Language Selection

கங்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இழந்த ஒவ்வொரு உயிரும் உயிர்ப்புறும்
எழுந்து இன்னோர் தலைமுறையாய் விழிப்புறும்
கொழுந்துகளை கிள்ளினும் செழிப்புறும்
புலத்துக் கொடியவர் மமதை அழிவுறும்;;;;………

மீளெழுந்து நாடுகடந்த பிரதமரும்
சுடு காடாக்கி அடங்கிய ஈழவிடுதலையும்
இடதுகள் ஓதி இணைந்து
எஞ்சிய பிஞ்சுகளை இரையாக்க வருகினம்;;;………

மாவிலாறு தொடர் மானுட அழிவிலும்
புலியொடு சாகாது எஞ்சிய  உயிரினை
புறமுதுகிட்டதாய் சொல்ல எவனால் முடிந்தது
பிணத்தை பணமாக்கும் பேயால் முடியும்……

தமிழக வாக்குச்சீட்டு உணர்வாளர்கள்
வீர உரைக்கு விசிலடித்து குதூகலித்த புலம்
அவலத்தை மீளாய்வு செய்வதாயில்லை
எஞ்சிய இளைசுகட்கு குண்டு கட்டியனுப்பப் பதைக்கிறது….

கொலைக்களத்து மாத்தளனில்
விலைபேசத் தமிழ் இரத்தம் குடித்தவர்கள்
புலத்தவன் உழைப்பில் கொழுத்த திமிர்
மிஞ்சிய உறவுகளை மீள் அழிவில் தள்ளத்துடிக்கிறது…..

பன்றித் தொழுவத்திற்குள்ளும் அனுப்பினோம்
படை பெருக்கி  குப்பிகட்டியும் அனுப்பினோம்
பொங்கு புலத்தமிழாவென புலிக்கொடியும் பறந்தது
எஞ்சியதென்ன இளையோரைத்தின்றும் அடங்கியதாயில்லை….

வீடு உறவுகள் துணையிளந்து தெருவினில்
சூழ் இராணுவ அரணினுள்  வீழட்டும்
போரினில் மடிந்த பிள்ளைகள் யாரெவரோ அல்லவா
புழைப்பு வேண்டும் –அழித்த புலத்தவன் வழிதொடர்கிறது……

இழந்த ஒவ்வொரு உயிரும் உயிர்ப்புறும்
எழுந்து இன்னோர் தலைமுறையாய் விழிப்புறும்
கொழுந்துகளை கிள்ளினும் செழிப்புறும்
புலத்துக் கொடியவர் மமதை அழிவுறும்;;;;………

மக்களிற்காய் மரணித்தோர் தியாகதீபங்கள்
விற்றுக் கொச்சைப்படுத்துவோர் கொடுங்கோலர்