எங்கே ஓடுகின்றோம் என்று தெரியாது, ஓடுகின்றது தேசம். சுற்றிச் சுற்றி தமிழ் மக்களை இதற்குள், இந்த அரசியலுக்குள் வாழ் என்கின்றது தேசம். தமிழ் மக்கள், தமது சொந்த அரசியலுக்குள் இட்டுச் செல்லும் எதையும், கருவறுப்பதே தேசத்தின் மைய அரசியல்.
மக்களின் தனித்துவமான சொந்த போராட்டவழிக்குரிய அரசியலை, அதற்கு எதிரான அனைத்து சமூக விரோத போக்கையும் எதிர்த்துப் போராடுவது, மனநோய்க்குரியது என்கின்றது தேசம். இது தான் மனநோய் என்றால், அதையே நாம் தொடர்ந்து செய்வோம்.
இப்படி தேசம் ஆசிரியர் அவரின் நண்பரின் சதி அரசியலுக்கு ஏற்ப ஆடிய ஆட்டத்தையே தான், 17.01.2008 இல் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளார். 'இரயாகரன் - அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும்" என்ற தலையங்கத்தில் இது வெளியாகியது. எனது அரசியலை விவாதிக்க, எந்த துப்பும் இவர்களுக்கு கிடையாது. அதற்கென்று தேசத்திடம், மக்கள் அரசியல் என எதுவும் கிடையாது. எனவே அவர்களால் எனது அரசியலை விவாதிக்க, விமர்சிக்க முடியாது. என்ன செய்கின்றார், அவரின் தளத்தில் கருத்துரையாடும் பொறுக்கிகளின் பாணியில், பொறுக்கிப் போட முடிகின்றது.
அவர் எனது பல கட்டுரைகளில் இருந்து சொற்களை, வரிகளை பிய்த்தெடுத்து, அதன் அரசியல் உள்ளடகத்தை திரித்து, தனது தேவைக்கு ஏற்ப வேடிக்கையாக கருத்துச் சொல்லுகின்றார். நாங்கள் ஒரு அரசியலைச் சார்ந்து நிற்கின்றோமே, அதற்கு நீங்கள் சொல்லும் மாற்று என்ன? அதை முதலில் சொல்லுங்கள்.
நீங்கள் கூறுவது போல் நாங்கள் மார்க்சியத்தை முன்வைக்கவில்லை என்றால், வரட்டுத்தனத்தை செய்கின்றோம் என்றால், அதற்கான உங்கள் மாற்றுத் தான் என்ன? இதை கண்டுபிடித்து தானே, இதை சொல்லியிருக்க முடியும். ஏன் அதை முன்வைக்க முடியவில்லை? என்ன கற்பனையில், நண்பர்களின் சலசலப்பில் மயங்கியா எழுதினீர்கள்.
என்ன, மாற்று ஒன்று இருக்கும் என்று கருதுகின்ற ஊகமா? எமக்கு மாற்று எதையும் கட்டுரையில், சொல்ல முடியவில்லை. எனது பல கட்டுரைகளில் தேடி சொற்களை, வசனத்தை பிய்த்துப் போட்டால் மாற்றாகிவிடுமா? புலியுடன் நிற்கும் நபர்களுடன் எம்மை ஊற்றிக் குழைத்தும், இதைச் சொல்ல முடியவில்லை. இதற்கு ஏற்ப பதிவிட்ட நாலாம் தரமான வெள்ளை வேட்டி கட்டிய தெருப் பொறுக்கிகளும், அண்ணனுடன் சேர்ந்து இணையத்தில் தவழுகின்றனர்.
தேசம் ஆசிரியர் எடுத்த எடுப்பில் "பரிசில் இருந்து இயக்கப்படும் 'ரமிழ்சேர்க்கிள்' என்ற இணையமும் தேசம் - தேசம்நெற் மீது தனிநபர் தாக்குதல்களையும் சேறடிப்புகளையும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன." என்கின்றார். பல கட்டுரைகளை அங்குமிங்கும் குரங்கு போல் தாவித்தாவி பிய்த்தவர், இந்த தனிநபர் தாக்குதலை மட்டும் அவரால் எடுத்துக் காட்ட முடியவில்லை. ஏன்? நாங்கள் ஜெயபாலன் மீது அல்லது சேனனின் மீது தனிநபர் தாக்குதலையா நடத்தினோம். எங்கே? எப்போது?
சொல்லுங்கள். இதை விடுத்து இப்படி ஊகங்கள், புனைவுகள், இட்டுக்கட்டுதல், நண்பர்களில் இருந்து பிரபலிக்கும் மனப்பதிவுகள் கொண்டு, எம்மை மீள அவதூறு செய்ய முடிகின்றது. இப்படி பலரைப் போல் உங்களை சொல்ல வைத்ததில், உங்கள் நண்பர் கை தேர்ந்தவர்.
நீங்கள் இந்த கட்டுரை வெளிவர முன்னம், அந்த நண்பருடன் பரிசில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நாம் அறிய அந்த நண்பரின் அரசியல் என்பது, அன்று முதல் இன்று வரை சதிதான்.
இப்படி அனைவரும் கருத்தை கருத்தாக எதிர்கொள்ள முடியாத கோழைகள். மண்ணில் படுகொலை. இங்கு பகலில் வெள்ளை வேட்டி, இருட்டில் வக்கிரத்தைக் கொட்டும் கருதாடலாம்.
இப்படிப்பட்டவர்கள் தமது சொந்த அரசியலை வைக்க முடியாத போது, தம் மீதான தனிநபர் தாக்குதல் நடப்பதாக கூறுவது அரங்கேறுகின்றது. நீங்கள் வைத்துள்ள அரசியலின் புனிதத்தை, இது எப்படி மக்கள் நலனைப் பேணுகின்றது என்பதை வெளிப்படையாக வையுங்களேன். ஏன் தனிநபர் தாக்குதல் என்று கூறி ஒடி ஒளிக்கின்றீர்கள். நீங்கள் முதலில் உங்கள் அரசியலை வையுங்கள். எந்தப் பொறிக்கியும், எதையும் சமூகத்துக்காக வைப்பதில்லை.
மாறாக இந்திய இலங்கை கூலிக் குழுக்கு பின்னால், குந்தி இருந்து என்ன தான் செய்கின்றீர்கள். இதை நாம் வெளிப்படையாக சொல்லக் கூடாதா? இப்படிச் சொன்னால் மனநோயா? நீங்கள் அப்படி இல்லையென்றால், நீங்கள் யார்? உங்கள் கருத்து என்ன? அதை எங்கே சொல்லியுள்ளீர்கள். முதலில் அதை சொல்லுங்கள். பக்கம் பக்கமாக வம்பளப்பதை விடவும், உங்கள் கருத்தென்ன என்பதை எழுதுவதே மதிப்புக்குரியது. வெள்ளை வேட்டி தெருப்பொறுக்கிகளால், இப்படி பொறுக்கத் தான் முடியுமே ஒழிய, இதைச் சொல்ல செய்ய முடியாது.
இப்படிப்பட்ட அரசியல் வெள்ளைவேட்டி தெருப் பொறுக்கிகள், கடந்தகால மனிதர்களுக்கான போராட்டங்களையே கொச்சைப்படுத்துகின்றனர். இப்படி போராட்டங்களை நடத்தியவர்களை இழிவாடிய போது, அதை நாம் எதிர்த்தோம். இது தேசம் ஆசிரியருக்கு பொறுக்க முடியவில்லை. அவர் 'நாவலன் மீது எப்போது இரயாகரனுக்கு இந்தப் பாசம் வந்தது." என்கின்றார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகின்றார்? நாவலன் மீள அரசியலுக்கு வருகின்ற நிலையில், அதை எதிர் என்கின்றாரா? இதன் பின் உள்ள அரசியல் நோக்கம், இப்படித் தெட்டத் தெளிவாகின்றது.
தேசம் ஆசிரியர் எம்முடன் அரசிலை விமர்சிக்க முடியாது. இதனால் என்ன செய்கின்றார். 'நாவலன் மீது மட்டுமல்ல அவரின் குடும்பத்தின் மீதும் தனிநபர் தாக்குதலை தனித்து நின்று அரங்கேற்றிய, இரயாகரன் ..." என்கின்றார். சரி, எங்கே எப்போது?
நீங்கள் கூறியது போல் 'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்று தெரிந்து, ஆதாரத்துடன் தானே இந்த குற்றச்சாட்டை, அவதூறை எம் மீது வைக்கின்றீர்கள். சரி அதை வையுங்கள். அது என்ன? அது எப்படிப்பட்டது?
இப்படி அந்த தனிநபர் தாக்குதல் எங்கே? இவை எல்லாம் ஊகங்கள் தான். நாவலனுக்கும் எனக்கு இடையிலான அரசியல் முரண்பாடு. அவர் கேட்டதற்கு இணங்க எனது கைப்பட, எழுதிக் கொடுத்த கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அரசியல் சாரத்துக்குள் (அவரைப்பற்றியுமல்ல, அவருமல்ல), பல சஞ்சிகைகளில் விவாதமும் நடந்துள்ளது. இதன் பின் அவர் அரசியலில் ஈடுபட்டதை, நாம் அறியவில்லை. இதனால் அவரைப்பற்றி தனிப்பட்ட விடையங்கள், எமக்கு அவசியமற்றதாகவே இருந்தது. தனித்து நின்று தனிநபர் தாக்குதல் என்ற ஜெயபாலனின் அவதூறு, வேடிக்கையானது.
'..பி.இரயாகரனும் இந்த தனிநபர் தாக்குதல்களையும் சேறடிப்புகளையும் திட்டமிட்டு மேற்கொள்கின்றனர்" என்பது முற்றிலும் அபத்தமானது. எனது அரசியலை விவாதிக்க, விமர்ச்சிக்க, துப்புகெட்ட மக்கள் விரோத அரசியலால் முடிவதில்லை. மொட்டாக்கைப் போட்டுக் கொண்டு, மொட்டையாக அவதூறுகளை கட்டமைக்கின்றனர்.
நாம் செய்த தனிநபர் தாக்குதல் எது? அதை முதல் வையுங்கள். சும்மா ஊர் உலகத்துக்கு கதைவிடாதீர்கள். தமது அரசியல் வக்கிரத்துக்கு ஏற்ப கொசிப்பவர்களை உசுப்பி அரங்கேற்றுவதற்காகவே 'இணையத்தின் மூலம் அறிமுகமான பல நூற்றுக்கணக்கான வாசகர்களுக்காகவே இதனை எழுதுகிறேன்" என்கின்றார். இதன் மூலம் 'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்பது உறுதியாகிவிட்டதால், தேசத்தின் ஆதாரமாகி அதன் கருத்தாகிவிடுகின்றது. இவ்வளவுக்கு பகலில் முகம் தெரிய வெள்ளைவேட்டிகள். இருட்டில் மட்டும் இந்த தெருப் பொறுக்கிகளாகக் கற்பனை புனைவுடன் எழுதுபவர்கள் இவர்கள். புனைவது தான் கருத்து, என்பதுவே இவர்களின் அரசியல்.
இந்த தேசம் தன்னை வெள்ளை வேட்டித் தனத்துடன் காட்டிக் கொள்ள 'ஆனால் தேசம்நெற்றில் அதன் வாசகர்களால் பதியப்படும் கருத்துக்கள் தேசம் சஞ்சிகையினதோ அல்லது தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது அல்ல." என்கின்றது. ஆனால் 'இணையத்தின் மூலம் அறிமுகமான பல நூற்றுக்கணக்கான வாசகர்களுக்காகவே இதனை எழுதுகிறேன்" என்கின்றார். என்ன வித்தையா காட்டுகின்றார். போக்கிரித்தனமான அரசியல் இது.
இப்படி ஊகங்கள், அடிப்படையற்ற வகையில், அரசியலை தனக்கு ஏற்ப வேடிக்கை செய்ய முனைகின்றார்.
தேசம் மீதான எமது அரசியல் நிலை என்பது, தெளிவானது. நாம் கூறியது மிகச் சரியானது. அதை எதிர்கொள்ள அரசியல் நேர்மை இருந்தால், அதை எதிர் கொள்ளுங்கள். அதைவிட்டு விட்டு தனிநபர் தாக்குதலாக கதை பரப்பி, வெள்ளை வேட்டிக்கு பின்னால் ஒளித்து நின்று கல் எறிவதுதான், தமிழ் மக்களின் சார்பிலான உங்கள் புழுத்த அரசியல்!
பி.இரயாகரன்
20.01.2007