தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், கடந்த சுமார் ஆறு மாதங்களாக தமிழ் நாட்டில் உணர்வுகளைத் தூண்டும் விஷயமாக பேசப்பட்டுவந்த, தமிழக மீனவர் இலங்கைக் கடற்பரப்புக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இத்தேர்தலில் ஒரு பேசுபொருளாக இருக்கிறது.

தமிழ்நாடு நீண்ட கடற்கரையைப் பெற்றிருந்தாலும், மீனவர்கள், தேர்தல்களின் முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு சில மாவட்டங்களிலேயே விளங்குகிறார்கள். கன்யாகுமரி, தூத்துக்குடி போன்ற ஒரு சில மாவட்டங்களிலும், சென்னையின் ராயபுரம் போன்ற ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே மீனவர்கள் ஒரு அரசியல் ரீதியான சக்தியாக இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது.

 

 

ஆனால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற நிகழ்வுகள் தமிழக மீனவர்களிடையே, அந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் உணர்ச்சியை தூண்டும் விஷயமாக இருக்கவே செய்கிறது. தேர்தலில் அதன் எதிரொலி ஒரளவுக்காவது இருக்கும் என்றே நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மீன்வர்கள் பார்வையில் தமிழகத் தேர்தல்கள் என்ற பெட்டக நிகழ்ச்சியை இங்கே கேட்கலாம்

நன்றி BBC TAMIL - தமிழோசை

{play}http://www.tamilcircle.net/audio/bbc/110407_fisherelection_au_nb.mp3{/play}