07302021வெ
Last updateபு, 28 ஜூலை 2021 10am

கேபி துரோகியா யதார்த்தவாதியா

தாயகத்தின் வெளியாகிய இக்கட்டுரை, புலியெதிர்ப்பு அரசிலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் புலிகளின் சதிகளையும் அதன் மனித விரோத பம்மாத்து கூறுகளையும் இக்கட்டுரை தர்க்கங்கள் மற்றும் தகவல்கள் மூலம் அம்பலமாகின்றது. அந்த வகையில், படிக்க வேண்டிய கட்டுரை இது.

இதேயொத்த அரசின் சதிகளையும் பம்மாத்துகளையும், அதன் பாசிச பயங்கரவாதத்தையும் புலியெதிர்ப்பு கண்டு கொள்வதில்லை. அதை இவர்கள் இப்படி பேசுவது கிடையாது. இந்த உண்மையை கருத்தில் எடுத்துக் கொண்டு, நீண்ட இக்கட்டுரையை விமர்சன கண்ணோட்டத்துடன் படிக்கக் கோருகின்றோம்.

தமிழரங்கம்

காடு கடந்த தமிழீழத் தேசியத் தலைவர் முள்ளிவாய்க்காலில் மண் கவ்விய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னால். அடுத்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய நாடு கடந்த தமிழீழத்தின் மாஜித்தலைவர் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டதில் இருந்து. புலன் பெயர்ந்த கூட்டம் செய்வதறியாது குழம்பிப் போய் மேய்ப்பனை இழந்த மந்தைகள் போல திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தலைவர் உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறார் என்று கனவு கண்ட கும்பலுக்கு இலங்கைப் புலனாய்வுத் துறை முள்ளிவாய்க்கால் என்ன. மலேசியா வரைக்கும் புகுந்து விளையாடப் போகிறது என்ற உண்மை உச்சந்தலையில் கோடாலியால் கொத்தி நட்சத்திரங்கள் மின்னிய அதிர்ச்சி பிரபாகரன் என்ற தனிமனிதனின் தலையில் தமிழினத்தின் தலைவிதியை ஒப்படைத்து.

அந்தத் தனிமனிதனின் அழிவோடு துரோகிகளுக்கு மண்டையில் போட்டு தமிழீழத்தை அடிச்சுப் பறிக்கும் முட்டாள்தனமான கனவுக்கு முள்ளிவாய்க்காலில் முடிவு கட்டப்பட்டு விட்டது என்ற உண்மையை புளிச்சல் ஏவறைப் புலன் பெயர் தமிழர்களால் ஜீரணிக்க முடியவில்லை இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் நாய்படாப் படாடு பட்டு. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு வந்த அந்த மக்கள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டாலும். புலன் பெயர்ந்தவர்கள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல. ஒரு தொடக்கம் என்று. தொலைக்காட்சியை கோட்டை விட்ட கொல் கலாசார வானொலி போல. பயமுறுத்திக் கொண்டிருப்பதற்கு கேபி ஒரு காரணகர்த்தா என்பது தான் பெரிய உண்மை

யேசுநாதர் போல வஸ்திரம் களையப்பட்டு கோடாலியால் அறையுண்டு அவமானப்பட்டு பிரபாகரன் இறந்த உண்மையின் அதிர்ச்சியிலிருந்து விடுபட முடியாமல். அது டிக்ஷாலிவூட் கிராபிக்ஸ் என்ற ஜுனியர் விகடன். நக்கீரக் கிராபிக்ஸ் கயிறு திரிப்புகளை நம்பி. தலைவர் சிங்களவனுக்கு கயிறு கொடுத்து தப்பி விட்டார் என்ற ஒரு பொய்யை நம்ப ஆசைப்பட்டுக் கொண்டிருந்த கூட்டத்தை. தலைவர் உயிரோட இருக்கிறார் என்ற செய்தி மூலம் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தவர் கே-பி வெளிநாடுகளில் நடத்திய தெருக்கூத்துக்கள் எல்லாம் அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் தான் என்று புலிகளுக்கு கொடி தூக்க. தோளோடு தோள் கொடுத்த மனித உரிமைவாதிகள் தலைகீழாக நின்றாலும். இடையில் கேபி தயார் பண்ணிய கெலிகொப்டரும் கப்பலும் தலைவரை சாகச நடவடிக்கை மூலம் மீட்டுச் சென்றிருந்தால். தெருக்கூத்து வெற்றித் திருவிழாவாகியிருக்குமே தவிர. அதன் பின்னால் அப்பாவி மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவது பற்றி எந்த கவலையுமே எவருக்குமே இருந்திருக்காது. இதுதான் புலன் பெயர்ந்த கூட்டத்தின் இனப்பற்று? தலைமையைக் காப்பாற்ற நடத்தப்பட்ட பேரணிகளும் சாலைமறியல்களும் உண்ணும் நோன்புகளும் கடைசியில் கோமாளிக்கூத்து ஆகிய நிலையில் மீண்டும் அதே கூட்டத்தின் திட்டுதலுக்கு கே.பி ஆளானது இன்னொரு கதை

தலைவர் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு காட்டுக்குள் நுழைந்து விட்டார் என்ற தன் கதையை நம்பி வெற்றிவிழாக் கொண்டாடிய கூட்டத்தின் தெருக்கூத்தில் என் தலைவன் இறந்து விட்டான் என்று கண்ணீர் மழை பெய்து குழப்பிய கேபியை அதே கூட்டமே எந்த கூச்சமும் தயக்கமும் இன்றித் தூற்றத் தொடங்கியது. முதலில் வெளிவந்த செய்திகளின்படி தலைவர் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு வெளியேறியதாக சூசை கூறியதாலேயே தலைவர் உயிரோடு இருப்பதாகக் கூறிய கே.பி பின்னால் தன் பேச்சை மாற்றியதும் திடீர்த் துரோகியானார் இருந்தாலும் முன்பு தெரிவிக்காத தகவல் ஒன்றை கே.பி தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார் கடைசிவரை தொடர்பில் இருந்த சூசை. பாதுகாப்பு வளையங்களை உடைத்து வெளியேற முயன்ற தலைவர் வெளியேற முடியாமல். பொட்டம்மான் இல்லாமல் தனியே திரும்பி வந்ததாக தனக்குக் கூறியதாகக் கூறுகிறார் இந்த தகவல் முன்பு எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.

மந்தைகளுக்கு வாய்த்த மேய்ப்பர்கள்

ஒருவாறாக. தலைவர் முடிந்த கதை உண்மை என்ற விடயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த கூட்டத்திற்கு தலைமை வழங்க வேண்டிய தேவை எங்கோ எவருக்கோ இருந்தது மேய்ப்பர்கள் இல்லாவிட்டால் இந்த மந்தைகளால் தனியே புல்வெளிகளுக்கும். நீர்ச்சுனைகளுக்கும் போக முடியாதே? புலிகளின் அழிவின் பின்னால் ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்ப. புலிவால்கள் மட்டுமன்றி. புலிகளின் அடிவருடிய கூட்டமைப்பும். மாற்றுத் தரப்பினரும். பல புத்திஜீவிகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும். நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்துக் கொண்டு தான் இருந்தார்கள் எப்படி பிரபாகரன். புலன் பெயர்ந்த புலிக்கூட்டத்திற்கு பொன் முட்டையிடும் வாத்தோ. அதே போலத் தான் தமிழ் அரசியல் தலைமைக்கும் புலன் பெயர்ந்த கூட்டம் அது புலிகளாயிருந்தால் என்ன கூட்டமைப்பாய் இருந்தால் என்ன ஏன் கோட்டுப் போட்ட புலி வாலுப்பிள்ளைகளாயிருந்தால் என்ன இந்தக் கூட்டத்திற்கு அரசியல் தலைமை வழங்க முடியாது போனாலும். அதைக் குஷிப்படுத்திக் கொண்டாவது தலைமையைத் தக்க வைக்க வேண்டிய நிலையிலேயே இருந்தன இந்தக் கூட்டம் எதைக் கேட்க விரும்புகிறதோ. அதைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களைத் தான் இந்தக் கூட்டம் நம்பிக் கொண்டிருந்தது.

புலிகள் என்ற இயக்கம். ஈனநாட்டு ஆசிரியரின் மொழியில் சொல்வதாயின். வேரோடும் வேரடி மண்ணோடும் வழித்துத் துடைக்கப்பட்ட நிலையில். களத்தில் இராஹவத்தின் பிடியில் தப்பி காட்டுக்குள் இருந்த புலிகளி;ன் கீழ்மட்டத் தலைவர்களின் உதவியுடன். வெளிநாடுகளில் கோடிக்கணக்கான டொலர்கள் புரளும் மாபியா அமைப்பாகச் செயற்பட்ட புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை கைப்படுத்தி. ஈழக்கனவை தொடரச் செய்வதன் மூலம் புலன் பெயர்ந்த தமிழ்க்கூட்டத்திற்கு தலைமை வழங்கவும். அதன் மூலம் யாவாரத்தையும் உண்டியல் பிழைப்பையும் தங்கு தடையின்றிக் கொண்டு செல்லவும் முயன்றவர்கள் இரு தரப்புகளின் கீழ் அணிதிரண்டார்கள்.

சாமியறை வரைக்கும் சென்று காட்சி தந்து அருள் பாலித்த தேசியத் தலைவர் போலன்றி. தங்கள் முகங்களைப் பகிரங்கமாகக் காட்ட மறுக்கும் கேபியையும். நெடியவனையும் நம்பி இந்தக் கூட்டம் வழமை போல. மேய்ப்பன் பின்னால் சென்றது மக்களோடு உறவாடாமல். தன் உயிருக்குப் பயந்து பதுங்கி வாழ்ந்த மனிதனை நம்பிய கூட்டம். முகம் காட்ட மறுத்த இனம் தெரியாத நபர்கள் பின்னால் சென்றதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது இந்த காணாமலேயே விசுவசிக்கும் பாக்கியவான்களின் புண்ணியத்தில் தான் தமிழினம் இன்று இந்த அவல நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது யார் எவர் என்றில்லாமல். தேசியத் தலைவருக்கு வாழ்த்துப் பாடி. துரோகிகளுக்கு கலம்பகம் பாடும் எந்த அயோக்கியனையும் நம்ப இந்தக்கூட்டம் தயாராக இருந்ததால் தான். அரசியல் ஞானேயங்கள் எல்லாம் மேதாவிகளாக கோட்டுப் போட்டுப் கொண்டு உள்ளுக்க வரவிட்டு அடிக்கும் விளக்கங்களை இந்தக் கூட்டத்திற்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.

தலைவர் இறந்து விட்டார் என்ற உண்மையை ஒத்துக்கொண்டு. அவரை மாவீரர்களுக்கு எல்லாம் மாவீரனாக்கி அஞ்சலி செலுத்தி. அதிலிருந்து அடுத்த கட்ட ஆட்டத்தை ஆரம்பிக்க முயன்ற கேபிக்கு முட்டு;க்கட்டை போட்டது நெடியவன் கும்பல் தமிழ்ச்செல்வனின் அண்டல். மற்றவர்களின் அள்ளிவைப்பு காரணமாக பிரபாகரனால் கே.பி ஓரம் கட்டப்பட்ட பின்னால். வெளிநாட்டு வர்த்தக சாம்ராஜ்யத்தின் அதிபதியாக நியமிக்கப்பட்ட காஸ்ட்ரோவின் தலைமைக் கையாளான நெடியவன் தன்னை புலிகளின் வாரிசாக சுயபிரகடனம் செய்து கொண்டார். இதற்குள் முன்பின் கேட்டறியாத புலனாய்வுத் தளபதிகளும் தங்கள் பங்குக்கு அடையாளம் காட்டாமலேயே அறிக்கை விட்டார்கள் முன் பின் கேட்டறியாத அனாமதேயங்கள் இணையத்தில் அடையாளமோ விலாசமோ இல்லாமல் வெளியிட்ட இந்த அறிக்கைகளை நம்பி பதில் அறிக்கைகளும் அவை பற்றிய பரபரப்பூட்டும் அரசியல் ஆய்வுகளும் என புலிக்குப் பின்னான அரசியல் என்பது மர்மங்களும். திடுக்கிடும் திருப்பங்களும் என கொஞ்சக் காலம் திகிலூட்டி மகிழ்வித்தது.

புரட்சித் தலைவன் காஸ்ட்ரோ

இதற்குள் காஸ்ட்ரோ பற்றிய சில தகவல்களை இங்கே கருத்துக்கு எடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தில் உடல் செயலிழந்த காஸ்ட்ரோ சக்கர நாற்காலியுடனான மட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டங்களுடனேயே செயற்பட்டுக் கொண்டிருந்தவர் தலைவரும் தளபதிகளுமான நிகழ்வுகளில் போஸ் கொடுத்த முக்கிய தளபதிகளில் ஒருவராகவே அவர் அடிக்கடி காணப்பட்டார். வெளிநாட்டு நடவடிக்கைகள் கே.பியிடமிருந்து பறிக்கப்பட்ட பின்னர். கேபியின் விசுவாசிகள் உலகெங்கும் ஓரம் கட்டப்பட்டு. காஸ்ட்ரோவின் அடிவருடிகள் அந்தப்; பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்

இந்த காஸ்ட்ரோவிற்கு பெருமைழூ சேர்த்த சம்பவம் ஜெயதேவன் விவகாரம் இந்த விவகாரத்தில் ஜெயதேவனின் கோவிலை புலிகள் பறித்து சீவரத்தினத்திற்கு கொடுத்தது சம்பந்தமாக மேலிடத்தில் நீதி கேட்கச் சென்ற ஜெயதேவனும் விவேகானந்தனும் வன்னியில் சிறை வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு. ஜெயதேவனின் பிரிட்டிஷ் அரசியல் மேலிடத் தொடர்பு காரணமாக பாலசிங்கம் எச்சரிக்கப்பட்டு. ஜெயதேவன் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் குறித்த விலாவாரியான விபரங்களை தாயகம் தளத்தில் இன்றும் வாசித்து அறிந்து கொள்ளலாம் இதில் குறிப்பிட்ட சீவரத்தினத்தின் புதல்வியை காஸ்ட்ரோ திருமணம் செய்வதாக இருந்ததாகவும் அந்த உறவிலேயே காஸ்ட்ரோ கோயிலை அபகரித்து சீவரத்தினத்திற்கு கொடுத்ததாகத் தான் செய்திகள் வெளிவந்திருந்தன.

இங்கே தான் தெரிய வருகிறது தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும் வழிநடத்தலும்? உலகில் எந்த அரசியல் தலைவர்களும் தங்கள் அமைச்சர்களோ. தளபதிகளோ தங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளும் போது எவரையும் பாதுகாப்பது இல்லை தங்கள் பதவிக்கு குந்தகமோ. அபகீர்த்தியோ ஏற்படுத்தும் எந்த அடுத்த கட்டத் தலைவர்களையும் உடனடியாகவே. தற்காலிகமாகவேனும். பதவி நீக்குவது வழக்கம் கரிகாலன் குறி வைக்க மாட்டான். வைத்தால் தவறாது. தவறினால் மறுமுறை எய்யவும் அவன் தயங்க மாட்டான்ழூ என்ற அந்தக் காலத்து எம்ஜிஆர் பட வசனம் போல. தன்னுடைய முடிவு தவறு என்பதை உணர்ந்து அதற்கு பரிகாரம் செய்யாத தேசியத் தலைவர். பிரிட்டிஷ் அரசியல் மேலிடத் தலையீட்டால் தன் மூக்குடைந்த போதும். காஸ்ட்ரோவை பதவி நீக்கம் செய்தது கிடையாது

தேசியத் தலைவரைப் பொறுத்தவரைக்கும் தனக்கு கீழ் இருந்த எவரையும் தவறான நடவடிக்கைகளுக்காகவோ. தகுதியின்மைக்காகவோ. பொதுமக்களின் குற்றச்சாட்டுகளுக்காகவோ பதவி நீக்கம் செய்தது கிடையாது தன்னைச் சுற்றியிருக்கும் ஜால்ராக் கூட்டத்தின் அண்டல்களை நம்பி தன்னுடைய கதிரைக்கும் இருப்புக்கும் ஆபத்து வருவிக்கக் கூடும் என்று சந்தேகப்படுபவர்களைப் போட்டுத் தள்ளுவதில் எந்த தயக்கமும் காட்டாத அவர். வேறெந்தக் குற்றச்சாட்டுகளுக்காகவும் யாரையும் பதவி நீக்கியது கிடையாது. இது மாபியா அமைப்புகளில் சாதாரண நடைமுறை வேண்டியவர்களை எந்தக் கட்டத்திலும் பாதுகாப்பது. அமைப்பில் இருக்கும் மற்றவர்களை விசுவாசமாய் வைத்திருக்க உதவும் துரோகம் செய்பவர்களைப் போட்டுத் தள்ளுவது மற்றவர்கள் பயத்துடன் ஒழுங்காக நடந்து கொள்ள உதவும்.

தகுதி அறிந்து பதவி கொடுக்காமல். தன் மீது கண் மூடித்தனமான விசுவாசம் கொண்டிருந்தவர்களுக்கு பதவி கொடுத்த காரணத்தினால். தனது மெய்க்காப்பாளர் பதவித் தகுதியுடன் தமிழ்ச்செல்வனை அரசியல் பிரிவுக்கு பொறுப்பாக்கினார் தன்னைச் சூழ மதியூகிகளை வைத்திருக்காமல். மது உரைஞர்களையும். ஜால்ராக்கூட்டத்தையும் வைத்திருந்த காரணத்தினால் தான் முள்ளிவாய்க்காலில் முன்னூறு மீட்டர் சதுரப் பரப்பில் முடங்கிக் கிடந்த போதும். நான் ஈழம் எடுப்பன் எண்டு நீ கூட நம்பேலையோ என்று கே.பியை தலைவரால் கேட்க முடிந்தது.

இதனால் தான் தமிழ்ச்செல்வன். பொட்டம்மான் போன்றவர்கள் எல்லாம் தங்களுக்கு வேண்டத்தகாதவர்களுக்கு தகடு கொடுத்து வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள் இந்த அடிப்படையில் தான் தன் வாழ்நாள் பூராவும் இயக்கத்திற்காக இத்தனை ஆபத்துகளுக்கும் மத்தியில் ஆயுதம் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்த கே.பியை இயக்கத்திலிருந்து ஓய்வு பெறச் செய்தார் ஆனால். தனக்கு மூக்குடைவை ஏற்படுத்திய காஸ்ட்ரோ மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.

இறுதியில் யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் இந்த மசிர் நீப்பின் உசிர் வாழாக் கஷவரிப்புலி தன் உயிரைப் பாதுகாப்பதற்காக தனது அலுவலகத்திலிருந்த சகல ஆவணங்களையும் தட்டில் வைத்து இராஹவத்திடம் ஒப்படைத்து விட்டு தப்பிச் சென்றது தலைவரே தன் குடும்பத்தினரின் அல்பங்களை விட்டு ஓடும்போது. வெளிநாட்டு நிதி விவகாரங்கள் என்ன மசிரோ என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம் ஒரு கிரனேட்டைக் கூட வீசி அதை அழிக்காமல் தன் உயிரைக் காக்க தப்பியோடிய இந்த மாவீரன் புலன் பெயர்ந்த தமிழருக்கு செய்த துரோகத்தை விட வேறு யாரும் செய்ததில்லை வெளிநாடுகளில் புலிகளுக்கு நிதியுதவி வழங்கிய சகலர் பற்றிய தகவல்களும் புலனாய்வுத் துறையிடம் அகப்பட்டது காஸ்ட்ரோவின் கைங்கர்யமே.

பின்னால் இணையத்தில் வந்த உறுதிப்படுத்தப்படுத்த முடியாத தகவல்களின்படி. இறுதிக்கட்டத்தில் காஸ்ட்ரோவின் துரோகத்தை தலைவர் உணர்ந்து மரண தண்டனை விதித்ததாகவும். இன்னொரு கதைப்படி காஸ்ட்ரோ குப்பி கடிச்சதாகவும் பல்வேறு தகவல்கள் ஆனாலும் சக்கர நாற்காலியுடனான உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் இல்லாததால் காஸ்ட்ரோ தலைவருக்கு முன்பாகவே இறந்ததாகத் தான் கருத வேண்டியுள்ளது தன்னுடைய கெலிகொப்டர் அதிரடி நடவடிக்கைக்கான பணத்தை. கே.பிக்கு பெருமை கிடைக்கக் கூடாது என்பதற்காக. காஸ்ட்ரோவின் கட்டளைப்படி நெடியவன் கொடுக்காமல் இழுத்தடித்தார் என்று இன்று கே.பி சொல்லும் குற்றச்சாட்டு உண்மையாயின். இந்தக் குற்றச்சாட்டை இறுதிநேரத்தில் தலைவருக்கு கே.பி தெரியப்படுத்தியிருக்கக் கூடும். தங்களது நிலைக்கு யார் மீதாவது பழியைச் சுமத்த வேண்டும் என்று மற்ற மாண்புமிகு தளபதிகளும் ஒத்தூதி இருக்கக் கூடும் இதன் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

இதையும் விட. புலன் பெயர்ந்த மந்தைக் கூட்டம் பட்டிபட்டியாய் உலகத் தலைநகர்களில் எல்லாம் புலிக்கொடியோடும். தலைவரின் படத்தோடும் கலந்து கொண்ட போது. இதை மக்களுக்கான போராட்டம் ஆக்காமல். புலிகளுக்கு அங்கீகாரம் தேடும் முயற்சி என்பதால் சர்வதேச சமுகம் கண்டு கொள்ளாது என்று கியூறியஸ் திரும்பத் திரும்ப கத்தியதற்கான ஆதாரங்கள் இன்றும் தாயகத்தில் உண்டு கே.பி கூட தான் இதை மக்கள் போராட்டமாக்க வேண்டும் என்பதால் புலிக்கொடியை காட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியதையும் மீறி. காஸ்ட்ரோ நெடியவன் கூட்டமைப்பு புலிக்கொடி. பிரபாகரன் படம் சகிதம் போராட்டம் நடத்தியதால் வந்த தோல்வி பற்றி தற்போதைய பேட்டியில் கூறியிருக்கிறார் எல்லாம் முடிந்த பின்னாலும். ரொறன்ரோவின் முருகன் கோவிலில் புலிவாலுப் பிள்ளைகளின் காங்கிரஸ் நடத்திய கூட்டம் ஒன்றில் தங்களின் விருப்பத்திற்கு மாறாக. தாங்கள் சொல்லியும் கேட்காமல் புலிக்கொடி காட்டியதால் வந்த பாதிப்பு பற்றி பொதுமக்கள் பலர் குமுறியது பற்றி அங்கு கலந்து கொண்டவர்கள் கியூறியஸிடம் கூறியிருந்தனர் இந்த விடயங்களும் கே.பி மூலமாக தலைவரின் காதில் போடப்பட்டிருக்கலாம்.

கே.பிக்கும் காஸ்ட்ரோவுக்குமான பனிப்போர் காரணமாக. இருவருக்கும் இடையில் தொடர்பாளராக நடேசன் இருக்க வேண்டியிருந்த நிர்ப்பந்தம் பற்றியும். காஸ்ட்ரோ மீது குற்றம் சாட்டி முறையிட முடியாத அளவுக்கு நடேசனுக்கும் காஸ்ட்ரோவுக்கும் இருந்த நெருக்கம் பற்றியும் தற்போதைய பேட்டியில் கே.பி கூறியிருக்கிறார் இந்தப் பனிப்போரினால் தன் உயிர் போகப் போவதை உணர்ந்து கொண்ட தேசியத் தலைவர் போகும் போது போற வழிக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று கடைசியாக காஸ்ட்ரோவையும் போட்டுத் தள்ளிப் போய்ச் சேர்ந்தார் தான் இதுவரை காலமும் பாதுகாத்து வந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவதில் தலைவருக்கு எந்த தயக்கமும் கிடையாது ஏனென்றால் தலைவர் தவறே இழைக்காத மகாத்மா அன்றோ?

இப்படியாகத் தானே துரோகி பட்டம் பெற்று மரண தண்டனை பெற்றதாகக் கூறப்படும் காஸ்ட்ரோவின் கையாளான நெடியவன் இறுதிக்கட்டத்தில் காஸ்ட்ரோவுடனான தொடர்புகள் அறுந்து அல்லல்பட்டு. அன்ரி அடேலுடன் தொடர்பு கொண்டு காஸ்ட்ரோ பற்றிய தகவல்களைக் கேட்டதாகவும் இன்னொரு செய்தி

இப்படியாக காஸ்ட்ரோ நெடியவன் கூட்டமைப்பு தலைவருக்கும் போராட்டத்திற்கும். புலன் பெயர்ந்த கூட்டத்திற்கும் செய்த துரோகம் பற்றி இந்தக் கூட்டம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை

களம் காணா வேங்கை நெடியவன்

இதில் நெடியவன் ஏதோ களம் பல கண்ட வேங்கையும் அல்ல கிளிநொச்சியிலிருந்து. புலிகளின் பெருமையைக் கேட்டறிந்து வந்து சேர்ந்த ருறிஸ்டுகளுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததைத் தவிர வேறெந்த களத்தையும் இந்த மாவீரன் கண்டதாக சரித்திரம் இல்லை. இப்படியாகத் தானே புலிகளி;ன் மேன்மையைக் கண்டறிய வந்த நோர்வே தமிழ் இளையோர் ஒருவருக்கு வழிகாட்டப் போய் கண்டதும் காதல் கொண்டு கடிமணம் புரிந்து நோர்வே வந்ததாகத் தான் தகவல் முன்பு வெளிவந்திருக்க முடியாத இந்த தகவல்கள் எல்லாம் எங்களுக்கு கிடைத்ததற்கு காரணம் உள்வீட்டுக் குத்துவெட்டுக்களால் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டியபோது உள்வீட்டு விவகாரங்கள் எல்லாம் சந்திக்கு வந்ததமையே

காஸ்ட்ரோவின் துரோகம். நெடியவனின் பெருமை பற்றி எங்களுக்குத் தெரிந்த இந்த தகவல்களும் குற்றச்சாட்டுக்களும் புலன் பெயர்ந்த கூட்டத்திற்கு தெரியாது காரணம் எந்தப் பக்கத்தில் இருந்து அடி விழும் என்று தெரியாமல் மதில் மேல் பூனைகளாக உட்கார்ந்திருக்கும் ஊடகங்களும் ஆய்வாளர்களும் தான் அதையும் மீறி உண்மையைத் தேட வேண்டும் என்ற ஆர்வம் சிறிதேனும் இல்லாத இந்த புலன் பெயர்ந்த கூட்டம் மாற்றுக் கருத்துக்களுக்கான தளங்களில் இந்தக் கருத்துக்கள் வந்தாலும் அதை உவங்கள் பொய் சொல்றாங்கள் என்று புறந் தள்ளி விடுவது இன்னொரு காரணம் இதனால். இதுவரை காலமும் புலிகள் நடந்து கொண்ட அளவுகோல்களின்படி இவர்களும் துரோகிகளே என்ற விடயம் இந்தக் கூட்டத்திற்கு இன்று வரை தெரியாமல் போயிருக்கிறது

இந்த லட்சணத்தில் தான் நெடியவன் வாரிசுரிமைக்கு போட்டி போட்டார். காஸ்ட்ரோ மூலமாக நிர்வகித்த சொத்துக்கள் நெடியவன் கைகளில் இருந்ததாலும். அதற்கு தமிழ்நெட் கூட்டம் மதியுரைக்க முன்வந்ததாலும் ஊடகங்கள் மூலமாக நெடியவன் தன் கையை ஓங்கச் செய்வதில் சிரமங்கள் இருக்கவில்லை வெளிநாடுகளில் புலிகளின் பணம் சேர்ப்பு நிர்வாக இயந்திரத்தில் தமிழன் அடிப்படையில் பணம் சேர்த்துக் கொண்டிருந்த ஒட்டுண்ணிகளுக்கும். மாதச் சம்பளத்தில் பிரசார வேலைகளில் ஈடுபட்டிருந்த பரப்புரைஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் புலிகளின் மறைவுடன் வருமானத்தில் துண்டு விழும் துன்பம் நேர்கையில். காசெடுத்து நீட்டி. ஆடம்பர மாளிகைகளுக்கும் கார்களுக்கும் பணம் செலுத்த நெடியவன் தயாராகிய போது. இலையான்கள் மொய்க்க ஆரம்பித்ததில் ஆச்சரியம் ஏது ஆடம்பரமும் சொகுசுமான வாழ்வுக்கான பிழைப்பாகவே போராட்டத்தை வெளிநாட்டில் நடத்திக் கொண்டிருந்த இந்தக்கூட்டம் கேபியின் பச்சைத்தண்ணியில் பலகாரம் சுடும் முயற்சியில் பங்கு கொள்ளாமல். நோர்வேத்தலைவர். நோர்வே மதியுரைஞர் என்று மேதகு புரட்சித்தலைவியின் மாண்பு மிகு அமைச்சர்கள் போல நெடியவனின் பாதாரவிந்தங்களை பாடித் தொழுததில் என்ன சந்தேகம் இருக்கிறது.

கேபிக்கு முடி சூட்டல்

இந்த தகிடுத்தத்தங்களின் பின்னணியில் தான் கேபியின் வாரிசுரிமை அறிவிப்பு வெளிவந்தது எம்ஜி.ஆர் பாக்கியராஜை தன் வாரிசு என்று அறிவித்தது போல. தலைவரின் வாரிசாக கே.பி அறிவிக்கப்பட்டார். இதற்கு ஆதாரமாக கே.பி தான் இறுதியாக பிரபாகரனுடன் பேசிய தொலைபேசி ஒலிப்பதிவை பலருக்கும் போட்டு தன் வாரிசுரிமையை நிருபித்ததாக தகவல் (இந்த உரையாடலைக் கேட்க முடியாது போனாலும். கேட்டவர்கள் மூலமாக சில தகவல்களைப் பெற முடிந்தது. இந்த ஒலிப்பதிவு விவகாரம் பற்றி கே.பி வழங்கிய பேட்டியில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை)

இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கே.பியை தலைக்கு மேல் தண்ணீர் போன நிலையில். மீண்டும் அழைத்து. தங்களைக் காவாந்து பண்ண அழைத்த போது. கே.பியும் அதற்கு உடன்பட்டார் ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு. கையறுந்த நிலையில் தவறை உணர்ந்து கே.பியை அழைத்தாலும். அதை விட முக்கியமான நோக்கம் சர்வதேச ஆதரவைப் பெற்று யுத்தத்தை நிறுத்த வைப்பது தான் அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு இண்டர்போலினால் தேடப்படும் ஆயுதக் கொள்வனவாளர் பதவி தடையாய் இருக்கும் என்பதால். கே.பியின் வேண்டுகோளுக்கு ஏற்ப. உத்தியோகபூர்வமாகவே புலிகளின் சர்வதேச செயலாளர் பதவி கே.பிக்கு வழங்கப்பட்டது

இந்த பதவியும். இறுதிக்கட்டத்தில் நடேசன் போன்றோர் கே.பி தான் இனிமேல் என்று விடுத்த அறிவுறுத்தல்களும் கே.பியை ஒருவகையில் முடிக்குரிய இளவரசனாகவே ஆக்கியிருந்தன

புலிகளின் வெளிநாட்டு சாம்ராஜ்யத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான கே.பியின் முயற்சிகளுக்கு நெடியவன் கும்பல் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தது இறுதியில் இரு தரப்பினரும் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து கூட்டுத்தலைமையும் அறிவிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக தன்னை தக்க வைத்துக் கொள்ளவும் அரசியல் அங்கீகாரத்தைப் பெறவும் கேபியின் தலைமையில் நாடு கடந்த தமிழீழ முயற்சி ஆரம்பிக்கப்பட்டது வெள்ளைத்தோல் புலிகளின் மூதுரையுடன் முன்பொரு போதும் கண்டு கேட்டறியாத இந்தத் திருக்கூத்துக்கு வியாக்கியானங்கள் வழங்கப்பட்டு. புலன் பெயர்ந்த கூட்டத்தின் தலையைச் சுத்தி காதில் பூ வைக்கும் முயற்சி ஆரம்பமானது

இவ்வாறான ஒரு நாடு கடந்த முயற்சி மூலம் இலங்கை அரசை யுத்தக் குற்றச்சாட்டுகளுக்குள் மாட்டி விடவும். ஈழவிடுதலைக்கு அங்கீகாரம் தேடவும். இந்த அழுத்தத்தின் மூலம் இலங்கை அரசு பிடிபட்ட புலிகளை விடுவிக்க வைக்கவும் என பல்n;வறு காரணங்கள் கூறப்பட்டாலும். புலிகள் பயங்கரவாத அமைப்பு என்று சர்வதேச ரீதியில் அறிவிக்கப்பட்ட நிலையில். புலிகளோடு தங்களை அடையாளம் காட்டுகின்ற எந்த அமைப்புடனும் சர்வதேச சமூகம் பேச்சுவார்த்தை நடத்தாது என்ற. எந்த அரசியல் கற்றுக்குட்டிக்கும் தெரிந்த. உண்மை புலன் பெயர்ந்த கூட்டத்திற்கு உறைக்காததால் அது மீண்டும் தமிழீழக் கனவுகளுடன் வாக்களிப்புக் கூத்துக்களுக்காய் இழுபட்டது

ஆயுதக் கொள்வனவாளராய் இருந்து அரசியல்வாதியாக வேஷம் மாறி. இதுவரையும் தலைமறைவாய் இருந்த கே.பியும் தன்னை வெளியில் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் கனடிய வானொலிப் பேட்டிகள். சனல் நான்கு தொலைக்காட்சிப் பேட்டிகள் என பகிரங்கப்படுத்த ஆரம்பிக்க கே.பிக்கு வலை வீசிக் கொண்டிருந்தவர்களுக்கு கே.பியின் மறைவிடத்தை அடையாளம் கண்டு ஈரச்சாக்கு கொண்டு அமுக்குவதில் பெரும் சிரமம் இருக்கவில்லை இந்தக் கைது விவகாரத்தில் நெடியன் குழுவின் காட்டிக் கொடுப்பு காரணமாய் இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு கே.பி ஆதரவாளர்கள் மத்தியில் பலமாகவே எழுந்தது கே.பியின் கைது மூலம் மிகவும் லாபம் அடையப் போவது நெடியவன் என்பதாலும். தன் தனிக்கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களை அமைப்பின் சொத்துக்களாக்கும் கே.பியின் முயற்சியும். கைது நடைபெற்ற உடனேயே கே.பி பற்றிய அவதூறுப் பிரசாரம் ஆரம்பித்ததாலும் கே.பியைக் காட்டிக் கொடுத்ததில் நெடியவன் குழுவினருக்கு பங்குண்டு என்ற குற்றச்சாட்டில் நியாயம் இருக்கவே செய்கிறது வழமை போல எங்கள் ஆய்வாளர்களும் கே.பி தானாகவே சிங்கள புலனாய்விடம் சரணடைந்தார் என்பது முதல் ஏற்கனவே சிங்களப் புலனாய்வின் கையாள் கே.பி என்பது வரை ஆய்ந்து தள்ளினார்கள்

இங்கே புதிய நாடகம் ஆரம்பமாகிறது அதற்கு முன்பாக கேபி இயக்கத்தில் ஆற்றிய பங்கை கொஞ்சம் பின்நோக்கலாம்.

வரலாற்றில் பின்நோக்கி

அகிம்சைப் போராட்டம் மூலம் ஈழம் எடுக்கலாம் என்று ஆசை காட்டிய அமிர்தலிங்கமே தன்னை பிரபாகரனுடன் அறிமுகம் செய்து வைத்ததாக கே.பி சொல்லும்போது எங்கள் போராட்டத்தின் அவலத்தின் மூலகாரணங்களை அடையாளம் காண முடிகிறது துரையப்பாவிற்கு துரோகி பட்டம் டே;டிய அமிர் வளர்த்த கடா மார்பில் பாய்ந்து துரோகியான கதை எங்கள் அவலமான வரலாற்றில் ஒரு ஏடு பின்னாளில் பிரபாகரனின் திருமணத்தின் போது தோழனாகும் அளவுக்கு தங்கள் நெருக்கம் இருந்தாக கேபி சொன்னாலும். அந்த திருமணத்திற்கு பிரபாகரனின் தந்தை இந்தியாவிலிருந்து கொண்டே வர மறுத்ததில் இருந்து. ஒரு கும்பல் சூரியதேவன் என்று கும்பிடும் தன் தனயனின் பெருமை பற்றி தந்தை கொண்டிருந்த மதிப்பை அளவிட முடியும்.

நாட்டுக்கு வெளியே இருந்து செயற்பட்டதால். மாத்தயா. கிட்டு போன்றோர் இயக்கத்தில் ஏற்படுத்திய சர்ச்சைகளில் கே.பியின் பெயர் அடிபடவில்லை பிரபாகரனுக்கான அசைக்க முடியாத விசுவாசமும் இருந்த நேரடித் தொடர்பும் கே.பி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக செயற்பட காரணமாய் இருந்தன.

ஆயுதக் கொள்வனவு என்பது ஏதோ சுன்னாகம் சந்தையில் சுருட்டு வாங்குவது போன்ற ஒன்றல்ல ஏமாற்றுக்காரர்களும் கொலைகாரர்களும் நிறைந்த மாபியாக் கும்பல்களும். பரஸ்பரம் தோள் கொடுக்கும் போராட்ட அமைப்புகளும் சர்வதேச விதிமுறைகளுக்கு அப்பால் செயற்படும் வில்லத்தனமான அரசுகளும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் செயற்பட்டு போராட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி தலையிடி கொடுக்க முனையும் அரசுகளும் வல்லரசுகளும் மட்டுமே இந்த ஆயுத வியாபாரங்களிலும் வினியோகங்களிலும் ஈடுபடும் இவற்றை இனம் கண்டு அவர்களுடன் உறவாடுவதும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதும் கயிறு மேல் நடக்கும் விளையாட்டுத் தான் கொடுக்கல் வாங்கல்களில் சறுகினாலோ. அவர்கள் எதிர்பார்க்கும் பிரதியுபகாரங்களை நிறைவேற்றுவதில் தவறினாலோ சுவடே தெரியாமல் கொன்று எரித்து விடுவதற்கு தயங்காத கூட்டங்கள் இவை சட்ட விரோதமான இந்தச் செயற்பாடுகளுக்கு எழுத்துக் கணக்குகள் கூட இல்லாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் இந்த தொழில் தர்மம் எந்த நேரமும் தலையைப் போக்கலாம் சுயநலம் என்ற ஒன்றைத் தவிர. நேர்மை என்பதற்கு இடமேயில்லாத செயற்பாடு இது பணத்தை வாங்கிக் கொண்டு வினியோகிக்காமல் தலை மறைவாகும் கூட்டம் இதில் நிறையவே உண்டு பணத்திற்குப் பதிலாக போதைப் பொருட்கள் பண்டமாற்றாக நடைபெறும் தொழில்களில் இது ஒன்று.

ஒரு தடவை கே.பி இவ்வாறு ஏமாற்றப்பட்டு. சிரமங்களுக்கு மத்தியில் கொண்டு வந்து சேர்ந்த பெட்டிகளுக்குள் வெறும் டம்மிகள் இருந்ததையும் திறந்த பெட்டிகளுக்குள் எதுவுமில்லாததைக் கண்ட பிரபாகரன் கே.பியைப் பார்த்த பார்வை பற்றியும் அப்போது அருகில் நின்று பார்த்த ஒருவர் கியூறியஸ்;க்கு ஒரு தடவை வர்ணித்திருந்தார்.

இப்படியான ஒரு தொழிலுக்குள் முன் அனுபவம் எதுவும் இன்றி. ராஜீவ் கொலை தொடர்பாக தேடும் இந்தியா முதல் இன்ரர்போல் வரைக்கும் கண்ணில் மண்ணைத் தூவி மாயாவி விளையாட்டுக் காட்டி. புலிகளை ஒரு ஆயுதங்களுக்குப் பஞ்சமில்லாத அமைப்பாக மாற்ற கப்பல் கப்பலாக ஆயுதங்களைக் கொண்டு வந்திறக்கிய பெருமை கே.பியையே சாரும் அதற்கான ஆளுமையும் வசீகரமும் கொண்ட ஒரு திறமைசாலி என்பதை மறுக்க முடியாது.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு கனடாவிற்கு ரஜனிகாந்த் ஒரு விழாவிற்கு வந்து திரும்பிய போது. அவரை விமானநிலையத்தில் சந்திக்கச் சென்ற மாற்றுஅமைப்பு உறுப்பினரான நண்பர் ஒருவர். விமானநிலையத்தில் கேபியைக் கண்ட விடயம் பற்றி கியூறியஸ் இடம் தெரிவித்திருந்தார் அதே காலப்பகுதியில் கியூறியஸ் உடன் தொடர்புகள் கொண்டிருந்த மிகவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கே.பி ரொறன்ரோவில் நின்ற போது அவரை மடக்க பொலிஸ் பாய்ந்ததையும். கே.பி இடம் மாறியதால் தப்பித்ததையும் தெரிவித்திருந்தார்

இப்படி உலகம் சுற்றி. புலிகளின் ஆயுதக் கொள்வனவுடன் சர்வதேச கப்பல் போக்குவரத்து வர்த்தகம் என புலிகளுக்கு ஒரு பலம் வாய்ந்த சர்வதேசக் கட்டமைப்பை தனியொரு மனிதனாக அமைத்தது கே.பி தான் புலிகள் கடைசி வரைக்கும் இலங்கை அரசுக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் ஒரு இராணுவரீதியான அச்சுறுத்தலாக விளங்குவதற்கு காரணம் கேபியே கேபி தவிர்ந்த இன்னொருவர் அதைச் சாதித்திருக்க முடியும் என்பது சாத்தியமாகியிருக்காது என்பது கேபிக்கு பின்னால் புலிகள் ஆயுதக் கடத்தலில் கோட்டை விட்டதிலிருந்து தெரிய வரும்

இன்று கே.பியை துரோகி என்று சொல்லும் பலரும் புலிகளின் இராஹவ வளர்ச்சிக்கு மூலகர்த்தா கேபி தான் என்பதை மறந்து விடுகிறார்கள் வெறும் கண்ணிவெடிகள் முதல் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வரைக்கும் புலிகளிடம் இருந்தது என்றால் அதற்கு காரணம் கே.பி

ஆனால் புலி ஆதரவாளர்களுக்கு நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை அவர்கள் வாயில் நிரந்தரமாக இருப்பது துரோகி என்ற முத்திரை மட்டும் தான் எந்த நேரம் அவர்கள் எவரைத் துரோகியாக்குவார்கள் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம் தாங்கள் மாவீரன் என்ற அதே வாயால் அதே மாவீரனை துரோகியாக்குவதிலும் அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை இப்படியாக மந்தைகள் போல பின்னால் போகும் அளவுக்கு முட்டாள்களாயிருந்தோமே என்ற குற்ற உணர்வு கூடக் கிடையாது

கேபி புலிகளின் வெளிநாட்டு சாம்ராஜ்யத்தை ஓகோ என்று விஸ்தரித்தாலும். புலிகளுக்கே உரித்தான கழுத்தறுப்புக் குணம் மாறாதே? பேச்சுவார்த்தை என்ற பெயரில் உலகைச் சுற்றி. உலகம் வன்னிக்கிணற்றை விடப் பெரியது என்று கண்டு கொண்ட கருணா போலன்றி. வன்னிதான் உலகம் என்று கடைசி வரைக்கும் நம்பியிருந்த தமிழ்ச்செல்வன் கேபி பற்றி தலைவருக்கு காதில் ஓதியதாகத் தான் தகவல் இப்படியாக கேட்பார் சொல் கேட்கும் மதிநுட்பம் வாய்ந்த தலைவரும் கேபியை இயக்கத்திலிருந்து ஓய்வு பெற வைத்தார் இது புலி அகராதிப்படி இயக்கத்திலிருந்து நீக்கப்படுவதல் ஆகும் இதன் பின்னர் கே.பியின் சாம்ராஜ்யம் காஸ்ட்ரோ கைக்கு மாறியது.

தான் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டதும் பேசாமல் ஒதுங்கி தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தியதாக கே.பி தெரிவிக்கிறார் இருந்தாலும் இத்தனை ஆபத்துக்களுக்கும் மத்தியில் தன் உயிரைப் பணயம் வைத்து விசுவாசமாகச் செயற்பட்ட ஒருவர் தன்னை அவமானப்படுத்திய நன்றி கெட்ட தனத்தைக் கண்டு அமைதியாக இருந்திருப்பார் என்பது சந்தேகத்திற்கு உரியதே உண்மையில் பரிநிர்வாணம் அடைந்த ஒருவரால் தான் பகைவனுக்கருள்வாய் நெஞ்சே என்று அமைதியாக இருந்திருக்க முடியும்

கே.பி கைது விவகாரம்

இப்படியான ழே;நிலையில் தான் கே.பி கைது செய்யப்பட்டதாக தாய்லாந்தின் பாங்கொக் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதிலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாங்கொக்கில் விஜயம் மேற்கொண்டு நின்றிருந்த சமயத்தில் வெளிவந்த இந்த செய்தி பற்றி இந்து பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கே.பி எரித்திரிய கடவுச்சீட்டுடன் வந்த போது விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என தாய்லாந்து அதிகாரி கூறினார் என்று தெரிவித்திருந்தது அத்துடன் கேபியை ராஜீவ் கொலை சம்பந்தமாக விசாரிக்கத் தேடித் திரிந்த இந்திய அரசு இந்தச் செய்தி குறித்து அக்கறை கொண்டிருந்த விடயமும் வெளியானது இலங்கை அரசும் கேபியை தாய்லாந்திலிருந்து நாடு கடத்த முயற்சித்ததாக தகவல் வெளியானது

ஆனால் திடீரென்று அந்தச் செய்தி தவறானது என்று இன்னொரு செய்தி வெளியானது ஆனால் செய்தியை வெளியிட்ட பாங்கொக் போஸ்ட் தனது செய்தி தவறு என்று செய்தி வெளியிடாமல். மற்ற மூலங்கள் மூலமாகவே இந்த தகவல் வெளியானது எரித்திரியக் கடவுச்சீட்டு. அந்த விபரத்தை தெரிவித்த அதிகாரி முதலான விவரங்கள் வெளிவரும் அளவுக்குப் போன ஒரு விடயம் தவறானது என்று பின்னால் தெரிவிக்கப்பட்டது சந்தேகத்திற்கு உரிய விடயமே

ஆனால் பின்னர் டிபிஎஸ்.ஜெயராஜ் கேபி மலேசியாவில் வைத்து கடத்தப்பட்ட நிகழ்வு பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில். கேபி முன்னர் கைது செய்யப்பட்ட போது முக்கிய உளவு நிறுவனம் ஒன்று தலையிட்டு அவரை விடுவித்ததாகவும். இதனால் அந்த உளவு நிறுவனத்தின் பாதுகாப்பில் கே.பி இருந்ததாக நம்பி கவனக்குறைவாக இருந்ததாக அவரது சகபாடிகள் தெரிவித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

'According to circles close to KP the reason for his confidence was due to the “protection” he enjoyed from a very powerful “Agency”. It was this “agency” that had rescued KP when he was arrested in 2007. It was this “agency” that had extended its protective umbrella over him. But what had happened now? Had KP outlived his usefulness to the “agency”? or had “operation KP” outsmarted even this powerful entity? The answers may be forthcoming in the days to come.'

சமீபத்திய பேட்டியிலும் தன்னைக் கைது செய்தது பற்றி டிபிஎஸ் எழுதிய கட்டுரை பற்றி குறிப்பிட்ட கே.பி அதில் சில தவறுகள் இருந்தது என்று கூறினாலும். மிகவும் பாரதூரமானதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுமான உளவு நிறுவனத் தலையீட்டில் விடுவிக்கப்பட்டதான தகவல் தவறு என்று கேபியோ. டிபிஎஸ்ஸோ இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை

இதில் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால். தங்கள் மீது விமர்சனம் வைக்கும் எவரையும் வெளிநாட்டு உளவுநிறுவனங்களின் கைக்கூலிகள் என்று துரோகி பட்டம் சூட்ட தயங்காத புலி ஆதரவாளர்கள். கேபி சர்வதேச உளவு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்பட்டதை பெருமையாகக் கருதிக் கொண்டது தான் ஏகாதிபத்திய எதிர்ப்பையே தங்களின் அரசியல் மூச்சாகக் கொண்ட இடதுசாரிகளும் புலிகளுடன் ஒட்டிக்கொண்ட போது. இது பற்றி வாயே திறக்கவில்லை இந்த உளவு நிறுவனம் எது என்று சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.

இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் சில ஊகங்களுக்கு நாங்கள் வர முடியும். செப்டம்பர் 11 தாக்குதலின் பின் பயங்கரவாதம் பற்றிய அமெரிக்கக் கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கமான புலிகள் பற்றிய சர்வதேசக் கருத்தும் கதிர்காமர் கொலையின் பின்னால் முற்றாகவே மாறி விட்டது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மூக்கை நுழைக்க புலிகளைக் கருவியாகப் பயன்படுத்த அமெரிக்கா முனைந்தாலும். பிந்திய சூழலில் புலிகள் கட்டுக்கடங்காத அடங்காப்பிடாரியாக மாறிய நிலையில். இந்தியா சோவியத் அணியின் சார்பு நாடு என்பதை விட அமெரிக்க முதலீட்டுக்கான சந்தை என்ற நிலை தோன்ற. புலிகள் என்ற அமைப்பு இந்தப் பிராந்தியத்தில் இருப்பதற்கான தேவை இல்லாமல் போய் விட்டது. எனவே புலிகளை பூண்டோடு அழிப்பதற்கான முயற்சியில் கே.பியைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா முயன்றிருக்கக் கூடும். கே.பி கைது என்ற செய்தியின் பின்னால் நீண்ட காலம் கே.பி பற்றிய தகவல்கள் வெளியில் வரவே இல்லை.

காகம் உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக. கே.பி கைது செய்யப்பட்ட செய்தி வெளிவந்ததன் பின்னால் குறுகிய காலத்திற்குள் ஒவ்வொன்றாக புலிகளின் ஆயுதக்கப்பல்கள் கடலில் வைத்து அழிக்கப்பட்டன. கேபி இயக்கத்திலிருந்து தொடர்புகள் அற்ற டிசம்பர் 2002 இலிருந்து 2006 வரையுமான காலப் பகுதியில் சமாதான முயற்சிகளுக்குள்ளும் புலிகள் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டிருந்தது பரகசியம். அப்போது ஒப்பந்தத்தை மீறி புலிகள் ஆயுதம் கொண்டு வரும் விபரங்கள் அரசுக்கு தெரிந்திருந்தால். அதை அரசு அழிக்கத் தயங்கியிருக்காது. ஆனால் இந்த இடைவெளியில் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் பெரிதாக மூழ்கடிக்கப்படவில்லை. 

கே.பி கைது செய்யப்பட்ட ஆண்டான 2007க்குப் பின்னர். ஒரு பனடோல் கூட வரவில்லை என்று சூசை கூறியதாக தற்போது கே.பி குறிப்பிடுகிறார. இலங்கைக் கடற்பிராந்தியத்திற்குள் நுழையும் வரை காத்திருக்காமல் நடுவழியில் வைத்தே இலங்கைக் கடற்படை புலிகளின் கப்பல்களைத் தகர்க்கும் அளவுக்கு புலனாய்வுத் தகவல்கள் இந்தியா செய்மதி உளவு மூலம் பெற்ற தரவுகளின் அடிப்படையில் கிடைத்தன என்றே ஆய்வாளர்கள் பலரும் ஆய்ந்தார்கள். இதில் இந்தியாவின் உதவி கணிசமானது எனினும் உளவுத்தகவல்கள் என்பன ஏதோ வானத்திலிருந்து பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிக்கும் விடயங்கள் இல்லை. புலிகள் அகதிகளை ஏற்றி வரும் கப்பல் கனடா நோக்கி வருகிறது என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே செய்தி வெளிவந்தது போல. சம்பந்தப்பட்டவர்கள் மூலமாகத் தான் தகவல்கள் கசிகின்றன.

உளவு நிறுவனத்தின் பாதுகாப்பு பெற்ற கேபி தன்னை புறந்தள்ளிய கோபத்தினாலோ. அல்லது தன்னை பாதுகாத்த நிறுவனத்தின் அழுத்தம் காரணமாயோ. வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்தக் கப்பல்களின் நடமாட்டத்தை இலங்கைக் கடற்படை அறிந்திருக்கவும் சாத்தியங்கள் உண்டு தான் இயக்கத்திலிருந்து விலகிய பின்னர் இது பற்றிய தொடர்புகள் விடுபட்டுப் போனதாகவும். இயக்க அமைப்பின் பிரகாரம் தெரிய வேண்டியவர்களுக்கு மட்டுமே விபரங்கள் வெளியிடப்படுவதால் தனக்கு இந்த ஆயுதக் கப்பல் வினியோகம் பற்றி தெரிந்திருக்க முடியாது என்று கேபி வாதிடுகிறார் அத்துடன் இது குறித்து தான் விசாரிக்க நேர்ந்தால் பின்னர் ஏதாவது நடந்தால் தன்னில் சந்தேகம் ஏற்படும் என்பதால் தானும் அக்கறைப்படவில்லை என்று கேபி மேலும் கூறுகிறார்.

ஆனால். உளவுநிறுவனங்களைப் பொறுத்தவரை அந்த தகவல்களை கேபியிடம் தான் கேட்டுப் பெற வேண்டும் என்பதில்லை. தன்னுடைய செயற்பாடுகளை யாரிடம் ஒப்படைத்தார். தற்போது அந்தச் செயற்பாடுகளில் யார் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல்களை மட்டும் தெரிவித்தாலே போதும் தொலைபேசி. செய்மதி தொடர்புகளை வைத்து இந்த நபர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று ஊசிமுனையால் குத்தி எடுக்கும் அளவுக்கான தொழில்நுட்பங்கள் அந்த அமைப்புகளிடம் உண்டு

கேபியின் விசுவாசிகளும் தங்கள் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில். என்ன நடந்தாலும் தலைவருக்கு விசுவாசமாக இருப்போம் என்று விரதம் பிடித்தும் இருக்கப் போவதில்லை அவர்களும் கறுவிக் கொண்டு பழி வாங்குவதற்கான சந்தர்ப்பங்களுக்காக காத்திருந்திருக்கக் கூடும் அதிலும் தங்களின் பதவிகளை அபகரித்தவர்களுக்கு ஆயுதங்களை வன்னிக்கு கொண்டு சென்ற பெருமை சேரக்கூடாது என்பதில் இவர்களுக்கு அக்கறை இருந்திருக்கும் அவர்களின் உதவியை கேபி பெறுவதில் எந்தச் சிரமமும் இருந்திருக்க முடியாது இந்தக் கூட்டத்தினரைத் தான். டிபிஎஸ். கேபிக்கு நெருங்கிய வட்டாரங்கள் என்று வர்ணிக்கிறார். இவர்களுக்கு இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கேபியுடன் தொடர்புகள் இருந்திருக்கின்றன

டிபிஎஸ் எழுதிய செய்தியை கேபி உறுதியாக மறுக்கும் வரைக்கும் எங்கள் ஊகங்கள் நியாயமானவையே.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இப்படி புலிகளுக்கான ஆயுத வினியோகக் கழுத்தை இறுக்கி மூச்சுத்திணற வைத்தது புலிகளி;ன் அழிவுக்கு ஒரு காரணம்

நாடகத்தில் மீண்டும் கேபி

இதன் பின்னால் தான் திடீரென்று கேபி மீண்டும் நாடகத்தின் பங்கேற்கிறார் தலைவரால் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவராக நியமிக்கப்படுகிறார் இதில் மீண்டும் சில விடயங்களை நாங்கள் கருத்துக்கெடுக்க வேண்டியுள்ளது இயக்கத்திலிருந்து விலக்கியவர்களை பிரபாகரன் மீண்டும் சேர்த்தது கிடையாது இராணுவம் கைது செய்து பின்னால் விடுவிக்கப்பட்டவர்களைக் கூட. இலங்கைப் புலனாய்வுத் துறை தன்னைக் கொல்வதற்கு அனுப்பியிருக்கலாம் என்ற பயத்தில் தனக்கு கிட்ட அண்டுவதில்லை. கைது செய்யப்பட்டு அடையாளம் தெரியாமல் விடுவிக்கப்பட்ட அருணாவுக்கு தலைவர் மீண்டும் இயக்கத்தில் முக்கிய பதவிகள் வழங்கவில்லை என்பதும் அதனால் விரக்தியடைந்து மனநோய் வாய்ப்பட்ட அருணா. கிட்டு மீது மாத்தயா குழுவினர் நடத்திய தாக்குதலின் பின்னால். கந்தன் கருணைப் படுகொலை செய்ததும் நினைவூட்டப்பட வேண்டியது.

வன்னிக்கு வருமாறு அழைத்தும் தன் பாதுகாப்பு காரணமாக தான் பயணங்களைத் தவிர்த்ததாகவும். பின்னர் தன்னை பிரபாகரன் உனது சேவை எனக்குத் தேவை இல்லை என்றே ஓய்வூதியம் இல்லாத கட்டாய ஓய்வில் அனுப்பியதாக தற்போது கேபி குறிப்பிடுகிறார். இந்தப் பின்னணியும் சந்தேகத்தை வருவிக்கிறது. தமிழ்;ச்செல்வன் போன்றோரின் தகடு கொடுப்பு காரணமாக பிரபாகரன் கேபியின் கற்பில் சந்தேகம் கொள்கிறார். அதன் அடிப்படையில் வன்னிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. இவ்வாறுதான் கருணாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது விசாரணை என்ற பெயரில் பொட்டம்மானின் சித்திரவதையில் எவ்வாறு உண்மை வரவழைக்கப்படும் என்பதற்கு மாத்தயாவின் விசாரணை முன் உதாரணமாக இருந்த நிலையில் கருணா அதைக் காய் வெட்டி தன்னைப் பலப்படுத்திக் கொண்டார் இது போலவே தன்னையும் வன்னியில் விசாரணை என்ற பெயரில் அழைத்து என்ன நடக்கும் என்பது கேபிக்கு தெரியாமல் இருந்திருக்காது இதனால் தான் இவர் வன்னி செல்வதை தவிர்த்திருக்க வேண்டும். பிரபாகரனின் மனதில் சந்தேக விதை விழுந்து முளை விட்டால். கற்பை நிருபிக்க எந்த தீக்குளிப்பும் பயன்படாது என்பது தெரிந்ததாலேயே கேபி வன்னி விஜயத்தை தவிர்த்திருக்கக் கூடும்.

தன்னை மீண்டும் இயக்கத்தில் சேர்த்தது பற்றி கேபி கூட ஆச்சரியம் தெரிவிக்கும் அளவுக்கு பிரபாகரனின் கடந்த கால நடவடிக்கைகள் இருக்கின்றன அதிலும் கைது செய்யப்பட்டார் என்று செய்தி வெளிவந்த கேபியை மற்ற சக்திகள் தனக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்ற பயம் பிரபாகரனுக்கு இருந்திருக்க வேண்டும் அதிலும் கிளிநொச்சியும் விழுவதற்கு சமீபமாகத் தான் கேபியை மீண்டும் சேர்க்கும் அளவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம் ஒன்று கையறு நிலையில் மூச்சுத் திணறி எந்த துரும்பையும் பிடிக்கும் நிலைக்கு வந்த பின்னர். ஆபந்பாந்தவனாக கேபி தெரிந்து. தங்களை காவாந்து பண்ணக்கூடியது கேபி மட்டும் தான் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம். தங்கள் உயிரைக் காப்பாற்ற யாருடைய காலையும் பிடிக்கத் தயங்காத புலிகளின் பாரம்பரியம் அது அல்லது கேபியை மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளும்படி பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாம் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற அந்த ஆலோசனையை தனது மற்றக் கையாட்கள் மூலமாக ஷஅந்த உளவு நிறுவனமே வழங்கியிருக்கக் கூடும் என்பதை நாங்கள் ஏன் நம்பக்கூடாது?

அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்னர். ஐரோப்பிய சமூகம் முதல் ஐநா வரைக்கும். எரிக் சொல்கெயம் முதல் ஹிலறி கிளின்டன் வரைக்கும். இண்டர்போலினால் தேடப்பட்டுக் கொண்டிருந்;த கேபியுடன் தொடர்பு கொள்வதில் எந்த தயக்கமோ. இரகசியமோ காட்டவில்லை. முன்னையைப் போல வன்னிக்கு இராணுவ கெலிகொப்டரில் போய் சொல்கெய்ம் போன்றவர்கள் புலிகளுடன் தொடர்பு கொண்ட நிலை தடுக்கப்பட்ட நிலையில். பாலசிங்கமும் இல்லாத நிலையில் வெளிநாட்டில் புலிகளுடன் தொடர்பு கொள்ளக் கூடிய அளவுக்கு தலைமைக்கு நெருக்கமானவர்கள் என்று யாரும் இல்லாததால். இறுதி நேரத் தொடர்புகளுக்கு கேபியைப் பயன்படுத்துவதற்காக பிரபாகரனுக்கு ஆலோசனை அல்லது அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கலாம்.

புலிகள் ஆயுதங்களை பூட்டு வைத்துப் பூட்டி யுத்த நிறுத்தத்திற்கு சம்மதித்தால் முக்கிய புலிகளையும் குடும்பத்தினரையும் காப்பாற்ற அமெரிக்கா தயாராக இருந்ததாக தற்போது கேபி தெரிவிக்கிறார். இது பற்றிய விபரங்கள் அடங்கிய 16 பக்க ஆவணத்திற்கு பதிலாக பிரபாகரன் இதை ஏற்க முடியாது என்று பதிலளித்ததால் இந்த முயற்சியை தொடர முடியவில்லை என்கிறார். ஹிலறி கிளின்டன் வரைக்கும் புலிகளுக்கும். முக்கியமாக கேபிக்கும் தொடர்பு இருந்தது என்பது இறுதியில் வெளிவந்த விடயம் கேபியின் இந்த புரிந்துணர்வு எந்த அடிப்படையிலானது என்பதை கேபி கைது விவகாரத்தை வைத்தே ஊகிக்க முடியும். அடிக்கடி எங்களுக்கு பூச்சாண்டி காட்டுகிற அமெரிக்காவின் காலைப் பிடித்தாவது தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள இந்தக் கொள்கைச் செம்மல்கள் முன்வந்தது இவர்களின் கொள்கைப்பிடிப்பையும் உயிர் மீதான ஆசையையும் அப்பட்டமாகக் காட்டுகிறது.

நேபாளத்தில் நோர்வே முயற்சியில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் ஐநா மத்தியஸ்தத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைப் பூட்டி வைத்து ஜனநாயக நீரோட்டத்தில் கலந்த விவகாரத்தை பிரபாகரனுக்கு யாராவது மதியுரைத்து. பிரபாகரன் அதற்கு சம்மதித்திருந்தால். சில நேரம் பிரபாகரன் உயிரோடு இருந்திருக்க முடியும். ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல். மக்கள் ஆதரவு என்ற சக்தியின் மீதும் நம்பிக்கை இல்லாமல். ஆயுதத்தில் மட்;டும் நம்பிக்கை வைத்திருந்ததால். ஆயுதம் இல்லாமல் பிரபாகரனுக்கு ஆளுமை இல்லாத காரணத்தினால். இதை ஏற்க முடியாது என்று மூன்று வார்த்தைகளில் தன் மரணசாசனத்தை எழுதிக் கொண்டார்.

ஆயுதத்தை பூட்டி வைக்கும் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மார் தட்டினாலும். அமெரிக்கா வரும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு கடைசி வரைக்கும் இருந்தது என்பது உண்மை. இறுதியாக மீட்கப்பட்ட மக்கள். தங்களிடம் புலிகள் அமெரிக்க கப்பல் வந்து எல்லாரையும் ஏத்திக் கொண்டு போகும் என்று கூறியதாகத் தெரிவி;க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பில் மண் விழுந்த பின்னால் தான் இவர்கள் வெள்ளைக் கொடி தூக்க முடிவு செய்திருக்க வேண்டும்.

இதில் சில உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையிலேயே அமெரிக்கா பிரபாகரனையும் மற்றவர்களையும் காப்பாற்ற தன் கடற்படைக் கப்பல்களை அனுப்பியிருக்குமா? முதலாவது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இவ்வாறான நடவடிக்கைக்கு இந்தியாவின் சம்மதம் தேவைப்படும். இந்திய கடல் எல்லைக்கும் அப்பால் சர்வதேசக் கடற்பிராந்தியத்தில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும். இந்தியாவின் பிரதமரைக் கொன்றதற்காக தேடப்படும் ஒருவரை அமெரிக்கா தன் ராஜதந்திர உறவுகளையும் வர்த்தக நலன்களையும் பணயம் வைத்து காப்பாற்ற முன்வருமா? இல்லை. இந்தியா கண்டும் காணாமல் விட்டு விட்டால் இந்திய ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் சும்மா இருக்குமா? இதையும் மீறி. அமெரிக்கா தன் நாட்டில் பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்து அதற்கு நிதி உதவி செய்தவர்கள். ஆயுதம் வாங்க உதவியவர்கள் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் நிலையில். அந்த அமைப்பின் தலைவர்களுக்கு உயிர் காக்க உதவுமா? அவ்வாறு உதவினால். எந்த முகத்துடன் பின்லாடனை பயங்கரவாதி என்று தேடிக் கொல்லப் போவதாக மார் தட்ட முடியும்?

இந்த சர்வதேச அரசியலின் நியதிகளும் விதிமுறைகளும் யதார்த்தங்களும் விளங்காத புலன் பெயர்ந்த கூட்டமும் அதற்கு தீனி போடும் ஆய்வாளர்களும். தொடர்ந்தும் நீண்டு கொண்டே செல்லும் துரோகிகள் பட்டியலில் கே.பி. பான் கி முன். சொல்கெய்ம். நோர்வே. மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு வரிசையில். அமெரிக்கா துரோகம் இழைத்து விட்டது என்று அமெரிக்காவையும் துரோகியாக்கி விட்டு. அடுத்த துரோகிக்கான தேடலில் சற்றும் மனம் தளராமல் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்

அமெரிக்கா வழங்கியதாக கூறப்படும் உறுதிமொழி மக்கள் அழிவு ஏற்படாத வகையில் புலிகளை யுத்த நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைப்பதற்கான வெறும் வாக்குறுதிகளாக இருக்க முடியுமே தவிர. புலிகளைக் காப்பாற்றுவதற்கு அல்ல. புலிகளின் தலைமையை அழிப்பதற்கான முடிவு எங்கோ எப்போதோ எடுக்கப்பட்டு விட்டதையே காட்டுகிறது அதிலும் இறுதி வரைக்கும் காட்டுக்கு தப்பியோடாமல். கரையோரமாய் காத்திருந்து. முற்றுகைக்குள்ளாகிய பின்னால் மட்டுமே தப்ப முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்படியாயின். கேபி கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பிரபாகரன் காத்திருந்திருக்க முடியும். தப்பியோடாமல் வளைத்துப் பிடிப்பதற்காகக் கூட இந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்

ஆனால். சமீபத்தில் நாடு கடந்த அரசின் தற்போதைய தலைவரான நியூ யோர்க் சட்டத்தரணி தான் அமெரிக்க கப்பல் வரும் என்று பிரபாகரனுக்கு நம்பிக்கை ஊட்டவில்லை என்று மறுத்திருந்தார். நெடியவன் சார்பு இணையத்தளம் ஒன்று விடுத்த குற்றச்சாட்டுகள் குறித்த பதிலிலேயே அவ்வாறு தெரிவித்திருந்தார். தற்போது கேபி சொல்வதைப் பார்க்கும் போது. நியூ யோர்க்கில் செனட்டராக இருந்து ஒபாமா அரசின் வெளிவிவகார அமைச்சராக இருக்கும் ஹிலறி கிளின்டனுடன் இவர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதே தெளிவாகிறது.

மற்றும்படி. புலிகளைக் காப்பாற்றுவதற்கு. அமெரிக்காவுக்கு புலிகள் மாமனா மச்சானா மானங்காக்க

இந்த வெளிநாட்டு அமைப்பின் திட்டங்களின் அடிப்படையில். நாடு கடந்த ஈழமுயற்சியும். பிரபாகரனுக்குப் பின்னான அரசியலில் புலன் பெயர்ந்த கூட்டத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு அணை போட்டு. அதற்கு கடிவாளம் போட்டு தேவைக்குப் பயன்படுத்துவதற்காக. அந்த உளவு நிறுவனத்தின் ஆசீர்வாதத்துடன். வெள்ளைப்புலிகளின் ஆலோசனையுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கக் கூடும்

சில சந்தேகங்கள்

2003 உடன் தான் கட்டாய ஓய்வு பெற்றதாகக் கூறும் கேபி 2007 ல் கைது செய்யப்பட்டதாக செய்தி வருகிறது தற்போது தான் கைது செய்யப்படவில்லை. தன்னை கைது செய்வதற்காக வீட்டை சுற்றி வளைத்தபோது தான் அங்கிருக்கவில்லை என்று கேபி கூறுகிறார். தாய்லாந்தில் அரசியல். இராணுவ உயர்மட்டங்களுடன் தொடர்பு வைத்திருந்த கே.பி இயக்கத்துடன் தொடர்புகள் இல்லாதவர் என்று இந்த உளவு நிறுவனங்களுக்கு தெரியவில்லையா அல்லது கைது செய்து பின்னர் விடுவித்து தங்கள் திட்டப்படி செயற்பட வைக்க முற்பட்டனவா

இதில் சில ஊகங்களை முன்வைக்க முடிகிறது. கொழும்பில் கேபியை வந்து சந்தித்ததாகக் கூறப்படும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் 2006ல் இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்படுகிறார். கே.பி 2007ல் எரித்திரியாவிலிருந்து வரும்போது விமானநிலையத்தில் கைது செய்யப்படுகிறார். தக்சினுடன் வர்த்தக் தொடர்புகளைக் கொண்டிருந்து விருந்தினருக்கான சலுகைகளும் பாதுகாப்பும் கொண்டிருந்த கேபி. தக்சினின் பதவிநீக்கத்துடன் வெளியேறி எரித்திரியாவில் பாதுகாப்பு பெற்று இருந்திருக்கக் கூடும். கேபிக்கு பின்னான புலிகள் தாய்லாந்தின் தற்போதைய மேலிடத்துடன் நெருக்கமாகியதாலோ. தக்சினுடனான தொடர்பு காரணமாக தற்போதைய அரசு அதிருப்தி கொண்டதாலோ. கேபிக்கான பாதுகாப்பும் அந்தஸ்தும் நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கலாம்.

அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் உள்ள எரித்திரியாவின் இசையாஸ் அபேவர்க்கியுடன் கேபிக்கு இருந்த தொடர்புகளையும் அறிந்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்த அந்த பலம் வாய்ந்த உளவுநிறுவனம் முற்பட்டு கேபியை வலைக்குள் சிக்க வைத்திருக்கலாம்.

தான் மற்ற தமிழர்கள் தன்னை வந்து சந்திக்கக் கூடியதாக கோலாலம்பூரைத் தெரிவு செய்து அங்கு ஜாகை அமைத்ததாக கேபி கூறினாலும். மலேசியா போன்று இஸ்லாமிய சம்பிரதாயக் கெடுபிடிகள் இல்லாமல் உல்லாசப் பயணிகளின் வருகையில் தங்கியிருந்து. பிரச்சனையின்றி விசா வழங்கும் தாய்லாந்தை தவிர்த்ததற்கான காரணம் அதுவாக இருக்காது கைது நாடகத்தின் பின்னால். தாய்லாந்தில் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்ற அச்சத்திலேயே கேபி கோலாலம்பூருக்கு இடம் பெயர்ந்திருக்க முடியும்

இந்த ஊகங்களுக்கும் சந்;தேகங்களுக்கும். மர்மங்களுக்குமான பதில் கேபியிடம் மட்டுமே இருந்தாலும். கேபி உண்மையைச் சொன்னால் கூட நம்ப முடியாதபடிக்கு கேபியின் நம்பகத்தன்மை அடிபட்டுப் போய் விட்டது

இந்த முன்கதைச் சுருக்கத்துடன் நடந்து முடிந்த நாடகத்திற்கு வருவோம்

நடந்து முடிந்த நாடகம்

நடேசனின் மகன். சகோதரனுடன் பேசிக்கொண்டிருந்த கேபிக்கு கனடிய வானலை நாயகன் தொலைபேசியில் அழைக்க வெளியில் வரும் கேபி காணாமல் போகிறார். கிட்டத்தட்ட கேபியின் தொலைபேசி இலக்கம் இப்போது பலரின் கையில்? இவ்வாறு பகிரங்கமான தொடர்புகளுடன் இருக்கும் ஒருவர் பற்றி வேண்டியவர்களுக்கு தகவல் தர நினைப்பவர்களுக்கு என்ன கஸ்;டம்?

கேபி இலங்கை அரசினால் மலேசிய அரசின் உதவியுடன் நாடு கடத்தப்பட்ட விடயம் வெளியில் வருகிறது

இங்கே தான் எங்கள் புலன் பெயர்ந்த மந்தைக் கூட்டத்தின் மணியான மூளை வெளிப்படுகிறது. தங்களுடைய கனவான நாடு கடந்த ஈழத்தின் தலைவர் நாடு கடத்தப்படுகிறார். உடனே இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். உடனடியாகவே தெருவில் இறங்கி. இவர் ஒரு மனச்சாட்சியின் கைதி என்று இவரை ஒரு மண்டேலா ஆக ஆக்கியிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவரை மையமாக வைத்து. தங்கள் ஈழக்கனவுக்கு அங்கீகாரம் தேடியிருக்க முடியும். ஆனானப்பட்ட பாலகுமார். பேபி சுப்பிரமணியம். புதுவை என்று தாங்கள் இதுவரை தூக்கிப் பிடித்தவர்கள் கைது விவகாரம் பற்றியே வாய் திறக்காதவர்கள். வழமை போல கேபியையும் கைவிட்டார்கள். நெடியவன் கூட்டம் கேபி துரோகி என்று பரப்பிய கதையும் இவர்களுக்கு வசதியாகி விட. கேபி இப்போது அரசியல் அனாதையாகிறார்

இந்தச் சூழ்நிலையில் கேபி என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள? தலைவரே அடையாள அட்டையையும் குப்பியையும் கையளித்த நிலையில் கேபி குப்பி கடிச்சு கரும்புலியாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? பொபி சாண்ட்ஸ் மாதிரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டுமா இல்லை தூக்குமேடை பஞ்சு மெத்தை என்று கட்டப்பொம்மன் சினிமா வசனம் பேச வேண்டுமா இல்லை. வாய்க்குள் துப்பாக்கி வைத்த வாஞ்சிநாதன் போல தற்கொலை செய்ய வேண்டுமா தனக்கு ஆதரவு தர வேண்டியவர்களே கை விட்ட பின்னால். சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் பார்க்க. சண்டைக்காரனின் காலில் விழுவது தான் கேபிக்கு இருந்த ஒரே தெரிவு. இவர்கள் கூச்சல் போடுவார்கள் என்ற நம்பிக்கையில் முரண்டு பிடிக்கலாம் புலன் பெயர்ந்த கூட்டத்தை குசிப்படுத்த உணர்ச்சி அரசியல் நடத்தி வேசங்கள். கோசங்கள் போடலாம் புலன் பெயர்ந்த புலிக்கூட்டமும் கேபிக்கு அஞ்சலி செலுத்தி. வருடா வருடம் பணம் சேர்க்கலாம் ஆனால் அதற்கு கேபி செலுத்தப் போகும் விலை என்ன?

இந்த நிலையில் யார் இருந்தாலும் செய்யக் கூடிய ஒரு முடிவைத் தான் கேபி எடுத்தார். புத்தருக்கு போதி மரத்தின் கீழ் நிர்வாணம் கிடைத்தது போல. கே.பிக்கும் கோத்தபாயா வீட்டு வாசல் புத்தர் சிலையடியில் ஞானம் பிறக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. அது தவறு. அது மக்களுக்கு அழிவையே கொண்டு வந்து சேர்த்தது. அரசாங்கத்துடன் ஒத்துழைத்துத் தான் காரியங்களைச் சாதிக்க முடியும் என்றெல்லாம் கே.பியின் சிந்தனைப் போக்கு மாறுகிறது.

இருந்தாலும் கேபியின் ஆளுமையையும் வசீகரத்தையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை புலிகளை அழிப்பதன் மூலம் தான் இலங்கையில் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று நம்பி அதைச் சாதித்த கோத்தபாயாவுக்கு நம்பத்தகுந்த ஒருவராக மாறுவது என்பது சாதாரண விடயமும் இல்லை. இப்படி எதிராளியை தன் புத்திசாதுர்யத்தால் வசப்படுத்தி. தன் பக்கம் இழுக்கும் திறமை வாய்ந்த ஒருவரை. பிரபாகரன் தனக்குப் புத்தி இருந்திருந்தால். பேச்சுவார்த்தைக்கு அனுப்பியிருக்க வேண்டும். தமிழ்ச்செல்வனை ஆயுதக் கொள்வனவுக்கும் கேபியை பேச்சுவார்த்தைக்கும் அனுப்பியிருந்தால் சில நேரம் தமிழர்களுக்கு சமஷ்டி கிடைத்திருக்கக் கூடும். தமிழ்ச்செல்வனும் புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவை விட்டு. கனடாவில் உள்ள தன் குடும்பத்தினரின் வியாபாரத்திற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து நிலவிரிப்பு கொள்வனவு செய்து அனுப்பிக் கொண்டிருந்திருக்கக் கூடும். தற்போது தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் உயிர் தப்பியிருப்பதுடன். தமிழ்ச்செல்வனும் ரொறன்ரோ தமிழர்களின் வீடுகளுக்கு சல்ய++ட் அடிக்கும் வேலையை செய்திருந்திருக்கக் கூடும். கேபியை பிரபாகரன் கழுதை என்று செல்லமாக அழைப்பதாக டிபிஎஸ் அடிக்கடி குறிப்பிடுவதைப் பார்த்தால். நாய் பார்க்கிற வேலையைக் கழுதை பார்த்திருக்கக் கூடாது என்றே கியூறியஸ்க்குப் படுகிறது

கேபி மூன்று தடவைகள் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று ரவுப் கக்கீம் குற்றம் சாட்டுகிறார். கே.பியின் கையில் இருந்த சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்று யூஎன்பி கேள்வி கேட்கிறது தாய்லாந்தின் பதவி நீக்கப்பட்ட பிரதமர் இலங்கைக்கு இரகசிய விஜயம். அவருக்கும் கேபிக்கும் வியாபாரத் தொடர்புகள் இருக்கின்றன என்று குற்றச்சாட்டுக்கள் வெளிவருகின்றன. கேபியின் கைகளில் எக்கச்சக்கமான சொத்துகள் இருக்கின்றன என்ற கதை மாறி. கேபி இலங்கை அரசுக்கு கிடைத்த சொத்து என்று கதை மாறுகிறது. கே.பி வடக்கு மாகாண முதல்வராகலாம். பொதுமன்னிப்பு வழங்கப்படலாம். யுத்தக் குற்ற விசாரணையில் அரசு சார்பில் பயன்படுத்தப்படலாம். என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றனஇராஜீவ் கொலை தொடர்பாக சிபிஐ வந்து விசாரணை செய்தது என்று கூட தகவல் வருகிறது.

குளிர் ஜுரம் பிடித்த தமிழ் அரசியல்வாதிகள்

திடீரென்று தமிழ் அரசியல்வாதிகளுக்கு குளிர்காய்ச்சல் பிடித்து கேபியின் மீது பாய்கிறார்கள்; அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தங்களை விட்டு. புலிகளின் பிரதிநிதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களுக்கு கசப்பானதாக இருக்கலாம் ஆனால். புலிகளே ஏகபிரதிநிதிகள் என்று வேட்புமனுக் கிடைப்பதற்காக வன்னிக்கு காவடி எடுத்த கூட்டமைப்பும் புலிகளை வைத்து வியாபாரம் நடத்தும் தங்களின் முயற்சியில் பங்குபோட வந்தது அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால். இலங்கை அரசியலில் புலி என்ற பெயரை வைத்து எந்தப் பிழைப்பும் நடத்த முடியாது இன்னொரு தடவை புலி யாவாரம் செய்ய ஊருக்குள் நுழைந்தால். விளக்குமாறையும் மிளகாய்த்தூளையும் இவர்கள் சந்ததிக்க நேரிடும். இந்த நேரத்தில் கேபிக்கு எந்த நம்பகத் தன்மையும் இல்லாத நிலையில் வடக்கில் அரசியலில் நிறுத்தும் அளவில் அரசு இல்லை.

மற்ற அரசியல்வாதிகள் கேபி மீதான குற்றச்சாட்டுகளை வைக்கும் போது. ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும். தாங்கள் ஒருவருமே தமிழ் மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்றவர்கள் இல்லை என்பதையும். மகேஸ்வரனின் மனைவியும் தாங்களும் இலங்கை அரசியலில் ஒரே தட்டில் வைத்து அளக்கப்படுபவர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கேபியை வைத்து உள்ளுர்த் தமிழர்களை வழிக்குக் கொண்டு வரவேண்டிய தேவை அரசுக்கு இல்லை அரசின் நோக்கம் முழுக்க முழுக்க தனக்கு தலையிடியைத் தரும் புலன் பெயர்ந்த கூட்டத்தை அடக்குவதற்கு கேபியைப் பயன்படுத்துவது தான் இந்த திட்டத்தின் கீழ்த் தான் கேபி தனக்கு நெருக்கமான சிலரை நிலைமையை நேரடியாகக் கண்டுகொள்வதற்காக அழைத்து அரச தரப்பினருடன் புரரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சித்தார் வழமை போல இதுவும் கேபியின் துரோகமாகவே நெடியவன் உட்பட்ட மற்றக் கூட்டத்தினரால் பிரசாரிக்கப்பட்டது சென்றவர்களும் அரச தரப்பின் வழிகாட்டலுடன் முகாம்களையும் பார்வையிட்டு மீண்டனர் .

இதில் திடீரென்று ஒரு திருப்பம் கேபியின் விருந்தினரான மருத்துவர் ஒருவர் குத்துக்கரணம் அடித்து. கேபி புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருப்பதாயும் கேபிக்கும் அரச தரப்;பினருக்குமான தொடர்பு 2006 இலேயே இருந்ததாகவும் கூறிய. வெட்டிப் பொருத்திய வீடியோ ஒன்று தமிழ் நெற்றில் வெளியானது.

உடனேயே வானலையில் புயல் மையம் கொண்டது புலி ஆதரவாளர்கள் எல்லாரும் வரிந்து கட்டிக் கொண்டு ஐயோ. தலைவர் இருந்திருந்தால் இந்த துரோகிக்கு மண்டையில் போட்டு ஈழத்தை வெண்டிருப்பாரே? என்ற ஆதங்கத்துடன். ஈழம் கிடைக்காமல் போனதுக்கு ஆர் காரணம் எண்டு இப்ப எங்களுக்குத் தெரியும் என்று. என்றுமே முடியாத துரோகி பட்டியலில் உத்தியோகபூர்வமாக கேபியின் பெயரையும் இணைத்துக் கொண்டனர். கேபி தலைவரைச் சுத்தி. காசைச் சுவடி. வெறும் கப்பல்களை அனுப்பி கடலில் ஆழ்த்த தகவலும் கொடு;த்ததாக ஆய்வாளர்கள் புதைபொருள் ஆய்ந்து இந்தக் கூட்டத்தை மேலும் குசிப்படுத்தினர்.

சென்று மீண்ட இன்னொருவர் வழங்கிய தகவல்கள்படி. இந்த டாக்குத்தர் அங்கே இருக்கும் வரைக்கும் இந்த முரண்பாடுகள் பற்றி தெரிவிக்கவில்லை என்றும் கேபியை பாங்கொக்கில் புலனாய்வாளர்கள் சந்தித்தது பற்றிய உரையாடலின் போது அவர் இருக்கவில்லை என்றும். அந்த உரையாடலின் சாராம்சமே வேறு என்பதும் இணையத்தளங்களின் வெளியான போதும். இந்த புலன் பெயர் கூட்டத்தின் உண்மைக்கான தேடல் காரணமாக. அதன் காதிற்கு இந்த விபரங்கள் எட்டவேயில்லை. இப்படியாகத்தானே புலன் பெயர்ந்தவர்கள் மத்தியில் கேபியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானது

கேபியும் தன் புதிய ஞானோதயத்தின் அடிப்படையில் எதிர்ப்பு அரசியலில் பயனில்லை. அரசுடன் ஒத்துழைத்து மட்டுமே எதையாவது சாதிக்க முடியும் என்று. புலிகளின் சர்வதேச வலையமைப்பை செயலிழக்கச் செய்யும் அரசின் முயற்சிக்கு உறுதுணையாக வெளிநாட்டுப் புலிகளின் வர்த்தக தொடர்புகள் பற்றிய விபரங்களை வழங்குவதை அரசு உறுதிப்படுத்துகிறதுஇ கேபியை இது சம்பந்தமாய் குறை சொல்வதில் பயனில்லை தன்னைக் கைவிட்டு தன்னை துரோகியாக அடையாளம் காட்டும் கும்பலைப் பழி வாங்குவதற்கு இதை விட வேறு சந்தர்ப்பம் எங்கே கிடைக்கும்?

கேபி இல்லாத நாடு கடந்த ஈழமும் தேர்தல் நடத்தி பாராளுமன்றம் அமைத்தாலும். கேபிக்கும் அந்த அமைப்புடனான கேபியின் தொடர்புகள் அறுந்ததாகத் தெரியவில்லை இன்று நெடியவன் அணிக்கு எதிராக களத்தில் நிற்பது நாடு கடந்த ஈழக் கும்பல் இன்று காங்கிரஸ் புலிவாலுப்பிள்ளைகளும் இன்னும் பலருமாய் புலிசார் சுத்திஜீவிகள் அணி திரண்டிருப்பது நாடு கடந்த கூட்டத்திற்குப் பின்னால் தான் வெள்ளைப்புலி ஆலோசகர்கள் மதியுரை வழங்கும் போது. இந்தக் கூட்டம் யாரின் நலனுக்காகச் செயற்படும் என்பதை ஊகிப்பதில் பெரும் சிரமமில்லை இதில் வெள்ளைத் தோல் புலிகள் என்று இவர்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு.

லிபரல் கட்சியின் பொப் ரே. பேராசிரியர் டேவிட் கம்ரன் போன்றவர்கள் வன்னி வரைக்கும் சென்று புலிகளுக்கு ஜனநாயகம் கற்பிக்க முயன்று தோற்றவர்கள். இவர்களைப் பொறுத்தவரைக்கும் சர்வதேச மனித உரிமைகளின் அடிப்படையிலான தமிழ் மக்களுக்கான தீர்வு ஜனநாயக அடிப்படையிலானதாய் இருக்க வேண்டும் இதனால் புலிகளின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க இவர்கள் பின்நின்றதில்லை ஆனால். புலிகளோடு ஒட்டிக் கொண்ட சட்டத்தரணிகள். பேராசிரியர்களான வெள்ளைத்தோலர்கள் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் கற்பித்ததுடன் பிரபாகரனை தேசியத் தலைவர் என்று அழைப்பதில் பெருமை கொள்பவர்கள். இவர்களில் சிலர் புலிகளின் சம்பளப்பட்டியலில் இருப்பவர்கள் மற்றும் சிலர் வேறு சக்திகளின் நலன்களுக்காக புலி வேடம் போட்டு ஒட்டிக் கொண்டவர்கள்.

இவர்களின் ஆலோசனைப்படி தொடங்கப்பட்ட நாடு கடந்த ஈழம் என்ன செய்கிறது என்ற கேள்விக்கு முன்னால். அதற்கும் கேபிக்குமான உறவு என்பது இன்று பெரிய கேள்வி. கேபி இலங்கைக்கு உண்மை காணழூ அழைத்த பிரமுக விருந்தினர்கள். நாடு கடந்த ஈழத்துடன் தொடர்புகளைப் பேணுபவர்கள். இதன் அடிப்படையில் தான் நாடு கடந்த தமிழீழம் அடக்கி வாசிக்க தொடங்கியிருக்கிறது போலும்.

தலைவரின் முடிவின் மர்மம்

கேபியின் தற்போதைய பேட்டியில் அடுத்த சர்ச்சைக்குரிய விடயம். பிரபாகரனின் முடிவு பற்றியது பாதுகாப்பு அமைச்சின் மிகவும் முக்கியமான மூலங்களின் தகவல்படி (கோத்தபாயா) தலைவர் விழுப்புண் பட்டு வீரமரணம் அடைந்ததாகவும் தலைவரின் வீரம் குறித்து எதிரிகளே சிலாகித்ததாகவும் குறிப்பிடுகிறார் வெறுமனே என் தலைவன் இறந்து விட்டான் என்று அழுததற்கே இந்த மொத்து மொத்தியவர்களுக்கு இல்லை. தலைவர் சரணடைந்து சித்திரவதைக்குள்ளாகி இறந்தார் என்றா சொல்ல முடியும்? பிரபாகரனின் இறுதிக்கணங்கள் பற்றி சரியான சாட்சியங்கள் பகிரங்கமாக இதுவரையும் வராத வரைக்கும். சூழ்நிலை ஆதாரங்களை மட்டும் வைத்தே நாங்கள் முடிவுகளுக்கு வர முடியும். தலைவருக்குப் பின்னால் பெற்றோல் டின்னோடு அலைவதற்கு தமிழ்ச்செல்வன் இல்லாததால். தலைவரின் உடல் கூட எதிரிக்கு கிட்டாது என்று மார் தட்டியவர்கள் அவமானத்தால் கூனிக்குறுக நேரிட்டது. வெறும் தர்க்க ரீதியான நியாயப்படியே. இந்த பெட்ரோல் டின் கயிறு திரிப்பின் சாத்தியக்கூறுகள் பற்றி கியூறியஸ் முன்பு பல தடவை குதறியிருக்கிறான் மாயைகளின் மேல் கட்டப்பட்ட ஆகாய மாளிகைக்கு வைக்கப்பட்ட ஒரு செங்கல் இது சமீபத்திய பேட்டியிலும் கேபி இந்த மாயையை தொடரும் முயற்சியில் ஈடுபட்டு பெட்ரோல் டின் கடலில் விழுந்திருக்கலாம். அல்லது அதைக் கொண்டிருந்த போராளி முதலில் இறந்திருக்கலாம் என்கிறார்.

மறுதரப்பில். அரசு யுத்தக் குற்ற விசாரணைப் பயமுறுத்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது அத்துடன் கேபியை யுத்தக் குற்ற விசாரணையில் அரசு தரப்பில் பயன்படுத்த முயற்சி என்று செய்தி வருகிறது இந்த நிலையில். பிரபாகரன் சரணடைந்த பின்னால் கொல்லப்பட்டார் என்று கேபி சொல்லி விட்டு. எப்படி அரச விருந்தாளியாக இருக்க முடியும் அதிலும் கோத்தபாயா மீதே குற்றச்சாட்டுப் பலமாய் இருக்கும் போது. அவருடன் புரிந்துணர்வு கொண்ட நெருக்கமான நண்பரான கேபி அவரை எப்படி மாட்டி விடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியும்?

இன்னொரு கோணத்தில். கேபிக்கு உண்மை சொல்ல வேண்டும் என்ற தேவை அரசுக்கு ஏன் இருக்கிறது சொல்லும் உண்மையை அரசுக்கு எதிராக சந்தர்ப்பம் கிடைத்தால் கேபி பயன்படுத்த மாட்டார் என்று என்ன உத்தரவாதம் அரசுக்கு இருக்கிறது.

தலைவர் இறக்கவில்லை. வரவேண்டிய நேரத்தில் வருவார் என்று ஒரு கூட்டம் காத்திருக்கிறது இது கேபி எதைச் சொன்னாலும் நம்பத் தயாரில்லை இன்னும் ஒரு கூட்டம் தலைவரின் மணியான திட்டப்படி கேபி உள்ளுக்க போய் வேலையைக் குடுக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. தலைவர் இறந்து விட்டார் என்பதை நம்பும் இன்னொரு கூட்டமோ. தலைவர் விழுப்புண் பட்டு வீரமரணம் அடைந்தார் என்பதை நம்ப விரும்புகிறது அது கேட்க விரும்புவதை கேபி சொல்கிறார்இ இதன் மூலம் தனக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த கேபி விரும்புகிறார்.

கேபி சொல்வது உண்மையாயின். பிரபாகரனின் வீரத்திற்கு எதிரிகள் தலைவணங்கினார்கள் என்று கூறினால். தலைவரின் உடலை நிர்வாணமாக்கி; படையினர் மத்தியில் ஊர்வலமாய் கொண்டு திரிய வேண்டிய காரணம் என்ன? துட்டகைமுனு எல்லாளனுக்கு கொடுத்த மரியாதையை நவீன கைமுனு இந்த வரலாற்று எல்லாளனுக்கு கொடுக்காதன் காரணம் என்ன? பிரபாகரனின் உடல் காண்பிக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களைப் பார்வையிட்ட எவருக்கும் பல்வேறு நியாயமான கேள்விகள் உள்ளன. புலி ஆதரவாளர்கள் அடிக்கடி கேட்கும் பிரபாகரனின் இறப்புச் சாட்சிப் பத்திரத்தை அரசு கொடுக்காத கேள்வி போன்றவை அல்ல இவை புலிகள் போட்டுத் தள்ளும்போது அதற்கெல்லாம் சத்தியக்கடதாசி கொடுத்த மாதிரி. இவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் பிரபாகரன் உயிர் தப்பி எங்கோ இருக்கிறார் என்ற நம்பிக்கையை பலப்படுத்த கேட்கப்படுபவை. நியாயமான கேள்விகள் எல்லாம் விழுப்புண் பட்டதற்கான சான்றுகள் இல்லாத காரணத்தினால் எழுந்தவையே புலிகள் எதிரியின் கையில் சிக்க மாட்டார்கள் என்று புலிகள் வளர்த்த மாயை காரணமாக எழுந்த கேள்விகள் பல காணப்பட்ட காயங்கள் மட்டுமே பல்வேறு கேள்விகளை எழுப்பக் கூடியன அந்தக் கேள்விகள் கேபிக்கும் எழுந்திருக்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வீரமரணக் கதை மட்டும் பதிலாகி விட முடியாது.

கேபி பிரபாகரனின் மரணம் பற்றிய தகவல்களை மேலிடத் தொடர்பு மூலம் பெற்று நம்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். சரி. இறந்தவர் போகட்டும். இன்றும் உயிரோடு இருக்கிறார்களா என்ற எந்தத் தகவலும் இல்லாத பாலகுமார். பேபி சுப்பிரமணியம். யோகி. புதுவை போன்றவர்களின் நிலை பற்றி ஏன் இன்னமும் அறிய முயற்சிக்கவில்லை. புலி ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்த தகவல்களைப் பெற்று ஏன் இன்னமும் தெரியப்படுத்தவில்லை.

இதைவிட. முக்கியமான ஒரு கேள்வி ஒன்றுண்டு. பிரபாகரனின் கடைசி மகன் தன்னுடன் கொண்டிருந்த நெருக்கம் பற்றி மனவேதனையுடன் குறிப்பிடும் கேபி அந்தச் சிறுவன் இறந்த விதம் பற்றி தெரிந்து தான் இருக்கிறார். தாயுடன் மகனும் குண்டில்; விழுந்து இறந்ததாக முதலில் நம்பினாலும் பின்னர் இணையத்தில் வந்த படங்கள் பற்றி குறிப்பிடுகிறார் இந்த அப்பாவிக் குழந்தையின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது. அதன் தே;திரதாரிகள் யார் என்பதை இன்னமும் அறிய முடியாமலா இருக்கிறார் என்ற கேள்வி எல்லாம் எழுகிறதே?

அடுத்து முக்கியமான ஒரு கேள்வி எழுகிறது. தலைவரைக் காப்பாற்றுவதற்கான கெலிகொப்டர் முயற்சிக்கு 3,5 மில்லியன் டொலர்களை நெடியவன் தரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். சமாதான முயற்சிகளை தான் மேற்கொண்டிருக்கையில் ஆயுதங்களைக் கடத்துவதை வெளிநாடுகள் அறிந்தால் தன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் என்பதால். தான் மீண்டும் பதவி ஏற்ற நாளிலிருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபடவில்லை என்று கூறும் கேபி. பிரபாகரனைக் காப்பாற்ற கெலிகொப்டர் வாங்க முயற்சித்த விடயம் அந்த வெளிநாடுகளுக்குத் தெரிந்தால் தன் நம்பகத்தன்மைக்கு என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லையா அல்லது அந்த முயற்சிக்கு வெளிநாடுகளின் ஆசீர் இருந்தது என்று வைத்துக் கொண்டாலும். அவற்றிடமே அதற்கான உதவியைப் பெறுவதில் தடை இருந்திருக்குமா

அதையும் விட. இன்று போராட்டத்திற்கான பணத்தை போராளிகளின் நன்மைக்காக செலவிட என்று தொண்டு நிறுவனத்தை உருவாக்கிய கேபிக்கு இந்தப் பணம் தற்போது எப்படிக் கிடைத்தது? தொண்டு நிறுவனம் வெறும் சில மில்லியன் டொலர்களுடன் மட்டுமே வேகமாக ஆரம்பிக்கப்பட்டிருக்க நியாயமில்லை புலிகளின் அழிவின் போது. நெடியவன் கூட்டத்தின் கையில் பணம் முழுவதும் இருந்ததால். பிரபாகரனைக் காப்பாற்ற பணம் கிடைக்கவில்லை இப்போது கேபியின் கையில் புழங்கும் பணம் குறுகிய காலத்திற்குள் எப்படிக் கிடைத்தது? கேபியின் பின்னால் அணி திரண்ட கூட்டத்தினர் தான் இந்தப் பணத்தை தற்போது வழங்கியிருந்தாலும். அவர்களிடம் இந்த பணத்தை யுத்த காலத்தில் பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்திருக்குமா.

எனவே. கெலிகொப்டர் கதை கூட நம்பத் தகுந்ததாய் தென்படவில்லை. தன்நிலை விளக்கம் அளித்து. புலன் பெயர்ந்தவர்கள் மத்தியில் தன் துரோக முத்திரையை அழித்து. மாவீரனாக ஞானஸ்நானம் பெறும் கேபியின் முயற்சி இந்த முரண்பாடுகளால் அடிபட்டுப் போகிறது

கேபியை நாங்களும் குற்றம் சாட்டவேண்டுமா?

இந்தக் கூட்டம் கண் மூடித்தனமாக துரோகிப் பட்டம் சூட்டுவதைப் போல. கேபியை நாங்களும் ஒதுக்கிப் புறந்தள்ள முடியாது. இந்தக் கூட்டம் வாயில் வரும் எவரையும் துரோகியாக்குவதன் காரணம். இந்தத் துரோகிகள் சதி செய்யாவிட்டால் தலைவர் ஏதோ வெட்டிப் புடுங்கியிருப்பார் என்ற எண்ணத்தில் தான் நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்து. சமாந்தர அரசை நிர்வகித்து வெதுப்பகம். வைப்பகம் வைத்திருந்த போது சாதிக்க முடியாததை. முள்ளிவாய்க்காலில் கௌபீனதாரியாக நின்ற போது எப்படிச் சாதித்திருக்க முடியும்? தலைவரின் முட்டாள்தனத்திற்கு யார் மீதாவது பழி போட்டே ஆக வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்களின் வரிசையில் கேபியும் ஒருவர். இன்று நெடியவனின் மாதாந்தக் கொடுப்பனவுகளுக்காக நோர்வேத் தலைவர் என்கிறார்கள் தொடர்ச்சியான வருமானம் இல்லாமல் இந்த ஜால்ராக் கூட்டத்திற்கு கொடுத்துக் கொண்டேயிருந்தால் ஒருநாள் கஜானா காலியாகும். அப்போது அந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்போது. உவன் போராட்டத்துக்கு சேர்த்த காசைச் சுத்தி. தான் மடக்கிப் n;பாட்டு. கேபிக்கு காசு கொடுக்காததால் தான் தலைவருக்கு கெலிகொப்டர் கிடைக்கவில்லை என்று பிளேட்டை மாற்றி நெடியவனையும் இவர்கள் துரோகியாக்கினாலும் நாங்கள் ஆச்சரியப்படப் போவதில்லை.

கேபி இன்று ஆயுதப் போராட்டம் தவறு என்பது உண்மையிலேயே மனம் நொந்து. மனம் திரும்பிய ஒருவர் கூறும் உண்மையாகக் கூட இருக்கலாம். பிரபாகரன். பொட்டம்மான் போன்ற அரக்க இயல்பு கொண்டவர்கள் இறுதி நேரத்தில் கூட தங்கள் தவறுகளுக்கு மனம் வருந்தியிருப்பார்கள் என்பது சந்தேகமே மற்றவர்களின் உயிரைக் கொல்வதில் மகிழ்ச்சி காஹம் குருர இயல்பு படைத்த கோழைகளான இவர்கள் எதிரியின் கையில் அகப்பட்டதும் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவ்வாறு நடித்திருக்கக் கூடும். தங்கள் உயிர் மீதான ஆசை எந்த வழியிலும் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வழிகோலும் காலில் விழுந்து கூட உயிர்ப்பிச்சை கேட்டிருக்கக் கூடும்.

ஆனால் எங்களுக்குத் தெரிந்தவரையிலும் கேபி பல்வேறு கொலைகளுக்கு உடந்தையாகவும். சாட்சியாகவும் நியாயப்படுத்துபவராகவும் இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் கொலை செய்ததாகவோ. அதில் இன்பம் காண்பவராகவோ இருந்ததாக அறியப்படவில்லை. போரின் போது ஏற்பட்ட அழிவின் கோரத்தை நேரில் கண்ட அசோகச் சக்கரவர்த்தி மனம் வருந்தி திருந்தியது போல. கேபியும் திருந்தியிருக்கக் கூடும். தவறு செய்த மனிதர்கள் தவறை உணர்ந்து அதற்கு பரிகாரம் தேட முயலும் போது அதற்கான மன்னிப்பை வழங்குவது மானிடத்தின் கடமை.

தன்னுடைய மனைவியின் புத்த மதம் தன்னில் ஏற்படுத்திய பாதிப்புப் பற்றிக் குறிப்பிடும் கோத்தபாயாவின் வீட்டு வாசல் புத்தர் சிலையைப் பார்த்து உண்மையிலேயே நிர்வாணம் அடைந்திருக்கக் கூடும். முகாம்களில் அல்லல்படும் போராளிகளின் நிலை கண்டு அழுததாக குறிப்பிடப்படும் போது. போரின் கொடுரத்தை கேபி கண் முன்னால் கண்டதன் பாதிப்பாகவே கருத முடியும்.

புலன் பெயர்ந்தவர்கள் இன்றைக்கும் புலிகளின் கொடுரங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நிலையில். கேபி முகாம்களில் உள்ள பல போராளிகள் கடைசி நேரத்தில் கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள் என்ற உண்மையை பகிரங்கமாகவே ஏற்றுக் கொள்கிறார். இன்றைக்கும் ஈழக்கனவில் இன்னும் ஆயிரக்கணக்கில் பலி கொடுக்க புலன் பெயர்ந்தவர்கள் தயாராகியிருக்கும் நிலையில். ஆயுதப் போராட்டம் தவறு என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறார். எதிர்ப்பு அரசியலால் நாங்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறார்

தன்னுடைய விசுவாசம் காரணமாக பிரபாகரனின் முட்டாள்த்தனம் தான் இத்தனை அழிவுக்கு காரணம் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும். பேட்டியின் வரிகளுக்கு இடையில் தேடினால். பேய்க்கு வாழ்க்கைப்பட்டு புளியமரத்தில் ஏற வேண்டிய கேபியின் அவலத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. இதனால் தான் கடைசி நேரத்தில் மக்களை வெளியேற விடாமல் மனிதக்கவசமாகப் பயன்படுத்திய புலிகளின் செயலை இன்றும் நியாயப்படுத்த முடிகிறது. மக்களை வெளியேற விட்டிருந்தால் புலிகள் தனித்துப் போய் அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார். இன்று கவசமாக வைத்திருந்து இத்தனை ஆயிரம் உயிர்களைப் பலி கொடுத்த பின்னாலும் எந்த புலித்தலைவராலும் உயிர் தப்ப முடிந்ததா

இன்று திறந்த சிறைச்சாலைக் கைதியாக இருக்கும் கேபியால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் எதையும் எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் கேபியால் சில விடயங்களைச் சாதிக்க முடிந்திருக்கிறது. இதுவரையும் ஈழக்கனவை விற்று அரசியல் நடத்தி. புலன் பெயர்ந்த ரசிகர்களை குசிப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் கவலைப்படாத விடயங்கள் பற்றி கேபி அக்கறை கொண்டிருக்கிறார்.

தங்களை முகாம்களுக்கு அரசு விடவில்லை என்று குற்றம் சாட்டும் கூட்டமைப்பு. தங்கள் உறுப்பினர்கள் யாராவது முகாமுக்கு போய் வந்து முகாம் நிலை நன்றாக இருக்கிறது என்றவுடன் முட்டி மோதுகிறது. அரசு தடுக்க வேண்டும் என்பதற்காக அனுமதி பெறாமல் போக முயற்சித்தது ஆக்கபூர்வமாக எதையும் செய்யாமல். இப்படி எதிர்ப்பு அரசியல் நடத்தி புலன் பெயர்ந்தவர்களை குசிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அரசியல் செய்தவர்கள் இன்று வரைக்கும் அரசைக் குற்றம் சாட்டுவதை தவிர வேறெதையும் செய்ததில்லை. ஆனால் முகாம்களுக்கு நேரில் சென்று உரையாடிய கேபி அவர்கள் வெளியில் தொடர்பு கொள்ள தொலைபேசி வசதிகள் இல்லை என்ற சாதாரண விடயத்தை உடனடியாகவே தன் தொடர்பு மூலமாக நிவர்த்தி செய்கிறார் பரீட்சைக்கு தோற்றும் போராளிகளுக்கு வகுப்புகளுக்கும் உபகரணங்களுக்கும் வழி செய்கிறார். இங்கே கொடி தூக்குபவர்களோ. போராட்டத்திற்காக கொடுக்கப்பட்ட மில்லியன்களை விழுங்கி ஏப்பம் விடும் கூட்டமோ இன்று வரைக்கும் எதையும் செய்ததாக இல்லை கேட்டால். அது அரசாங்கத்தின் கடமை என்று கையை விரிக்கிறது.

போராட்டத்திற்கு எனச் சேர்த்து தனது கையில் இருக்கும் பணத்தை மகிந்த சகோதரர்களின் காலடியில் ஒப்படைத்ததாகத் தான் யுஎன்பியும் புலன் பெயர்ந்த தமிழ்;க்கூட்டமும் குற்றம் சாட்டிய நிலையில் அந்தப் பணத்தை ஒரு தொண்டர் அமைப்பை உருவாக்கி அந்தப் போராளிகளினதும் மக்களதும் புனர்வாழ்வுக்காக கொடுப்பதை. துரோகம் என்ற ஒரே வார்த்தை மூலம் தடுத்து நிறுத்த வேண்டுமா.

ஆனால் இதில் ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால். கே.பியின் இன்றைய நடவடிக்கைகளுக்கு பின்னால் நிற்கும் அவரது வெளிநாட்டு ஆதரவாளர்கள் இன்றைக்கும் டக்ளஸ் தேவானந்தாவையும் கருணாவையும் துரோகி என்று கருதுவது தான் கேபி தற்போது மனம் மாறிச் செய்வதைத் தான் அவர்கள் முன்பே செய்தார்கள். அதைத் துரோகம் என்பதற்கு இன்றைக்கும் இவர்கள் தயங்குவதில்லை புலிகள் அரசின் காலில் விழுந்தால் அதை ராஜதந்திர நகர்வு என்றது போலத் தான் இதுவம்.

தங்களுடைய வங்குரோத்து அரசியலைக் கொண்டு நடத்த புலிகளின் பணத்தையும். பிரபாகரன் என்ற பிம்பத்தையும் நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் செல்லாக்காசு அரசியல்வாதிகளான வைகோவும் நெடுமாறனும். புதிதாய் தோன்றிய அரசியல் கோமாளி சீமானும் நெடியவனின் எலும்புத்துண்டுகளுக்காக கேபியைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிரபாகரனின் படத்தைக் காட்டி பிழைப்பு நடத்தும் இந்த பிழைப்பு வாதிகளால் தான் புலிகள் கருவறுக்கப்பட்டார்கள் என்ற உண்மையை மறைக்க இன்றைக்கும் கண்ணீர் நிறைந்த சோகக்காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று காது குத்தி இந்த முட்டாள்கூட்டத்தை வடி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை நம்பி புலன் பெயர்ந்த கூட்டமும் நம்பி விசிலடிக்கிறது.

அரசுடன் சேர்ந்து எந்த அபிவிருத்தியையும். தமிழ் மக்களுக்கு முன்னேற்றத்தை தரக் கூடிய எதையும் செய்யும் போது. அதை ஆதரிக்கின்ற நன்மையைச் செய்யாவிட்டாலும். அதைச் செய்பவர்களைத் துரோகி என்று பட்டம் டே;டும் தீமையையாவது நிறுத்த வேண்டும்.

கேபி எங்களுக்குத் தலைவரும் இல்லை. கேபியின் செயற்பாட்டை நியாயப்படுத்துவதை மகிந்தவுக்கான அங்கீகாரமாக யாரும் திரிக்கவும் தேவையில்லை

கேபி துரோகியா யதார்த்தவாதியா என்ற கேள்விக்கு விடை தான் என்ன?

துரோகி என்பதற்கு சமுக நீதியின்படியிலான வரையறைகள் இல்லை. தன்னுடைய கருத்தோடு முரண்டுபடும் எவரையும் எவரும் துரோகி என்று குற்றம் சாட்டலாம் கொலைகாரக் கும்பல் கூட. மனம் திரும்பியவனைத் துரோகி என்று தான் கூறுகிறது தியாகம். துரோகம். மாவீரன் துரோகி என்ற சகதி அரசியலுக்குள் அமிழ்ந்திக் கிடந்ததால் தான் தமிழினம் இன்று நாறிப் போய் கிடக்கிறது

இளம்பரிதி போன்று. இந்த புலன் பெயர் கூட்டம் பூசித்து தொழுத புனிதப் போராளிகளே பதுங்கிய புலிகளைக் காட்டிக் கொடுத்து செய்து வரும் துரோகத்தை விட கேபியின் துரோகம் பெரிதில்லை

போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை சுத்தி தலை மறைவாகியுள்ள கூட்டமும். தொடர்ந்தும் சுத்த இன்றும் ஈழக்கனவை விற்கும் கூட்டமும் செய்யும் துரோகத்தை விட கேபியின் துரோகம் பாரதூரமானதில்லை

தீர்வுகளை உதறித் தள்ளி. அரசியல் சிந்தனையுள்ளவர்களை ஒழித்துக் கட்டி. தமிழ் அரசியலுக்கு நலம் எடுத்து. அடுத்த இரண்டு தலைமுறைக்கு தலை எடுக்க முடியாதபடி பிரபாகரன் செய்த துரோகத்தை விட கேபி ஒன்றும் பெரிதாக துரோகம் செய்யவில்லை

புலன் பெயர்ந்தவர்கள் துரோகி என்பதைப் பற்றி நாங்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை போராட்டத்திற்கு கொடுத்த பணத்தை ஏப்பம் விடுபவர்களை தலைவர்கள் என்று ஜால்ராப் போடுபவர்களுக்கு. கேபியைத் துரோகி என்று சொல்லத் தகுதியில்லை

கேபி பலம் வாய்ந்த உளவு அமைப்பின் பிடிக்குள் இருந்து புலிகள் என்ற அமைப்பு அழிக்கப்படுவதற்கு துணை நின்றார் என்ற துரோகக் குற்றச்சாட்டு பற்றிய பிரச்சனை கேபிக்கும் புலி ஆதரவாளர்களுக்குமானது நாங்கள் அது குறித்து அக்கறை கொள்ளத் தேவையில்லை.

புலிகள் என்ற அரக்கர் கூட்டம் கூண்டோடு கைலாயம் போன பின்னாலும் அதன் பின்னால் வால் பிடித்த கூட்டம் ஒரு துளி கண்ணீர் கூட விடாத நிலையில். அந்தக் கூட்டம் அழிந்து போவதற்கு யார் துணை நின்றால் தான் என்ன? மகிந்த இந்தியாவின் துணையைப் பெற்றால் என்ன உளவு நிறுவனம் கேபியின் உதவியைப் பெற்றால் தான் என்ன? புலிகள் இன்று இருந்திருந்தாலும் எதையும் சாதிக்கப் போவதில்லை. இருந்தாலும் ஒன்று தான் அழிந்தாலும் ஒன்று தான்

யதார்த்தவாதியா என்றாலும் கேபி இன்று கூறும் தன் மனமாற்றம் எவ்வளவு தூரம் உளச்சுத்தியானது என்பதைப் பொறுத்தது யேசு உயிர்த்து விட்டார் என்பதை நம்பாத தோமாஸ்கள் n;பாலத் தான் நாங்களும் கேபி உண்மையாக மனமாற்றம் அடைந்த யதார்த்தவாதி என்பதை. அவரைத் தனியாக வெளிநாடு போக அனுமதித்து. என்ரை வாலைப் பிடி பாப்பம் என்று வறுகி. வெளிநாடுகளில் தஞ்சம் கோராமல். தன் கருத்துக்களை நிறைவேற்றுவதற்காக. சுயமாகவே திரும்பி வருவாராக இருந்தால் நம்பலாம்

குர்திஸ் மக்களின் தலைவனாக. கிரேக்க தேசத்தில் வாழ்ந்து போராட்டம் நடத்திய ஓஜாலான். துருக்கி கிரேக்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்தியதும் அங்கே தஞ்சம் இருக்கப் பயந்து கென்யாவுக்குப் போன போது. விமானத்தில் வைத்து துருக்கியர்களால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். விசாரணையில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் மரண தண்டனை கிடைக்கலாம் என்ற நிலையில். துருக்கிய அரசியலமைப்பின் கீழ் பேச்சுவார்த்தையுடனான தீர்வுக்கு சம்மதம் என்று தெரிவித்தும். தற்போது ஆயுட்தண்டனையில் சிறையில் இருக்கிறார். ஓஜாலான் சுருக்குக் கயிறு தன் கழுத்துக்கு வந்து. தன் உயிருக்கு ஆபத்து என்று வந்தவுடன் பேசித் தீர்க்கலாம் என்றது போல கேபியும் செய்கிறார். பிரபாகரன் செய்ததும் அதுதான் தன் உயிருக்கு பாதுகாப்பு இருக்கும் வரையில் கரும்புலிகளை அனுப்பி அழிவு பண்ணி. மாவீரர் பட்டம் கொடுத்தவர் தன் உயிர் என்றதும் கொடி தூக்கவில்லையா?

இவர்கள் எல்லாம் சிறையில் அடைத்தாலும் இலட்சியத்தை விட்டு விலகாத மகாத்மாவோ மண்டேலாவோ அல்ல தூக்கில் தொங்கி சித்திரவதை செய்யப்பட்ட போதும் சுதந்திரம் வேண்டிக் குரல் கொடுத்த ஸ்கொட்லாந்தின் வீர இதயம் படைத்த வில்லியம் வலஸ{ம் அல்ல

கேபியின் மனமாற்றம் உளச்சுத்தியானதா வெறும் நடிப்பா என்று ஆராய்வதை விட்டு. மாயைகளால் உருவாக்கப்பட்ட இந்த மாவீர மாயாவிகள் எல்லாம் உயிருக்குப் பயந்த வெறும் மனிதர்களே என்று. நாங்கள் தான் யதார்த்தங்களை விளங்கிக் கொள்ளும் யதார்த்தவாதிகளாய் இருக்க வேண்டும்.

தற்போது வெறுமனே கோத்தபாயா. மகிந்த போன்ற தனிநபர்கள் சிலரைச் சுற்றித் தான் கேபியின் நம்பிக்கை தான் வாழ்க்கை இருக்கிறது மாறும் அரசியல் நிலைகளில் இது ஆபத்தானது எனினும் மகிந்த தனது நிலையை அரசியலமைப்பு மாற்றங்களால் ஸ்திரப்படுத்திய நிலையில் கொஞ்ச நாளைக்கு கேபியின் காட்டில் மழை பெய்யும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டதாக தம்பட்டம் அடிக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் சாதிக்க முடியாததை கேபியால் இன்று செய்ய முடிகிறது. அதிலும் தான் நம்பிய கொள்கையில் செயற்படுவதற்கு சில புலன் பெயர்ந்த முக்கிய புள்ளிகளை தன் வழிக்கு வரச் செய்து. பயன்படுத்த முடிகிறது. தன் துரோகப்பட்டத்தையும் மீறி. இன்றும் புலி ஆதரவாளர்கள் மறைக்க முயலும் உண்மைகளை பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது. போராட்டத்திற்காக தங்களைத் தியாகம் செய்தவர்களும் கடைசி நேரத்தில் பலி கொடுக்க இழுத்துச் செல்லப்பட்டவர்களும் இன்று தங்கள் வாழ்வையே அதற்கான விலையாகச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஈழக்கனவோடு கனவுலகில் வாழ்பவர்களும் கனவு வியாபாரிகளும் இவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல். அரசைக் குற்றம் சாட்டுவதற்காக முதலைக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்

அத்துடன் கேபி இதுவரைக்கும் அரசியல் தீர்வு என்பது பற்றி வாயே திறக்கவில்லை. தேவைப்பட்டால் புலன் பெயர்ந்த கூட்டத்திற்கு உசுப்பேத்த வாய் வீச்சுக் காட்டியிருக்கலாம் தன்னுடைய நிலையை நன்றாக உணர்ந்ததால் அரசியல் தீர்வு பற்றிய கதை இல்லாமல். போராளிகள். இடம் பெயர்ந்தோர் நலன் பற்றி பேசுகிறார்.

கேபி துரோகியும் இல்லை யதார்த்தவாதியும் இல்லாமல் இருக்கலாம்.

அவர் ஒரு ழே;நிலையின் கைதி அந்தக் கைதியிடம் அதிகமாய் எதிர்பார்க்காமல். தன் ழே;நிலைக்கேற்ப. தமிழ் மக்களுக்குச் செய்ய முடிந்ததை செய்வதையாவது பாராட்டுவோம்

இல்லை. கேபி துரோகி தான் என்று வரிந்து கட்டிக் கொண்டு சூளுரைப்பவர்கள் நெடியவன் கூட்டம் தமிழ் ஈழத்தைப் பெறவும் முகாம்களில் அடைபட்டிருக்கும் போராளிகள் விடுதலை பெறவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதையும். இதுவரைக்கும் இந்த போராளிகளுக்கும் இடம் பெயர்ந்தோருக்கும் என்ன செய்தது என்பதையும். நெடியவன் தலைமையிலான வணங்காமண் கப்பல் எப்போது புறப்படும். அதில் தங்களது பிள்ளைகளை வேல் கொண்டு அனுப்ப எத்தனை புலநானூற்று பெற்றோர் தயார். கட்டாக்காலி முரட்டுக்காளைகளாய் திமிறித் திரியும் இளையோர் எத்தனை பேர் களம் செல்லத் தயார் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தால். அவர்கள் போகிற வழிக்குப் புண்ணியம் கிடைக்க. நாங்களும் அவர்களுக்கு ஏதோ நம்மாலானது எதையாவது செய்யலாம்?

முற்றும்.

மேதகு பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் (தாயகம்)

 

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்