மாலை வேலை
ஒரு வேளையாய் நான்
தெருவிலிருக்க தெரு நாய்க்கும் எனக்கும்
போட்டி யார் வேகமாய் செல்வதென ?
போட்டி ஒன்று தான்
போட்டியாளர்கள் பெருகி விட்டார்கள்
தெருவில் இருக்கும் அனைவருக்கும்
நான் போட்டியாளன்
ஆடு மாடு குதிரை
எருமை பன்றியென அனைத்தும்
என்னோடு தெருவில்
நடப்பதும் ஓடுவதுமாய்
ஒன்றை நான் முந்த மற்றொன்று
என்னை முந்த என்னிதழ்
விரித்த புன்னகை
காணாமல் போனது
”டேய் வாடி, ஏண்டி நீ வாடா”
பாலினம் மாறுபடுகிறதே
என்று நான் திரும்ப
அது பாலினம் மறந்து
நின்றது ஒன்று
பிறந்த நாட்டில் பிறந்த ஊரில்
பிறந்த மேனியாய் நிற்பது தவறா?
அவனுக்குள் கேள்விகள் முளைத்திருக்கலாம்
போதையில் ஒரு குத்தாட்டத்தோடு
மல்லார்ந்து வீழ்ந்தான்
சூரியனுக்கு குத்திய குத்து
தெருவே இனி டாஸ்மாக்
மாதம் மும்மாரி பொழிந்ததாம்
ஒருகாலத்தில்
பாலாறும் தேனாறும் ஓடியதாம்
ஒரு காலத்தில்
அந்த ஒரு காலத்தைக் கொண்டு வர
காங்கிரசு முதல் போலிகள்
வரை போட்டியோ போட்டி
போட்ட போட்டியில்
கிழிந்தது விட்டது தமிழனின் வேட்டி
வந்து விட்டது டாஸ்மாக் புட்டி
சாக்கடை நீர் ஒதுங்கியோடுகிறது
இவன் எச்சில் படாதவாறு
பன்றிகளின் இடம் இப்போது
பச்சைத்தமிழனுக்கு
என் போட்டியை விடுங்கள்
தமிழனுக்கு போட்டியில்லை
கலைஞர் புண்ணியத்தில்
அவனுக்கு
அம்மணமாய் நிற்கிறான் ராஜாதி ராஜ
ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க
ராஜகுல திலக்க்க்க்க்க்க்க………
அவண்தாண்டா
தமிழன்