Language Selection

கங்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜயகோ எழுத்தறிவித்தவன் இறைவனவன்
காமம் அல்ல கருணை ஒளியிதுவோ
ஆயுதம் தரித்தவன்
கூரிய எழுத்தாணி கொண்டவன்
தொட்டு சேட்டை துயர் சூழ்ந்த இனத்தவள் நீயாம்
கொட்டிய குண்டைவிடக்
கொடுமரக்கர் காமக்கணைக்கு எந்தப் பதுங்கு குழி இனியுதவும்…

அடக்கமான உடைகள்
எந்த அங்கமும் வெளித்தெரியாவண்ணம்
மூடிக்கட்டி மொட்டாக்கிட்டுமென்ன
பொட்டிட்டு  பூச்சூடி
கண்கண்ட தெய்வத்தின் பாதத்து வீழ்ந்து வணங்கியென்ன…

 

முன்னெழுந்து பின்தூங்கி
முழுப்பொழுதும் இயந்திரமாய்
சொன்ன சொல் தட்டா
மனையாளாய் மகளாய் அன்னையாய் மாணவியாய்
பேராசிரியப் பெருந்தகைகள்
வெறிநாய்களெனச் சொல்லாதிருப்போமோ……

 

ஒட்ட வெட்டிய முடியும்
தப்புதற்காய் தாரமாகிய காலமும்
கையிருந்த நூலைப்பறித்து கண்ணீரில் வீழ்த்தியது
ஈழப்பேரழிவு எதிரியின் பிடிக்குள்
கையில் குழந்தையுடன் போவென கைவிரித்து அழிந்தது
என் இனம் என் சனம்
எல்லாம் தொலைந்து நீ பெண்ணினம்  என்கிறது……..

காமினிக்கும் கரீமாவுக்கும் தான்
வாயொழுகும் வீணியுடன் தெருநாய்கள் அலைகிறது
நாமினியும் இணையாது நலிவுறுதல் தொலையாது