06082023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..பகுதி 4

“நான் எவ்வளவு தான் எஸ். பொ.வோடு ஒத்திருந்தாலும், நற்போக்கு என்ற பதச் சேர்க்கையை முழுமையாக ஆதரிக்கவில்லை”  நற்போக்கு எனும் கருத்துருவாக்கம் உருவாகிய போது வ.அ. இராஜரத்தினம் அவர்களால் முன் வைக்கப்பட்ட அபிப்பிராயம் இது.

 

1962-ல் முற்போக்கு எழுத்தாளர்களின் தேசிய மாநாடு கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கான விசேட மலர் வாசலில் மண்டபவாசலில் வைத்து விற்கப்பட்டது. மலரை வாங்கியவர்கள் தான் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.  “மலர் வாங்குபவர்கள் எல்லாம் எழுத்தாளர்களா?” என நான் கேட்டேன். கொமயூனிஸ்ட் தொண்டர்கள் எலலாம் முறைத்துப் பார்த்தார்கள். கூட்டம் தொடங்கிய போது எஸ்.பொ.  “எழுத்தாளர்கள் கொம்யூனிஸ்ட ஆக இருக்கலாம். ஆனால் கொம்யூனிஸட் எல்லாருமே எழுத்தாளர்கள் அல்ல”  என்று சொன்ன போது, ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களில்@ வெள்வெருட்டுக்களில் எஸ். பொ.வும் தானும் ஆ. குருசாமி அவர்களின் பாதுகாப்போடு வெளியேறியதாக சொல்கின்றார் வ.அ.

ஸாகிறாக் கல்லூர்p விவகாரத்தை தொடர்ந்து எஸ்.பொ. தலைமையில் ஓர் அணி உருவாகியது. அந்த அணியினர் பழந்தமிழ் இலக்கிய அறிவு  எழுத்தாளர்களுக்கு வேணடு;ம் என்றனர். ஆனாலும் புது இலக்கியத்தில் ~கிளசிக்|காக எழுதுபவர்களாகவே; இருந்தனர். அதனால் ~மரபு| என்ற வார்த்தையே எனக்குப் பிடித்திருந்தது. என்னுடைய தோணி சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் ~தேசிய இலக்கியம்|, மண்வளம், யதார்த்தம் என்ற கோஷங்களை முற்போக்காளர்கள் எழுப்புவதற்கு முன்னரே அக்கோஷங்களுக்கு இலக்கணமான கதைகளை எழுதினேன். இதில் எந்தக் கோஷத்தினரோடும் எடுபட நான் விரும்பவில்லை என்கின்றார் வ.அ.

“என்னை ஈழத்துப் பூதந்தேவனாரின் தம்பி என்று சொல்லிக்கொள்வதில் தான் நான் அதிகம் பெருமைப்படுகின்றேன். ஆம்  இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான செழுமையான இலக்கியம் நம்முடையது. அந்த மரபிற் காலூன்றி நின்று தான் நாம் புதுமையை சிருட்டிக்க வேண்டும். பழமையை அறியாதவனுக்கு புதுமையை சிருட்டிப்பதற்கு உரிமையில்லை என்பது தான் என்றென்றைக்கும் என் இலக்கியக் கோட்பாடு” என்கின்றார்.

வ.அ.வின் கலை இலக்கிய வாழ்வு கைலாசபதிக்கு முற்பட்ட காலம். அவரின் படைப்புக்கள் 23-வது வயதில் ஆரம்பம் பெறுகின்றது.  1948-ல் எஸ். டி. சிவநாயகம் தினகரன் உதவி ஆசிரியராக இருந்த பொழுது அவரின் “மழையால் இழந்த காதல்|” எனும் சிறுகதை முதலாவதாக வெளிவருகின்றது. அதைத் தொடர்ந்து இலங்கை வானொலியில், அவரின் சிறுகதைகள்,  நாடகங்கள் போன்றன இடம் பெற்றன. அவரின் ஆண்சிங்கம் எனும் நாடகத்தில் கலாநிதி கா. சிவத்தம்பி கூட நடித்திருக்கின்றார். சுதந்திரன், தினகரன், ஈழகேசரி, வீரகேசரி போன்ற பத்திரிகைகளுக் கூடாக வெளி வந்த சிறுகதை, நாவல்கள் மிக அதிகம்.

திருகோணமலையில் ஆசிரியராக இருந்த காலத்தில், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் அதிபராக இருந்த அருட் திரு ஹீனி என்ற அமெரிக்கர் மூலமாகத்தான்   “தேசிய இலக்கியம்” என்றால் என்னவென்ற கோட்பாட்டை கண்டடைந்தேன்.  ஹீனியின் ஊடான தொடர் கலந்துரையாடல் சம்பாஷனைகளுக் கூடாகவே “ஈழத்து இலக்கியம்”  என்ற கோட்பாடு உருவாக்கம் எனக்குள் வலுவடைந்தது என்கின்றார்.

வ.அ. சொல்பவைகளுக்கூடாக அவரது அரசியல், கலை இலக்கிய கோட்பாட்டு நடவடிக்கைகளை வைத்துப் பார்த்தால், அவர் கட்சி கலை-இலக்கிய ஸ்தாபன வடிவங்களை நிராகரிக்கின்ற, அதே வேளை தான் சுதந்திரமானவன் யாருக்கும் கட்டுப்பட்டவன் அல்லன் என்கின்ற அதே வேளை, சக எழுத்தாளர்களை காழ்ப்புனர்வின்றி தன் நோக்கிலிருந்து விமர்சிக்கின்ற போக்கையும் தான் காணமுடிகின்றது. அத்தோடு எந்த நிகழ்வு நடந்தாலும், அதில் அத்துறை சார்ந்தவர்களின் பங்கு பற்றலை தவிர, மற்றவர்கள் பங்கெடுப்பதை வெறுத்தொதுக்குகின்றார்.

52-ம் ஆண்டுக் காலகட்டத்தில் கொழும்பில் அ.ந. கந்தசாமியின் தொடர்பு ஏற்படுகின்றது. அக் காலகட்டத்தில், அண்மையில் காலமாகிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கா.பொ. இரத்தினம்  தமிழ் எழுத்தாளர் சங்கமொன்றை அமைக்க கொழும்பில் கூட்டமொன்றை கூட்டினார். அப்போது அக் கூட்டத்திற்கு சென்ற அ.நா.வும், வ.அ.வும், அங்கு வந்திருந்த பிரமுகர்களையும் பண்டிதர்களையும் வித்வான்களையும் பார்த்து “நீங்கள் எல்லாம் எழுத்தாளர்களா”? எனக் கேட்டு அக் கூட்டத்தையே குழப்பியடிக்கின்றனர்.

வ.அ. இராஜரத்தினம்

வ.அ. திருகோணமலையில் ஆசிரியராக இருந்த காலத்தில் மகாகவியும், செ. கணேசலிங்கமும் அங்கு இருக்கின்றார்கள். அவர்களுடன் தொடர்பில்லை. இக் காலகட்டத்தில் திருகோணமலையில் இருந்த தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சிலர், ஓர் மலர் வெளியீட்டிற்காக ஓர் சிறுகதை கேட்க செல்கின்றார்கள். அவர்களிடம் “இங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் ஓன்று இருக்கின்றதா? யார் யார் எழுத்தாளர்கள் என அலட்சியமாக கேட்கின்றார்.”  அவர்கள் மகாகவியும், கணேசலிங்கமும் என்கின்றார்கள். இவர்கள் யாழப்பாணத்தவர்கள்! தனக்கு பண்டிதர்கள் வடிவேலு, சரவணமுத்து, புலவர் சிவசேகரம் போன்றவர்களைத் தவிர திருகோணமலையில் வேறு எழுத்தாளர்கள் இருப்பதாக தெரியவில்லையென சொல்ல, சிறுகதை கேட்க வந்தவர்கள் கோபத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இது புதுமைப்பித்தன் போன்றும், மணிக்கொடி கால எழுத்தாளர்கள், இலங்கயின்–இலங்கையர்கோன் கனகசெந்திநாதன், மு. தளையசிங்கம் போன்றவர்களின்,(எழுத்தாளன் என்பவபன் ஓர் புதுவார்ப்பு) அது நாம் தாம் முற்போக்காளர்கள் அல்ல எம் எழுத்துக்களில் சமூகம் சர்வ நிவாரணம் பெறும், இதை நாங்கள் எப்போதோ சொல்லிவிட்டோம்,  போக்கின் பாற்பட்டதே..

நான் “தேசிய இலக்கியம்”, மண்வளம், யதார்த்தம் என்ற கோஷங்களை முற்போக்காளர்கள் எழுப்புவதற்கு முன்னரே, அக்கோஷங்களுக்கு இலக்கணமான கதைகளை எழுதினேன் என்பது, நான் பொதுவுடமைக் கருத்துக்களை பொதுவுடமைவாதிகள் சொல்வதற்கு முன்பே திரைப்படங்களில் எழுதி விட்டேன் என கருணாநிதி சொல்வது போலுள்ளது.

வ.அ. தான் ஹீனியின் மூலம் கற்றறிந்தவற்றிற் கூடாகவே, (சமூக விஞ்ஞான கோட்பாட்டின் பாற்பட்டதல்ல)  தேசிய இலக்கியம், ஈழத்து இலக்கிய கோட்பாட்டுருவாக்கம் போன்றனவற்றிற்கு வந்தடைகின்றார்.  இங்கே தான் முற்போக்கு எழுத்தாளர்களும், இவர்களும் முரண்படுகின்ற பெரும்போக்கு உள்ளது. மு. தளையசிங்கம போன்றவர்கள், 46-ல் இருந்து 53-ம் ஆண்டு வரையான காலப் பகுதியை,  ஈழத்து இலக்கியத்தின் பொற்காலம் என்கின்றனர். முற்போக்கானர்கள் 54-ம் ஆண்டிற்கு பிற்பாடே  இலக்கியம், மண்வளம், யதார்த்தம் என்பன தேசியத்தின் பாற்படுகின்றது. மக்கள் மயப்படுகின்றது. அதுவும் அடக்கி-ஓடுக்கப்பட்ட மக்களின் பாற்படுகின்றது என்கின்றனர்.

(தொடரும்)


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்