12092022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

நலமுடன் நூல் அறிமுகம் -எஸ் சிவதாஸ்

நூலினை ஆசிரியர் இவ்வாறு தொடங்குகின்றார்..................

 

கண்ணீரைத் துடைத்திட வேண்டாமா?

 

யாரைச் சொல்லி அழ..

யாரை நொந்து அழ..

யாருக்காக அழ..

யாரைக் கேட்டு அழ

இலகுவில் ஆற்றமுடியாத மனக்காயங்களின் கொடூரம் காரணமாக கசிந்து கண்ணீர் மல்கும் இந்த இளம் தாயின் பெயர் அபர்ணா. வயது முப்பத்தொன்று மட்டுமே ஆன இந்தத் தாயின் நெஞ்சை உருக்கும் கதைக்குக் கொஞ்சம் செவி சாயுங்கள். இவளது அன்புக் கணவனது பெயர் லவன். குடும்ப வாழ்க்கை தந்த முதற்பரிசாக இரண்டரை வயதேயான கோதையழகு என்னும் அழகான பெண் குழந்தை. போரவலம் மக்களைத் தரையோடு தரையாக நசுக்கிய முள்ளிவாய்க்காலில் 25.03.2009 இல் இரண்டாவது குழந்தையாக பொற்சுடர் பிறந்தாள். சுகப் பிரசவம், தாயும் சேயும் நலம் என்றார்கள். எனினும் அந்தப் பச்சிளம் பாலகனை போர் முனையின் வெம்மையிலிருந்து காப்பாற்றவென 28-04-2009 அன்று கப்பல் மூலமாக அபர்ணாவும் கோதையழகும் திருமலைக்கு புறப்பட்டார்கள். வயதுக் கட்டுப்பாடு காரணமாக வடிவேலு அவர்களுடன் செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறான். அவர்கள் படகு மூலம் கப்பலை நோக்கிச் செல்கையில் ஆண்மையும், மனமுதிர்ச்சியும் தந்த சகிப்புத் தன்மையையும் மீறிக் கரையில் நின்று கதறும் லவனை நோக்கிக் கையசைத்துக் கண்ணீருடன் விடை பெறுகின்றனர் கோதையழகும் அபர்ணாவும். திருமலையிலிருந்து புல்மோட்டை இடைத்தங்கல் முகாமுக்கு வந்து சேர்கின்றனர். அபர்ணாவுக்கு 25-05-2009 அன்று பொக்கிளிப்பான் நோய் ஏற்படுகிறது. தாயின் அணைப்பிலேயே எந்நேரமும் துயிலும் பொற்சுடருக்கும் அது தொற்றுகின்றது. கோதையழகை தெரிந்தவர்கள் சிலரிடம் ஒப்படைத்துவிட்டு பொற்சுடரை பதவியா வைத்தியசாலைக்கும் பின்னர் அங்கிருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கும் அபர்ணா சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாள்.

 

 

 

பொற்சுடரை மிகவும் மோசமாக பொக்கிளிப்பான் தாக்கியிருந்தது. எனவே அனுராதபுரத்திலிருந்து அவர்கள் கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். எதுவித சிகிச்சையும், பராமரிப்பும் பலனளிக்காமல் 18-06-2009 இல் பொற்சுடர் இறந்து விட்டாள்.

லவனின் கதி என்னவாயிற்று என்று அபர்ணாவிற்கு இன்றுவரை தெரியாது. பொன்னாக மின்னிய பிஞ்சுக் குழந்தையையும் காலன் இரக்கமின்றிக் கவர்ந்து சென்று விட்டான். இரண்டரை வயதேயான சின்னஞ் சிறு கோதை புல்மோட்டை முகாமில் "பிறத்தியார்" கைகளில் என்னவானோளோ என்ற ஏக்கம்.

தொடர்ந்து வாசியுங்கள்

 

http://www.tamilarangam.net/index.php?option=com_content&view=article&id=4116:2011-04-12-17-20-33&catid=106:publishedinlanka&Itemid=107

 

 

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்