பார்ப்பனியம் என்பது அறிவால் நிலைநாட்டப்பட்டதல்ல. சூழ்ச்சியால், சதியால், வன்முறை கொண்ட அதிகாரத்தால் தான், சமூகத்தை அடிமைப்படுத்தினர். இப்படிப்பட்ட பார்ப்பனியம் தான், தமிழ்மணத்தில் பல வேடங்களில், பல பார்ப்பனிய இடுகைகளைப் போட்டனர்.
ஏகாதிபத்தியத்திடம் நக்கியதை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்கள் மீது காறி உமிழ்ந்தனர். பிரித்தாளும் சதியை தமிழ் மணத்தில், பார்ப்பனிய நரிப்புத்தியுடன் புகுத்தினர். இந்த நிலையில் சம்பூகன் அந்த நரிகளையும், அதன் சதிகளையும் தோலுரிக்க புறப்பட்டார். அதற்கு ஆதரவாக நாம் தோள்கொடுக்க முனைந்தோம். இவ்வாறு இட்ட பதிவுகள், முக்கியத்துவம் கருதி தனிப்பதிவாகின்றது.
தமிழ்மணி என்ற பார்ப்பனியமணி, கம்யூனிசம் மீது காறி உமிழ்ந்தபோது அதன் நோக்கம் மக்களின் உரிமை தொடர்பானதல்ல. மாறாக மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற, தமது சமூக விரோத செயல்களை பாதுகாக்கின்ற வகையில் தான், பூனூலில் தொங்கிக் கொண்டிருந்தனர்.
கம்யூனிஸ்ட்டுகள் கோயிலை இடிப்பார்கள், நாஸ்த்திகர்களுக்கு அங்கு என்ன வேலை என்று, மார்பில் அடித்து ஒப்பாரி வைத்தனர்.
நீங்கள் எதை மற்றவனுக்கு மறுக்கின்றீர்களோ, அதைக் கோரித்தான் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் போராடுகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளை விரட்ட வேண்டுமா, நீங்கள் கம்யூனிஸ்டுகளின் கோரிக்கை முன்வைக்காத படி, சமூகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள்.
இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்யூனிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது.
உங்களால் தான், உங்கள் நடத்தையால் தான், கம்யூனிஸ்ட்டுகள் கோடிக்கால் பூதம் போல் உங்களை கருவறுக்க உருவாகின்றனர். ஏன் பெரியாரிஸ்ட்டுகளும், கூடத்தான்.
கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வர முன் அவர்களின் ஜனநாயக மீறலைப்பற்றி பேசும் நீங்கள், அவர்கள் உருவாகாத மாதிரி சமூகத்தின் உரிமைகளை வழங்கிவிடுவதல்லவா நேர்மை. சரியான வழியும் கூட. அதற்காகவா! தமிழ்மணி என்ற பார்ப்பனமணி போராடுகின்றது.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக காறி உமிழ்வதை விட, கம்யூனிஸ்டுகள் அரசியலை நடத்த முடியாத வகையில், சகல சமூக அநீதிகளையும் ஒழித்துக் கட்டலாமே.
கோயில்களில் அனைத்து சாதியினரும் சென்று வழிபடும் உரிமையை வழங்க மறுப்பது ஏன?. அனைத்து சாதியிரும் பூசை செய்யும் உரிமையை வழங்க மறுப்பது ஏன?. அதை அவர்களின் சொந்த மொழியில் வழிபடும் உரிமை மறுப்பது ஏன்? இப்படி பற்பல. இதை நீங்கள் மறுப்பதால், கம்யூனிஸ்டுகள் அதற்கு எதிராகப் போராடுகின்னறனர்.
இதனால் தான் கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்ட்டுகள், மற்றவர்களும், அவர்கள் நேசிக்கும் மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடுகின்றனர். யாருக்கு எதிராக போடுகின்றனர், இதை மறுப்பவனுக்கு எதிராகத்தான். இதை கம்யூனிஸ்டுகள் செய்வதை விரும்பவில்லை என்றால், மறுப்பவனை ஒழியுங்கள். பின் கமயூனிஸ்ட்டுகளுக்கு எந்த வேலையும் இருக்காது.
பி.இரயாகரன்
03.02.2008