10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

புலிப்பசிக்கு இரையான விருட்சங்கள்

கிளைகளில் மொட்டுக்கள் அரும்பினால்
விதைகளைப் பரப்பிவிடும்
பட்சிகள் வரும்
கூடு கட்டும் குஞ்சுகள் பொரிக்கும்

சூரியதேவனின் சுடுவீச்சுக்கு
இளசுகள் இளைப்பாற வந்துவிடும்
விழுதுகள் வேரோடு இணையும்
கொப்புக்களிற்கு தூணாகித் தாங்கிவிடும்

மூச்சுக்காற்றையும் கண்காணிக்க
புலத்துப் பணத்தில்
புலனாய்வுக் கருவிகள் இறக்கப்பட்டதில்
மக்களையும் எதிரியையும் மறந்து போயினர்

புல் நுனியின் அசைவுகளே
அச்சத்தை கொடுத்தபோது
விருட்சங்கள் மட்டுமென்ன விட்டுவைக்கப்படுமா
வெட்டிச் சரிக்கப்பட்டன விமலேஸ்வரன்களாய்

நந்திக்கடல்வரை
போராளிகளையும் மக்களையும்கூட இரையாக்கிய பசிக்கு
இராஜபக்ச குடும்பத்து
எலும்புத்துண்டுகள் ருசிக்காமலா இருக்கும்…………..

 

http://www.ndpfront.com/?p=8217


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்