09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

நவீன சிற்பிகள்

இவர்கள்
வீதிசமைத்த
பொதுநலக்காரர்கள்........

கல்லும்,முள்ளும்
இவர்கள் கால்களுக்கு
சப்பாத்துக்களாகும்...................


ஆனால்  
இன்னும் "விதி"யின்
விளையாட்டில்.....................

இவர்கள்
வெறும் மனித விளையாட்டு
"பொம்மை"களாக.................

மாற்றம்
ஏதும் கண்டிராது
"வீதி"ஓரங்களில் ..................

உடைந்துபோன
மனசோடும்,கிழிந்ததுணியோடும்
நலிந்துபோன வாழ்வோடு...................

தினசரி
போராடி அரைவயிறு "கஞ்சி"குடித்து
தாரும்,புழுதியுமாய்..............................

தாறுமாறாய்
ஆகிநிற்கும் இவர்கள் நிலை
யார் கண்களுக்காவது.....................

இதுநாள் வரை
தெரிந்திருகிருக்கிறதா அல்லது
கேள்விப்பட்டாவது ?.................

அரசியல்வாதிகளின்
அன்றாட பேச்சுக்கள் அடிமைகள்
இங்கில்லை,பசியோடும் யாருமில்லை.......

மார்புதட்டி
நெஞ்சுநிமித்திப் பேசும்
வஞ்சக "அரச"முதலைகள்...........

வாயில் அகப்பட்ட
இரையாகி உருமறையும்
இந்த இருண்ட மனிதர்களின் ..............

அடிமைச்சாசனத்தை
உடைத்தெறிந்து "வெளிச்சம்"காண
கொஞ்சம் சிந்தியுங்கள்...........

உங்கள் "சொகுசு"  
வாகனங்கள் இவர்களின்
உடலிலும்,உயிரிலும் தான்....................

பயணிக்கிறது
என்பது மட்டுமே மறுக்க முடியா
உண்மைகளாக நாளாந்தம்...............

புதியபுதிய
தெருக்களையும்,வீதிகளையும்
சிருஷ்டிக்கும்  நவீன சிற்பிகள்.................


*வனிதாச்சந்துரு*


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்