சில நாட்களுக்கு முன் நடந்த ”புனர்வாழ்வுப் பயிற்சியின்” பின்னர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ள பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள யுவதிகள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக அந்த நிலையத்தில் ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்கள் கலந்து கொண்ட நடமாடும் சேவையொன்று இடம்பெற்றுள்ளது. இது இன்று மஹிந்த-பாசிச அரசின் பல பிரச்சார நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தாலும், இந் நிகழ்வின் பின் மறைந்துள்ள விடயங்களை விளங்கி கொள்ள வேண்டிய தேவை மக்கள் சார் சக்திகளுக்கு முகமுக்கியமானதாகும்.
சில மாதங்களின் முன் தென்இலங்கை சேர்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை திரட்டுவதர்காக வன்னியில் முயற்சி செய்தனர். இந் நிகழ்வு திரிக்கப்பட்டு , சில சிங்களவர்களும் அவர்களுடன் இணைத்த ஒட்டுக் குழுக்களும், தமிழ்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த தென்பகுதிக்கு கடத்த முயன்றதாகவும், அதை தமிழ் தேசிய கூட்டமைப்பும், சில தமிழ் தேசியம் சார்தவர்களும் தடுத்து நிறுத்தியதாகவும் பரபரப்பான செய்திகளாக வெளிவந்தது. புலிகளின் அதரவு இணையங்களும், புலிகளின் அழிவின் பின் திடீர் இடதுசாரிகளாக கணிக்கப்படுவதுடன், இந்தியர்களுடன் இணைந்து ஐரோப்பாவில் இணையம் நாடத்தும் சிலர் இந்த செய்திகளை வெளியிட்டு தமிழ் தேசியமும் அதன் மக்களும் எப்படி எல்லாம் சிங்களவர்களாலும் அவர்களின் அரசாலும் வதைகப்பபட்டு சிதைகப்படுகிறார்கள் என அங்கலாயிதனர். இந்திய வாரபத்திரிகைகள் சில ஐரோப்பாவில் இணையங்கள் வெளியிட்ட இச்செய்தியை முதல் பக்க செய்தியாக்கினர்.
இது நடந்து சில நாட்களின் பின் வடக்கு தமிழர்களின் புதிய பாசிஸ்ட் மஹிந்த-பாசிச அரசின் அடிவருடி தேவானந்த பகிரங்க அறிக்கை விட்டார். தமிழ் திரைப்படங்களில் கதாநாகியின் “கற்பை” காக்கும் ஆபுசு போல ஒரு வகை கதாநாயக தன்மையுடன் அவ் அறிக்கையில், தென் இலங்கை சேர்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிசெய்ய செல்லும் தமிழ் யுவதிகளின் பாதுகாப்பிற்கும், அவர்களின் தொழில் சார்ந்த உரிமைகளுக்கு ஏதும் பங்கம் வராதெனவும், அதற்கு தான் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
இவ் அறிக்கையின் பின் புதிய உத்திகளை பாவிக்க தென்பகுதி நிறுவனங்கள் முடிவெடுத்தன. முதல் வேலையாக ஏற்றுமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசின் உதவியுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக அவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை வாய் மூட வைத்தனர். அதன் பின் ஆங்கிலம் கதைக்க கூடிய, படித்த முன்னாள் பெண்புலிகள் எண்பது பேர் ஆள் சேர்ப்பு அதிகாரிகளாகவும், ஆலோசகர்களாகவும், பாதுகாப்பு அமைச்சின் ஆசியுடன் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். முன்பு புலிக்கு ஆள் பிடித்து அனுபவப்பட்டவர்களும் புலிகளின் நிர்வாகத்தில் பதவிகளில் இருந்தவர்களுமே இன்று ஆள் சேர்ப்பு அதிகாரிகளாகவும், ஆலோசகர்களாகவும் தொழில் பார்க்க தொடங்கியுள்ளனர். இதன் பின் சொல்லவா வேண்டும் !!!. அன்று புலி ஆதிக்கத்துடன் சேர்த்து ஊழைப்பாள மக்களின் குழந்தைகளை ஆள் பிடித்து பலி கொடுத்த யாழ்ப்பாண குட்டி பூர்சுவா வர்க்கம், இன்று மஹிந்த-பாசிச ஆதிக்கத்துடன் சேர்ந்து வறுமையில் வாடும் தமிழ் ஊழைப்பாள வர்க்கப் பெண்களை சர்வேதேச கொம்பனிகள் சார்ந்த இலங்கை தரகுகள் சுரண்டுவதற்கு உதவுகின்றனர்.
ஆகவே, இந்த ஆள் திரட்டல்கள்களை தமிழ் பெண்களின் “கற்பு “சம்பதமான விடயமாகவோ அல்லது தமிழ் தேசியத்தை சிதைப்பதர்ற்கான நேரடியான நடவடிக்கையாகவோ சித்தரிப்பது அபத்தமான விடயமாகும். அது மட்டு மல்லாமல் இப்படியான பொய் பிரசாரங்களால் உண்மையிலேயே எதிர்காலத்தில் பெண்கள் மீதான பலாத்காரங்கள் நடக்கும் போது அதை சர்வதேசமும், சமூகமும் நம்பாமல் போகலாம். அப்படியானால் “இந்த சிங்களவர் ஏன் தமிழ் பிள்ளைகளை வேலைக்கு சேர்க்க வேண்டும்”………. ” சிங்களவனுக்கு எப்ப எங்களில் அன்பு வந்தது சிங்களத்திகளை வேலைக்கு சேர்க்காமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலா எங்கட தமிழ் பிள்ளைகளை வேலைக்கு எடுக்கினம்” என சில பல தமிழ் தேசிய குஞ்சுகள் கேட்கலாம்.
சிங்கள தரகுமுதலாளிளுக்கோ சர்வதேச கம்பனிகளுக்கோ அல்லது தமிழ் தரகுகளுக்கோ தொழிலாளர்கள் எந்த இனத்தினர் என்பது மிக முக்கியமான வியடமல்ல. இவர்கள் லாபத்திற்கும் சுரண்டலிற்கும் பாவிக்க கூடிய முறையில் எவர் உள்ளனரோ அவர்களை பாவித்தே தீர்வார்கள்.
சுதந்திர வர்த்தக வலயம் எண்பதுகளில் ஆரம்பிகப்பட்ட போது தென்பகுதியின் கல்வியில் முன்னேறாத பிரதேசங்களை சேர்த்த சிங்கள உழைக்கும் வர்க்க இளம் பெண்கள் நீர்கொழும்பு பிரதேசதிற்கு அழைத்து வந்து ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தினர். தொண் நூறுகளில் சிங்கள உழைக்கும் வர்க்க இளம் பெண்கள் கல்வி கற்று தனியார் துறையிலும், அரச நிறுவனங்களிலும் தொழில் பார்க்கும் வசதியை பெற்றதால் முஸ்லிம் பெண்களையும், மலையாக பெண்களையும் இன் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தினர்.
இதே வேளை தமிழ் பிரதேசங்களில் இருந்து இக்கால கட்டத்தில் அரசோ அல்லது சர்வதேச நிறுவனங்களோ பெண்களை அழைத்து வந்து ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்த முயற்சிக்கவில்லை. இதற்கு தென் பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் தமிழ் பிரதேசங்கள் கல்வியிலும், பெருளாதாரதிலும் வளர்ந்த நிலையில் இருந்தது முக்கிய காரணிகளாக இருந்தது. அதே வேளை இனமுரண்பாடும், இன விரோதம் மற்றும் யுத்த சூழல் போன்றனவும் மறைமுக காரணமென்பது மறுக்க முடியாதது. அதே வேளை சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேசிய கொம்பனிகளுடன் ஆரம்பத்தில் ஒப்பந்த அடிப்பபடையில் ஆடை தயாரிப்பை ஆரம்பித்தவர்கள் தமிழ் தரகு முதலாளிகளே என்பதும் இங்கு நினைவு கூரப்படவேண்டும் .
ஆனால் இன்று புலிகளில் அழிவின் பின் இலங்கையின் எப்பகுதியிலும் சர்வதேச நிறுவனங்கள் உள் நாட்டு தரகுகளுடன் இணைந்து சுரண்டும் வசதியை பெற்றுள்ளனர். அதே வேளை கல்வியில் உயர்ந்துள்ள தென்பகுதி உழைக்கும் வர்க்கத்தை இலகுவில் குறைந்த சம்பளத்துடன் உயர் கல்வித்தகுதி தேவையில்லாத தொழில்களுக்கு வேலைக்கு அமர்த்த முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக தென்பகுதி பெண்களின் உயர்கல்வி நிலை கடந்த 30 வருடகாலத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதே வேளை தமிழ் பிரதேசங்களில் பலமடங்கு தாழ்ந்துள்ளது. இன் நிலையானது இன்று எமது தமிழ் ஊழைக்கும் வர்க்க பெண்களை ஆடை தயாரிப்பு மற்றும் வேறு பல கைதொழில்களிலும் வேலைக்கு அமர்த்த வேண்டிய தேவை சர்வதேச மற்றும் உள்ளூர் தரகு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ் உழைக்கும் வர்க்க பெண்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி சலுகையை திரும்பவும் பெறுவதற்கும் அதன் மூலம் தமது வருமானத்தை உயர்த்தவும் இன் நிறுவனங்களுக்கு உதவும்.
அதேவேளை சர்வதேச நாடுகளில் தமிழ் மக்கள் எல்லா துறையிலும் இணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இன ரீதியாக ஒடுக்கப் படவில்லை என்ற பிம்பத்தை இது ஏற்படுத்தும், மஹிந்த-பாசிச அரசின் தேவையாகவும் உள்ளது. மேலும் பழைய புலிகள் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டால், ஐரோப்பிய புலிகள் இலங்கை அரசிற்கு எதிராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி சலுகையை இலங்கை பெறுவதற்கெதிராகவும் செயற்படுவது கஷ்டமான விடயமாகும்.
ஆகவே இந்நிகழ்வை வெறும் தேசிய ஓடுக்கு முறைக்கும் ஒர் உதாரணமாகவும் தமிழ் பெண்ணகளின் “கற்பு” சம்பந்தமான விடயமாகவும் காட்ட விளைவது பாரதூரமான வெறும் ஆணாதிக்க குறுந்தமிழ் வெறியின் வெளிப்பாடே ஒழிய வேறொன்றுமல்ல!
விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிக்க கோரும் தமிழ் பெண்ணியர்களும் புலிகளின் அழிவுக்கு பின் வந்த திடீர் இடதுசாரிகளும் குறுந்தமிழ் தேசியர்களுடன் இணைந்து தவறான பிரசாரங்களை மேற்கொள்வது சம்பதமாக மக்கள் சார்ந்த சக்திகள் கவனாமாக இருப்பது நல்லது.
– மா. நீனா