.

நான்: ஆமா. அப்ப தானே கேட்டது கிடைக்காது விட்டால் நீ மனப்பூர்வமாக கும்பிடவில்லை. அதனால் தான் நல்லது நடக்கவில்லை என்று சாமியார்கள் தப்பிக் கொள்ளலாம்.

மறுபடியும் காணிக்கையினை போட்டு விட்டு இளைஞன் போக வெளிக்கிடும் போது சாமியார் அவரை கட்டிப் பிடித்து ஆசீர்வதித்தாராம். சாமியாரின் கை சரியாக நெஞ்சிலே ருத்திராட்சக் கொட்டை இருந்த இடத்திலே இருந்ததாம். தான் மாலை போட்டிருப்பது அவரிற்கு எப்படி தெரிந்தது என்று பொடியன்புல்லரித்துப் போனான். நெஞ்சைத் தொடுவதற்கு சாமியர்களிற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.ல்லாம் ஒரு பழக்கத்திலே வந்தது தான் என்றேன்.

கேரளாவில் ஒரு மிக வறிய குடும்பத்தில் பிறந்து, கோழிக்கோடு சந்தையில் ஜிலேபி விற்று வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த முரளி கிருஸ்ணன் இன்று கோடீஸ்வரன். அவரது குடும்பமும் பெரும் பணக்கார குடும்பமாக மாறி விட்டது. வேறெந்த வருமானமும் இல்லாத ஒருவர் கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்பதே அவரை அம்பலப்படுத்துகிறது.

சாயிபாபா, நித்தியானந்தா, சங்கராச்சாரி என்று நீளும் இந்த கள்ளர்கூட்டத்திடம் இருக்கும் கோடிக்கணக்கான பணம் முழுவதும் மக்களை ஏமாற்றி  திருடிய பணம் தான். மக்கள் விழிப்படையும் வரை புதிது புதிதாக லட்டு சுவாமி, ஜிலேபி சுவாமி என்று வந்து கொண்டு தான் இருப்பார்கள்.

விஜயகுமாரன்

23/06/2011


___________________________________________________________________

 

இணைப்புக்கள்

இணைப்பு 1.

உண்மை வெளியானது….!
தொடர்ந்து ஏமாற்ற இக் கயவர்களை அனுமதியோம்…!

(Finally the truth comes out…! Don’t let this organized criminals continue to fool you!)

___________________________________________________________________
மனித மனம் இரண்டு பாகங்களை உடையது. ஒன்று சக்தி வாய்ந்தது. மற்றொன்று பலவீனமானது. பலவகையான துன்பங்களும் அனுபவங்களும் வலிய மனத்தை உருவாக்குகின்றன. எனினும் மனத்தின் பலவீனமான பாகம் வெளியேயுள்ள பலவற்றிற்கு மயங்கிவிடுகிறது. இந்த பலவீனமான மனத்தைப் பயன்படுத்தித்தான் சாமியார்களும் குருஜிக்களும் செழிக்கின்றனர்.

இத்தகைய குருஜிக்கள் நம்முடைய செல்வத்தில்தான் சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எங்கேனும் தன்னுடைய உழைப்பில் பொருளீட்டும் குருஜியைக் காண முடிகிறதா? இத்தகையவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு கவர்ச்சியான போதனைகளால் நம்மைச் சுரண்டி வருகின்றனர்.

‘குருஜி நம் துன்பங்களையும் சோகங்களையும் துடைக்கிறாரே” எனச் சிலர் வாதிடுகின்றனர். அப்படியென்றால் உலகம் முழுதும் இந்த சாமியார்களின் பாதையில்தான் செல்ல முடியும். பிறகு எதற்கு அரசாங்கம், மருத்துவம், அறிவியல் இவையெல்லாம்?

தம்மை ‘குருஜி’ என்று சொல்லிக்கொள்பவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம். அவர்களுடைய போதனைகளை அறிவதில் ஆபத்தில்லை, ஒரு திரைப்படம் பார்ப்பதைப் போல. ஒரு திரைப்படம் பார்த்த பிறகு நாம் நமது வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். அதை விடுத்து நாம் ரசித்த கதாபாதிரங்களுக்கு உதவி செய்ய இசைவோமா? அதே போலத்தான் சாமியார்களும்.

இவர்கள் திறமையான வணிகர்கள். நம் மனங்களைத் திருடி இறுதியில் நம் செல்வத்தையும் திருடும் திறமையான வணிகர்கள். நம் பகுத்தறிவைக் கொள்ளையிடும் கள்வர்கள்.

ஒன்றைச் சிந்திப்பீர்…

வேலை செய்துவிட்டு வீட்டிற்கு அலுத்து வருவீர்கள். அப்போது உங்கள் மனைவியோ மகளோ நீங்கள் இளைப்பாற உதவுவார்கள் அல்லவா? அப்போது அவர்களுடைய அன்பினால் நீங்கள் புத்தம் புது மனிதராய் உணர்வீர்கள் அல்லவா? அதற்காக அவர்கள் உங்களிடம் கட்டணம் கேட்பார்களா? இல்லையே.

இக் குருஜிக்கள் தங்களுடைய நாவன்மையால் உங்கள் உள்ளக் குமுறல்களை ஆற்றுகிறார்கள். அதனால் கவரப்பட்டு, நீங்களும் அவர்களிடம் உங்களை ஒப்படைத்து விடுவீர்கள். அப்படிப்பட்ட நேரத்தில் பொது நல விரும்பிகள் போல் ஏதேனும் காரணம் சொல்லி உங்களிடம் பணம் பறித்துவிடுவார்கள்.

அவர்களுடைய சுயரூபம் அம்பலமாகும் வரை நாம் உழைத்து ஈட்டிய செல்வம் அவர்களுடைய உல்லாச வாழ்க்கைக்காக கரைந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய குருஜிக்களின் உண்மையை வெளிப்படுத்தவே இம்மடல். ஏனெனில் சாமியார்களிடம் சிக்கிய நூற்றுக் கணக்கானோரில் நானும் ஒருவன். இம்மடல் சாமியார்களிடம் சிக்கியிருக்கும் மக்களுக்கும் அக் கயவர்களிடம் சிக்க இருக்கும் மக்களுக்கும் ஓர் எச்சரிக்கை…!

___________________________________________________________________

Finally the truth comes out … ….!
Do not let this organized criminal
continue to fool you!
In God’s Name service to the poor earn money from the name of Seva!

Human mind is both the strongest and the weakest. The more adversity and experience make one’s mind the strongest, but still a weaker part of the mind will still be exposed to an external factor. Most of the ‘Samiyars’ and ‘Guruji’ thrives only by exploiting our weaker part of that mindset.

The ultimate examination of most of the above type Guruji lead to riches, sex and a lavish lifestyle at our expenses. Show me a Guruji serving his income with her own job, or working hard. All of them sitting comfortably in an A / C hall and make the so-called ‘preaching’ that are nothing more than capitalizing on the weaker part of minds.

You can argue that Guruji heal your ailments, ulcers, depression. If so, the world will go alone rules by such guys with any government, psychiatrists, researchers, doctors and other professionals.

They’re just people like you and me. There is no harm in visiting them and use to listen to what they’re preech ‘. That’s it. Nothing beyond. You go to a movie and spend 2 hours completely involved in the characters and story in the film. That is all. Then you come home and look after your “own” job. You never get involved with the movie characters and try to help them financially or morally to get out of their problemer.Samme principle here.

These guys are excellent marketing guys who mesmerize or exploit your weak mind – to eventually get your money. This deep … .. most of these Guruji’s visit ultimately prove to be a money machine assembly drives .. is not it?

Imagine this … ..

You come home tired & with a headache and your wife or daughter makes you to relax and offer a cup of coffee. Do not you feel refreshed and touched their ‘true’ love & devotion. Do they then demand money for this service? Never.

These so-called Guruji ‘reassure’ your brain with their skills in “The speakers’ and you are so completely surrendered. At this stage of your mind that there is a” common “cause in front of you to open your check book ..!

All of your hard earned money thus collected is for their lavish consumption behind a scene until it is revealed.

This letter is to expose such Guruji as stated above which I am one of the hundreds of victims and a warning to those who already have been revoked or those in line to get attracted to these conman …!

Check the fallowing link to Kerela TV …

www.asianetglobal.com/ShowVdo.aspx?GlHID=2266

Over television journalist was attacked by saravanababa’s Thugs …. after the telecast of this video.

Thanks & Regards
Victims of Saravana Baba

—————————————————————————-

இணைப்பு 2.


இணைப்பு 3.

இணைப்பு 4.

From: XYZ
To: Brent Council One Stop Service <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Posted: Wed, 11 May 2011 14:58:11
Subject: Re: * Alert * criminals in the name of Guru visitink uk to score more money:

Dear Joy Maduako,
Refer to my previous message (reference: [67720-1303859859] I managed to collect more information about this hoax mission he came to England with visit visa with multiple entry, valid until 2012 (See attached document Passport) has clearly indicated that he is not supposed to get a job or collect public fund. Postoffice backyard used to be warehouse space now turn to a temple run this organized crime without any prior permission from the Council.
I’ve also included scheduled events for this and next month at 269a, Preston Road, Preston Waye, Harrow, Middlesex. HA3 0PS and elsewhere.
He is accompanied by two other gentlemen
1) Prasanth Mennon – selling jewelry items in the name of God and to collect money without any income or
invoice.
2) Professor Ramnath Narayanaswamy – involving propaganda mission to promote this scam mission.
His partners in the UK
1) Mrs. T. Selvendran – Main Business Partner with Murali Krishna 07775800737
2) Mr. Nagarajan Ponnam – treasurer, auditor and chairman 02089337030
3) Mrs. K Thanabalan Coordinator 07805397298
4) Ajesh Vasu Coordinator 07894424731
One of the ex member Rhaul Kabade lost £ 280,000 of this hoax mission and filed a case against him in Britain and India, which gave details of his passport copies and other details which I attached this mail. Please act before he flees again with lots of money from innocent victims back to India or Dubai.
Regards
XYZ

From: Brent Council One Stop Service <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: XYZ
Posted: Tue, 10 May 2011 10:04:05

Subject: Re: * Alert * criminals in the name of Guru visitink uk to score more money:
————————————————– ——————-
Dear Customer

Thank you for your inquiry.

I have forwarded the information you specified for attention in our
Health, safety and licensing department for further investigation. I
will request that you be contacted directly with an answer.

In your email you advise that person to operate outside
conditions that his visa, so I’ve also sent this e-mail to
aware that the Home Office (UK Border Agency).

Do not hesitate to contact us again if we could be further
assistance.

When you answer this question, please
does not remove the reference number.

Sincerely,
Joy Maduako.
One Stop Service
Brent Council

————————————————– ——————-

————————————————– ——————-

Your message:

Dear Sir,

Mr. Muralikrishna in God’s name, he is cheating innocent people and then converted his followers (devotees) with its hypnotic power, seeking money from them when a person’s turn to be affectionate grab as much money as he can with different methods and sell cheaply chains rings books, etc. He runs a temple in the backyard of a post office (269a Preston Road Middle sex, HA3 0PS) with any health and safety or fire regulation 15 by 20 foot room more than 60 to 80 people packed like sardines in a tin.

He collected more than £ 100,000 pounds in 2 months on his last visit now he is back again to collect more money from innocent poor people in Britain. He wants to extend his money making mission to Canada, USA and Europe with help from his business partners, P. Nagarajah, Mrs T Selvendran. On his visa application to Britain’s housing is calculated as Birmingham Balaji Temple, but he is 99% of his time spent in the foregoing Harrow address where he may find more people with money.

Please stop this criminal in to the UK, Canada and Europe and save the innocent people from these criminals. He faces more than 4 to 5 criminal cases against him in India, but he managed to bribe the Indian police and flee from them.

You can watch the local TV station news from India by clicking the following link:

http://www.asianetglobal.com/ShowVdo.aspx?GlHID=2266

http://omsharavanabhavamatham.org/
Regards
XYZ

Endelig the Truth Comes Out … ….!
Do not Let this arrangeras Criminals
fortsatt two fool you!
In The Name of Good Service To The Poor Making money from the name of seva!

Human reduces er både och strongest weakest. The amuse Hardship og erfaring gör one’s mind the strongest men still weaken a party of the mind ville still confirm Exposed to Any external factor. Most of the so called ‘Samiyars’ and ‘Guruji’ Thrive kun city Exploiting vår weaken party af denne min.

The ultimate Investigations of musts af ovenfor type of Guruji’s lead two wealth, sex and a lavish lifestyle that vår udgifter. Show me one Guruji earn som han med sitt eget income jobs, or working hard. All of his Comfortably dem i en A / C hall and do the so called ‘preaching’ that ice Nothing But Exploitation of Our weaken party of the Mind.

You May argu att Guruji’s heals your Miseri, Wounds, depression. Hvis det er den case, hele verden går kun regler city fx guys med no regeringer, Psychiatrists, scientists, doctors, og andre professionals.

De er Humans just like you and me. Der er ingen harm in visiting dem och spend listening two vad de har ‘preech’. That’s it. Nothing Beyond. You go to a movie and spend 2 hours engageret helt med characters och story of the movie. That’s all. Then you come home and Attends to your ‘eget’ jobs. You never get engageret med movie characters and try two full dem financially or morally two come out of sin trouble. Same princip here.

Det går guys excellent marketing guys som Mesmerize or exploit your minds weaken – ultimately få your money. This deep … .. fleste slik Guruji’s visit ultimately specimens at være money collection drive .. is not it?

Imagine this … ..

You come home tired & headache med, og din fru eller dotter gör du two relaxation and offering a cup of coffee. Do not you feel refreshed and Touched by deras ‘true’ love & Affection. Do de har simply demand money for this service? Never.

Dessa så gav Guruji’s ’sooth’ your mind med deres skills in ‘orations’ og du er helt simply Surrender. To att stage of your mind, de har put a ‘common’ Cause in front of you two open your Cheque book ..!

All your hard earned money således Collected goes for deres lavish Spending Behind a Scene frem det Revealed.

This facilitates er expose slik som Guruji slipped ovenfor as I am one of The Hundreds of ofrene och warning two dem som har allerede got engageret or two in-line dem få attracted by dessa conman …!

Check the fallowing link Kerela TV …

www.asianetglobal.com/ShowVdo.aspx?GlHID=2266

Above TV Journalist var angriper city saravanababa’s Thugs …. efter telecast af denne video.

Thanks & Regards
Victims of Saravana Baba

From: XYZ
To: Brent Council One Stop Service <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Wed, 11 May, 2011 14:58:11
Subject: Re: * Alert * criminal in the name of Guru visitink uk two scoop more money:

Dear Joy Maduako,
Refer to my tidligere primitives (reference: [67720-1303859859] I managed collect more information about this fraud Mission han kom til UK with visitor’s visas med som multi entry valid up to 2012 (Der henvises den Attached document Passport) som Clearly indicated att han not supposed to Obtain a called employment or collect public finds. Post office backyard used være big room now turn to a temple run this arrangerat crime utan eventuelle Prior permission from the council.
In også Enclosed Planned events for denne og neste måned ved 269a, Preston Road, Preston Waye, Harrow, Middlesex. HA3 0PS og andre venues.
He accompanied med två andra gentleman
1) Prasanth Mennon – who sell ornaments varer på name of god and collect money utan eventuelle receipts or
invoice.
2) Professor Ramnath Narayanaswamy – involvement propaganda mission fremme this fraud mission.
His business partner in UK
1) Mrs. T. Selvendran – Main Business Partner with Murali Krishna 07775800737
2) Mr. Nagarajan Ponnam – Treasurer, Accountant and president 02089337030
3) Mrs. K Thanabalan coordinator 07805397298
4) Ajesh Vasu Coordinator 07894424731
One of the ex-member Rhaul Kabade lost £ 280.000 med dette fraud mission and filed a case against heaven in UK and India som gift the details of sin passport copies og andre som details In Enclosed med dette mail. Please act innan han escaped igen med loads of money from innocent ofrene back to India or Dubai.
Regards
XYZ

From: Brent Council One Stop Service <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Two: XYZ
Sent: Tue, 10 May, 2011 10:04:05

Subject: Re: * Alert * criminal in the name of Guru visitink uk two scoop more money:
————————————————– ——————-
Dear Customer

Thank you for your inquiry.

I have forwarded the information you Provided for the attention of vore
Health, Safety and Licensing Department for further investigation. In
kommer att request you be contacted direkte med en response.

In your email you advise this person som är operating uden af
forhold imposed by hans visas så også have forwarded this email to
the attention of the Home Office (UK Border Agency).

Please Do Not hesitat two contact us again according vi kan confirm of eventuelle yderligere
assistance.

When replying two this inquiry, please
Do Not remove the reference number.

Kind regards,
Joy Maduako.
One Stop Service
Brent Council

-

Your message:

Dear Sir,

Mr. Muralikrishna in-the name of god han är cheating innocent people and converting som hans followers (devotees) med sitt mesmerising power simply Seeking money from dem once a person turn være devotee grab som mycket som han kan money-med forskellige Method and selling cheap chains ring books, etc. He run a temple in the backyard of a post office (269a Preston Road Middle sex, HA3 0PS) med out eventuelle Health and Safety Regulations or four 15 by 20 feet room fun just 60 to 80 people packed like sardines in a tin.

Han Collected more simply, 100.000 GBP Pounds inden 2 months on sin cargo business nu er han Returning again two collect more money from innocent poor residents of the UK. Han ønsker expand hans moneymaking mission to Canada, USA and Europe med help av hans BusinessPartners Mr. P. Nagarajah, Mrs. T Selvendran.On hans Visa Application to UK hans accommodation Det som Birmingham Balaji Temple men han 99% av sitt spend hours in ovenfor Harrow address hvor han kan find more PeopleSoft med money.

Please STOP this Criminal fermentation two UK, Canada, and Europe and save the innocent people from this Criminal. He is facing more simply, 4:02 a.m. 5 criminal cases against heaven in India men han managed two Bribe the Indian Police and escape from dem.

Du kan see the local TV station news from India by Clicking følgende link:

http://www.asianetglobal.com/ShowVdo.aspx?GlHID=2266

http://omsharavanabhavamatham.org/
Regards
XYZ

___________________________________________________________________

இணைப்பு 5.

___________________________________________________________________

___________________________________________________________________

‘தேஜஸ்’ என்ற மலையாளப் பத்திரிகையில் 12 – 3 – 2011 அன்று வெளிவந்த செய்தி.

ஜிலேபி சாமியைக் கைது செய்க - பக்தர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை.

Translation of Malayalam no.1

கேரளத்திலிருந்து வெளிவரும் ‘வர்த்தமானம்’ என்ற மலையாளப் பத்திரிகையில் வெளிவந்த (12 – 3 – 2011) செய்தியின் தமிழாக்கம்.

‘ஜிலேபி சாமியாரைக் கைது செய்க’

ஜிலேபி சாமியார் என்றழைக்கப்படும் முரளிகிருஷ்ண சாமியைக் கைது செய்ய வேண்டும் என்று சரவண பவா மடத்தின் ‘பக்த ஜன சம்ரக்ஷன சமிதி’ (பக்தர்கள் அமைப்பு) அலுவலர்கள் கோரியுள்ளனர். கோழிக்கோட்டில் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அதன் முழுவிவரம் வருமாறு:


ஜிலேபி சாமியாருக்கு எதிராக உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை இவருடைய வருமானத்திற்கும் சொத்திற்கும் இடையே உள்ள முரண்பாட்டினைக் குறித்து எழுந்துள்ளன.


கள்ளிக்கோட்டை, பாலக்காடு, மைசூர், பெங்களூர், ஊட்டி, பழனி ஆகிய ஊர்களில் இவருக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. ஏழைகளுக்கு உதவுவதாகக் கூறி அயல் நாடுகளிலிருந்து இவரது அறக்கட்டளை மூலமாகப் பெறப்பட்ட நிதி தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறது.


மிகக் குறைந்த காலத்தில் பெருமளவு சொத்தினை இவர் குவித்தது குறித்து தக்க விசாரணை செய்து உரிய நடவடிக்கை உடனே எடுக்குமாறு மாநில முதலமைச்சருக்கும் காவல்துறைத் தலைவருக்கும் (DGP) இந்த சமிதி மனு மூலம் கோரிக்கை வைத்துள்ளது.


மேற்படி செய்தியாளர் சந்திப்பில் கிருஷ்ணானந்த சரஸ்வதி, தேவேந்திரநாதன் சுமேஷ், பிரேமராஜ் ஆகிய நிர்வாகிகள்  கலந்து கொண்டு பேசினர்.

Translation of Malayalam no.2

(செய்தியிட்ட பத்திரிகையின் பெயரும் நாளும் தெரியவில்லை.)


முரளிகிருஷ்ண சுவாமிக்கு எதிராக மயிலாடிக்குன்னு மடாதிபதியும் முன்னாள் பூசாரியும் புகார்.


சரவணபவா மடாதிபதி முரளிகிருஷ்ண சுவாமிக்கு எதிராக மயிலாடிக்குன்னு மடாதிபதி கிருஷ்ணானந்த சுவாமியும் மடத்தின் முன்னாள் போதகரான சுமே{ம் பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேட்டியளித்தனர்.
மடத்தில் நடக்கும் பாலியல் உள்ளிட்ட அநீதிகளையும் அவலங்களையும் தட்டிக் கேட்டதன் விளைவாக முரளிகிருஷ்ண சுவாமி குண்டர்களை வைத்து இவர்களை அடித்துள்ளனர். இது தொடர்பாக சுவாமி மீது இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். கள்ளிக்கோட்டை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தக்க நடவடிக்கை ஏதும் இல்லை. அதனால் குந்தமங்கலம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலனாய்வு நடந்து வருகிறது.

Translation of Malayalam no.3

‘தேஜஸ்’ என்ற மலையாளப் பத்திரிகையில் 12 – 3 – 2011 அன்று வெளிவந்த செய்தி.

ஜிலேபி சாமியைக் கைது செய்க – பக்தர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை.

லண்டனில் NRI ஆக உள்ள பெண்மணி, சுவாமிகளின் அறக்கட்டளைக்கு நற்பணிகளுக்காக 27,30,000 ரூபாயைத் தானமாக வழங்கினார்.பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இந்தியா வந்த பின் சுவாமிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார். மேலும் சுவாமிகளின் தகாத செயல்கள் அம்பலமானதால் பொது மக்களிடையே பரவலான எதிர்ப்பும் கொந்தளிப்பும் கிளம்பியுள்ளன.


சில ஆண்டுகளுக்கு முன்னர் கோழிக்கோடு சாவடியில் ஜிலேபி (ஓர் இனிப்பு வகை) விற்றுப் பிழைப்பு நடத்தியவர்தான் இந்த சாமியார். இப்போது இவர் 130  கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரர். ‘ஜிலேபி சாமியார்’ தனக்கு எதிராக எழும் எதிர்ப்பாளர்களை இரண்டு வழிமுறைகளைக் கொண்டு எதிர்கொள்கிறார். ஒன்று தன்னை எதிர்ப்பவருக்கு லஞ்சம் கொடுத்து அவரது வாயை அடைப்பது, இன்னொன்று கூலிப்படை மூலம் அச்சுறுத்துவது. காவி உடையில் காமக்களியாட்டங்கள் செய்து வரும் இவர் இதற்கு முன்பும் சில பிரச்சினைகளில் சிக்கியுள்ளார். பொது மக்களும் பல்வேறு அமைப்புகளும் இவரைக் கைது செய்ய வேண்டுமெனத் தீவிரமாக உள்ளன. இது குறித்து மேலும் விசாரிக்கக் கோரி முதலமைச்சருக்கும் டி.ஜி.பி-க்கும் கடிதங்கள் குவிகின்றன.

___________________________________________________________________

இக் கட்டுரை குறித்து முகப்புத்தகத்தில் (Facebook) நடைபெறும் விவாதத்தினை உங்கள் பார்வைக்கு

  • Edward: adukuthan mandaram tharengi vachirugagal avanga
  • Nathan: இதில சொன்னது உண்மை, நானும்’இவரை ஒரு சில மாதங்களுக்கு ,முன்னர் ஈஸ்ட் காம் என்னும் இடத்தில் இந்து சைவ முன்னேற்ற மண்டபத்தில்.சந்தித்தேன் அப்போது அவர் என்னிடமும் இதே போல உங்களுக்கு விசா பிரச்சனை, எல்லாம் சரியாகிவிடும் முருகனை தரிசிக்கவும்,என்றார், இதில வேடிக்கை என்னவென்றால் ,எனக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட்,,இப்படி பல சாமிகள் இங்கு வந்து எம் மக்களை எம்மாற்றுவது ஒன்றும் புதியதில்லை, காரணம் மனிதனுக்கு ஆசைகள் பலது, கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்பலாம் ,கடவுள் வேஷம் போடுறவனை நம்பாதே’[நான் இங்கே போகவேண்டிய காரணம் ஒருத்தர் இவனை பார்க்க போக கார் இல்லாததால் நான் கூட்டி போனேன்] கடவுள் வேஷம் கட்டுபவன் ,கள்ளன்தான்.,,,,நாதன்,’
  • Edward : eduku ava amma k valapadanum edhu pola paiyana pattadhuku
  • Sakthivel: என் கடும் ஆட்சேபனை! ஒரு “சாமியாரின்” அடிப்படத் தகுதி என்ன? பொய், பித்தலாட்டம், எமாற்று, பணம் சேர்த்தல். இதில் இவர் எதில் சோடை போய்விட்டார்? எல்லாம் சரியாகத்தானே செய்கிறார்?
  • நல்லையா:  இவர் போலிச் சாமியாரல்ல Sathiyamoorthy Sakthivel , நான் உங்கள் கருத்துடன் உடன்பாடு , சாமியார் என்றால் அதன் அடிப்படைத் தகுதி ,ஏமாறால், கொள்ளைஉஅடித்தல். பாலியல் துன்புறுத்தல் போனறன , சிலர் 100 ரூபா கொள்லயடித்து 10 ரூபாவை , தமது கிரிமினல் குற்றங்களை மூடி மறைப்பதற்கு பாவிக்கிறார்கள் ..உதாரணம் சத்ய சாய் பாபா ..அவரும் உண்மைச் சாமியார்தான் …
  • Rajadurai: ஏமாருபவன் இருக்கும் வரை

ஏமாற்றுபவனும் இருக்கத்தான் செய்வான்.
நாமாக உணர்தால் போலிகளுக்கு வேலையே இல்லை.
அருமையான தரவு பதிவுக்கு நன்றி…

  • ராக்கெட்:

ஒருத்தனை நடு ரோட்டில சனங்களே அடிச்சு கொன்று போட்டால் அததுக்கு பிறகு இப்பிடியான ஆக்கள் வர பயப்பிடுவாங்கள் …… ஆனால் எங்கட சனம் பத்து நாள் கள்ளச்சாமியார் பற்றி கதைச்சுப்போட்டு பதினோராவது நாள் வேற ஒரு கள்ளச்சாமியிட்ட ஏமாந்துபோய் வந்து நிக்குங்கள்….. தன்னம்பிக்கள் இல்லாதவன் இருக்கும் மட்டும் சாமியும் சாமியாரும் சடங்குகளும் பெருகி ஏமாற்று மோசடிகளுக்கு கடவுளையே காரணம் காட்டுற சூழ்நிலை வருவதை தட்டுக்க யாராலும் முடியாது …… உண்மையை சொன்னால் உலகம் ஏற்ப்பதில்லை …அனுபவத்தையே அதிகம் மக்கள் நம்புகிறார்கள் …… அனுபவித்து திருந்தட்டும் …விடுங்கோ

 

 
கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்