புலி ஒரு பாசிச இயக்கமாக, அதுவே ஒரு அரசியல் சக்தியாக இருந்ததை பலர் புரிந்து கொள்ள மறுக்கும் போதே, தொடர்ச்சியான தவறுகள் இழைக்கப்பட்டது. புலிகளை வெறும் குட்டிப+ர்சுவா வர்க்க இயக்கமாகவும், தேசிய பூர்சுவா வர்க்க நலனை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கருதினர். புலிப் பாசிசத்தின் அடிப்படையை காணத் தவறியதன் மூலம், சரியான அரசியல் வழி தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பாசிசத்துக்கு துணைபோனார்கள். உண்மையில் புலிகளின் பாசிசத்துக்கு எதிரான அணியை துல்லியமாக தனித் தனியாக ஆராய்ந்தால், பாசிசத்தை நிலை நாட்டுவதில் தோல்வி பெற்ற மற்றொரு பாசிச பண்பியலை அடிப்படையைக் கொண்ட உதிரி நபர்களும், குழுக்களும் காணப்படுகின்றனர். புலிப் பாசிசத்தை சரியாக அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள தவறியதன் விளைவு, எதிர் தரப்பையும் புரிந்து கொள்வதை நிராகரிப்பதன் மூலம் போராட்டமே அழிந்தது. அரசியல் ரீதியான தவறான மதிப்பீடு, அரசியல் ரீதியான பாசிச கண்ணோட்டத்தையே நட்பு சக்தியாக அனுசரிக்க கோரியது.
புலிகள் குட்டிபூர்சுவா வர்க்க நலன்களையும், தேசிய பூர்சுவா வர்க்க நலன்களையும் பிரநிதித்துவப்படுத்திய ஒரு தேசிய சக்திகளா? இதற்கு எந்த ஆதாரத்தையும் யாரும் என்றும் தரமுடியாது என்பதே உண்மை. இலங்கை அரசுடன் மோதுவதால் குட்டிப+ர்சுவா வர்க்க நலனையும், தேசிய பூர்சுவா வர்க்க நலனையும் பிரநிதித்துவப் படுத்திவிடுவதில்லை. ஜனநாயகப் புரட்சி நடக்காத நாடுகளில், பூர்சுவா புரட்சி நடக்க முடியாது என்பதை, சோவியத் புரட்சிக்கு பின்னால் துல்லியமாக மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனை தெளிவாகவே நிறுவியுள்ளது. இதை மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளும் யாவரும் அங்கிகரிக்கின்றனர். ஆனால் நடைமுறை ரீதியான பிரச்சனையில், இதை சரியாக கையாள்வதில்லை. இதனால் கோட்பாட்டு ரீதியாக தவறான வாதங்கள் முன் தள்ளப்பட்டது. குட்டிபூர்சுவா வர்க்கம், தேசிய ப+ர்சுவா வர்க்க நலன்களை முன்வைத்து சுயேற்சையாக போராடமுடியாது. பூர்சுவா வர்க்க நலன் என்பது, தரகு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பை அடிப்படையாக கொண்டது. இதை தமிழ்தேசிய போராட்டம் மறுதளித்தது.
தேசியம் என்பது இங்கு பிற்போக்கு தரகு நிலப்பிரபுத்துவ சார்பு நிலையை எடுத்து எகாதிபத்திய மறு காலனியாக்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் சார்ந்து புதியஜனநாயக புரட்சியாக மட்டும் நடக்க முடியும். இங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக பிற்போக்கு வர்க்கங்கள் சார்ந்து எழும் தேசியம் பாசிசத்தையும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து நடக்கும் தேசியம் ஜனநாயகத்தையும் ஆதாரமாக கொள்கின்றது. இதற்கு வெளியில் தேசிய இயக்கங்களின் அரசியல் முதல் அதன் பண்பியல் கூறுகள் வரை, எங்கும் விதிவிலக்கு இருப்பதில்லை.
இங்கு தேசியத்தின் உள்ளடக்கம் என்பது புதியஜனநாயகப் புரட்சி அல்லது ஏகாதிபத்தியம் சார்ந்த உலகமயமாதல் என்ற இரு அரசியல் வழிக்கு வெளியில், மாற்று வழி என்பது கிடையாது. பிரதான எதிரி தேசியத்தை உயிருள்ளதாக தக்கவைக்கும் வரை, இந்த இரு எதிர் நிலைலும் உள்ள முரண்பாட்டை எப்படி நாம் புரிந்து கொள்வது என்பது மிக முக்கியமானதாகும்;. இங்கு ஐக்கிய முன்னணி தத்துவத்தை பிரயோகிப்பதா? அல்லது எதிரியாக கண்பதா? என்பதே இதில் மிக முக்கியமான விடையம். இங்கு தான் பாசிசத்தின் அடிப்படைக் கூறுகளை புரிந்து கொள்வது அவசியமாகின்றது. புலிகள் ஒரு பாசிச இயக்கமா இல்லையா என்பதை புரிந்து கொள்வதன் மூலம், குறிப்பான நிலைப்பாட்டை ஆராய்வோம்;. பாசிசம் பூர்சுவா புரட்சி நடந்த நாடுகளில் வெளிப்படும் போது அதற்குரிய தன்மையும், பூர்சுவா புரட்சி நடக்காத நாடுகளில் இருந்து வேறுபடுகின்றது.
பூர்சுவா புரட்சி நடந்த நாடுகளில், பாசிசம் ஆட்சிக்கு வரமுன்பு சொந்த ப+ர்சுவா வர்க்கத்தை எதிர்ப்பதாக அது நடாகமாடுகின்றது. குட்டிபூர்சுவா வர்க்க நலன்களை வென்று தருவதாக வாக்குறுதி அளிக்கின்றது. பாசிச தத்துவமே பல்வேறு கதம்பக் கூறுகளை கொண்டே உருவாகின்றது. குட்டிபூர்சுவ மக்கள் திரளை கவருவதற்கு பாசிசம், கதம்பத் தத்துவத்தை ஆயுதமாக கொள்கின்றது. வர்க்கமற்ற சமுதாயத்தை படைக்கப் போவதாக பிரகடனம் செய்கின்றது. உழைக்கும் மக்களின் அன்றாட போராட்டத்தில் இருந்து தான் விலகி இருப்பதாக காட்டுவதில்லை. பாசிசம் அதிகாரத்துக்கு வரும் காலம் என்பது, மிக கூர்மையான வர்க்கப் போராட்டம் நடக்கும் போதே நிகழ்கின்றது. மூலதனத்தை தக்கவைத்து சுரண்டலை தீவிரப்படுத்தவும், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கவும், உழைக்கும் மக்களின் நண்பனாக காட்டி ஆட்சியைக் கைப்பற்றுகின்றது. உண்மையில் மக்களின் புரட்சிகரமான வர்க்கப் போராட்டத்தை உள்வாங்கி, அதை பெரு மூலதனத்துக்கு சாதாகமாக மாற்றி அமைக்கின்றது. ஒழுங்குமுறையற்ற இனவெறியை எற்படுத்தி, படுபிற்பேக்கான ஆதிக்க வெறியை ஊட்டுகின்றது. யுத்த வெறியை மூலதனமாக்கி தன்னை தற்காத்துக் கொள்கின்றது. உழைக்கும் மக்களை மிக கொடுரமாக சுரண்டி, சொத்துரிமையை குவிப்பதை ஆணையில் வைக்கின்றது. ஆனால் இவை அனைத்தையும் ஒளிவு மறைவாக தன்னை மறைத்துக் கொண்டே, தன்னை ஒரு ஆளும் பாசிச வர்க்கமாக மாற்றுகின்றது.
பூர்சுவா ஜனநாயக புரட்சி நடக்காத நாடுகளில், பாசிசத்தின்; வெளிப்பாடும் நோக்கமும் வேறுபடுகின்றது. இங்கு உருவாகும் பாசிசம் மிக பிற்போக்கான வகையில் ஏகாதிபத்தியத்துக்கும் உலகமயமாதலுக்கும் சேவை செய்வதை அடிப்படையாக கொண்டது. ஏகாதிபத்திய சுரண்டலால் நலிந்து போகும் சமுதாயத்தில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்த பிரிவுகளில் ஏற்படும் முரண்பாட்டை ஒழித்துக்கட்டவும், கிடைக்கும் எச்சிலை முழுமையாக உயர்ந்த பட்சமாக்க சிறிய கும்பல் ஒன்று அனுபவிப்பதை பாசிசம் உறுதி செய்கின்றது. அதாவது ஏகாதிபத்திய சுரண்டலை எல்லையற்றதாக்குவதும், இதில் எச்சில் இலை பொறுக்கி வாழும் ஆளும் பாசிச கும்பலின் நலன்கள் உறுதி செய்வதையும் பாசிசம் ஆதாரமாக கொள்கின்றது. இங்கு பாசிசத்தை கட்டமைக்கும் போது, குட்டிப+ர்சுவா வர்க்க நலன்களையும், பூர்சுவா நலன்களை பாதுகாக்க உள்ளதாக வாய்ப்பந்த போடுகின்றது. பாசிசத்தின் இயல்பாக நடைமுறை சமூகப் பண்பியல் கூறாக நீடிக்கும் இன மத சாதிய வெறியில் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை முன்வைத்து அதை பாசிச இராணுவக் கட்டமைப்பாக கட்டமைக்கின்றது. இராணுவ ஒடுக்குமுறைகளையும், யுத்தங்களையும், யுத்த தயாரிப்புகளையும் தொடர்ச்சியாக செய்கின்றது. எதாவது ஒரு முரண்பாட்டை வன்முறை சார்ந்த எல்லைக்குள், தொடர்ச்சியாக உயிர்வாழ வைக்கின்றது.
உண்மையில் பூர்சுவாப்புரட்சி நடந்த நாடுகளில் பாசிசம் தன்னை ஒரு சர்வதேச ஆக்கிரமிப்பளானாக வெளிப்படுத்தி நிற்கும் போது, பூர்சுவா புரட்சி நடக்காத நாடுகளில் அதற்கு சேவை செய்வதை அடிப்படையாக கொள்கின்றது. இரண்டு பாசிசமும் ஜனநாயக பண்பியல் கூறுகள் அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழிப்பதுடன், மாற்றுக் கட்சிகள் அனைத்தையும் அழிக்கின்றது. முழு மக்களையும் இராணுவ மயமாக்கின்றது. தேசிய வளத்தை அழித்து, சுரண்டலை ஆழமாக்கின்றது. பெரு நிதி மூலதனத்தையும், பெரு மூலதனத்தையும் ஆதாரமாகவும் அத்திவரமாகவும் கொள்கின்றது. இவை எப்படி புலிக்களுக்கு பொருந்துகின்றது.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரு ஆயுதப்போராட்டம் தேசியத்தின் பால் உருவான போது, அதன் அடிப்படையான பரிணாமமும் மக்களுக்கு எதிராகவே வளர்ச்சி பெற்று வந்துள்ளது. மக்கள் இலங்கை இனவெறி சிங்கள அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இழிந்த வாழ்வின் மேல், தேசியத்தின் பெயரில் கிடைத்த ஒடுக்குமுறையும் இனைந்த போது, மக்கள் எதுவுமற்ற செம்மறி மந்தை நிலைக்கு தாழ்ந்தனர். தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும், இதை முன்னெடுப்போர் தொடர்பாக, எதையும் மக்கள் வாய் திறந்து அபிராயம் கூறமுடியாது. வாய் உண்பதற்காக மட்டும் என்பதை, தேசிய விடுதலை இயக்கங்கள் உருவாக்கின. உண்பதற்கு கூட மக்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்தினார்களா எனின் இல்லை. மாறாக இருந்த தேசிய பொருளாதாரத்தை தேசிய விடுதலை இயக்கங்கள் அழித்தன. சிங்கள இன தேசிய பாசிச வெறியர்கள் நடத்திய அழிப்பு ஒரு யுத்தம் சார்ந்ததாக இருந்த போது, தேசிய இயக்கங்கள் அதை மக்களின் வாழ்வியில் மீது அழித்தனர்.
உண்மையில் பார்த்தால் மக்கள் வாழ்வியல் என்பது இரட்டைச் சுரண்டலுக்கு உள்ளாகி, அதுவே கொடூமையாக மாற்றப்பட்டது. யுத்தத்தின் வளர்ச்சில் சில பிரதேசங்கள், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக மாறியது. அப்போது அங்கு வாழ்ந்த மக்கள், விதிவிலக்குகள் தவிர புலிப் பாசிசத்தை மட்டுமே எதிர்கொண்டனர். மக்கள் வாய் பொத்தி அடிமைகளாக வாழ்ந்தனர். இதை தெளிவாக புரிந்து கொள்ள புலிப் பாசிச கட்டுப்பாட்டில் இருந்து, பேரினவாத பாசிட்டுகளின் கைக்கு அதிகாரம் மாறிய போது, மக்கள் மூச்சு pட்டது உலகெங்கும் பிரதிபலித்தது. அமைதி, பேச்சு வார்த்தை என்ற போர்வையில் பேரினவாத இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலிகள் நடமாடிய போது, புலிகளின் ஆட்சியில் எப்படி இருக்கும் என்பதை ஈவிரக்கமற்ற வகையில் அவை எப்போதும் பிரதிபலித்தது. மிரட்டல் ஒரு மொழியாக, படுகொலையை மூலதனமாக கொண்டு பணம் வசூலிப்பது, ஆட்களைக் கடத்தி சென்று தமது பாசிச இயக்கத்தில் பலக்காரமாக இணைப்பது, சுயாதீனமான மக்கள் அமைப்புகளை கைப்பற்றுவது, போராட்டத்துக்கு மக்களை மிரட்டி அழைத்து வருவது, மக்களை அழைத்த வர சமூகத் தொடர்பாளர்களை பல வகையில் நிர்ப்பந்திப்பது, சலுகையுடன் கூடிய கூலிக் கும்பலை உருவாக்கி அவர்கள் மூலம் மக்களைத் திரட்டுவது, லும்பன் குழுக்களை கலாச்சரத்தின் காவலராக்குவது என, எண்ணற்ற மனித விரோத செயல் அனைத்தும் அரங்கேற்றுவதையே எதார்த்தம் காட்டுகின்றது. இந்த நிலையில் தான் அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேச மக்கள் அடிமையாக வாழ்வதை தொடர்ச்சியாக நிறுவுகின்றது. சொந்தக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த வெளியே வருவதற்கு விதிக்கும் பாஸ் தடை, பணயமாக குடும்ப உறுப்பினர் நிறுத்தப்படுதல், சொத்துகளை எழுதி வாங்குதல், வறுமையை திட்டமிட்டே சமூக மயமாக்கல், தாமல்லாதவர்கள் பற்றி பீதியை விதைத்தல் போன்ற எண்ணற்ற செயல்களால் தான், புலிகள் மக்களை தொடர்ந்தும் தம்முடன் வாழ வைக்கின்றது.
அசையா சொத்துகளை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும், புலிகளின் கட்டுப்பாடற்ற பிரதேசத்திலும் கட்டயாப்படுத்தி சிறிய தொகைக்கும் அல்லது இலவசமாக பினாமிகளின் பெயரில் பெருமளவில் வாங்கிக் குவித்தனர். உரிமையாளர்கள் அற்ற நிலங்கள், வீடுகள், தனிமனித சொத்துகள், சட்ட விரோதமாக புலிகளில் உள்ள தனி நபர்களால் அபாகரிக்கப்பட்டது. இங்கு இவை எதுவும் தேசிய சொத்தாக மாற்றப்படவில்லை. புலித் தலைவர்கள் தமது பெயரிலும், பினாமிகள் பெயரிலும் சொத்துகளை அபகாரிக்கப்பட்டு குவிக்கப்பட்டது. ஏன் இவை தேசிய சொத்ததாக, சமூகச் சொத்தாக மற்றப்படவில்லை.
ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக துகிலுரிந்து நிர்வாணமாக்கும் நாட்கள் கணிந்து வருவதை இது காட்டியது. பெரும் மூலதனத்துடன் கூடிய ஏகாதிபத்திய கூட்டளிகளாக, புலிகள் தம்மைத் தாம் மிதப்பாக எடுத்துக் காட்டும் நாட்கள் நெருங்கி வந்தது. அதை நோக்கி சொத்துகளை தேசியத்தின் பெயரில் அபகரிக்கரித்தனர். எகாதிபத்திய வெள்ளையின மக்களின் ரசனைக்கும் ருசிக்கும் எற்ப, சுற்றுலா மையங்கள் முதல் பண்பாட்டு ரீதியாக நக்கிவாழவும், தமிழ் மக்களை தலைகீழாக்கி புலிப் பாசிட்டுகள் தயாராகி வந்தனர். மக்களை தமது மந்தைகளாக இருக்குமாறு நிர்ப்பந்தித்தனர்.
தொடரும்
பி.இரயாகரன்
11.புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)
10.புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10) 09.பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09) 8.மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08) 7.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07) 6. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06) 5.பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05) 4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04) 3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03) 2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02) 1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)