Language Selection

மக்கள் குரல், தீக்கதிர், S.M.G வாங்கியது, 80000 ரூபா இரண்டு ஏகே-47 (AK-47) வாங்கக் கொடுத்தது. ஆயுதப் புத்தகங்கள் சில, றோனியோ 2, மாணவர் அமைப்பு நோட்டிஸ், பயணம், இவைகள் ஏதோ ஒரு விதத்தில் என்னுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது. இதை விட 1970 முதல் வெளி வந்த பல தேசிய இயக்கங்களின் துண்டுப்பிரசுரமும் அது சார்ந்த ஆவணங்கள், நூல்கள், யாழ் குடாவில் நடந்த பல்வேறு சம்பவங்கள் சார்ந்த போட்டோக்கள் என்று ஒரு ஆவணத் தொகுப்பையும் கொடுத்த இருந்தேன். இதுவே நான் வசந்தனுடன் பொருட்கள் தொடர்புடைய விடையமாக இருந்தது.

வசந்தனுடன் தொடர்பு என்ற விதத்தில் 1983 முதலே நான் தொடர்பு கொண்டிருந்தேன். இவருக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்த ஐபி என்பவர் என்னை அடிக்கடி, 1983 பின் சந்திக்கத் தொடங்கினார். புளட்டின் உள் முரண்பாடு அதிகரித்த போது, அரசியல் ரீதியாக என்னுடன் நெருங்கிய அளவில் தொடர்புபட்டு செயற்பட்டார். பல ஆலோசனைகளை வழங்குவது முதல், பல வழிகளில் அரசியல் ரீதியாக எம்மை நோக்கி வென்றெடுக்கப் போராடினேன். புளட்டின் உள் முரண்பாட்டை தொடர்ந்து நடந்த தள மகாநாட்டில் கலந்து கொள்ளச் (இதில் கலந்து கொள்வதை நாம் விமர்சித்த போதும்) சென்றவர். அதில் முன்வைக்கவேண்டிய விடையங்கள் முதல் இந்த ஆவணங்களை நான் எம் அமைப்பு மூலம் றோணியோ செய்யும் பேப்பரில் ரைப்பண்ணிக் கொடுத்தேன். இது தான் புளட்டின் தள மாநாட்டு அறிக்கை. அதில் கலந்து கொண்ட பினனர், அவர் என்ன ஆனார் என்பது இது வரை (2010 மீள தொடர்பு ஏற்பட்டது) எனக்குத் தெரியாது. இந்த ஐபி என்னை சந்தித்த போதெல்லாம், அவருடன் வசந்தன் வருவார்.

ஐபி சென்ற பின் வசந்தன் என்னை அடிக்கடி சந்திக்கத் தொடங்கினார். நாம் மேலும் ஐக்கியப்பட்ட வகையில் செயற்படத் தொடங்கினோம். அமைப்பின் உறுப்பினராக நாம் உள்வாங்காத நிலையில், ஆனால் நெருங்கிய வகையில் இணைந்து செயற்பட்டோம். இந்த வகையில் சில வேலைகளை இணைந்து செய்தோம். இயக்கங்களை புலிகள் அழித்த பின்பு, அவர்களின் ஆயுதங்களை வாங்குவதை கையாண்டோம். இதில் ஆபத்து இருந்தபோதும், சுற்று வழிமுறைகளைக் கையாண்டோம். இந்த வகையில் ஆயுதங்களை வாங்கினோம். வாங்கப் பணம் கொடுத்தேன். இந்த வகையில் வசந்தன் ஊடாக முதலில் ஒரு ஆயுதம் வாங்கினேன். பின்பு இரண்டாவதாக இரண்டு ஆயுதங்கள் வாங்கப் பணம் கொடுத்தேன். இதை விட எனது சொந்த வீடு பலாலி இராணுவ முகாமுக்கு மிக நெருக்கமாக இருந்ததால், இராணுவம் முன்னேறி எம் பிரதேசத்தை தனது முகாமாக்கியது. இந்த நேரத்தில் எனது பொறுப்பில் இருந்த பல ஆவணங்களை அவசரமாக இடம்மாற்ற வேண்டியிருந்தது. அதை வசந்தனிடம் கொடுத்திருந்தேன்;.

இதில் சில ஆயிரம் பல்வேறு விதமான துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்தேன். 1970 முதல் சேகரிக்கப்பட்ட ஈழப் போராட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் முதல், யாழ்பல்கலைக்கழக விஜிதரனுக்காக முன்னெடுத்த போராட்டம் தொடர்பாக வெளிவந்த 120 துண்டுப்பிரசுரங்கள் வரை, சகலவிதமான ஆவணங்களும் அதில் அடங்கியிருந்தன. இன்று புலிகளிடம் ஒரு ஆவணத் தொகுதி இருக்குமாயின், அது தனிப்பட்ட ரீதியில் என்னுடையவையாகும். தனிப்பட்ட ரீதியில் இதை சேகரிப்பதில் நான் பல வழித் தொடர்புகளை முழுமையாக பயன்படுத்தியிருந்தேன். இது தவிர என்.எல்.எப்.ரியின் சகல பகிரங்க இரகசிய வெளியீடுகளையும் கொண்ட ஆவணங்களும் இதில் அடங்கும். கூட்டான மாணவர் நோட்டிஸ், மற்றும் வேலைத் திட்டங்கள் என்று பல்துறை சார்ந்த ஆவணங்கள், இதில் அடங்கும். மற்றும் போராட்டம் தொடர்பாக பல்துறை சார்ந்து நானும் வேறு தோழர்களும் எடுத்த படங்களும் அடங்கும். இந்த படங்களில் ஒரு பகுதி என் கையில் தற்போது (அண்ணளவாக 300 படங்கள்) எஞ்சி உள்ளது.

புலிகள் ஒரு நூல் நிலையத்தை வைத்திருப்பின், அந்த நூல்கள் கூட எம்முடையதே. கொல்லப்படுவதற்காக கடத்திய என்;.எல்.எப்.ரி, பி.எல்.எப்.ரி, தீப்பொறி சேர்ந்த ஒவ்வொருவர் வீட்டிலும் இருந்த நூல்களைக் கூட புலிகள் அபகரித்தனர். நூல்கள் வைத்திருப்பது மற்றும் நூல்களை படிப்பதும் கூட, தேசத் துரோகமாக இருந்தது. அறிவைப் பெறுவது புலிக்கு எதிரான துரோகமாக கருதி, அது தடுக்கப்பட்டது. பிரபாகரன் புத்தக அலுமாரிக்கு முன்பாக இருந்து கொடுத்த பல படங்களுக்கும், அவரின் அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த புத்தகங்கள் அனைத்தும் எம்முடையவை. அந்தப் புத்தகத்தை வைத்திருந்தவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகியதுடன், படுகொலைக்கு உள்ளானார்கள். இப்படிப் பாசிச வதைக்குள் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டவர்களின் நூல்களை சொந்தம் கொண்டாடிய புலிகள், அதன் முன் "மேதகு" தலைவர் பிரபாகரனை நிறுத்தி போஸ் கொடுக்க வைத்தனர்.

புலிகளின் பாசிசம் கோரத் தாண்டவம் ஆடிய நிலையில் அதை எதிர்கொள்ள, இரகசிய செய்திப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கினோம். இதை நாம் தபால் மற்றும் வாசிகசாலைகள் என்று பல தளத்தில் கொண்டு சென்றோம். இது போன்று வசந்தனும் வேறு சிலரும் இணைந்து, மற்றொரு இரகசிய பத்திரிகையை கொண்டு வந்தனர். இந்தப் பத்திரிகையையுடன் நாம் தொடர்பு கொண்டு எழுதவும், விநியோகிக்கவும் தொடங்கினோம். ஒரு சில இதழ்களை நாம் வெளிக் கொண்டு வந்தோம். இந்த வகையில் மக்கள் குரல், தீக்கதிர் இதழ்கள் அன்று குறிப்பிடத்தக்க ஒரு முன் முயற்சி கொண்ட செயற்பாடாக இருந்தது. இது பலரை ஆச்சரியப்பட வைத்ததுடன், இதை பல தளத்தில் பெற்றுக் கொள்ளவும், வாசிக்கும் ஆர்வமும் ஏற்பட்டது. ஒரு சில இதழ்களையே, றோணியோ மூலம் நாம் கொண்டு வந்திருந்தோம். இந்த பத்திரிகை வெளியிட்டதை, வசந்தன் ஒப்புக் கொண்டதை அறிய முடிந்தது. அதற்காகவே இந்த றோணியோ பயன்படுத்தப்பட்டதாக கூறியிருந்தார். நாம் அவரூடாக வாங்கிய எஸ்.எம்.ஐp. ஆயுதம் ஒன்றை அவரின் பாதுகாப்பில் வைக்க கோரியிருந்தோம். அதையும் அவர் அவர்களிடம் கொடுத்திருந்தார். அத்துடன் எஸ்.எம்.ஐp.க்காக என்னிடம் இருந்த ஒரு மகசினை நான் தருவதாக அவருக்கு கூறியதால், அதையும் அவர் கூறியிருந்தார். அது என்னிடம் இருந்தமையால், அதனுடன் இருந்த எனது பிஸ்ரல் ஒன்றையும் அதற்கான ரவைகளையும் வேறு ஆயுத ரவைகளையும் சேர்த்து நான் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவை ஒன்றாக வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமே நேரடியாக என்னிடம் இருந்து அவர்கள் கைப்பற்றிய பொருட்கள்.

வசந்தன் ஒப்புக்கொண்ட விடையங்கள் பற்றிய, முழுமையை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. நேரடியான ஆயுதம் வாங்க முயன்ற தொடர்ச்சியின் போதே, வசந்தன் கைதானதாக புலிகள் கூறினர். ஆனால் வேறு இடத்தில் வைத்து எனது பொருட்களையும், அவரின் பொருட்களையும் எப்படி புலிகள் தெரிந்து கொண்டனர் என்பது, எனக்கு மர்மமாகவே இன்று வரையுள்ளது. அநேகமாக வசந்தன் தனக்கு தெரிந்த அனைத்தையும் நிபந்தனையின்றி ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். இல்லாத வேறு வழியென்றால், அது கேள்விக்குரியதே.

வசந்தனுக்கு முன்பாக கைதான இன்னுமொரு நபரான அதியனை (இது அவரின் இயக்கப் பெயர்), நான் பின்பு பாரிசில் சந்தித்தேன். எனக்கு இலங்கையில் அவரைத் தெரியாது. அப்போது அவரின் தகவல்படி வசந்தன் காதலித்த பெண் பகுதியினரே, புலிக்கு இதை காட்டிக் கொடுத்ததாக கூறினார். அதாவது வசந்தனின் குறைந்த சாதி அடையாளம், உயர் சாதியைச் சேர்ந்த பெண் வீட்டாரின் காட்டிக் கொடுப்புக்கு காரணம் என்று அவர் விளக்கினார். அவரும் அந்த ஊரைச் சேர்ந்தவர் மட்டும் இன்றி, புளட் பயிற்சிக்காக பிரான்சில் இருந்து லெபனான் சென்று பயிற்சி பெற்றவர். வசந்தன் எங்கு வைத்து, யாரிடம் இருந்து, நான் பணத்தைப் பெற்றுத் தந்தேன் என்ற விபரங்களைக் கூட கூறியிருந்தார். மாத்தையா என்னிடம் கேட்ட கேள்வி ஒன்றில், அந்த பெண்ணிடம் (சபேசனின் அக்காவிடம்) எவ்வளவு இயக்க பணம் உள்ளது என்று என்னிடம் கேட்டார். அதே நேரம் உங்கள் ஆதரவாளர்கள் வீட்டுப் பெண்களிடம் எல்லாம், இயக்கப் பணம் உள்ளதா? என்றார்.

எனது கைது சார்ந்து வசந்தன் சொன்னவை, இரண்டு வெ வ்வேறு தொடர்புடைய விடையங்களை உள்ளடக்கி இருந்தது. அத்துடன் அவர் சம்பந்தப்பட்ட முன்றாவது வேலை முறையையும், வசந்தன் ஒப்புக் கொண்டது என்பது, அரசியல் ரீதியாக இதனைக் கேள்விக்குரியதாகி விடுகின்றது. சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் முக்கியமான செயற்பாட்டாளராக இருந்த சிவகுமார் தான், இந்த வசந்தன். வசந்தன் பாரிஸ் வந்து என்னைச் சந்தித்த போதும் கூட, எதுவும் இது பற்றி என்னுடன் பேசவில்லை. பாரிசில் புலிகளின் பத்திரிகைத் துறை சார்ந்தவர்களை அவர் சந்தித்த போதும் கூட, அதைப் பற்றி என்னுடன் எதுவும் பேசவில்லை. எனக்கும் அவருக்கும் இடையில் அரசியல் ரீதியான முரண்பாடு உருவாகியிருந்தது. வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு, சமரசமான சீர்திருத்தத்தையே அவர் தனது அரசியலாக, நடைமுறையாக கையாள்வது, அவரின் சரிநிகர் கால அரசியலாகிப் போனது.

தொடரும்
பி.இரயாகரன்

30.03.05.1987 – 06.05.1987 வரை இரண்டாவது வதை முகாமில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 30)

 

29. புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)

 

 

 

28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)

 

 

27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)

 

26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)

 

25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)

 

24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)