2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி இரவு டிவியைப் பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. தர்மபுரி இலக்கியம்பட்டியில் சுற்றுலாவுக்கு வந்த கோவை வேளாண் பல்கலைகழக மாணவ, மாணவிகள் வந்த பேருந்து அதிமுக குண்டர்களால் எரிக்கப்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த 3 மாணவிகளையும் வேண்டுமென்றே திட்டமிட்டு கொளுத்தி கொன்று போட்டார்கள் அந்த அதிமுக பாசிஸ்டுகள்.

 

அடுத்த நாள் நான் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் போது ஆங்காங்கே பேருந்துகள் அதிமுக குண்டர்களால் மறிக்கப்பட்டது, பல குண்டர்கள் பேருந்துகளை சேதப்படுத்தினார்கள். ஒருவன் கருணாநிதி தே……….மவன் என்று பேருந்தில் எழுத , மற்றொருவன் கருணாநிதியின் தாயை மிகவும் கொச்சையாக திட்டிக்கொண்டு போனான். பின்னர் போலீசு அவர்களை கைது செய்தது.


நாங்கள் கல்லூரிக்கு பயணமானோம், வகுப்பில் எல்லோரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். வேதியியல் ஆசிரியர் வந்தார். அவர் எப்போதும் 60 நிமிட வகுப்பு நேரத்தில் கடைசி 10 நிமிடம் அன்றைய செய்திகளை கேட்பார் மாணவர்களிடம். அவர் அன்று பாடம் எதுவும் எடுக்க வில்லை, ” மாணவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், எவ்வளவு கொடூரம், நாய்கள், பரதேசிப்பசங்க என்றார், இந்த பாழாப்போன அரசியல் மாணவர்களை கொன்றுவிட்டது, நமக்கு அரசியலே வேண்டாம்” என்றார். சற்று நேரத்தில் அலுவலக உதவியாளர் சுற்றறிக்கையை கொடுக்க, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

அன்றும் அடுத்த சில நாட்கள் இதேதான் செய்தியாய் தொடர்ந்தது ஊடகங்களில், பல மாணவிகள் மாணவர்கள் எல்லோரும் சோகமாய் என்ன செய்வதென்று தெரியாமல் சடங்குக்காக என்று மவுன ஊர்வலம், அமைதிப் போராட்டம் என நடத்தினார்கள். ஆனால் எனக்குத்தெரிந்து எந்த அதிமுக கொடிக்கம்பமோ, அதிமுக அலுவலகங்களோ தாக்கப்படவில்லை.

மக்கள் தாரைதாரையாக கண்ணீர்விட்டார்கள். அதிமுகவின் ஜெயா டிவியோ எல்லாம் டூப் என்றது, சன் டிவி தனது ஆட்களை வைத்து எடுத்த சினிமா என்றார்கள் அதிமுகவினர். கோகிலவாணியின் தந்தை உட்பட பலியான அனைத்து மாணவிகளின் பெற்றோர்களும் ஊடகங்களில் தீனிக்காக காட்டப்பட்டார்கள். யாரும் இதற்கு காரணமான அதிமுகவை தடை செய்யக்கோரவில்லை, பல நடு நிலை நாயகர்கள் சொன்னார்கள் “யாரோ செஞ்ச தப்புக்கு கட்சி என்ன செய்ய முடியும்?”

வழக்கு சேலம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது 3 பேருக்கு தூக்கும் 25 பேருக்கு சிறையும் கொடுத்தது நீதித்தாய். பின்னர் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். அங்கு 2007-ல் தூக்கு உறுதி செய்யப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றமும் 3 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

கடைசியில் நீதி வென்றிருக்கிறதா?

கடைசியில் மட்டுமல்ல முதலில் கூட மக்களுக்கான நீதி வெல்வதில்லை, ஏதோ சாராயத்திற்கு ஊறுகாய் போல தவிர்க்க இயலாத தீர்ப்புக்கள் இப்படி வெளிவருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் ஊழலுக்காக கைது செய்யப்படும் போது மக்களின் மீது வன்முறை ஏவிவிடப்படுகிறது. மக்கள் குடி நீருக்காக, விவசாயம் அழிக்கப்படுவதற்கு எதிராக போராடும் போது அவர்ளின் மண்டையை பிளக்கும் போலீசு மக்கள் மீது வன்முறையை ஏவிவிடும் இந்த பாசிச ரவுடிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறது. “தயவு செய்து” கைதாக சொல்கிறது. மாவோயிஸ்டு கட்சியைச்சேர்ந்த சுந்தரமூர்த்திக்கு 5 ஆயுள் தண்டனை தரப்படுகிறது. ஏன் என்றால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாய் என பதில் வருகிறது.

யார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது? கருணா ஆட்சிக்கு வந்தால் செயாவை பிடித்து உள்ளே போடுவது, செயா வந்தால் கருணாவை தூக்கி போட்டு மிதிப்பது, இந்த தெரு நாய்ச்சண்டையில் மக்கள் தலைகள் உடைக்கப்படுவதில்லையா? இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலீம்களை கொன்ற மோடி அத்துவானி கூட்டணி இன்று அரியணையில் ரத்தம் குடிக்க நாக்கைத்தொங்கபோட்டு கொண்டு அலைகிறதே, இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? அரிசிவிலை, பருப்பு விலை, பெட்ரோல் விலை எல்லாம் ஏகத்துக்கும்
எகிறிக்கிடக்கிறதே ! இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் நொடிந்து தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டார்களே, இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா?

இந்நாட்டின் கனிமவளங்களை சூறையாட இந்திய அரசால் நடத்தப்படும் போரினால் எத்தனை மக்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள் ? கொல்லப்படவிருக்கிறார்கள்? இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா?பட்டினியில் ஆப்பிரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறதே இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லையா? இவ்வளவு ஏன் 26 வருடம் கழித்த வந்த போபால் தீர்ப்பின் யோக்கியதையை நாடறியும், 20000க்கும்
மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆண்டர்சனுக்கு விடுதலை, காரணமான எந்த அதிகாரியும் ஒரு நாள் கூட சிறையில் இருக்கவில்லை. இதுதான் இந்த நீதியின் யோக்கியதை.

ஏன் போலீசு வெறியன் பிரேம்குமாரால் பாதிக்கப்பட்ட நல்லகாமனின் வழக்கின் கதை சுபமாக உச்ச நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது, ஆம் “ யோவ், 25 வருசத்துக்கு மேல எதுக்குயா இந்த கேச இழுத்துகினு இருக்கீங்க” என்ற பொருமலோடு பிரேம் குமார் , நல்லகாமன் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மனித உரிமை போராளி அய்யா நல்லகாமனின் போராட்ட வரலாற்றை நாம் அறிவோம். இத்தனை ஆண்டு காலம் தன் குடும்பசொத்தையெல்லாம் விற்ற அந்த நல்லகாமனுக்கும், அவரின் வழக்கை ஏற்று நடத்திய மனித உரிமை பாதுகாப்பு மையமும் கடந்து வந்த பாதை நெடியது.
அது சொல்வது இதுதான் ” இது மக்களுக்கான நீதி அல்ல, அதிகாரவர்க்க ,பார்ப்பன பனியா, முதலாளிக்கானது”

தெருவிலிறங்கி தண்டனை கொடுப்போம் !

இப்போது வந்திருக்கும் இந்த பேருந்து எரிப்பு தீர்ப்பினை பற்றி பேசுவோம். 3 மாணவிகள் திட்டமிட்டு கொலை
செய்யப்பட்டிருக்கிறார்கள். அச்சம்வத்தில் ஈடுபட்ட எல்லோருக்குமே மூவர் உள்ளே இருப்பது தெரிந்துது இருக்கிறது. அக்கட்சியின் பாசிசத்தலைவி இதை திமுகவினர் செய்ததாக சொன்னார், அக்கட்சியினரும், அவர்களின் தொலைக்காட்சியோ இதை நாடகம் என்றது. குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுமா? என்பது கேள்விக்குறியே? சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மன்னிக்க, ஓட்டைகளில் உள்ள சட்டங்கள் வழியே அவர்கள் கருணை மனு, இதர வெங்காய மனுக்களை நீட்டிக்கொண்டி திரிவார்கள்.

இப்படியே இழுத்தடிக்கப்பட்டு அவர்கள் தண்டனை காலத்திற்கு முன்னரே செத்தும் போகலாம் அல்லது எதுவும் நடக்கலாம்.மரண தண்டனை விதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் மட்டுமல்ல, இந்த பாதகத்திற்கு தலைமை தாங்கிய புரட்சித்தலைவியும்தான். அதிமுக என்ற பாசிசக்கூடாரமே தடை செய்யப்பட வேண்டும்.

அப்சல் குரு, அஜ்மல் கசாப் என்ற இரு பலியாடுகளை உடடே தூக்கிலேற்றக்கோரி, முசுலீம் கட்சிகளை தடை செய்யத் துடிக்கும் தேசியத்தின் வாய்கள் இப்போது இந்தியா முழுக்க வேண்டாம் தமிழகத்தின் ஏதாவதொரு மூலையில் அதிமுகவை தடை செய்யவும், 3 பேரை உடனே தூக்கில் போடக்கோருவார்களா? பல்லாயிரக்கணக்கான ஆண்டர்சனை அன்று மக்கள் கையில் கொடுத்திருந்தால் அவர்கள்
அவனை அப்போதே நரகத்திற்கு பத்திரமாக அனுப்பிவைத்திருப்பார்கள், ஆனால் காங்கிரசோ அவனை அமெரிக்க சொர்க்கத்திற்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்தது. இவர்கள் இதை செய்வார்கள் என்றால் அது குருட்டு நம்பிக்கையாகவே இருக்கும்.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ், பாஜக, விஎச்பி போன்ற அகில இந்திய பாசிஸ்டு கட்சிகளும், தமிழகத்தை பார்ப்பன மயமாக்குவதையே லட்சியமாக கொண்டுள்ள இந்து முன்னணி, அதிமுக ……………………கட்சிகளும், இந்திய விவசாயத்தினை , தேசிய தொழில்களை வேரறுக்கும் ஆளும் வர்க்க கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு தலைமை தாங்கும் அனைத்து பாசிச பயங்கரவாதிகளுக்கும் அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும். இதை நாம் தெருவிலிறங்கி வாளேந்தித்தான் சாதிக்க முடியுமே தவிர வேறெதாவது வழி இருக்கிறதா என்ன?

http://kalagam.wordpress.com/2010/08/30/தர்மபுரி-பேருந்து-எரிப்/