Language Selection

புதிய ஜனநாயகம் 2010

முதலாளித்துவத்தின் முதுகெ லும்பை முறித்து, பஞ்சைப்பராரிகளான பாட்டாளிகளின் முதல் சோசலிச அரசு உதித்த நாள் நவம்பர் 7, 1917. அன்றைய சோவியத் ஒன்றியத்தில் உலகின் ஜந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பில் பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி மலர்ந்த 93ஆம் ஆண்டு சோசலிசப் புரட்சி நாளை தமிழகமெங்கும் ம.க.இ.க. வி.வி.மு. பு.மா.இ.மு. பு.ஜ.தொ.மு பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து தாங்கள் செயல்படும் பகுதிகளில் எழுச்சியோடு கொண்டாடின. மறுகாலனியாக்கத்துக்கும் இந்துவெறி பாசிசத்துக்கும் எதிராகவும், புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்கச் சூளுரைத்தும் கொட்டும் மழையிலும் பேருற்சாகத்தோடும் வர்க்க உணர்வோடும் இந்த விழாக்கள் நடைபெற்றன.

திருச்சியில்...

தில்லைநகர் ஜந்தாவது கிராஸ் காந்திபுரத்தில் ம.க.இ.க பெ.வி.மு பு.மா.இ.மு பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து நவம்பர் புரட்சி நாளை எழுச்சியூட்டும் விழாவாக காலை முதல் இரவுவிரவாக நடத்தின. காந்திபுரம், மூவேந்தர் நகர் உழைக்கும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் பெருந்திரளாகக் கலந்து கொண்ட இந்த விழாவில் பானை உடைத்தல், பானையில் நீர் நிரப்புதல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம், ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, மாறுவேடப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சார்லி சாப்ளின், கட்டபொம்மன், ஜான்சி ராணி, பகத்சிங், அம்பேத்கர், காஷ்மீர் பெண்போராளி ஆகியோர் வேடம் தறித்து மாறுவேடப் போட்டியில் குழந்தைகள் மேடையில் தோன்றி உரையாற்றிய விதம், பார்வையாளர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் முன்னணியாளர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் அளித்தனர். ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் ராஜா தலையில் நடந்த இந்த விழாவில், இன்றைய உலகளாவிய நெருக்கடிகளுக்குப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியே ஒரே தீர்வு என்பதை உணர்த்தி பு.மா.இ.மு. மாவட்டச் செயலர் தோழர் கிளர்ச்சியாளன், வழக்குரைஞர் இராமலிங்கம், ஜீவா உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர். ம.க.இ.க. மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர கலை நிகழ்ச்சி போராட்ட உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சியது. நிகழ்ச்சியின் இறுதியில் இவ்விழாவில் கலந்து கொண்ட 700க்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களுக்கு மாட்டு கறி விருந்து அளிக்கப்பட்டது.

ஓசூரில்...

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் விவசாயிகள் விடுதலை முன்னணியும் இணைந்து பாகலூரில் நவம்பர் புரட்சிநாள் விழாவை எழுச்சியோடு நடத்தின. பெருந்திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்புடன் விண்ணதிரும் முழக்கங்களுடன் கொடியேற்றி, இனிப்பு வழங்கி, சிறுவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பு.ஜ.தொ.மு. மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் பரிசுகளை வழங்கினார். பின்னர் நடந்த அரங்கக் கூட்டத்தில் பு.ஜ.தொ.மு. முன்னணியாளர்களும் கமாஸ் வெக்ட்ரா ஆலை யின் தொழிற்சங்க முன்னணியாளர்களும் சிறப்புரையாற்றினர். தொழிலாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்ற இந்த விழா வர்க்க உணர்வை பறைசாற்றுவதாக அமைந்தது.

தஞ்சையில்...

ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து நவம்பர் புரட்சிநாள் விழாவை உணர்வோடு நடத்தின. மானோஜிப் பட்டி உப்பிலி மண்டபம் அருகில் பட்டாசுமதுரவாயல் பகுதியில் காலையில் செங்கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பு.மா.இ.மு. தலைமையில் தோழர்கள் உறுதியேற்றனர்.மாலை 4 மணியளவில் எஸ்.வி. மகாலில் பு.மா.இ.மு; ம.க.இ.க் பெ.வி.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் தோழர்கள் தங்கள் குடும்பத்தோடு திμண்டு நவம்பர் புμட்சிநாள் விழாவை எழுச்சியோடு நடத்தினர். குறிப்பாக, பு.மா.இ.மு.வைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் பெருந்திμளாக தமது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இளம் தோழர்கள் நிகழ்த்திய பாடல் நிகழ்ச்சி, பு.மா.இ.மு. மாணவியரின் நடன நிகழ்ச்சி, இளைஞர் களின் பறைமுழக்கம், பெ.வி.மு. தோழர்கள் நடத்திய பெண் விடுதலைக்கான விவாதம், அயோத்தி தீர்ப்பைத் தோலுரித்து இந்துவெறி பயங்கரவாதத்துக்கு எதராகப் போராட அறைகூவல் விடுத்த இசைச் சித்திரம் முதலான நிகழ்ச்சிகள் 700 பேருக்குமேல் திரண்டு வந்த பார்வையாளர்களிடம் போராட்ட உணர்


சென்னையில்...


வெடித்து, தோழர் லெனின் படம் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டையுடன் இனிப்புகள் வழங்கி செங்கொடியேற்றும் நிகழ்ச்சி யைத் தொடர்ந்து, இரு சக்கμ வாகனங்களில் முழக்கமிட்ட படியே முக்கிய வீதிகள் வழியாக வந்து தியாகத் தோழர் பீட்டர்இல்லத்திலும், பர்மா காலனி, கீழவாசல் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது. மாலையில் வடக்கு வாசல் சமுதாயக்கூடத்தில் முன்னணியாளர்கள் சிறப்புøμயாற்றினர். இசைச் சித்திμம், மாவீμன் பகத்சிங் நாடகம் ஆகியவற்றோடு, பொதுவுடமை இயக்கத்தின் மூத்ததோழரும் லாவணி இசைக் கலைஞருமானதோழர் காதர் பாடிய பாடல்கள் நிகழ்ச்சிக்குஎழுச்சியூட்டின.

வூட்டி உற்சாகமான வμவேற்பைப் பெற்றன. இறுதியாக, தியாகத்துக்கு அஞ்சாமல் வர்க்க உணர்வோடு ஒவ்வொருவரும் போல்விக்குகளாக மாற வேண்டிய அவசியத்தை விளக்கி தோழர் துரை.சண்முகம் எழுச்சியுரையாற்றினார்.

 

கோவையில்...

ம.க.இ.க் பு.ஜ.தொ.மு. சார்பாக கோவை கே.என்.ஜி.புதூரிலுள்ள எஸ்.ஆர்.ஐ. பு.ஜ.தொ.மு. சங்க அலுவலகக் கட்டிடத்தில் செங்கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நவம்பர் புμட்சிநாள் விழா தொடங்கியது. ம.க.இ.க. தோழர்கள் புμட்சிகμ பாடல்களை இசைக்க, தோழர் பூவண்ணன் தலைமையில் தொழி லாளர்கள் பெருந்திரளாகக் குடும்பத்தோடு கலந்து கொண்ட இந்த விழாவில், பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கரசு சிறப்புரையாற்றினார். இவை தவிர சேலம், புதுச்சேரி, கடலூர், கிருணகிரிமாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ள நாட்றாம் பாளையம், ஆம்பூர், உடுமலை வட்டத்திலுள்ள ஆண்டியூர், துறையூர் வட்டத்திலுள்ள காளிப்பட்டி, பென்னாகμம் வட்டத்திலுள்ள வி.வி.மு. கிளைகள்  எனப் பல்வேறு பகுதிகளிலும் இப்புμட்சிகμ அமைப்புகள் பட்டா கள் வெடித்து செங்கொடியேற்றி நவம்பர் புμட்சிநாளை எழுச்சியோடு நடத்தின. இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகள் அனைத்தும் அந்நாளில் விழாக்கோலம் பூண்டிருந்தன. திμளான உழைக்கும் மக்கள்பங்கேற்ற இந்த விழாக்களில் சிலம்பாட்டம், சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள், விவாத அμங்கம், முன்னணியாளர்களின் சிறப்புரை, புரட்சிகரப் பாடல்கள், விளையாட்டுப் போட்டிகள்  எனத் தொடர்ந்த பல்வேறுநிகழ்ச்சிகள், இங்கேயும் ஒரு நவம்பர் புμட்சி யைச் சாதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தின.

 

போலி கம்யூனிஸ்டுகள் தீபாவளிக்கு வசூல் வேட்டை நடத்தி வாழ்த்து தெரிவித்துவிட்டு, சோசலிசப் புரட்சி நாளை திவசம் போல நடத்திவரும் நிலையில், இப்புμட்சிகμத் திருநாளை வர்க்க உணர்வூட்டும் மக்கள் திருவிழாவாகவும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு விழாவாகவும் இப்புரட்சிகர அமைப்புகள் எழுச்சியோடு நடத்தி, சோசலிசப் புரட்சியைச் சாதித்தபோல்ஷ்விக்குகளின் உண்மையான வாரிகள் தாங்கள்தான் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளன.

பு.ஜ.செய்தியாளர்கள்.