தேசம்நெற் தங்கியிருப்பது இந்த கற்றன் அரசியல் பேசும் பொறுக்கிகளில் தான். அவர்களின் கொசுறு வாசகர்கள் இவர்கள் தான்.உங்கடை அரசியல் புலியிசமா? கைக்கூலி புலியெதிர்ப்பா? அல்லது ஏது? அதையாவது கருத்தாக வைத்துக் கொண்டு உங்களால் ஏன் நேர்மையாக அரசியல் ரீதியாக வர முடியவில்லை.

அதைச் சொன்னால் உங்கள் வங்குரோத்து அம்பலமாகிவிடும் என்பதால், தேசம்நெற்றில் வந்து குசுவுகின்றீர்கள். வாழ்க உங்கள் தேசியம், உங்கள் ஜனநாயகம்.

 

கற்றன் நாஷனல் வங்கிக் கொள்ளை பற்றி பேசுகின்றீர்கள். அந்த வங்கியின் பெரும் தொகைப் பணத்தை, பலரைக் கொன்று கொள்ளையிட்டது புலிகள். நாம் வங்கியை விட்டுச் சென்ற பின், மிகுதியை கொள்ளை அடித்த ஈ.பிஆர்.எல்.எப். எல்லாம் உங்கள் ஆட்கள் தான்.

 

நாம் வங்கி கொள்ளை செய்தது என்பது, தற்செயலானது. இந்தியா எதிர்புரட்சிகர கும்பலை ஆயுதப்பயிற்சி ஊடாக வளர்க்க தொடங்கியவுடன், அதை நிராகரித்த நாம், அதை எதிர் கொள்ளவே அது செய்யப்பட்டது. அதை ஏன் சாதிக்க முடியவிலiல என்பது, அமைப்பு பற்றிய விமர்சனம். யாரும் பணத்தைக் கொண்டு உங்களைப் போல் ஓடிவிடவில்லை.

 

இந்தவிடையம் மீது, அதுவும் எனக்கு எதிராக இதில் அக்கறை கொள்பவன் யார்? எந்த நோக்கில்? இது அல்லவா இந்த பின்னணி அரசியல் நோக்கத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றது. அவர்கள் அதைச் சொல்ல மாட்டார்கள், நீங்கள் யாராவது இதைச் சொல்ல முடியுமா? நாவலன் மட்டும் இதை பார்க்க முனைந்தார்.

 

மீண்டும், இதைச் சொல்லும் அந்த நபர்கள் யார்? ஏன் சொல்லுகின்றான்? அவனின் நோக்கம் என்ன? என்னைக் குற்றம் சாட்டும் போது, ஏன் குற்றம் சாட்டுகின்றான். எனது அரசியலை எதிர்ப்பதற்காக என்பது தெளிவானது. இது தான் அவனின், தேசம்நெற்றின் அரசியல் வழியா? இதுதான் மண்டையில் போடும் புலிகள் வழி கூட. என் அரசியலை எதிர்க்கும், அவனின் அரசியல் என்ன? இங்கு எந்த ஒரு சமூக நோக்கமும் கிடையாது. தெரிந்தால் சொல்லுங்கள். சமூக விரோதம், இதை தவிர வேறு எந்த அரசியல் நோக்கமும் அவர்களிடம் கிடையாது. தேசம் நெறறிடம் அது உண்டா என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.

 

பி.இரயாகரன்
18.11.2007