தியாகம் செய்து போராடக் கூறிய கூட்டம், தன்னைத் தியாகம் செய்யவில்லை. மாறாக இந்த கூட்டம் சரணடைந்தது. மக்களை பலிகொடுத்து தன்னை காப்பாற்ற முனைந்த கூட்டம், இறுதியில் போராடி மடியவில்லை. மாறாக சரணடைந்தது. இப்படி இந்தக் கூட்டம் தலைமை தாங்கிய போராட்டம் அழிந்து போனது தற்செயலானதல்ல. அங்கு உண்மை, நேர்மை, வீரம், தியாகம் என எதுவும் இருக்கவில்லை.   

இவர்கள் பின் செயல்பட்ட எடுபிடிகள், பினாமிகள், பிழைப்புவாதிகள், தங்கள் கடந்தகால பிழைப்பை அதன் பெயரில் தொடர முனைகின்றனர். இந்தவகையில் தீபச்செல்வன் புலியை முன்னிறுத்தி நிற்கின்றார். மக்களை முன்னிறுத்தியல்ல. அவர் கூறுகின்றார் "மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் மனிதாபிமானமற்ற வகையில் நடந்த இறுதியுத்தத்தில் இலங்கை அரசு எதைச் செய்தாவது யுத்தத்தில் வெற்றிபெறுவதென எங்கள் மண்ணை ஆக்கிரமிக்க நின்றது. தமிழ் மக்களின் வாழ்வுக்கான குரலை உலகம் புரிந்தும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் கைவிடப்பட்டவர்களானோம். அதனால் எல்லோரும் சேர்ந்து எங்களைத் தோற்கடித்து அழித்து முடிக்கப்போகிறார்கள் என்று அனுமானித்திருந்தேன். இதற்குள்தான் எங்கள் மக்களின் கனவு நிறைவேறுமா என்ற ஏக்கமும் என்னை எப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருந்தது." என்கின்றார்.

அரசைக் குற்றஞ்சாட்டி, புலியை முன்னிறுத்துவதுதான் இந்த வலதுசாரி அரசியல் கலை. இங்கு தங்களை மூடிமறைக்க "இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு எதைச் செய்தாவது" என்று, அரசை குற்றம் சாட்டுகின்றார். அரசு எதைச் செய்தாவது அழிக்கும் என்பது தெரியாததால் தான், உங்கள் முட்டாள் தலைவர் போராட வெளிக்கிட்டார்! அதைச் சொல்லும் பினாமிகளாக நீங்கள். அரசு அப்படிப்பட்டதுதான். அதனால் புலி அதை சொல்வதால், புலிப் பினாமிகள் அதைச் சொல்வதால், அது உண்மையாகிவிடாது.

மறுபக்கத்தில் இதைத்தான் புலிகள் செய்தனர். நீங்கள் கூறியது போல் "எப்படியாவது" "வேறு வழியில்லை" என்று கூறி, அரசு செய்ததைத் தான் புலியும் செய்தது. இங்கு யாரும் மக்களுக்காக யுத்தம் செய்யவில்லை. புலிகளை நக்கிய நீங்கள், எங்களை மக்களின் வாழ்வை உழுது அழித்தீர்கள். அதற்கு ஏற்ப கோசம் போட்டீர்கள். 

இப்படிப்பட்ட உங்கள் சொந்த வங்குரோத்தை மூடிமறைக்க, அரசும், உலகமும் சேர்ந்து அழித்தது பற்றி பேசுகின்றீர்கள். இதை அது செய்யும் என்பது கூட தெரியாது போராட முனைந்தவர்கள், போராடத் தகுதியற்றவர்கள். அதை இன்று காரணமாக்கி, தங்களை மூடிமறைத்து நிற்பவர்கள் போராட்டத்தையே மோசடி செய்பவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் சொந்த மக்களை நம்பியும், உலக மக்களை நம்பியும் போராடதவர்கள். அதை குழி பறித்த கூட்டம் நீங்கள். அரசுகளை நம்பியும், அரச பிரமுகர்களையும் நம்பியவர்கள், தங்கள் ஆயுதத்தை வழிபட்டனர். இந்த ஆயதங்கள் மூலம் மக்களை ஒடுக்கியவர்கள், அவர்கள் மேல் தங்கள் சர்வாதிகாரத்தை நிறுவி அதை பாசிசமயமாக்கினர். இதன் பின் மாபியாத்தனமும், பினாhமித்தனமும், பிழைப்புவாதமும், சந்தர்ப்பவாதமும் போராட்டமாக மாறி செழித்தது. இப்படி மக்கள் போராட்டத்தை அழித்தொழிக்க, எஞ்சியது துரோகத்தின் உள்ளடக்கம். இதற்கு தலைமைதாங்கிய கூட்டம் தான் சரணடைந்தது. அது போராட தகுதியற்றதாகியது. தியாகம் செய்ய எந்த பொது சமூக கண்ணோட்டமும் அதனிடம் எஞ்சி இருக்கவில்லை. சுயநலம் கொண்ட கூட்டமாக மாறிய புலித்தலைமை, தன்னை பாதுகாக்க அனைத்தையும் செய்து இறுதியில் சரணடைந்தது. இதை மூடிமறைக்க தீபச்செல்வன் ஒற்றைக்காலில் நிற்கின்றார்.    
 
இதனால் இலங்கை அரசை முன்னிறுத்துகின்றார். "இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு எதைச் செய்தாவது யுத்தத்தில் வெற்றி" பெற முனைந்ததாக கூறுகின்றார். இந்தத் தேவையை புலிகள் அரசுக்கு இல்லாதாக்கினர். மக்கள் போராடுவதை அழித்து, போராடும் உரிமைகளை பறித்து அவர்களை அரசு வெற்றிகொள்ள வைத்தவர்கள் புலிகள். இந்த நிலையில் புலித்தலைமை தன்னை காப்பாற்ற "எதைச் செய்தாவது" என்ற எல்லையில் மக்களை பலிகொடுத்து இறுதியில் சரணடைந்தது. முதலில் குழந்தைகள் முதல் அனைவரையும் யுத்த முனையில் சண்டை செய்யக் கோரியவர்கள், மக்களை யுத்தப் பணயக் கைதியாக்கி அவர்களை பலி கொடுத்தவர்கள், இறுதியில் தங்களைக் காப்பாற்ற சரணடைந்தனர். இதுதானே உண்மை.

இங்கு உண்மை இப்படியிருக்க "மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் மனிதாபிமானமற்ற வகையில்" அரசு நடந்து கொண்டதாக கூறுவது வேடிக்கையல்லவா. தீபச்செல்வன் கேட்பவன் கேனயன் என்று நினைக்கின்றார். அரசு மனிதாபிமானத்துடன் நடக்கும் என்று கூறுகின்ற கேனத்தனத்தை இங்கு பார்க்கின்றோம். இப்படி தங்களைக் காப்பாற்ற, இதை முன்னிறுத்துகின்றனர். மறுதளத்தில் புலிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டார்களா? இல்லை. புலிகள் அகராதியில் அது கிடையாது. எப்படி இலங்கை அரசு ஈடுபட்டதோ, அப்படித்தான் புலிகளும் ஈடுபட்டனர். அதை விட மோசமாகக் கூட ஈடுபட்டனர். இங்கு அரசின் இயல்பை குற்றம்சாட்டி, புலியின் அதே இயல்பை பாதுகாக்கும் தந்திரம் உண்மையாகிவிடாது. சொந்த மக்களை யுத்தத்தில் பலியிட்டவர்கள், யாருக்காக எதற்காக போராடினார்கள்? சொந்த சுயநலனுக்காகத்தான், மக்களுக்காகவல்ல. இதனால் இங்கு எந்த மனிதாபிமானமும் இருக்கவில்லை. அரசு இதைச் செய்தது என்பதும், அதை புலிகள் செய்ய தூண்டியது என்பதும் உண்மை. அதை வைத்து புலிகள் தங்களை பாதுகாக்க முனைந்தவர்கள் தான், இறுதியில் தங்களைப் பாதுகாக்க சரணடைந்தனர்.       

இப்படிப்பட்ட சுயநல கூட்டத்தின் பின் நின்ற தீபச்செல்வன் தான் இன்று அதை வக்காளத்து வாங்குகின்றார். "தமிழ் மக்களின் வாழ்வுக்கான குரலை உலகம் புரிந்தும் ஏற்றுக் கொள்ளவில்லை" என்கின்றார். உங்கள் அரசியல் வழிமுறை சார்ந்து, உங்களை உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும். சொந்த மக்களே உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களை மந்தையாக்கி, அவர்களை மேய்த்தவர்கள் நீங்கள். மக்கள் உங்களுக்கு அஞ்சி மவுனமாகியே உங்களைத் தோற்கடித்தனர். மக்களைத் தான் சாரவில்லை, உலக மக்களைச் சார்ந்து நின்றீர்களா எனின் அதுவும் இல்லை. மாறாக உலக அரசுகளைச் சார்ந்து நின்றீர்கள், மக்களை மேய்த்தபடி அரச பிரமுகர்களை சார்ந்து நின்று, அவர்களுக்காக குலைத்தீர்கள். 

சொந்த மக்களைச் சார்ந்து நின்றால் தான், உலக மக்கள் அவர்களைச் சார்ந்து நிற்க முடியும். உங்கள் சுயநலம் சார்ந்த மந்தைக்காக அவர்கள் நிற்பார்கள், என்று நீங்கள் நம்புவதும் நம்பக் கோருவதும் உங்கள் சுயநலம் சார்ந்த வக்கிரம். நீங்கள் உங்கள் சொந்த  மக்களுடன் நின்று இருந்தால், உங்கள் நடத்தைகளை அங்கீகரித்து உங்களுக்காக அவர்கள் போராடி இருப்பார்கள். மக்களை பலியிட்டு, குழந்தைகளை யுத்தமுனையில் திணித்து, அதை  போராட்டம் என்று கூறுவதை எந்த உலகம் அங்கீகரிக்கும். நீங்கள் நம்பிய உலகம் தான், உங்களுடள் நடத்திய இரகசிய கூட்டுச் சதிகள் மூலம் தான், உங்களையும் சரணடைய வைத்தது. வேறுயாருமல்ல.

இப்படி உங்களை காப்பாற்ற யாரும் இருக்கவில்லை. இந்த நிலையில் சொந்த மக்கள், உங்களை அரசியல் அனாதையாக்கினர். உங்களின் லும்பன்தனம்தான் எஞ்சியது. இது மக்களை மந்தையாக்கி மேய்த்தது. யுத்தம் நடைபெறாத யாழ் பிரதேசத்தில் செயல்பட்ட நீங்கள், எதை முன்னிறுத்தினீர்கள். புலிக் கோசத்தைத்தான் போட்டீர்கள். மக்களைச் சார்ந்து நிற்கவில்லை. நீங்கள் கூறுவதைப் பார்ப்போம். "யுத்தவலயத்தில் எமது இனத்தின்மீது திணித்த அதே மாதிரியான அழிப்பை, அச்சுறுத்தலை அரசு யாழ்ப்பாணத்திலும் திணித்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது படித்துக் கொண்டிருந்தேன். அத்தோடு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராகவும் இருந்தேன். நான் கடுமையான உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மரண எச்சரிக்கை குறிக்கப்பட்டவனாக வாழ்ந்தேன்." உண்மைதான்.

இந்த உண்மை மக்களுடன் நின்றதால் அல்ல. புலிகளுடன் நின்றதால் உங்களுக்கு ஏற்பட்டது. அதனால் புலிகளுடன் நின்றதால் தான் இந்த கதி என்பதல்ல, மக்களுடன் நின்றாலும் இதுதான் கதி. அரசு பற்றிய ஒரு உண்மை, எந்த நிலையிலும் பொய்யாகாது.

இங்கு இந்த நிலைபற்றிய உண்மை, இதே வேலையைச் செய்த புலி பற்றிய உண்மையை இல்லாதாக்கிவிடாது. அமைதிக் காலத்தில் மட்டும் 1000 கொலைகள் செய்த புலிகள், இதற்கு முன் பின் பல ஆயிரம் கொலைகளை செய்தனர். தாம் அல்லாத எதையும் அவர்கள் உயிருடன் வாழ விடவில்லை.

உண்மையில் மக்களில் இருந்து விலகிய, கொலைகார லும்பன் கும்பலாக மாறிய புலிகள், சமூகத்தை பீதியில் உறையவைத்து ஊனமாக்கினார்கள். இந்த ஊனமான சமூகத்தின் மேல்தான், பேரினவாதம் கொலைகார கும்பல் ஆட்டம் போட்டது. சமூகத்தை ஊனமாக்கிய நீங்கள், அச்சத்திலும் பீதியிலும் வாழ நேர்ந்தது. ஆனால் எந்தவிதத்திலும் நீங்கள் சந்தித்த உண்மை மட்டும், சமூகத்தின் பொது உண்மையாகிவிடாது. பொது உண்மையை மறைக்க, உங்கள் சார்ந்த உண்மையை காட்டி அரசியல் செய்வது மோசடித்தனமானது.    

நீங்கள் பல்கலைக்கழகம் சார்ந்து நடத்திய போராட்டம், புலிகளின் தவறான அரசியலை எதிர்த்து நடத்தப்படவில்லை. மாறாக புலிகளின் தவறை நியாயப்படுத்தும் போராட்டத்தை நடத்தினீர்கள். இப்படி மக்களில் இருந்து அன்னியமான நிலையில், ஒருபக்க உண்மைகளை புதைத்தபடி நடத்திய போராட்டம், படுகுழியில் மக்களைப் தள்ளிப் புதைத்தது. புலிக்காக, அதன் சுயநலத்துக்காக மக்களை மந்தையாக்கி போராடியவர்கள், தங்கள் சொந்த நிலையைக்காட்டி விடுவதால் நீங்கள் நடத்தியது  போராட்டமாகிவிடாது.

தொடரும்
பி.இரயாகரன்

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

  

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

5.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)

 

6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)

 

7."சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல்" செயல்பட்டதால், தவறுகள் நடந்ததாம்! (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 07)

 

 

8. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" அதனால் நாங்கள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 08)

 

9. மக்கள் விரோதிகளால் "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" மக்களுக்காக படைக்க முடியாது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 09)

 

10.செஞ்சோலையில் நடந்தது என்ன? யுத்தத்தை தொடங்கியது யார்? இதை விமர்சிக்காத அரசியல் எது? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)

11.யுத்தத்தில் "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" யார்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)


  

12புலித் தலைமையின் "தியாகம்" "வீரம்" உண்மையானதா!? பொய்யானதா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 12)