Language Selection

புலிகள் தமது தேசியமாக, பாசிசத்தையே ஆணையில் வைத்தனர். பேரினவாதத்துடன் சண்டை செய்வதாக கூறிக்கொண்டு, மக்களை ஓடுக்கினர். மக்களையும், உலகத்தையும் எமாற்ற பொய்யும் புரட்டும் மூலதனமாகியது. எதிரியைப் பற்றி வாய் கிழிய கூறிக் கொள்வதன் மூலம், ஜனநாயகத்தை பறித்தெடுத்தனர். மாற்றுச் சிந்தனையை முன் வைத்து, தேசத்தின் அடிப்படையான தேசிய பொருளாதார நலன்களைப் பற்றி பேசும் போது, அவர்களை நாட்டுபற்றயற்ற துரோகி என முத்திரை குத்தினர். ஜெர்மனிய நாசிகளைப் போல், தாம் அல்லாத அனைவரையும் கொன்று அழித்தனர். புலித் தலைவர்கள் தாம் விரும்பியதை எல்லாம் செய்தார்கள் என்றால், கிட்டலர் போல் பாசிச கட்டமைப்பை தமிழ் மக்கள் மேல் நிறுவிய ஒரு சர்வாதிகார நிலையில் தான் அது சாத்தியமானது.

புலிகளின் பாசிச சித்தாந்தம் மிகவும் உறுதியானதும், முழுமையானதும், சீரானதுமாக, முன் கூட்டியே திட்டமிட்ட ஒரு கோட்பாடுயல்ல. மாறாக இந்தத் தத்துவம் பச்சோந்தித் தனமானது. முன் கூட்டியே அனைத்தையும், குறித்த திட்டத்துக்கு அமைய உருவாக்கியதாக புலிப் பாசிசம் காட்ட முனைந்தது. ஆனால் நேரத்துக்கும் நிலைமைக்கு இசைவாகவே, தனது நோக்கை அடைவதில் பாசிசம் தன்னை தகவமைத்தது. நிலைமைகளுக்கு எற்ப தனது பச்சோந்தித் தனத்தை பயன்படுத்தி, அதை தான் முன் கூட்டியே திட்டமிட்டதாக காட்ட முனைந்தது. இதை தனிமனிதனின் உன்னதமான அறிவியல் குணங்களின் சிறப்பாக காட்டி ~மேதகு| களை மக்களின் தலை மேல் நிறுத்தினர். கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் தொடங்கி மனித வாழ்வு சார்ந்த அடிப்படையான சமூக கூறுகளை அழித் தொழிப்பதில், மிகவும் திட்டமிட்ட அழித்தொழிக்கும் பண்பை பாசிசம் வெளிப்படுத்தியிருக்கின்றது. சமூக ஆக்கத்திற்கான முயற்சியில், எந்தவிதமான முன் கூட்டிய திட்மிடுதலும் பாசிசத்தில் கிடையாது. பச்சோந்தி போன்ற நிலையில் நின்று சமூக அடிப்படைகளை அபகாரித்து, அதை தம் தலைக்கு மேல் கொண்டு சென்று தமது மதி நுட்பமான செயலாக காட்டியது. 

இதற்கு அடிப்படையாக பொய்யும் புரட்டும்;, புலிகளில் உறிப்போன ஒரு பாசிசப் பண்பாகியிருந்தது. எதையும் எப்படி மறுப்பார்கள். அதை எப்படியும் எந்த வித்திலும் புரட்டுவார்கள். இதுவே அன்றாடம் இயல்பு வாழ்வில், சர்வசாதரணமாக மக்கள் காண்ட அடிப்படை உண்மையாக நீடித்தது. இதற்கு ஆதாரம் எதுவும் அவசியமற்றவை. இதையே யுத்ததந்திரம் என்று, அப்பட்டமாகவே நியாயப்படுத்தினர். போராட்ட காலத்தில் மக்களை ஒடுக்கி, மந்தைகளாக அடிமையாக வைத்திருப்பது அவசியமானதாக கூறி நியாயப்படுத்தினர். எல்லாவிதமான மக்கள் சார்ந்த அமைப்புகளையும், தமது சொந்த அமைப்புகளாக அபாகரித்தனர். அங்கு இருந்த கொஞ்ச நஞ்ச மனிதப் பண்பு சார்ந்த சமூகச் செயல்பாடுகளைக் கூட, புலிகள் இல்லாதாக்கினர். தமது புகழ்யையும், தமது பாசிச வக்கிரங்களையும் ஆதாரித்து அறிக்கைவிடும் றப்பர் முத்திரைகளாக சமூக அமைப்புகளை மாற்றினர். தனிப்பட்ட சொத்துரிமை சார்ந்த நல்ல லாபம் தரும் தொழில்களையும், நிலையான வளங்களையும் கூட அபாகரித்தனர். எங்கும் பாசிசம் தனது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. சமூகத்ததை தன் கீழ் அடக்கி வைத்திருந்தது. ஏகாதிபத்திய பன்நாட்டு நிறுவனங்களுக்கு வாலாட்டி குலைத்தபடி, தரகாக செயல்பட்டு எல்லாவிதமான சமூக (தேசியக் கூறுகளை) அழித்தொழிப்பையும் செய்தனர். இதை சாதிக்க பெரும் நிதி மூலதனத்தை திரட்டினர். வரியாகவும், மறு தளத்தில் சொத்தையும் நிதியையும் அபகரிப்பதன் மூலமும், சந்தையை தான் மட்டும் வைத்திருப்பதன் மூலமும், எழை மக்களுக்கு பல்வேறு வழிகளில் கிடைக்கும் சமூக உதவிகளின் ஒரு பகுதியை கைப்பற்றுவதன் மூலமும், கூலியில் ஒருபகுதியை அபகரிப்பதன் மூலமும், எங்கும் எதிலும் நிதி மூலதனத்தை, புலிப் பாசிட்டுகள் பாசிச வழிகளில் அடாத்தாகவே திரட்டினர். புலத்து தமிழ் மக்களிடம்  பல வழிகளில் பணத்தை வசூலித்தவர்கள், அந்த நாட்டு மககளின் உதவிப் பணத்தையும் மோசடி செய்து களவாடியவர்கள், தன்னார்வ நிதிகளின் ஒரு பெரும் பகுதியை அபகரித்தனர். போதைவஸ்து கடத்தல், ஆயுத வியாபாரம், ஆள் கடத்தல் என்று அனைத்து மக்கள் விரோத வழிகளிலும், புலிகள் பணத்தை திரட்டினர்.   

பாசித்துக்கும் நிதி மூலதனத்துக்குள் உள்ள உறவு பிரிக்க முடியாத பண்புகளைக் கொண்டது. ~~பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்|| என பாசித்ததை டிமிட்ரோவ் வரையறை செய்த இந்த தீர்மானத்தை சர்வதேச கம்யூனிச அகிலம் அங்கிகரித்தது. இது மேற்கு நாட்டில் எற்படும் பாசிசத்தை சிறப்பாக தோலுரிக்கின்றது என்றால், இது புலிகளுக்கும் பொருந்தி விடுகின்றது. இங்கு புலிகள் இந்த மேற்கு நாடுகளின் கைக்கூலிகளாக இருப்பதன் மூலம், பாசிசத்தின் சர்வதேச இணைப்பாகவே இருந்தனர். புலித்தேசியம் ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் சூறையாடலுக்கும் கம்பளம் விரித்தது. இதை பாதுகாக்க, புலிகள் தங்கள் பாசிச வழிகளில் சதிராட்டம் போட்டனர். அதாவது புலிகள் குறுந்தேசிய இனவெறியை உருவேற்றினர். அதை பிற்போக்கான சமூக வடிவில் கையாண்டு, மக்களை சூறையாடி, கொள்ளையடிப்பதற்கு தேசியத்தின் பெயரில் ஏகாதிபத்தியதுக்கு உதவியதன் மூலம், ஏகாதிபத்தியத்தின் பிற்போக்கான தேசிய அழிப்பு செயல்களுக்கு துணையாக புலித்தேசியம் இருந்தது.

இந்த துணை போதல் என்பது, இங்கு மறைபொருளாக இருந்தது. அப்பட்டமான கைக்கூலிகளாக மாறுவது, முழுமையாக அம்பலமாகி இருக்கவில்லை. இதனால் பலர் இதை நிராகரிக்கவும், மறுத்து கருத்துரைக்கவும், இதை வெறும் யூகம் என்ற கூறி பாசிசத்தை மூடிமறைத்தனர். இந்த கைக் கூலித்தனம் அம்பலமாகாது மறைபொருளாக நீடிப்பதற்கு, தொடர்ந்த யுத்தம் ஒரு அடிப்படையான காரணமாக இருந்தது. ஏகாதிபத்திய விசுவசமான இரண்டு சக்திகடையே நடக்கும் யுத்தத்தில், சட்டப+ர்வமான பிரிவையே ஏகாதிபத்தியங்கள் சார்ந்து நின்றதால், இந்த மயக்கம் குழப்பம் நீடித்தது. புலிகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை அரசு வழங்கிவிட்டால், அந்தக் கணம் முதல் புலிகளின் அப்பட்டமான ஏகாதிபத்திய சேவை நடைமுறை ரீதியாக அனைவரும் தெரிந்து கொள்வது ஒரு பொதுவான நடைமுறையாகியிருக்கும்;. இந்தப் போக்கு அம்பலமாகாத நிலையிலும், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இருந்ததால் தான், புலிகள் மூடிமறைத்த பாசிட்டுகளாக நீடித்தனர். புலிகளின் உள்நாட்டு விவாகாரங்கள் முதல் சர்வதேச நிலைப்பாடுகள் வரை, புலிகள் ஏகாதிபத்திய விசுவாசத்தை எப்போதும் பறைசாற்றியே வந்துள்ளனர். தேசம், தேசியம், தேசிய நலன் என எதையும், புலிகள் தமது போராட்ட வழியில் கொண்டிருக்கவில்லை. புலிகளின் பாசிச நலன்களே தேசிய நலனாக காட்டி போராடுவதற்கு அப்பால், உயிருடன் வாழும் மக்களின் அடிப்படையான தேசிய நலனுக்காக புலிகள் ஒரு துளிதன்னும் போராடவில்லை என்ற உண்மை மக்களின் வாழ்வுடன் விதிவிலக்கின்றி இணைந்து நிர்வாணமாகவே இருந்தது.

மிகவும் பிற்போக்கான சமூகப் போக்கை கட்டமைப்பதே, பாசிசத்தின் கோட்பாடாக எப்போது இருந்துள்ளது. எமது தமிழ் மண்ணில் மிக பிற்போகான ஒரு சமூக உள்ளடகத்தை புலிகள் நிறுவியிருந்தனர். ஒரு மனிதன் இந்த மண்ணில் வாழும் உரிமை என்பது, புலிகளைப் போல் விதிவிலக்கற்ற ஒன்று. சக மனிதனுக்கு பாதகமல்லாத, சக மனிதனின் நலனை உள்ளடக்கி, ஒரு மனிதன் இயல்பாக வாழும் உரிமையை எம் மண்ணில் இருக்கவில்லை. பாசிசம் இந்த உரிமையை மிகப் பிற்போகான தன் நடைமுறைகள் மூலம் அடக்கி ஒடுக்கியது. விரல் விட்டு எண்ணி விடக் கூடிய சுரண்டல்காரர்களின் வாழ்வை பாதுகாப்பதே, புலிகளின் பொது அரசியலாகியிருந்தது. பணத்தை யார் அதிகமாக புலிகளுக்கு தரை வார்க்கவும், அந்த பணத்தைக் கொண்டு கூட்டுக் கொள்ளை அடிக்க யார் தயாராக உள்ளனரோ, அவர்களின் அதிகாரத்தை நிறுவ மக்கள் மேலான மிக பிற்போக்கான பாசிச சர்வாதிகாரத்தையே புலிகள் மக்கள் மேல் திணித்தனர்.

புலிகள் எதை அழித்தன் மூலம் தங்கள் பாசிசத்தை நிறுவினர்? மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமையை அழித்தன் மூலம் தான், பாசிசத்தை மக்கள் மேல் நிறுவினர். ஜனநாயகக் கோரிக்கைகள் ஒரு சமூக நடைமுறை கோரிக்கையாக உயருகின்ற போதே, அதை வலதுசாரிகள் தமது நலன்களுக்கு இசைவாக பயன்படுத்தி பாசிச சர்வாதிகாரத்துக்கு வித்திடுகின்றனர். புலிகளின் வரலாற்றில், அதன்  இயக்கத்தின் ஆரம்பம் முதலே தோற்றம் பெற்று வந்தது. அதற்கு முன்பாக கூட்டணி என்ற குறுந்தேநசியவாத கட்சியின் உள்ளிருந்தே, இதைப் புலிகள் சுவீகாரித்துக் கொண்டனர். சொந்த இயக்கத்தில் எழுந்த ஜனநாயகக் கோரிக்கைக்கு, படுகொலையை துரோக முத்திரை இட்டு பரிசாக வழங்கப்பட்டது. இதுவே பின் இயக்க மோதலாகவும், மக்களுக்கு எதிரான பாசிச சர்வாதிகாரமாகவும் மாறியது. இங்கு மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் ஈவிரக்கமின்றி அழித்தன் மூலம் உருவான சம்பல் மேடுகளில் தான், புலிகளின் பாசிச சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. எந்தவிதமான ஜனநாயக உரிமையையும் "மேதகு" தலைவர் பிரபாகரனின் பாசிச தமிழீழத்தில், யாருக்கு வழங்கியது கிடையாது. இதை யாரும் மறுத்து நிறுவமுடியாது. இது தான் தமிழீழத்தின் சட்ட ஒழுங்காகியாது. மக்கள் மந்தையாக பாசிசத்துக்கு தலையாட்ட தெரிந்து கொள்வதே, தமிழ் மக்களின் தேசியப் பண்பாக புலிப் பாசிட்டுகள் உருவாக்கினர். இதைத் தான் "மேதகு" புலித் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களுக்கு ஒட்டு மொத்தமாக தேசியத்தின் பெயரில் வழங்கினர்.

தொடரும்
பி.இரயாகரன்

09.பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

8.மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

7.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

6. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

5.பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)