அன்று நீங்கள்
கொல்லப்பட்டிருக்கலாம்
மகாத்மாக்களின் ஆசியோடு….உங்கள் குரல் வளைகளை
யுடைத்த அதே அன்னியச் சுருக்குகள்
எம் விடுதலையை யுடைக்க
காத்திருக்கிறது….
மார்ச் 23
மூன்று உயிர்கள் பறிக்கப்பட்டதாம்
இல்லை
இல்லை
இல்லவே இல்லை
உடல்கள் விதைகளாக
விண்மீண்களாக
எங்களின் குருதியாக
உணர்வாக
மாறிய நாள்
கைராட்டைகளின் முகமூடி
கிழித்து வஞ்சகர் தம்
குலை நடுங்க
தூக்குக்கயிற்றை
முத்தமிட்ட
தியாகத்தின் விழிகளே!
அன்னியனுக்கு அடிபணிய
மறுத்த
விதையின் வழிகளே
உங்களுக்கெங்கள் வீரவணக்கம்