எம் மக்களை அழித்த புலிகளும், அரசும், அதைப் பற்றிய அனைத்து விடையங்களையும் வரலாற்றில் இருந்து அகற்றியுள்ளது. இந்த வரலாற்றில் இயங்கிய மற்றைய இயக்கங்களும் அதைத்தான் செய்தனர். உண்மையில் தங்களின் மக்கள்விரோத வரலாற்றுக் குறிப்புகளை அவர்கள் இல்லாதாக்கினர். இதன்பின் மக்களின் கண்ணீர்களும், அவர்களின் வாழ்வும் கேட்பாரின்றி புதைக்கப்பட்டது. அவர்கள் சொல்வது தான் வரலாறு என்ற எல்லைக்குள், சமூகம் மலடாக்கப்பட்டது. இதற்கு மாறானதை அவதூறு என்றனர். 

தமிழ் மண்ணில் ஆதிக்கம் பெற்ற புலிகளும் இறுதியாக இலங்கை அரசும் கடந்தகாலத்தில் எஞ்சிய ஆவணங்கள் அனைத்தையும் அழித்தனர். நாம் 9 மாதங்களுக்கு முன, இருக்கின்ற  ஆவணங்களை மீட்பதற்கான, ஒரு இணையத்தைத் தொடங்கினோம். எமது உழைப்பில் கிடைத்தது எவை என்பதை கட்டுரையின் இறுதியில் பார்க்கவும் அல்லது இதை அழுத்திப் பார்க்கவும். 


தோழர்களின் கடும் உழைப்பு மற்றும் தேடுதல் மூலம் புலத்தில் இருந்து பல ஆயிரம் ஆவணங்களை மீட்டிருக்கின்றோம். இந்த வகையில் 2500 மேற்பட்ட தனி ஆவணங்களை இணையத்தில் ஏற்றியுள்ளோம். இன்னும் 500 ஆவணங்கள் படிப்படியாக இணையத்தில் இணைக்கும் வேலைகள் தொடர்ந்து நடக்கின்றது. இதை விட 1000 மேற்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. 1000 ஒலி, ஒளி ஆவணங்களை மிகவிரைவில் நீங்கள் பார்க்க முடியும்.


இந்த ஆவணங்களைத் தேடுதலில் பல கசப்பான அனுபவங்கள் உண்டு. தங்களைப்பற்றிய ஆவணங்களை தேடி அழித்தது முதல் அது எமக்கு கிடைக்காத வண்ணம் சிலர் ஈடுபட்டனர். மறுதளத்தில் சிலர் தாமாகவே அதை தந்து உதவினர். சிலர் இந்த முயற்சியில் இணைந்து, அதை தாங்களாகவே அதை பிடிஎவ் என்ற உருவில் தருகின்றனர். இந்த முயற்சியின் போது, ஆவணத்தை தந்துவுதவுபர்களின் உழைப்பை மதிக்கவும், உரிமையை நிலைநாட்டவும் விரும்பியவர்களின் பெயரை, அந்தந்த ஆவணங்களில் இட்டோம். இப்படி இதைப் பன்முகத் தளத்தில் விரிவாக்கி வருகின்றோம். விரையில் கட்டுரைகளையும் இணைக்க உள்ளோம்.


இக்காலத்தில் மற்றவர்கள் சமூகத்தை தெரிந்து கொள்ள உதவும் வண்ணம், 10000 பக்கத்துக்கு அதிகமான மார்க்சிய நூல்களை கொண்டு வந்துள்ளோம். அத்துடன் பெரியார் அம்பேத்கர் நூல்கள் முதல் பலரின் நூல்கள் சார்ந்து சில ஆயிரம் பக்கங்களையும் கொண்டு வந்தோம்.   
இந்த வகையில் இந்த ஆவணப் பகுதி சுயமாக கற்கவும், வரலாற்றை தெரிந்து கொள்ளும் வண்ணமும் பல விடையங்களை மிகச் சுதந்திரமாக உங்கள் முன்வைக்கின்றது. நீங்கள் காணாத அறியாத பல விடையங்கள். உண்மைகள், போலிகள், மூடிமறைப்புகள், இட்டுகட்டல்கள் ….இப்படி எத்தனை எத்தனையோ விடையங்களை இது வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது. 
 
1. இதை விரிவாக அறிமுகப்படுத்துங்கள்
 
2. உங்கள் இணையத்தில் இதற்கு இணைப்புக் கொடுங்கள்.
 
3. இதைச் சரிபாருங்கள், திருத்துங்கள்.
 
4. விடுபட்டவைகளை தந்து உதவுங்கள்
 
5. விரிவாக உங்கள் உழைப்பு, ஓத்துழைப்பு, ஆலோசனைகள் என்று அனைத்தையும் நல்குங்கள்.   
 
5. இந்த ஆவணங்களை வைத்து, (ஐரோப்பாவில்) பணம் பெறும் எந்த மோசடிக்கும் எதிராகவும் இருங்கள். அவர்களை இனம் காணுங்கள். எமது உழைப்பு முதல் எமது நோக்கம் வரை அனைத்தும் சமூக ரீதியானவை. இதை மோசடி செய்து விற்பதை அனுமதிக்காதீர்கள்.
 
இந்த ஆவணப்பகுதி பற்றி எழுதி சில முந்தைய கட்டுரைகள் 
 

1.ஆவணங்கள் தந்துதவுமாறு வேண்டுகிறோம்

2. சிறுக சிறுக சேகரித்த விடையங்களை ஒன்று திரட்டி மக்கள் முன் கொண்டு வருவது…

3. "தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்" என்ற புதிய இணையம் அறிமுகம்

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
01.10.2010

 ஆவணங்களின் முழுப்பட்டியல்