10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

21ஆம் நூற்றாண்டில் ஒரு வேட்டை

 Jullianஹொலிவூட் படங்களிலும், கணணி விளையாட்டுகளிலும் மட்டுமே பார்த்து ரசித்த மனித வேட்டை இப்போது உலக மக்களின் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கிறது. சனனாயகக் காவல் நாடுகளும், உலக சமாதானப் புறாக்களான நாடுகளும் பகிரங்கமாக ஒரு மனிதனையும், ஒரு இணையத்தளத்தையும் குறி வைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன.

 

 

விக்கிலீக்ஸ் (WikiLeaks): ஒரு இணையத்தளம். அதிகாரங்களுக்கெதிரான இணையத் தளம்.  தமது அதிகாரங்களைப் பாவித்து வல்லரசு நாடுகள் உலகமெங்கும் நர வேட்டையாடுவதை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவந்த இணையத் தளம்.  தமது நாட்டின் மக்களையும், உலகத்தையும் உளவு பார்த்து அவர்களுக்கென்று ஒரு Profile உருவாக்கி வைத்திருக்கும் அமெரிக்காவின்  மாபியா நவடிக்கைகளை வெளிக்கொண்டு வந்த இணையம். சர்வாதிகாரி சதாம் குசேனிடமிருந்து ஈராக் மக்களையும், உலகத்தையும் காப்பாற்றுகிறோம் என்று படம் காட்டிக் கொண்டு பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் குறி வைத்துக் கொலை செய்த அமெரிக்காவினதும் அதனது கூட்டு நாடுகளினதும் முகமூடியைக் கிழித்த இணையம். அப்கானிஸ்தானில் நேற்றோ நாடுகளின் மனிதப் படுகொலைகளை வெளிக்கொண்டுவந்த இணையம்.

wikileaks2இந்த இணையத்தளத்தின் நிர்வாகி Julian Assange ஐக் கைது செய்ய உலகப் பொலிஸ் Interpol தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் உளவுப்படைகள் C.I.Aயும் F.B.Iயும் ஏற்கெனவே தமது வேலையை ஆரம்பித்து விட்டன.  Julian Assangeக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும்,  Julian Assangeயைக் கொலை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, கனடா அரசியல்வாதிகள் பகிரங்கமாகக் கூச்சலிடுகின்றனர்.

அமெரிக்காவின் அழுத்தத்தினால் Julian Assangeக்கு அரசியல் தஞ்சம் வழங்க எந்த நாடும் முன்வரவில்லை.

விக்கிலீக்ஸ்ஸுக்கு தனது வழங்கியில் இடம் கொடுத்திருந்த Amazon  இணைய விற்பனை நிலையம் அமெரிக்கா உள்நாட்டமைச்சின் நிர்ப்பந்தத்தில் விக்கிலீக்ஸ் பக்கங்களை தனது வழங்கியிலிருந்து நீக்கிவிட்டது.

 

www.wikileaks.org இணைய முகவரி பதிவு செய்யப்பட்டிருந்த EveryDNS நிறுவனம் இன்று அதை அழித்ததன் மூலம் விக்கிலீக்ஸ்ஸின் இணைய முகவரியை நேரடியாக பார்க்கமுடியாதபடி தடுத்துள்ளது.

 

பிரான்ஸ் நாட்டு வழங்கிகளும் விக்கிலீக்ஸை நீக்கியுள்ளன.

ஸ்கொட்லண்ட்யாட்  Julian Assange மறைந்திருக்கும் இடம் தமக்குத் தெரியும் என்றும், சுவீடனின் முறையான வேண்டுகோள் கிடைத்தபின் தாம் நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் தெரிவித்துள்ளது.

wikileaks1சுவீடனில் இரண்டு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் Julian Assangeஐக் கைது செய்ய சுவீடன் நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பதுடன்,  Interpol ஐயும் கேட்டுள்ளது.

அமெரிக்காவைப் பற்றியும், ஏகாதிபத்தியங்கள், வல்லரசுகள், போர்கள் பற்றியும் இதுவரை பலர் எழுதியிருந்தாலும் இப்போது மட்டும் இந்த அதிகார வெறியர்கள் இப்படி ஒரு இணையத்தளத்திற்கு எதிராக வெறிகொண்டலைவதற்கு காரணம் இருக்கிறது.

விக்கிலீக்ஸ் தான் வெளியிடும் தகவல்களுக்கு படங்கள், ஒளி/ஒலிப்பதிவுகள் என்று அனைத்து ஆதாரங்களையும் முன்வைக்கும்போது இந்த அதிகாரங்களால் பதில் சொல்லவும் முடியவில்லை, தட்டிக் கழிக்கவும் முடியவில்லை.

இதனைவிட விக்கிலீக்ஸ் வெளியிடும் தகவல்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருப்பவரே இத் தகவல்கலை வெளிக்கொண்டுவருவது இன்னொரு காரணமாகும். இந்தத் தகவல்களை வழங்குபவர்களின் அநாமதேயம் பாதுகாக்கப்படுகிறது.  Julian Assange மட்டுமே தன்னை வெளிப்படுத்தி, விக்கிலிக்ஸுக்குப் பொறுப்பெடுக்கிறார்.

wikileaks3அப்பட்டமான இந்த மனித வேட்டையையும், கருத்துச் சுதந்திரத்தை அழிக்கும் அதிகாரத்தையும் நாம் எதிர்ப்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன.

இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுவிட்ட சர்வதேச யுத்தத்திலும் எமக்குத் தெரிந்த அதே எதிரிகள்தான் தாக்குதலை ஆரம்பித்துள்ளர்கள். தமது அதிகாரம் ஆட்டம் காணும் இடங்களிலெல்லாம் அடக்குமுறையை அவிழ்த்துவிட்டுள்ளர்கள்.

அதிகாரங்களை வைத்துள்ள இந்த மனித விரோதிகளை எதிர்கொள்ள விக்கிலீக்ஸ் போன்ற சுயாதீன ஊடகங்களின் தேவை மிக முக்கியமானது. இவற்றின் அழிவு ஒடுக்கப்படுபவர்களின் தோல்வியாகும்.

wikilieaksஐப் பார்ப்பதற்கான முகவரி:http://213.251.145.96/

http://twitter.com/wikileaks

தொடர்புள்ள சில பதிவுகள்:


படித்தவை:
  • http://dailypaul.com/node/150988
  • http://www.youtube.com/watch?v=Y2zRq7yOv-k
  • http://www.globalinvestigativejournalism.org/node/168
  • http://www.pressreleasecentre.com/wikileaks-website-is-back-online-asking-support-from-the-readers-27458/
  • http://blog.case.edu/singham/2010/12/03/why_i_support_wikileaks
  • http://www.thebruns.ca/articles/38915
  • http://www.telegraph.co.uk/news/worldnews/wikileaks/8172916/WikiLeaks-guilty-parties-should-face-death-penalty.html
  • http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/canada/8172920/Julian-Assange-should-be-assassinated-Canadian-official-claims.html
  • http://www.notquiteliterally.com/?p=188
  • http://liveislive.org/wikileaks-website-address-url-mirror-hacked-down-

http://porukki.weblogs.us/2010/12/04/wikileaks/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்