Language Selection

கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அது மிகப்பெரிய தொழில் நகரம். தொழிற்சாலைகள் வரிசையாய் தீப்பெட்டிகள் அடுக்கி வைத்தாற் போல் அழகாக தொடர்ச்சியாக அமைந்திருந்தன. அந்த நிறுவனம் கொஞ்சம் பெரியதுதான், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பெரியதல்ல. சுமர் 2000 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். தொழிற்சாலை என்றாலே தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்றாலே சச்சரவு என்றிருக்கும் பல லட்சக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு இதுவொன்றும் விதிவிலக்கல்ல. பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆலைக்கு செல்லும் ரோடு அது வளைந்து வளைந்து பார்ப்பதற்கு அரிவாள்போலவே இருக்கும்.

இந்த தொழிற்சாலையில் பெரிய சங்கம் என்றால் அது சிஐடியூ(மத்திய சங்கம்) சங்கம் தான். தொழிலாளர்களின் பிரச்சினை என்றாலே மத்திய சங்கம் தான் முன் வந்து பைசல் செய்யும். ஏதாவது பிரச்சினை அதிகமென்றால் போதும் “தொழில் அமைதியை கெடுக்காதே” மத்திய சங்கத்தால் போஸ்டர்
ஒட்டப்படும். அவ்வளவுதான் முதலாளிகள் “ஆடி”ப்போய் விடுவார்கள். சங்கத்தின் தலைவர் அடிக்கடி சொல்லுவார் நம்ம சங்கம் இங்க வலுவா இருக்குறதால தான் நமக்கும் முதலாளிக்கும் அதிகமா பிரச்சினை வரதே இல்லை”.

தீபாவளி காலங்களில் போஸ்டர்கள் மத்திய சங்கத்தால் ஒட்டப்படும். வர்க்கமாய் தொழிலாளர்களை அணிதிரட்டச்சொல்லி அழைப்பு விடுக்கும். கடந்த முறை கூட போனஸ் பேச்சு வார்த்தையின் போது நம்ம தோலர் தானே சிறப்பாக செய்து முடித்தார். ஓவ்வொருமுறையும் பண்டிகைகளின் போதுபோனஸ் கோரி தோலர்களின் பணி சிறப்பாக இருக்கும். நான் கூட இந்த சங்கத்துல தான் இருக்கேன்.எனக்கு வயது 30 தான்
ஆகுது. நான் கேட்பேன் மத்திய சங்க தோலர்கள் கிட்ட “வித்யாசமா போராட்டம் பண்ணக்கூடாதா?” அதுக்கு பொறுப்புத்தோலர் சொல்வார் ” தோழர் உங்க வயசுதான் என்னோட அனுபவம், எதுக்கும் அவசரப்படக்கூடாது”.

கடந்த முறை போனஸ் பிரச்சினையின் போது சுமுகமாய் முடித்து விட்டு வந்த போது என்னிடம் சொன்னார் “அவசரப்பட்டா வெற்றிய சாதிச்சு இருக்க முடியுமா?” எப்பவாவது வேலை நிறுத்தம் என்று மத்திய சங்கம்
சொன்னால் கூட சிஐடியூ-ன் பல தோலர்கள் தவறாமல் வேலைக்கு வந்து விடுவார்கள். ஆரம்பத்தில் நான் எல்லா போராட்டங்களில் கலந்து கொள்வேன். மற்ற தோலர்களின் வர்க்க உணர்வு எல்லைக்குள் இருப்பதை அறிந்து நானும் அளவோடு இருக்கிறேன்.“எதுவா இருந்தாலும் அளவோடுதான்ன்னு சும்மாவா சொன்னாங்க?”


அன்னைக்குகூட பேருந்தில் நானும் சங்கத்தோலரும் பயணித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நிறுத்தத்தில்ரெண்டு பசங்க ஏறினார்கள் பேருந்தில் கையில் புத்தகங்களோடு.”அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………..” என ஆரம்பித்த அந்த ஒல்லியான, கருத்தப்பையன் உலக நடப்பு, இந்துமதம், போலி கம்யூனிசம் என்று எனக்கு புரியாத பலவற்றையும் பேசிக்கொண்டே போனான் கடைசியாக புதிய ஜனநாயகம்ன்னு ஒரு புத்தகம் அதையும் வித்தாங்க. அந்தப்பபையன் என்கிட்ட கேட்ட போது நான் 7 ரூவா கொடுத்து அப்புத்தகத்தை வாங்கினேன்.

பேருந்து நகர்ந்தது. என்னவோ தோலர் செமக்கடுப்பில் இருந்தார். நான் கேட்டதுக்கெல்லாம் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தார். புத்தகத்தின் தலைப்பில் போலிக்கம்யூனிஸ்டுகளின் துரோகம் என்று போட்டிருந்தது. அட நம்ம தோலர்(அச்சுதானந்ந்தன்) படம் போட்டிருந்தது. நான் தோலரிடம் கேட்டேன்”தோலர் அவங்க யாரை போலி கம்யூனிஸ்டுன்னு சொல்றாங்க?” “தெரியலை ” என்றார். “என்னா தோலர் இப்புடி சொல்றீங்க? நம்ம அச்சு தோலர் போட்டோவை போட்டுருக்காங்களே”

” நீங்க மொதல்ல எதுக்கு அந்த புக்க வாங்குனீங்க, அவங்க நக்சலைட்ஸ், அவங்க கருத்த ஏன் நீங்க புடிச்சுகிட்டு தொங்கறீங்க?”,

“தீவிரவாதிங்க எல்லாம் பகிரங்கமா பேசுறாங்களா, போலீசு இவங்கள பிடிக்காம இருக்கு, அவன் சொல்றபடி பார்த்தால் கேரளாவில அச்சு தோலர் இனவெறி பிடிச்ச நபரா?,ஈழப்பிரச்சினையில இந்திய போலி சனநாயகத்தை எதிர்த்து ஏன் ஒரு போராட்டம் கூட பண்ணல” நான் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனேன்.

மிகவும் குழப்பமான தோலர் சொன்னார் “முதல்ல சங்கத்த மதிக்க பழகுங்க, ஏதோ ரெண்டு தீவிரவாதிங்க கொடுக்கற புத்தகத்த வச்சு பேசாதீங்க? நீங்க ஈழத்துக்கு ஆதரவா என்ன பண்ண முடியும்? அதுக்கு நம்ம கட்சி சீபீஎம் இருக்கு. அவங்களுக்குத் தெரியாததா உங்களுக்கு தெரியும்? “. இந்த ஜனநாயகத்தில நம்பிக்கையில்லாதவங்க அவங்க, லால்கரில கூட மாவோயிஸ்டுங்க மக்களை பகடைக்காயா பயன் படுத்துனாங்களே, தெரியாதா? என்ன?

“போன வாரம் ஒரு பையன் பஸ்ஸில சொல்லிக்கிட்டு இருந்தான் “மார்க்சிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களை கொன்று நிலங்களை இந்தோனேஷியாவின் சலீம் குழுமத்திற்கு கொடுக்க நினைக்கிறது, மக்கள் போராட்டத்தை பாசிசமாய் அடக்குகிறது……………….

“ நான் முடிப்பதற்குள் அவர் சொன்னார் “முதல்ல இதுமுதலாளித்துவ நாடு சோசலிச நாடு அல்ல, இதுக்கேத்தபடி தான் வாழ வேண்டும், உங்களுக்கு போனஸ் வாங்கி கொடுத்தது யார் அந்த மாவோயிஸ்டா ,சங்கமா?,” அவர் கடைசியாய் கேட்ட கேள்வி என் வாயை அடைத்தது.அப்புறம் தோலரிடம் அது சம்பந்தமாக எதுவும் கேட்பதில்லை.

ஆனால் இப்போது அந்த தீவிரவாத புத்தகங்களை அதிகமாய் என்னோடு வேலை செய்யும் ராஜா படித்துக் கொண்டிருப்பதாகவும் அதிகமாய் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் வேறு சிலர் சொன்னார்கள். என்னிடம் கூட பலமுறை கேள்வி கேட்டிருக்கிறான். நான் உட்பட பலரும் காதில் போட்டுக்கொள்ளவே மாட்டோம். அவன் இப்போது தனியாளாக ஆலை நுழைவாயிலில் புத்தகமெல்லாம் விற்கிறான். சிலர் வாங்குவார்கள். பொறுப்புத்தோலருக்கு அவனைப்பார்த்தாலே செம எரிச்சலாக இருக்கும் அவனை பற்றி எங்களிடம் திட்டிவிட்டுதான் வருவார். ஆனால் மற்ற சங்கங்களின் தலைவர்களோடு நம்ம தோலர் நெருக்கமாக இருப்பார். ஏன் பி.எம்.எஸ் (bharathiya masthur union) சங்க மாநாட்டுக்கு தோலர்தான்
வாழ்த்துரை சொன்னார்.

திடீரென்று எங்கள் ஆலையில் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். சுமார் 60 பேர் வரை தூக்கி விட்டனர், அந்த ராஜாவுக்கும் ஆப்பு வைத்து விட்டார்கள்.அதில் நம்ம தோலருக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் மத்திய சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எல்லா சங்க நிர்வாகிகளும் கூடினார்கள். வழக்கம் போல இதற்கும் மத்திய சங்கம் தலைமை வகிக்க, அல்லும் பகலும் என்ன வகையான போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. வந்திருந்த ஒருவர் சொன்னார்

” ஓசூர்- ல யாரோ துடைப்பக்கட்டை, செருப்பு எடுத்துக்கிட்டு போராடுனாங்களாமே அப்புடி பண்ணுவமா தோலர்” பொறுப்புத்தோலர் சொன்னார்”சட்டம் ஒழுங்க பாதிக்குற மாதிரி எதுவும் செய்யக்கூடாது, என்ன செய்தால் முதலாளி பயப்படுவானோ அப்படி போராடணும். நான் எதுக்கும் சீபீஎம் மாவட்டச்செயலாளர் கிட்ட கலந்து
ஆலோசனை பண்ணிக்குறேன்”. என்றபடி கிளம்பியவர் சுமார் 2 மணி நேரம் கழித்து வந்தார்.

” நாளைக்கு நாம நடத்துற போராட்டம்,இந்த முதலாளிக்கு மட்டுமில்ல, உலக முதலாளித்துவத்துக்கே குலை நடுங்கும், அகில உலக பாட்டாளி வர்க்கமே பெருமைப்படுற மாதிரி ஒரு சிறப்பான போராட்டத்தை நாளைக்கு முன்னெடுக்கப்போறோம். இப்ப நான் சொன்னா முதலாளிக்கு தெரிஞ்சுடும், தோலர்களே நீங்க நாளைக்கு தயாரா வாங்க எதுக்கும் ” நான் எப்போதுமே தோலரின் கண்களில் அப்படி ஒரு நெருப்பைபார்த்ததில்லை”

சின்னதாய் கவிதை தோன்றியதெனக்கு

உன் கண்கள்
நாளை வெடிக்கும் எரிமலை
உடைபடட்டும் முதலாளித்துவ பணமலை
தொழில் அமைதியே தொழிலாளர் நலன்

உயர்த்துவோம் செங்கொடி
சுத்தியலறிவாள் நட்சத்திரத்தோடு
ஆண்டவனே கருணைக்காட்டு
அழிந்து போகட்டும் அடக்குமுறைகள்

எனக்குத்தூக்கம் வரவில்லை, நாளைக்கு என்ன வகையான போராட்டம் நடக்கும்” ஒரு வேளை ஆலையை இழுத்து மூடுவாரா தோலர்? இல்லை முதலாளிக்கு அடிவிழுமா? ச்சே ச்சே அவர் அப்படி சட்டத்துக்குவிரோதமாக செய்ய மாட்டார்.யோசனையிலேயே தூங்கிப்போனேன். காலையில் பூஜை புணஸ்காரங்களை முடித்தபடி மனைவியிடம் சொன்னேன். அவளோ “பாத்துங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு தள்ளி நின்னுக்கோங்க, போலீஸ் லத்தி சார்ஜ் பண்ணுனா நான் பஸ்ஸ¤க்கு வந்தேன்னு பொய் சொல்லுங்க,

அரெஸ்ட் ஆயிடாதீங்க, யார் எப்புடி நாசமா போனா நமக்கென்ன? சொல்றத நல்லா புரிஞ்சுக்கோங்க” என்று சொல்லிக்கொண்டிருக்க என் மனமோ தோலரின் வித்யாசமான போராட்டத்தைப்பற்றியே லயித்துப்போனது.

பேருந்திலிருந்து இறங்கினேன், ஆலைக்கு செல்லும் வழியெங்கும் போஸ்டர்கள் முளைத்திருந்தன. அதில் நூதன போராட்டம் என்று இருந்தது. நான் நினைத்தேன் “நம்ம தோலர் உஷார் தான் எதிலேயும்”.

போராட்டத்தை ஆரம்பித்து வைப்பவர் என்று சீபீஎம் மாவட்டச்செயலாளர் பெயர் போட்டிருந்தது. “சரி இன்னைக்கு எப்படியோ போர்க்களமாகிவிடும்”
ஆலையை நெருங்கினேன், போராட்டம் இன்னும் அரை மணி நேரத்தில் துவங்கப்போவாதாய் பொறுப்புத்தோலர் சொன்னார். எனக்கு கொஞ்சம் நடுக்கமாய் இருந்தது. அவர் என்னிடம் வந்து “இங்க பாருங்க தோழர், இது முதல் கட்டப்போராட்டம் தான் இதிலே மொத்தம் 30 பேர் மட்டும் தான்
கலந்துக்கப்போறோம், அதில நீங்களும் ஒண்ணு” எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

நான் மறுப்புச்சொல்ல வாயெடுத்தேன் . “மறுக்காதீங்க தோழர்,இப்படி மறுத்தா எப்படி புரட்சி வரும் , இப்படி தயங்குனா எப்படி ரஷ்யாவில லெனின் புரட்சிய நடத்திக்காட்டி இருப்பார்?நாம் தொழிலாளர் வர்க்கம் என்ற படி அவர்
மைக்கில் 30 பேர் பேரையும் அறிவித்து விட்டார்.எங்கள் 30 பேருக்கும் மாலைகள் போடப்பட்டன. நாங்கள் பந்தலின் முன்னே வந்து கோஷங்கள் போட்டோம்.

மாவட்டசெயலாளர் கட்சி அவருக்கு ஒதுக்கியிருக்கும் சுமோவில் வந்தார். எங்களை பெருமிதத்தோடு பார்த்துவிட்டு ரஷ்யாவில் நடந்த புரட்சிகர நடடிக்கைகளைப்பற்றி கனல் தெறிக்க பேசிவிட்டு கடைசியாய் சொன்னார்”இப்போராட்டம் உலக முதலாளித்துவத்துக்கு மரணத்தைப் பரிசாய்
தரும்”நாங்கள் 30 பேரையும் சுற்றி கோஷம் போட்டபடி இருந்தார்கள். முதலில் நான் தான் நின்றுகொண்டிருந்தேன். நான் என் மனைவிக்கு என்ன பதில் சொல்லுவேன், ஜெயிலுக்கு போய் விட்டால் என்ன செய்வது?

சீபீஎம் மாசெ வந்தார் என்னிடம் “பரவாயில்லையே தோழர் சின்ன வயசில ரொம்ப துணிச்சலான முடிவு” என்றபடி கையில் சிறிய கத்தியை எடுத்தார். என் தலைக்கருகில் கொண்டு வந்தார்.அய்யோ என்ன நடக்கப்போகிறதெனக்கு? ஒருவேளை ரத்தம் சிந்தபோகிறேனா? இல்லை என் ரத்தத்தை அவர் வெற்றித்திலகமாக இட்டுக்கொள்ளப்போகிறாரா? இல்லை கையை கிழித்துக்கொள்ளும் போராட்டமா?

அய்யோ எனக்கு பயம் அதிகமாகி நடுங்கினேன், கண்களை இறுக்கி மூடினேன். அவ்வளவு தான் இவ்வுலகத்தைகடைசியாய் பார்க்கிறேன் என நினைத்துக்கொண்டேன். மாசெ தோலர் என் தலையின் கையை வைத்தார். தலையில் தன்ணீர் தெளிக்கப்பட்டது. “அய்யோ என்ன நடக்கபோகிறது”

மாசெ தோலர் சிறிய கத்தியால் என் தலையில்………………………………………… …….எடுத்தார். கண்ணைத்திறந்தேன். ரத்தத்துளிகள் கத்தியில் இருந்தது. எனக்கு டெட்டால் வைத்தார்கள்.முழக்கங்கள் திமிறின, பொறுப்புத்தோலர் பேசினார்”இதோ இந்த முதலாளித்துவத்துக்கெதிராக புரட்சிகரமான முறையில் நமது தோழர்கள்………………….. போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். இதற்கு இந்த ஆலை நிர்வாகம்

 

அசையாவிட்டால் நாளை இந்த உலகமே அதிரும் படி இன்னொரு போராட்டம் நடக்கும்” ஒளிந்திருந்து முதலாளியின் ஆட்களும் போலீசும் பயத்தோடு கேட்டுக்கொண்டிருந்தது. முடிந்து வேலைக்கு சென்றோம்.எல்லோரும் கை கொடுத்தார்கள், யோசித்தேன், புரட்சி அது சீபீஎம் கட்சியால் மட்டும்தான் நடத்தும். அதற்கு மட்டுமே தகுதி இருக்கிறது.

————————————————————————————————————————

வேலை முடிந்து வீட்டிற்கு போனேன். பக்கத்து வீட்டு குழந்தை அலறி அடித்துக்கொண்டு ஓடியது, என்மனைவி பார்த்தாள் என்னை “என்னங்க இப்புடி மொட்டை அடிச்சுகிட்டு வந்திருக்கீங்க?” காலையின்
புரட்சிகர போராட்டத்தை அவளுக்கு விளக்கினேன். கடைசியாய் சொன்னேன் . “போராட்டம்ன்னா யாருக்கும் பாதகம் இல்லாம இருக்கணும்? இந்த பு ஜ தொ மு காரனுங்க மாதிரி சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது, தொழில் அமைதியை பாதுகாக்க வேணும் “. கடைசி வாக்கியத்தை எனக்கு அருகில்
வசிக்கும் ராஜாவின் காதில் விழுமாறு உரக்கக்கூறினேன். ” நாளைக்கு என்ன போராட்டம் தெரியுமா?

கோவணத்தோடு கையில் சட்டி வச்சிருக்குற போராட்டம்”


தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡
சும்மா அதிருதுல்ல

——————————————————————

மாபெரும் தோலர் கோவிந்துக்குட்டி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை ஒட்டி இக்கதை பலமாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தாலும் இப்போது பதிப்பிக்கப்படுகிறது.

மார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி

சாயம் வெளுத்துப் போன போலிகள்

தீவிரவாதத்தை வேரறுப்போம் இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் – CPM!!

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை செய்த பாசிச CPM

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்!

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுடியிசம், உத்தபுரம்

கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

http://kalagam.wordpress.com/