01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

சோபாசக்தியின் பொறுக்கித்தனம் மீது : இணங்கிய பின்னும், வன்முறையாக உணருதல் கூட ஆணாதிக்கத்துக்கு எதிரானது

சோபாசக்தி ஒரு பெண்ணின் (தமிழச்சி) வாயை அடைக்க கையில் எடுத்த ஆயுதம், "நான் உன்னுடன் படுத்தேன்" என்ற கதை தான். கதையெழுதுபவராச்சே சோபாசக்தி. எல்லா ஆணாதிக்க பொறுக்கிகளும் கையாளும் அதே ஆயுதம் தான். தமிழச்சி நடந்தது என்ன என்று "சோபா சக்தி! உன் அம்மணத்துக்கு அசிங்கம் என்று பேர் வை!!"என்ற கட்டுரை மூலம் பதில் அளித்துள்ளார்.

இது நடந்த காலகட்டத்தில் தமிழச்சி அவருடன் தன் உறவை முறித்தது மட்டுமின்றி, அன்று நடந்த நிகழ்வையும் தான் தாக்கியதையும் கூட எனக்குக் கூறியிருந்தார். தமிழச்சியின் இன்றைய எதிர்வினையின் உள்ளடக்கம், அன்று எனக்கு தெரிவிக்கப்பட்ட ஒரு உண்மை. இந்த நிகழ்வின் பின் தமிழச்சியின் உதிரியான எதிர்வினைகளையும், அவரின் கோபமான ஒழுங்கற்ற எதிர்த்தாக்குதலையும் தான் சோபாசக்தி தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தன் பொறுக்கித்தனத்தை சோபாசக்தியால் பாதுகாக்க முடிந்தது. இன்று ”நீ என்னுடன் இணங்கிப்படுத்தாய்” என்ற ஆணாதிக்க அயோக்கியத்தனத்தை கொண்ட கதையுடன், களத்தில் இறங்கியுள்ளார்.

இதற்கு தமிழச்சியின் பதில் போதுமானது. இதுபற்றி வேறு தோழர்களின் பதில்கள் பின்னிணைப்பில் பார்க்கவும்.

 

நாம் இங்கு இதில் உள்ள மற்றொரு பொறுக்கித்தனத்தை பார்ப்போம். அதாவது சோபாசக்தி சொன்னதுதான் நடந்தது என்று கதையை எடுத்து, அந்தக் கதையில் உள்ள பொறுக்கித்தனத்தைப் பார்ப்போம். இப்படி நடந்ததால், தனது நடத்தை சரி என்கின்ற அவரின் கதைக்குள் உள்ள ஆணாதிக்க வன்முறை பற்றியது அது. கதைக்குள் தீர்வு சொல்வது இல்லை என்ற அவரின் இலக்கிய தீர்வுக்குள் உள்ள ஆணாதிக்க மற்றும் வன்முறை பற்றியது இது.

”நீ என்னுடன் படுத்தாய்” என்று கூறி அதை நியாயப்படுத்தி நிற்கும், அது நடந்தால் கூட இது பொறுக்கித்தனமில்லை என்ற வக்கிரத்தை திணிக்கின்ற வக்கிரம் தான், இந்தக் கதையின் மறுபக்கம்.

அரசியல் இலக்கியம் பேசுகின்றவர்களுக்கு, அதுவும் ஒடுக்குமுறைக்கு எதிரான பின்நவீனத்துவ அரசியல் கட்டுடைப்பு பேசுகின்றவர்களுக்கு மட்டும், இணங்கிய பாலியலின் பின்னணியிலும் வன்முறை உண்டு என்ற உண்மை தெரிய மறுக்கின்றது. இணங்கவைத்த "பரஸ்பரம்" என்பதன் மூலம், தன் நடத்தை வன்முறையல்ல என்று கூறுகின்ற பொறுக்கித்தனம். ஆணாதிக்க நீதிமன்றங்கள் பாலியல் வன்முறை வழக்குகளில், பெண்ணைக் குற்றவாளியாக்குகின்ற இதே உத்தியைத்தான் "பரஸ்பரம்" என்ற ஆயுதத்தைத்தான் கையில் எடுக்கின்றது இக்கதை. இணங்க வைத்து இணங்கிவிட்டால், அதில் ஆணாதிக்கமில்லை, பலாத்காரமுமில்லை என்று தீர்ப்பெழுதுகின்றனர். இந்தத் தீர்ப்புகள் ஆணாதிக்கத் தீர்ப்புகள்தான். இதைத்தான் இங்கு சோபாசக்தி தன் கதைக்கு கருவாக்குகின்றார். அவரின் கதைகள் போல், இதுவும் ஒரு கற்பனையும் உண்மையும் கலந்த கூட்டுக் கலவிதான் கதையின் உத்தி. கதை புனைவதில் புகழ் பெற்றவராச்சே. அவருக்கா கதைக்கான கருவில்லை.

"பரஸ்பரம்" என்ற ஆணாதிக்க வக்கிரத்தை, சமூகத்தில் அடிக்கடி நடக்கும் ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். காதலித்த பெண்ணுடன் இணங்கி உறவு கொண்ட ஆண், அவனை ஏமாற்றும் போது, அந்த பெண் தன்னை ஏமாற்றியதை ஒரு பாலியல் வன்முறையாக உணருதல் என்பது ஆணாதிக்கத்துக்கு எதிரானது. பெண் இதை தன் மீதான பலாத்காரம் என்று கூறுவதற்கு எதிராக, அவள் அப்படியும் இப்படியும் என்னுடன் படுத்தாள் என்று கூறுவது கடைந்தெடுத்த அயோக்கித்தனமாகும். சோபாசக்தியின் கதைக்குரிய அறமே இதுதான்.

இதைத்தான் சோபாசக்தி தன் இலக்கிய நடையில் தமிழச்சிக்கு எதிராக இங்கு செய்கின்றார். "தமிழச்சி இயக்கப்படுவது நமக்கிடையேயான பிரிவிற்குப் பழிவாங்கும் எண்ணத்தால்" என்கின்றார். இங்கு அந்த பிரிவு என்ன என்று சொல்ல முடியாத அளவுக்கு, அவரது சொந்த ஆணாதிக்க வக்கிரங்களாலானது. பின்நவீனத்துவ கட்டமைப்புக்குள் கூட நியாயப்படுத்த முடியாதவை. நுகர்வை மட்டுமல்ல, பெண்ணின் உடலை கூறுகூறாக ஆணாதிக்கக் கூட்டம் கூடி வம்பளந்து தின்ற கதைகள் தான் இவை. வாயில் எச்சில் ஒழுக்க, வேசம் போட்டவை.

"நமக்கிடையேயான பிரிவிற்குப் பழிவாங்கு"வது என்றால், ஏன்? ஏன் கதைப்படி கூட, தான் ஏமாற்றப்பட்டதில் இருந்துதானே இந்த எதிர்வினை. ஏமாற்றத்தின் பின் அந்தப் பெண் இழந்தது எதை? தன் உடலை என்றால், அவள் உணருகின்றாள், தன் மீதான ஆணாதிக்கம் இதுவென்று. அவள் உன்னிடம் நம்பியது எதை? கூறு. நீ அவளின் உடலை அடைந்ததற்கு அப்பால், உனக்கு வேறு எந்த நோக்கமும் இங்கு இருக்கவில்லை. அதுதான் இந்தக் கதை "பிரிவாக" அதனை வரையறுக்கின்றது.

நுகர்வு என்பது எந்த அறநெறிக்கும் அப்பாற்பட்டது என்பதுதான் முதலாளித்துவ சந்தையின் விதி. ஆணாதிக்கம் பெண்ணை நுகர்வது என்பது தான், இங்கு இந்தக் கதையின் மையக் குறிக்கோளாகின்றது. இங்கு சமூக அறநெறிகள் பொருந்தாது என்பதுதான், ஆணாதிக்க நுகர்வின் பின்நவீனத்துவக் கோட்பாடாகும்.

திருமணமின்றியும் அல்லது இருவர் இணைந்தும் வாழ்தல் முறையை ஏற்றுக்கொள்ளாதவர்கள், எதை ஆண் பெண் பாலியல் உறவில் முன்வைக்கின்றனர்? ஏன் உன் வாழ்வில், உன் கதையில், எதைச் சொல்லுகின்றது. தங்கள் பாலியல் தேவையை எப்படி அடைகின்றனர்? விதவிதமாக நுகர, தங்களை விளம்பரம் செய்கின்றனர். பாலியல் நுகர்வை அடைய பெண்ணை ஏமாற்றுகின்றனர். நுகர விதவிதமாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இப்படிப்பட்டவர்கள் சமூகத்தின் பல்வேறு விடையங்கள் மீது கருத்து வைக்கும் போது, பாலியல் ரீதியான தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்பதை எதைச் சார்ந்து நின்று முன்வைக்கின்றனர்? உன் கதை உனக்கு எதிராக இங்கு இருக்கின்றது.

விபச்சாரம் அல்லது வரைமுறையற்ற காட்டுமிராண்டித்தனமான புணர்ச்சி அல்லது ஏமாற்றி புணருதல் என்ற எல்லைக்குள் தான், தங்கள் பாலியலைத் தீர்க்க முனைகின்றனர். இவை கூட ஆணாதிக்க வரம்புக்குள் தான், அதன் நிபந்தனைக்குள் தான் நடக்கின்றது.

இங்கு இருவர் இணங்கி இணைந்து தான் நடந்தது என்ற உன் கதையின் நியாயவாதம், ஒரு தரப்பால் (பெண்ணால்) காலம் கடந்து மறுக்கப்படும் போது கூட இணங்கிய பின்னணி கூட வன்முறைதான். இங்கு இணங்க வைத்தல் என்பது, அறியாமையையும், தனிப்பட்ட பாலியல் நெருக்கடிகளையும், சந்தர்ப்ப சூழலையும் பயன்படுத்தி பெண்ணை ஏமாற்றி நுகர்தல்தான். இங்கு நுகர்வு தான் குறிக்கோள். மோசடி தான் அதன் ஆயுதம். உன் கதையின் ஒழுக்கமே இதுதான்.

சோபாசக்தி தமிழச்சிக்கு எதிராக தன்னை "குணசித்திரப் படுகொலை செய்"வதாக கூறி எழுதியதைப் பார்ப்போம்.

"தமிழச்சிக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர் பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது. நமக்கிடையே இருந்த உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது. எனது குடும்ப உறுப்பினர்களும் அறிவார்கள். எனவே நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் அதனால் தமிழச்சி என்னைத் தாக்கினார் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் அவதூறே. நமது பிரிவிற்குப் பின்பாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த அவதூறைச் சரியான குற்றச்சாட்டு என தமிழச்சி சொல்வதும் தமிழச்சியின் கூற்றை குற்றச்சாட்டிற்கான ஆதாரமாகக்கொண்டு மற்றவர்கள் என்மீது தாக்குதலைத் தொடுப்பதும் கொஞ்சமும் நேர்மையற்ற செயல்கள். தமிழச்சி இயக்கப்படுவது நமக்கிடையேயான பிரிவிற்குப் பழிவாங்கும் எண்ணத்தால், மற்றவர்கள் இயக்கப்படுவது என்னைக் 'குணசித்திரப் படுகொலை' செய்யும் எத்தனத்தால்." என்கின்றார்.

1."நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் அதனால் தமிழச்சி என்னைத் தாக்கினார் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்கின்றார்.

2."மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று." என்கின்றார்.

இங்கு சோபாசக்தியின் கதைசார் அயோக்கியத்தனமான உள்ளடக்கம், ஆணாதிக்க சூழ்ச்சியை தனக்கேற்ற ஒழுக்கமாக்குகின்றது "பரஸ்பரம்" என்பது, ஒரு கட்டத்தின் பின்னான மாற்றத்தை மறுக்கின்றது. தொடர்ந்து இணங்க மறுக்கும் போது, வன்முறை சார்ந்ததாக மாறிவிடுகின்றது என்ற உண்மையைப் புதைக்கின்றது. இங்கு "பரஸ்பரம்" என்ற உறவைக்காட்டி, வன்முறையை மறுத்தல் ஆணாதிக்க வக்கிரமாகும்.

சோபாசக்தி, சுகன் உள்ளடங்கிய ஆண்கள், பெண்ணை நுகர, அவளைக் கூட்டுகலவி செய்ய, அவளை இணங்க வைக்க பெண்ணிய சார்பு வேசம் போடுவார்கள். புலியெதிர்ப்பு பேசிய கூட்டத்துடன் கூடி, இவர்கள் நடத்திய கலவிக் கூத்துகள் பற்பல. இதுதான் இவர்களின் இலக்கியத்தின் உச்சமாக இருந்தது.

ஒரு பெண்ணை அடைதல் தொடங்கி, அடைந்தவுடன் அவளைக் கூட்டுக்கலவி செய்ய நிர்ப்பந்திப்பவர்கள். பெண்ணுடனான உறவை பற்றி தமக்கு இடையில் வம்பளப்பவர்கள். இதை எல்லாம் ஆணாதிக்க நோக்கில் தான், எச்சில் வழிய சொல்லி செய்பவர்கள். இதை எல்லாம் "பரஸ்பரம்" இணங்கிய பெண் கூட, இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுகொள்ள மறுத்து நிற்பது பெண்ணின் சுயவிமர்சனம் மட்டுமல்ல ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டமும் கூடத் தான். உன் கதை மூலம், இதில் எதையும் நியாயப்படுத்த முடியாது.

இங்குதான் சோபாசக்தியின் பொறுக்கித்தனம் வெளிப்படுகின்றது. அவளாகத்தான் என்னுடன் படுத்தாள், பார்த்தியா உன்ரை வண்டவாளத்தை என்ற ஆணாதிக்க திமிரை வெளிப்படுத்தி விடுகின்றான். கதையின் அறம் இதைத்தான் முன்னிறுத்தி, தன்னைத்தான் நியாயப்படுத்த முனைகின்றது.

"தமிழச்சி இயக்கப்படுவது நமக்கிடையேயான பிரிவிற்குப் பழிவாங்கும் எண்ணத்தால்" என்கின்றார் சோபாசக்தி. இங்கு இக் கதைக்குரிய இக் கூற்றுக் கூட எதைக் காட்டுகின்றது? தான் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றப்பட்டதன் வெளிப்பாடாகத்தான், பழிவாங்கல் என்பது புலனாகின்றது. இணங்க வைத்து பின் பெண் உணரும் உண்மையும் போராட்டமாகும் தானே. கதைக்குள் தீர்வை வைக்காமல் எப்படி வாசகர்களிடம் கட்டுடைக்க விட்டுவிடுகின்றீர்களோ உங்கள் ஒழுக்கம் சார்ந்த அறத்தை. உங்கள் ஒழுக்கம் இணங்க வைத்தலுக்குள் முடிந்து போகின்றதோ!

"மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று" என்ற உனது கதையில் மட்டுமல்ல, உனது நடத்தை பற்றிய உனது சொந்த கண்ணோட்டம் இது. இது மேட்டுக்குடி விபச்சாரம். உனது நோக்கு பாலியல் நுகர்வுதான். இங்கு பெண் குறித்தும், பெண்ணியம் குறித்தும், இதுவே உனது மையக் குற்கோளாக இயங்குகின்றது. அடுத்த நாளே படுக்கும் எண்ணத்துடன் பெண்ணை பார்த்தது, என்ற கதை மூலம் நீ சொல்லிவிடுகின்றாய். பெண் இது பற்றி என்ன நினைத்தாள் என்பதை உன் கதையால், உன் நடத்தையால் நியாயப்படுத்த முடியாது. 2ம் சந்திப்பில், 3 வது சந்திப்பில் என்று நீ நாக்கை தொங்கவிட்டு அலைந்த உன் நாய்க்குரிய நாய்க் குணத்தை, இக்கதையில் உன்னையறியாமல் வக்கிரமாக கொட்டுகின்றாய். உன்னால் இப்படி ஏமாற்றி புணர முடிந்த அபலைப் பெண்கள் கதையை மூடிமறைத்து, அந்தக் கதையை இங்கு கதையாக்குகின்றாய். நீ தானே நல்ல கதை எழுதுபவன் ஆச்சே.

உன் இழிவான நடத்தையை, உன் ஆணாதிக்க நுகர்வு வெறியை அடைய நீ கையாண்ட வேசம் கிரிமினல்தனமானது. போதையில் அத்துமீறி இணங்க வைக்கின்ற (புலிகளின் பயிற்சியில் ஒன்று, போதையில் இருந்தபடி தகவல் பெறுதல்) உன் இழிவான முன் கூட்டியே திட்டமிட்ட நடத்தையும், பெண் வரும் போது அரை நிர்வாணமாக இருந்து தற்செயலாக உணர்ச்சிவசப்பட்டு புணருகின்ற கோலீவுட் படக் காட்சிகளையும் கொண்டும், நீ ஆடிய ஆட்டம் கேவலமானது, பொறுக்கித்தனமானது. அதை மூடிமறைத்து நியாயப்படுத்த கையாளும் ஆயுதம், மூன்றாம்தரமான ஆணாதிக்க கதைக்குரிய உத்தியாகும்.

பி.இரயாகரன்

21.02.2011

இதில் பொறுக்கி, நாய் போன்ற சொல்லுக்கு பதில் வேறு சொல்லை என்னால் தெரிவு செய்ய முடியவில்லை தோழர்களே.

பின் இணைப்பு:

இது தொடர்பான கட்டுரைகள்

1. "சோபா சக்தி! உன் அம்மணத்துக்கு அசிங்கம் என்று பேர் வை!!"

2. "பொறுக்கித்தனம் ய.ம.ய பின்னவீனத்துவ அறம்…!"

3.  ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?

4. "ஆண்டனி குறி சப்ப கேட்டான்!


பி.இரயாகரன் - சமர்