Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடுமையாக யுத்தம் நடந்த சூனியப் பிரதேசத்தில் தான், எனது முதலாவது சித்திரவதை முகாம் இருந்தது. இதன் மூலம் தங்கள் அநியாயங்களை, வெளி உலகின் கண்ணுக்கு இலகுவாக மறைக்க முடிந்தது. இரண்டாவது வதைமுகாமோ, வெட்ட வெளியை ஒட்டிய ஒரு பிரதேசத்தில் இருந்தது.

முதலாவது வதைமுகாமில் இருந்து, புதிய வதை முகாமுக்கு மீண்டும் கடத்திச் சென்றனர். வெளி உலகத்;துக்கு தங்கள் கொடூரங்கள் தெரியாது இருக்கும் வண்ணம் பார்த்துக்கொண்டனர். என் கண், கை,  வாய், கால் கட்டப்பட்ட நிலையில் வானில் தூக்கிப்போடப்பட்டேன். கடுமையான வெயில் வெளிப்படுத்திய சூடு, அண்ணளவாக நேரத்தை பறைசாற்றியது. மே இரண்டாம் திகதி மதியமே, இரண்டாவது வதைமுகாம் நோக்கிய பயணம் ஆரம்பமானது. எனக்கு முன்பாக போடப்பட்ட வசந்தன் நிமிர்ந்து எழ, மண்டையில் வையடா என்று விசு அலறினான்;. விசுவை குரல் மூலம், அவன்தான் என்பதை அடையாளம் காணமுடிந்தது. அவனின் காட்டுக் கத்தலுடன் கூடிய மிரட்டல், அவனின் கோரமாக வக்கிரமாக வெளிப்பட்டது. வான் யாழ் வீதி ஒன்றின் வழியாக, அடுத்த வதைமுகாமை நோக்கி வேகமாக ஓடியது. அவர்கள் எம்மை கொண்டு சென்ற போது, நான் இது இரண்டாவது வதை முகாம் நோக்கியல்ல, எமக்கு மரண தண்டனை தரத்தான் கொண்டு செல்லுகின்றனர் என்றுதான் எண்ணினேன். எங்கேயோ சுட்டு புதைக்க கொண்டு போகிறார்கள் அல்லது வீதிகளில் உள்ள லைற் தூணில் கட்டி சமூக விரோதியாக காட்டி சுடப் போகின்றார்கள் என்ற எண்ணம் எனது மனநிலையில் தோன்றியது. இது எம்மண்ணின் புலிப் பாசிசம் கட்டமைத்த தொடர்சியான அரசியல் நடத்தையாக இருந்தது. இப்படி எத்தனையோ கொலைகளை நாம் எம் கண்ணால் பார்த்தோம், அறிந்தோம். அதுபோல் அறியமுடியாமல் பல ஆயிரம் சம்பவங்களில், காணாமல் போனவர்களின் மரணங்கள் கொடூரமானவை.

எம்மை ஏற்றிச் சென்ற வாகனம் பற்றி, மக்கள் என்ன நினைத்திருப்பார்கள். வழமை போல், போராடச் செல்லும் இளைஞர்கள் செல்வதாகவே நினைத்து இருப்பர்கள். மக்களின் உரிமைக்காக போராடியவர்களை மக்களின் போராட்ட நிதியிலும் அவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்தியபடி கடத்திச் செல்வதை, மக்கள் அன்றும் வழமை போல் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தாலும் புலிகளின் ஈவிரக்கமற்ற சித்திரவதை மற்றும் படுகொலைக்கு பயந்து மௌனமாகிவிட்டனர். மிக குறுகிய நேரத்தில், இரண்டாவது வதைமுகாமை அடைந்தோம். என்னை ஒரு அறையில் மீண்டும் தனியாக கண்கட்டப்பட்ட நிலையில் அழைத்துச் சென்று, கண்ணை அவிழ்த்து விட்டனர். அனைத்து கட்டையும் அவிழ்த்ததுடன், மீண்டும் நிர்வாணமாக விட்டுச் சென்றனர். பக்கத்து அறையில் அடைத்து வைக்கப்பட்டவரின் தொடர்ச்சியான நடவடிக்கையை வைத்து, வசந்தன் தான் இருப்பதாக சிறைவாழ்க்கை முழுவதும் நான் ஊகித்தேன்.

ஆனால் உண்மையில் பக்கத்து அறையில் வேறு யாரோ ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை, நான் தப்பிய பின்பே வசந்தன் குறிப்பிட்டார். எனது பக்கத்து அறையில் இருந்தவர் யார் என்று தெரியாவிட்டாலும், அந்த அறையில் இருந்தவர் சித்திரவதை தாங்க முடியாது, தனது சொந்தக் கழுத்தை பிளேற் கொண்டு அறுத்து தற்கொலை செய்ய முனைந்ததாக வசந்தன் மூலம் அறிய முடிந்தது. பக்கத்து அறையில் இருந்தவர் ஏதோ ஓரு காரணத்தால் அடிக்கடி வெளியில் எடுத்துச் சென்றதை, நான் அவதானிக்க முடிந்தது. நான் நோய் காரணமாக இருக்கலாம் என்றே ஊகித்தேன். ஆனால் அது ஒரு துணிச்சல் மிக்க தற்கொலை முயற்சியாக இருந்தை அறிய முடிந்தது. அவர்கள் அவரின் கழுத்தை தையல் (சரியாக ஞாபகம் இல்லை, அநேகமாக 14 தையல்) இட்டு கொண்டதன் மூலம், தொடர்ச்சியான சித்திரவதைக்கு அவரை உள்ளாக்கினர். அவர் திடீரென ஒரு நாள், அங்கிருந்து முற்றிலும் மாயமாகிவிட்டார். அநேகமாக கொன்று இருக்க வேண்டும்;. எனது பக்கத்து அறை நீண்ட மௌனமாகிவிட்டதை பின்னால் உணர்ந்தேன்;. ஒரு கிழமையின் பின்பு வேறு ஒருவர், அந்த வதைமுகாமில் புதிய வதைகளை அனுபவிக்க அழைத்து வரப்பட்டார். மீண்டும் புதிதான சித்திரவதையில் அலறல் முகாமை அதிரவைத்தது. இது வசந்தனுக்கு தான் நடக்கின்றது என்றே நான் நினைத்தேன்.

பக்கத்து அறையில் வசந்தன் தான் என்று கருதி, சுவரில் தட்டி தொடர்பு கொள்ள முனைந்தேன். ஆனால் அந்த அறையில் இருந்து எந்தவிதமான சத்த அடையாளத்தையும் நான் பெற முடியவில்லை. உண்மையில் வசந்தன் குசினியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். குசினியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர் மீது, அடிக்கடி நடக்கும் மிரட்டல்களை நான் காணக் கூடியதாக இருந்தது. மலம் கழிக்க செல்லும் போது, குசினிக்கு முன்பாக இருந்த ஓடையில் காலை உணவை தயாரித்த (பாணுக்கு பட்டரும் சீனியும் அல்லது யாம் பூசிய) படியும், அதில் நின்று சாப்பிட்டபடியும் திரிவோர், குசினிக்குள் இருப்பவரை தாறுமாறாக தூசணங்களால் பேசுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

எனது புதிய வதை அறை பற்றி

மூன்று மீற்றர் நீள அகலம் கொண்ட சற்சதுர அறையாகும். அறையில் சுவருடன் அமைந்த இரண்டு மீற்றர் உயரம் கொண்ட அலுமாரி ஒன்று இருந்தது. அதற்கு கதவுகள் எதுவும் இருக்கவில்லை. தட்டுகள் எதுவும் இருக்கவில்லை. இது போன்று 1.25 மீற்றர் உயரமுள்ள இன்னுமொரு அலுமாரி காணப்பட்டது. அதன் மேல் 5 சாமிப்படங்கள் காணப்பட்டது. அதில் சிவன் - உமாதேவியார், லக்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் படமும் கண்ணாடி பிறேம் போடப்பட்ட நிலையில் காணப்பட்டது. அத்துடன் வீபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் காய்ந்த மாலைகள் நிறைந்து காணப்பட்டது. அதைவிட சில்லறைக் காசும் காணப்பட்டது. அந்த வீட்டார் விட்டுச் சென்ற நிலையில் இந்த அலுமாரி விடப்பட்டிருந்தது. இதை விட 1.5 மீற்றர், நீளமும் ஒரு மீற்றர் அகலமும் கொண்ட பெரிய மேசை ஒன்றும் அங்கு காணப்பட்டது. இதைவிட அந்த அறையில் வேறு எதுவும் இருக்கவில்லை. இரண்டு யன்னலாக பிரிந்து இருந்த போதும், ஒவ்வொன்றிலும் நான்கு நெடுக்கு கம்பிகள் கொண்டதாக தடை இருந்தது. அந்த கம்பிகளுக்கு குறுக்காக மூன்று புதிய கம்பிகள் யன்னல் முறைக்கு மாறாக ஒட்டப்பட்டிருந்தது. சிறைக் கம்பி போல். இது ஒரு சிறைக்குரிய தன்மையை வெளிப்படுத்தியது. யன்னல் உட்புறமாக இழுத்து கட்டப்பட்டிருந்தது. கதவு வெளிப்புறமாக வழமைக்கு மாறாக தாழ்ப்பாழைக் கொண்டிருந்தது. மேல் சீலிங் அடிக்கப்பட்டு இருந்தது. அதில் சிலந்தி கூடுகள் செறிந்து காணப்பட்டது. அறையில் சுவர்களில் இரத்த கறையும், யன்னல் அடியில் அவை மிகையாகவும் காணப்பட்டது. சுவர்களில் சில துப்பாக்கி ரவைக்குரிய சூட்டு அடையாளம் இருந்தது. இதுவே அறையின் பொதுவான தன்மை.

தொடரும்
பி.இரயாகரன்

 

29.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)

26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)

 

25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)

 

24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)