மனித இழிவுகளையே அது அடிப்படையாக கொண்டது. மனிதன் மேல் கொடூரமான, இழிவான, வக்கிரமான ஒடுக்குமுறைகளைச் செய்யும் கோட்பாட்டாலானது. இந்த சமூக அமைப்பில், இப்படிப்பட்ட ஒன்று தான் பார்ப்பனியமும். இதன் பிரதிநிதிகள் தான், இந்த பார்ப்பனமணிகள்.

சாதிகளையே உருவாக்கி, மக்களை பிளந்து அதைக்கொண்டு வாழ்கின்ற அற்பர்கள் தான் இவர்கள்.

 

சமூகத்தில் தனது சாதியை முதன்மைப்படுத்தி பார்ப்பனிய மதத்தையே, இந்து மதமாக்கினர். இப்படி தமது சாதி சுரண்டல் வாழ்வுக்காக, ஒரு சாதியை முதன்மைப்படுத்தியவர்கள். அதை கடவுளின் பெயரில் முதன்மைப்படுத்தியவர்கள் தான், இந்த பார்ப்பனியர்கள்.

 

இதுவே ஒரு சுரண்டும் வர்க்கம். தனிமனிதனை முதன்மைப்படுத்தி, சமூகத்தை எதிரியாக நிறுத்துகின்றது. மற்றவனின் உழைப்பைச் சுரண்டி, அவர்களை தமக்கு அடிமைப்படுத்தி வாழும், தமது அற்பத்தனத்தையே தனிமனித சுதந்திரம் என்கின்றனர். மற்றவன் உழைப்பைத் திருடி வாழ்வதே இவர்களின் அறம். இப்படி இதன் மூலம் கோடானுகோடி பணத்தை ஒரு தனிமனிதன் குவிப்பதன் மூலம், கோடானுகோடி மக்களை அடிமைப்படுத்தி வாழ்வதை குறிக்கோளாகக் கொண்டதால் தான், கம்யூனிசத்தை தூற்றுகின்றனர். பார்ப்பனியமும், உலகமயமாதலும் இப்படி ஒரு புள்ளியில், ஒன்றாகி ஒருங்கி நிற்கின்றது.

 

இப்படி ஒருபுறத்தில் செல்வம் சிலரிடம் குவிகின்றது. சாதியால், மதத்தால், சுரண்டலால் என பலவழிகளில், மக்களின் உழைப்பைச் சூறையாடி செல்வத்தைக் குவிக்கின்றனர். இதையே பார்ப்பனமணி போன்ற சமூக விரோத புல்லுருவிகள் நியாயப்படுத்துகின்றனர். மறுபுறத்தில் ஏழ்மை பெருகுகின்றது. இதற்குள் தான் இந்த பார்ப்பன(தமிழ்)மணி என்ற அற்ப புழு ஊருகின்றது.

 

பார்ப்பனிய ஆதரவு கொண்ட, இந்த ஏகாதிபத்திய சமூக அமைப்பு ஏற்படுத்தியுள்ள சமூக விளைவுகள் என்ன?

 

வருடாந்தம் குறைந்தபட்சம் 10 கோடி மக்கள், இந்த முதலாளித்துவத்தின் சுரண்டலின் கொடுமையால் பலியிடப்படுகின்றனர். இதை முதலாளித்துவ புள்ளிவிபரங்களே தருகின்றது. இந்தியாவில் பார்ப்பனியம் என்னும் சாதிய கொடூரத்தால் இது நடக்கின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் உழைத்தும் உணவின்றி, சுத்தமான நீர் இன்றி, நோய்க்கு மருந்தின்றி கொல்லப்படும் அவலம். சாதிய கட்டமைப்பை ஏற்படுத்திய பார்ப்பனியம், இதை சாதிக்கட்டமைப்பின் ஊடாகவே அவர்களுக்கு அதை மறுத்து படுகொலை செய்கின்றனர்.

 

பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் கொண்டுள்ள கூட்டே இதற்கு காரணமாகும். ஒருபுறம் சாதிய சுரண்டல் கட்டமைப்பு, மறுபக்கம் சுரண்டல் கட்டமைப்பு, இரண்டும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக ஒன்றாக ஒருமித்து நிற்கின்றது. மனித உழைப்பின் மீது கொடூரமான சுரண்டல், சக மனிதனாகவே கருத மறுக்கும் மனுதர்மம் என்று, இரண்டும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் சராசரி ஆயுளை குறைக்கின்றது.

 

சுரண்டல் சமூக அமைப்பால் உலகில் வருடாந்தம் 10 கோடி மக்கள் கொல்லப்படுகின்ற நிலையில், இந்தியாவில் இது தன் பங்குக்கு தாழ்த்தப்பட்ட மக்களையே பெரும்பான்மையாக கொல்லுகின்றது. இதைப் பார்ப்பனியம் தான் இந்தியாவில் நுட்பமாக செய்கின்றது.

 

இப்படி நாளொன்றுக்கு ஒரு டொலர் கூட இல்லாமல் வாழ்கின்ற ஏழை எளிய மக்கள், உணவு இன்மையால், மருந்து இல்லாமையால், சுத்தமான நீர் இன்மையால், சுற்றுச்சூழலால், இன்னும் பற்பல வழிகளில் மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தக் கொலைகார சமூக அமைப்பை பாதுகாத்து ஆதரிக்கின்ற இந்த பார்ப்பனியமணி, பார்ப்பனியத்தின் ஊடாக இதை நியாயப்படுத்துகின்றது.

 

இந்தப் பார்ப்பனிய கும்பல் ஆதரிக்கும் சமூக அமைப்போ எந்த அறமுமற்றது. மனித உழைப்பை, மனித வளத்தை, இயற்கை எல்லாம் சுரண்டி, சிலர் குவிக்கும் செல்வத்தை பாதுகாப்பது தான் உலகமயமாதல். இதையே பார்ப்பனியம் பார்ப்பனிய மதம் ஊடாக உருவாக்கிய சாதி ஊடாக செய்தது, செய்கின்றது. இதனால் இயல்பாக இதனுடன் ஒன்றிவிடுகின்றனர். எப்படி உலகமயமாதல் சிலரின் செல்வத்தை பாதுகாப்பதையே ஜனநாயகம், சுதந்திரம் என்கின்றதோ, அப்படித் தான் இந்த பார்ப்பனியத்தின் சுதந்திரமும் ஜனநாயகமும். அதாவது மனுதர்ம சாதிய விதிகளை பாதுகாப்பது தான், சமூகத்தின் அறம் என் சொல்லி சமூகத்தை சுரண்டினர், சுரண்டுகின்றனர். இதை பாதுகாக்க சாதி வழிகளிலேயே, மக்களை ஒடுக்கி ஆளுகின்றனர்.

 

இதை மூடிமறைக்க என்னதான் வித்தைகளையும் காரணங்களை காட்டிய போதும், முதலாளித்துவமும் பார்ப்பனியமும் அற்பத்தமான தமது சுத்துமாத்துகளால், இதன் சமூக விளைவை மூடிமறைக்க முடிவதில்லை. மரணங்களும், மனித இழிவுகளும் மேலும் மேலும் விதவிதமாக அதிகரித்து தொடருகின்றது. மறுபக்கத்தில் செல்வமும் குவிவதும், அதன் சொந்த வக்கிரங்களும் பெருகுகின்றது.

 

பார்ப்பனமணி என்ற முதலாளித்துவ அற்ப புழு, வசதி கருதி இதை பேசுவது கிடையாது. மாறாக இதற்கு எதிரான, கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் மீது, தனது முதலாளித்துவ எச்சிலையே காறி உமிழ்கின்றது.

 

மற்றவன் உழைப்பை திருடி வாழ்கின்ற, வாழ முனைகின்ற அற்ப வாழ்வை நேர்மையானதாக காட்டுகின்ற, இந்த அற்ப புழுக்கங்களின் ஒழுக்கம் என்பது இழிவானது. இதனால் தான் இவர்கள் கம்யூனிசத்தின் மீது காறி உமிழ்வது இயல்பானதாகின்றது. இந்திய சமூகத்தை எடுத்தால், கோடானுகோடி மக்களுக்கு இவர்கள் எதை தான் கொடுக்கின்றனர்.

 

சாதியம் என்ற கொடுங்கோன்மையான காட்டுமிராண்டித்தனத்தைத் தான். இதை பார்ப்பனியம் ஊடாக நிலைநாட்டுகின்ற, அந்த இழிவான கொடூரமான வர்க்கத்தை சோந்தவர்கள் தான் இந்த பார்ப்பன(தமிழ்)மணிகள். இதற்குள் தீண்டாமை என்ற, சாதியக் கொடுமை புகுத்தியவர்கள் இவர்கள். இதற்கு ஆதரவாகவே பார்ப்பன(தமிழ்)மணி போன்ற முதலாளித்துவ புழுக்கள் நெளிகின்றன. சாதியமும், சுரண்டலும் தொடர வேண்டும் என்பதால், இந்த வர்க்கத்தினதும் சாதியினதும் பிரதிநிதியாக தமிழ்மணத்தில் நெளிகின்றனர்.

 

இந்த சாதிய மற்றும் சுரண்டல் கொடுமையால், இந்திய சமூக அமைப்பில் கல்வி கற்க முடியாத குழந்தைகளின் அவலம் கொடூரமானது. அவர்கள் மேல் சுமத்தியுள்ள கடும் உழைப்பும், பார்ப்பனிய சாதிய (கிறிஸ்துவ முஸ்லீம்) ஆணாதிக்க கொடுமைக்குள் சிக்கி மாளும் பெண்கள் முதல் மத அக்கிரமங்களாலும் படுகொலைகள், இப்படி எத்தனை எத்தனை. இந்த முதலாளித்துவ பார்ப்பனிய புழுக்களுக்கு, அதைப் பற்றி அக்கறை ஏற்படுவதில்லை.

 

இதற்கு எதிரான போராட்டத்தைபற்றித் தான் இவர்களின் கவலை. சுரண்டி வாழும் அற்பத்தனமான வாழ்க்கையும், சாதியால் மேன்மைகொண்ட வாழ்க்கையும், கம்யூனிஸ்ட்டுகளால் நாசமாகிவிடும் என்ற அச்சம், இவர்களை பீதிக்குள்ளாக்குகின்றது. இதனால் கம்யூனிசம் பற்றி கற்பனைளையும், ஆதாhரமற்ற அவதூறுகளையும், ஏகாதிபத்தித்தின் மடியில் இருந்து எடுத்து உற்பத்தி செய்கின்றனர். ஏகாதிபத்தியம் கூட்டியள்ளி துப்புவதை, விசுவாசமாக விழுங்கி மீள துப்பிவிடுவதே, அந்த வர்க்கத்தினதும் பார்ப்பனியத்தினதும் உயர்ந்தபட்ச அறிவு.

 

இதன் மூலம் சாதியை ஒழித்துவிட முடியாது. வறுமையை ஒழித்துவிட முடியாது. சமூக கொடுமைகளை ஒழித்துவிட முடியாது. கம்யூனிசம் மட்டும் தான், மக்களை நேசிக்கின்றது. அது மட்டும் தான் அனைத்து சமூக கொடுமைகளையும் ஒழிக்கும் அறிவையும், ஆற்றலையும், நேர்மையையும் கொண்டது.

 

பி.இரயாகரன்
05.02.2008