இறந்தவர்கள்/கொல்லப்பட்டவர்களே முக்கியத்துவப்படுத்தப்படுவது செய்திகளிலும், திரைப்படங்களிலும் வழமையானதாகும்.

மிகவும் நெருக்கமானவர் / குடும்ப அங்கத்தவர் திடீரென்று கொல்லப்பட்டுவிட்டால் அவருடன் தொடர்பானவர்கள் / குடும்ப அங்கத்தவர்கள் அந்த இழப்பை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தியுள்ள திரைப்படம்தான்  Personal Effects. தமது இழப்புக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நீதி தேடுவதாக அல்லது கொலைகாரரைக் கொலை செய்து பழிக்குப்பழி வாங்குவதாக வெவ்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமது இழப்புகான பதிலைத் தேடுகிறார்கள். இப்படியான கடினமான கதையுடன் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய செய்தி குறித்து இத் திரைப்படம் பேசுகிறது.

Personal Effects தயாரிக்கப்பட்ட அமெரிக்காவிலேயே ஒரு காட்சி மட்டுமே திரையரங்கில் திரையிடப்பட்டது. ஏனைய நாடுகளிலும் திரையிலல்லாமல் டி.வி.டியிலே கிடைக்கின்றது என்பது இப் படம் குறித்த ஒரு ஆச்சரியமான செய்தி.

ஒரு குடும்பத்தில் சகோதரி  பாலியpe2ல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, நிர்வாணமாக அவளது உடல் கடற்கரையில் வீசப்படுகிறது. அவளின் சகோதரன் இந்த மரணத்தால் தொழிலை இழக்கிறான். தாய் நிலைகுலைந்து போகிறாள். சகோதரியின் சிறிய மகளை வளர்க்கும் பொறுப்பு தாய்க்கும் மகனுக்கும்.

இரண்டாவது குடும்பத்தில் கணவன் கொல்லப்படுகிறான்.  வாய் பேசமுடியாத, கேட்க முடியாத மகனுடன் தனித்து வாழ வேண்டிய சூழ்நிலை மனைவிக்கு ஏற்படுகிறது.

தமது அன்றாட வாழ்வில் இழந்து போன நபரை, அவரின் வாழ்விடத்தை, அங்கிருக்கும் பொருட்களை என்று நினைவுகூர்ந்துகொள்வது குடும்பத்தினருக்கு தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. நீதிமன்றத்திலோ கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக,வழக்கறிஞர்களின் pe1திறமையினால் கொல்லப்பட்டவர்களே அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஏற்கெனவே இழப்பைத் தாங்கமுடியாமலிருக்கும் குடும்பத்தினருக்கு இது சித்திரவதையாகவே இருக்கிறது.

சட்டத்தினால் நீதி கிடைக்காத நிலமையில் கொலைகாரகளுக்கான தண்டனையை தாங்களே வழங்குவதைத் தவிர வேறு வழி இந்தக் குடும்பங்களுக்கு இருந்ததா என்பதே படத்தின் முடிவு.

Michelle Pfeiffer, Ashton Kutcher என்று பிரபல ஹொலிவூட் நட்சத்திரங்கள் நன்றாக நடித்திருந்தாலும் தனது உடல் மொழியால் Spencer Hudson நடிகரே மனதில் பதிந்து போகிறார்.  வாய்பேச முடியாத, கேட்கமுடியாத நிலையில் தனது கோபம், துக்கம், ஏமாற்றம், வெறுமை என்று எல்லா உணர்வுகளையும் இவர் தன் கண்களாலேயே தெரிவிக்கிறார். பேச முடியாதவராக இருக்கும் இவர் கதை சொல்வதாகவே படம் ஆரம்பமாகி, முடிகிறது.

pe3இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இன்றைய இலங்கையின் போருக்குப் பின்னான நிகழ்வுகள் சமாந்தரமாக இன்னொரு திரைப்படமாக விரிகிறது.

படத்தின் மையக்கருவைப் போலவே போரின்போதான இழப்புகளும், போரின் பின்னான இழப்புகளும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

போரில் கொல்லப்பட்டவர்களின் மரணங்கள் குறித்த நியாய/அநியாயங்களுக்கு அப்பால், தமது உறவுகளை இழந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் நிலமைதான் கொடியது. அரசியல்/பொருளாதார ரீதியாக தனித்து விடப்பட்டுள்ள இவர்கள்  வெற்றிகொண்ட இனவெறியின் சப்பாத்துக் கால்களுக்குள் அன்றாடம் நசுங்கிக் கொண்டிருக்கிறார்கள். காணாமற் போனவர் இருக்கிறாரா?இறந்துவிட்டாரா? என்பதற்கான பதிலைக்கூடக் கிடைக்கப் பெறாதவர்களாக இவர்களது வாழ்வு துயரத்தில் இருக்கிறது. கூட  இருந்தவர்கள் இப்போது உயிருடனில்லை. குந்தியிருந்த இpe4டமும் பிடுங்கப்பட்டுவிட்டது. சுற்றிவர நிற்கும் இராணிவத்தினரின் பசியிலிருந்து தாயையும், மகளையும் காப்பாற்ற வேண்டும். உடுத்த துணிக்கும், உணவுக்கும் அழித்தவர்களிடமே கையேந்த வேண்டிய நிலமை.

போரின் போது போர் இலக்கியம் படைத்தவர்களுக்கும், மனிதாபிமானம் பேசியவர்களுக்கும் போரின் பின்னான இழப்புகள் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லைப் போலும். 2009 மே 17 வரை we want tamileelam என்று தொண்டை கிழியக் கத்தியவர்களும், புலிகளே எல்லாவற்றிற்கும் காரணம் என்றவர்களும் உல்லாசப் பிரயாணிகளாக “தமிழீழம்” போய் விடுமுறையைக் கழித்துவிட்டு வந்து “அங்கை ஒரு பிரச்சினையும் இல்லை” என்கிறார்கள்.

ஒரு விபத்தில் ஒருவர் இறந்து போனாலே அவரின் குடும்பத்தவர்களுக்கு உளவியல் ஆதரவளிக்க நிபுணர்குழு இங்கே வெளிநாடுகளில் விரைந்து போகிறது.

அங்கே ஒரு தேசமே சிதைக்கப்பட்டிருக்கிறது.

http://porukki.weblogs.us/2010/10/30/personal-effects/