அயோத்தி தீர்ப்பு வெறும் இடப்பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையிலான பிரச்சனையோ அல்ல. மக்களின் உயிரோடும் உடமைகளோடும் தொடர்புடையது எனவே தான் நீதிபதிகள் இடத்தைப் பிரித்துக்கொடுத்தி தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள் என்று பார்ப்பன பாசிச கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு சப்பைக்கட்டு கட்டும் இந்துவெறியர்களுக்கு இதைச் சொல்லிக்கொள்கிறோம். தானும் இந்து என்று அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் இதை படித்துப்பார்த்துக் கொள்ளட்டும்.
நீளமான இக்குறிப்புகளை தேடி எடுத்து ஒருங்கே தொகுத்து டிவிட்டரிலும் கூகுளிலும் உலவவிட்டு சாதனை படைத்திருக்கும் தோழர் மணி, தோழர் ஏழரை ஆகியோருக்கு மிக்க நன்றி
சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர்.
உலக தன்வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும், செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான்.
தனது பலவீனத்தை தோல்வியை தடுமாற்றத்தை பாபர் போல வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை.
டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது.
இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர்.
மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயிலில் பாபர் கூறுகிறார்
திரேதா யுகம் முடிவுக்கு வந்தது கிமு 3102 இல். திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம், ஆனால் கிமு 700 க்கு முன் அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றே இல்லை என்கிறது அகழ்வாராய்ச்சி.
பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல் பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்.
ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்த மகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்.
அவனை அவனது சகோதர சகோதரிகளான லட்சுமணனும் சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை
தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரி சீதையை மணந்து ஆள்வான் ராமன். சமநிலை பிறழாதவன் என்பதுதான் அவனது சிறப்பு.
வால்மீகி இந்த கதையை சுட்டு இமயமலையை விந்தியமலையாக்கினான். ஆனால் விஷ்ணு அவதாரம் என மறந்தும் அவன் சொல்லவில்லை
சீதை கடத்தப்பட்ட கதை: இலியட் ம் ஓடிசியும் வாய்மொழியாக வணிகத்துடன் இந்தியா வந்தது, வால்மீகி இறந்து 700 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணத்தில் ராமன் விஷ்ணு அவதாரம் என சேர்க்கப்படுகிறது # நாகார்ஜூனா
கோசல நாட்டின் முக்கிய நகரங்களாக சரஸவதியும் சாகித்தாவும் திகழ்ந்த்து. அன்றைய அயோத்தி கங்கைகரையில் இருந்தது என்கிறது பௌத்த சமண இலக்கியங்கள்.
தற்போதைய அயோத்தி மேற்கிலிருந்து கிழக்காக பாயும் சரயூ நதிக்கரையில் உள்ளது. வால்மீகி அந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்காக பாயும் என்கிறான்.
அப்படி ஒரு ஆறு இன்றும் நேபாளத்தில் உள்ளது மக்கள் நடமாட்டம் கிமு 700 ல் ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டுக்கு 50-60 அங்குல மழை பொழியும் பிரதேசம் அயோத்தி.
அந்த காடுகளை திருத்தி நகரம்அமைக்க இரும்பு பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிமு 700க்கு முந்திய ஒரு இரும்புதுண்டு கூட அயோத்தியில் சிக்கவில்லை
இதனை ஆர்க்யாலஜிகல் சர்வே ஆப் இந்தியா வெளியிட்ட 1976-77 ரெவியூவில் பக்கம் 52, 53 இல் அறிவியல் சொல்லி உள்ளது #Indian Archeology – Areview 1979-80 page 76, 77 – cofirms the research-done by BB Lal, KN Thetchikth
சரி ராமர் கோவில யார் கட்டுனா என்றால் விகரமாதித்தர் என்கிறார்கள். 1975 இந்திய தொல்பொருள் துறை இயக்குநர் பிபி லால் ஆய்வு வேறு முடிவை தந்தது
விக்ரமாதித்தர் எனப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் காலம் கிபி 379-413. இன்னோரு விக்ராமாதித்த ஸ்கந்த குப்தன் காலம் கிபி 455-467.
ஆனால் ஆய்வில் அயோத்தியில் குப்தர்கள் ஆண்டதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. காரணம், கிபி 300-1100 ல் மனிதர்களே அயோத்தியில் வாழவில்லை
12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல 18 கோயில் என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லை, ஏனெனில் ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.
கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமரசிம்ஹா எழுதிய அமரகோசா என்ற சமஸ்கிருத சொல்லகராதியில் கடவுளர்களின் பெயரில் தப்பித்தவறி கூட ராமன் இல்லை
இந்துக்களின் புனித தலங்களை தனது தீராத் விவேகானி கலாப் இல் பட்டியலிட்ட 11 ஆம் நூற்றாண்டின் லட்சுமிதார் அதில் அயோத்தியை குறிப்பிடவில்லை
எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழுதிய ஆய்வுக்குறிப்பேட்டு புத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா, எர்நாக், சான்சி, பாம்ரா, நாச்னா போன்ற இடங்களை பட்டியலிட்டார். ஏழு அடுக்கும் 84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட ராமர் கோவிலை அயோத்தியில் விட்டு விட்டார். இல்லையா?
பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. பாபரின் சமகாலத்தில் வாழ்ந்த துளசிதாசரின் இந்தி ராமாயணத்திற்கு பிறகுதான், அதுவும் மக்களது கதையாடல்களும் இணைக்கப்பட்டதால்தான் (எந்திரன் ரஜினி போல ஜாக்கி வைத்து) ராமன் தூக்கப்பட்டார்
ராமர் கோவில் இடித்தாக சொல்லப்படும் 1528ல் துளசிதாசருக்கு 30 வயது. சிரிராம சரித்மானஸ் என்ற அவரது காவியத்தில் இதுபற்றி ஏன் அவர் எழுதவில்லை?
இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரியர் கோபால் கேட்கிறார்.
பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாக தனது கிரந்த சாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவிய பாபரின் சமகாலத்தைய குருநானக்.
அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜித்தை பார்க்கிறார். ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாக சொல்லவில்லை. பயந்திருப்பார் என்று கூட சொல்லலாம். ஆனால் பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக். அப்போது ஹிமாயூனோ ஒரு அகதியாக திரிந்தான்.
18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவ மரபு தான் செல்வாக்கில் இருந்தது. இந்து அறிஞரான ஆர்எஸ் சுக்லா தனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம் பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை அயோத்தி தாண்டதவான் குண்ட கோவிலுக்கு வழங்கியதை குறிப்பிடுகிறார். அதற்கான ஆவணம் அக்கோவிலில் இன்றும் உள்ளது.
குவாலியரில் கோவில் சிற்பங்களை ரசித்ததை தனது சுயசரிதையான பாபர் நமாவில் குறிப்பிட்ட பாபர், ராமர் கோவில் இடிக்கப்பட்டதாக கருதப்படும் மார்ச் 1528 இல் அயோத்திக்கே வரவில்லை என்கிறார் அலகாபாத் பல்கலை வரலாற்றாசிரியர் சுசில் சிறீவத்சவா. அப்போது ஆப்கானிய பட்டாணியர்களுடன் போரிட்டு கொண்டிருந்தார் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆக்ராவில் தங்கி கார்டனிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அயோத்தியின் ஹனுமன் கோவில் மகாந்த் ரகுபர்தாஸ் என்பவர்தான் இன்றுள்ள கட்டுக்கதைக்கு மூலப்புள்ளி.
பிஎன் பாண்டே வழிகாட்டலில் செர்சிங் என்பவரது அகழவாய்வில் மசூதி குறித்த தகராறு 1855க்கு முன் இருந்தாக எந்த ஆவணமோ கல்வெட்டோ நூலோ இல்லை
1845 ல் இங்கு வந்த ஆங்கில அதிகாரி சர் ஹென்ரி லாரன்சு இதுபோன்ற தகராறுகளை அவுத் குறித்த புத்தகத்தில் சொல்லவில்லை
1856 ஜனவரியில் பைரகி என்ற வைணவ பிரிவினரால் முசுலீம்களின் அடக்கதலம் அனுமான் குன்றில் அழிக்கப்பட்டது
இந்த தகராறு மதவழிபாட்டுதலம் மீதான தாக்குதலுக்கு முசுலீம்கள் வருவதாக தவறாக கணிக்கப்பட்டு ஆங்கிலேய ஜெனரல் அவ்ட்ராம் ஆல் தாக்கப்பட்டனர். மௌலவி அமீர் அலி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். பிறகுதான் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசார் புரிந்தனர்
வாரிசிலா கொள்கையை அன்று இந்தியா முழுதும் அமல் ஆகி கொண்டிருந்தது டல்ஹவுசியால். அயோத்தியின் அவுத் மீதும் ஆங்கிலேயருக்கு ஒரு கண் இருந்தது பிப்ரவரியில் அவுத் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாரிசு இல்லாத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. மன்னன் வாஜித் அலி ஷா கைது செய்யப்பட்டான்.
அவனது நான்கு மனைவிகளில் மூவர் சரணடைய நான்காவது ராணி மட்டும் ஆங்கிலேயரை எதிர்க்க துணிந்தாள்.
பீகாரின் எளிய தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் அழகாக பிறந்த ஒரே குற்றத்துக்காக கட்டாத வரிக்கு பதிலாக பெண்ணையே மனைவியாக்கி கொண்டிருந்தான் அந்த மன்னன்.
அவளுடைய இழிபிறப்பு காரணமாக அவத் அவளை ராணிகளில் ஒருத்தியாக கூட ஏற்கவில்லை. ஆனால் அவத் இன் மானத்தை காப்பாற்றிய அவள்தான் ஹஸ்ரத் பேகம்.
ஜான்சியின் லட்சுமி பாயும் அவத் இன் ஹஸ்ரத் பேகமும் சிப்பாய் கலகத்தின் கதாநாயகிகள். ஹஸ்ரத் தன் 10 வயது பாலகனோடு போர்க்களத்தில் நின்ற போது அவுத் இன் நிலபிரபுக்கள் நடுநிலை காத்தார்கள்
அனுமன் கிரியின் பூசாரி ரகுபர் தாஸ் பிரிட்டிசாருக்கு சமையல் செய்ய ஆள் அனுப்பியும் உணவு அனுப்பியும் தைரியமூட்டியும் ஆதரவு அளித்தான். அப்போது ஆற்காட்டில் இருந்து ஆங்கிலம் தெரிந்த ஒரு 70 வயது மௌலவி ஒருவர் அயோத்தி அமைந்திருக்கும் பைசாபாத்க்கு வந்தார். பாளையக்கார்ர்களின் கலகத்திற்கு ஒரு விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்றால் சிப்பாய் கலகத்திற்கு பைசாபாத் மௌலவி அகமது ஷா.
ஜிகாத் என்ற மதப்போர்வையில் பிரிட்டிசாருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். கைதாகி சிறையிலிடப்படுகிறார்.
ஆயுதங்கள் பறிக்கப்படுகிறது. ஆனால் சிறையில் இருந்து மக்கள் ஆதரவுடன் உடைக்கப்ட்டு விடுவிக்கப்படுகிறார் மௌலவி#சிறையையும் தனது பிரச்சார மேடையாக மாற்றிய மௌலவி தனது உதவியாளருடன் கடைசியாக பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது வயது 71
அகமது ஷாவும் ஹஸ்ரத் மஹலும் உள்ள அவுத் இன் சிப்பாய் கலகம் பற்றி மட்டுமே ஜி.ஹட்சின்சன் ஒரு தனி புத்தகமே எழுதி உள்ளார்
அப்புத்தகத்தில் கேப்டன் ரீத் என்பவர் ஹனுமன் கிரி பூசாரிகளின் உதவிக்கு நன்றி பாராட்டுகிறார். மெக்கால்டு இன்சும் அவுத் லக்னோ கலகம் பற்றிய குறிப்புகளில் இதனை குறிப்பிடுகிறார்
ஹனுமன் கிரி பூசாரி மாத்திரம் உணவு தராமல் இருந்தால் தாங்கள் செத்திருப்போம் என்கிறார் வில்சன்தாமஸ் பொர்னஸ் Defence of Lucknow (1858 edition) இந்த துரோகத்திற்கு எதாவது பரிசளிக்க விரும்பினார்கள் ஆங்கிலேயர்கள் ஹனுமன் கிரி பூசாரி ரகுபர் தாசுக்கு பாபர் மசூதிக்கு முன் உள்ள பொதுமனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1865ல் அங்கு ராம் சபூட்ரா என்ற ராமர் பிறந்த இடம் தோன்றியது
முன்னர் கல்லறை வழிபாட்டு தகராறுக்கு நியாயம் கேட்க வந்த முசுலீம்களை பழிவாங்கும் நோக்கம் இருந்ததை பூசாரியின் நடைமுறைகள் காட்டுகின்றன
கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த தொண்டைமானுக்கு ஒரு வாளும் பட்டாடையும், சிப்பாய கலகத்தை காட்டிக் கொடுத்த ஹனுமன் கிரி பூசாரிக்கு ராமஜென்ம பூமி
தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆங்கிலேயர் பி.கார்னேஜி என்பவர்1870 இல் எழுதிய Historical sketch of Fyzabad புத்தகத்தில் முதன்முதலாக பாபர்மசூதி கட்ட பயன்படுத்திய தூண்கள் ஜனமஸதான் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டதாக திரித்தனர்
இன்று மட்டுமா வரலாற்றை திரிக்கிறார்கள்
ராம் சாபூட்ரா திண்ணைக்கும் மசூதிக்கும் இடையில் வேலியும் போட்டு வடக்கு வாசல் வழியாக மட்டுமே முசுலீம்கள் வரலாம் என நிபந்தனை விதித்தார்கள். 1859 இலிருந்து இது நடைமுறைக்கு வந்தது.
ஆம் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு கிடைத்த இடம்தான் ராமஜன்ம பூமி. பிரிட்டிசாரின் தயவில் பிறந்த அவதார புருசன்
1885 ல் ரகுபர்தாஸ் இந்த திண்ணையில் கோவில்கட்ட அனுமதிக்குமாறு பண்டிட் ஹரிகிருஷ்ண சாஸ்திரியின் சிவில் கோர்ட்டில் வ.எண் 61/280 பதிவு செய்கிறார் படுகொலைக்கு வழிவகுக்கும் என அந்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து ஆனால் இடத்தை ஊர்ஜிதம் செய்தார்
அவுத் மாகாண நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடும் யங் என்பவரால் நவ 1 1886ல் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பாபர்தான் இடித்தார் என ஏற்றுக்கொண்டது
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிதுறையின் இயக்குநர் ஏ.பூரேர் 1889 ல் நடத்திய ஆய்வில் மசூதியின் பாரசீக கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. ஹிஜ்ரி 930ல் அதாவது கிபி 1524ல் இப்ராகிம் லோடியால் இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது கல்வெட்டில் உள்ள செய்தி
ஏப் 25 1526 இல் முதல் பானிபட் போரில் இப்ராகிம் லோடி பாபரால் கொல்லப்படுகிறார். பாபர் இந்த பள்ளிவாசல் கட்டப்படுவதை தொடர்ந்தார்
இந்த கல்வெட்டை கவனிக்காமல் திருட்டை உருப்படியாக செய்ய முடியாமல் மாட்டிக் கொள்ளவே கல்வெட்டுக்கு கன்னம் வைக்க கலவரத்திற்கு தேதி குறித்தார்கள்
1934 கலவரத்தில் வெற்றி பெற்றதாக ராக்த் ரஞ்சித் இதிகாஸ் நூலில் ராம ராக்ச திரிபாதி (பக்.60) குறிப்பிடுகிறார்
அந்த கலவரத்தில் கல்வெட்டை மட்டும் அழித்தால் மாட்டி விடுவோம் என பயந்து வெளிச்சுவர் தூபி என பலவற்றை இடித்தனர் இந்துமத வெறியர்கள்
கலவரத்தில் சேதமடைந்த பகுதிகளை அரசு செப்பனிட காண்டிராக்டு விட்டதற்கு ஆதாரம் உள்ளது
1949 டிச22 இரவில்தான் பூமியை பிளந்துகொண்டு ராமரும் லட்சுமண சீதா பிராட்டியும் அயோத்தியில் முளைத்தனர்
இதற்கு காரணமான கேகே நய்யர் கூட இந்த அற்புதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
மறுநாளே சிலைகளை அப்புறபடுத்த வாய்ப்பிருந்தும் அப்படி செய்தால் அப்பாவிகள் மடிவார்கள் என நய்யர் அகற்ற மறுத்துவிட்டார் இந்த உதவிக்காக ஜனசங்கம் பின்னர் அவரை எம்பி ஆக்கியது
அகற்ற வாய்ப்பு இருந்ததை அன்றைய காங்கிரசு மா செயலர் அக்சாய் பிரம்மச்சாரி சுட்டிக்காட்டுகிறார்
சாஸ்திரிக்கு 1950ல் கடிதமும் எழுதி மசூதியை முசுலீம்களிடம் ஒப்படைக் கோரி உண்ணாவிரதமும் இருந்தார் அவர். ஏற்கெனவே 1949 டிச.23 மசூதிக்கு பூட்டு.
உண்ணாவிரதமிருந்த காந்தியவாதிகளை தாக்கி வீடுகளை சூறையாடினார்கள் இந்துமதவெறியர்கள். டிச291949ல் பைசாபாத்-அயோத்தி கூடுதல் முதல் மாஜிஸ்டிரேட் சொத்தின் ரிசீவராக நகராட்சி தலைவர் பிரியாதர்ராமை நியமித்த்து. அவர் இந்துக்களுக்கு மாத்திரம் விகரக தரிசனத்திற்கு அனுமதித்தார்
இந்திய கிரிமினல் சட்டம் 145 ன் கீழ் இந் நியமனம் நடந்தது. இதன்படி சொத்தை பறிகொடுத்தவன் நீதிமன்ற இறுதிதீர்ப்பு வரை சொத்தை அனுபவிக்கலாம்
ஆனால் முசுலீம்களை மசூதிக்கு அருகில் கூட அனுமதிக்கவில்லை
ஜன61950ல் சூட் நம்பர் 2ல் கோபல்சிங் விசாரத் ஒரு வழக்கை சிவில்நீதிமன்றம் பைசாபாத் தாக்கல் செய்தார் தடையின்றி இந்துக்கள்வழிபாடு செய்வதற்கு
அரசு முசுலீம் என 8பேர் பிரதிவாதிகள்.உபி அரசு சார்பில் ஆசரான பைசாபாத் துணை ஆணையர் உக்ரா கள்ளத்தனமாக சிலை வைக்கப்பட்டதையும் மசூதியின் நீண்ட கால அனுபவ பாத்யதையையும் ராமர் கோவிலின் ஆதாரமின்மையையும் அறிக்கையாக தந்தும் நீதிபதி என்என் சத்தர் சிலைகளை அகற்ற இடைக்கால தடை விதிக்கிறார். மார்ச் 51ல் ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது.பின் 1961அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச வ.எ.12கீழ் வந்தது
ராமஜனம்பூமி மீட்பு ரதயாத்திரயை சீதை பிறந்தாக சொல்லப்படும் நேபாளின் ஜனக்பூரிலிருந்து 1984 செப் 25ல் விசுவிந்து பரிசத் துவங்கி அக்7,1984இல் அயோத்தி வந்தது மசூதி பூட்டை உடைத்து ராமர் கோவிலாக மாற்ற உறுதிமொழி எடுத்தனர்.தாலா கோலே (பூட்ட உடை) முழக்கம்ஆனது
அக் 31 இந்திரா செத்ததால் கலவரத்தை ஓராண்டு தள்ளி போட்டார்கள். மார்ச்9,1986க்குள் கதவு தங்களுக்கு திறக்காவிடில் பூட்டு உடைபடும் என்றனர் விஇப
டிச18,1985ல் விஇபல் உள்ள முன்னாள் நீதிபதிகள் கத்திவு அகர்வால் முன்னாள் போலிசு ஐஜி தீட்சித் ஆகியோர் பைசாபாத் மாவட்ட மாஜிஸ்டிரேட் இந்துகுமார் பாண்டே ஐ சந்தித்து கோவிலை பூட்டிவைப்பது சட்டவிரோதம் திறந்துவிட வேண்டும் என்றனர்
உமேஷ் சந்தர் பாண்டே என்ற 28 வயது (உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது 2 வயது) முன்சீப் நீதிமன்றத்தில் பூஜிக்க தடையை நீக்ககோருகிறார்
முன்சீப் ஹரிசங்கர் துபே ஜன28,1986ல் இம்மனுவை உயர்நீதிமன்ற வழக்கு நிலுவை காரணமாக நிராகரிக்கிறார். இம்மனு மேல்முறையீட்டுக்காக மாவட்ட நீதிபதி கேஎம் பாண்டே முன் பிப் 1,1986 அன்று விசாரணைக்கு வருகிறது. அன்று மாலையே பூட்டை திறந்துவிடும்படி உத்தரவிட்டார்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கையில் மாவட்ட நீதிமன்றம் அவ்வழக்கிற்கு தீர்ப்பு அளித்தது நீதித்துறை வரலாற்றில் விசித்திரம்தான்
தீர்ப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவோ விக்ரகத்தை பாதுகாக்கவோ பூட்டு தேவையில்லை 35 ஆண்டுகளாக இந்துக்களை கைதிகள் போல இருந்துள்ளனர் என்றும்
பூட்டை திறப்பதால் வானம் இடிந்து விழாது. முசுலீம்கள் ஏற்கெனவே வருவது இல்லை. பூட்டை திறந்தால் மாத்திரம் எப்படி பிரச்சினை வரும் என்றும் தீர்ப்பளித்த பாண்டே, பிரதிவாதியாக சேர்க்க கோரிய முகமது காசிம் என்பவரது மனுவை தள்ளுபடி செய்து பிப் 1,1986, 4.40க்கு உத்தரவிட 5.20க்கு அமலானது
பூட்டை திறந்தால் முசுலீமுக்கு பாதிப்பு என்பது கற்பனைக்கு கூட தகாது என பகடி செய்தார். சட்டம் ஒழுங்கு பாதிக்கபடாது என்றார் அல்லவா கலவரம் வட இந்தியா முழுவதும் பற்றிப் படர்ந்தது
1985 ஏப்ரல ஷாபானு வழக்கில் முசுலீம்களை திருப்தி செய்ய முசுலீம் பெண்களின் வாழ்க்கையை பறித்தெடுத்த நேருவின் குலக்கொழுந்து 1986 சிவராத்ரி மார்ச்8க்குள் பூட்டை உடைக்க அனுமதி தருவதாக விஇப இடம் அனுமதி கொடுத்தார்.அருண்நேரு போன்ற கூட்டாளிகளிடம்
முசுலீம் தனிநபர் சட்டத்திற்கான பழிக்குப்பழிதான் இது என சொன்னது அக்பரே நவ் இன் பேட்டி ஒன்றில் அருண்நேருவே ஒத்துக்கொண்டது நவ9,1989இல் 25 கோடியில் கோவில் கட்ட அலகாபாத் விராத் சாந்த சம்மேளன கூட்டத்தில் ஜனவரியில் 4ல் கட்ட நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது
எம்கே நாராயணன், பூட்டாசிங், தவாண் போன்றோர் விஇப உடன் இது சம்பந்தாக பேசி உள்ளனர். செங்கற்களுக்கு வரும்வழியில் பாதுகாப்பு வழங்க,அடிக்கல் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க அரசு சம்மதித்தது. ஆக 14 89ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் ல்க்னோ பெஞ்ச் ஸ்டேட்டஸ் கோ வை உத்தரவிட்டது ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி ஊர்வலம் நடந்தது. பகல்பூரின் கார்லிபிளவர் செடிகளுக்கு உரமான முசுலீம் பிணங்களை பார்த்த பிறகும் ராஜிவ் அக் 26 1989ல் ராம்லீலா ஊர்வலங்களை தடைசெய்ய முடியாது என்றார் பாட்னா விமான நிலையத்தில் தானே அடிக்கல் நாட்ட வரப்போவதாகவும் பூட்டாசிங் மூலம் தூது அனுப்பி சொன்னார் ராஜீவ். நவ 3 முதல் பிளாட் 586ல்
முசுலீம்களின் அடக்கதலத்தின் மீது காவிகொடி பறக்கவிட்டு இடத்தை தேர்வு செய்தார்கள். அன்றுதான் ராஜீவ பைசாபாத்தில் தேர்தல்பிரச்சாரத்தை துவக்கினார்
ராமராஜ்யம் அமைக்கபோவதாகவும் கூறினார். ஜிகாத் என்ற பெயரில் மக்களை திரட்டிய மௌலவிக்கும் இந்த பொறுக்கிக்கும்தான் எத்தனை வேறுபாடு முசுலீம் ஓட்டுக்களை இழக்க விரும்பாமல் உபி அரசு மூலம் தடையும் கோரினார் ராஜிவ்.
மானஸாரா என்ற இந்துகட்டட கலை குறித்த சிற்ப சாஸ்திர நூலின் 3 வது அத்தியாயத்தில் மனித மண்டை ஓடுகள்-எலும்புக்ள-..பிணங்கள் நிறைந்து காணப்படும் இடத்தை கோவில் கட்ட தேர்வு செய்ய கூடாது என உள்ளது. ஆனால் தற்போது அடிக்கல் நாட்டிய இடம் முசுலீம்களின் கல்லறைதான். இது 2010 தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு தெரியாதா?
மினரா இல்லாமல் பள்ளிவாசல் இருக்க முடியாது என்பதும் ஒரு வாதம். செருசலத்தில் உள்ள பைத்துல் முகத்துஸஃ பள்ளிவாசல், மெக்காவின் க்பா, இந்தியாவின் முதல் பள்ளிவாசலான கேரளத்தின் கொடுங்களூர் பள்ளிவசலிலும் மினரா கிடையாது. எனவே அயோத்தியில் இல்லாத்து பிரச்சினை இல்லை.
அக்பர் தான் எழுதிய திவான் இ அக்பர் என்ற நூலில் தானே திண்ணை அமைத்து ராமர்கோவில் கட்ட உதவியதாகவும் விஇப தனது அதீத் கி அஹூத்யான் வர்த்தமன் கி சங்கல்ப் என்ற நூலில் சொல்கிறது.அபூல் பசல் தனது அய்னி அக்பரியின் ஜலாலுதீன் அக்பருக்கு எழுத படிக்க தெரியாத்தை பதிவு செய்கிறார். மற்றபடி அவர்கள் சொல்லும் நூற்கள் 18 ஆம் நூற்றாண்டின் சூபி மரபின் இலக்கிய பதிவுகளாக இரு புத்தகங்கள் உள்ளன சில வார்த்தை வித்தியாசங்களுடன்
பாபர் மசூதி கட்டப்பட்ட போது அதை எதிர்த்து 1,72,000 இந்துக்கள் போராடி மடிந்தனராம்.
அதாவது 1528ல். ஆனால் 1881 இல் அயோத்தியின் மக்கட்தொகை 11,643.
ராமர் கோவிலின் கருப்பு கசவ்டி தூண்களைத்தான் மசூதிக்கும் பயன்படுத்தினார் பாபர் என்கிறார்கள்.கார்பன் 14 பரிசோதனை மூலம் இந்த தூணின் வயதை கண்டறிந்த போது அது எதுவும் 450 (1989ல்) ஆண்டுகளை தாண்டவில்லை.(Radiance Views Weekly, 24-30 April 1988, 25 June-1 July 1989, 17-23 Dec 1989)
பாபர் நாமாவில் டிச 24,1528 ல் 26 தூண்களை வடிவமைத்ததை பாபர் குறிப்பிடுகிறார் (பக்கம் 362) பாபர்நாமா ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1528ல் எழுதப்படவில்லை. இந்த கட்டத்தில்தான் பாபர் அயோத்தி வந்து இடித்தார் என்கிறார்கள்.
இக்குறிப்பிட்ட காலத்திற்கான குறிப்புகள் பலத்த சூறாவளி காற்றில் காணாமல் போனது பற்றி பாபர் நாமா பதிவு செய்து தான் உள்ளது. ஆனால் பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹூமாயூன் நாமா வின் பக். 100-103ல் இதற்கு விளக்கம் உள்ளது1528 ஏப்ரல் 5-8ல் ஆக்ரா வருகிறார். ஜூலைக்கு பிறகு பதேபூஃர சிக்கரிக்கு செல்கின்றனர். அங்குள்ள பூந்தோட்டத்தில் பாபர் நாமா எழுத ஒரு இடம் பூங்காவில் அமைக்கப்பட்டதை பதிவு செய்கிறார்• ஃஆப்கானியர் மீதான வெற்றி மழையால் தள்ளிப் போனதை பற்றியும் குறிப்பு உள்ளது.