எம் தேசக் குழந்தைகளை
பேரினவாதக் கழுகுகளிற்கு இரையாக்கியோர் யார்
வல்லாதிக்கப் பெருச்சாளிகளின் போட்டிக்கு
நாம் வளர்த்த குஞ்சுகளல்லவா குதறப்பட்டிருக்கிறது
உலக அரச பயங்கரவாதம் அமைதியாகவே
எம் இளையதலைமுறையை ஏய்த்து அழித்திருக்கிறது
உலகக் காளிகளின்
கண்கள் திறக்குமென்றல்லவா
இறுதி வரைக்கும் நம்பியே பலி கொடுத்திருக்கிறது
அமைதியின் உலகச் சட்டம்பிகள் பிரம்பு தேடுகிறார்கள்
காணொளிகள் கொடுரமானவையாம்
மகிந்தவின் மனிதாபிமான மீட்பில் மீறல் நடந்திருக்கிறதாம்
புலத்து மேதாவிகள்
உலகப்பந்தில் தேடிய காளிகள்
காணொளிகளால் விழித்திருக்கின்றனவாம்
விடுதலை பெற்றுத் தரப்போகின்றனவோ போ தமிழா
விக்கி லீக்ஸ் வெளியாக்குவது
மகிந்த முதல்கொண்டு மானுடஎதிரிகளின் வர்க்கப்பிணைப்பு
தமக்குள் மோதிக் கொண்டாலும்
விடுதலை உணர்வுகளை வீழ்த்துதற்காய்
கைகோர்த்த படியே தான்
நந்நிக் கடலிலும் நரபலியாடி முடித்திருக்கிறார்கள்
நெஞ்சுபதைத்து
நீதி யாரிடம் கேட்கப்போகின்றோம்
பொங்கும் உணர்வுடன் புகலிடநாடுகளா–எம்
நெஞ்சப் பதைப்பு உணரும்
வஞ்சகப் பாரதமோ வந்தெமை மீட்கும்
தொப்பிள் உரிமையென நடிப்பிடும்
கருணாநிதியின் கடித நாடகமா விடியலைக் கொண்டுவரும்
அழியக்கொடுத்த பின்பும் அழிவையே தேடுவதோ….
நாம் பற்ற வேண்டிய கரங்களை
எட்டி உதைத்து
எதிர்கால நோக்கற்றுச் சிதைத்துள்ளோம்
எமைச்சுற்றி இருந்த மக்கள் ஆதரவுத் தளமெலாம்
வெட்டி அறுத்துக் குறுவெறிக்குள் சிக்கிச் சிதைந்ததெனினும்
கைக் கெட்டிய தூரத்தில் சிங்களமக்கள்....