09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஒசாமாவின் மரணம் பயங்கரவாதத்தின் முடிவா ?

சம காலத்தின் மிகப் பெரிய பயங்கரவாதியான அல்- காயிதாவின் தலைவன் என கருதப்படும் ஒசாமா பின்லாடன், அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இன்று அமெரிக்க சனாதிபதி அறிவித்துள்ளார். ஊடகங்களும் இதை மிக பிரபல்லியமாக விளம்பரப்படுத்துகின்றது. இதையிட்டு நம்முள் எழும் கேள்வி யாதனில் இன்றோடு மத பயங்கரவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டதா?

 


 

ஒசாமாவின் மரணத்தால் அல்- காயிதாவின் தாக்குதல் முறையும், உத்திகளும் மாறக் கூடும். பயங்கரவாதம் ஒழியும் என்று நாம் எதிர்பார்த்தால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்றே பொருள். இவுலகில் பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக இருப்பது ஏகாதிப்பத்திய பிராந்திய வல்லாதிக்க அரசுகளும் ஏனைய தரகு முதலாளித்துவ அரசுகளுமேயாகும்.மத்தியகிழக்கிலும், மற்றும் தெற்காசிய, லத்தின் அமெரிக்க, ஆபிரிக்க நாடுகளில் உள்ள கனிம வளங்களையும் எண்ணெய் வளத்தையும் ஆக்கிரமிப்பதற்காக , அமெரிக்க சார்ந்த மேற்கு நாடுகளின் எதேச்சாதிகாரபோக்கின் விளைவுகளில் ஒன்று தான் பயங்கரவாதமும் அல்- காயிதாவும். பயங்கரவாதத்தை உருவாக்கிய ஏகாதிப்பதியங்களே பயங்கரவாதத்தால் பாதிட்கப்படுவது வரலாற்றின் மாற்ற முடியாத நியதி என்றாகி விட்டது.


ஒசாமாவின் வழிமுறைகளை நம்மைப் போன்றே யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வெளிப்படை. அதே வேளை உலகம் முழுவதும் கிளை பரப்பி (Network) பல ஆயிரக்கணக்கான இளைஞ்ஞர்களை ஒரு அரசியல் கருத்தின்பால் வென்றெடுத்து இத்தனை காலம் நிலைத்திருக்கும் அல்- காயிதாவின் இருப்புக்கு, அமெரிக்காவும் மேற்கு நாடுகளினதும், சமூக, பொருளாதார, பிராந்திய அரசியல்ப் போக்கே மூலகாரணி. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், யேமன், சோமாலியா, அல்ஜீரியா போன்ற நாடுகளில் ஒசாமாவின் படம் பொறிக்கப்பட்ட t-shirt களை துணிந்து அணிபவர்கள் உள்ளனர். இவர்களை  வெறுமனே மதவாதிகள் என்ற ஒற்றை வரிக்குள் அடக்கி ஓதிக்கிவிட முடியாது. ஒசாமாவை ஏகாதிபத்தியத்தின் எதிர்பாளனாக பார்ப்பவர்களும் உண்டு. இஸ்லாத்தின் பாதுகாவலனாக பார்ப்பவர்களும் உண்டு. பயங்கரவாதியாக பார்ப்பவர்களும் உண்டு. இதில் விகிதாசார வித்தியாசங்கள் இருக்குமேத் தவிர வேறில்லை.


 

 

ஐரோப்பிய நாடுகளில் வாழும் அரேபிய இஸ்லாமிய இளைஞ்ஞர்களின் மத்தியில் புழக்கத்தில் உள்ள ஒசாமாவின் அரேபிய மொழி மூல சொற்பொழிவும், அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு ஒலி நாடாக்களையும் அறிந்தவர்கள் இதை விளங்கிக் கொள்ள சிரமப்பட வேண்டியதில்லை. பிராந்திய வல்லாதிக்க அரசும் இனவாத இலங்கை அரசும் புலிகளை துடைத்து எறிந்து விட்டு புலிகளின் தோற்றுவாய்க்கான காரணங்களை அப்படியே வைதிருப்பது போல், இஸ்லாமிய மதம் சார்ந்த தேசியவிடுதலை சார்ந்த இயக்கங்களை துடைத்து ஏறிய நினைக்கும் எகாதிப்பதியங்கள், மற்றும் மேற்கத்தைய ஊடகங்கள் திட்டமிட்டு தேசிய இனங்களின் பிரச்சனைகளை மறைத்து விடுகின்றன அல்லது அல்- காயிதா போன்ற அமைப்புகளின் செயல்ப்பாட்டை காட்டி பீதியூட்டி, தேசிய இனங்களின் போராட்டங்களை பயங்கரவாதம் என்ற எல்லைக்குள் அடக்கி கொச்சை படுத்தி விடுகின்றனர்.


இதில் கவலைக்குரிய செய்தி யாதெனில் தேசிய இனங்களின் கோரிக்கைகளையும் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கத்தையும் அல்- காயிதா போன்ற மதப் பயங்கரவாதிகள் கையில் எடுக்கும் நிலை உருவானதற்கான காரணம், வர்க்க சிந்தனை கொண்ட சக்திகள் மதத்தின் உள்ளடக்கமாக இப்பிராந்தியங்களில் செயற்பட்டதெனில் அது மிகையாகாது. ஏகாதிப்பதியங்களை எதிர்ப்பதாக கூறி மக்களை படுகொலை செய்யும் இம் மதப் பயங்கரவாதிகளையும் இவர்களின் போசகர்களான ஏகாதிப்பதியங்களையும் வெல்லக்கூடிய ஒரே சித்தாந்தம் மாக்சிச,லெனினிச, மாஓயிச வர்க்க போராட்டத்தின் கருதிரட்சியே. இது கை கூடும் வரை இவை தொடரவே செய்யும்.


இலக்கியா 02 /05 /11

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்